Advertisement

                                              அத்தியாயம் 4

செல்வராஜ் கனகாம்பாள் அம்மாவின் அண்ணன் மகன். அத்தையிடம் செல்லம் கொஞ்சுபவன் பாடசாலை விடுமுறை நாட்களில் அத்தையின் வீட்டுக்கு அடிக்கடி அத்தையை பார்க்க ஓடி வந்து விடுவான். அப்படி வரும் போதெல்லாம் கோமளவள்ளியிடம் சண்டை பிடித்துக்  கொண்டு அழும் மரகதவள்ளியை சமாதானப் படுத்துவதே அவனின் முக்கிய வேலை.

யார் பக்கம் பேசுவதென்று அவனுக்கு பல நேரம் குழப்பமாக இருக்கும். இரண்டு பேருக்குமே ஒரு வருட வித்தியாசம். மரகதவள்ளி அழுது கரைவதாலும், கோமளவள்ளி பிடிவாதம் பிடிப்பதாலும் செல்வராஜ் மரகதவள்ளியின் பக்கம் சாய, கோமளவள்ளி செல்வராஜின் மேல் கோவம் கொண்டாள்.

 

மரகதவள்ளியின் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருந்த கோமளவள்ளி செல்வராஜிடம் ஒதுக்கம் காட்டலானாள். முதலில் அதை புரிந்துக் கொள்ளாதவன். அவளின் ஒதுக்கம் கண்டு அவளிடம் பேச முயற்சிக்க “என் தகுதிக்கு உன் கிட்ட எல்லாம் நா நின்னு பேச மாட்டேன்” என்று முகத்தில் அடித்தது போல் சொல்ல மனமுடைந்து போனான் செல்வராஜ்.

 

கோமளவள்ளியின் தந்தை முத்துக்குமார் ஜவுளித்தொழிலில் கால் பதித்து சிறப்பாக செய்துகொண்டிருப்பவர். கோமளவள்ளி பிறந்த நேரம் தான் அவரின் இன்றைய நிலைக்கு காரணம் என அவர் கோமளவள்ளியை தலையில் தூக்கி வைத்து ஆடாத குறையாய் செல்லம் கொஞ்ச, அப்பா தன் பேச்சை கேட்டு நடப்பதை தவறாக புரிந்திருந்தவள், தன்னை சுற்றி உள்ள பணக்கார நண்பர்களிடம் மட்டும் பழக, எல்லாவற்றிலும் ஸ்டேடஸ்  பார்க்கலானாள். பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களாக இருக்கும் செல்வராஜை மரகதவள்ளியால் ஒதுக்கியவள் வளர வளர பணக்கார நண்பர்களின் சகவாசமும், பணக்காரர்களுக்கு இருக்கும் வெட்டி பந்தாவும், பகட்டும் அவளை தொற்றிக்கொள்ள  பணத்தை காரணம் காட்டி செல்வராஜை ஒதுக்கினாள்.

 

நாட்கள் செல்லச்செல்ல மரகதவள்ளியிடமும், செல்வராஜிடமும் ஒதுங்கியவள். மரகதவள்ளி செல்வராஜின் புகைப் படத்தை வைத்துக் கொண்டு காதல் மொழி பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவள் செல்வராஜும் மரகதத்தை விரும்புவதாக நினைக்க. நெஞ்சம் முழுக்க வஞ்சம் வைத்து காத்திருந்ததன் பயனை அடைய நேரே சென்ற நின்றது அப்பா முத்துகுமாரிடம்.

 

“அப்பா நான் செல்வராஜ் அத்தான விரும்புறேன்” முத்துக்குமாருக்கு அதிர்ச்சியே அப்பொழுதுதான் கோமளவள்ளியை பெண் கேட்டு முருகவேலின் வீட்டிலிருந்து சம்பந்தம் பேசி அனுப்பியிருந்தார்கள்.

 

உண்மையில் முருகவேள் கோமளவள்ளியை ஒரு நண்பனுடைய பிறந்தநாள் விழாவில் கண்டு அழகில் மயங்கி வீட்டில் சொல்ல முத்துக்குமாரை பற்றி விசாரித்தவர்களுக்கு பிடித்துப் போக சம்பந்தம் பேசி அனுப்பி இருந்தனர்.

