Advertisement

                                                                       உ

மஞ்சள் வானம் கொஞ்சம் மேகம்

மேகம் 37

 

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்

உழந்தும் உழவே தலை.

 

உழுதலால் வரும் மெய் வருத்தம் நோக்கிப் பிற தொழில்களைச் செய்து திரிந்தும் முடிவில் ஏர் உடையார் வழியதாயிற்று உலகம். அதனால் எல்லா வருத்தம் உற்றும், தலையாய தொழில் உழவே.

 

“ இது தான் வள்ளுவர் வாக்கு. அந்த வாக்கை இன்னிக்கு மறந்துட்டு நிக்கிறோம்.. மறந்தது உழவா வேணா இருக்கலாம்.. ஆனா அதுனால நம்ம மண்ணுல மறைஞ்சு போனது பல லட்சம் உயிர்கள்..

இப்ப இருக்குற நிலையில நாம பண்ண வேண்டியது.. நமக்கு உணவு கொடுக்குறவங்க உணர்வை புரிஞ்சுக்கணும். அடுத்தது வாட்சாப்ல வருத்தப்பட்டு சோசியல் மீடியால சோகப்பட்டு ட்விட்டர்ல துக்கப்பட்டு விவசாயத்துக்காக பக்கம் பக்கமா சேர் பண்ணினதெல்லாம் போதும்.. இனிமேலாவது களத்துல இறங்கி வேலை செய்யலாம்..

அத எதுக்காக உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கோம்னு நினைக்குறீங்களா ? காரணம் இருக்கு.

இங்க உக்கார்ந்திருக்க உங்க எல்லாருக்குள்ளேயும் போலிஸ் ஆகலாம்.. வக்கீல் ஆகலாம்.. பிசினஸ் பண்ணலாம்.. சயண்டிஸ்ட் ஆகலாம்.. இப்படிப் பலப் பல கனவுகள் இருக்கும்.

நீங்க தாராளமா கனவு காணுங்க.. அதை நனவாக்குங்க.. ஆனா அதுக்கு முன்னாடி தாய்க்கு தலைமகனா.. நம்ம பூமித்தாய்க்கு உங்க கடமையை செஞ்சிட்டு போய் கனவை நனவாக்குங்க.. ”

ஆயிரக்கணக்கான பள்ளி கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து அனைவரும் மறந்து போனதால் மறைந்து போய்க் கொண்டிருக்கும் உழவையும் உழவனையும் வந்தனை செய்ய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள் அத்துவின் ‘ மண்ணின் மைந்தர்கள் ’ அமைப்பினர்.

அத்து அவனது வேலையை விட்டு மண்ணின் மைந்தனாய் மாறிவிட அவனைத் தொடர்ந்து யுகா, கதிர், விக்ரம் என அனைவரும் அவனோடு கரம் கோர்த்து மண்ணின் மைந்தர்கள் என்ற அமைப்பை உருவாக்கினர்.

விவசாய நிலத்தை விற்பனை செய்பவர்களிடம் இருந்து வாங்கி அதை விவசாயிக்கே அளித்து விவசாயியை வாழ வைத்து விவாசயத்தை வாழ வைக்க முனைந்தனர். உழவனை தேடிச் சென்று உதவி அவனை உயிருடன் உயிர்ப்புடன் வைத்தனர்.

மழை இல்லா காலங்களில் இருக்கும் மனித நேயத்தை வைத்து பொருளுதவி செய்வது என ஒருபக்கமும்

இளைய தலைமுறையினரிடம் நம் பாரம்பரிய பரம்பரைத் தொழிலான விவசாயத்தின் விசுவாசத்தை எழுச்சி பெறச் செய்து அவர்களைக் களத்தில் இறக்கி விடுவது என மறு பக்கமும் உழவுக்கு உயிரூட்டிக் கொண்டிருந்தனர்.

“ எங்க அமைப்பிலிருந்து உங்க கிட்ட நாங்க கேக்குறது வீட்டுக்கு ஒரு விவசாயி.. கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுட்டு வர உழவை உயிர்ப்போடு வெச்சிருக்க விவசாயிங்க தேவை.. எங்களோட லட்சியம் அது தான்.. அது நிறைவேருறது உங்க கைல தான் இருக்கு.. என்னிக்கு ஒரு இருபது வயசு பையன் தன்னை விவசாயின்னு அறிமுகப் படுத்திக்கிறானோ அன்னைக்கு நாம இழந்ததை மீட்டேடுத்துட்டோம்னு அர்த்தம்… ” என பேசி முடித்து கீழே இறங்கிய அத்து யுகாவிடம் வந்து நின்றான்.  

