Advertisement

                                                 அத்தியாயம் 5

“செல்வராஜ் என்னடா இது மாப்புள இவ்வளவு கடன் எதுக்கு வாங்கினார் ஒண்ணுமே புரியலையே! வீடு கட்ட, கடைய விரிவு படுத்த பேங்க்ல லோன் வாங்காம எதுக்கு வட்டிக்கு வாங்கினார்? ” சத்யமூர்த்தி புரியாமல் குழம்ப

 

“எனக்கும் ஒன்னும் புரியலப்பா! அண்ணா கடன் வாங்கி வீடு கட்டணும்னு என்ன அவசியம் வந்தது? கடைய விரிவுபடுத்த  கடன் வாங்கினது சரி. அத சரிவர செய்ய முன்பே அண்ணா போய்ட்டாரு. கட்டின வீட்டிலேயும் வாழ யாருக்கும் கொடுத்து வைக்கல,  இருந்த வீடு சின்னது தான். கடைய விரிவு படுத்தி நல்லா லாபம் வரும் போது புது வீடு கட்டி இருக்கலாம்ல” குறிஞ்சி சொல்ல

 

ஆளாளுக்கு செல்வராஜிடம் புலம்ப “மாமா அத்த கிட்ட சொல்லாம தான் எல்லாம் பண்ணி இருக்குறாரு. கடன் கொடுத்தவங்க மாமா கையெழுத்துப் போட்டு கடன் வாங்கின பத்திரத்தோட வந்தா பாவம் அத்த என்ன செய்வாங்க” செல்வராஜ் மாமா இவ்வளவு கடன் அதிக வட்டிக்கு வாங்கிட்டாரே என்ற ஆதங்கத்தில் பேச கோமளவள்ளி மௌனம் காத்தாள்.

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே பாண்டியன் ஒருவருடன் உள்ளே நுழைய, புதிதாய் வந்தவர் பேசலானார்.

 

“இத பாருங்க என்ன யாரும் தப்பா எடுத்துக்க வேணாம் முத்துக்குமார் சார் வைரநகைகள் xxxx ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார். எனக்கு ஒரு வாரத்துல செட்டில் பண்ணுறதா சொன்னார். அதுக்குள்ள அவருக்கு இப்படியாகிப் போச்சு. பணம் வேற பெரிய தொகை கொஞ்சம் அவசரமா பணம் வேணும்” என்று சில பத்திரங்களை காட்ட வீட்டாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரிடம் இன்னும் ஒரு வாரம் கெடு கேட்டு அவரை சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார் சத்யமூர்த்தி.

 

“வைர நகைகள் கல்யாணத்துக்கு வாங்கினாரா?” என்று பாண்டியன் கேக்க

“இல்லன்னா கோமளவள்ளிக்கு கல்யாணத்துக்கு என்று எந்த நகையும் வாங்கல” கனகாம்பாளிடமிருந்து பதில் வரவே

“ஒரு வேல மாமா வாங்கி அது காணாமல் போக போய் தான் மாமாக்கு மாரடைப்பு வந்து…” செல்வராஜ் மேலும் பேசாமல் நிறுத்த அனைவரினதும் கண்களில் கண்ணீர்  நிறைந்தது.

 

“மனிசன் உள்ளுக்குள் வெந்தே யாருகிட்டயும் சொல்லாமல் போய் சேர்ந்துட்டாரே” கனகாம்பாள் கத்தி அழ அவரை சமாதானப் படுத்துவது பெரும் பாடாகிப் போனது.