 

முத்துக்குமாரும் கோமளவள்ளியின் குணம் அறிந்து முருகவேள் தான் அவளுக்கு பொருத்தம் என்றும் செல்வராஜை விட்டு விடாது மரகதவள்ளிக்கு பேசி முடிக்கலாம் என்றிருக்க இதையறியாத கோமளவள்ளி மரகதவள்ளியை பலி தீர்க்க  அப்பாவின் முன் வந்து நின்றாள் தான் செல்வராஜை காதலிப்பதாக.

 

அவர் மறுக்கவே இரண்டு நாள் உண்ணா விரதம் இருந்தவள் தந்தையின் வாயால் “சம்மதம்” என்று கெட்ட பின்பே தண்ணீர் அருந்தினாள்.

 

அவளின் பிடிவாதம் கண்டு ஆடிப் போன முருகவேளுக்கு ஆபீசில் இருக்கும் போது முதல் மாரடைப்பு வரவே மயக்கம் போட்டு விழுந்தவரை நண்பன் பாண்டியன் மருத்துவமனையில் சேர்க்க, தக்க சமயத்தில் சேர்த்ததால் பிழைத்துக் கொண்டவர் வீடு வர ரெண்டு நாட்கள் ஆகா வெளியூர் சென்று விட்டதாக பாண்டியன் கனகாம்பாளிடம் சொல்ல முத்துக்குமாரின் உடல் நிலை வீட்டுக்கு தெரியாமல் போனது.

 

“ரத்னவேல் பையன் முருகவேள் தங்கமான பையன் . குடும்பமும் நல்ல குடும்பம், முத்து……. வள்ளிக்கும், மரகதத்துக்கும் ஒரு வருடம் தானே வித்தியாசம். இப்போ பேசி வைக்கலாமே இன்னும் ஒரு வருஷமோ, ரெண்டு வருஷமோ போனா   கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாமே” நண்பன் பாண்டியன் சொல்ல

 

நண்பனின் ஆலோசனையின் பெயரில் முருகவேள் குடும்பத்துக்கு கோமளவள்ளிக்கு திருமணம் நிச்சயக்கப் பட்டிருப்பதாக கூறி  மரகதவள்ளியை பேச

 

வீட்டாருக்கு சம்மதம் என்ற போதிலும் முருகவேள் மறுத்தான். மகனை சம்மதிக்க வைக்கலாம் என நினைத்த முருகவேலின் பெற்றோர்கள் யோசித்து முடிவு சொல்வதாக கூறி இருந்தனர்.

 

முத்துக்குமார் கோமளவள்ளிக்கு செல்வராஜை பேச சத்யமூர்த்தியும், குறிஞ்சியும் சம்மதம் சொல்ல செல்வராஜுக்கோ அதிர்ச்சியாக இருந்தது எல்லாவற்றிலும் ஸ்டேட்டஸ் பார்ப்பவள் தன்னை மணக்க எப்படி சம்மதித்தாள் என்று.

 

கோமளவள்ளி பாலர் உபயோகத்தில் மரகதவள்ளியை விட அழகிதான். அழகாக நேர்த்தியான ஆடை அணிபவள். அத்துடன் உடலை கவனமாக பராமரித்து வருபவளும் கூட. செல்வராஜ் முருகவேளை விட அழகன் தான்.

 

முத்துக்குமார் முருகவேளின் சம்பந்தம் முதலில் கோமளவள்ளியை கேட்டிருந்ததை வீட்டாருக்கு மறைத்திருக்க, தனக்கு வந்த சம்பந்தம் என அறியாத கோமளவள்ளி மரகதவள்ளியை வெற்றி கொண்டதாக இறுமாப்பில் இருக்க, கோமளவள்ளிக்கு முருகவேளின் சம்பந்தம் மரகதவள்ளிக்கு வந்திருப்பதாக தெரியவர அதை எப்படி உடைப்பதென்று யோசிக்கலானாள்.

 

முத்துக் குமார் மகள்கள் இருவரினதும் திருமணத்தை ஒன்றாக நடாத்த ஆசைப்பட முருகவேளின் வீட்டிலிருந்து பதில் வராது போகவே கோமளவள்ளியின் திருமணத்தை செல்வராஜுடன் நடாத்த மரகதவள்ளி கண்ணீரில் கரைந்தாள்.

 

தங்கையின் கலங்கிய கண்களை கண்டு துள்ளிக் குதித்த கோமளவள்ளி செல்வராஜின் சந்தோசமான முகத்தை காண தவறினாள்.

 

அவள் நினைத்திருந்ததது செல்வராஜும் மரகதவள்ளியும் ஒருவரையொருவர்   விரும்புகின்றனர் வீட்டாரின் விருப்பத்தை ஏற்று செவ்ராஜ் கோமளவள்ளியை மணந்தான் என்று.

