அத்தியாயம் 21
“மித்ரா அந்த சத்யதேவுக்கு உதவி செய்றது யாரு? அவனோட மாமா முருகவேலா?” அபிநந்தன் குறுக்கும் நெடுக்குமாக நடந்தவாறே கேக்க
“நான் விசாரிச்ச வரைக்கும் அப்படி தெரியல”
அப்போ கோயம்புத்தூர்ல இருக்கிற அவனுடைய தங்கைகளின் மாமியார் லதா குரூப் ஒப் கம்பனியின் சேர்மன் சாருலதாவா?”
“தெரியல சார் விசாரிச்சுக் கிட்டு தான் இருக்கேன்”
“என்ன மித்ரா அவன் கப்பல்ல சரக்க அனுப்பி எட்டு மாசமாகுது இன்னுமா கண்டு பிடிக்க முடியல” வெறுமையான குரலில் அபிநந்தன் சொல்ல மித்ரன் வளமை போல் அமைதி காத்தான்.
“சீக்கிரம் கண்டு பிடி” என்றவன் “நீ இப்போ என்ன பண்ணுற போய் சத்யதேவை பார்த்து பேசுற என் பிளான் படி ரோஜாவ கல்யாணம் பண்ணுற” நந்தன் சொல்ல தலையசைத்து விடை பெற்றான்.
*******************************************************************
“அப்போ அப்படியே பண்ணிக்கலாம் மிஸ்டர் செல்வமாணிக்கம்” முருகவேல் கை குலுக்க
“கண்டிப்பா” என்ற செல்வமாணிக்கம் “என்ன அவசரம் இருங்க சாப்பிட்டே போகலாம். லன்ச் அவர் தானே!’ என்று முருகவேலை வற்புறுத்தி அமர்த்தியவர் உணவுகளை வரவழைக்க அவருடைய போன் அடித்தது காதில் வைத்தவர் மிக தீவீரமாக பேச முருகவேலின் காதிலும் அப்பேச்சு விழ யோசனையாக அவரை பாத்திருந்தான்.
செல்வமாணிக்கம் என்பது வயதிலும் சோர்ந்து போகாமல் அநாதை ஆசிரமத்தை நடாத்தும் நல்ல உள்ளம் கொண்டவர். அவரின் சொந்த பணத்தையெல்லாம் அந்த சிறுவர்களுக்காக கொடுத்தவர். அவர்களுக்கு உதவவென ஒரு சங்கத்தையும் அமைத்து. காலேஜ் மாணவர்கள் மத்தியில் உதவும் மனப்பான்மையை வளர்க்க அவர்களின் மத்தியில் போய் பேச்சாற்றி சங்க உறுப்பினராகவும் சேர்த்துக் கொண்டு பணக்காரர்களிடத்தில் உதவியும் கேட்டு கிட்டத்தட்ட இருபது வருடங்களாக ஆசிரமத்தை நடாத்தி வருவது மட்டுமின்றி தான் செய்யும் ஒரு ரூபாய்க்கும் சரியாக கணக்கு வைத்திருக்கும் நேர்மையான மனிதர்.
“பாத்தீங்களா முருகவேல் உலகத்துல எப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள். நல்ல உள்ளம் படைத்தவங்க அனாதைகளுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் உதவ காச டொனேட் பண்ணா அதுலயும் கைய வைக்கிறாங்க. மனிதர்களை திட்டும் போது மிருக குணத்தை ஒப்பீட்டு திட்டுறோம் ஆனா அதுங்க உயிர் வாழ மட்டுமே அத பயன் படுத்திக்க கொள்ளுது. தன்னுடைய இனத்துக்கு ஆபத்தை விளைவிக்காது. ஆனா மனிதர்கள் ரொம்ப கேவலமான பிறவி நாங்க தான் எனும் விதமா நடந்துக்க கிறங்க” என்று மனதிலுள்ள வருத்தத்தை எல்லாம் வார்த்தையில் கொண்டு வர
செல்வமாணிக்கத்தின் நேர்மையை அறிந்திருந்ததாலேயே அந்த சங்கத்திலிருந்து யார் வந்தாலும் பணம் கொடுத்தனர் நல்ல உள்ளம் கொண்ட செல்வந்தர்கள்.
