Advertisement

                                   அத்தியாயம் 36                               

அன்று நடந்தவைகளை மீரா நினைத்துப் பார்த்தாள். இரண்டாவது தடவையாக மயங்கி விழுந்த பின் எழுந்தவள் அறையை விட்டு வெளியே வர சைதன்யன் மீரா கல்யாணப் புகை படங்கள் ஒரு பக்க சுவரை நிறைத்திருந்தது அதை பார்த்து அவள் மனதில் வந்த நிம்மதி கண்களை கண்ணீரால் நிறைத்தது.

அந்த புகைப் படங்களை வெறித்துப் பார்த்திருந்தவள் கண்களை துடைத்துக் கொண்டு வெளியே வர ஒருவன் அவளை தடுத்து நிறுத்தினான்.”நான் அவர பார்க்கணும்” மீரா அவனை முறைக்க ஷரப் அவளுக்காக ஒருவனை தூக்கியது நியாபகத்தில் கொண்டு வந்தவன் எதிர் வீட்டை கை காட்ட அங்கே விரைந்தாள்.

அங்கே ஷரப் சைதன்யனை வாளால் வெட்ட முயன்றதை கண்டவள் ஒரு கணம் திகைத்து நிற்க கைகள் கட்டப்பட்டிருப்பதால் சைதன்யன் ஷரப்பை தலையால் மோத எங்கே சைதன்யனை ஷரப் வெட்டி விடுவானோ என்றஞ்சியவள் ஷரப்பை பின்னால் இழுக்க அவள் மேல் அவன் மோத அது அவனை அவள் அணைத்திருந்தது போல் இருந்தது.

அவனை இழுக்கும் பொது அவள் ஷாரப்பிடம் கூறியது “என் புருஷன ஒன்னும் பண்ணிடாதே” என்று அது ஷரப்பை தவிர யாருக்கும் கேட்கவில்லை.

ஷரப்பின் கையில் வாள் இருக்க ஓருதடவ வெட்டியவன் இன்னொருதடவ வெட்ட மாட்டான் என்று என்ன நிச்சயம். ஷரப்பின் வாள் வீச்சில் அவன் கைதேர்ந்தவர் என்று சொல்லாமல் சொல்ல முயன்றமட்டும் சைதன்யனை நன்றாக முறைத்தாள்.

விடை பெற்று போகும் போது ஷரப் அவளிடம் சொல்லியது “என்ன மன்னிச்சிடுங்க பாபி” அவள் முறைக்க பாபினா அண்ணி னு அர்த்தம்” என்று கன்னக்குழி விழா புன்னகைக்க மீராவும் புன்னகைத்தாள்.

“பேபி பொறந்தா என்ன பேர் வைக்க போறீங்க” “மித்ரா ஸ்ரீ” “ஆன்ஷி {God’s gift} என் மனைவியின் பெயர்” என்று  சொல்லியவன் விடைபெற்றான்.

சைதன்யன் பேசியவைகளை மறந்து அவனை மணந்து அவனின் குழந்தையை சுமக்கும் அவலநிலையை நினைத்து ஒவ்வொரு நாளும் கண்ணீர் வடித்தாள்.

அவனை மன்னிக்கவோ கவிதா சொன்னதை ஆராய்ச்சி செய்யவோ அவள் மனம் தயாராக இல்லை.

அவன் மருத்துவமனையிலிருந்து சென்றது அவனின் வீட்டுக்கு. லட்சுமி அம்மாவோ “என் மருமக இல்லாம வீட்டுப்பக்கம் கால் வைக்காதே” என அச்சுறுத்தி இருந்தார்.

அந்த வீட்டில் மீராவுடன் வாழ்ந்த குறுகிய கால நாட்களும் அவளின் நிணைவுகளிலும் சிக்குண்டு சைதன்யன் தவியாய் தவித்தான்.

“என்ன மன்னிச்சு என் கூட வந்துடுடி நீ இல்லாம என்னால வீட்டுல இருக்க முடியாது’ அவளிடம் கூற வேண்டியதை தனியாக தான் புலம்ப முடிந்தது மீரா அவனிடம் முகம் கொடுத்து பேசினால் தானே! அவன் வரும் போதெல்லாம் அவளின் அறையில் தங்கி விடுவாள்.

