ராமாசப்பு  எல்லாரும் சீங்கிரம்  குளிச்சிட்டு வாங்க 6  மணி பூஜையில  கலந்துக்கனும் என்று விரட்டினார்.

 முதல் பூஜை என்பதால்  கோவிலில்  கூட்டம்  குறைவாக  இருந்தது.

 பெரிய தாம்புல  தட்டில் யோகா மாலையும்,  தேங்காய், பழங்களும் மேலே  கல்யாணம் பத்திரிக்கை  வைத்த பூஜை செய்ய  பூஜாரிடம்  கொடுத்தார்.

   ஆண்டவர் கனி வாங்கி வந்த அனைத்து மாலைகளையும் பூஜாரி எல்லா சிலைகளும் வாங்கி  போட்டிருந்தார்.

 முதல் பூஜை என்பதால் கூட்டம் குறைவாக இருந்தது.

  ஆண்டவர் கனியின் குடும்பத்தில் உள்ள அனைவரும்  கை கூப்பி  கடவுளை  வணங்கி  படியே நிற்க.

பூஜை நடந்து கொண்டு இருந்தது.

அனைவரும்  இந்த கல்யாணம் நல்ல படியாக நடக்க வேண்டும்  என்று கடவுளிடம்  வேண்டினார்கள்.

கோவில் கருவறையில் பூஜாரி  கல்யாணம் பத்திரிக்கையுடன்  குடுத்த  தேங்காய்  உடைக்க    அது  அழுகி இருந்தது.   அங்கே இரண்டு பூஜாரிகள் இருந்தனர். தேங்காய் அழுகியதும். தேங்காய்யை  உடைந்தவர்  இன்னொரு  பூஜாரியை பார்க்க.

அவர் கோவிலில்  உள்ள   வேற  தேங்காய்யை  உடைத்து  வைக்குமாறு  கண்சாடை காட்டினார். சரி என்றவர் வேற தேங்காய் வைத்தனர்.

 பூஜை முடிந்து, அனைவரும்  பூஜாரி  திருநீர் பூசி விட.

லட்சுமி   ஆண்டவரிகனியையும், திவ்யாவையும்  காட்டி  புதுச கல்யாணம் முடிஞ்சுருக்க  நல்லா இருக்கனுமுன்னு  ஆசிர்வாதம் பண்ணுங்க  என்றார்.

பூஜாரி இருவரையும் பார்த்து  ஒன்னா  நில்லுங்க  என்று  சாமி கழுத்தில்  இருந்த  மாலையை எடுத்து வந்தவர். இருவரையும்  மாத்திக்க  சொன்னார்.

இருவரும் மாலை மாற்றி நிற்க.

இருவரும்  எந்த குறையும் இல்லாமல் இருக்கணும் என்று திருநீர் பூசி விட்டவர்.

   ஐயனார் பதத்தில்  இருந்த  எழுமிச்சை  பழத்தை  எடுத்து  வந்த பூஜாரி  திவ்யாவின்  சேலை முந்தானியை  விரி என்று  அதில் கை நிறைய   எழுமிச்சை பழத்தை குடுத்தவர். அருள் வாக்கு  சொன்னார்  அடுத்து இந்த  கோவிலுக்கு  வரும் பொழுது   உன்  மடி  நிறைந்து இருக்கும், மூன்று பேறா  தான் வருவீங்க என்று வாழ்த்தி சென்றார்.

  எல்லோருக்கும் பூஜாரி சொன்ன விசயம்  கேட்டு சந்தோஷம்.

 ஆண்டவர் கனி  திவ்யாவை  பார்க்க  அவளோ  குனிந்து கொண்டாள்  அவனை பாராது.

பின்பு பூஜாரி கொடுத்து  பொங்க சோறை   அனைவரும் சாப்பிட்டு முடித்து.

திருச்செந்தூருக்கு  வண்டியில்  செல்ல.

கனி  தன் பக்கத்தில்  அமர்ந்து இருந்த  மனைவியை பார்க்க. அவளோ அவனை பார்ப்பதை  தடுக்க எண்ணி  குனிந்து திரும்பி கொண்டாள்.

அவனோ சிரித்து கொண்டு அமைதியாக வந்தான்.

