நினைவினில் நிறைந்தவளே
அத்தியாயம் 07
வயது
வித்தியாசம்
பார்ப்பதில்லை….
அம்மாவின்
கொஞ்சலில்
மட்டும்….
இன்னும்
குழந்தையாக….
சுசிலாவை ICU வில் இருந்து நார்மல் வார்ட்க்கு மாத்தினர்.
அவர்களை நோக்கி சென்ற நர்ஸ்..,, “இன்னும் கொஞ்ச நேரத்தில கண் முளிச்சுருவாங்க . அதுக்கப்புறம் நீங்க போய் அவுங்கள பாக்கலாம்” என்று விட்டு சென்றார்.
சிறிது நேரத்தில் டாக்டர் அழைத்தார் என மீனுவும் அவள் அப்பாவும் சென்று பார்த்து விட்டு வந்தனர்…
அவர்கள் இருவரும் வரவும்..,, சுசிலா கண் முளிக்கவும் சரியாக இருக்கவும் ,உடனே மீனு சிந்து மற்றும் ராஜன் உள்ளே சென்றனர்.
சிந்து ” அம்மா ” என்று அழுதுகொண்டே அழைக்க ,,”எனக்கு ஒன்றும் இல்லை “என்பது போல் தலை அசைத்தார் சுசிலா.
சிறிதும் நேரத்தில் நர்ஸ் உள்ளே வந்து ,, ” “எல்லாரும் வெளிய போய் இருங்க,,யாராவது ஒருத்தர் மட்டுமே பேஷன்டோட இருங்க ” என்று கூறிவிட்டு வெளியே சென்று விட்டார்.
மீனு ” நான் அம்மாவுடன் இருக்கேன் .நீங்க எல்லாரும் வீட்டுக்கு போய் கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க ” என்று கூறி அவர்கள் இருவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்தாள்.
சுசிலா மயக்க ஊசியின் வீரியத்தில் அவர்களை கண்ட சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.
ஆயிரம்
சொந்தங்கள்
அணைத்திட
இருந்தாலும்…..
அன்னையே
உன்னை போன்று
அன்பு செய்ய
யாரும் இல்லை
இப்பூலகில்……….
அர்ஜுன் அறைந்த அடியை வாங்கிக் கொண்டு அமைதியாக அவன் முன் நின்று கொண்டு இருந்தான் செல்வா.
அர்ஜுன் ” ஏன் டா செல்வா இப்படி பண்ற??? உனக்கு அறிவு இருக்கா இல்லையா??? பாவம் டா அந்த பொண்ணு…உன்னையே நினைச்சிட்டு வாழ்ந்துட்டு இருக்கு …உன்னோட வீன் பிடிவாதத்தை விட்டுடு செல்வா …” என்று அதே கோபத்தில் கூற,,
செல்வா அப்போதும் எதுவும் பேசாமல் அமைதியாகவே அவன் முன் நின்றான்.
” டேய் எதாவது வாய தொரந்து பேசு டா… எவ்வளவு நாள் தான் நீ உன்னையும் வருத்திகிட்டு அந்த பொண்ணையும் கஷ்ட படுத்த போற??? இதுனால உனக்கு என்ன நிம்மதி கிடைக்க போது டா சொல்லு?? என்று அவன் தோல்களை பிடித்து கொண்டே கேட்டான் அர்ஜுன்.
” நான் அவள விட்டு பிரிஞ்சு தான் வாழனும் அர்ஜு….எனக்கு அவளோட சந்தோஷம் மட்டும் முக்கியம் இல்ல அவளோட குடும்பத்தோட சந்தோஷமும் எனக்கு முக்கியம் தான். எனக்கு அவள விட்டு பிரிஞ்சு வாழ்றது கஷ்டம் தான்..,,ஆனா இத நான் அவளோட குடும்ப சந்தோஷத்துக்காக தான் செஞ்சேன் டா …ப்ளிஸ் இனி இத பத்தி இனி பேசாத அர்ஜுன். ” என்று செல்வா அவனிடம் கேட்டு கொண்டான்..
” டேய் செல்வா …!!!! நீ அந்த பொண்ணு விட்டு பிரிஞ்சு வாழ்றதுனால யாருக்கும் எந்த நல்லதும் நடக்க போறது இல்ல டா…நீ உன்னையும் கஷ்ட படுத்திக்கிட்டு அந்த பொண்ணையும் கஷ்ட படுத்துற டா… உன்னோட வீன் பிடி வாதத்தை விட்டுடு செல்வா ” என்று அவனின் பிடிவாதத்தை கலைக்கும் பொருட்டு மேலும் அர்ஜுன் பேச,,
ஆனால் செல்வாவின் மனது கரைந்ததாக தெரியவில்லை.