முருகவேலை அவர் இன்று சந்தித்ததன் காரணமே அநாதை சிறுவர்கள் வயிறார மூன்று வேலையும் சாப்பிடும் சாப்பாட்டுக்காக அரிசியை பெற்றுக் கொள்ள.
“நீங்க பேசுறது என் காதுலயும் விழுந்துச்சு. பிரச்சினை பெருசு போல இருக்கே” முருகவேல் யோசனையாக சொல்ல
“ஆமா எங்க சங்கத்துல கிட்டத்தட்ட இரண்டாயிரம் உறுப்பினர்கள் இருக்கிறாங்க. யார் பணத்தை எடுத்தாங்கனு ஒன்னும் தெரியல”
“யாரு எப்போ? எங்க? யார் கிட்ட? காச கலெக்ட் பண்ணாங்க என்ற டீடைல்ஸ் இருக்கணுமே”
“சில பேர் கலெக்ட் பண்ணி ஒரு வாரம் கழிச்சி கூட கொண்டு வந்து தருவாங்க. அவங்க அவங்களுக்கு சொந்த வேல இருக்கிறதால குத்தம் சொல்லவும் முடியாது”
“அப்போ சொந்த செலவுக்கு பயன் படுத்திட்டு, காசு கிடைச்சதும் கொண்டு வந்து தாரங்களோ”
“இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். உண்மை கடவுளுக்கே வெளிச்சம்”
“உறுப்பினர்கள் அனைவரும் காசு கொண்டு வந்து தரனும் என்று சட்டம் இருக்கா”
“அப்படி எதுவும் இல்ல”
“எப்போ இருந்து கையாடல் நடக்குதுன்னு தெரியவந்தது? எவ்வளவு காலமா நடக்குதுனு ஏதாச்சும் ஊகம் இருக்கா?” முருகவேல் கேள்விகளை அடுக்க
“எவ்வளவு காலம்னு தெரியல. ரீசண்டா ஒருத்தர பார்த்தேன் அவர் தான் மாசா மாசம் ரெண்டு லட்சம் தாரேன்னு சொன்னாரு. ஆனா அவர் அனுப்பியதாக ஒரு லட்சம் மட்டுமே வருது. இது அவர் சொன்னதால, சொல்லாம என்னவெல்லாம் நடக்குதோ! ஈஸ்வரா…!’ வேதனை குரலில் மாணிக்கம் சொல்ல
“அப்போ யார் யார் அவர்கிட்ட கலெக்சனுக்கு போறாங்களோ அவங்கள பிடிச்சி விசாரிச்சா உண்மை தெரியுமே!” முருகவேல் பிரச்சினை தீர்ந்தது என்ற ரீதியில் சொல்ல
“ஐம்பது பேர் கை மாறி காசு வந்து சேருது. இதுல யார் எடுத்தாங்க என்று எப்படி கண்டு பிடிக்கிறது” மாணிக்கம் வெறுமையான குரலில் சொல்ல
இதை தடுக்க என்ன செய்யலாம் என்ற யோசனையில் இறங்கினான் முருகவேல்
*******************************************************************
“உங்கள எங்கையோ பாத்திருக்கிறேன்” என்று சத்யதேவ் சொல்ல
“உட்காந்து பேசலாமா?” என்று கேட்டான் மித்ரன்
அவனை அமரும்படி பணித்தவன் யோசனையாக ஏறிட்டான்.
“என்ன சார் என்ன நியாபகத்துல இல்லையா? உங்க கிட்ட ஒரு தடவ இன்ட்ரவீக்கு வந்தேன். என் படிப்பு ஏற்றது போல் சம்பளம் தர்ற நிலைமை இல்ல வேற வேல தேடுங்க கிடைக்கலனா வாங்கனு சொன்னீங்களே!” மித்திரன் நியாபகப் படுத்த முகம் மலர்ந்தான் சத்யதேவ்.
