ரொம்ப நாளா எதிர்பார்த்திட்டு இருந்த நாள்!!!
வந்தே வந்திடுச்சு…..
அதாவது நான் உன்னை விட்டு போக வேண்டிய நாள்…
என்கிட்ட அதிக நேரம் இல்ல.. சொல்ல வேண்டியதை இப்பவே
சொல்லிடுறேன்… ஏன்னா இனி உன்ன திரும்ப பார்க்கற வாய்ப்பு
கிடைக்காதுன்னு நினைக்குறேன்..
ஆரம்பத்தில உன்னை எனக்கு சுத்தமாக பிடிக்கல.. நான்னு
இல்ல என் இடத்துல இருக்கிற யாருக்குமே உன்னை
பிடிச்சிருக்காது..
இருபத்தி ரெண்டு வருஷமா என்னோட உலகம்னு இருந்த என்
அப்பா அம்மா கிட்ட இருந்து என்ன பிரிச்சு கூட்டிட்டு
வந்துட்ட..
என்னோட சாப்பிட்டு.. விளையாண்டு.. என்னோட
படிச்ச என் ப்ரண்ட்ஸயும் உன்னால விட்டுட்டு வர வேண்டி
இருந்திச்சு..
இதெல்லாம் தான் உன்ன எனக்கு பிடிக்காம போக காரணம்..
ஆனா அதெல்லாம் கொஞ்ச நாள் தான்..
உன்கிட்ட இருக்க உன்னோட உறவுகளை என்னோட உறவுகளா
மாத்தி என் மனச உன் பக்கம் சாய்ச்சிட்ட..
இந்த மூணு வருஷம்… மறக்க முடியாத நாட்கள்!!!
என்னோட சந்தோஷம்.. அழுகை.. கோவம்.. பயம்.. விரக்தி..
வெறுப்பு.. எல்லாத்திலயும் என்கூட இருந்திருக்க..
இப்ப உன்ன விட்டு போக கொஞ்சம் கஷ்டமா இருக்கு..
ஆனா என்ன பண்ண?? போய் தான் ஆகணும்..
இல்லன்னா மிஸ்டர் கார்த்திக் கழுத்த பிடிச்சு வெளில
தள்ளிடுவாரு..
அவர் யாரா????
என்னோட பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….. விழுந்து கெடக்கிற ஆபிஸ தூக்கி
நிறுத்த நான் அந்த பிரான்ச்சுக்கு போயே ஆகணும்னு ஆடர்…
ஓ மை காட்……. இன்னும் அரை மணி நேரத்தில ஸ்டேஷன்ல
இருக்கணும்… இல்லன்னா…
இல்லன்னா என்ன??? இருந்தே ஆகணும்…
குட் பாய்ய்ய் வைசாக்க்க்க்க்…
கோயிங் டூ மிஸ் யூயூ……
அவ்வழியே வந்த ஆட்டோவை அவசரமாக வழி மறித்து
தொற்றிக் கொண்டவள் பத்து நிமிடத்தில் வைசாக் ரயில்
நிலையம் வந்து சேர்ந்தாள்.
ரயில் வர நேரமிருக்கிறது..
விழிகளை அப்படியே சுழற்ற.. விழுந்தது அந்த அங்காடி..
அவளுக்குத் தேவையானவற்றை அள்ளிப் போட்டுக் கொண்டு
நடை பாதையில் நடந்து வந்து கொண்டு இருந்தாள்.
இதயத்தினோரம் அதிர்வு…. அப்படியே நின்று விட்டாள்.
அட்டாக் அல்ல……
அம்மாவிடமிருந்து அழைப்பு!! ஆரம்பமே அதிருதில்ல…
அழைப்பை ஏற்றதும்
கோப்பெருந்தேவி !!!! கம்பீரமாய் கஜலட்சுமி மறுமுனையில்.
ம்மா…. வந்துட்டேன்..
……
இன்னும் வரல… இன்னிக்கு லேட் போல..
…………
என்கூட முந்நூறு பேர் இருக்காங்க.. மா.. பயமில்ல..
….
ம்மா… அதான் சொன்னேனே இநத ட்ரெயின்கு தான் டிக்கெட்
கிடைச்சிது..
…..
சேப் தான் மா… ஒரு பிரச்சனையும் சொல்லி முடிக்கவில்லை…
பிரச்சினை அவளைத் தேடி வந்திருந்தது..