” அர்ஜுன் நான் என்னோட சனாவ பார்த்தே ரெண்டு வருஷம் ஆச்சு டா… இன்னைக்கு அவள பாத்துட்டேன் டா…. எனக்கு இதுவே போதும் அர்ஜு என் வாழ்நாள் முழுவதும்…” என்று கூறிவிட்டு தான் வந்த காரில் போய் உட்கார்ந்து அர்ஜுன்காக வெயிட் பண்ணி கொண்டு இருந்தான்…
அவன் சென்ற இரண்டு நிமிடத்திலேயே அர்ஜுன் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.
இவர்கள் செய்த உரையாடலை ஒரு ஜோடி கண்கள் பார்த்து குழம்பி போய் அந்த இடத்தை விட்டு சென்றது.
செல்வாவின் கார் வீட்டை நோக்கி பயணித்தது…
சிறிது நேரத்திற்கு முன்பு…
இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அர்ஜுனிற்கு ஒரு கால் வந்தது.
அந்த நேரம் பார்த்து சரியாக திங்ஸ் இருக்கிற இடத்துக்கு வந்த அர்ஜுனால் அந்த கால் யாரென்று பார்க்இ முடிந்தது.
செல்வா தான் கால் பண்ணி இருந்தான்.
செல்வாவாவும் அர்ஜுனும் அன்று நடந்த நிகழ்விற்கு பிறகு,அர்ஜுன் செவ்வாவை முற்றிலும் தவிர்க்க தொடங்கி இருந்தான். அதனை அறிந்த செல்வாவும் அர்ஜுனை தொந்தரவு செய்ய விரும்பாமல் அமைதிகாத்தான்.
ஆனால் இன்றோ இரண்டு வருடங்கள் கழித்து செல்வா அழைக்கவும் அவனுக்கு ஏதோ தவறாக படவே யோசனையுடன் அந்த அழைப்பை ஏற்றான்.
செல்வா : ஹளோ அர்ஜு…!!!!
அர்ஜுன் : சொல்லு செல்வா…!!! என்ன எனக்கு கூப்பிட்டு இருக்கிற??? வீட்ல எதாவது பிரச்சனையா?????
செல்வா : அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல அர்ஜுன்.வீட்ல இருக்கிற யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. எனக்கு தான் உன்னோட உதவி எனக்கு வேணும் டா அர்ஜுன்.உன்னால எனக்கு உதவி பண்ண முடியுமா இப்போ???
அர்ஜுன் : சரி..இப்போ உனக்கு என்ன உதவி வேணும்னு சொல்லு செல்வா???
செல்வா : நீ இப்போ XXX Hospital க்கு வாடா கொஞ்சம் …
அர்ஜுன் : சரி டா வரேன்…
என்று சொல்லி விட்டு அழைப்பை கட் செய்தான் அர்ஜுன்.
அதன் பின் செல்வா வர சொன்ன ஹாஸ்பிடலுக்கு ஒரு மணி நேரத்துல வந்து சேர்ந்தான்…..
அங்கு அர்ஜுன் பார்த்தது என்னவோ செல்வா காதலித்த பொண்ணை தான்…
உடனே அர்ஜுன் அவனது கண்களை சுழல விட்டு செல்வாவை தேட ,அவனோ
நான் அவன் பக்கத்தில போய் நின்னேன்….
” இப்போ இங்க என்ன பண்ணிட்டு இருக்க செல்வா??? அங்க நிக்கிறது அஞ்சானா தானே??? அவளுக்கு பயந்து தான் இங்க வந்து நிக்கிறியா நீ??? சொல்லு செல்வா ..” என்று நான் அவன் முன்னாடி நின்னுட்டு கேட்டேன்.
