அத்தியாயம் 12

 

“என்ன பாட்டி உன் மருமக இன்னும் தூங்கி கிட்டு இருக்கா, சரியான தூங்கு மூஞ்சியா இருப்பா போலயே!” தாமரை காலை சாப்பாட்டை சாப்பிட்டவாறே கேக்க

“விடுடி தூங்கட்டும் பாவம்” என சொன்ன கனகாம்பாள் “நைட் சரியா தூங்கினாலோ என்னமோ!” என்று தனக்குள் முணுமுணுக்க

“சரியா  போச்சு என்ன மாமியார் நீ. இப்படி மருமகள  செல்லம் கொஞ்சுற, இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன் ஆமா.” தாமரை கோமளவள்ளி சொல்வது போல் சொல்லி பழிப்பு காட்டியவாறே முறைக்க

“நாலு பொண்ண பெத்தவடி நான் என் மருமகள இப்படி பாத்துக்கணும்னு எனக்கு தெரியும் வாய மூடிக் கிட்டு கொட்டிக்க” கனகாம்பாள் கீரையை சுத்தம் செய்தவாறே சொல்ல

“பேசாம  மாமவ நானே கட்டிக் கிட்டு இருக்கலாம் போலயே! நீ ரொம்ப நல்ல மாமியார்னு தெரியாம போச்சே” தாமரை சோகமாக சொல்ல

“வந்தேனா அடி பின்னிடுவேன் படுவா, தமிழ் முன்னாடி இப்படி பேசி வைக்காத” மூடியிருந்த அறைக் கதவை பார்த்தவாறே சொல்ல கழுத்தை நொடித்தாள் தாமரை.

 

மெதுவாக கண்விழித்த செல்வி ஜன்னலை பார்க்க அது மூடியிருந்தது மட்டுமல்லாது சூரிய ஒளியும் உள்ளே வராமல் இருக்க “இன்னும் விடியலயா” என்று இழுத்துப் போர்த்திக் கொண்டு கண்மூடியவளின் கண்ணுக்குள் சத்யதேவின் முகம் வந்து போக நேற்று இரவு நடந்தவைகளும் கொஞ்சம் கொஞ்சமாக நியாபகத்தில் வர அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க சத்யதேவை காணவில்லை. “மாமா அதுக்குள்ளே எந்திரிச்சிட்டாங்களா?” என யோசிக்க யாரோ கதவை திறக்கும் சத்தம் கேட்டு சத்யதேவ் என்று நினைத்தவள் அவன் முகம் பார்க்க வெக்கப் பட்டு தலை வரை போர்வையை போர்த்திக் கொண்டு தூங்குவது போல் பாவனை செய்தாள்.

 

அலாரம் அடிக்கவே சத்யதேவ் கண்விழித்தது தன் மேல் கையையும் காலையும் போட்டுக் கொண்டு தூங்கும் செல்வியின் முகத்தில்.  சத்தத்தில் அவள் முகம் சுருங்க அலாரத்தை நிறுத்தி கவலையாக அவளை பார்த்தவன், புதிதாய் கிடைத்த டெண்டர் வேலைகளை பார்க்க ஆடை தொழிற்சாலைக்கு கிளம்பிச் செல்லும் போது “அம்மா செல்வி தூங்குறா தூங்கட்டும் எழுப்பாதே” என்று விட்டு வெளியே போக

 

மகன் தயாராகி வந்ததும் “என்ன இவன் காலையிலேயே கிளம்பிட்டான் சாந்திமுகூர்த்தம் நடந்ததா, இல்லையா? இவன் முகத்தை பாத்து ஒன்னும் தெரிஞ்சிக்க முடியலையே!  இவன் கிட்ட எப்படி கேப்பது” என மனதுக்குள் கவலையாகவும், யோசனையிலும்  இருந்தவருக்கு சத்யா சொன்ன விஷயம் முகம் மலரச் செய்ய செல்வி தூங்கட்டும் என்று விட்டு விட்டார்.

 

தான் வெளியே கிளம்ப தயாராகி வந்ததிலிருந்து அன்னை முகத்தை முகத்தை பார்ப்பதும், ஏதோ கேக்க தடுமாறுவதும் போல் இருக்க “என்னம்மா?” என்று கேக்க வாயெடுத்தவன்

 

அன்னை “சாப்டுட்டு போப்பா” என்றதும் சாப்பாட்டு மேசையில் அமர்ந்ததும் “இனிமேல் உன் பொண்டாட்டி கையால  பரிமாற்ற சொல்லி சாப்பிடுப்பா” என்று சொன்னதும் தான் அன்னையி கவலை புரிந்தது. அவரை சங்கடத்தில் ஆழ்த்தாது, அவருக்கு புரியும் படி நாசூக்காக சொல்லியவன் கிளம்பிச் சென்றான்.