“ என்னடா ஏதும் மெசேஜ் வந்துச்சா… ”

அவன் மறுப்பாக தலையசைத்துவிட

“ சரி நான் கால் பண்ணி பேசிட்டு வரேன்.. நீ இங்க பார்த்துக்க. ” என்றுவிட்டு நகர்ந்துவிட்டிருந்தான்.     

அவன் அழைப்பு விடுக்க மறுமுனை எடுக்கப்படாமல் இருந்தது. மீண்டும் முயற்சிக்க.. அப்பொழுதும் தோல்வியே அவனைத் தழுவியது.. நேரம் பார்த்தவன் குறுஞ்செய்து அனுப்பிவிட்டு வந்து அவன் குழுவோடு அமர்ந்து கொண்டான்.

சில மணித்துளிகளில் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு வர.. எடுத்துப் பார்த்தவனின் இதழ்களில் மென்மையான புன்னகை.

அருகிலிருந்த சூர்யாவிடம்

“ சூர்யா.. கதிர் ப்ளே கிரௌண்ட் பக்கமா இருக்கான். வரச் சொல்றியா.. ”        

‘ கிரௌண்டா… ’ என்றவளுக்குள் ஏதேதோ எண்ண அலைகள் ஆர்ப்பரிக்க.. தலையை உலுக்கிக் கொண்டு

“ இதோ போறேன் அண்ணா… ” என நகர்ந்தாள்.

‘ புயல் மையம் கொண்டு கிழக்குப் பக்கமாக வந்து கொண்டிருக்கிறது ’ சிரிப்புடன் ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டான் அத்து.

கதிரை தேடிக் கொண்டே வந்தவளின் முன்பு ஒருவன் குதிக்க.. துள்ளிக் குதித்து பயத்தில் விழிகளை இறுக மூடி நின்றாள்.

மெல்ல விழிகளைத் திறக்க.. அவள் முன்பு நின்றிருந்தான் அவன் !

துருதுரு கண்களும் குறும்பும் காதலும் புதிதாய் புல்வெளியாய் இதழின் மீது தளிர்விட்ட மீசை முடிகளும் கொண்டு நின்றவனா இவன் ?

நிச்சயம் இல்லை..

உதட்டின் மேல் அரணாய் அடர்த்தியான மீசையும் உரியவளுக்காக உரிமையாய் உதட்டில் பூத்திருக்கும் உவகையும் அறிவும் தெளிவும் கலந்து கட்டிய களையான முகமுமாய் இவன் !

ஆனால் அந்தக் கண்கள்.. அதிலிருந்த அவளுக்கான காதல் மட்டும் மாறியிருக்கவில்லை. மாறவும் மாறாதோ ?

அவள் இமைக்காமல் அவனையே பார்த்திருக்க.. அவள் முன்பு சொடக்கிட்டு நடப்பிற்கு கொண்டு வந்து ஒரு கடிதத்தை நீட்டினான்.

எட்டாக மடித்து வைக்கப்பட்டிருந்த அந்த கடிதத்தின் ஓரங்களெல்லாம் கசங்கி கந்தலாகிப்போய் அவன் காதலுக்குக் காலம் சொல்லியது.

அவள் உள்ளுக்குள் எழுந்த ஆர்வமும் எதிர்பார்ப்புமாக வேகமாக பிரிக்க முயல..

“ ஹேய் !! பார்த்து பார்த்து.. ” என்றான் பதறிபடி.

‘ ரொம்பத்தான் பத்திரம் பார்க்கிறடா.. ’ என எண்ணி தலையை அசைத்து பிரித்துப் படித்தாள்.

 

நான் உனை காதல் செய்கிறேன்

காதல் கொள்ள வாராயோ.

 

இரு வரிகளில் காதல் சொல்ல வள்ளுவர் வழியைக் கையாண்டான் போலும் அந்த அழகிய தமிழ் மகன்.   

அதை அப்படியே மடித்து அவன் சட்டைக்குள் வைத்துவிட்டு அவள் நகர எத்தனிக்க.. எட்டிப் பிடித்தான் அவள் கரத்தை.

“ பதில் சொல்லிட்டு போ… ” எதிர்பாராத ஏமாற்றம் தடுமாற வைத்தது..

சிங்கப்பூரிலிருந்து அதிகாலையில் தான் தாயகம் திரும்பியிருந்தான் அதியன். அம்மாவிடமிருந்து வாங்க வேண்டிய அர்ச்சனைகளை எல்லாம் வாங்கி விட்டு அரக்கப் பறக்க ஓடி வந்தான் அவளிடம்.