அவளைத் தொடர்ந்த ஒருவன் அவள் கையிலிருந்ததை பறித்து
ஓடத் தொடங்கிவிட்டான்.
ம்மா… ம்மா… திரு….டன்….
இவள் கத்தியதில் இவளுக்கு பின்னால் வந்து கொண்டிருந்தவன்
தோளில் தொங்கிக் கொண்டிருந்த அமெரிக்கன் டூரிஸ்டரை
இவளிடம் தூக்கிப் போட்டு சேஸ் செய்ய ஆரம்பித்தான்.
திருடர் அவர்கள் பிட் பாக்கெட்டில் பட்டம் பெற்றிருப்பார்
போலும்.. வளைத்து வளைத்து ஓடிக் கொண்டிருந்தார்.
விடாமல் விரட்டிக் கொண்டிருந்தான் நெடு நெடுவென
வளர்ந்திருந்த நல்லவன்.
அவன் ஜாக்கிசான் போல் ஓடினால் அவன் பின்னால் இவள்
ஜூலி போல் ஓடிக் கொண்டிருந்தாள்.
இருவரும் இணைந்து அங்கொரு சாகசம் நடத்திக்கொண்டிருக்க
திருடனோ சக்தி மேன் ஆக மாறியிருந்தான்.
பிட் பாக்கட் அடித்தவனிடமிருந்த அவளது பொருளை
வாங்காவிடில் இன்றைய இரவு நித்திரை இவளுடன் வராது.
டேய்!!! அதை கொடுத்திடு டா.. வேணும்னா ஆப்பிள் தரேன்..
டீலா நோ டீலாவில் இவள்
இவளுக்கு முன் ஓடிக்கொண்டிருந்தவன் திரும்பி பார்த்தான்..
முறைத்தான் என்றால் முறையாய் இருக்கும்.
ஆப்பிள்னு அல்பமா நினைச்சிட்டானோ ??? என இவள்
நினைத்து
ஐபோனை எடுத்து ஆட்டினாள்..
அப்படித்தான் நினைத்திருப்பான் போல!!!
இவர்கள் ஆப்பிள் ஆராய்ச்சியில் இருக்க… அவன் அப்ஸ்கான்ட்
ஆகியிருந்தான்.
எங்க அவன்??? திகைத்து நின்றவளிடம் வந்து நின்றான்
நெடியவன்.
அவன் தப்பிச்சுட்டான்.. ரொம்ப முக்கியமா எதுவும்
வச்சிருந்தீங்களா?? வருத்தம் வருடிய குரலில் கேட்டான்
ஆம் எனத் தலையசைத்தவள் அங்கிருந்த இருக்கையில்
அமர்ந்துவிட்டிருந்தாள்.
அவளைப் பார்த்தவாறு அவனும் நின்றிருந்தான்.
அவள் நிமிர்வாள் எனக் காத்திருந்தவன் பொறுமை இழந்து
அழைத்தான்.
இன்னும் என்ன?? அதான் திருடன விட்டுட்டீங்களே.. திரும்பி
போக வேண்டியது தானே.. எரிந்து விழுந்தவளை ஒரு பார்வை
பார்த்தவன் அவள் மடியிலிருந்த அவனது பேகை எடுத்து
நடக்கத் தொடங்கினான்.
கோவி!!!! கன்ட்ரோல் யுவர் செல்ப்.. நிதானப் படுத்திக் கொண்டு
நெடியவனை தொடர்ந்தாள்..
நடந்து போய்க்கொண்டு இருந்தவன் திடீரென ஓடத் துவங்க..
இவளும் இணைந்தாள் ஓட்டத்தில்
என்னாச்சு??? ஓடிக்கொண்டே அவனிடம் கேட்டாள்.
பாண்டியன் எக்ஸ்பிரஸ்… கிளம்பிடுச்சி… நான் போக வேண்டிய
ட்ரெயின்!!! பதில் கொடுத்தபடி விரைந்தான்.
பாண்டியனா???? நானும் நானும் என்றவள் ட்ரெயின் நகர்வதை
பார்த்து அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்
பேச்சும் வரவில்லை.. அடுத்த அடி எடுத்து வைக்க காலும் வரவில்லை.
இவள் வார்த்தைகளை செவிக்குள் வாங்கியவன் சிலையாக நின்றவளை உலுக்கி..