செல்வா ” டேய் அர்ஜுன் …!!!!நான் கார்ல பொய்ட்டு இருக்கும்போது ஒரு இடத்தில கும்பலா இருந்திருச்சி..என்ன எதுன்னு பார்க்க போனேன் .போய் பார்த்தா ஒரு இரத்த வெள்ளத்துல உயிருக்கு போராடிட்டு இருந்தாங்க . நான் அவுங்கள இங்க கொண்டு வந்து சேர்த்துட்டேன் டா…நர்ஸ் வந்து அவுங்களோட திங்ஸ் எல்லாத்தையும் என்கிட்ட கொடுத்தாங்க .அதுல ஒரு மொபைல் போன் இருந்துச்சி . அதுனால நான் அந்த நம்பர்க்கு கால் பண்ண போது தான் தெரிஞ்சது இவுங்க அஞ்சுவோட அம்மான்னு.இந்த ஆப்ரேஷன் முடியுற வரைக்கும் என்னால இந்த இடத்தை விட்டு வெளிய போக முடியாது டா…அவ கண்ணுலையும் நான் பட கூடாது.அதுனால …”
அர்ஜுன்” அதுனால நான் என்ன டா பண்ணனும்??? ”
” அதுனால நீ கொஞ்சம் நேரம் இங்க இரு டா…அவுங்கள பொருத்த வரைக்கும் நீயே காப்பாத்தினதா இருக்கட்டும்….ப்ளிஸ் டா இந்த ஹெல்ப் மட்டும் என்னாக பண்ணு டா “என்று கைகளை பிடித்து கொண்டு கெஞ்சினான்.
அவன் கெஞ்சலை ஒரு நண்பனான அர்ஜூனிற்கு சங்கடத்தை உண்டாக்காக அதற்காகவே அவனுக்கு தன் சம்மதத்தை தெரிவித்தான்.
“இவன் ஏன் இப்படி பண்றான்… அப்படி என்ன காரணத்திற்காக அந்த பொண்ண விட்டுட்டு இப்படி கஷ்ட படுறானே தெரியல…நாம கேட்டாலும் ஒன்னும் சொல்ல மாட்டான் .இதுனால தான் நான் இவன் கூட பேசுறதே இல்லை ” என்று மனம் சிந்திக்க தொடங்கியது.
சிறிது நேரத்திலே நேராக வண்டி செல்வாவின் வீட்டின் முன் நின்றது.
இருவரும் சேர்ந்தே வீட்டிற்கு வருவதை பார்த்த லதா மற்றும் அர்ஜுனின் அம்மா அம்பிகா ,, அவர்களை பார்த்து அதிர்ச்சி ஆச்சிரியம் மற்றும் சந்தோஷம் என்ன பல வகையான பாவனைகளை அவர்கள் முகத்தில் காட்டினர்…..
இரண்டு பேரும் அவர்களது அறைக்கு சென்று ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு கீழே வந்தனர்….
அவர்கள் இருவருக்கும் லதா மற்றும் அம்பிகா சாப்பாட்டை பறிமாறினர் . இருவரும் சாப்பிட்டு முடித்து விட்டு தூங்க சென்று விட்டனர்.
சாப்பிடும் போது இருவரும் எதுவும் பேசவில்லை.
அர்ஜுனிற்கு இருந்த கலைப்பில் நித்திரை தேவி அவனை வேகமாக அழைத்து கொண்டது……
ஆனால் செல்வாவிற்கோ அவனது தூக்கம் வெகு தூரத்தில் இருந்தது….
செல்வாவின் மனநிலை எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை. காரணம் அவன் கிட்ட தட்ட இரண்டு வருடங்கள் கழித்து தன்னவளை சந்தித்து உள்ளான் என்று மனம் குளிரவா அல்லது இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவளை சந்திக்க நேர்ந்தது என்று கவலை கொள்வதா என்றே தெரியவில்லை.
ஏதோ ஒன்று அவளின் குரல் கேட்ட நிமிடத்திலிருந்து வெறுமையாக சென்று கொண்டிருந்த அவன் வாழ்விற்கு பிடிப்பு வந்தது போல் தோன்றியது அவனிற்கு.
அவளின் அழுகை குரல் அவனது செவிகளில் சென்றடைந்த நொடி ,அணைத்து ஆறுதல் படுத்த சொல்லி அடம்பிடித்த மனதையும் பரபரத்த கையை கட்டுபடுத்த முடியாமல் தவித்து போனான் அங்கிருந்தவரை..
உன்னுடன் இருந்த
அந்த இனிமையான
பொற்காலங்களை,,
இந்த தனிமையான
காலங்களோடு
ஒப்பிடும்போது
தான் தெரிகிறது
வாழ்க்கையில்
எதை இழந்தேன்று…..!!!!!!
இன்று உன்னை பார்த்து விட்டேன் .இதுவே போதும் என் வாழ்நாளை ஓட்டுவதற்கு என்று மனதில் நினைத்து கொண்டே எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை.