அதே பள்ளி.. அதே மைதானம்.. அதே நாள்.. அதே நேரம்.. அதே கடிதம் மூலம் அதியனாக காதல் சொன்னான் சூர்யாவிடம். அகத்தில் அத்தனை நம்பிக்கை அவளிடமும் அவனுக்கான அன்பு இருக்குமென. எல்லாம் பொய்த்து போய்விட தளர்ந்துவிட்டான்.

இருப்பினும் அவளது பதில் வேண்டும்.. எதுவாயினும் இருக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டிருந்தான்.

“ என்ன சொல்லணும்.. ”

“ அது நீ தான் சொல்லணும்.. ”

“ சொல்ல எதுவுமில்லை.. ” விட்டேட்றியாக அவள் சொல்ல      

“ எதுவுமேயில்லையா… ” மறைக்க முயன்றும் ஏமாற்றம் எதிர்பட்டது.

அவன் முகம் பார்த்தவள் என்ன நினைத்தாளோ..

“ பிரதர்.. எனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு.. ” என்றாள்.

பிடித்திருந்த அவள் கரத்தை விடுவித்தவன்

“ சாரி.. ” எனக் கேட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்.. அதற்கு மேல் அங்கிருக்க முடியாது என புரிந்துவிட்டிருந்தது அவனுக்கு.

“ ஹேலோ.. இதையும் கேட்டுட்டு போங்க.. அவன் பேரு அதியன் அகத்தியன்.. என்னோட சீனியர்.. ”

இருவருக்குமிடையே இருந்த இடைவெளியை அரை கணத்தில் குறைத்து அவளை அவனுக்குள் புதைத்துக் கொண்டான்.

ஆறு வருட இடைவெளியை அந்த அணைப்பு முற்றிலுமாய் அகற்றியிருந்தது..

அவள் உச்சி மீது தாடை பதித்திருந்தவன்

“ அப்போ நா யாருடி ” என்றான்.

“ என்னைக் கேட்டா ”

“ சரி நா கேக்கல.. நீயும் சொல்லாத.. ” அந்தக் கணத்தை ரசிக்க வேண்டும் அவனுக்கு.

“ நா சொல்லுவேன்.. எனக்கு ஸ்கூல் டேஸ் அதியன் தான் வேணும்… ”

“ வெச்சுக்கோ.. ” அவன் சொல்ல.. சட்டென நிமிர்ந்து வாய் மேல் ஒரு அடி வைத்தாள்.

“ நீ தானடி கேட்ட.. ”

“ இப்பவும் நான் தான் கேக்குறேன்.. ”

“ அப்புறம் ஏன்டி என்னை வேணாம்னு சொன்ன.. ” அவன் விளையாட்டுப் பிள்ளையும் அல்ல.. அவன் காதலும் விளையாட்டல்ல.

“ நான் சொல்லலையே… ”

அவன் அவளை அவனிடமிருந்து பிரித்து முகம் பார்த்தான்.. அவளும் சளைக்காமல் பார்த்திருந்தாள்.

உண்மையில் அன்று அவள் அவனிடம் எதுவுமே பேசியிருக்கவில்லை. அவன் கடிதம் நீட்டியவுடனே புரிந்து போனது.. அவள் அதிர்ந்து திகைத்து பயத்தில் படித்தும் படிக்காமல் அவனிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டாள்.. மறுக்கவும் இல்லை.. ஏற்றுக்கொள்ளவும் இல்லை அவன் காதலை !

இப்பொழுது அவள் விழிகள் பேசும் மொழிகளுக்கு என்ன அர்த்தமாம் ?

“ ஒரு வார்த்தை சொன்னியாடி.. ச்ச.. இது தெரியாம இத்தனை வருஷத்தை வீணடிச்சுட்டேனே…. ”

“ நீ தான ஊரை விட்டு ஓடிப்போன.. ”

“ அது அப்படியில்லடி.. திரைக்கடலோடி திரவியம் தேடுன்னு ஔவை பாட்டி சொன்னதை செஞ்சேன்… ” என்றபடி அவள் நெற்றியில் முட்டியவன் அப்படியே நிற்க..

அதியனுக்கு சதி செய்யும் விதமாக பள்ளியின் சைரன் ஒலித்தது.

“ என்ன பண்ற அதி.. இது ஸ்கூல்.. ” என அவள் விலக

“ ப்ச்.. சும்மா இருடி. யாரும் இல்ல இங்க.. ” என அவளை அணைத்தபடி நின்றுகொண்டான்.