அவனும் விடாது அவளுக்கு பிடித்த வற்றை அனுப்பி கொண்டே இருந்தான். அவன் தான் அனுப்புவதென்று தெரிந்தால் தொட்டுக்க கூட பார்க்க மாட்டாள்.

சௌமியா வந்து பல தடவ பேச முயற்சி செய்தும் “உங்கள எனக்கு தெரியாதுங்க தெரியாதவங்களோட நா பேசமாட்டேன்” என்று முகத்தில் அடித்தது போல் சொல்லி விடுவாள். ஆனால் லட்சுமி அம்மாவை அவளால் தவிர்க்க முடியவில்லை “நம்ம வீட்டு வாரிசு உன் வயித்துல வளருது” என்று எந்நாளும் வித விதமான உணவுடன் அவளை காண வந்து விடுவார்.

வந்தவர் சைதன்யனின் நிலையை சொல்லி புலம்ப கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் அவள் மனம் இளகி வரும் நேரம் ஏழாம் மாதமே வளைகாப்பு வைக்க வேண்டும் என்று லட்சுமி அம்மா பிடிவாதம் பிடிக்க வளைகாப்பு நாளும் வந்தது.

உறவினர்கள் கேட்கும் கேள்விகளை சமாளிக்க வளைகாப்பை ஒரு மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாம் என அனைவரும் பேசி முடிவெடுத்திருக்க கல்யாணப் பட்டுடுத்தி சபையில் வந்தமர்ந்தவளை சைதன்யன் பகிரங்கமாகவே சைட் அடித்தான். அவனை இன்றுவரை தவிர்த்திருந்தவள் நேரில் பார்க்கவே இல்லை அவனை பார்க்க ஆவலாக இருந்தவளுக்கு பட்டு வேட்டி சட்டையில் தந்தையாகப் போகும் கர்வத்தில் மீசையை முறுக்கிக்கொண்டு இருப்பான் என்று கற்பனை செய்திருக்க அவனோ தேவதாஸ் போல் தாடியும் உடல் கறுத்தும், மெலிந்தும் ஆளே மாறி வேறு யாரோ போல் இருக்க மீராவின் காதல் நெஞ்சம் தவிக்க ஆரம்பித்தது.

ஆபீஸ் சென்று வந்து வேலையை பாத்திருந்தவனை “ஏன் பா என் பையனா எப்போ கம்பெனியை பொறுப்பேத்துக்க போற” சரவணன் சார் அவன் நிலையை காண சகிக்காது வேலையிலாவது கவனம் செலுத்தட்டும் என்று சொல்ல “உங்க மருமக வரட்டும்” என்று பிடிகொடுக்காது சென்று விட்டான்.

மீராவிடம் ரவிக்குமாரும் சரஸ்வதியும் சைதன்யனுடன் சேர்ந்து வாழுமாறு சொன்னால் “எனக்கு நியாபகம் வரட்டும்” என்று சொல்பவள் தேவ்விடம் அன்று நடந்ததை சொல்லி “என்னால அவரை மன்னிக்கவும் முடியல ஏத்துக்கவும் முடியல” என்பாள்.

அவளுக்கு பழைய நியாபகங்கள் வரட்டும் என்று அனைவரும் காத்திருக்க இன்று காலை ப்ரியா வளைகாப்பிற்காக அவளை அலங்கரிக்கும் போது மீராவிடம்  

“எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப் போறா? உங்க ரெண்டு பெருக்குமிடைல என்ன நடந்ததென்று எனக்கு தெரியவேண்டியதில்லை  உனக்கு பொறக்கப்போற குழைதைக்காகவாவது நீங்க ரெண்டு பெரும் ஒன்னு சேரனும் னு தான் எல்லாரும் நினைக்கிறாங்க உன் கோவத்தை மனசுல வச்சிக்கிட்டு பிடிவாதம் பிடிக்கிறியே இது உன் குணமே இல்லையே! உன் மனசுல சைதன்யன் மேல உள்ள காதல் என்னாச்சு? எல்லாருகிட்டயும் நீ நடிக்கலாம். ஏன் டாக்டரான  உன் வேத் அத்தனையே ஏமாத்திட்ட  ஆனா வினு கிட்ட மாட்டிக்கிட்டியே” என்று ப்ரியா சொல்ல அவளை அதிர்ச்சியாக பார்த்தாள் மீரா.