மகளை  மணமுடித்து கொடுத்தால் மட்டுமில்லை, மகனின் கல்யாண வாழ்க்கையும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே அன்னையின் ஆசை.

 

சத்யதேவின் வீட்டை சுற்றி பல அடுக்கு மாடி குடியிருப்புகள் இருப்பதாலும் அவனது அறை மேற்கை நோக்கி இருப்பதாலும் காலையில் அறை சற்று இருட்டாகவே இருக்கும். ‘செல்வி தூங்கட்டும்’ என்று சத்யா ஜன்னலை திறக்காது திரைசீலையையும் நன்றாக இழுத்து விட்டு சென்றிருக்க கண்விழித்து பார்த்த செல்விக்கு இன்னும் விடியாது போலவே இருந்தது.

 

காலை பத்து மணி தாண்டியும் தமிழ் வெளியில் வராது போகவே “சே கும்பகர்னிக்கு அக்கா மக போல தூங்குறாளே! ரோஜா வேற இல்ல.  இவ எந்திரிச்சு வந்தா பேச்சுத்துணை கிடைக்கும்னு பார்த்தா இப்படி தூங்குறா” என தாமரை சத்யதேவின் அறைக்க கதவை முறைத்து விட்டு  மொபைலில் கேம் விளையாடலாம் என கையில் எடுக்க அது பாட்டரி லோ என காட்டவே ஊரிலிருந்து கொண்டு வந்த பையிலிருந்து  சார்ஜரை எடுக்க பாட்டியின் அறையினுள் சென்றவளுக்கு செல்வியின் பயணப்பை இருக்கவே புருவம் சுருக்கி யோசித்தவள் சிரிக்க ஆரம்பித்தாள்.

 

“பேக் இங்க இருக்கு ஒரு வேல மாத்து துணி இல்லாம குளிச்சிட்டு பேந்த பேந்த உக்காந்து இருக்கிறாளா?” என கற்பனை செய்து பார்த்து சிரித்தவள் “மாமா வேற இல்ல புது இடம் புள்ள பயந்துட்டா போலயே! இது சரியில்லையே! என் பங்குக்கும் பயம் காட்டிட வேண்டியது தான்” என பாட்டி என்ன செய்றாங்க  என நோட்டம் விட்டு விட்டு அவர் சமையலில் பிஸியாகவே மெதுவாக சத்யதேவின் அறைக்கு கதவை திறந்தாள் தாமரை.

 

தலை வரை போர்வையால் மூடியிருந்தவளை பார்த்து “ஸ்லீப்பிங் பியூட்டி தோற்கும் போல இப்படி தூங்குறா” என மெதுவாக செல்வியின் போர்வையை இழுக்க சத்யதேவ் தான் இழுப்பதாக நினைத்து செல்வி அதை இறுக்கிப் பிடிக்க, மாத்துத் துணி இல்லாம போர்வைக்குள் இருப்பதாக எண்ணிய தாமரை என்ன செய்யலாம் என யோசிக்க

 

“என்ன ஒரு தடவ இழுத்துட்டு விட்டுட்டாங்க” என செல்வி மெதுவாக போர்வையை நகர்த்தி பார்க்க அங்கே தாமரை ஒரு விரலால் நெற்றியை தட்டியவாறு இருக்க எழுந்து அமர்ந்து “அப்பாடா” என இவ்வளவு நேரம் இருந்த பதற்றம் நீங்கி மூச்சுவிட

 

“ஹேய் தூங்குற மாதிரி நடிக்கிறியா” என  போர்வையை இழுக்க போர்வையை விடாது இறுக்கிப் பிடித்தாள் செல்வி.

 

ஏனெனில் இரவு மாற்றுத் துணி இல்லாது சத்யதேவின் காலர் இல்லாத டி ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தாள் அது தொடை வரை இருக்க தூங்கியதில் அதன் நிலை என்னவோ? போர்வையை விட்டால் கால்கள் அப்பட்டமாக தெரியும் என்பதால் செல்வி தாமரையுடன் போராட கதவை திறந்துக் கொண்டு வந்தார் கனகாம்பாள்.