ஏங்க.. பிடிச்சிடலாம் வாங்க… என இழுத்துக்கொண்டு ஓடினான்.
இவர்கள் நெருங்க நெருங்க.. இன்னும் வேகமெடுத்தது.. விரைவு
ரயில்!!!
சட்டென அவளை விட்டுவிட்டு உள்ளே தாவியவன் அவளுக்கு
கை நீட்ட
துஜ்ஹே தேக்கா துயே ஜானா சனம்….
ப்யார் ஹோத்தா ஹே தீவான சனம்….
கையை நீட்டியபடி ஓடிக்கொண்டிருந்தவளுக்கு ஒலித்தது அந்த
பிஜிஎம்.
ஏங்க!! நான் ஷாருக்கானும் இல்ல நீங்க கஜோலும் இல்ல கொஞ்சம்
வேகமா வாங்க என்றவன் அவளது கையை பிடித்து உள்
இழுத்திருந்தான்.
இவனுக்கும் அதே பிஜிஎம் எபக்டோ என நினைத்தவள் சற்று
இளைப்பாற இடைவெளி எடுத்து பின் நிமிர்ந்து பார்த்து…
நன்றியுரைத்தாள்.
இருக்கட்டும்… என்றவன் புன்னகையுடன் அவளைக் கடந்தான்.
யாரிடமாவது இங்கு நடந்ததை சொல்லியே ஆகவேண்டும்
இப்போது அவளுக்கு..
அழைத்து விட்டாள் ஆருயிர் தோழியை..
ஹேய்!!!!! தமிழ்… இப்ப என்ன நடந்துச்சு தெரியுமா???
தெரியுமே!!!! இழுக்கிறாள் அவள்.. உறக்கத்தில் இருக்க வேண்டும்.
தெரியுமா??? எப்படி? எப்படி?? சரி சொல்லு.. என்ன
நடந்துச்சு??
வழக்கம் போல பாண்டியன் நீ வரதுக்குள்ள கிளம்பிருக்கும்..
அச்சச்சோ அம்மா திட்டுவாங்களேன்னு நீ ரன்னிங் ஜம்பிங்
சேஸிங் பண்ணி ஓடிருப்ப.. எவனாவது பாவம் பார்த்து உன்ன
ஏத்தி விட்டிருப்பான் உடனே பின்னாடி பிஜிஎம் கேட்டுருக்கும்.
வியந்து போனவள்.. எப்படி புள்ள??
ஹம்ம்.. இத தானடி ஒவ்வொரு வாட்டி ஊருக்கு வரும் போது
சொல்லி உசுர வாங்குற…
தூக்கம் கலைந்த துக்கம் அவளிடம் தெரிய.. அவசரமாக குட்
நைட் சொல்லி அழைப்பை துண்டித்தாள் கோவி!!
இவள் இடம் வந்து.. அமரச்செல்ல.. எதிரில் அந்த நல்லவன்..
நெடியவன்..
அவனை பார்த்ததும் தொலைத்த பொருள் நினைவிற்கு
வருகிறது இவளுக்கு..
இவளின் புன்னகை இதழுக்குள்ளே புதைந்து விட.. அதன்
காரணம் புரிகிறது போல அவனுக்கு.
டிக்கெட் பேக்ல தானே வச்சிருக்கீங்க??
ம்ம்..
தெளியாத முகம் கண்டு..
விடுங்க… இனிமே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க.. ஆறுதல்
மொழிகிறான்.
சரி.. என்றவள்
தண்ணீர் இருக்கா உங்ககிட்ட?? என்றதும் எடுத்து கொடுத்தான்.
தண்ணீர் வாங்கிட்டு வரும் போது தான் பறிச்சிட்டு ஓடிட்டான்
பக்கி..
ஓஹ் எனக் கேட்டுக் கொண்டவன் சற்று தயங்கி..
நீங்க தப்பா எடுத்துக்கலன்னா அதுல என்ன இருந்துச்சின்னு
தெரிஞ்சுக்கலாமா??
அப்படியெல்லாம் இல்ல என்றவள் அடுத்து சொன்னதில் குழம்பி
விட்டான்.
ஹார்ட்னா??
லிட்டில் ஹார்ட்..
இன்னுமே புரியவில்லை அவனுக்கு. ஹார்ட கொள்ளை
அடிச்சிட்டான்னு சொன்னா.. இவன் எப்படி எடுத்துக்க??
