Advertisement

                                                            அத்தியாயம் 29

 

காலின் பெல் அடிக்கவும் தலையில் கைவைத்தவாறே அமர்ந்திருந்த சைதன்யன் ‘ப்ரியா வந்து விட்டாங்க’ என நினைத்தவாறே கதவை திறக்க அவனை தள்ளிக் கொண்டு தேவ் உள்ளே வந்தான்.

“அம்மு அம்மு” மீராவை அழைத்த வாறே படுக்கையறையினுள் நுழைந்த தேவ் மீரா அழுத வாறே இருப்பதை கண்டு அவளை அணைத்து என்ன நடந்தது என விசாரிக்க “வேத் அத்தான்” என அவனின் மேல் பாய்ந்தவளின் அழுகை மேலும் கூடியது.

 

ப்ரியா வண்டியை நிறுத்தி விட்டு வர முன் தேவ் காரை விட்டிறங்கி பாசமலையில்  நனைய சென்றிருக்க காரை பூட்டிக்கொண்டு வீட்டினுள் வந்த ப்ரியா சைதன்யன் கையை கட்டியவாறே நின்றுகொண்டு ஜன்னலுக்கு வெளியே வெறித்தவாறே  நின்றிருந்த தோற்றம் மனதுக்குள் ‘ஏதோ சரியில்லை’ என்று தோன்ற அவனிடம் பேச முற்பட்ட போது புயலென அறையிலிருந்து வெளியே வந்த தேவ் சைதன்யனை அறைந்திருந்தான். தேவ்வை  திருப்பி அடித்தான் சைதன்யன் அதிர்ச்சியடைந்து ப்ரியா அவர்களை பார்த்தாலே ஒழிய அவர்களை விளக்க தோன்றாமல் ஸ்தம்பித்திருந்தாள்.

 

“என்னடா பண்ண மீராவ உன்னால தான் அவ சாவோட விளிம்புக்கே போயிடு வந்தா எக்சிடெண்ட் ஆனதால் அம்னிஷியானு நெனச்சிட்டு இருந்தேன்  எல்லா டேஸ்டும் எடுத்தப்ப தான் பார்ட்டியல் அம்னீசியாவாலும் பாதிப்படைஞ்சு இருக்கானு தெரிஞ்சது அதுக்கு முழுக்க காரணமும் நீ……….. நீ மட்டும் தான். அவ எக்சிடண்ட் ஆனதுக்கு  நீ தான் காரணம் நீ மட்டும் தான்” சைதன்யன் திருப்பி அடித்ததால் ஆவேசமடைந்த ப்ரியாவிடம் கூட சொல்லாத உண்மையை போட்டு உடைத்துக் கொண்டிருந்தான் தேவ்.

 

மீரா போட்ட பலி பத்தாதென்று தேவ் வேற கத்திக்கொண்டிருக்க உண்மை நெஞ்சை அறுக்க தேவ்வின் இரு கைகளையும் பிடித்து தள்ளியவன் சோபாவில் அமர்ந்தான். நெஞ்சடைக்க தலை கவிழ்ந்தவன் “ஆமா என்னாலதான்……. என்னாலதான் என் ஸ்ரீகு இப்டியாச்சு நான் தான் சொன்னேனே நா அவளுக்கு  வேணாம்னு நீ தான் நா சொல்றத கேக்கலையே!” தலை உயர்த்தி அவனை பார்த்தவன்.”ஸ்ரீய கூட்டிட்டு போய்டு தேவ்” என வலியின் கணம் தாங்காமல் கண்ணீர் வடித்தான்.

 

தான் அவசர பட்டு வார்த்தையை விட்டதை நினைத்த தேவ் சைதன்யனின் உணர்வுகளை புரிந்தவனாக அவன் தோளில் கை வைத்தான். “ஸ்ரீ கு நா வேணாம் என்னால தான் ஆச்சு” என சைதன்யன் திரும்பத் திரும்ப புலம்பியவாறே இருந்தான்.