“என்ன பாக்குற வினு கிட்ட அவ பொறந்தப்ப எப்படி இருந்தா வளர வளர அவ பண்ணதெல்லாம் சொன்னியே அப்போவே தெரிஞ்சிகிட்டேன் உனக்கு எல்லா நியாபகமும் வந்துருச்சு நீ எல்லார்கிட்டயும் மறைக்கிறனு”

……..

சைதன்யனால தான் உனக்கு ஆக்சிடென் ஆச்சுன்னு தேவ் சொன்னாரு பழசெல்லாம் மறந்திருந்தப்போ அவர் கூட சந்தோசமா தானே வாழ்ந்த அப்போ வாழ்ந்த வாழ்க்கை பொய்யா?

……….

அன்னக்கி அவரை காதலிச்சிட்டு எல்லாத்தையும் மறந்த இன்னக்கி அவரை காதலிக்க வச்சிட்டு எல்லாத்தையும் மறந்த மாதிரி நடிக்கிறியே!

…………

நாம வாழற வாழ்க்கை கொஞ்சம் நாள் தான் மீரா இருக்கிறவரை அடுத்தவங்களை கஷ்டப்படுத்தாம வாழ்ந்துட்டு போவோமே. மீராவின் கண்களில் கண்ணீர் நிறைய எதுவுமே பேசாது அமர்ந்திருந்தாள்.பெரியதொரு பெருமூச்சை விட்ட ப்ரியா மேலும் தொடராது அறையிலிருந்து வெளியே சென்று விட்டாள்.

நீண்ட நெடிய மாதங்களாக மீரா தான் சைதன்யனை பார்க்கவில்லை.சைதன்யனோ அவள் கோவில் செல்லும் போதும் மாதாந்த செக்கப்புக்காக மருத்துவமனை செல்லும் போதும் அவள் வீட்டை விட்டு வேறெங்கு சென்றாலும் அவளை தூரத்திலிருந்து ரசித்துக் கொண்டிருப்பான். ஒரு தடவை அவளிடம் மருத்துவமனையில் பேச முயன்ற போது ஸ்கால்பெல் கத்தியால் கையை அறுத்துக் கொள்ள அன்றிலிருந்து அவன் அவள் முன் வரவே இல்லை ஆனாலும் அவளுக்கும் அவன் குழந்தைக்கும் தேவையான அத்தனையும் பார்த்து பார்த்து வாங்கி லட்சுமி அம்மா விடம் அனுப்பி விடுவான்.

வளைகாப்பு சடங்குகளும் இனிதே நடை பெற லட்சுமி அம்மா சைதன்யனை அழைத்து வளையல்  போடுமாறு பணிக்க மீரா என்ன சொல்வாளோ என்ற அச்சம் தோன்ற அவளை ஏக்கமாக பார்த்தான். அவனின் வலி கண்ணில் தெரியவே அவனை கண்ணாலேயே அழைத்தால் மீரா அவள் கண்ணால் சொன்ன செய்தி கண்ணில் சந்தோசம் மின்ன அவளின் அருகில் சென்றவன் அவளின் கண்களை பார்த்தவாறே வளையல்களை போட்டுவிட்டான்.”என்ன இப்படி பாக்குறாரு”மீராவின் மனம் வேகமாக அடிக்காத தொடங்கியது.

 

