Advertisement

                                              அத்தியாயம் 34

மீராவை அடித்தவனை தூக்கச் சொல்லியவன் வ்ருஷாதை அழைத்து சொன்னது மீரா எங்க இருந்தாலும் தன்னோட கஷ்டடியில் கொண்டு வரும் படி அதன் படி விசாரித்தவன் அவளை அப்பாதையில் சென்றவர்கள் கண்டு மருத்துவமனையில் சேர்த்ததை அறிந்து ஷரப்புக்கு தகவல் தர நேரில் சென்று அவளை தன் மனைவியென்று கூறி அவனுடைய இடத்துக்கு மாற்றி இருந்தான்.

அவளை கண்காணிக்க வென அவளிருக்கும் அறையில் கேமரா பொருத்தி இருக்க அவள் எழுந்ததிலிருந்து பண்ணிய அத்தனையையும் பாத்திருந்தவன் அவளிடம் பேசச் சென்றான்.

தன்னை உரிமையாக கொஞ்சுபவனை பயப்பார்வை பார்த்தவள் அவனின் கனிவான பார்வையில் வேற்று ஆண் மகன் காரணமின்றி தன் அறையினுள் வர முடியாதென்று புரிந்தவள் அவனை நேர் பார்வை பார்த்தவள் “நீங்க தான் என் கணவனா” என்று தாலியை தூக்கி காட்டியவாறே கேட்க

அவளின் தற்போதையை நிலையை விசாரித்ததில் அறிந்திருந்தவன் அவள் மறதியின் காரணமாக தன்னை “கணவனா” என்று கேட்க  அவனின் கிரிமினல் மூளை வேகமாக கணக்கு போட்டது

அவளிடம் பதில் சொல்லாது “இப்போ ரெஸ்ட் எடுத்தா தான் உடம்பு சரியாகும் கன்சீவ் வேற” என்று கவனமாக நீ என்றோ நீங்க என்றோ சொல்லாதது தவிர்த்து  கேமராவை பார்த்து கண்ணடித்தவன் அவளை அணைத்தவாறே கட்டிலில் அமர்த்தி தலையணையை சரிசெய்து வைக்க முயன்ற போது அவன் சொன்னதை கேட்டு மீண்டும் மயங்கி அவன் கைகளிலேயே சரிந்தாள் மீரா. மீரா மயங்கிவிழ அவளை நேராக கிடத்தி டாக்டரிடம் அவளை ஒப்படைத்தவன் சைதன்யனை காண சென்றான்.


இங்கே சரவணன் சார், தேவ், நேசமணி ஷரப் அனுப்பி இருந்த இரண்டாவது கணநொளியை பார்க்க அதில் சந்துருவும்  மிராவுமிருந்தனர். சைதன்யனுக்கும் சந்துருவுக்கும் சில ரௌடிகள் கட்டைகளை கொண்டு சரமாரியாக அடிப்பது இருக்க சௌமியா அழத்தொடங்கி விட்டாள். சரஸ்வதி அம்மாவை  வினுவை பார்த்து கொள்ளுமாறு வீட்டுக்கு அனுப்பிவைத்திருக்க சைதன்யன் கடத்தப்பட்டது முதல் மீரா கடத்தப்பட்டது வரை அவரிடம் பகிர படவில்லை.

சந்துருவின் அம்மா கலாவதி லட்சுமி அம்மாவின் அருகில் இருக்க சந்துரு கடத்தப்பட்டது அவரிடம் யாரும் சொல்ல விரும்பவில்லை.

ரவிக்குமார், சரவணன், தேவ், நேசமணி மாத்திரம் பேசிக் கொண்டிருந்ததை தற்செயலாக சௌமியா கேட்டு கணநொளியை பார்த்தவள் ஒப்பாரி வைக்காத குறையாய் அழ அவளை கட்டுப் படுத்த முடியாமல் ஊசி ஏற்றி அவளை தூங்க வைத்தாள் ப்ரியா.

ப்ரியா கவலையடைந்தாலும் கலங்க இது நேரமல்ல என மற்றவர்களுக்கு என்ன உதவி செய்யலாம் என அவர்கள் பேச்சை செவி சாய்த்தாள்.