 

 ப்ரியாவை மருத்துவமனையில் தேவ் சந்தித்த போது தான் சைதன்யன் போன் பண்ணியது. என்ன நடக்குது இங்க தேவ்வை அழைத்து வந்திருக்க கூடாதோ என்ற எண்ணமே ப்ரியாவுக்கு.  மீரா என்ன சொன்னாள்?  தேவ் இவ்வளவு கோபப்பட  மீராவின் எக்சிடன்டுக்கு சைதன்யன் காரணமா? என்ன பேசுறாங்க இவங்க ஒண்ணுமே புரியலையே! வாதம் நடக்கும் போது இவ்வாறே இருந்தது ப்ரியாவின் மனதில் ஒன்றும் கேட்கத்தோன்றாமல் மீராவின் அறையினுள் நுழைந்தாள் ப்ரியா.

 

மீரா அழுது அழுது முகம் வீங்கி இமைகள் தடித்து கட்டிலில் ஒரு மூலையில் அமர்ந்திருக்க அவளை பார்த்த ப்ரியாவுக்கோ சிரிப்பு தான் வந்தது “ஏய் என்னாச்சு இப்படி இருக்க” சாதாரணமாகவே கேட்டாள் ப்ரியா. தாயின் மடி தேடும் குழந்தை போல அவள் மடியில் தலை  வைத்து “எனக்கு என்னமோ ஆச்சு அத்து” அவளை பேச விடாது “பாரு தலையை கூட வாராமல் வீட்டுக்கு விளக்கு வைக்கிற நேரத்துல இப்படியா இருப்ப” “அத்து உனக்கு வது அத்தையோட காத்து பட்டு இருக்கு அத்த மாதிரியே பேசுற” என கண்ணீருடன் புன்னகைக்க.

 

ஒண்ணுமே இல்லாத விசயத்துக்கு மீரா இவ்வளவு அழுது இருக்க மாட்டா என புரிந்தாலும் ப்ரியாவை பொறுத்த வரை பேசி தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவுமே இல்ல “இப்ப சொல்லு எதுக்கு இவ்வளவு அழுகை” ப்ரியாவிடம் என்னவென்று சொல்வாள் தன் கணவனிடம் உரிமையாக சண்டையிட்டு இருந்தாலும் அந்தரங்க விஷயத்தை எப்படி சொல்வது “திரு திருனு முழிக்காம சொல்லுமா”  

 

இதுவே சௌமியா கேட்டிருந்தால் சொல்லி இருக்க மாட்டாள். ப்ரியா ஒரு டாக்டரும் கூட சொனனால் தீர்வு நிச்சயம் கிடைக்கும் ஆனால் எப்படி சொல்வது ப்ரியாவின் முகத்தை பார்ப்பதும் தலையை  குனிவதுமாய் சில நிமிடங்கள் கடக்க

 

“மீரா உனக்கு நா அட்வைஸ் பண்ண எதுவுமே இல்ல மத்தவங்க உணர்வ புரிஞ்சி அதுக்கு ஏத்த மாதிரி நடந்து  கொள்ளும் பொண்ணு நீ உனக்கு தேவ் கிட்ட எவ்வளவு உரிமை இருக்கோ அதே உரிமை என் கிட்டயும் இருக்கு அத நான் சொல்ல வேண்டியதில்லையே உனக்கும் தனுக்கும் என்ன பிரச்சினை? நீ சொன்னாத்தானே என்னால சொலூஷன் தர முடியும். ” நிறுத்தி நிதானமாக வந்தது ப்ரியாவின் வார்த்தைகள்.

 

ப்ரியா பேசப் பேச மீராவின் தயக்கம் விலகி கொஞ்சம் கொஞ்சமாக வாய் பூட்டும்  அகன்றது. “அத்து எனக்கு என்னமோ ஆச்சு நா.. நா..அவரை ……அவரை ..ரொம்ப தேடுறேன்” திக்கித் தினறி அறையும் குறையுமாக மீரா சொல்ல அவள் என்ன சொல்கிறாள் என ப்ரியாவுக்கு உடனே புரிந்தது மேலும் அவளை வருத்தாமல் “சந்தோசமான விஷயம் தானே மீரா” “இல்ல அத்து இட்ஸ் ரியலி அன்யூசுஅல் பிஹேவியர்,  எப்படி புரியவைப்பதென்று எனக்கு தெரியல” மீரா முந்தானையில் நுனியை திருக்கியவாறே சொல்ல ப்ரியாவின் மனதில்  சந்தேகம் எழுந்தது.