அவன் அகத்தில் கோலோச்சுபவளின் அகத்திலும் அவனே ஆக்கிரமிப்பு செய்துள்ளான் என்பதை நினைக்க நினைக்க.. உள்ளுக்குள் உவகை ஊற்றெடுத்தது.

சில மணித்துளிகள் கழித்து “ அதி.. அங்க எல்லாரும் நமக்காக காத்திருப்பாங்க..” அவள் சொல்ல

மனமே இல்லாமல் தன்னிடமிருந்து பிரித்து அவளுடன் கரம் கோர்த்து அரங்கம் நோக்கி அவளுடன் நகர்ந்தான் அதியன்.

***

விரல்களின் நடுவே அலைபேசி நர்த்தம் ஆடியபடி இருக்க.. பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி அந்தக் காரிடாரில் நடந்து வந்து கொண்டிருந்தான் அவன்.

அங்கோ.. தன் இரு கைகளையும் மார்புக்குக் குறுக்காகக் கட்டிக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டு அப்பாவி அவதாரம் எடுத்திருந்தவன் ஓரக் கண்ணால் எதிரிலிருந்த வகுப்பறையைப் பார்க்க.. அடுத்த கணம் சுட்டிக் கண்ணனாய் அவதாரம் எடுத்து இரு கைகளையும் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு சுற்றிலும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

ஒரு சில மணித்துளிகளில் மீண்டும் முந்தைய அவதாரம் எடுத்திருந்த அச்சிறுவனைக் கண்டு புன்னகைத்து அவனிடம் சென்றான்.

“ ஹாய் ”

அவனை நிமிர்ந்து பார்த்த சிறுவன் “ யார் நீ ” என்பது போல பார்க்க

“ ஐயாம் விக்ரம்.. நியு அட்மிசன் டூ யுவர் கிளாஸ்.. ” என்றான்.

அவனை மேலிருந்து கீழாகப் பார்த்தவன் “ இங்க இருந்து போ.. இந்த ஸ்கூல் வேணாம்.. அதோ அந்த மிஸ் அடிப்பாங்க.. அப்புறம் நீயும் என்கூட சேர்ந்து நிக்கணும் ” என்றான்.  

அதற்குள் “ ஸ்ரீராம்.. வாட் ஆர் யு டூயிங் தேர் ? ” என உள்ளிருந்து குரல் வர

“ ரிமெம்பெரிங் ரைம்ஸ் மேம்.. ” என்றுவிட்டு விக்ரமிடம் வாய் மேல் விரல் வைத்து அமைதியாக இருக்கச் சொன்னான்.

இவன் சற்று குரலைத் தாழ்த்தி “ சரி நீ ஏன் இங்க நிக்குற ” என்று கேட்க

“ அந்த மிஸ் வெளில அனுப்பிட்டா.. ” என்றான் உள்ளிருக்கும் ஆசிரியரை முறைத்தபடி.

“ ஷ்ஷ்.. அப்படியெல்லாம் பேசக்கூடாது.. பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும்னு எங்க அம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க.. உங்க அம்மா சொல்லிக் கொடுக்கலையா ? ” என பாவனையோடு கேட்க

“ எங்க அம்மாவும் தான் சொல்லிக் கொடுத்திருக்காங்க.. ” என்றான் அவசரமாக.

“ நான் அம்மா சொன்னா கேப்பேன்.. ”

“ நானும் கேப்பேன்.. ” என்றுவிட்டு ஸ்ரீராம் திரும்பி நின்று கொள்ள.. விக்ரம் அவன் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான்.   

“ சரி இப்போ சொல்லு.. ஏன் மிஸ் உன்னை வெளில அனுப்பினாங்க.. ”

“ அவங்க ரைம்ஸ் கேட்டாங்க.. ஸ்ரீராம் சொல்லல.. வெளில போ சொல்லிட்டாங்க.. என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் என்னைப் பார்த்து சிரிச்சாங்க.. ” என அவன் அழுகுரலில் சொல்ல..

“ ஸ்ரீராம் ஏன் சொல்லல… ” என இவன் கேட்டு வைக்க.. இவனை முறைத்துவிட்டு அவன் திரும்பி நின்று கொண்டான்.

“ ஒகே.. பை ஸ்ரீராம்.. நான் கிளாஸ்க்குள்ள போறேன்.. ” என விக்ரம் எழுந்து கொள்ள

“ உன்னை மட்டும் விடுவாங்களா ? ” வேகமாக அவன் கேட்டதில் விட்டுவிடக் கூடாது என்ற வேண்டுதல் தான் இருந்தது.

