Advertisement

                                                   அத்தியாயம் 2

சென்னை விமான நிலையம் அதிகாலைப்பொழுது செல்வராஜ் காரோடு காத்திருக்க தனது பயனாய் பொதிகளுடன் வந்து சேர்ந்தான் சத்யதேவ்.

“என்ன மாமா எப்படி இருக்கீங்க? ஊருல என்ன விசேஷம்? என செல்வராஜை வம்பிழுக்க

“ஏன்டா  ஒரு வாரம் தானே ஆஸ்திரேலியா போய் என்னமோ ஏழு வருசத்துக்கு போன மாதிரி பேசுற? அதே சென்னைதான்டா வெப்பநிலை மாத்திரம் ஒரு டிகிரி கூடியிருக்கு இந்த ஒரு வாரத்துல சென்னையில பனியா பொழிய போகுது?” செல்வராஜ் அதிகாலையில் எழுந்து அவனுக்காக வண்டி ஓட்டிவந்த கடுப்பில் பேச அவனோ அவரை புன்னைகை முகமாக பார்த்திருந்தான். சத்தியாவின் பயணப்பொதிகளை வண்டியில் ஏற்றியவாறே செல்வராஜ் அவர் பாட்டுக்கு பேச சத்யதேவின் குரல் வராமல் போகவே

 “என்ன மாப்புள போன வேல நடந்துச்சா இல்லையா இந்த டீல் கன்போர்ம் ஆனாதான் முல்லை, மல்லிகை கல்யாணத்துக்கு வாங்கிய கடனை அடைக்க முடியும்.

வண்டியின்  முன் இருக்கையில் ஏறியவாறே வண்டிய எடுங்க மாமா போய் கிட்டே பேசுவோம்”  செல்வராஜ் ஏறி அமர்ந்தது வண்டியை எடுக்க

“டீல் எல்லாம் ஓகே மாமா ஆறு மாசத்துல பண்ணி குடுக்கணும், சொன்ன தேதியில் சாமான் டிலிவரி ஆகலேனா, திருப்பி அனுப்பிடுவாங்க அதோட ப்ராடக்ட் குவாலிட்டி ரொம்ப முக்கியம்”

” பாத்துக்கலாம் மாப்புள நாம மெடீரியல் வாங்கும் இடம் தரமான துணி தான் ஆறு மாசத்துல குடுக்கணும்  என்றால் இன்னும் ரெண்டு இடத்துல பாக்கணும் காசு உடனே கொடுத்தா எங்க வேணாலும் வாங்கலாம் நாம் இப்போ இருக்குற நிலைமைக்கு கடனாதான் வாங்க முடியும், வீட்டு பொம்பளைங்க கிட்ட பெருசா தங்கம்னு ஒண்ணுமில்ல ஏதாச்சும் செய்வோம் கவல படாத”

 

சத்யதேவ் ஒரு சிறிய  ஆடை தொழிற்சாலை நடத்தி வரும் இளம் தொழில் அதிபன். பள்ளி  படிக்கும் போது தனது பதினொரு வயதில் தந்தை மாரடைப்பால் இறந்து போக கோமளவள்ளிக்கு செல்வராஜுடன் திருமணம் நடந்து சில நாட்களே ஆகியிருக்க தொழிலுக்காக அப்பா வாங்கிய கடனை அடைக்கவென தந்தை ஆசை  ஆசையாக கட்டிய பங்களாவும் அப்பாவின் கம்பெனியும் விற்கப்பட தாய்மானனும் செல்வராஜின் தந்தையுமான சத்யமூர்த்தியின்  வீட்டுக்கு அனைவரும் குடி வர செல்வராஜின் தாயார் அவர்களை அன்பாக வரவேற்றார்.  

