Advertisement

                                                                   அத்தியாயம் 32

சௌமியா வீட்டுக்கு ஒரே பெண் தந்தை பக்கவாத நோயினால் பாதிப்படைந்து பல காலமாய் கட்டிலுடன் இருக்க தாய் அவரை கவனித்துக் கொள்கிறார். சேமிப்பில்  இருந்த பணத்தைக் கொண்டு இறுதியாண்டு படிப்பை முடித்துக் கொண்டவள் சந்துருவின் உதவியோடு எஸ்.எஸ். குரூப்பில் இணைந்தாள். இன்று குடும்பத்துக்கு போதியளவு செலவுடன் அவளின் கல்யாணத்துக்கென கொஞ்சம் சேமித்தும் வருகிறாள்.  

“எங்க இருக்க” “என்னடி பட பட பட்டாசு ஊசிப்போன பட்டாசு மாதிரி மெதுவா பேசுற நீ பேசுறதே உனக்கு கேக்க மாட்டேங்குது எனக்கு கேக்குமா?

வண்டியில் ஒரு வேலை விஷயமா சென்று கொண்டிருந்த சந்துருவை அழைத்த சௌமியா தனக்கு  கேக்காத குரலில் பேச சந்துரு பேசியதை கேட்டு பல்லை கடித்தாள்.

‘நேசமணி சாரும் உங்க அம்மாவும் வீட்டுக்கு வந்திருக்காங்க நீ சீக்கிரம் வா” என போனை அணைத்தாள்.

“அப்பாவும் அம்மாவும் எதுக்கு மியா வீட்டுக்கு போய் இருக்காங்க குழம்பியவாறே அவள் வீட்டுக்கு வண்டியை திருப்பினான்.

“என்னம்மா சந்துரு கிட்ட பேசிட்டியா?” உங்க ரெண்டு பேர் பத்தியும் எனக்கு நல்லாவே தெரியும் என சொல்லாமல் சொன்னார் நேசமணி.

நீங்க  ரெண்டு பேரும் விரும்புறது எங்களுக்கு ஏற்கனவே தெரியும். தம்பி {சைதன்யன்} கல்யாணம்  முடியும் வர  அமைதியா இருக்கும் படி இவர் தான் என்ன கட்டுப்படுத்தி வச்சாரு, அப்பொறம் பொண்ணு படிப்பு முடியட்டும் என்றாரா இல்லனா எப்பவோ வந்திருப்பேன்” என்றார் சந்துருவின் அம்மா கலாவதி.

 

இங்கே சந்துரு சௌமியாவின் வீட்டை நோக்கி வரும் போது சைதன்யனை தூக்கி வண்டியில் ஏற்றுவதை கண்டு  அவ்வண்டியின் பின்னாடி பின் தொடர்ந்து சென்றான். மீராவின் துரதிஷ்டம் அவன் மீரா கீழே விழுந்திருந்ததை காணவில்லை.

நான்கு வண்டிகள் என்பதால் சந்துரு பின்தொடர்ந்து வருவதை கண்டு கொண்டவர்கள் அவனது பைக்கையும்  மறித்து நிறுத்தி அவனையும் ஏற்றி இருந்தனர்.

சைதன்யனை கட்டி போட்டு இருக்கும் இடத்தில் மயக்கமாக்காமல் அவனை கட்டி கீழே கிடத்தி இருந்தனர் வாயும் கட்டப்பட்டதால் பேச முடியாமல் சைதன்யனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தான்.

ஷரப் வந்து பேசும் போது சத்தம்  காட்டவே சந்துருவை தூக்கி அவனையும் ஒரு கதிரையில் அமர்த்தி வாய்கட்டை அகற்ற உத்தரவிட்டவன்.