“ ம்ம்.. விக்ரம் ரைம் சொன்னா.. மேம் உள்ள விடுவாங்க ”

“ அப்போ நீயும் உள்ள போயிடுவியா ? ” அவன் முகம் வாடிப் போக

“ நா உனக்கும் சொல்லித் தரேன்.. நீயும் சொல்லு. உன்னையும் உள்ள விடுவாங்க.. ” என்றவன் அவனுக்குச் சொல்லிக் கொடுக்க..

“ ப்ரெண்ட்ஸ்.. ” எனக் கரம் நீட்டினான் ஸ்ரீராம்.

“ ப்ரெண்ட்ஸ் ” என்றுவிட்டு “ நீ பர்ஸ்ட் ரைம் சொல்லிட்டு உள்ள போ.. நான் அடுத்து வரேன் ” என்று சொல்ல.. ஸ்ரீராம் அவன் வகுப்பறை வாயிலில் வந்து நின்றான்.

“ வாட் டூ யு வான்ட் ? ” உள்ளிருந்து அவன் ஆசிரியர் கேட்க

“ ஐ வில் டெல் யு ரைம் மேம்.. ” என்றான்.

அவர் வெளியே வரவும் விக்ரம் அங்கிருந்த பெரிய தூணின் பின்புறம் மறைந்து நின்றுகொண்டான்.

“ ம்ம்.. டெல் மீ ”

“ I love you

 You love me.. ”

“ வாட்… ” என அவர் அதிர்ச்சியில் கத்த..

“ I love you..

You love me

We are a happy family

With a great big hug..

And a kiss from me to you

Won’t you say you love me too ?  ”

ஸ்ரீராம் வேகமாக சொல்லி முடிக்க..

“ வாட் இஸ் திஸ் ? ”

“ ர.. ரைம் மேம் ” அவர் முகத்தைப் பார்த்து தடுமாறியபடி அவன் சொல்ல..

“ ஹூ தாட் யு ? ” இழுத்துப் பிடித்த பொறுமையுடன் அவர் கேட்க

“ அவர் கிளாஸ் நியு அட்மிஷன் மேம்.. ” என திரும்ப விக்ரம் அங்கில்லை.

“ ப்ரெண்ட்.. ப்ரெண்ட்.. ” என அழைத்துப் பார்க்க தூணின் மறைவிலிருந்த விக்ரமால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.

“ நோபடி இஸ் தேர்.. ஆர் யு லையிங் ?? ”

“ நோ மேம்.. ஹிஸ் நேம் இஸ் விக்ரம்.. ஹி இஸ்… ”

அவனைத் தடுத்தவள் “ வாட்ஸ் ஹிஸ் நேம் ”

“ விக்ரம் மேம்.. ”

புரிந்துவிட்டிருந்தது அவளுக்கு. இது எல்லாம் அவன் செயலாகத் தான் இருக்க வேண்டும்.

“ கோ இன்சைட் ”

அவன் உள்ளே சென்றுவிட அடுத்த கணம் அவள் முன்பு நின்றிருந்தான் விக்ரம்.

ஒரு சில மணித்துளிகள் அவனைப் பார்த்திருந்தவள் உள்ளே திரும்ப எத்தனிக்க.. “ விஷ்வா.. ” என்றான் காதலாக.

அவள் விஷ்வாதிகா.. காதலிக்க ஆசையில்லை என்ற விக்ரமின் மேல் காதல் கொண்டு அவனையும் காதல் கொள்ள வைத்தவள்.

அவனின் அழைப்பு அவளது அகத்தின் ஆழம் வரை சென்று வருடியது. விழி மூடி நின்றிருந்தவள் மெல்ல திறந்தாள்.

“ சாரி.. ” என்றான்.

“ எவரு நூவு ? இக்கடெந்துக்கு ஒச்சாவு ? எவரு காவாலி நீக்கு ? ”

( யாரு நீ ? இங்க எதுக்கு வந்த ? யார் வேணும் உனக்கு ?)

 

அவள் கோவம் கொள்ளக் காரணம்.. ஆறு கடல் மலை மக்கள் மதம் இனம் மொழி என எல்லா எல்லைகளையும் கடந்து காதல் கொண்டு கரம் பிடித்தவன் அவளையும் அவர்களின் அன்பிற்கு அடையாளமான வளவனையும் விட்டுச் சென்று மூன்று நான்கு மாதங்களுக்கும் மேல் இருக்கும்.