 

கடையை நடாத்த செல்வராஜால் முடியும் என்ற போதிலும் பாண்டியனிடமும் ஒரு பெரிய தொகையை கடனாய் முத்துக்குமார் வாங்கி இருக்க வைரவியாபாரிக்கும், இன்னும் சிலருக்கும் பணம் கொடுக்க வேண்டி இருந்ததால் கடையும் விற்கப் பட அவர்களின் நிலையை கண்டு பாண்டியன் கடனாய் கொடுத்த  தொகையை மறுக்க செல்வராஜு “பணத்தை வாங்கியே” ஆகணும் என்று வற்புறுத்த “அப்போ மாசம் மாசம் ஒரு சிறு தொகையை கொடுக்குமாறு சொல்ல

 

சத்யதேவ் தொழில் தொடங்கிய பின் தான் அவர்களால் கொடுக்கவே முடிந்தது. அவர் இருக்கும் நிலைமையை கண்டு வட்டி என போட்டு கூடுதலாக இன்னும் சேர்த்து பணத்தை கொடுத்தான் சத்யதேவ்.

 

ஒன்று முடிய ஒன்று என்பது போல் தொழில் தொடங்கிய அன்றிலிருந்தே சத்யதேவுக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வந்து கொண்டவண்ணமே இருந்தது. {அது யாராலேனு அப்பொறம் சொல்லுறேன்}

 

மரகதம் செல்வராஜ் அக்காவின் கணவர் என்று மனதில் நிலை நிறுத்தினாலும், அவள் தனியாய் இருக்கும் போது கோமளவள்ளி அவளை வார்த்தையால் காய படுத்துவதும் அவளின் கண்முன்னாலேயே செல்வராஜுடன் இழைவதுமாக இருக்க தன்னை காய படுத்தவென்றே கோமளவள்ளி செய்வதையும், சொல்வதையும் பொறுத்துப் போனாள் மரகதவள்ளி.

 

முத்துக் குமார் இறந்து ஒரு வருடம் கடந்திருக்க அனைவரது வாழ்க்கைமுறையும் சற்று ஒருநிலைக்கு வந்தது.

 

“வணக்கம் கனகாம்பாள்”

“வணக்கம் நீங்க”

“நா ரத்னவேல் சம்சாரம் ஈஸ்வரிங்க, இது உங்க ரெண்டாவது பொண்ணுங்களா? வரன் ஏதும் பாத்திடீங்களா?” மரகததத்தை கோவிலில் கண்ட ஈஸ்வரியம்மா கனகாம்பாளை அடையாளம் கண்டு விசாரிக்க

“அவர் இறந்து ஒரு வருஷம் தான் மா ஆகுது இனி மேல் தான்” கனகாம்பாள் சொல்ல நலம் விசாரித்தவர் அகன்றார்.

வீட்டுக்கு வந்த கனகாம்பாள் குறிஞ்சியிடம் ஈஸ்வரியம்மாவை சந்தித்ததை சொல்ல

“அவங்க பையனுக்கு மீண்டும் கேப்பாங்களோ!” என்று ஆர்வத்தில் குறிஞ்சி கேக்க

“நாங்க இப்போ இருக்கிற நிலைமையில் அவங்க சம்பந்தம் பேசமாட்டாங்க அண்ணி” கனகாம்பாள் வெறுமையான குரலில் சொல்ல ஒரு பெருமூச்சு விட்டார் குறிஞ்சி.

 

இவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த கோமளவள்ளியின் மனதோ  “இதை இப்படியே விட்டுட கூடாது மரகதத்துக்கு கல்யாணமே நடக்கக் கூடாதென்று நா இருக்கேன் பணக்கார மாப்பிள்ளையா?” என ஓலமிட என்ன செய்யலாம் என சிந்திக்கலானாள்.

 

முருகவேல் ஆபீசில் வேலையாக இருக்க காலேஜ் மாணவர்கள் சிலர் வந்துள்ளார்கள் என பி.ஏ கூறவும் உள்ளே வரச்சொல்ல அவனது போனும் அடித்தது போனில் என்ன சொல்லப் பட்டதோ அவனது முகம் கோவத்தில் சிவந்தது. உள்ளே வந்த மரகதவள்ளியை கண்டு புருவம் நீவி யோசித்தவன் உக்காருமாறு சைகை செய்ய அவளும் அவலுடன் வந்தவர்களும் அமர வந்த விஷயத்தை பேசியவர்கள் வெளியே செல்ல  

“மிஸ் மரகதவள்ளி நீங்க இருங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் முருகவேள்.