“என்ன சந்துரு ஆருயிர் நண்பன் கூட ஒன்னா போலாம் என்று பின்னாடி வந்தீங்க போல” சொல்லி சிரித்தவனை “ஏன்டா பெரிய ஜோக் சொன்னது போல் சிரிக்கிற லூசுப் பயலே அவனை கடத்துன அவங்கப்பா பணம் கொடுப்பாரு என்ன ஏன்டா  கடத்துன எங்கப்பா போட்டு தள்ள சொல்வாரே” என முற்பாதியை கெத்தாகவும் பிற்பாதியை அழுகுரலிலும் சொல்ல மீண்டும் சிரித்தான் ஷரப்.” ஐ லைக் யூ தி வேய் யு ஆர் டல்கிங்” “இங்கிலீசு லூசு போல” என தனக்குள் மூணு முணுத்தவன் பாடிகார்ட் என நினைத்து அவனை அடி பின்னியெடுத்திருக்க  வலி தாங்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டான்.

“ஹலோ ப்ரோ ஐம் ஷரப். ஷரப் சௌதாகர்  நைஸ் டு மீட் யு’ என்ற

ஷரப்பின் குரல் கேட்டு அவனை நன்றாகப் பார்த்தவன் சைதன்யன் பக்கம் திரும்பி “டேய் உங்கப்பா இப்படி பண்ணுவாரென்று நம்பலடா எத்துணை பேருடா  இப்படி கிளம்பியிருக்காங்க உன் அண்ணன் தம்பியென்று ” சந்துருவின் பேச்சை பொருட் படுத்தாது

சைதன்யன் பலம் கொண்டமட்டும் விடுபட முற்சித்த வாறே “எங்கடா என் ஸ்ரீ” என்று கத்த “சு சு சு பொண்டாட்டி மேல அவ்வளவு பாச…..ம்” என்றான்  ஷரப்.

அவன் கண்களில் இருந்த கொலை வெறியும் பலி உணர்ச்சியும் சைதன்யனை உள்ளுக்குள்  அச்சத்தை ஏற்படுத்த மீரா என்ன ஆனா என்ற கவலை தொற்றிக்கொள்ள அவனிடம் சமாதானமாக பேசத்துவங்கினான்.

 

சைதன்யனுக்கும் மீராவுக்கு அழைத்து நாளை மறுநாள் நல்ல நாளாக இருப்பதால் வீட்டுக்கு அழைத்து செல்ல வருவதாக கூறவேண்டும் என லட்சுமி அம்மா பல தடவை முயற்சி செய்தும் “நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்” என கணனி குரல் சொல்ல “லண்டன் எல்லைல இருக்கும் போதே என் பையன் பேசுவான் தொடர்பு எல்லை ல இருந்தா பேச மாட்டானா? என கோபமாக போனை கீழே போட “என்ன லட்சு என்ன ஆச்சு” “உங்க பையனுக்கு போன போட்டேன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கானாம் உங்க போன குடுங்க அதுல பேசி பாக்குறேன்” சரவணன் சிரித்தவாறே “என் போன் ல போட்டா மட்டும் தொடர்பு எல்லைக் குள்ளே வந்துடுவானா? அவரின் போன் குறுந்செய்தி வந்ததாக ஒலி எழுப்ப சைதன்யன்  தான் அனுப்பி இருப்பான் என எண்ணி பிடுங்காத குறையாய் வாங்கிப் பார்த்தவர் மயங்கிச்சரிந்தார்.

அவர் மயங்கிச்சரியவும் ‘லட்சு’ என கத்த வீட்டு வேலையாட்கள் ஓடி வந்தனர். லட்சுமி அம்மா உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். போனில் வந்த குறுச்செய்தியை பார்த்த சரவணன் சார் அதிர்ச்சியில் அமர்ந்தார்.

சந்துரு வராமல் போகவே கல்யாணத்தை பேசிமுடித்த நேசமணி சந்துருவின் மேல் கொலை வெறியில் இருக்க லட்சுமி அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவர சௌமியாவையும் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டார் நேசமணியும் கலாவதியும். மீரா குடும்பமும் வந்து சேர்ந்தனர்.