சத்யமூர்த்தியும் அவர் மனைவி குறிஞ்சியும் பள்ளி ஆசிரியர்களாக பணிபுரிய சேவராஜும் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்த்து குடும்பத்தை தாங்க காலேஜ் ஐ முடித்த கையேடு அப்பாவின் நண்பருதவியுடன்  ஆடை தொழிற்சாலையை சிறிதாக ஆரம்பித்து வளர்ந்து வரும் வேலை முல்லை மலர் திருமணத்துக்காக ஆடை தொழிற்சாலை ஈடு வைக்கப் பட இன்னும் அதை கட்டி முடிக்கவில்லை. தந்தை கம்பனிக்காக வாங்கிய கடனென்று மாதம் மாதம் ஒரு தொகையை இன்னும் செலுத்தி வர கல்யாணத்துக்கு வாங்கிய கடனும் பாக்கி இருக்க அதன் பின் முல்லை, மல்லிகை குழந்தைகளின் பெயர் வைத்தல், காத்து குத்து என பல சடங்குகள், அவன் தொழிலும் கடனிலேயே ஓட கல்யாணக் கனவு கானல் நீர் ஆனது.

வீட்டுப் பெண்களிடம் கடன் வாங்கியதை சொல்லாமல் விட்டதால் சத்யாவின் உழைப்பும், விடாமுயற்சியினாலும் அவனது தொழில் சிறப்பாக நடக்க அவன் தொழில் கடனில் ஓடுவதை அறியாத கோமளவள்ளி ரோஜாவை சத்யாவுக்கு கட்டிவைக்க கங்கணம் கட்ட, உண்மைதெரிந்தால் என்ன செய்வாளோ!

 

“ஆத்தா தமிழு  எந்திரிச்சிட்டியா?”

“என்ன அம்மாச்சி காலையிலேயே எந்திரிச்சு நீ என்ன பண்ண போற? ராவைக்கும் தூங்காம அடிக்கடி எந்திரிச்சு உக்காந்துகிற இப்பயாச்சும் கொஞ்சம் தூங்கலாம்ல?”

“நா என்னடி பண்ண தூக்கம் வரமாட்டேங்குது. சின்ன சத்தம் கேட்டாலும் என்ன ஏதோனு மனசு கெடந்து தவிக்குது. வயசகிச்சில்ல”

“அம்மா செத்ததுல இருந்தே நீ இப்படி தான் இருக்கீனு  பக்கத்து வீட்டு பங்கஜம் அத்த சொன்னாங்க. ஏன் பாட்டி அப்பாக்கு அம்மாவை ஏன் கட்டிவைக்க மாட்டேன்னு ஒத்த கால்ல நின்னீங்க” கோழிகளையும், வாத்துகளையும் திறந்து விட்டு மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்தவாறே தமிழ் கேள்வி எழுப்ப

 

“உன் அப்பா ஜாதகத்துல அல்பாயுசுல போய்டுவான்னு இருந்துச்சு அதான் வேணாம்னு சொன்னேன் அந்த கிறுக்கு புடிச்சவ கேட்டாத்தானே! ஒங்கப்பா  ஒதிங்கிப் போனாலும் அவனை மிரட்டித்தான் கல்யாணம் பண்ணா! அவமேல உள்ள கோவத்துல பொண்ணே இல்லனு அத்துவிட்டேன். ஜோசிக்காரர் சொன்ன மாதிரியே ஆகிப்போச்சு” என கண்ணீர் வடிக்க

 

“ஏன் அம்மாச்சி அப்பா அல்பாயுசுல போவாருனு சொன்ன ஜோசியக்காரர் அப்பா போனா அம்மாவும் போவான்னு ஏன் சொல்லல? இல்ல நா கேக்குறேன் அப்பா அம்மாவ கல்யாணம் பண்ணாம இருந்தா மட்டும் அம்மா சந்தோசமா இருந்திருப்பாங்களா? தமிழின் கேள்வி அவரை யோசிக்க வைக்க

 

“தமிழு ஏ புள்ள தமிழு இருக்கியா? இன்னும் எந்திரிக்க கூட இல்லையா?

 

சூரியன் முகம் காட்டாத பொழுதில் வீட்டு வாசலில் குரல் கேக்க

 

“யாரு மணி அண்ணனா? என்னன்னே இந்தப்பக்கம்?” அவள் வாயிலுக்கு செல்ல அவள் பின்னாலேயே வாத்துக்கல்லும் வர வாயிலை திறந்தது விட வாத்துக்கள் வெளியேறின.