அனைவரும் திருசெந்தூர் வந்து சேர்ந்தனர். கோவில் பக்கத்தில்  கடலை  பார்க்க  அழகாய் இருந்தது. திருச்செந்தூர் என்றாலே கடல் தானே.

பெரியவர்கள்   கோவில் மண்டப வாசலில்  அமர்ந்து கொள்ள.  சிறியவர் மற்றும் கடலில் நீராடிட்டு விட்டு வருமாறு சொல்ல.

 பார்கவி  நான் போகலை  என்று யோகாவோடு அமர்ந்து கொண்டாள்.

மீனாட்சி  மாசமாக இருப்பதால் அவளும் போகா மறுக்க.

அனிகா நான் பீச் போவேன் என்று குழந்தை ஆசைப்பட, திவ்யா நான் தூக்கிட்டு போறேன்  டா உன்னை  என்றாள்.  பெரியவர் ஆண்டவர்கனியையும்  திவ்யாவையும்  கடலில் குளித்து விட்டு   வருமாறு சொல்ல.

ஆண்டவர் கனி திவ்யாவையும், அனிகாவை அழைத்து  கடலுக்கு சென்றான்.

பெரியசாமி  பார்கவி  கடலில் குளிக்க அழைக்க.

அவளோ  எனக்கு   கடலுல  குளிக்க பிடிக்காது என்று  மறுத்து விட்டாள்.  அஜய் நான் வர்ரேன்  மச்சான் என்று  இருவரும் சென்றனர்.

பெரியசாமிக்கு  பார்கவி  நடந்து கொள்வது  கோபத்தை  தூண்ட, கல்யாணம் ஆன பிறகு  பார்த்து கொள்ளலாம் என்று முறைத்து விட்டு  சென்றான்.

 அனிகாவும் , திவ்யாவும்  கடலின்  கரையில்  மணல் வீடு கட்டி விளையாடி  கொண்டு இருந்தனர்.

ஆண்டவர் கனி கடலில் குளித்து கொண்டே இவர்களை பார்த்திருந்தவன் திவ்யாவை  பார்த்து  கண்களாலே  கடலில்  குளிக்க  வா   என்று  அழைக்க.

அவளோ  வர மாட்டேன்  என்று தலையாட்ட.

வாடி என்றான் கடலில் இருந்த படியே.

குழந்தை   இருக்கு  வரமாட்டேன் என்று  அவனுக்கு  கரையில்  இருந்தே  சைகை  செய்ய.

 நான் வரவா  என்றான் கடலில்  குளித்த  படியே.

வேண்டாம்  என்று தலையாட்டி  விட்டு, அனிகாவை  பார்க்க, குழந்தை அவளின்  தலையில்  மண் அள்ளி போட்டு  கொள்ள  அய்யோ  என்றவள்.

வா அனிகா  கடலுல  முங்கி தலையை  கழுவுவோம்  என்று அனிகாவை தூக்கிகொண்டு   இடுப்பு வரைக்கும்  இருக்கும்   கடலுக்கு சென்று. குழந்தை  தலையில்  உள்ள  மண்ணை  அழசிவிட.

சந்தர்  அனிகாவை  தேடி வந்தவன். திவ்யா  நீ குளிமா, பாப்பாவை நான் தூக்கிட்டு போறேன், அனிகாவுக்கு  பசிக்கும்  என்று  குழந்தையை  வாங்கிக்கொண்டு போக.

இவளும் சேர்ந்து போகலாம்  என்று  சுந்தரின்  பின்  செல்ல  பார்க்க.

அவளை ஒரு கரம் கடல் நோக்கி இழுத்து செல்ல.

 ஆண்டவர் கனியிடம்  வேண்டாம்  என்றவள், எனக்கு பெரிய  அலையை பார்த்தா பயம் என்று  அவள் கரை நோக்கி  போக.

 அவளின் இடுப்பை பிடித்து  தன்னோடு  கடலுக்குள்  இழுத்து சென்றான்.

பெரிய, பெரிய அலைகள் வருவதை பார்த்தவள்.   பிலீஸ், கனி அத்தான்  எனக்கு  பெரிய அலையை  பார்த்தால் பயம்  என்று  சொல்ல.