லிட்டில் ஹார்ட்.. பிஸ்கட்.. பிரட்டானியா.. பேக் ஆப் லவ்…
என இவள் ப்ரேன்ட் அம்பாசிடர் ஆக கொதிநிலை ஏறுகிறது
எதிரிலிருப்பவனுக்கு.
ஒரு பிஸ்கோத்துக்கு போய்.. ஓட விட்டுட்டாளே!! அது கூட
போகட்டும்.. இவன் வருத்தப்பட்டு கேக்கவும் வயலின்
வாசிச்சாளே.. ஆப்பிள் போனை அவனுக்கு தரேன்னு சொன்னத
எந்த வகையில சேர்க்கன்னு புரியாம தலையில கை வைத்து
அமர்ந்துவிட்டான்.
என்னாச்சு??
இன்னும் என்னடி ஆகணும்?? என உள்ளுக்குள் வைதவன்
வெளியில் முறைக்க மட்டும் செய்தான்.
நேரம் நள்ளிரவை நெருங்கியிருக்க.. அமைதியாக படுத்துக்
கொண்டான்.
கையில் வைத்திருந்த புத்தகத்தில் இருந்த கவனம் மெல்ல மெல்ல
கோவியிடம் சென்றது.
என்னவோ செய்கிறாள்.. ஆனால் என்ன என்று தான்
புலப்படவில்லை.
சற்று நேரம் பொறுத்தவன்..
என்னாச்சு?? என்று கேட்டான்.
முன்பு முறைத்தவனல்லவா சொல்ல முடியாது போடா என கண்டு
கொள்ளாமல் அமர்ந்திருந்தாள்.
ஆம் அத்தனை பேரும் நித்திரையில் இருக்க இவள் மட்டும்
விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
ஏதோ பிரச்சனை என்பது தெளிவாகிறது அவனுக்கு.
எழுந்து அமர்ந்தவன் என்னாச்சுங்க.. ஏதும் பிரச்சனையா??
என்றான் கனிவாக.
இந்தக் குரலில் கேட்கவும் பதில் வருகிறது..
தூக்கம் வரல..
புக் எதுவும் படிக்கிறீங்களா?? தன்னுடையதை நீட்டினான்.
அவளும் அதே புத்தகத்தை பையிலிருந்து எடுத்து நீட்டினாள்.
அப்போ புக் படிங்க.. தூக்கம் வரும்..
அப்போதும் அப்படியே அமர்ந்திருக்க இனி அவள் விருப்பம் என
விட்டுவிட்டான்.
ஒரு மணி நேரம் கடந்திருந்தது..
அவளைப் பார்த்தான்.. கால்களை கட்டிக்கொண்டு
அமர்ந்திருந்தாள்.
இவனுக்கு என்ன செய்ய என்ன சொல்ல எனத் தெரியவில்லை..
ஆனால் இவன் பார்வை உணர்ந்து அவள் சொன்னாள்.
எனக்கு தூக்கம் வரணும்னா லிட்டில் ஹார்ட்ஸ் வேணும்.
என்ன?? என எழுந்து விட்டிருந்தான்.
அவளோ இன்னும் மழலை மோடில் தான் இருந்தாள்.
தூக்கத்துக்கும் லிட்டில் ஹார்ட்டுக்கும் என்ன சம்பந்தம்னு தானே
யோசுக்கிறீங்க??
அகத்தே அறிமுகமற்ற உணர்வொன்று வந்து போனாலும் புறத்தே
பாவ பாவம் காட்டி தலையசைத்து வைத்தான்.
நைட் டைம்.. நான் வேற தனியா வரேன்னா.. தூக்கம் வராது..
அதான் எப்பயுமே புக் படிக்க ஆரம்பிச்சிடுவேன்.. அப்போ தூக்கம்
வந்திடும் என நிறுத்தினாள்.
இதுல ஹார்ட்டே வரலயே!!! என்று அவன் பார்த்திருக்க…
எப்படி பாப்கார்ன் இல்லாம மூவி இல்லையோ.. தோனி
இல்லாம சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லையோ.. லெக் பீஸ்
இல்லாம பிரியாணி இல்லையோ..
அப்படி தான் கோவிக்கு லிட்டில் ஹார்ட் இல்லாம ரீடிங் இல்ல..
ப்பா…. என்ன ஒரு கம்பேரிசன் என்று நினைத்தபடியே ஓஹ்…
என்றவன்
கோவி??? என இழுக்க
அது நானே!!! கோவி @ கோப்பெருந்தேவி..
