Advertisement

                                           அத்தியாயம் 3

ஊருக்குள் காலடி எதுத்து வைத்தான் சத்யதேவ்.  பயணக் களைப்பு ஓடியே போய் விட்டது சிலுசிலு காற்றில் ஆழமாக மூச்செடுத்தவன் சுற்றுப்புற சூழலை ரசித்தவாறே மெதுநடை போட  சிறுவர்கள் விளையாடுவதையும். டீக் கடையில் பெருசுகள் கதையலைப்பதுமாக இருக்க பார்க்கவே ரம்மியமாக இருந்தன. குளக்கரையில் சற்றுநேரம் உக்காரலாம் என வந்தவனை தடுத்தது தமிழ்செல்வியின் குரல்.

 

“ஏய் ரோஜா இங்க வாடி ரொம்ப நேரமா உன்ன தேடுறேன் இருட்டிருச்சுனா பாட்டி பயப்படுவாங்கடி வெளிய வா. நா ஒன்னும் பண்ண மாட்டேன் டி சொன்னா கேளு என் கோவத்த கிளறாத அப்பொறம் நடக்கிறதே வேற. ரோஜா நீ இப்போ வெளிய வர போறியா இல்லையா?”

 

ஒரு அகலமான மரத்துக்கு அப்பால் அவள் இருக்க “யார் இந்த ரோஜா? தனது அக்கா மகளை மிரட்டுறாளோ! வேற யாராவதா?  இந்த குட்டச்சிங்க ரெண்டும் என்ன வம்ப விலைக்கு வாங்கினாங்களோ!” என்றவாறே எட்டிப் பாக்க தமிழ் மட்டும் தெரிய அவளோ அருகிலுள்ள புற்செடியை பார்த்து மிரட்டிக் கொண்டிருந்தாள்.

 

அது கொஞ்சம் பெரியதாக இருக்க “ரோஜா அதுக்குள்ளே போய் ஒளிஞ்சிகிட்டாளா?” என்று யோசித்தவன் தமிழை எப்படி அழைப்பதென யோசித்தவாறே அவள் அருகில் சென்றான்.

 

அவளின் நீண்ட பின்னலை பார்த்தவாறே வர காலடி சத்தம்  கேட்டு அவள் வேகமாக திரும்ப கூந்தல் வந்து அவன் மேல் மோத அவனை கண்டு அவன் தடுமாறி விழப்போக அவளின் கையை பற்றி நேராய் நிறுத்தியவன்

 

“பாத்து பாத்து என்னதான் தப்பு பண்ணி இருந்தாலும் இப்படி மிரட்ட கூடாது. பொறுமையா சொன்னா கேட்டுப்பா”

“யாரு”

“ரோஜாதான்”

“ரோஜாவ உங்களுக்கு தெரியுமா?”

“அவ என் அக்கா பொண்ணுங்க”

யாரிவரு என்ன சொல்லுறாரு என்றவாறே பேசியவள் ரோஜா அக்கா பொண்ணு என்றதும் அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

அவள் சிரிப்பதை ரசித்தானே ஒழிய “ஏன்  சிரிக்கிறாய்” என்று கேக்கத்தோன்றவில்லை.

“அப்போ தாய்மாமனா அவளுக்கு எல்லா வேலையும் நீங்க தான் பாப்பீங்க அப்படித்தானே?” என்று தமிழ் சிரிப்பை அடக்க முடியாமல் தவிக்க

“ஆமாம்” என்றவாறு தலையசைத்தான் சத்யதேவ் .

 

“அப்போ அவளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வைங்க சேட்டை தாங்க முடியல, வீட்டுக்கும் அடங்க மாட்டேங்குறா” என்று புகார் வாசிக்க

“எங்க வீட்டு பொண்ண இவ என்ன சொல்லுறது” என்று முறைக்காமல்

“சரிங்க சரிங்க” என்று சொல்ல புதருக்குள் இருந்து வாத்து வெளியே வர அதை பிடித்து தூக்கிக் கொண்டவள்.