வளைகாப்பு சடங்குகளும் இனிதே நிறைவுற்று மண்டபத்திலிருந்து உறவினர்கள் கிளம்ப லட்சுமி அம்மாவின் கண்களில் கண்ணீர் பெறுக ஆரம்பித்தது.”உன்ன கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போய்  நல்லா பத்துக்கணும்னு நினச்சேன் முடியல,குழந்தை உண்டானப்போ பாத்துக்கணும்னு நெனச்சேன் முடியல, கடவுள் எப்போ கரிசனம் காட்டுவாரோ எனக்கு அந்த குடுப்பணை நான் சாகும் வரைக்கும் கிட்டாமல் போய்டுமோ” அவரின் கூற்றில் மனம் உருகி “என்ன அத்த இப்படி எல்லாம் சொல்லுறீங்க நான் நெறய குழந்தைங்களை பெத்தூதருவேன் நீங்கதான் எல்லாரையும் வளக்கணும் வாங்க இப்போவே வீட்டுக்கு போலாம்” என மீரா சொன்ன நேரத்தில் தேவதைகளும் அப்படியே ஆகட்டும் என்று வாழ்த்தினார்கள் போலும். சரஸ்வதி அம்மா அவளை சந்தோஷமாகவே அனுப்பி வைத்தார்.

ஆலம் சுத்தி சைதன்யன் மீரா ஜோடி வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தனர்.லட்சுமி அம்மாவின் பின்னாலயே சுத்தியவள் அவர் “போய் தூங்குமா காலையிலிருந்தே அலைச்சலா இருக்கு” என்று அவளை சைதன்யனின் அறையினுள்ளே விட்டு விட்டார்.

முதலிரவு அறைக்குள் வரும் மணப்பெண் போல் பதை பதைப்புடனே உள்ளே வந்தவள் சைதன்யனை தேட  அவனோ பால்கனியில் நின்றவாறு வானத்தை வெறித்தவண்ணம் இருக்க அவனை எப்படி அழைப்பதென்று தயங்கியவாறே அவனருகில் செல்ல அவளின் வளையல்கள் அவள் வந்ததை அவனுக்கு சத்தமாக செய்தி கூற அவள் புறம் திரும்பினான்.

அவள் எப்படி ஆரம்பிப்பதென்று கலங்கி நிற்க அவனே கலங்கிய குரலில்  பேசினான். “அம்மாக்காக தான் நீ இங்க வந்தேன்னு தெரியும் ஸ்ரீ என்னால உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது நீ டென்ஷனாகாம இரு” இன்னும் என்ன பேசி இருப்பானோ அவனின் வாய் மேல் விரலை வைத்து அவனை பேசவிடாது தடுத்தவள் அவனை அணைத்து “ஐ லவ் யு சையு” என்றாள்.  

அவளை இருக அணைத்தவன் முகமெங்கும் முத்தமிட்டவாறே  “ஐம் சாரி ஸ்ரீ ரியலி சாரி” என்று மாத்திரமே திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தான்.அவன் மனதிலிருந்த பாரமெல்லாம் கண்ணீராய் கரைந்து அவள் மேல விழ “நான் தான் உங்க கிட்ட மன்னிப்பு கேக்கணும் சையு உங்க காதலை புரிஞ்சிக்காம உங்கள ரொம்ப கஷ்டப்படித்திட்டேன்”

“நா அன்னக்கி வேற டென்ஷன்ல உன்ன ரொம்ப ஹர்ஷா பேசிட்டேன் அதனாலதான் உனக்கு எக்சிடெண்ட் ஆச்சு”என்று கவிதா நடந்து கொண்ட முறையை சொல்ல. கவிதா கூறியதை கூறியவள் “அந்த வயசுல உண்மை எதுன்னு புரிஞ்சிக்கிற பக்குவம் எனக்கு இல்லாம போச்சு நீங்க கோவமா இருக்கீங்க என்று தெரியாம நாவேற பேசி ஏதேதோ ஆகிப் போச்சு எல்லாத்தையும் மறந்துடுவோம் சையு” “அம்மா தாயே மறந்தவரைக்கும் போதும்  என்னையே மறந்து என்ன பாடு படுத்திட்ட டி என் வீட்டுல உன் நினைவால எப்படி தவிச்சேன் தெரியுமா?நாம அந்த வீட்டுல சந்தோசமா வந்தது உனக்கு நியாபகத்துல இல்லையே! எப்படியெல்லாம் என்ன டோசர் பண்ணுவ  தெரியுமா? ” “சமைக்க துணிதுவைக்க சொல்றது டோச்சரா?”