 

“நெனச்சேன் நீ இங்க தான் இருப்பான்னு போ போய் அரிசியா கழுவி அடுப்புல வை” மருமகள் இருக்கும் இக்கட்டான நிலையை அறிந்து தாமரையை அதட்டி வெளியே அனுப்பியவர் “தமிழு நீ போய் குளிச்சிட்டுவா மணி பதினொண்ணாக போகுது”

 

” என்னது  பதினொன்னா” என தன் நிலைமையை மறந்து கட்டிலிலிருந்து துள்ளிக் குதித்து இறங்க ,அவள் அணிந்திருந்த சத்யதேவ்வின் டி ஷார்ட் அவளுக்கு தொள  தொள வென இருக்க அது இடது பக்க தோள்பட்டையிலிருந்து தொங்கிக்கொண்டிருக்க  தலையில் கைவைத்த கனகாம்பாள் “கையை தூக்கிடாத” என்று போர்வையை அவள் புறம் வீசி விட்டு இன் முகத்துடனேவெளியே சென்று விட்டார்.

 

அவர் போர்வையை வீசவும் அதை பிடித்தவள் அப்பொழுது தான் தன் நிலை உணர்ந்து குனிந்து பார்த்தவள் போர்வையாலையே முகத்தி மூடி கட்டிலில் பாய்ந்து தலையணையில் பல தடவை தலையை மோதியவாறே “ஐயோ செல்வி உனக்கு அறிவே இல்லடி இப்படியா நடந்துக்க கொள்வ அத்த என்ன நினச்சங்களோ தெரியலையே! பதினோரு மணி வர தூங்கி இருக்க அம்மாச்சி இருந்தா கிள்ளியே எழுப்பி இருப்பங்களே! உனக்கு அவங்க தான் சரி, ஐயோ இந்த மாமா வேற எழுப்பாம போய்ட்டாங்களே! ” என மனம் அவன் புறம் சாய மீண்டும் இரவு நடந்தவைகள் நியாபகத்தில் வந்து வெக்கம் பிடுங்கித்த தின்ன “நல்ல வேல மாமா இல்ல இருந்தா அவங்க முகத்த எப்படி பாப்பேன். கல்யாணம் வாழ்க்கைல  இப்படியெல்லாம் இருக்கா? அப்போ எனக்கு பாப்பா  பொறுக்குமா?” சந்தோசமாக எழுந்து அமர்ந்தவள்.

 

தலையை தட்டிக் கொண்டு “அம்மாச்சி சொன்னது போல அத்த ரொம்ப நல்லவங்க தான் இல்லனா இவ்வளவு நேரமாய் தூங்கினத தெரிஞ்சிருந்தும் திட்டாம போறாங்க” என மீண்டும் கனகாம்பாளிடம் மனம் தாவ மீண்டும் கையை மடித்து நெற்றியில் அடித்துக் கொண்டவள் “முதல்ல இத மாத்தணும்” என்று டி ஷர்ட்டை இழுத்து விட்டவள் ‘ஐயோ மாத்து துணி இல்லாம இப்படி குளிக்கிறது” என முழிக்க

 

“தமிழ் உன் பை கதவுக்கு கிட்ட தான் இருக்கு எடுத்துக்க” என்று கனகாம்பாள் குரல் கொடுக்கவே  மெதுவாக கதவை திறந்து பையை இழுத்து எடுத்தவள் மாற்றுத் துணியோடு குளிக்கச் சென்றாள்.

 

இது தான் செல்வி எதையும் அதிகம் யோசிக்காதவள். தம்பிகளும், செல்லப் பிராணிகளும் உலகம் என்று வாழ்ந்துக் கொண்டிருந்தவளின் வாழ்க்கையில் சத்யா நுழைந்ததும், “உன்ன எவன் கையிலாவது பிடிச்சு கொடுத்ததுக்கு அப்பொறம் நான் நிம்மதியா கண்ண மூடுவேன்” என பார்வதி பாட்டி அடிக்ககடி  சொன்னதாலயோ என்னவோ அவனை இலகுவாக ஏற்றுக்கொண்டாள்.

 

சத்யாவை கண்ட நொடிப் பொழுதிலிருந்தே மனதுக்கு பிடித்திருந்தாலும் அது காதல் என்று உணரும் மனநிலையோ, அந்த வயதுப் பெண்களுக்குள்ள பக்குவமோ, ஆசையோ, எண்ணங்களோ எதுவும் இல்லை. சத்யா என் கணவன், அவன் மனம் நோகாமல், அவன் சொல்படி  நடந்துக்கணும்,  மொத்தத்தில் கணவன் தான் எல்லாமே என்று அவள் மனதில் பார்வதி பாட்டி பதிய வைத்திருக்க கல்யாண வாழ்க்கையை புரிந்துக் கொண்டாள்.