நீ  வாடி  நான் பாத்துக்கிறேன் என்றவன். அவளை  கழுத்து  வரை உள்ள கடல்  தண்ணீர் இருக்கும் இடத்துக்கு அழைத்து  செல்ல.

அவளோ  பயந்து   கனி அத்தான், கனி அத்தான்  பிலீஸ்  எனக்கு பயம் வேண்டாம் என்று  அவனிடம் இருந்து கரைக்கு செல்ல பார்க்க.

அவனோ அவளை இரும்பு பிடி போல் பிடித்து இருந்தவன் அவளின்  அத்தான் என்று வார்த்தை கேட்டவன். நான்  அத்தானா  உனக்கு என்றான் அவளிடம்.

அவளோ அவனை பார்க்காமல் தலை குனிந்து இருக்க.

சொல்லு  நாச்சியா என்றான்.

அவளோ  அவர்களின் பக்கத்தில்  ஒரு பெரிய அலை வருவதை பார்த்தவள், பயந்து ஆண்டவர் கனியை கட்டி கொள்ள.

அவளை  பிடித்துக்கொண்டு காலை  தூக்கி ஒரு  குதி, குதித்தான் அலை அவர்களை  கடந்து  போய்  விட்டது.

ஆண்டவர் கனி அவளை  அணைத்த படியே  அலை  போயிடுச்சு  என்று அவளின் காதில்  சொல்ல.

அவனிடம் இருந்து பிரிந்தவள். என் பிரண்டு ஒருத்தி பீச் அலை இழுத்துட்டு போயி என் கண்முன்னாடி இறந்துட்டா  காலேஜ் படிக்கும் போது, அப்போ  இருந்து பயம் எனக்கு, பிலீஸ் என்னை  கரையில கொண்டு போய் விடுங்க.

 நான் இருக்குறப்போ   உனக்கு பயமா என்றவன். அலை வந்தவுடனே  ஒரு குதி, குதிச்ச  அலை நம்மல  கடந்து  போயிடும். என்னை பாரு பயம் போயிடும் என்றவன்  அவளை தன்னோடு வைத்து கொண்டு  பயத்தை போங்க.

 அலை வந்தால்,  என்னை மாதிரி செய் என்று  குதித்து காண்பிக்க.

கொஞ்சம்  பயம் குறைந்தது போல், இரண்டு மூன்று முறை கடல்  அலை வரும்  போது  குதித்தவள். அலை வரும் போது அவனின் கையை பிடித்து கொண்டே  கடல் அலையை கடந்தவள்  நல்ல இருக்கு என்று அவனுடன் சேர்ந்து பேசிக்கொண்டே  குளிக்க.

ஒரு பெரிய அலை அவர்களை நோக்கி வருவதை   பார்த்தவள். ஆண்டவர்கனியை பார்க்க.

அவனோ தன்னிடம் வா  என்று கண்களாலே அழைக்க.

அவனை தாவி அணைத்து கொண்டாள்.

 அந்த அலை இருவரையும் மூழ்கி விட்டு சென்றது.

அலை அவர்களை  விட்டு  சென்ற பின்பும், அவனை விடவே இல்லை திவ்யா.

அணைத்த படியே இருந்தவளை, ஹலோ நாச்சியா என்று அவளின் காதில் அலை போயிடுச்சு  என்றான்.

அலை போயிடுச்ச என்றவள். மெல்ல  அவனிடம் இருந்து பிரிய.

அலை, அலை என்று ஆண்டவர் கனி கத்த.

அய்யோ  என்றவள் மீண்டும் அவனை அணைக்க.

அவளை அணைத்த படியே மூழ்கி எழுந்தவன். அவளின்  தலை  முட்டி பயம் போயிடுச்ச என்றான்.

அவளோ  ஆம் என்று தலையாட்ட.

அவனின் கை, அவளின்   இடுப்பில் ஊறுவதை  உணர்ந்தவள். அவனின் கையை  எடுத்து விட.

இன்னும் அவளை  தன்னை நோக்கி   இடுப்பை  பிடித்து  இழுத்து  கொள்ள.

போதும்  என்றாள்.

எனக்கு வேணுமே  என்றவன்.