அடுத்த நாள்..
சுசிலா எழுந்து பார்த்த போது ,,மீனு கதிரையில் உட்கார்ந்து கொண்டு பெட்டில் தலை வைத்து படுத்து உறங்கி கொண்டிருந்தாள்…
சுசிலா தன் கைகளை எடுத்து மீனுவின் சிகையை கோதி விட ஆரம்பித்தார். அதற்குள் மீனு முழித்துவிட ,,” அம்மா நல்லாருக்கியா மா??? உனக்கு இப்போ தல வலி எப்படி இருக்குமா??? ” என்று கேட்டவளிடம்,, ” நான் நல்லா இருக்கேன். எனக்கு இப்போ தல வலிலாம் பரவாயில்லை ” என்று பொறுமையாக பதில் கூறினார்.
பின் சுசிலா ஏதோ பேச வாய் எடுக்க,,அதை புரிந்து கொண்ட மீனு ” என்ன மா என்கிட்ட எதாவது பேசனுமா?? ” என்று கேட்க அதற்கு சுசிலா ” ஆமாம் ” என்பது தலை ஆட்ட..,,” அப்போ சொல்லு மா ” என்று சொல்லிவிட்டு சுசிலா வை பார்த்தாள்..
” இங்க பாரு மீனு மா.. நான் இனி எவ்வளவு நாள் உயிரோட இருப்பேன்னு எனக்கு தெரியல.. அதுக்குள்ள உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சா தான் மா என் கட்ட கூட வேகும் .ப்ளிஸ் மீனு மா உன்னோட முடிவு இந்த அம்மாக்காக மாத்திக்கோ டா .. கல்யாணத்துக்கு சரி னு சொல்லு மீனு?? ” என்று ஆதங்கத்தில் ஆரம்பித்த சுசிலா கேள்வியில் முடித்தார்.
இந்த நிலையிலும் தன் அம்மா இப்படி ஒன்று கேட்பார்கள் என்று மீனு மனதிலும் நினைக்க வில்லை.
தன் அன்னையின் முகத்தை கண்ட மீனு,,தனது பதிலுக்காகவே ஏக்கத்துடன் காத்திருக்கிறார் என்று புரிந்து கொண்ட மீனுவால் என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இப்படி ஒரு தர்மசங்கடமான நிலை வரும் என்று அவள் நினைக்கவில்லை.
சிறிது நேரம் தன் மனதுடன் புலம்பி கொண்டு இருந்த மீனு ,,” தனக்கு திருமணம் வேணாம்” என்று சொல்ல வந்த போது தான் நேற்று இரவு டாக்டரை சந்தித்த போது அவர் கூறிய செய்தி ஞாபகத்திற்கு வர,, விழிகளை மூடி வர துடிக்கின்ற கண்ணீரை உள்ளிழுத்தவள் பெரும் மூச்சொன்றை வெளியிட்டு தன் அன்னையிடம் , “அம்மா நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன் ” என்று தன் வலிகளை மறைத்து கொண்டு இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாள்…
“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா ” என்று சிலாகித்து கொண்டார் சுசிலா.
” எதுக்கு மா உனக்கு சந்தோஷமா இருக்குனு சொல்ற ” என்று ராஜன் கேள்வி கேட்டு கொண்டே உள்ளே வந்தார் . அவருடன் சிந்துவும் வந்தாள்.
” ஏங்க மீனு கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க “என்றார் சந்தோஷத்துடன்
” எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா ” என்று மீனுவின் தலையை தடவி கொடுத்தார் ராஜன்.
” ஐம் சோ ஹாப்பி அக்கா” என்று மீனுவின் கண்ணத்தில் முத்தம் கொடுத்தாள் சிந்து.
” சரி மா நீ இப்போ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு மா ” என்று மீனு வை வீட்டிற்கு அனுப்பி வைத்தார் ராஜன்.
பகலெல்லாம் கனவோடு
கலக்கிறேன்
நீயில்லா தனிமைகளில்..
இரவெல்லாம் கண்ணிரோடு
கரைகிறேன் வலிமிகுந்த
நேரங்களை….
மீனு தன் வலிகளை சுமந்து கொண்டு வீட்டை நோக்கி பயணத்தை மேற்கொண்டாள் .
வீட்டிற்கு சென்றவுடன் , தன் அறைக்கு சென்று எவ்வளவு அழ முடியுமோ அவ்வளவு அழுது தீர்த்தாள் .