 

“பெரிய வீட்டுக்கு கனகாம்பாள் அம்மா பேத்திக கூட வந்த்திருக்காங்க பால் வேணும் புள்ள அதான் சொல்லிட்டு போக்கவந்தேன். இன்னையிலுருந்து ரெண்டு செம்பு அதிகமாவே போடு புள்ள” தகவலை சொன்னவர் அவர் சோளியை பேக்கப் போக

கோழிகள் வேலியை தண்டி பறந்திருக்க தம்பிகளும் எழுந்து வர பால் கறக்கவென தமிழ் வாளியோடு சென்றாள்.

 

“என்ன மாமா வீடு அமைதியா இருக்கு அம்மா உடம்புக்கு ஒண்ணுமில்லயே?” அதிகாலையிலேயே கனகாம்பாள் பூஜைசெய்யும் சத்தத்தில் விழிப்பவன் காரை விட்டு இறங்கும் போதே கவனித்து விசாரிக்க செல்வராஜின்  பதிலையும் கேக்காது உள்ளே ஓடி தாயின் அறையில் அவரை காணாது புருவம் சுளிக்க

 

“மாப்புள மனிசன  மதிக்க கத்துக்கோடா! கேள்வி கேட்டா பதில்னு ஒன்னு வரும்னு வெயிட்  பண்ணனும் நா பாட்டுக்கு லூசு மாதிரி புலம்பிக்கிட்டு இருக்கேன். நீ என்னடானா பொசுக்குனு உள்ள போய்ட்ட செல்வராஜ் பேசுவதை பொருட்படுத்தாது சமையல் அறையில் தேட இரண்டே அறை கொண்ட சிறிய வீடு பத்தடிக்குள் எல்லா இடத்தையும் பார்த்து தாயை காணாது செல்வராஜின் முகம் பார்க்க

முகத்தை கடுப்பாய் வைத்துக்கொண்டு

“ஏன்டா சொல்ல வருவதை சொல்ல விடேன்”

“அம்மா எங்க?” கனகாம்பாளை காணாத நொடிகளில் ஆயிரம் சிந்தனை அவன் மனதில்.அவனின் கல்யாணத்தை பத்தி புலம்பித்தீர்த்து விடுபவர் அதையே நினைத்து  மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருக்கிறார் என்ற எண்ணமே தலை தூக்க “அம்மா எங்க?” என்ற கேள்வி மட்டுமே அவன் வாயிலிருந்து வந்தது

“அம்மா ஊருக்கு போய் இருக்காங்க கூட ரோஜாவும், தாமரையும் போய் இருக்காங்க” அவனின் முகம் பார்த்து அமைதியான குரலில் ஒலித்தது  செல்வராஜின் குரல்

“வரும் போதே சொல்லி இருக்கலாம்ல” என பெருமூச்சை விட

“எதுக்கு அப்படியே நா உன் டைவராக ஊருக்கு டிராப் பண்ணவா” திரும்பவும் செல்வராஜின் கடுப்புக்கு குரல் தலை  தூக்க சத்யாவின் முகத்தில் புன்னகை. அவனை நன்றாக அறிந்து வைத்திருப்பவர் இருவர். அவர்கள் செல்வராஜும் கனகாம்பாளும்.

“முதல்ல கிடைச்ச டீலுக்கான வேலையை பார்ப்போம். அம்மா ஊர்ல பத்திரமா இருப்பாங்க”

” அவங்களுக்கு வீசிங் ப்ரோலாம் இருக்கு எதுக்கு அவ்வளவு தூரம் போகணும்”

அவனைமுறைத்து பார்த்த செல்வராஜ்

“அதான் போய்ட்டாங்கல்ல திரும்பத்திரும்ப அதையே பேசிகிட்டு சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு” நடிகர் வடிவேல் போல் நொந்த குரலில் சொல்ல

“என்ன ஒரு வில்லத்தனம்” அதே பாவனையில் சொன்னான் சத்யதேவ்.