கொல்றாளே பேர…. என நினைத்து கொண்டவன்
அப்போ கோவிக்கு இன்னிக்கு தூக்கம் கோவிந்தாவா?? விரிந்த
புன்னகையுடன் கேட்டான்.
சிரிக்காதிங்க.. அப்புறம் கோவிக்கு கோவம் வந்திடும்.. விழிகளை
உருட்டி மிரட்ட
ஓ அப்படி வேற ஒன்னு இருக்கோ??
ம்ம் ம்ம்..
சரி நீ இப்படியே உட்கார்ந்து இரு.. எனக்கு தூக்கம் வருது..
ஹலோ.. இந்நேரம் கதை கேட்டிங்கள்ள.. இன்னும் கொஞ்ச
நேரம் அதையே பண்ணுங்க..
அப்புறம் என்ன பண்ணுவ..
அடுத்த ஸ்டேஷன் வந்திடும்.. கோவிக்கு ஹார்ட்டும் கிடைச்சிடும்.
அப்பறம் ரெண்டு பேருமே ஸ்லீப் மோட் போய்க்கலாம்
அது சரி!!! இரண்டு நாள் தூக்கமே இல்லாம ப்ராஜெக்ட் முடிச்சு
வந்திருக்கேன். ஐ நீட் அ டீப் ஸ்லீப்…. என்றவன் இழுத்து போர்த்தி
படுத்தும் விட்டான்.
சரி கோவிக்கு கொடுத்து வைக்கல.. என மனதை தேற்றிக்
கொள்ள முனைந்தவளின் முன்பு கண் சிமிட்டி காதல் பேசியது
லிட்டில் ஹார்ட்..
ஹேய்!!!!! என ஆனந்தத்தில் ஆர்ப்பரித்தவளை அடக்கி..
என் அக்கா பொண்ணுக்காக வாங்கினது.. ஆனா அவள விட
குட்டி பொண்ணு இங்க இருக்கா.. இது இப்போ அவளுக்கு தான்
தேவை!!!
தேங்க் யூ பாஸ்!!!!! என குதூகலித்தவள் குழந்தையாய் அவன்
கண்களுக்கு.
இருவரையும் நித்திரை நிதானமாக தழுவிச் சென்றது.
அடுத்த நாள் அந்திப் பொழுது தான் விழிப்பு தட்டியது அவனுக்கு..
மதுரையா!!! என்றவன் பரபரப்பாக போர்வையை பேகினுள் திணித்து
பேக்கிங் முடித்து வெளியேறினான்.
செழியன்!!! மாமா!!! குரல் வந்த திசையில் அவன் அத்தானும்
அக்கா மகளும்.
அத்தான்.. என அவரிடம் செல்ல.. மாமா!! என தாவினாள்
குட்டிப் பெண்.
ஹேய் குட்டி!! மாமாவ கூட்டிட்டு போக வந்தியா?? என தூக்கி
போட்டு பிடிக்க..
இரு கரங்களையும் கன்னத்தில் வைத்து ரசித்து சிரித்தவள்.. தா தா..
என கை நீட்டவும் தான் கோவியை விட்டு வந்தது நினைவிற்கு
வந்தது.
அத்தான் இத பிடிங்க.. என பேகை அவரிடம் கொடுத்து அவசரமாக
உள்ளே சென்று அலசினான்..
ப்ச்… மிஸ் பண்ணிட்டேன்!!! என தலை கோதிக் கொண்டவனின்
பின்புறம் இருந்து
என்னடா மிஸ் பண்ணிட்ட.. என்றார் அத்தான்.
ஹான்.. என்றவன் ஹார்ட்ட அத்தான்.. என்றுவிட்டு நடந்தான்.
அவன் காரைத் திறக்கும் தருணத்தில் அவன் முன்பு
ஆஜராகியிருந்தாள் கோவி.
ஹேய்!!!! என்றவனுக்குள் இழந்த இதமும் ரிதமும்
என்ன பாஸ்!!! உங்க ஹார்ட என்கிட்ட கொடுத்திட்டு போறீங்க..
என்ன?? திகைத்துப் போய் நின்றவனிடம் நீட்டினாள் லிட்டில்
ஹார்ட்டை.
அவனிடம் இருந்த குழந்தை அவளிடம் தாவியிருக்க.. இருவரின்
கொஞ்சல்களையும் சிரிப்புடன் பார்த்திருந்தான்.