“ஹேய் அப்போ உனக்கு எல்லாமே நியாபகத்துல வந்துருச்சா” சந்தோசமாக சைதன்யன் சொல்ல  “சாரி சையு அந்த இன்சிடெண்ட்டுக்கு அப்பொறம் கொஞ்ச நாட்கள்ல எல்லாமே நியாபகத்துல வந்துருச்சு  மனம் ரொம்ப குழம்பி உங்கள ஏத்துக்க முடியாம எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன். உங்கள பாக்கவே கூடாதுன்னு வீம்பா  இருந்தேன். ஆனா உங்கள பத்தி சொல்லி சொல்லியே அத்த என் மனச மாத்திட்டாங்க. இன்னக்கி உங்கள பாத்ததும் அப்பொறம் தான் நா உங்கள எவ்வளவு மிஸ் பண்ணிட்டேன்னு தெரிஞ்சிகிட்டேன்” என்று கண்ணீர் வடிக்க

அவள் கண்களை துடைத்தவன் பாரு ரொம்ப நேரமா நின்னு கிட்டே இருக்க கால் வேற வீங்கி போய் இருக்கு” அவளை அழைத்து வந்து கட்டிலில் அமரவைத்தவன் காலை இதமாக பிடித்து விட ” என்ன பண்ணுறீங்க சையு” “பேசாத நீ என் குட்டிமாவ என் கிட்ட இருந்து பிரிச்சிடேல்ல அவ கிட்ட பேசணும்னு எவ்வளவு ஆசையா இருந்தேன்” “அப்போ ஏன் அங்க இருக்கீங்க இங்க வந்து பேசுங்க” அவன் புறம் கையை நீட்ட அவள் அருகில் அமர்ந்து அவன் குழந்தையுடன் கதை பேச ஆரம்பிக்க அவளோ சுகமாய் கண்ணயர்ந்தாள்.

 

பத்து வருடங்களுக்கு பிறகு

மீரா பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்க சரஸ்வதி அம்மா இயற்கையை எய்தி இருக்க ரவிக்குமார் அவருடைய  நண்பனாக இருந்த ராணுவவீரர் ஒருவருடைய மரணத்துக்கு டில்லி சென்றிருக்க மற்றவர்கள் அனைவரும் பிரசவ அறைக்கு முன் அமர்ந்திருந்தனர் ப்ரியா உள்ளே பிரசவம் பார்க்க மீரா வழியால் சைதன்யனை திட்டிக் கொண்டிருந்தாள். அவனை உள்ளே வருமாறு அழைக்க என்னவோ முதல் பிரசவம் போல் பயந்தவன் முடியாதென்று தன்னுடைய ஐந்து ஆண் குழந்தைகளையும் அணைத்த வாறே “அம்மாக்கு ஒண்ணுமில்ல தங்கச்சி பாபா கூட்டிட்டு வந்துடுவா” “போப்பா இதே தான் சுகாஷ், சுவாக் பொறக்கும் போதும் சொன்ன” மூத்தவன் சாத்விக்   சொல்ல இரண்டாவதாக பொறந்த சாகேத் மற்றும் மூன்றாவதாக பொறந்த சர்வேஷ்  ஆமோதித்தான். என்ன சொல்வதென்று புரியாமல் சைதன்யன் முழிக்க ப்ரியா குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்.

அவள் என்ன சொல்ல போறாளோ என்று அனைவரும் அவள் முகத்தை பார்க்க “இந்த தடவ பொண்ணு தான்” அவள் சொல்லி முடிக்கவில்லை சைதன்யனை கட்டிக்க கொண்டு சந்துரு “முயற்சி திருவினையாக்கும் என்று சொல்லுவாங்க சாதிச்சிட்ட” அவன் கன்னத்தில் முத்தம் வைக்க “சீ தள்ளிப்போ” என்றவன் குழந்தையை வாங்க “மித்ரா குட்டி உங்கப்பாவ தீயா வேலைசெய்ய வச்சிட்டியே!” சந்துரு பாப்பாவை கொஞ்ச அனைவரும் குழந்தையை பார்க்க சூழ்ந்துகொள்ள மீனாட்சி அம்மாவிடம் பாப்பாவை  கொடுத்து விட்டு சைதன்யன் மீராவை பார்க்க சென்றான். அவன் பின்னால் ஒவ்வொருத்தராக உள்ளே வந்தனர்.