மண்ணின் மைந்தர்கள் சார்பாக.. அத்து மற்றும் விக்ரம் தலைமையில் இரு குழுக்கள் மக்களோடு மண்ணுக்குள் புதைந்து போன நம் பாரம்பரிய விவசாயத்தையும் விளைச்சலையும் விதையையும் மீட்டெடுக்கும் பணிக்காக ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீட்டெடுத்ததை கதிரும் யுகாவும் மக்களிடம் சேர்ப்பர்.

அதன் ஒரு பகுதியாக தான் விக்ரம் அவன் குழுவோடு ஆராய்ச்சி செய்யச் சென்று மூன்று மாதம் கழித்து திரும்பியிருக்கிறான். இடை இடையே தோல்விகள் தொடர்கதையாகிப் போக துவண்டு விடாமல் வெற்றியை வசமாகிக் கொண்டு திரும்பி இப்போது விஷ்வாதிகாவிடம் வசமாகச் சிக்கிக் கொண்டிருக்கிறான்.

“ நாக்கோசம் ஒச்சாவா.. நேனு நீக்கு குருத்து உன்னானா ? ” ( எனக்காக வந்தியா ? நான் உனக்கு ஞாபகம் இருக்கேனா ? )

என அவள் பொறிந்து கொண்டிருக்க அவனோ நிதானமாக

“ ஐ வான்ட் அ டைட் ஹக் பிரம் யு நவ்… ” என்றான்.

“ ஏய்.. ஏய் ஏம் மாட்லாடுத்துன்னாவு நுவ்வு.. ( ஏய் என்ன பேசுற நீ ) ” என பல்லைக் கடிக்க

“ நேனு செப்பிந்தி அர்த்தங்காலேதா… நாக்கு நின்னு கெட்டிகா கௌலிஞ்சுகோவாளனி உந்தி..  ” என்றான்.

( நான் சொன்னது புரியலையா ? உன்ன கெட்டியா கட்டிப் புடிச்சுக்கனும்னு எனக்கு இருக்கு )

“ ஜஸ்ட் கெட் அவுட்.. முதட்ல நுவ்வு இக்கட உண்டி எள்ளிப் போ.. ” என குரலுயர்த்தாமல் அதே சமயம் கட்டளையாகவும் சொல்ல

“ விஷ்வா.. ” என இவன் ஆரம்பிக்கவும்

உள்ளிருந்து கோரசாக குழந்தைகள் ரைம் சொல்ல ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.

“ அடேய் ! ஸ்ரீ.. என்ன வேலை பார்த்து வெச்சிட்ட டா ” என்றவன் உள்ளே எட்டிப் பார்த்து அவர்களை அடக்க முயன்று தோற்று நிற்க

விஷ்வாதிகா அருகே வந்து “ நுவ்வே முதலி பெட்டாவு கதா.. இப்படு நுவ்வே மானேஜ் செய்.. ( நீ தானே ஆரம்பிச்சு வெச்ச.. இப்ப நீயே மானேஜ் பண்ணு )” என ஓரமாக நின்று கொள்ள விக்ரம் மாட்டிக் கொண்டு விழித்தான்.  

ஒரு வழியாக பாகுபலி பார்ட் த்ரீ ஒட்டி முடித்து அவர்களை அமைதிப்படுத்தியிருந்தான். அந்த வகுப்பு முடிவதற்கான அறிவிப்பு வர.. விஷ்வாதிகா ஸ்டாப் ரூம் நோக்கிச் செல்ல.. விக்ரமும் அவளைப் பின் தொடர்ந்தான்.

அவள் ஸ்டாப் ரூம் நோக்கிச் செல்லாது வெளியே வந்து அரங்கம் நோக்கிச் செல்வதை கவனித்தவன் இதழ்களில் மெல்லிய முறுவல். ஒரு திருப்பத்தில் சட்டென அவளை தன்னுடன் இழுத்துக் கொண்டு அங்கிருந்த மறைவான இடத்தில் நின்றான்.

அவள் அதிர்ச்சியில் விழி விரித்து நிற்க.. அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டு தலைவனின் பிரிவாற்றாமையைத் தலைவிக்கு அறியப்படுத்தினான்.

“ எப்புடு ஒச்சாவு.. ( எப்ப வந்த ) ” கோவம் எல்லாம் கரைந்து போயிருந்ததது.

