“உன்னைகூடநான்பேஸ்பண்ணாமஇருந்ததுக்குஅதுவும் ஒரு காரணம் தான். உனக்குஇதெல்லாம்பிடிக்காதுன்னுஎன்னாலஓரளவுக்குகெஸ்பண்ணமுடிஞ்சதுஅதுவும்கூட ஒருகாரணம்தான்நான்உன்னைபார்க்காமஇருந்ததுக்கு. ஆனாஅதுமட்டுமேகாரணம்இல்லை”
“எனக்குஉங்ககூடசண்டைஎல்லாம்இல்லைசரியா. இதுலசமாதானம்எங்கஇருந்துவந்துச்சு. எனக்கு வேண்டியது உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா பிடிக்கலையாங்கறது தான். அது என்னைக்கோ எனக்கு உறுதியாகிடுச்சு”
“நடுவுல நீங்க காணாம போனதால கொஞ்சம் மனக்குழப்பம் இருந்துச்சு. அப்புறம் நீங்க பொண்ணு பார்க்க வர்றதா தெரியவும் ரொம்ப நெருடலா இருந்துச்சு”
“அன்னை நடந்த சம்பவத்துனால தானான்னு. ஆனா அன்னைக்கு நீங்க வராம போகவும் இன்னும் மனசொடிஞ்சு போச்சு. ஆதி மாமா தான் எல்லா ஏற்பாடு முன்னாடி நின்னு பண்ணதால அவர் தான் நம்ம விஷயம் தெரிஞ்சு ஏதோ முயற்சி எடுத்திருக்கார்ன்னு நினைச்சேன்”
“ஏன்னா எங்கயும் நீங்க முன்னாடி வரவேயில்லை. தவிர நீங்க என்கிட்ட பேசக்கூட இல்லை. எதுக்கு இந்த கல்யாணம்ன்னு கூட தோணிடுச்சு. மாமா தான் என்னென்னவோ பேசி என்னை ஒத்துக்க வைச்சாங்க”
“மணமேடை வரைக்கும் வந்தா கூட மனசுல ஒரு சின்ன உற்சாகம் கூட இல்லாம இருந்துச்சு. தாலி கட்டுற அந்த நேரம் நீங்க சொன்ன வார்த்தை என்னோட எல்லா கலக்கத்தையும் போக்குச்சு”
“அதுக்கு பிறகு எனக்கு எந்த குழப்பமும் இல்லை. உங்க மேல வருத்தம் கொஞ்சம்இருந்துச்சு அதுவும் இப்போ உங்க விளக்கத்துல சமாதானம் ஆகிட்டு”
“அன்னைக்குஎன்னோடமனநிலைஅப்படிஇருந்துச்சுங்க. அதுல கொஞ்சம் முன்னப்பின்ன பேசியிருப்பேன் தான். அப்போநான்என்னைபத்திமட்டும்தான்யோசிச்சுட்டு இருந்தேன்”
“வேற எதுவும் என்னால யோசிக்கவே முடியலை. அதுவும் அன்னைக்கு பிறகு நீங்க இல்லனா என் லைப் எப்படியிருக்கும்ன்னு எனக்கு யோசிக்க கூட முடியலை. அதெல்லாம் அன்னைக்கு என்னோட மனநிலை. ஆனாநீங்கஎனக்காகமட்டுமில்லைஎல்லார்க்காகவும்யோசிச்சுஇருக்கீங்க”
“சொல்லவா”என்றவளின்முகத்தில்லேசாய்வெட்கம்வந்துஒட்டிக்கொண்டது. “சொல்லுன்னுதான்சொல்லிட்டுஇருக்கேன் நீ தான் எதுவும் சொல்ல மாட்டேங்கற” என்றான் கதிர் அவள் கண்களையே உற்றுநோக்கி.
அவன் பார்வை தன்னை விழுங்குவது போலிருக்க அதை தாங்காமல் அவன் மார்பில் ஒட்டிக்கொண்டாள் அவள்.
“சொல்லுவியா மாட்டியா??” என்றான் அவளை தன்னில் இருந்து விலக்கி.
“ஐ லவ் யூ” என்று அவன் கண் பார்த்து சொன்னவள் அவன் மீது சாய அவன் அவளின் முகத்தை இரு கைகளாலும் தாங்கி அவள் நெற்றியில் கண்களில் என்று வரிசையாய் முத்தம் வைத்து இதழ்களின் மீது இளைப்பாறினான்.
சில நொடிகள் கடந்து அவளை அவன் விடுவிக்க அவன் மீது சாய்ந்திருந்தவளுக்கு சட்டென்று ஏதோ ஞாபகம் வர “ஆமாஎனக்குஇப்போதான்ஞாபகம்வருது. நீங்கஎப்படிஎங்கவீட்டுக்கேகுடிவந்தீங்க??” என்றாள்.
“அதுஅவருக்குமட்டுமில்லைஎங்கம்மாவுக்கும்பொருந்தும். நான்வீட்டோடமாப்பிள்ளையாவோஅவர்நம்மவீட்டோடஇருக்கறதோநல்லாஇருக்காது. அதான்வாடகைக்குவந்திட்டேன்” என்றுஅவன்முடிக்கவும்அவனை இறுக அணைத்துக் கொண்டவள் அவன் இரு கன்னத்திலும் மாறி மாறி முத்திரை பதித்தாள்.
“நான் தைச்சு கொடுத்த பிளவுஸ் எல்லாம் அளவு சரியா இருந்துச்சா??” என்று அவன் ஓரப்பார்வை பார்த்து கேட்க அதில் முகம் சிவந்தது அவளுக்கு.
“ஹ்ம்ம் சரியா தான் இருந்துச்சு” அவளும் அவனை பார்க்காது.
“அவ்வளவு தானா”
“வேறென்ன செய்யணும்”
“அதுக்கெல்லாம் ஒரு சன்மானம் கிடையாதா”
“பிளவுஸ் தைக்க தான் காசு வாங்கிட்டீங்களே”
“அடியேய் கல்யாணத்துக்கும் நான் தான்டி தைச்சேன். இதோ இப்போ நீ போட்டு இருக்கறதும் நான் தான் தைச்சேன்”
“அதுக்கு என்ன செய்யணும் இப்போ”
“அளவு சரியா இருக்கான்னு”
“அதான் பார்க்கறீங்களே சரியா தானே இருக்கு”
“எங்க ஒண்ணுமே தெரியலை” என்றவனின் பார்வையில் தெரிந்த கள்ளத்தனத்தை கண்டுக்கொண்டாள் நயனா.
“யோவ் அடிவாங்குவ நீ… சீய் ஒரு நல்ல பையன்னு நினைச்சு லவ் பண்ணா கெட்ட பையனா இருக்கேய்யா நீ”
“கல்யாணத்துக்கு முன்னாடி நல்ல பையன் தான். கல்யாணம் ஆகிட்டா கெட்ட பையன் ஆகிட வேண்டியது தானே” என்று அவன் முடிக்கும் முன்னே “என்னது” என்று பாய்ந்தாள் அவன் மனைவி.