 

காலையில் எழுந்ததிலிருந்தே பதற்றமாக இருந்த கோமளவள்ளிக்கு சத்யாவின் சாந்திமுகூர்த்தம் நடந்தா? இல்லையா? யாரிடம் கேட்டுது தெரிந்துக் கொள்வது. குழப்பத்தின் உச்சியில் இருந்தவளோ! அடுத்து செய்ய வேண்டிய திட்டத்தையும் மறந்தவளாக நடைபோட செல்வராஜ் ஆடை தொழிற்சாலைக்கு  கிளம்ப தயாராகி வரவே “இதை இப்படி மறந்தேன்” என தலையில் தட்டிக் கொண்டவள் அவனுக்கு சாப்பாட்டை பறி மாறி இன் முகத்துடன் அனுப்பி வைத்தவள் அவன் சென்றடையும் நேரத்தை கணித்து அவனுக்கு அழைப்பு விடுக்க காத்திருந்தாள்.

 

இங்கே சத்யாவின் மனசாட்சியே  “என்ன காரியம் பண்ணி வச்சிருக்க  அவ தம்பிகளை இங்க கூட்டிட்டு வந்து செல்வியை புரிந்துக் கொண்டு வாழ்க்கையை தொடங்கலாம். பெரிய இவன் மாதிரி தீர்மானிச்ச, அவ கிட்ட பேசிகிட்டு இருக்கு தானே முடிவு பண்ண இப்படி நடந்துக்கிட்ட” என கேள்வி எழுப்ப

 

“வீட்ட வித்து, அப்பாவின் கடைய வித்து எல்லா கடனையும் அடைச்சு, படிக்கும் காலத்துல மனச அலைய விடாம, வேலையும் பார்த்து, அப்பா நண்பர் கிட்ட உதவி கேட்டு கார்மண்ட்ட ஆரம்பிச்சு இனி எந்த பிரச்சினையுமில்ல என்று இருக்கும் போது முல்லை மல்லி கல்யாணம், கார்மண்ட்கு வாங்கிய கடன் என்று மேல வரவே முடியல, இதுல நா எங்க பொண்ணுங்கள பாக்க?  என்ன பண்ண அவள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அவ பக்கத்துல இருந்தாலே நான் நானாக இல்ல, இப்போ என்ன அவ என் பொண்டாடி தானே! யார் கூடயோ இருந்த மாதிரி சொல்லுற” தன் மேலே கோவம் வர கையில் இருந்த பேனாவை வீசினான்.

 

“என்ன மாப்புள ஆச்சு வேலையில் கான்சன்ட்ரேட் இல்லாம ஏதோ யோசனையிலேயே இருக்க? எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் சமாளிக்கலாம்னு எனக்கே தைரியம் சொல்லுறவன் நீ என்னடா ஆச்சு”

 

கல்யாணம் ஆகியும் பொண்டாட்டியுடன் சந்தோசமாக இருக்க முடியாமல் வேலை இழுத்துக் கொண்டதில் இயல்பாய் மீறி நடந்துக்க கொள்கிறானோ!  என செல்வராஜுக்கு கவலையை தர

 

“செல்வியோட தம்பிங்கள இங்க ஸ்கூல்ல சேர்க்கணும். நல்ல ஸ்கூல்ல சேர்க்கணும்னா கொஞ்சம் பணம் செலவழிக்க வேண்டி இருக்கு, வீடு வேற பத்தாது வேற வீடு மாறனும், அவ புள்ளைங்கள வேற கூட்டிட்டுவரனும்” என சத்யா புன்னகைக்க

 

செல்வியின் பிராணிகளை பற்றியும், அவைகளின் பெயர்களையும் ரோஜா சொல்லியிருந்ததால் சட்டென்று புரிந்துக் கொண்ட செல்வராஜ்

 

“இது தான் தல போற விஷயமா? இதையும் சேர்த்துக்க உன் கல்யாணம் அவசரமா நடந்தது, ஒரு ரிசப்ஷன் வைக்கணும், ரெஜிஸ்டர் பண்ணனும், ஹனிமூன் போகனும் ” என கண்சிமிட்ட  

 

“ரிசப்ஷன் எல்லாம் வேணாம் மாமா இங்க சொந்தம்னு அக்கா ரெண்டு பேரோட குடும்பம் தான். வீடு மாறும் போது சின்னதா செலிப்ரேட் பண்ணலாம். ரெஜிஸ்டர் விசயத்த நீங்க பாத்துக்கோங்க, இருக்குற வேலையில ஹனிமூன் ஒண்ணுதான் குறை. முதலில் வேலைய பார்த்து பிரச்சினையை முடிக்கலாம். அப்பொறம் தான் மத்ததெல்லாம்” என அடுத்து நடக்க வேண்டியவைகளை படபடவென தீர்மானித்து சொல்ல.