“ இப்புடே.. ( இப்ப தான் ) ”

“ சரி நுவ்வு தூரங்கா நிலுவு.. இதி பப்ளிக் பிளேஸ் குருத்துந்தா.. ( சரி நீ தள்ளி நில்லு.. இது பொது இடம் நியாபகம் இருக்கா ? ) ”

“ எந்துக்கு லேது.. பாகானே குருத்துந்தி.. ஐனா இதி பப்ளிக் பிளேஸ் காதே.. இதி நா ப்ரைவேட் பிளேஸ்.. மை ஓன் ப்ரோபெர்டி நுவ்வு.. ( ஏன் இல்ல. நல்லாவே நியாபகம் இருக்கு. ஆனா இது பொது இடம் இல்லையே. என்னோட ப்ரைவேட் பிளேஸ். எனக்கு மட்டுமே சொந்தமான ப்ரோபெர்டி நீ ) ” அவளை விலக்காது வம்பு வளர்க்க     

“ விக்ரம்.. ப்ளீஸ்.. ”

“ சரே நுவ்வு எள்ளு.. நாக்கு ஒக்க முத்து இச்சேசி… நுவ்வு எள்ளு ( சரி நீ போ.. எனக்கு ஒரு முத்தம் கொடுத்திட்டு நீ கிளம்பு ) ” என அசால்ட்டாக அவன் சொல்ல           

“ ஆ ” என அதிர்ச்சியில் அவள் வாயைப் பிளந்து நிற்க..

“ தொரகா… நாக்கு வேலையிந்தி நேனு நா டீம் தோ ஜாயின் செய்யாலி ( சீக்கிரம்.. எனக்கு வேலை இருக்கு. நான் என்னோட டீம் கூட ஜாயின் பண்ணனும் ) ” என அவன் அவசரப்படுத்த

“ ஹேய்.. அசல் நுவ்வு ஏம் மாட்லாடதுன்னாவனி நீக்கு அர்த்தமயினா ( ஹேய்.. நீ என்ன பேசுறன்னு உனக்கு புரியுதா ) ”

“ அதன்னி காரெக்ட்டுகா ( அதெல்லாம் ) ”

“ விக்ரம்…. ”

அவன் அடம் பிடிப்பது அதிசயம்.. ஆனால் பிடித்தால் தான் நினைத்ததை சாதிக்காமல் விடமாட்டான் என்பதை அறிந்தவள் வேறு வழியின்றி

“ சரி நுவ்வு கண்ணு மூஸ்கோ.. ( சரி நீ கண்ண மூடு ) ”   என்றதும் அவன் அவள் கண்ணை மூட

“ ப்ச்.. நன்னு காது.. நீ கண்ணு மூஸ்கோ ( என்னை இல்ல… உன் கண்ண மூடு ) ” அவள் அதட்ட

சிரிப்புடன் அவன் கண் மூடி நிற்க    

“ ரெடி ஒன்.. டூ.. ” கன்னத்து முத்தமொன்றிற்கு அவள் கவுன்டவுன் சொல்ல.. பொங்கிய சிரிப்பை அடக்கிய படி நின்றான்.

சட்டென அவன் கரத்தை விலக்கி ஓடியவள் தூரத்தில் நின்று பழிப்பு காட்டிவிட்டு பள்ளியை நோக்கிச் செல்ல..

“ இன்டிகி ரா.. நீ சங்கதி ஏன்டோ சூஸ்தானு ( வீட்டுக்கு வா.. உன்னைப் பார்த்துகிறேன் ) ” என கத்திவிட்டு அவன் அரங்கினுள் சென்றான்.    

“ வாடா.. வழி மறந்துட்டயா என்ன ? உன்ன கிண்டர் கார்டன் கிளாஸ் பக்கமா பார்த்ததா தகவல் வந்துச்சு ” என யுகா விக்ரமை வரவேற்க..

“ அதுக்குள்ள எப்படி டா.. ”

“ என்னவென்று நினைத்தாய் எம் ஒற்றர் படையை.. உன் மூச்சுக் காற்றைக் கூட கணித்துச் சொல்லிவிடுவர் ”

“ அப்ப கண்டிப்பா அதுல என் எயில் குட்டி இருப்பாளே.. ” என்றவன் விழிகள் வளவனைத் தேட

“ வளவன் அத்துகிட்ட இருக்கிறான்.. அந்தப் பக்கம் போயிப் பாரு ” என்றவனுக்கு அழைப்பு வர அதை ஏற்றபடி நகர்ந்தான்.

“ அத்து… ”

“ ஹேய் விக்ரம்… ” என்றவன் “ அங்க பாருங்க.. விக்கி அப்பா வந்தாச்சு… ” என ஒன்றரை வயது வளவனை விக்ரமிடம் ஒப்படைத்தான்.