அவளின்  உடலில்  வளைவு நெளிவான இடங்களில் அவனின் கை ஊர்வலம் போக.

பிலீஸ்  வேண்டாம்  என்றவள். அவனிடம் கெஞ்சுவதை போல் பார்க்க.

 சரி வா  என்றவன். பின்பு  இரண்டு பேரும்  கடலில்  மூழ்கி  எழுந்து   கரைக்கு  வந்து  சேர்ந்தார்கள். இருவரும் சேர்ந்து  நாளி கிணறில்  குளித்து, உடை  மாற்றி  விட்டு திருச்செந்தூர் முருகனை  வணங்கி  விட்டு வர

 இரவாகியது.

 அனைவரும்  இரவு உணவை ஹோட்டலில்  உண்டவர்கள் வண்டியில் ஏறி  விருதுநகர்  வந்து சேர்த்தனர்.

அனைவரும் விருதுநகர் வர  இரவு  10  மணி ஆகியது.

அனைவரும்   சோர்ந்து இருக்க.

ஆண்டவர்கனி  மட்டும்  கடைக்கு   சென்று  வருவதாக  சொல்லி  சென்று விட்டான்.

மீனாட்சி  அவள்  அறைக்கு  அனிகாவை  தூக்கி  கொண்டு  சென்று விட.

அனைவரும்  அவர், அவர்  ரூம்  சென்று  ஓய்வு  எடுத்தனர்.

யோகாவும்,  திவ்யாவும்  ஊருக்கு  சென்று  வந்த  பொருள்களை  எடுத்து   வைத்து  சுத்தம்  செய்து விட்டு.

 பால்  காய்ச்சி  அனைவருக்கும் கொடுத்து விட்டு  வந்தனர்.

எப்பொழுதும் திவ்யா  லட்சுமியின் அறையில்  அவருடன் தான்தூங்குவாள். இன்று ராமசுப்புக்கு  உடல்  கொஞ்சம்  அசதியாக  இருக்க,  லட்சுமியின் அறையிலே   தூங்கிக்கொண்டு இருந்தார்.

ராமசுப்பு  எப்பொழுதும்  ஹாலில்  ஓரமாக உள்ள கட்டிலில்  தூங்குவார். இன்று  உடல்  அசதியாக இருக்க  லட்சுமியிடம் பேசிக்கொண்டே  அவர் அறையிலே  தூங்கிவிட.

திவ்யா வந்து  லட்சுமி அறையில்  பார்த்து  விட்டு கிச்சன் சென்று யோசனையில் இருந்தவளை.

கிச்சனில்  நின்ற  திவ்யாவிடம்   யோகா  எத்தனை  நாளைக்கு தான், இப்படி  தனியே இருப்ப. நீயும்  என் மகனும்  வாழ  வேண்டாமா என்றவர்.

ஆண்டவர்  கனி ரூம்புக்கு  போ, இனிமேல்  நீ அங்க  தான்  தூங்குற  என்று சொல்லியவர்.

லட்சுமியின் அறைக்கு  சென்று திவ்யாவின்  துணி பேக்கை எடுத்து வந்து, அவளிடம்  கொடுத்து. உனக்கு என் மகனை  பிடிக்கும் என்பது  எனக்கு  தெரியும் என்றவர்.

அவளின் தோளை தட்டி  என்னைக்கும்  இருந்தாலும்  நீ  அவன்  கூட  வாழ்ந்து  தானே  ஆகனும்  போ  என்று  ஆண்டவர் கனி ரூம்பிற்கு  அனுப்பி வைத்தார்.

அவன் வீட்டில்  இல்லை  என்று  தெரிந்தவள். அவன் வருவதற்குள்  போய்  தூங்கிடனும் என்று  வேகமாக  சென்று, குளித்து விட்டு  படுத்து விட.

இவள்  படுத்த ஐந்து  நிமிடம்  கழித்து, தன்  அறைக்கு  வந்த ஆண்டவர்கனி   திவ்யா  தான் படுக்கும்  கட்டிலில் படுத்து இருப்பதை   பார்த்தவன். அதிர்ச்சியாகி , பின்பு  சந்தோஷபட்டு  தூங்கும் அவளையே   பார்த்து நின்றான்………..