“பாத்தியாடி உன் மாமன் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போறாராம்” என அவனை பார்த்து கண்சிமிட்டி சிரிக்க

“இவ என்ன சொல்றா” சத்யதேவ் அவளை குழப்பமாக பார்த்தான். அவன் வயது அவனை பக்குவப படுத்தியதோ?

“ஊருக்கு புதுசா? ஆடுதிருட வந்தவன் மாதிறி இந்த முழி முழிக்கிறீங்க”

அவள் சொன்னதை கேட்டு கோப படாமல்

“என்ன பார்த்தா உனக்கு ஆடு திருட வந்தவன் மாதிரி தெரியுதா? என புன்னகைக்க

அவன் புன்னகையை அவள் மெய்மறந்து சில நொடிகள் பார்த்திருந்தாள் தமிழ் செல்வி.

சொடுக்கிட்டு அவளை அழைத்தவன். “உன் பேரென்ன”

“தமிழ்செல்வி” என்று அவன் காதுக்குள் சொல்லியவள் ஓடிவிட்டாள்.

அவளின் இச்செயலில் அதிர்ந்தவன். அவளின் காது தீண்டிய குரலும், மூச்சுக்கு காற்றும் ஏதோ செய்ய தலையை அசைத்து தன்னை நிலைப்படுத்தியவன்.வீட்டை நோக்கி நடந்தான்.

 

“சே யாரடா இவன் புதருக்குள் வந்த வாத்தை பிடிச்சி வச்சு அந்த பொண்ணு புதருக்குள் தலைய விட்ட மயக்க மருந்தை கொடுத்து தூக்கலாம்னு பாத்தா இப்படி சொதப்பிருச்சே” என புதருக்குள்ளிருந்து வினோத்தும், குமரேசனும் வெளியே வர

“எங்கிருந்தது தான் வாறானோ! காரியமே கேட்டுச்சு” குமரேசன் கோபத்தில் பொரிய  

“விடுடா எங்க போய்ட போறா இன்னொருநாள் பாத்துக்கலாம்” தான் கொண்டுவந்த பையினுள் மயக்க மருந்தை வைத்து பூட்டினான் வினோத்.

 

“செம்பருத்தி செம்பருத்தி எங்கடி போயிட்ட” தமிழ்செல்வி தான் உயிராய் வளர்க்கும் பசு மாட்டை தெருத்தெருவா தேடிச்செல்ல

 “என்னடி தாமரை நம்ம பாட்டி நமக்கு அழகாக பூக்களின் பெயர வச்சிருக்குறாங்களே! இந்த ஊருல ஆடு மாடு கொழிக்கெல்லாம் எங்க பெயர் வச்சிருக்காங்க” ரோஜா தாமரையின் காதை கடிக்க

“ஆமாடி காலைல ஆவாரம் ஆவாரம் இந்த பால பிடி” னு ஒரு பையன் நம்ம தோப்புல  நாயோட விளையாடிகிட்டு இருந்தானே! அவன் அக்கா தான் டி இந்த பொண்ணு நம்ம பாட்டி  வழி சொந்தமாம். பேர் கூட தமிழ்செல்வியாம்”

 

“பாக்க அழகத்தான் இருக்கா?” என்றவாறே ரோஜாவும் தாமரையும் அவளை கடக்க

 

“யாக்கோ யாருக்கோ இது யாரு இந்த புது அக்கா”

 

“அடிங்க நாங்க உனக்கு அக்காவா ரெண்டு புள்ளைங்களுக்கு அம்மா மாதிரி இருக்க” என ரோஜா எகிற

தமிழ்செல்வி பயந்தவளாக கையிலிருந்த வாத்தை இறுக்கிப் பிடிக்க அது வலியால் கத்தது தொடங்கியது.