தந்தையிடம் வந்ததும் அவன் முடியைப் பிடித்து இழுத்து.. கன்னம் இரண்டிலும் கிள்ளி இத்தனை நாள் விட்டுச் சென்றதற்கு தண்டனை அளித்தான் வளவன்.

சிரிப்போடு அத்தனை அடிகளையும் பெற்றுக் கொண்டவன் உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான். வளவனும் சிப்பி இதழ்கள் விரித்து சிரித்தபடி விக்ரமிற்கு முத்தமிட்டான்.

தந்தையும் தனயனும் சுற்றம் மறந்து தங்களுக்குள் கதை பேசிக் கொள்ள சிரிப்புடன் அவர்களை தனித்து விட்டு நகர்ந்து கதிரிடம் வந்து சேர்ந்தான் அதுல்.

“ கதிர் இப்போ வரைக்கும் எவ்ளோ வாலண்டியர்ஸ் வந்திருக்காங்க.. ”

“ நண்பா பதினஞ்சு பேர் நம்மோட புல் டைம் வொர்க் பண்ண ரெடியா இருக்காங்க.. அறுபத்தி அஞ்சு பேர் சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை வரதா சொல்லிருக்காங்க… ” என்றதும் இவன் முகம் ஏமாற்றத்தை தத்தெடுத்துக் கொள்ள..

“ அத்து.. இப்போ தானே இங்க ஆரம்பிச்சிருக்கோம்.. இன்னும் கொஞ்ச நாள் ஆகும்டா ”

அவன் சொல்லிய சமாதானம் எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அத்துவால். அந்த அரங்கில் கிட்டத்தட்ட ஐயாயிரம் மாணவர்கள் இருக்க.. இவர்களுடன் கரம் கோர்க்க விரும்புவர்கள் இரட்டை இலக்கங்களில் தான் இருக்கிறார்கள் என்றால் ? காலையிலிருந்த உற்சாகம் எல்லாம் அப்படியே உடைந்து போக.. அமைதியாக அமர்ந்து கொண்டான்.

“ அண்ணா… ” என்ற அழைப்பில் நிமிர்ந்தவனின் முன்பு ஒரு பத்து மாணக்கர்கள் நின்றிருந்தனர்.

“ அண்ணா.. நாங்க பைனல் இயர் ஸ்டுடென்ட்ஸ்.. மொத்தம் இருநூறு பேர் இருக்கோம்.. எங்களால எக்கனாமிக்கலா உங்களுக்கு உதவ முடியாது.. ” என தயங்கி நிறுத்த

“ ஏர் பூட்டி காளை மாடுங்க காத்திட்டு இருக்காங்க களத்துல… ” என இவன் சொல்லி நிறுத்த அவர்கள் முகம் மலர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“ எப்போ இருந்து அண்ணா உங்ககூட ஜாயின் பண்ணிக்கட்டும் ”

“ இப்போவே… ” என்றவன் எழுந்து நின்று கதிரைத் தேட அவன் சாட்டிலைட் மூலம் அவன் நிலவுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தான்.

“ சரி வாங்க.. ” என அழைத்துச் சென்று அவர்கள் அமைப்பில் இணைவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வைத்தான்.

அவர்கள் நகர்ந்ததும்.. இன்னொரு குழு வந்தது.

“ அண்ணா.. எங்களுக்கு விவசாயம் எல்லாம் செய்யத் தெரியாது.. ஆனா எங்களுக்கு ஆர்வம் இருக்கு ” என வந்து நின்றனர்.

அந்த இளைஞனின் அருகில் வந்தவன் அவன் தோள் மீது கைப் போட்டு

“ தெரியவே வேணாம்.. அது நம்ம ரத்தத்துல ஊறி இருக்குடா. அது போதும் ” என்றான் முறுவலுடன்.

அடுத்தடுத்த அவர்கள் அமைப்பில் இணைந்து கொண்டவர்களைப் பார்த்தவனின் மனம் நிறைந்து போனது.

‘ இன்னும் கொஞ்ச காலம் தான்.. சீக்கிரம் எல்லாமே மாறிடும்.. எல்லாமே மாறிடுவாங்க.. உழவுக்கு உயிர் கொடுப்பாங்க.. கொடுக்க வைக்கணும் ’ தனக்குள் சொல்லிக் கொண்டான்.

 

              

மேகம் கடக்கும்…

        

 

     

 

Advertisement