 

“போலீசுக்கு போலாம்” என ரவிக்குமார் சொல்ல அதை மறுத்தார் நேசமணி கடத்தினவன் எப்படிப் பட்டவன் என்று அறியாததால் ஒரு வேலை சந்துருவை கொன்று இவர்களை பயமுறுத்த கூடும் என்று அஞ்சி “இல்ல சார் என் பையன ஏதாவது பண்ணிவானோனு பயமா இயருக்கு” அதை ஏற்றனர் சரவண சாரும் தேவும்.

“யொத்தா” என்றால் என்ன? நேசமணி கேக்க  “போர்வீரன்” அது ஒரு ஹிந்தி சொல் ரவிக்குமார் சொல்ல

“போர்வீரன்” வீரனா? அவன் என்ன கேக்குறான் என்றே புரியல தேவ் சொல்ல

“சரவணன் சார் குடும்பம் அரச பரம்பரையில் வந்தது லட்சுமி அம்மா கல்யாணம் அன்று ஊர்ல வச்சு நிறைய தகவல்கள் சொன்னாங்க அத வச்சு பார்த்தா சாரோட பரம்பரை வாளை தான் கேக்குறாங்களோ?” ப்ரியா சொல்ல எல்லாருக்குமே ப்ரியா சொன்னது சரியாக இருக்கும் என்று தோன்ற சரவணன் சார் தலையில் கை வைத்தவாறே அமர்ந்தார்.

“அப்பா சாகும் போது நா பக்கத்துல இல்ல லட்சு தான் இருந்தா அவ கிட்ட என்ன சொன்னாரோ தெரியல. ஊர்ல இருக்குற பூர்வீக வீட்டுல ஒரு இரகசிய அறைல வாளை பத்திரமா வச்சி இருக்கோம். லட்சுமிகு மட்டும் தான் அந்த அறையின் கடவுச்சொல் தெரியும் அவ இப்போ ஐ. சி. யு. ல இருக்கா இப்போ என்ன பண்ணுறது” சிறு குழந்தையாய் கேட்க்கும் அவரை தேற்ற வழியறியாது தவித்தனர் மற்றவர்கள்.

 

சைதன்யன் இருக்கும் அறைக்கு வந்த வ்ருஷாத் ஒரு கணணியை மேசையின் மேல் வைத்து அதை ஓட  விட அதில் தூங்கும் மீரா தெரிந்தாள். அவளின் தலையில் கட்டோடு இருக்க கொதித்த சைதன்யன் “என்னடா பண்ணின என் ஸ்ரீய” என கத்த “என்ன ப்ரோ இன்னும் இரத்தம் சிந்தனுமா? என்றவாறே ஷரப் உள்ளே நுழைந்தான்.

அடிவாங்கி தோய்ந்து விழுந்த நிலையில் சைதன்யனால் ஷாரப்பை முறைக்க மட்டுமே முடிந்தது. “டேய் என்ன இருந்தாலும் அவன் உங்க ரெத்தம்  டா இந்த அடி அடிக்கிற செத்துடுவாண்டா அவன உசுரா நினைக்கிறவ எழுந்தா நீ என்ன பதில் சொல்ல போற” சந்துரு ஒரு வார்த்தை நண்பனுக்காக பேசினால் அவனை அடிக்கவென ஒருவனை நிறுத்தி இருக்க அடி விழுந்தாலும் பரவாயில்லை என சந்துரு குரல் கொடுக்க

 

“ஹாஹாஹா” என்று சந்துரு ஏதோ ஒரு பெரிய ஜோக்கை சொன்னது போல் அடக்க மாட்டாமல் சிரித்தவன் சந்துருவை அடிக்கவென இருந்தவனுக்கு அடிக்க வேண்டாம் என சைகை செய்ய அவன் விலகியதும் “ஏன்டா ஊமையடி உள்காயம் கேள்வி பட்டிருக்கிறேன் எப்படிடா எலும்பு முறியாம இந்த அடி அடிக்கிறீங்க” சந்துரு வலியோடு முனக

 

“தட்ஸ் ராஜஸ்தான் ஸ்டைல் மிஸ்டர் ஆல் இன் ஆல் சந்துரு உங்க தொங்கச்சி கண்ணு முழிச்சா என்ன எதுவும் கேக்க மாட்டா இதோ இருக்கானே உங்க உசுர கூட கொடுக்க துடிக்கிற நண்பன் அவனுக்கு வைப்பா ஆப்பு” என மீண்டும் சத்தமாக சிரிக்க அவனை புரியாத பார்வை பார்த்த இருவரும் தங்களுக்குள் பார்வை மாற்றம் செய்து கொள்ள

 

இருவரினதும் பார்வை மாற்றத்தை கண்டு கேலியாக நாக்கை சுழற்றி வ்ருஷாத்தை பார்க்க மீரா ஷரப்பை “நீங்க தான் என் கணவனா? என்று கேட்பதிலிருந்து அவளை கட்டில் வரை அழைத்து செல்வது வரை ஓட விட அதிர்ந்தே விட்டனர் இருவரும்.