 

அவளின் பயந்த முகத்தை கண்டு தாமரைக்கு சிரிப்பு வர “காலையிலேயே சொன்னேனே பேர் சொல்லி கூப்புடுனு, கைல இருக்குற வாத்து பேரென்ன” என்று தமிழை சகஜநிலைக்கு கொண்டுவர

அவளும் மெதுவாக “ரோஜா” என சொல்ல

தாமரை “ஹாய் ரோஜா” என்று வாத்தையும் ரோஜாவையும் மாறி மாறி பார்க்க

ரோஜா தாமரையை முறைத்தவாறே

“உலகத்துல வேற பேறே கிடைக்கலையா இதுங்களுக்கு பேர் வைக்க” ரோஜா பல்லை கடிக்க

 

“பேர் வைக்க உன்கிட்ட பெர்மிஷன் கேட்கணுமா? என்றவாறே வந்து சேர்ந்தான் சத்யதேவ்.

 

ஏனோ தமிழின் சுருங்கிய முகம் சத்யதேவின் மனதை பிசைய

 

“செல்வி நீ போய் உன் வேலைய பாரு இதுங்க இப்படித்தான் வெட்டிக்கத  பேசிகிட்டு இருப்பாங்க”

 

மூனு போரையும் சமாளிக்கும் சிரிப்பை உதிர்க்க ரோஜாவின் கோபம் அவன் புறம் திரும்பியது.

எல்லாரும் “தமிழ்” என அழைக்க அவன் “செல்வி” என்று அழைத்தது மனதுக்குள் இனித்தது தமிழ் செல்விக்கு. ஏதோ  விருது கிடைத்ததை போல் புன்னகைத்தவள் வாத்தோடு அகல அவளை ரசித்தான் சத்யதேவ்.

 

ரோஜா கோபமாக அவனை வசை பாட தாமரையும் திட்ட அவனின் கவனமெல்லாம் தமிழ் சென்ற திசையில் இருக்க தாமரையும் ரோஜாவும் அவனை சரமாரியாக அடிக்கவே சுய நினைவுக்கு வந்தவன் அவர்களிடமிருந்து தப்பி ஓடினான்.

 

வீட்டுக்கு வந்து சேர்ந்தவனை கனகாம்பாள் உச்சிமுகர்ந்து அணைக்க சொல்லாமல் கொள்ளாமல் வந்ததர்ற்கு அவன் அன்னையை  கடிந்துக்கொள்ள ஒரு மணித்தியாலயம் அவர்களின் பாசப் பிணைப்பில் சென்றது.

 

இங்கே சத்யாவின் குறுந்செய்தி பார்த்து கடுப்பான செல்வராஜ் அவனுக்கு அழைக்க அது “நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது” என சொல்லவும் தன்னையே நொந்து கொண்டவன்  கனகாம்பாளை அழைத்து சத்யாவுக்கு புது கான்ராக்ட் கிடைத்திருப்பதையும் நிறைய வேலை இருப்பதையும் சொல்லியவன்

 

“நீங்க வராம அவன் வர மாட்டான் அத்த பூஜையை முடிச்சிட்டு சீக்கிரம் வந்துடுங்க” என்று சொல்ல

 

“பொண்டாட்டின்னு ஒருத்தி இருந்தா அவ பின்னாடி சுத்திகிட்டு இருப்பான். அவனுக்குத்தான் நல்ல நேரம் அமையலயே! பரிகாரம் செஞ்சாச்சு. குலசாமிக்கு பூஜை பண்ணிடு வந்துடுறோம் மாப்புள” என்றவர் கண்களை புடவை முந்தானையால் துடைத்துக் கொள்ள

 

“கவலை படாதீங்க அத்த எல்லாம் நல்லதாகவே நடக்கும்” என்று போனை அணைத்த செல்வராஜ் ஒரு பெரு மூச்சு விட அவர் அருகில் வந்த கோமளவள்ளி

 

