Advertisement

                             அத்தியாயம் 1

ஹேய் ஜிங்குனமணி ஜிங்குனமணி

சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி

ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி

போல மின்னும் மந்திர மேனி

 

இது என்ன ஒடம்பா

விடகோழி குழம்பா

புரியாம நான் பாக்குறேன்

 

சமைச்சது இல்லை

சமைஞ்சது தான்டா

உனக்காக இலை போடுறேன்

 

ரிக்டர் வாச்சு பார்த்தா

நீ பத்து எர்த் க்விக்கு

ஒட்டுமொத்தம் உடலாடுதே…

 

வெட்டி வச்சு போனா

ஒரு வாட்டர்மெலன் கேக்கு

பக்கம் வந்தா குளிர் ஆகுமே ஹே…

கேட் டு ஹதர் வேனும் நம்ம கெட்டுபோக

 

அம்மாங்கோ அம்மாங்கோ

அம்மாங்கோ அம்மாங்கோ

அம்மாங்கோ அம்மாங்கோ

 

ஜிங்குனமணி ஜிங்குனமணி

சிரிச்சுபுட்டா நெஞ்சுள ஆணி

ஹேய் வெண்கல கின்னி வெண்கல கின்னி

போல மின்னும் மந்திர மேனி

 

அந்தத் தெருவில் உள்ள டீக்கடையில் வானொலி பாட குமரேசனும் வினோத்தும் ஒரு சிகரெட்டை பற்றவைத்துக் கொண்டு மாறி மாறி புகைத்துக் கொண்டிருக்க

“குமரேசா யாருப்பா இந்த தம்பி ஊருக்கு புதுசா இருக்கான்” ஒரு பெரியவர்

“என் சிநேகிதன் தான்” அவரின் கேள்விக்கு குறுகிய பதிலை சொல்ல

அவரோ “திருவிழா வருதில்ல யார் யாரோ ஊருக்குள்ள வராங்க போறாங்க என்றவாறே மெதுவாக நடக்க ஆரம்பித்தார்.

 

“என்ன சிவாண்ணா இந்த வாடியும் ஜெய்ச்சிடீங்க போல”

“அதெல்லாம் ரத்தத்துல கலந்தது. என்ன புள்ள தமிழு  இருட்டிட்டு வார நேரத்துல அந்த பக்கம் போற ” அக்கறையாய் சிவா கேக்க

“அத ஏன் கேக்குற சிவாண்ணா இந்த செங்கொடுவேரி ,சம்பகம்,செருவிளை மூனு பெரும் எங்க போய்ட்டாங்கனு தெரியல தேடிகிட்டு இருக்கேன்.

“எங்க போய்ட போறாங்க கருப்பன் கூட எங்கயாச்சும் இருக்கும் நீ வீட்டுக்கு போ நா புடிச்சிட்டு வரேன்”

“பாத்தண்ணே செங்கொடுவேரி கோவக்காரி”

“அவ கோவமெல்லாம் என் கிட்ட செல்லாது நீ சீக்கிரமா வீட்டுக்கு போ”

“சரிண்ணே யார் கைலேயும் குடுத்து விடாம வீட்டுக்கு வா சாப்டுட்டு போலாம்”

“சரிம்மா சரிம்மா” சிவா கருப்பனையும் தமிழ் செல்வியின் கோழிகளையும்  தேடிச்செல்ல தமிழ் வீட்டை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

 

“டேய் குமரேசா யாரடா அந்த பொண்ணு” வாயில் சிகரெட்டு புகையை ஊதித்தள்ளியவாறே வினோத் கேக்க

“எந்த புள்ள”

“அதோ தாவணியில் போறாளே செம நாட்டு கட்ட”

“ஓஹ் தமிழ சொல்றியா அது சின்ன புள்ளடா பதினெட்டு கூட ஆகல” வினோத் கையிலிருந்த சிகரெட்டை வாங்கியவாறே குமரேசன் கூற

“என்னது பதினெட்டு கூட ஆகலையா பார்க்க இருப்பது மூனு, நாலு மாதிரி இருக்கா”

“சின்ன வயசுலஅவங்க அப்பன் போய்ட்டான் அன்னைக்கிருந்து   இருந்து குடும்பத்துக்காக உழைக்கிற புள்ளடா அதனால அப்படி இருக்கும்”

“வயசுக்கு வந்துட்டாளா? அது போதும் செம்…மயா இருக்கா அவள எப்படியா…..வது” கண்களில் ஆசை மின்ன அவள் இடையசைத்து போவதை வெறியாக பார்த்திருந்தான் வினோத்.

அவன் சொல்ல சொல்ல அவளை பார்த்த குமரேசனுக்கோ ‘இவ்வளவு நாளும் நம்ம கண்ணுக்கு தெரியலையே வேலி இல்லாத பயிறு மேஞ்சிட வேண்டியதுதான்’ என மனசுக்குள் திட்டம் தீட்ட ஆரம்பித்தான்.