“ஓஹ் நல்லா இருக்கீங்களா? வேல கிடைச்சதா? இல்லையா? உங்க பேரு கூட ” என்று சத்யா யோசிக்க
“மித்ரன் சார். வேல எல்லாம் கிடைச்சது நல்ல சம்பளம்” என்று விட்டு அமைதியாக
“அப்போ வேற விஷயமாக வந்திருக்கிறீங்க, என்ன விஷயம்?” என்று உடனே விசயத்துக்கு வர
“நானும் ரோஜாவும் ஒரே காலேஜ் அவ பஸ்ட் இயர் ஜோஇன் பண்ணப்போ நான் லாஸ்ட் இயர். அவளும் நானும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறோம். அவ படிப்பும் முடிஞ்சிருச்சும், இப்போதே கல்யாணம் பண்ண முடியாதுனு சொல்லிட்டா. இருந்தாலும் உங்கள பார்த்து சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்” என்று பொறுமையாக சத்யாவிடம் எடுத்துக் கூறியவன் மேலும் சில விடயங்களை பேச புருவம் சுருக்கி யோசிக்கலானான் சத்யதேவ்.
சற்று நேரம் அமைதியாக இருந்த சத்யதேவ் ரோஜாவை போனில் அழைத்து தன்னுடைய அறைக்கு வருமாறு சொல்ல அறைக்கு வந்த ரோஜா அங்கே மித்ரனை கண்டு அதிர்ச்சியடைய அவளுடைய முக பாவனையிலேயே சத்யாவுக்கு உண்மை புரிந்தது.
அவளை அமரும் படி பணித்த சத்யா இருவரினதும் காதல் கதையை கேட்டுது தெரிந்துக் கொண்டு “இப்போ நான் என்ன செய்யணும்னு எதிர் பாக்குறீங்க” என்று புன்னகைத்தவாறே கேக்க
“ரோஜாவுக்கு கல்யாணத்துக்கு பாக்கும் போது எனக்கு சொல்லுங்க” என்று சொல்லியவாறே எழுந்து கொண்டவன் விடை பெற ரோஜாவும் எழுந்து கொண்டாள்.
“என்ன ரோஜா வழியனுப்ப போறியா? போ போ’ சத்யதேவ் கிண்டலடிக்க மித்ரனும் புன்னகைக்க ரோஜா” மாமா” என்றவாறே சிணுங்கினாள்.
மித்திரனை வழியனுப்ப ரோஜா வெளியே வரும் போது அங்கே முருகவேல் காரை நிறுத்தி விட்டு இறங்கி கொண்டிருந்தான்.
“ஐயோ சித்தப்பா வராங்க நான் உள்ள போறேன். நீங்க போங்க” ரோஜா உள்ளே போகப் பார்க்க அவளின் கையை பிடித்து இழுத்தவன்
“எங்க ஓடுற? மீட் பண்ணலாம் வானு கூப்டா வரமாட்டேங்குற. போன் பண்ணாலும் சரியா பேச மாட்டேங்குற. இன்னக்கி கிடைச்ச சந்தர்ப்பத்தை விட்டுடுவேனா?” என்று கண்ணடிக்க
“கைய விடுங்க மித்து சித்தப்பா பாத்துட போறாங்க” என்று ரோஜா கையை இழுக்க மித்ரன் கையை விடவும் முருகவேலும் “ரோஜா” என்று அழைத்தவாறே வந்தான்.
மித்ரனை கண்டு புருவம் உயர்த்த “இவர் என் காலேஜ் சீனியர். மாமாவை பார்க்க வந்திருந்தார். அதான் பேசிக்கிட்டு இருந்தேன்” என்று ரோஜா பம்ம
“தன்னை அறிமுகப் படுத்திக்க கொண்ட மித்ரன் நலம் விசாரிக்க “மரியாதை தெரிஞ்ச பையனா இருக்கான்” என்று முருகவேல் மெச்சுதலான பார்வையோடு மித்ரனிடமிருந்து விடை பெற்று சத்யதேவை காணச் சென்றான்.
“என்ன மாப்புள எங்க சகலயக் காணோம்?”
“மாமா ஒரு வேல விஷயமாக வெளிய போய் இருக்கிறார். வந்துடுவார். என்ன சாப்புடுறீங்க?