 

இவ்வளவு நேரமும் மீராகு என்ன ஆச்சோ என்ற கவலையில் அமைதியாய் இருந்தவன் மீராவின் பழைய நினைவுகள்   வந்ததை விட்டு விட்டு அவள் நன்றாக இருக்கிறாள் என்றறிந்தவன் ” நீதான் உண்மையான வாரிசென்று நீ சொல்வதை எப்படி நம்புறது? எனி ப்ரூப்?” சைதன்யன் அலட்டல் கேள்வி கேக்க

“உன் அழகான முகம் எதுவும் ஆகா கூடாதென்று முகத்தில் அடிக்க வேண்டாமென்றேன். நீ சொல்றத பாத்தா அடி பத்தாது போலயே! உன் வய்ப் எந்திரிக்கட்டும் உன் கண்முன்னாடியே ஜல்ஷா பண்ணுறேன் ராஜஸ்தான் மொளகா ரொம்ப காரமா இருக்கும் அத அடி பட்ட இடத்தி  பூசினத விட எரியும் இல்ல, தனக்கு உரிமையானதை தொட்டா எப்படி எரியும்னு புரிய வைக்கிறேன். “யொத்தா” சாதாரண வாள் இல்லடா எங்க உயிர், யொத்தா காணாம போனது மானப் பிரச்சினை அத எத்துனை வருசமா தேடுறோம் தெரியுமா? உன் கல்யாணம் அன்னைக்கி யொத்தா மேல சத்தியம் பண்ணியே எங்க தலை முறைல கல்யாணம் நடக்கும் போது யொத்தா இல்லாம வாக்கு கொடுக்க முடியாம கட்டின பொண்டாட்டி முன்னிலையிலும் ஊர்மக்கள் முன்னிலையிலும் அசிங்கப்பட்டு அவமானப் பட்டு கூனிக்குறுகி நின்னோம். அன்னைக்கி முடிவு பண்ணிட்டேன் டா என் உயிர் போறதுக்கு முன்னால யொத்தா வ கண்டு பிடிப்பேன்னு” ஷரப் புலியின் சீற்றத்தோடு சொல்ல

என்னை மறந்தவள் இப்போ என்னை வெறுக்க ஆரம்பிச்சிட்டா இவன் சொல்றத நம்பிட்டா என்றால்! உள்ளுக்குள் சிறு அச்சம் இருக்க கண்டிப்பா என் காதல் எனக்கு துணையிருக்கும் என்றெண்ணியவன்  தலை நிமிர்ந்து

“உனக்கு வாள் தான் வேண்டுமென்றால் வீட்டுக்கு வந்து கேக்க வேண்டியதுதானே!” கேட்டிருந்தால் நாம கொடுத்திருப்போம் என்று சைதன்யன் தன்மையாக சொல்ல “என்ன பிச்சை போடுறியா? யார் வாளை யார் கொடுப்பது அடுத்தவன் பொருளையே கேக்காமல் பறித்தெடுப்பவன்  நான்” சொல்லும் போது அவன் கடத்தி மணம் புரிந்த மங்கையின் பயந்த முகம் கண்ணில் வந்து போக தலையை உலுக்கி அவளை துரத்தியவன் “எனக்கு சொந்தமானதை பிச்சை எடுப்பேன் என்று நினைத்தாயா” கர்வமாக சொல்ல

அவனை அடித்தே ஆகணும் என்ற வெறி சைதன்யனுக்கு வந்தது.”கட்டி போட்டு அடிக்கிறியே பொட்டப் பய” வெறியை வார்த்தையாய் வீச “அவனை குரூரமாக பார்த்தவன் “நா ஆம்பளையா? பொட்டப் பயலா? உன் பொண்டாட்டிய இன்னும் கொஞ்சம்  நேரத்துல விசாரிச்சு தெரிஞ்சிக்கலாம்” “எப்படி பால் போட்டாலும் அசராம சிக்ஸர் அடிக்கிறியே நீ வில்லன் தான்யா பக்கா வில்லன்” சந்துரு வலியிலும் கேலி செய்ய