 

உண்மைதான் தமிழ்செல்வி பதினேழேவயதான பருவமங்கை உயரம் அசாதாரணமாக இருப்பதனாலோ! வயதுக்கு மீறிய உழைப்பாலோ! அவள் வயதை விட முதிர்ச்சியடைந்தவளாக காணப்பட்டாள். பார்ப்பதற்கு மட்டுமல்ல அவளின் வேலைகளும் வயதுக்கு மீறியதாகவே இருந்தது. வெயிலில் அதிக நேரம் வேலை செய்வதால் மாநிறத்துக்கும் சற்று குறைவான நிறம்தான். பாலர் போய் திருத்தாத வில் போன்ற புருவமும், பெரிய கண்களும்,அழகிய புன்னகையையும் தன்வசம் கொண்ட பேரழகி.

 

தமிழின் அன்னை சித்ரா வீட்டை எதிர்த்து தனது தாய்மாமனை மணந்தவர். தமிழ்செல்விக்கு ஐந்து வயதிருக்கும் போதே பாம்புக்கடித்து தந்தை இறந்துவிட சித்ராவின் உலகமும் சூனியமாகிப் போனது பித்துபிடித்தவர் போலான சித்ரா குழந்தைகளை நினைக்காது தற்கொலை பண்ணிக்கொள்ள தமிழும் இரண்டு தம்பிகளும் பாட்டிவசமானார்கள். சித்திராவின் அன்னை பார்வதிப் பாட்டி கோவத்தை விட்டு விட்டு பேத்தி பேரன்களுக்கு அனுசரணையாக இருக்க  இரண்டு தம்பியையும் நன்றாக படிக்க வைக்கவென கிடைக்கும் எல்லா வேலைகளையும் நேரங் காலம் பார்க்காது செய்பவள். கடுமையான உழைப்பாளியும் கூட. அத்தோடு வீட்டில கோழி, ஆடு, பசுமாடு,வாத்து,நாய் உற்பட இன்னும் மிருகங்களை பால்,முட்டை காக மட்டுமின்றி ஆசைக்காகவும் வளர்க்கிறாள்.

 

” பீப் பீப் பீப் பீப்”

“யாருள்ள அது கருப்பன பாத்து ஹார்ன் அடிக்கிறது” கருப்பன் பாதையை மறைத்தவாறு இருக்க வண்டியை ஓட்டிவந்தவன் ஹார்ன் அடிக்கவும் கடுப்பான சிவா காருக்கு அருகில் வர உள்ளே ஓட்டுனர் இருக்கையில் ஒரு யுவதி பக்கத்திலும் அவளின் வயதை ஒத்த இன்னொரு யுவதி. காரில் இருந்து இறங்கினார் கனகாம்பரம் அம்மா.

“யாரு சிவா வா? எப்படிப்பா இருக்க? அப்பத்தா நல்லா இருக்காங்களா?”

“இருக்கேன். அப்பத்தா நல்லா இருக்காங்க.  ரொம்ப நாள்கழிச்சு ஊருக்கு வாரிங்க  யார் இவங்க? ஓட்டுனர் இருக்கையை காட்டியவாறே

“அவ ரோஜா கோமளவள்ளி பொண்ணு,  இவ தாமரை மரகதவள்ளி பொண்ணு, சத்யா கல்யாணம் தள்ளி போய் கிட்டே இருக்கு அதான் குலசாமிக்கு ஒரு நேர்ச்சையையும் வச்சிட்டு திருவிழா முடிஞ்சே ஊருக்கு போலாம்னு வந்தோம்”

“சத்யா சின்ன வயசுல ஊருக்கு வந்தது அப்பொறம் இந்த பக்கமே வரல” சிவா பால்ய சிநேகிதனின் நியாபகத்தில் சொல்ல

“பாரின் போய் இருக்கான். நா வீட்டுல இல்லனா அவன் இருக்க மாட்டான். ஓடி வந்துடுவான்” மகனின் நினைவில் கனகாம்பரம் அம்மா சொல்ல

“சரிம்மா பாத்து பத்திரமா போங்க ரொம்ப இருட்டிருச்சு” சிவா நடையை கட்ட ரோஜா வண்டியை எடுத்தாள்.

 

“யாரு அப்பத்தா அது? சரியான முரட்டு பீஸ்” ரோஜா சிவாவை ஜொள்ள

“அது இது னு சொல்லாம அண்ணான்னு சொல்லு ஊருல இருக்கும் வரைக்கும் உங்க வால சுருட்டி,  நாக்கையும் அடக்கி வச்சிடுங்கடீ” கனகாம்பாள் அம்மா இருவரையும் முறைத்தவாறே

“ஆமா ஆமா எல்லா வயசு பசங்களையும் அண்ணா னு சொல்ல வேண்டியது அப்பொறம் கட்டிக்க பையன தேடி பாரின் தான் போகணும்” ரோஜா கடுப்பாய் மொழிய தாமரை கிழுக்கிச் சிரித்தாள்.