 

வேறு வழியில்லாததால் செல்வராஜும் சரியென தலையாட்டி வைக்க கோமளவள்ளியிடமிருந்து அழைப்பு வரவே அதை ஏற்றான்.

 

“என்னங்க ஆபீஸ் போய்ட்டீங்களா?  சத்யாவேற இன்னைக்கு வரமாட்டான். உங்களுக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக்காது. தனியா ஒன்னும் சாப்பிடாதீங்க,  மத்தியானத்துக்கு சாப்பாடு நானே எடுத்துட்டு வரேன். சேர்ந்தே சாப்பிடலாம்” செல்வராஜின் பதிலுக்காக ஆர்வமாக காதை கூர்மையாக்கினாள் கோமளவள்ளி.

 

“இல்ல வள்ளி சத்யா ஆபீஸ்ல தான் இருக்கான் நீ ஒன்னும் அலையாத, எப்பயும் போல அத்த சாப்பாடு செஞ்சி வச்சிருப்பாங்க, ஆபீஸ் பக்கம் தானே போய் சாப்புடுறோம்” மனைவின் கரிசனத்தில் என்றும் போல் உள்ளம் காதலில் கரைய முகம் மலர  செல்வராஜ் கூறினான்.

 

“என்ன மாமா இந்த வயசுலயும்  ஒரே லவ்ஸ் தான்” என்று சத்யா கிண்டலடிக்க

 

” சின்ன பசங்க இதெல்லாம் கண்டுக்க கூடாது.  நிறைய வேல இருக்கு வா வேலைய பார்க்கலாம்” அதன் பின் வேலை அவர்களை இழுத்துக் கொண்டது.

******

சத்யா ஆபீசில் இருப்பதை அறிந்து தனது திட்டம் வெற்றியடைந்ததை எண்ணி இறுமாப்பில் சத்தமாக சிரித்தாள். அன்னையின் பேய் சிரிப்பில் கலவரமடைந்த ரோஜா  வந்து அறை கதவை தட்டவும் கதவை திறந்தவள்

“அப்பொறம் சொல்லுடி என்ன ஆச்சு” என போனில் பேசி சிரித்ததாக பாவனை செய்து விட்டு

“தாத்தாவும், பாட்டியும் திருப்பதி போய் இன்னைக்கு தான் வாரங்க வந்த உடனே சத்யா கல்யாண விசயத்த சொல்லி அவங்கள அங்க கிளப்பிடாத ரெஸ்ட் எடுக்கட்டும்” தான் செல்வியை சந்திக்கும் போது அவர்களும் அங்கு இருப்பதை விரும்பாதவளாக உத்தரவிட்டாள்.  தன்னுடைய திட்டத்தை அமுல் படுத்த யாரும் இருக்க கூடாது என்றெண்ணியவள் வெளியே கிளம்பிச் சென்றாள்.

தனது ஹை சொசைட்டி நண்பர்கள் மூலம் சந்தித்திருந்த மகப்பேறு மருத்துவர் ஒருவரை சந்தித்தவள் தனக்கு மாதவிடாய் ஒரு சீராக வராது இருப்பதாகவும், தனது கணவன் செல்வராஜ் தாம்பத்தியத்தில் அதிக ஈடு பாத்து இருப்பதாகவும், இன்னும் சில விடயங்களை சொல்லியவள் தனக்கு தேவையானதை பெற்றுக் கொண்டு வெளியே வந்தாள்.

ஆணவத்தில் “செல்வி…. வரேண்டி, உன்ன என் தம்பி வாழ்க்கையிலிருந்து எப்படி தொரத்துறேன்னு மட்டும் பாரு, உன்ன ஓட ஓட விரட்டுறேண்டீ, இல்ல இல்ல ஊருக்கே விரட்டுறேண்டீ, நீ வாழாவெட்டி தான் ஐயோ ஐயோ” என சிரிக்க ஆரம்பித்தாள்.

 

போகும் ஆட்டோ ரிக்சா ஒன்றை நிறுத்தியவள் அதில் ஏறி அமர்ந்து  அன்னையின் வீட்டுக்கு போகும் வழியை சொல்லி பையில் பத்திரப் படுத்தியதை மீண்டும் ஒரு தடவை சரி பார்த்துக் கொண்டு செல்வியிடம் எப்படி பேச வேண்டும் என்று ஒத்திகை பாக்கலானாள்.