“ஏதாவது ஜில்லுனு சொல்லு சக்கர கம்மியா, இப்பவே கண்ட்ரோல் பண்ணலனா வயசு எற எற அது பாட்டுக்கு எகிறிடும்” சத்யதேவ் அலைபேசி வழியாக குடிக்க கொண்டு வருமாறு பணித்து விட்டு
“அதிசயமாக என்ன இந்தப் பக்கம் உங்க காத்து வீசுது” சத்யா கிண்டலாகவே கேக்க
“அத ஏன் கேக்குற மாப்புள இன்னக்கி ஒருத்தர சந்திச்சேன்” என்று செல்வமாணிக்கத்தை பற்றியும் அவரின் பிரச்சினையை பற்றியும் முழுசாக சொல்ல
“எனக்கும் அவரை தெரியும் மாமா. இத போலீஸ்ல சொன்னாலும், கண்டு பிடிக்க கஷ்டம். இதுக்கு முதல்ல சங்க உறுப்பினர அட்டையை புதுப்பிக்கணும்”
“புரியல” முருகவேல் யோசிக்க
” இருவது வருசத்துக்கு மேலா இருக்கிற உறுப்பினர் அட்டையை புதிப்பிக்கணும். காசா வாங்காம செக்கா வாங்க சொல்லலாம். அவர் பேர்லயோ! ஆசிரமத்து பேர்லயோ ஒரு பேங்க் அக்கவுண்ட்டை ஓபன் பண்ணா அதுல காச போட சொல்லலாம்” பிரச்சினைக்கு மளமளன்னு தீர்வு சொல்ல
“தேங்க்ஸ் டா மாப்புள”
“இனிமேல் காச அடிக்காம இருக்கத்தான் இந்த தீர்வு இவ்வளவு நாளும் காச திருடினவங்கள கண்டு பிடிக்க வேணாமா?” சத்யதேவ் புன்சிரிப்போடு சொல்ல
“எப்படி மாப்புள கண்டு பிடிக்கிறது” முருகவேல் யோசனையாக கேக்க
“ஒரு வழி இருக்கு, அந்த அட்டையை பத்திரிக்கையிலும், டிவி, சோசியல் மீடியானு போட்டு விளம்பர படுத்த சொல்லுங், முதல்ல உறுப்பினர் அட்டையை மாத்தி, இப்போ இருக்கிறவங்களின் டீடைல்ஸ் கலெக்ட் பண்ண சொல்லுங்க. அட்டையில் உறுப்பினரோட போட்டோவும், டீடைலும் இருக்கணும். ”
“இதனால என்னவாகும்?”
“புது அட்டையோடு போறவங்களுக்கு மாத்திரம் தான் காசு கொடுப்பாங்க”
“அவன் புது அட்டையை வாங்குவானா?”
“இத்துண நாளா கொள்ள அடிச்சவன் கை சும்மா இருக்காது. மாட்டுவான்”
“அவனை எப்படி கண்டு பிடிக்கிறது”
“காசா கொடுக்குறவங்களுக்கு போன் மூலம் எவ்வளவு கொடுத்தோம்னு செல்வமாணிக்கம் சாருக்கு நேரடியாக அறிவிக்க சொல்லலாம். அப்படி செய்யும் போது யார் யார் காசுல கை வைக்கிறான். அவன் கூட யார் யார் கூட்டுனு போலீஸ் உதவியோடு கண்டு பிடிக்கலாம்”
“வாவ் காலைலயே மண்டைல ஏறிய பிரச்சினையை மாலைலயே இறக்கி வச்சிட்ட”
புன்னகை முகமாகவே “அந்த அப்பாவி குழந்தைகளின் ஒரு வேல சோறையோ? படிப்புக்கோ பங்கம் விளைவிச்சிட்டு அவங்க காசுல சொகுசா வாழணும்னு நினைக்கிறானே அவனை புடிச்ச பிறகு சொல்லுங்” என்று தன் அக்காவையே பிடிச்சு சிறையில் அடைக்க பக்காவே திட்டம் போட்டு கொடுத்தான் சத்யதேவ்.
*******************************************************************
“அக்கா சின்ன வயசுல நீ எங்கள கீழ வைக்காம இடுப்பிலேயே தூக்கி வச்சிப்ப, இப்போ உன் ரெண்டு பாப்பாவையும் கீழ வைக்காம நாங்க தூக்கிக் கிட்டு இருப்போம்” வாணன் சொல்ல வேந்தன் தலையசைக்க
“என்னடி பட்டு பண்ணுற” என்றவாறே சத்யதேவ் அறையினுள் வந்தான்.