“என்ன சத்யா அம்மாவை தேடி ஊருக்கு போய்ட்டானா ” என மலர்ந்த முகமாக கேக்க “ஆமாம்” என தலையசைக்க செல்வராஜ் தூங்கச்செல்ல

 

“ரோஜாவை அனுப்பி வச்சது நல்லதா போச்சு அந்த தாமரையையும் அம்மா கூட்டிட்டு போனதுதான் சரியில்ல அந்த குண்டு பூசணிக்காவ சத்யாக்கு பிடிக்க கூடாது” என புலம்பியவாறே தூக்கமில்லாது தவித்தாள் கோமளவள்ளி.

 

அக்கா பொண்ணுங்களுடன் வாய் சண்டையிட்டவாறே இரவு உணவை முடித்துக் கொண்ட சத்யதேவ் தூங்கச்செல்ல

 

“சத்யா மாப்புள போன் பண்ணி இருந்தாரு உனக்கு புது காண்ட்ராக்ட் கிடைச்சிருக்காமே! நிறைய வேலையிருக்குறதா சொன்னான். ஏன் பா வேலையிருந்தா சொல்லணுமில்ல இன்னும் ஒரு வாரத்துல திருவிழாக்கான வேலையெல்லாம் ஆரம்பிச்சிடுவாங்க அப்பொறம் திருவிழா முடியும் வர ஊருக்கு வெளிய போக கூடாதில்ல. நாளைக்கு குலசாமிக்கு ஒரு பூஜை செய்யணும் மத்தியானம் நாம வீட்டுக்கு போலாம் சரியா”

 

வளந்த ஆண்மகனுக்கு குழந்தைக்கு சொல்வதை போல் சொல்லியவர் “சரிப்பா தூங்கு” என்றவாறே அறைக்கு செல்ல கட்டிலை வந்தமர்ந்த சத்யதேவ் மடிக்க கணணியை வைத்து கொஞ்சம் வேலை பார்த்தவன் தமிழ் செல்வியின் நியாபகம் வர புன்னகைத்தாள் கொண்டவன்.

 

“டேய் சத்யா வேணாம்டா  ஏதோ பாத்த, ரசிச்ச அத்தோடு விட்டுடு, உனக்கு லவ் பண்ணுற வயசுமில்லா, உனக்கு இருக்குற பிரச்சினைக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ணவும் முடியாது இந்த கான்டராக்ட ஒழுங்கா  பண்ணா பாதி கடனை அடைச்சிடலாம்.” மனசாட்ச்சி ஓலமிட தலையை குலுக்கிக் கொண்டவன்.

 

என்னது லவ் வா? அதிர்ந்து எழுந்தவன். சே சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல ஏதோ அவ வித்தியாசமா இருக்கா, அதான் அவ பேச்சுல மனசு நிறஞ்சிருச்சு, யார் பொண்ணோ? யாரையாச்சும் விரும்புறாளோ? நிச்சயம் நடந்திருக்குமோ? யாருக்கு தெரியும். எனக்கு கல்யாணம் பண்ண இஷ்டமிருந்தா எப்பயோ பண்ணி இருப்பேனே! பிரச்சினை  முடியட்டும்னு இருந்துட்டேன். அது முடிய இன்னும் எத்தனை வருஷம் ஆகுமோ? அம்மா ஆசைக்காக கல்யாணம் பண்ணாலும் யாராவது பாதிக்கப் பட்ட பொண்ணு ,ரெண்டாம் தாரமோ தான் பண்ணனும்” என்று புலம்பியவன்  தனக்குத்தானே பேசிக்கொண்டு வேளையில் கவனம் செலுத்தினான்.