அவளின் பெயரை சொல்லி அவன் அழைத்தது அதிர்ச்சியாக அவள் பார்க்க மற்றவர்களிடம்

“நாங்க அறிமுகமானவங்கதான் காய்ஸ் போங்க பேசிட்டு வருவாங்க” அவர்கள் வெளியே சென்றதும்

கதிரையில் இருந்து எழுந்து வந்தவன் “உக்காரு மரகதம்” உரிமையாக முருகவேள் அழைக்கவும்

“யாரிவர்” என்ற  பார்வையோடு மனமும் அடித்துக்கொள்ள கதிரையில் அவசரமாக அமர்ந்தவள் அவனை ஏறிட

“உனக்கும் உங்கக்காவுக்கும் என்ன பிரச்சினை” அவள் அமர்ந்திருந்த கதிரையில் முன்னாடி இருந்த மேசையில் சாய்ந்தவாறே  கேட்டான் முருகவேள்.

“எனக்கும் எங்கக்காவுக்கும் ஆயிரம் இருக்கும் அதைக்கேக்க நீங்க யாரு” பட்டென்று வந்தது மரகதத்திடமிருந்து பதில்.

அவள் புறம் குனிந்து அவள் காதருகே “உன்ன கல்யாணம் பண்ணிக்க போறவன்” என்றான் காதுமடல் உரச.

 

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த கோமளவள்ளி  முருகவேளுக்கு திரும்பவும் போன் பண்ணி கடுமையாக பேசலாம் என்றிருக்க அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தாள்.

அதுபோல் வீட்டில் கனகாம்பாள் மாத்திரமிருக்க கடைக்கு போக கிளம்பியவரை என்றுமில்லாத அதிசயமாக “வெயில்ல நீ அலையாத நானே போயிடு வாறன்” என்று கூடையை பிடுங்காத குறையாய் கோமளவள்ளி செல்வதை மோவாயில் கைவைத்தவாறே பார்த்திருந்தார் கனகாம்பாள்.

அவள் வந்தது ஒரு டெலிபோன் பூத்திற்கு முருகவேளை அழைத்தவள் “நான் மரகதவள்ளி பேசுறேன்.அறிவில்ல உங்களுக்கு  நான் தான் இந்த கல்யாணம் வேணாம்னு சொன்னேனே உங்க அம்மாவை தூது அனுப்புறீங்க”கோமளவள்ளி கோவமாக கத்த ஒரு கணம் ஒன்னும் புரியவில்லை முருகவேளுக்கு.

“யாரு பேசுறீங்க” முருகவேள் திரும்ப கேக்க பல்லை கடித்தாள் கோமளவள்ளி.

“என்ன விளையாடுறியா வேணாம் என்று சொல்லுறே கேக்காம அம்மாவை அனுப்புற. இந்த கல்யாணம் நடக்க கூடாது” கோமளவள்ளியின் குரல் சட்டுன்னு  நியாபகத்தில் வரவுமில்லை மரகதவள்ளியையும் மறந்திருந்த முருகவேளுக்கு யார் எதை பத்தி பேசுறாங்க என்று புரியவே சில கணங்கள் எடுத்தன.

ஒருவாறு மரகதவள்ளி பேசியதாக நினைத்தவன் மேலும் பேச முன் கோமளவள்ளி தரக்குறைவான வார்த்தைகளால் அவனை சாடி விட்டு போனை அனைத்தவள்  நிம்மதியாக வீடு செல்ல அவள் அறியவில்லை  கடவுள் வைத்த ட்விஸ்ட்.