 

“மணியண்ணா!  மணியண்ணா!” தமிழ் செல்வியின் குரல் கேட்டு தாமரை வெளியே வர இருவரும் ஒருவரையொருவர் ஸ்நேகப்பார்வை பார்க்க

“ஹப்பா செம பிகரா இல்ல இருக்கா! சரியான ஜிம்சுகட்ட “கட்ட கட்ட கட்ட கட்ட நாட்டு கட்ட உன் கிட்ட கிட்ட கிட்ட வந்து எவன் மாட்டிக்கிட்ட மாட்டிக்கிட்ட” தாமரையின் மனம் தமிழை பார்த்து பாட

“இந்த ஊரு இளசுங்கள் சும்மா நச்சுன்னு இருக்குதுங்க நாங்களும் ஜிம் போய் டைம் வேஸ்ட் பண்ணுறோம் ஒன்னும் ஒதவுறதில்ல” என்றவாறே தனது சற்று பூசிய உடம்பை பார்க்க

“நீ ஒருநாள் ஜிம் போனா ஒன்பது நாள் போகமாட்ட போன அன்னைக்கு ஜிம் போனேனு மூக்கு பிடிக்க சாப்பிடுவ” தருணத்தில் மனசாட்சி போட்டுக் கொடுக்க

 

“யாக்கோ.. யாக்கோ உன்னைத்தான்”

“யார கூப்டுறா?” சுற்றும்முற்றும் பார்த்தவள்

“என்னையா? என் பேரு தாமரை பேர் சொல்லியே கூப்டு” அக்கா என்றதில் கடுப்பான தாமரை பொரிய கிழுக்கிச் சிரித்தாள் தமிழ்செல்வி.

“ஏய் லூசா நீ எதுக்கு இப்போ சிரிக்கிற? சொல்லிடு சிரி”

” நிறய பிராணி வளக்குறா ஒவ்வொன்னத்துக்கும் பேரு வச்சிருக்கா அவ ஆசையா வளக்குற ஆட்டுகுட்டியின் பேர் தாமரை அதான் புள்ள சிரிக்குது” என்றவாறே பாலை வாங்கிக் கொண்டான் மணி.

 

தாமரை ஆட்டுக்குட்டியுடன் செல்பீ எடுத்து தாமரை அண்ட் தாமரைனு  பேஸ்புக் ல போடணும் என்றவாறே “ரோஜானு ஏதாச்சும் வளக்குறியா?” என்ன சொல்ல போறாளோ என ஆவலாக கேக்க

” அது வாத்து பேருங்க”

அவள் சொன்னது ரோஜாவை வாத்தோடு ஒப்பிட்டவள் சத்தமாக சிரிக்க அங்கே வந்தார் கனகாம்பாள் அம்மா

தாமரையின் தலையில் கொட்டியவர் “இப்படியா சிரிப்ப எட்டு ஊருக்கு கேக்குது வரும் போது என்ன சொல்லி கூட்டிவந்தேன்” என்றவாறே கடிய

“ஏன்மா திட்டுறீங்க மனசைவிட்டு சிரிச்சா நோய் வராதாம்” தமிழ் தாமரைக்கு பரிந்துரை செய்ய

அவளின் தெய்வாதீனமான முகத்தை கண்டு “இன்று நல்லது மட்டுமே நடக்கும்” என்று மனதில் நினைத்தவர்.

“நீ யார் பொண்ணுமா? எதிர்பார்ப்போடு கேக்க

 

“முருகவேள் பொண்ணுமா! பார்வதி பேத்தி” என தன்னை அறிமுகப் படுத்த

“ராஜாராம் சம்சாரம் பார்வதியா?”

“ஆமா அம்மா”

“நா உனக்கு அத்த முறைடா! அத்தையென்றே கூப்டு”

“சரிங்க அத்த” என்றவாறே பால் கேனை எடுத்துக்கொண்டு அகன்றாள் தமிழ்செல்வி.

 

அன்னையை காணாது வேலை எதுவும் செய்யத்தோன்றாமல் ரயில் ஏறிய சத்யதேவ் செல்வராஜை போனில் அழைக்க அது “நோட் ரீச்சபல்” என சொல்ல அவருக்கு ஒரு குறுந்செய்தியை தட்டி விட்டவன் போனை சுவிட்ச் ஆப் செய்தான்.

 

Advertisement