“இவ பெரிய எலிசபெத்து மகாராணி பேத்தி பாரின் வெள்ளக்காரதொர  மாப்பிள்ளையா வரனுமோ? ஊருல இருக்குற கிழவனுக்கு உன்ன கட்டி வச்சிடுவேன்” கனகாம்பாள் அம்மா ரோஜாவை வார

“ஏன் பாட்டி நீ சைட் அடிச்சவங்கல நாங்க கட்டிக்கிட்டா உன் மனசு தாங்குமா?”  தாமரை   தலையை திருப்பி பின் இருக்கையில் இருந்த பாட்டியை பார்த்து கண் சிமிட்ட

“இப்போ தானே சொன்னே நாக்க அடக்க சொல்லி”

“அது அப்போ பாட்டி” என இருவரும் ஹை பை கொடுத்துக் கொள்ள

“அடங்க மாட்டிங்களே கோமளவள்ளி தான் டி உங்கள அடக்க சரியான ஆளு”

“பாட்டீ” என்றவாறே ரோஜா பிரேக் பிடிக்க முன்னாடி வந்து, வந்த வேகத்துக்கே கனகாம்பாள் பின்னாடி செல்ல

“என்னடி எதுக்கு கத்தின”

“ஹிஹிஹி கோழி குறுக்க பாஞ்சிருச்சு” என்றால் ரோஜா பல்லை கடித்தவாறே பின்ன அவ அம்மாவை நியாபகப் படுத்தியதால் பிரேக் போட்டேனு சொல்ல முடியுமா?

“பாத்து மெதுவா போடி திருவிழாக்கு நேந்து விட்ட கோழினா பஞ்சாயத்துல பதில் சொல்ல வேண்டி இருக்கும்” கனகாம்பாள் அம்மா ஊரின் கட்டுப்பாட்டை பற்றி சொல்ல

“பஞ்சாயத்துல செம்பு வச்சிக்கிட்டு, பெரிய மீசை வச்ச நாட்டாமை எல்லாம் இருப்பாரா? தாமரை வெகுளியாய் கேக்க அவளின் தலையில் கொட்டியவர்

“நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன் நீ என்ன கேக்குற ஆள் மட்டும் பனமரம் மாதிரி வளந்துருக்கு அறிவு கோழி முட்ட அளவு கூட இல்ல”

அவரை முறைத்த தாமரை அமைதியாக, அவளை பார்த்து ரோஜா கிண்டலாக சிரித்தாள்.

 

கனகாம்பாள் சத்தியதேவ் இன் அன்பான அம்மா கணவர் முத்துக்குமார் மாரடைப்பால் இறந்து விட ஐந்து பிள்ளைகளுக்காகவும் தன்னை தேற்றி குழந்தைகளை வளர்த்தவர். மூத்தவள் கோமளவள்ளி அடுத்து ஒரு வருடத்திலேயே மரகதவள்ளி பிறந்திட அதிக இரத்தப் போக்கால் உடல் பலவீனமடைய  முற்றாக தேறி வந்தவர் கோமளவள்ளிக்கு ஏழு வயதாகும் போது சத்யதேவை பெற்றெடுக்க அவனுக்கு ஐந்து வயதாகும் போது இரட்டைகளான மல்லிகை, முல்லை பிறந்தனர்.

 

கோமளவள்ளி தனது தாய்மாமன் மகன் செல்வராஜை மணந்து ஒரே மகளாக ரோஜா உடன் தாய் வீட்டில் வசிக்க  மரகதவள்ளி அரிசி ஆலை ஒன்றை சொந்தமாக வைத்திருந்த முருகவேலை மணந்து தாமரை, பூவரசு என இரண்டு பிள்ளைகளை பெற்று கணவனின் வீட்டில் வாழ்கிறார்.

மல்லிகையும் முல்லையும் அண்ணன், தம்பிகளான அருண், வருணை மனம் புரிந்து கோயம்புத்தூரில் இருக்க இவர்கள் சென்னையில் இருக்கிறார்கள்.

 

சத்யாவுக்கு வயது முப்பத்திமூனு. ஆறடியில் அய்யனார் சிலைபோல் கம்பீரமான வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர். புன்னகையை பலவருடமாக தொலைத்து அப்பா தொழிலுக்காக பட்ட கடனையும் அக்கா தங்கைகளின் கல்யாணத்துக்காக வாங்கிய கடன்களையும் கட்டி முடிக்கவென்றே அயராது உழைப்பவன். அக்கா கோமளவள்ளி தனது மகளை கட்டிவைக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ள இருபத்தி ஒன்றே வயதான ஆனா  ரோஜாவை மணக்க அவன் தயாராக இல்லை. சொத்து கைவிட்டு போய்டும் என்று கோமளவள்ளி சத்யாவுக்கு வரும் வரன்களை வீடுதேடி வரவிடாமல் செய்வதும் மீறி வந்தவைகளை உடைப்பதை அறியாத கனகாம்பாள் குலதெய்வத்துக்கு நேர்ச்சை வைக்கவென சொந்த ஊருக்கு ரோஜா, தாமரையுடன் வந்துவிட்டார்.

 

இருபத்தி ஒரு வயதான ரோஜாவை ஏற்காத சத்யதேவ் தமிழ்செல்வியை ஏற்பானா?

எப்படி அவர்கள் திருமணம் நடக்கப் போகிறது?

 

Advertisement