 

மரகதவள்ளியின் மேல் கடுங் கோவத்தில் போனை வைத்த முருகவேல் சத்தியமாக அங்கே மரகதவள்ளியை எதிர் பார்க்கவில்லை. அவள் பேசும் போதுதான் அவனுக்கு அன்றும் இன்றும் போனில் பேசியது கோமளவள்ளி என்று புரிந்தது. அக்கணமே  அவன் எடுத்த முடிவுதான் மரகதவள்ளியை மணப்பது. இதோ அவளிடமே கூறியும் விட்டான்.

 

அவனை அதிர்ச்சியாக பார்த்த மரகதவள்ளி எழப்போக அவளின் தோளில் கைவைத்து அமரவைத்தவன். “சொல்லு உனக்கும் உங்கக்காவுக்கும் என்ன பிரச்சினை” கறாரான ஒலித்தது அவன் குரல்

அவள் மேலும் பேசுமும் கோமாளவள்ளி அன்றும், இன்றும் போனில் பேசியதை முருகவேல் கூற மரகதவள்ளியின் கண்களிலிருந்து கண்ணீர் போல பொலவென நிற்காமல் கொட்ட

” ஏய் இப்படி நீ அழுதா நா  உன் கிட்ட தப்பா நடந்து கிட்டதா உன் பிரெண்ட்ஸ் நினைக்க போறாங்க”

மரகதவள்ளி புன்னகையுடன் கண்ணீரை துடைத்துக் கொள்ள முருகவேல் மேலும் தொடர்ந்து தான் கோமளவள்ளியை ஒரு பார்ட்டியில் கண்டு பெண்கேக்குமாறு பெற்றோரிடம் சொன்னதாக சொல்ல

 

மரகதவள்ளி உடனே “அக்காவ பழி வாங்கத்தான் என்ன கல்யாணம் பண்ண போறிங்களா” என்றாள் கோபமாக   

“ஒரு பொண்ண பாக்குறோம் பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்க ஆச படுவோம்ல அது மாதிரிதான் இதுவும். உங்கக்கா என்ன ரதியா? ஊர்ல இல்லாத பொண்ணா? அவ கிடைக்கலன்னு பழிவாங்க புறப்பட அதுக்கெல்லாம் என் கிட்ட டைம் இல்லம்மா, நா அந்தளவுக்கு வார்த்தும் இல்ல. இப்போ சொல்லு என்ன கல்யாணம் பண்ண உனக்கு இஷ்டமா? முருகவேல் காரியத்தில் கண்ணாக

“உடனே எப்படி சொல்றது” மரகதவள்ளி தயங்க

“அப்போ பொண்ணு பாக்க வரேன். நீ காப்பித்தத்தோட வந்து என்ன பாரு தட்டிலிருந்து காப்பிய எடுக்கும் காப்பில் உன்ன நான் பாக்குறேன் அப்பொறம் சம்மதம் சொல்லு” என சிரிக்க இவர் என்ன சொல்லுறாரு என ஒரு கணம் யோசித்தவள்.

“காபி சாப்பிடுற காப்பில் கல்யாணம் பிக்ஸ் பண்ணுற காலத்துல அரை மணி நேரமா  உன் கிட்ட பேசிகிட்டு தானே இருக்கேன் எங்க என்ன பாத்து சொல்லு உனக்கு என்ன பிடிக்கலைனு”

அவனை பார்த்தவாறே  பிடிச்சிருக்கு” என்றவள் தான் செல்வராஜை காதலித்த விஷயத்தை மெதுவாக சொல்ல அவன் எப்படி எடுத்துக்க போறானோ என்று அஞ்சியவளாக அவனை ஏறிட  

“அப்போ உன் அக்கா அத தெரிஞ்சிக்கிட்டு செல்வராஜா கல்யாணம் பண்ணிகிட்டாளா? ஹாப்பா நல்ல வேல நா தப்பிச்சேன்” என்று அவளை புன்னகைத்தவாறே பார்த்தான்.