 

“இருவரையும் பிரிச்சாச்சு வார்த்தையால் இருவரையும் காய படுத்த வேண்டும்” என தீர்மானமான  முடிவுடன் கோமளவள்ளி இருக்க, அவளின் குத்தீட்டி சொற்களால் காயப்படுத்த காத்திருக்கிறாள் என அறியாத செல்வராஜ் அவளுக்காக முதலிரவுக்கான அறையில் காத்திருந்தான்.

 

கோமளவள்ளி தாய் தந்தையின் முன் எதுவும் காட்டிக் கொள்ளமாட்டாள். அது போலவே அத்தை மாமாவான குறிஞ்சி,சத்தியமூர்த்திக்கு அவள் அன்பான மருமகளே!

 

முதலிரவு அறையில் செல்வராஜ்  கோமளவள்ளிக்காக காத்திருக்க மெல்ல அடியெடுத்து உள்ளே வந்தாள் கோமளவள்ளி.

 

“வள்ளி இப்படி உக்காரு உன் கிட்ட கொஞ்சம் பேசனும்” என்று செல்வராஜ் கோமளவள்ளியை கட்டிலில் அமர்த்த

 

“என்ன சொல்ல போற நா மரகதத்த விரும்புறேன். வீட்டாருக்காக உன்ன கல்யாணம் பண்ணேன். எனக்கு கொஞ்சம் டைம் வேனும். இல்லனா? மரகதம் கல்யாணம் வர பொறுத்திருப்போம். இதைத்தானே சொல்ல போற சொல்லு சொல்லு” என மனதால் நினைக்க அவனோ வேறு சொன்னான்.

 

“வள்ளி நா நெனச்சி பாக்கல நீ என்ன விரும்புறேன்னு, . என்ன தான் அத்த பொண்ணுங்க என்றாலும் மாமா ஓட வசதிய பாத்து உரிமை இருந்தாலும் நானே ஒதுங்கி போனேன். மரகதம் எனக்கு குட்டி தங்கை தான். நீங்க ரெண்டு பெரும் போடுற சண்டையை விலக்கியே உங்க கூட என் காலம் போய்டும் னு நெனச்சேன். அன்னைக்கு நீ கூட ஸ்டேட்டஸ் அது இதுனு பேசிட்டே” என்று சொல்ல

 

கோமளவள்ளி அவனை ஆராய்ச்சியாக பார்த்தாள். செல்வராஜ் ஆணழகன் தான், நல்ல படிப்பு. முயற்சி செய்து முன்னுக்கு வரக் கூடியவன். இது எல்லாத்தையும் விட மரகதவள்ளியை அவன் காதலிக்கவில்லை என்பதே அவளுக்கு பெரிதாக தெரிய அவன் மேல் இருந்த கோபமெல்லாம் துடைத்து எறிந்தவள்  அவனை கட்டி அணைத்தாள். அன்றே அவர்களது இல்லறம்  இனிதே ஆரம்பமானது.

 

கோமளவள்ளியின் இலக்கு மரகதவள்ளி மாத்திரமே அவளை துன்புறுத்துவதே! செல்வராஜ் அவளை காதலிக்கவில்லை என்பதே மரண அடியாக இருக்க,

“அது மட்டும் போதாது கல்யாணமே ஆகாமல் வீட்டிலேயே எங்க குழந்தைகளுக்கு ஆயா வேலை பாக்கணும். அத்தானுடன் நான் வாழும் வாழ்க்கையை கண்டு ஏங்கியே சாகனும்” என்று குரூரமாக நினைத்த கோமளவள்ளி. முருகவேலினுடன் பேசிய சம்பந்தத்தை உடைக்க அவனை போனில் அழைத்தாள்.

 

“ஹலோ முருகவேள் இருக்கிறாரா?” ஆபீஸ் லேண்ட்லைன் நம்பருக்கு அழைக்க முருகவேள் தான் போனை எடுத்திருந்தான்.

 

“இது கோமளவள்ளி குரலாச்சே! அவ எதுக்கு எனக்கு கால் பண்ணுறா? அவளுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு நாள் கூட இல்லையே” என்று முருகவேள் சிந்திக்க கோமளவள்ளி பல தடவை “ஹலோ” சொன்னாள்.