அங்கே சென்றவர்களுக்கு பேரதிர்ச்சியாக சைதன்யன் கடத்தப்பட்டது தெரியவர கடத்தியவனிடமிருந்து எந்த ஒரு கோரிக்கையும் இதுவரை வந்திருக்கவில்லை அதனால் என்ன செய்யலாம் என ஒரு முடிவுக்கும் வர முடியாமல் தவித்தனர்.

 

“என் ஸ்ரீ எங்க?”

“ஹாஹாஹா கோபப்பட்டா வேலைக்காகாதென்று அமைதியா பேசுறியா பாய்{ப்ரோ} உனக்கு ஒரு கத சொல்றேன் கதையை கேட்டுட்டு இந்த கதைல யொத்தா [போர்வீரன்] பத்தி  பாத்துட்டு நீ ஹீரோவா? நா ஹீரோவா? னு தெரிஞ்சிக்கலாமா?

ராஜஸ்தானையே ஒரு அரசர் ஆண்டாராம் அவருக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு இளவரசர் தான் அடுத்த கிங் அவரை விட்டுடுவோம் கத நம்ம இளவரசியோடது.

 சைதன்யன் மற்றும் சந்துருவின் பார்வை ‘இவன் என்ன லூசா’ என்றிருக்க ஷரப் மேலும் தொடர்ந்தான்.

அந்த இளவரசி தளபதி மேல மையல் கொண்டு… காதல் கொண்டிருந்தாளாம். யுத்தத்துல வெற்றியோட திரும்பின தளபதிக்கு அரசர் ஒரு ‘வாளை’ பரிசளித்து இளவரசியை மணமுடிச்சி கொடுத்து கௌரவ படுத்தினாராம். அந்த வாள் தான் யொத்தா. {योद्धा/yoddha }

 

பாய்…….ஸ் ஏதாச்சும் புரிஞ்சதா?” சைதன்யனை ஏறிட்டவாறே கேட்க “கன்போர்ம் இவன் லூசுதான் ஐயோ ஒரு சைக்கோ கிட்ட வந்து மாட்டிகிட்டேனே” சந்துரு சத்தமாக புலம்ப

 

“ஸ்ஸ்ஸ்ஸ்” வாயில் விரலை வைத்து சந்துருவின் முகத்தின் அருகே முகத்தை கொண்டு வந்தவன் “கத சொல்லும் பொது குறுக்க பேச கூடாது எனக்கு கெட்ட கோவம் வரும்” ஷரப் சொல்ல “கோவத்துல ஏதடா நல்ல கோவம் கெட்ட கோவம் லூசு லூசு” சந்துரு முணுமுணுக்க ஷரப்பின் சிவந்த கண்களை கண்டு பேச்சு சந்துருவும் உள்ளுக்குள் குளிரெடுத்தாலும் அவனை நக்கல் பார்வை பார்த்தான்.

 

“எங்க விட்டேன் ம்ம்ம் ஆஆ… “யொத்தா” எஸ் யொத்தா வ பரம்பரை பரம்பரையாய் குடும்பத்தின் மூத்த ஆண் வாரிசுக்கு கொடுக்கப் படுமாம். அப்படி கொடுக்கப்பட்ட ஒரு வாரிசுக்கு இரண்டு  பையனும் ஒரு பொண்ணும் இருந்தார்களாம்.