அவன் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டது மரகதவள்ளிக்கு நிம்மதியை தந்ததோடு இவ்வளவு  நேரம் இருந்த பதட்டம் நீங்கி அவனை ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தாள்.

முருகவேல் அவன் வீட்டில் சொல்லி மரகதத்தை பெண் பார்த்து கல்யாண திகதியும் குறிக்க கொதித்தாள் கோமளவள்ளி”

“சே எவ்வளவு சொல்லியும் கேக்கலையே சரியான திமிரு புடிச்சவன்” என்று முருகவேளை திட்டியவள் மரகதவள்ளியை வார்த்தையால் காய படுத்தினாள்.

“ஒருத்தன காதலிச்சு இன்னொருத்தன் எப்படித்தான் கல்யாணம் பண்ணுவாங்களோ?” என்று தொடங்கி காது கொடுத்து கேக்க முடியாத வாறு அசிங்கமாக பேச மரகதவள்ளி அவள் சொல்வதை பொருட் படுத்தாது அவள் வேலையை செய்ய இன்னும் கடுப்பானாள் கோமளவள்ளி.  “எல்லாம் அந்த திமிரு புடிச்சவன் தந்த தைரியம்” என்று முருகவேளையும் வசை பாடி விட்டே அகன்றாள்.

 

கல்யாணமும் ஆர்பாட்டமின்றி அமைதியாக கோவிலில்  நடை பெற கல்யாண செலவு மொத்தமும் முருகவேல் ஏற்றிருந்தான். கோமளவள்ளியை வெறுத்தவனால் செல்வராஜுடன் சகஜமாய் பழக முடியவில்லை.

கல்யாணமன்று முருகவேள் அன்னை ஈஸ்வரி கோமளவள்ளியிடம் “உன்னைத்தான் பெண் கேட்டோம்.  என் பையனுக்கும் உன்ன ரொம்ப புடிச்சிருந்துச்சு. உனக்கு நிச்சயம் ஆகிவிட்டது என்றதும் உன் தங்கையை கேட்டோம்” என்ற வார்த்தையை விட

 முருகவேளை கேவலமாக பார்த்தவள் “அது சரி ஆச பட்டதெல்லாம் எல்லாருக்கும் கிடைக்காது” என மரகதத்தையும், முகவேலையும் சேர்த்து தாக்க

“உண்மைதான் நாங்க ஆச பட்டது கிடைக்கலனா கடவுள் அதைவிட மேலானது நமக்கு தருவான்” என மரகதவள்ளியின் தோளின் மேல் கை போட கண்களால் அவர்களை எரித்தாள் கோமளவள்ளி.

இவர்கள் பேசுவதை புரியாமல் பாத்திருந்த செல்வராஜோ முருகவேளை பார்த்து ஸ்நேகமாய் புன்னகைக்க பதிலுக்கு புன்னகைத்தான் முருகவேல்.

கோமளவள்ளியின் தாக்குதல் மறைமுகமாக மரகதத்தையும்,முருகவேலையும் நோக்கியே இருக்க மரகதத்தை தனியாக அன்னை வீடு அவன் அனுப்புவதே இல்லை பிரவசத்துக்கும் அன்னை வீடு வராதவளை அன்னை கடித்துக் கொள்ள

 

“என்னத்த நீங்க மரகதத்தை தாங்கு தாங்குனு தாங்குற மாப்புள கிடைச்சி இருக்குறாருனு சந்தோசப் படாம கோவப படுறீங்க” னு   செல்வராஜ் முருகவேளுக்கு சாதகமாக பேச அன்றிலிருந்து முருகவேல், செல்வராஜின் உறவு நல்ல முறையில் தொடர்கின்றது.

கோமளவள்ளியின் கோரமுகம் காணும் போது செல்வராஜ் என்ன மாதிரி முடிவுகளை எடுப்பானோ?

Advertisement