 

“சொல்லுங்க நா முருகவேள் தான் பேசுறேன் நீங்க யாரு?” தெரியாதவன் போல் கேக்க

 

“நான் முத்துக்குமார் மகள் மரகதவள்ளி பேசுறேன். எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல தயவுசெய்து நீங்க மறுத்துடுங்க” என அவனின் பதிலுக்காக காத்திருக்க சற்று குழம்பினான் முருகவேள்.

 

“இது கோமளவள்ளி குரல் ஆச்சே! ஒருவேளை அக்கா தங்கை இருவருக்கும் ஒரே மாதிரியான குரலோ?” என்று நினைத்தவன் எதுவும் சொல்லாது ரிசீவரை  அதனிடத்தில் வைத்து “அது சரி எனக்கும் தான் இஷ்டமில்லை. நானும் எங்க வீட்டுல சொல்லிட்டேனே! ரொம்ப தைரியமான பொண்ணுதான்” என்றவன் அவன் வேலையை பார்க்கச்சென்றான்.

 

ஆபீஸ் அறைக்கு வெளிப்புறமாக ஒரு கதவும் வீட்டின் உள்ளே ஒரு கதவும் இருக்க, கோமளவள்ளி வீட்டிலுள்ள ஆபிஸ்  அறையிலிருந்து கால் பண்ணியிருக்க பைல் எடுக்கவந்த முத்துக்குமார் கேட்டு அதிர்ச்சியடைந்து நின்று  விட்டவர். அவள் அடுத்து பேசியதை கேட்டு மயங்கிவிழுந்தார்.

 

“கூமுட்டை கூமுட்டை சரியான திமிரு புடிச்சவன் போல கல்யாணத்துல இஷ்டமில்லன்னு  சொல்லுறேன் எதுவுமே சொல்லாம இருக்கான். மரகதம் உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது.  நடக்க விடமாட்டேன். சாகுற வரைக்கும் கன்னியாவே இருந்து செத்துப் போ. நீ காதலிக்கிறேன்ற ஒரே காரணத்துக்காக தான் அத்தானை நான் கல்யாணம் பண்ணேன்” நகத்தை கடித்தவாறே ரிசீவரை கையில் வைத்துக் கொண்டு சொல்லியவள் உட்புறம் உள்ள கதவின் வழியே உள்ளே செல்ல அவள் பேசியதை கேட்டு நெஞ்சை பிடித்துக் கொண்டு மயங்கி விழுந்தவர் தான் முத்துக்குமார் அதன் பின் எழவே இல்லை. அடுத்த கதவுக்கு வெளியே தந்தை விழுந்தது கோமளவள்ளி அறியவில்லை.

 

மாரடைப்பில் இறந்தார் என்றும் இது இரண்டாவது தடவை என்றும் டாக்டர் கூற  தன்னால் தான் தந்தை உயிரை விட்டார் என்று கோமளவள்ளிக்கு தெரியாமல் போனது. ஒரு வேலை அறிந்திருந்தால் மனம் மாறி இருந்திருப்பாளோ?

 

முத்துக் குமாரின் இறப்புக்கு முருகவேளின் குடும்பமும் வந்திருக்க மரகதவள்ளி அழுத்தவாறே சோகச்சித்திரம் போல் தந்தையை வெறித்து அமர்ந்திருந்ததை பார்க்க முருகவேளுக்கு கவலையை தந்தது.

 

முத்துக் குமார் இறந்ததை கேள்விப் பட்டு அவரிடம் கடன் கொடுத்தவர்கள் வரிசை கட்ட கனகாம்பாள் திண்டாடிப் போனார்.

ஹாட்டல் பில்ஸ்,  மளிகை சாமான், போன்ற சின்ன சின்ன தொகையிலிருந்து, கடையை விரிவு படுத்த வாங்கிய கடன், வீடு கட்ட வாங்கிய கடனிலிருந்து வைரம் வாங்கியது வரை அவருடைய கையெழுத்து போட்ட காகிதங்களுடன் கடன் கொடுத்தவர்கள் வீட்டில் இருக்க, கனகாம்பாளையும், மரகத்தையும் பார்க்கும்  சிலரது பார்வை கனகாம்பாளுக்கு உள்ளுக்குள் அச்சத்தை ஏற்படுத்த அண்ணன் சத்தியமூர்த்தியை அழைத்து வீட்டை விற்று பணத்தை கொடுக்குமாறு சொல்ல வீடு விற்கப்பட்டது.

 

முருகவேள் மரகதத்தை எவ்வாறு திருமணம் புரிந்தார்? இதில் கோமளவள்ளியின் சதி என்ன ?

Advertisement