மீரா களைப்பில் உறங்கிக்கொண்டிருக்க அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவள் கன்னத்தை வாஞ்சையாக தடவி கொடுத்தான். மீராவை பார்க்கவென வந்த தேவ் “டேய் போதும்டா பொண்ணு வேணும்னு அவல இந்த பாடு படுத்துற” என்று பல்லை கடிக்க “நாங்க இன்னும் ரெண்டு பொண்ணுங்கள பெத்துக்குவோம் நீ அவரை ஒன்னும் சொல்லாத அத்தான்” என்றவாறே சைதன்யனின் தொடுகையால் கண் விழித்தவள் எழுந்து அமர “ஆமாடி வலில புருஷன திட்டவேண்டியது அப்பொறம் கொஞ்ச வேண்டியது நாங்க சொன்னாமட்டும் பாய்ர “ப்ரியா நொடித்துக் கொள்ள அசடு வழிந்தாள் மீரா.

“டேய் மகனே எனக்கு ஒரே ஒரு பையன் நா ஓடி ஓடி உழைச்சிகிட்டு இருக்கேன் உனக்கு மொத்தமா ஆறு, கம்பெனியை பொறுப்பேத்துக்க சொன்னா ஒவ்வொரு காரணம் சொல்லுற அதான் பொண்ணு பொறந்துடால்ல” சரவண சார் எல்லார் முன்னிலையிலும் கூற லட்சுமி அம்மா அவரை முறைத்தார்.”பாப்பாவா வீட்டுக்கு கூட்டிட்டு போகவும் இல்ல ஆரம்பிச்சுடீங்களா!” சைதன்யன் சொல்ல “ஆமாடா இன்னும் பேர் வைக்கல. அப்பொறம் காது குத்தனும். இப்படியே காரணம் சொல்லி கிட்டு இரு உன் வேல எல்லாம் நா பாக்க வேண்டி இருக்கு விட்டா அடுத்த பிரசவத்துக்கு  நாள் குறிச்சிடுவ நாளைக்கே வர ” சந்துரு உத்தரவு போட மீராவின் முகத்தில் வெக்கப் புன்னகை பூத்தது. சௌமியாவின் இரண்டாவது பையனான விகாஸுக்கு பேச்சு சரியாக வராததால் மியா இன்று மௌன விரதம். இவர்கள் பேசுவதை கேட்டு பதில் பேச முடியாமல் பல்லை கடித்தவாறு நின்றாள்.

சில நாட்களுக்கு பிறகு

“மித்ரா ஸ்ரீ மித்ரா ஸ்ரீ மித்ரா ஸ்ரீ” சைதன்யன் காதில் பெயரை கூற சிணுங்கினாள் சின்னவள். “அப்பா நானும்  நானும்” என்று இரட்டைகளான சுகாஷ் சுவாக் குழந்தையை தூக்க “பாப்பாக்கு வலிக்கும்” மூத்தவன் சாத்விக் தடுக்க “வலிக்குமா?” மூன்றாவதாக பிறந்த சர்வேஷ் கேக்க நம்பர் டூ சாகேத் “வலிக்குமோ” என்று அன்னையை பார்க்க அனைவரும் சோபாவில் ஒன்றாக அமர்ந்திருந்த காட்சி புகை படமானது.

லட்சுமி அம்மா அனந்த கண்ணீர் வடிக்க அவரை அணைத்துக் கொண்டார் சரவணன் சார். வினுவும் சந்துரு பசங்க விபுல், விகாஸும் அவர்களிடத்தே ஓட தேவ்,ப்ரியா, ரவிக்குமார் மனநிறைவுடன் அவர்களை பார்த்திருக்க.    சந்துரு “குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணுவேனும்” என சௌமியாவின்  காதுக்குள் பாட ஆரம்பித்தான். அனைவரினதும் மலர்ந்த முகங்களை சந்தோசமாக பார்த்தவாறே நேசமணி கலாவதி தம்பதியர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர்.

என்னை மறந்தவளே! உன்னில் நிறைந்தவன் நான். என அவர்கள் வாழும் வாழ்க்கைக்கு வாழ்த்தி விடைபெறுவோம்.

                                              சுபம்         

 

Advertisement