“ஹை அப்பா வந்துட்டாங்க” என்று எழுந்து கொண்டவள் “பாப்பாங்க கூட பேசிக்கிட்டு இருந்தோம்” என்று செல்வி சொல்ல அங்கே வாணனும், வேந்தனும் செல்வியின் வயிற்றில் கை வைத்தவாறே நிற்க பொறாமையில் வெந்தான் சத்யதேவ்.
“நான் தொட்டா கூசுதுன்னு தொடவே விடமாட்டா. அவ தூங்குற வர வெயிட் பண்ணி என் பிள்ளைங்கள கொஞ்ச வேண்டி இருக்கு. தம்பீங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகை” என்று செல்வியை முறைக்க
“ஆமா நீ புடவய விலக்கிட்டு தொடணும்னு சொல்லுவ. அங்க பாரு அவனுங்க புடவைக்கு மேல கைய வச்சி கிட்டு இருக்கானுங்க” என்று சத்யதேவின் மனம் தருணத்தில் சத்யதேவை குட்ட
அதை அடக்கியவன் செல்வியின் அருகில் சென்று வாணனையும், வேந்தனையும் கண்டுக்காது அவளின் வயிற்றில் கை வைக்க சிலிர்த்தாள் செல்வி.
“தம்பிகளின் முன் என்ன இது” என்ற பார்வைதான் செல்வியிடம். இரட்டை குழந்தைகள் என்பதால் செல்வியின் வயிறும் பெரிதாக இருக்க
“வாணா இங்க பாரு பாப்பா அசையுது, வேந்தா இந்த இடத்துல கைய வை மூமண்ட் நல்லாவே தெரியுது” என்று சிரிப்பை அடக்கியவாறே செல்வியின் வயிற்றில் எல்லா இடத்திலையும் கை வைக்க
வாணனும், வேந்தனும் “ஆமா ஆமா” என்று சொல்லியவாறே கை வைத்துப் பார்க்க
அவர்களை குழந்தைகளின் பக்கம் திசை திருப்பியவாறே பின்னாலிருந்து செல்வியை அணைத்துக் கொண்டவன் இடது கையை இடையினூடாக நுழைத்து மேல் வயிறில் வைக்க தந்தையின் ஸ்பரிசம் உணர்ந்த குழந்தைகளும் தாயின் இதயத்துடிப்புக்கு ஏற்றவாறு அசைய வாணனும் வேந்தனும் துள்ளிக் குதித்தனர்.
வலது கையை செல்வியின் மார்புக்கு குறுக்காக செலுத்தி இடது தோள்பட்டையை பிடித்திருக்க, அவனின் உடல் முழுவதும் செல்வியின் உடல் உரச நின்றவன், அவள் கழுத்தில் தாடையை பதித்து காது மடல் உரச பேசிக் கொண்டிருக்க மேனி சிலிர்த்தவள் எதிர் பார்க்காத தருணத்தில் புடவையை விலக்கி இடது கையை வயிற்றில் வைக்க செல்வியின் உடல் வெட்கத்தால் கூச இதய துடிப்பும் அதிகரித்தது.
தாயின் புது விதமான உணர்வையும், இதய துடிப்பையும் வைத்தே தந்தையை உணர்ந்த குழந்தைகள் சந்தோசத்தில் அசைந்து தங்களது இருப்பை மாமன்களுக்கு காட்ட செல்வியால் தான் அசையவே முடியவில்லை.
“கைய எடுங்க எல்லாரும் என் வயிறென்ன பிளே கிரவுண்டா?” செல்வி திமிறியவாறே அதட்ட சத்யா அசையாது தனது காரியத்திலேயே கண்ணாக இருக்க வேந்தனும், வாணனும் முகம் சுருங்கினர்.
“என்னக்கா இன்னக்கி தான் பாப்பாங்க நல்லா அசைஞ்சாங்க, இன்னும் கொஞ்சம் நேரம்” என்று சொல்ல
“அடிப் பாவி டேலியும் நடக்குதா இரு டி” என்று செல்வியின் காதில் கிசுகிசுத்தவன். “அவ அப்படித்தான் சொல்லுவா நீங்க கைய வைங்கடா” என்று சொல்ல அவர்களும் கையை வைக்க “இன்னக்கி நைட் உனக்கு இருக்கு” என்று காதில் சொன்னவன் அவளின் கன்னத்தில் முத்தமிட்டவாறே அகல
ஆபிசிலிருந்து வந்தவனின் வேர்வை வாசம் நெஞ்சம் நிரப்ப, காதுமடல் உரசிய அவனது குரலும் செல்வியை வேற உலகத்துக்கே கொண்டு சென்றது.