 

“என்ன  மணியண்ணே இந்தப் பக்கம். இன்னொரு செம்பு பால் அதிகமா வேணுமா?” சத்யதேவ்வை  தாமரை, ராஜாவுடன் பார்த்தவள் இப்படிக் கேக்க

“இல்ல புள்ள நாளைக்கு காலைல கனகாம்பாள் அம்மா குடும்பத்தோடு நம்ம குலசாமி கோவிலுக்கு போறாங்க பூஜைக்கு தேவையானதை எடுத்து வைக்கணும் கொஞ்சம் வந்து கூட மாட ஒத்தாசை பன்னு புள்ள. அத சொல்லத்தான் வந்தேன் இந்த பால் காசு” என பணத்தை கொடுத்தார். காலையில் எத்தனை மணிக்கு வர வேண்டும் என்பதை கேட்டுக் கொண்டவள் வாயிலை அடைத்து விட்டு தூங்கச்சென்றாள்.

 

“என்ன மரகதம் தூங்காம என்ன யோசன” முருகவேல் அவள் புறம் திரும்பியவாறே கேக்க

“இல்ல அம்மா தனியா ஊருக்கு போய் இருக்காங்க கூட போக முடியல பூவரசுக்கு பரீட்ச்சை இருக்குனு தாமரையை அனுப்பி வச்சேன். சத்யா வேற போய் இருக்கான். ரோஜா வேற இருக்கா அக்கா ஏதாச்சும் சொல்லுவாளோ!” என இழுக்க

 

கோமளவள்ளி என்றதும் உடல் இறுகியது முருகவேளுக்கு ” அத்த இருக்காங்கல்ல பாத்துப்பாங்க என்றவனின் சிந்தனை பல ஆண்டு பின்னோக்கி பயணித்தது. மரகதமும் நினைக்க, செல்வராஜும் தன் கல்யாண வாழ்க்கையை நினைத்துப் பார்த்தான்.

 

கோமளவள்ளிக்கு ஒருவருடம் இருக்க மரகதவள்ளி பிறந்ததாலும் கனகாம்பாளின் உடல்நிலை சீரில்லாது போனதாலும் கோமளவள்ளி பாட்டி வசமானாள்.   

தன அன்னை தன்னை கொஞ்சாது குட்டித்தங்கையை எந்த நேரமும் வைத்திருப்பதும் தனக்கு அன்னை மடி கிடைக்காமல் போனதுக்கு மரகதவள்ளியே காரணம் என நினைத்துக் கொண்டவள் மரகதவள்ளியை சிறு வயதிலிருந்தே வெறுத்தாள்.

 

மூன்றே வயதான மரகதவள்ளியை நான்குவயதிலிருந்தே துன்புறுத்த ஆரம்பித்தாள் கோமளவள்ளி. அடிப்பதும், கிள்ளுவதும், கொட்டுவதுமாய்  ஆரம்பித்தது இன்றுவரை தொடர்கிறது.

கோமளவள்ளி துன்புறுத்தும் போதெல்லாம் மரகதவள்ளி நாடுவது செல்வராஜை. தன்னை விட ஆறு வயது பெரியவனான செல்வராஜ் மரகதவள்ளிக்கு ஹீரோவாக தெரிய இருவரும் சேர்ந்தது கோமளவள்ளிக்கு எதிரணியானனர்.  

சத்யதேவ் பிறந்ததும் அக்காக்கள் அவன் மேல் ஒரே மாதிரியாக பாசம் வைக்க அவர்களின் போர் நிறுத்தும் தடை அவனாகிப்போனதால் வாய்சண்டைகள் மாத்திரம் நடை பெற சத்யாவே சமாதான தூதுவரானான்.

சத்யாவுக்கு அடங்கும் கோமளவள்ளி மரகதவள்ளி மேல் வஞ்சம் வைத்து காத்திருந்தாள். மரகதவள்ளி செல்வராஜின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு தனியாக பேசியதை கேட்டவள். மரகதவள்ளி செல்வராஜை விரும்புவதை அறிந்துக் கொண்டு மனதுக்குள் திட்டம் தீட்ட ஆரம்பித்தாள்.

 

Advertisement