உள்ளே வந்த வ்ருஷாத் “அவங்க போலீசுக்கு போனதாக தெரியல சார் மிஸ்டர் சரவணன் பூர்வீக வீட்டுக்கு கிளம்பி போய்ட்டாரு” “போலீசுக்கு போனாலும் ஒன்னும் ஆகாது” சைதன்யனை பார்த்தவாறே சொல்ல “யொத்தா” அவர் கை வசமானதும் எங்க என்ன மீட் பண்ணனும்னு தகவல் அனுப்பிடு” என்றவன் எக்ஸ் ஆர்மி மேன்,டாக்டர் அண்ட் சந்துருவை காட்டி இவனோட அப்பா எல்லார் மேலயும் ஒரு கண் இருக்கட்டும்” சரியென்ற விதமாக தலையசைக்க வ்ருஷாத் விடை பெற்றான்.

அறையை திறக்க முயற்சி செய்து தோற்றவராக சரவணன் சார் தோய்ந்து அமர அவரை தேற்ற முடியாது கவலையடைந்தார் நேசமணி. சைதன்யனை கடத்தியவன் யாரென்ற தகவல் இல்லாததால் குழம்பி இருந்த தேவ்வை தனியாக அழைத்த ரவிக்குமார் “லட்சுமி அம்மா எந்திருக்கும் வரை காத்திருக்க முடியாது இதுக்கு ஒரே வழி வேறேதாவது வாளை ஏற்பாடு செய்வது” முகம் மலர்ந்தான் தேவ் “வேறெங்கும் போக வேண்டியதில்லை இதோ இந்த வீட்டிலேயே நிறைய வாள் சுவர் பூராவும் தொங்கிக்கிட்டிருக்கு அதுல ஒன்ன கொண்டு போய்டலாம். அதன் பின் எல்லோரிடமும்  பேசி ஒரு பெட்டியில் “யொத்தா” போல் உள்ள வாளை இட்டு எடுத்து வந்தனர் ஆண்கள் நால்வரும்.

 

இவர்களை போலோவ் செய்து வந்தவன் வ்ருஷாத்துக்கு  தாவல் சொல்ல ஷரப்பிடம் வ்ருஷாத் மூலம் தகவல் வந்து சேர சரவணன் சாரை மாத்திரம் சைதன்யன் வீட்டுக்கு வரும் படி குறுந்தகவல் அனுப்பப் பட்டது. அவர் மட்டும் புறப்பட்டு வந்ததாகவும் மற்றவர்கள் வீட்டிலேயே தங்கி விட்டார்கள் என்று உறுதியான தகவல் வந்தது.

 

குறுந்தகவலை படித்தவர்கள் சைதன்யன்,சந்துரு, மீரா, மூவரையும் கடத்தி அவர்கள் வீட்டிலேயே வைத்திருப்பதை அறிந்து   கொஞ்சம் குழப்பமும் கொஞ்சம் அதிர்ச்சியும் அடைந்தனர்.

 

“எப்படி தம்பிய கடத்தி அவங்க வீட்டிலேயே வைக்க முடியும்? காவலுக்கு இருக்குறவங்க என்ன ஆனாங்க? செல்வந்தர்கள் மாத்திரம் இருப்பதால் பலத்த பாதுகாப்பு இருக்குற இடமாச்சே” நேசமணி யோசனையாய் கூற ஆமோதித்தனர் மற்றவர்கள். “சம்மந்தி உங்கள மட்டும் தனியா அனுப்ப முடியாது அவன் யாருன்னு கூட தெரியாதே” ரவிக்குமார் சொல்ல “வாள் வேற ஒரிஜினல் கிடையாது கண்டு பிடிச்சிட்டான்னா உங்களுக்கு அவனால ஏதாவது ஆபத்து வர வாய்ப்பு இருக்கு” தேவ் கவலையாக கூற “எதுனாலும் பரவால்ல பசங்கள மீட்டெடுக்கணும்” என்றவர் தனியாக கிளம்பிச்சென்றார்.

அடுத்து நடந்த நிகழ்வுகளில் ஷாரப்பை சைதன்யன் அடிக்க மீரா ஓடிவந்து ஷாரப்பை அணைத்தவாறு சைதன்யனை முறைத்தாள்.

 

Advertisement