நாட்கள் உருண்டோல சத்யதேவுக்கு அவுஸ்ரேலியா கான்ராக்ட் மூலம் கிடைத்த பெயரும், புகழும் அவனை சிறந்த வளர்ந்து வரும் தொழிலதிபனாக, அயரா உழைப்பாளியாக காட்ட போதுமானதாக இருக்க அவனது தொழிலும் வளர்ச்சியின் பாதையில் சென்று கொண்டிருந்தது.
செல்வியின் ஒன்பதாம் மாதம் தொடக்கத்திலேயே வளைகாப்பையும் வைக்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அன்று காலையில் இருந்தே செல்வியின் மனம் சொல்ல முடியாத அளவுக்கு பதை பதைத்துக் கொண்டிருக்க சத்யாவும் செல்வியின் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகளை கண்டு
“என்னாச்சு செல்வி ஒரு மாதிரி இருக்க” அவளின் முகத்தை நிமிர்த்தி கேக்க
“ஒண்ணுமில்ல” என்று தலையசைக்க அவளின் அருகில் அமர்ந்தவன் கைகளை பிடித்துக் கொண்டு
“முகத்தை பார்த்தாலே தெரியுது ஏதோ குழப்பத்துல இருக்கேனு” புருவம் சுருக்கி கேக்க
“என்னனு தெரியாலமாமா ஏதோ மாதிரி இருக்கு” என்று நெஞ்சில் கை வைக்க
அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டவன் “ஒண்ணுமில்ல டி ரொம்ப யோசிக்காத தலை பிரசவம்னாலே இப்படி இருக்கும்னு டாக்டர் சொன்னாங்க” என்று அவளின் நெற்றியில் முத்தம் வைக்க அவனது அணைப்பில் சற்று ஆறுதல் அடைந்தவள் வெளியே அவளை அழைக்கும் குரல் கேட்டு சத்யதேவ் அவளை அழைத்துக் கொண்டு வர மரகதம் செல்வியை மனையில் அமர்த்தினாள்.
பார்வதி பாட்டி மஞ்சள் பூசி பூத்தூவி ஆசிர்வதித்து வளையல் பூட்டி ஆரம்பித்து வைக்க சொந்த பந்தம், உற்றார் உறவினரென்று அனைவரையும் அழைத்திருந்தார் கனகாம்பாள்.
நிறைமாத பூரிப்பில் செல்வி ஜொலிக்க சத்யா அவளை கண்சிமிட்டாமல் பாத்திருக்க செல்வராஜும், முருகவேலும் அவனை ஓட்டிக் கொண்டிருக்க அழகாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சி வள்ளியின் வருகையால் முற்றாக மாறியது.
தம்பியின் மனைவிக்கு நடக்கும் நிகழ்ச்சி ஓடியாடி வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறிதுமில்லாது, சோபாவில் அமர்ந்து உறவினர்களுடன் கதையடித்துக் கொண்டிருந்தவள் பார்வை முழுவதும் செல்வியின் மேல் வெறுப்பாகவே விழ செல்வியை எப்படி கலவரப் படுத்தலாம் என்று யோசிக்கலானாள்.
வள்ளியை அழைத்து வளையல் அணிவிக்க சொல்ல மெதுவாகவே நடந்து வந்தவள் மஞ்சள் இடும் போது “ரெண்டு புள்ளய சுமக்குறேனு ரொம்ப சந்தோசப் படாத பிரசவத்துல நீ செத்து கூட போகலாம், இல்ல உன் பிள்ளைகள் சாகலாம்” என்று அபசகுனமாகவே பேச செல்வியின் மனம் இவ்வளவு நேரமிருந்த இதமான சூழல் மாறி பயத்தை ஏற்றிக் கொண்டது.
அடுத்து நடந்த சம்பவத்தால் செல்வி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாள்.