விடைபெற்றவளிடம் கம்பெனி விவரம் விசாரித்து விடை
கொடுத்தான்.
என்ன செழியா மிஸ் பண்ணிட்டியா?? புரிதலுக்கான
புன்னகையுடன் அவன் அத்தான்.
அந்த ஐடியாவே இல்லத்தான்… மறுப்பாக தலையசைத்து காரை
எடுத்தான்.
சரியாக ஒரு வருடம் கழித்து..
வைசாக் சிட்டியில்..
அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தான்
நெடுஞ்செழியன்!!!
கதவு திறக்கப்படவில்லை..
சற்று நேரம் பொறுத்துப் பார்த்தவன் பின் பக்கம் வந்தான்.
தரையில் கிடந்த ஏணியை எடுத்துப் போட்டு முதல் தளத்தில்
இருந்த பலகணிக்குள் குதித்தான்.
அறைக்குள் நுழைந்தவன் அவசர குளியல் ஒன்றை போட்டுக்
கொண்டு வரவேற்பரைக்கு வந்தான்.
வெறுமையே வரவேற்க.. சமையலறைப்பக்கம் வந்தான்.
தந்தாள் தரிசனம் அவன் தேவி!!
கோவி!!!
சட்டென கத்தியை எடுக்கவும் செத்தடா செழியா என பத்தடி
பின் வாங்கினான்.
அவளோ… வெட்டு வெட்டென்று வெஜிடபிள் வெட்டித்
தள்ளிவிட்டாள்.
கோவியின் கோவம் தெரிகிறது.. புரிகிறது.. என்ன செய்ய??
அவன் செய்து வைத்த செயலல்லவா அதற்கு காரணம்.
அவனுக்காக அவன் அலுவலகத்தில் அடியெடுத்து
வைத்த அவனவளை அவனே அன்றைய மீட்டிங்கில்.. வாங்கு
வாங்கென்று வாங்கி விட்டானே!!
செழியன் இட்ஸ் ஓகே.. லீவ் ஹெர் அன்ட் கிவ் ஹெர் ஒன் மோர்
சான்ஸ் என்று சீனியர் மேனேஜர் சொல்லவும் தான் விட்டான்.
அவள் தெரியாமல் செய்த தவறு தான்..
அடுத்தவர் முன் அவள் தலை குனிவதை பொறுக்காது.. பிறர் தன்
மனையாளை ஒரு சொல் சொல்லிவிடாது மொத்தமாய் இவனே
பொங்கி விட்டான்.
கோவி…
கொஞ்சம் கொஞ்சல்.. கொஞ்சம் கெஞ்சல்..
ம்ஹூம்…
அசர மறுக்கிறாள் அவள்.. அவதாரமெடுக்கிறான் அவன்..
பப்பியாக மாறி சாரி கேட்டு அவளைச் சுற்றி வருகிறான்..
அதற்காகத் தானே காத்துக் கொண்டிருந்தாள் அந்த பால குமாரி..
இறுதியில்… அவள் கைப் பற்றி இழுத்து வந்து
ஓரசாத உசுரத்தான்..
உருக்காத மனசத்தான்..
அலசாத… என் சட்டை கிழிஞ்சி
வெளியே பறக்கும் இதயம்…
அவன் இதயத்திலிருந்து பறக்கிறது லிட்டில் ஹார்ட்ஸ்..
கோவி கோவத்திற்கு கோடை விடுமுறை அளித்துவிட.. மனம்
மொத்தமாய் அவன் புறம்
லிட்டில் ஹார்ட் பார் மை லிட்டில் கேர்ள் என்று நீட்டுகிறான்
லவர் பாய்!!
பிடித்துவிட்டாள் கோவி லிட்டில் ஹார்ட்டை..
அவள் கைகளில் லிட்டில் ஹார்ட்..
அவன் கைகளுக்குள் அவனது ஸ்வீட் ஹார்ட்..
ஐம்பது கிலோ தாஜ்மஹாலை தாங்க முடியாமல் தடுமாறுகிறான்
தலைவன்..
தாங்கிக்கொண்டது தரை.
தரையில் அவன் தஞ்சமடைய.. கோவி அவனில் !!
இருவருக்கும் இடையில் லப் டப் சொல்லும் லிட்டில் ஹாட்ஸ்!!!