 

அந்த கிழவி  [அந்த கிழவி நம்ம தீரனோட தந்தை வழிப் பாட்டி தான்] தமிழ் நாட்டுல இருந்து வந்த வியாபாரி ஒருத்தன காதலிச்சு ஓடி போய்ட்டாளாம். அண்ணன் தம்பிக்குள்ள பிரச்சினையாகிருச்சு தம்பி  தான் அந்த வியாபாரிய வீட்டுக்கு கூட்டிட்டு வந்தான் என்று அண்ணன் சண்டை போட அண்ணன் தான் வியாபாரம் செஞ்சான் என்று தம்பி சண்டை போட சண்டை முத்தி அண்ணனை பலி வாங்க தம்பி யொத்தா வ தூக்கிட்டு சு.. சு.. சு..” தலையை இடது புறம் வலது புறமாக ஆட்டியவாறே “திருடிட்டு சுவடே இல்லாம காணாம போய்ட்டான்.

ரெண்டு தலை முறையா ராஜஸ்தானை புரட்டிப் போட்டு கிடைக்காத யொத்தா மூன்றாம் தலைமுறையின் ஒரே வாரிசான ஷரப் சௌதாகர் எனும் நான் தமிழ்நாட்டுல யொத்தா இருக்குறத கண்டு பிடிச்சிட்டேன்” என வில்லச் சிரிப்பு சிரிக்க சைதன்யனுக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.

“என்ன ப்ரோ இன்னும் புரியலையா? புரியாத மாதிரி நடிக்கிறியா? நம்ம கொள்ளு தாத்தா ‘விஸ்வதீர் சௌதகர்’ அரசரிடம் பரிசாக பெற்ற வாள் ‘யொத்தா’ உன் அப்பனோட தாத்தா திருடிட்டு இங்க ஓடி வந்துட்டான். அது எனக்கு சொந்தமானது  அண்ட் தங்க யு சோ மச் சந்துரு நீ பேஸ்புக் ல போட்டோ போட்டதால் தான் என்னால  கண்டு பிடிக்க முடிஞ்சது” சொல்லியவன் ஏதோ சாதித்த மாதிரி நிம்மதி பெரு மூச்சடைந்தான்.  

 

“ஏன்டா களவானி வம்சமாடா நீ போயும் போயும் உன்ன பிரெண்டா வச்சிருக்கேனே து… உண்மையான  வாரிசான ரௌடி சார் என்ன விட்டுடுங்க மீ பாவம் மீரா சிஸ்டரும் பாவம் அவங்க எங்க இருக்காங்கனு சொல்லுங்க நா அவங்கள கூட்டிட்டு போயிடுறேன் இவன என்ன வேணாலும் பண்ணிக்கோங்க” சந்துரு அப்பாவியாய் கெஞ்ச

 

அவனை புன்னகையுடன் பார்த்த ஷரப் “என்ன என்ன தேர்ட் ரேட்  ரௌடி என்று நினைச்சியா உன் பேச்சுல பாவப் பட்டு மனசு இறங்க” “பளார்” சந்துருவை  அறைந்தான். “அம்மா… அடியா இது இடி மாதிரி இருக்கு” கடை வாய் ஓரம் இரத்தம் சொட்ட சொட்ட சந்துரு சொல்ல “சந்துரு அடங்குடா” சைதன்யன் அதட்ட “குட். டீல் பேசலாமா?” ஷரப் சைதன்யனை பார்த்த போது வ்ருஷாத் வந்து ஏதோ சைகை செய்ய எழுந்து சென்றான்.

 

சைதன்யன், மீரா சந்துரு மூவரினதும் உயிருக்காக “யொத்தா” வேண்டும் என்ற கோரிக்கையை பார்த்து சரவண சார் உட்பட அனைவரும் யாரிந்த யொத்தா என குழம்பினர்.

இங்கே மீரா கண்விழித்து சுற்றும் முற்றும் பார்த்து ஒன்றும் புரியாமல் தலை கணக்க தலையில் இருந்த கட்டை கண்டு தான் ஏதோ ஒரு வண்டியில் மோதியது நியாபகத்தில் வர தொடர்ந்து சைதன்யன் சொன்னவைகளும் நியாபகத்தில் வந்து மீண்டும் மயங்கி சரிந்தாள்.

 

Advertisement