 

அடுத்து ப்ரியா கேட்ட கேள்வியிலும்  சொன்ன செய்தியிலும் “நோ……..” என மீரா காத்த வாசலில் அமர்ந்திருந்த தேவ் சைதன்யனின் சட்டையை பிடித்தான்.

தேவ்வை முறைத்த சைதன்யன் “நா உன் கண்ணு முன்னால தானே இருக்கேன் அவ அறைக்குள்ள கத்தினத்துக்கும் நா தான் பலியா?” கோவமாக சொல்ல வேண்டியதை சிரித்த வாறே சொன்னான் சைதன்யன்.

சைதன்யன் தேவ்வை அறிந்திருந்த வரையில் மீராகு ஒன்றென்றால் சம்பந்த பட்டவங்கள ரெண்டா வகுக்கும் ரகம். கொஞ்சம் முன்னாடி அவனை அடித்தவன் தான் ஆறுதலாகவும் தோளில் கை வைத்து பேசிக் கொண்டிருந்தான் மீராவின் அலறலில் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிறுச்சு.

 

“சாரி ப்ரோ அம்மு ஏன் கத்துனா? அப்பாவியாய் கேட்க்கும் தேவை குறும்புடன் பார்த்து “உன்னோட  அருமை பொண்டாட்டி தான் உள்ள இருக்காங்க என்ன ஏன் கேக்குற’  உள்ளே என்ன பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் என புரிந்தவனாக. ஆனாலும் அவள் எதுக்கு கத்தினாள் என புரியாதவனாக.

“இவ சொல்றத கேட்டு நியாயமா பார்த்தா ப்ரியா தான் கத்தி இருக்கணும் என்ன நடக்குதுன்னு தெரியலையே? பதட்டம் கொஞ்சம் தொற்றிக்கொள்ள தேவ்வை ஏறிட்டான் அவனும் பதட்டமாகவே “இரு கதவை தட்டி பாக்கலாம் என சொல்ல கதவை திறந்து கொண்டு ப்ரியா வெளியே வந்தாள்.

அவர்கள் இருவரையும் கண்டுக்காமல் சமயலறையில் புக பின்னாலயே வந்த இருவரும் மீராவை பற்றி மாறி மாறி கேள்வி கணைகளை தொடுக்க பிரிஜ்ஜை திறந்து சாக்லட்டை கையில் எடுத்தவள் வாசலுக்கு வந்து கடவுளின் படங்களின் முன்னாள் வணங்கி நின்றாள்.

அவள் என்ன செய்கிறாள் என கவனிக்கும் மனநிலையில் இருவரும் இல்ல கேள்விகள் மட்டும் நிறைந்திருக்க மீராவை பார்க்க செல்லாது அவள் பின்னாடியே வந்தவர்கள் அவள் ஒரு இடத்தில் நிற்கவும் “சொல்லு ப்ரியா மீராகு என்ன ஆச்சு என் கிட்ட எதுவும் சொல்லாம அழுது கிட்டே இருக்கா இவன் தான் ஏதாச்சும் பண்ணிட்டானா?” என சைதன்யனை தேவ் முறைக்க

அவனை திருப்பி முறைத்தவன் ப்ரியா என்ன சொல்ல போறாளோ என காத்திருக்க அவளோ கூலாக சாக்லட்டை பீஸ் பீஸாக உடைத்து  இருவரிடமும் கொடுத்து “மீரா ஈஸ் ப்ரெக்னன்ட்” என புன்னகைக்க “வாட்” என இருவருமே ஆனந்தமாக அதிர்ந்தனர்.

ப்ரியா மனதில் எழுந்த சந்தேகத்துடன் மீராவிடம் கேட்டது “கடைசியா எப்போ குளிச்ச” னு தான் “இன்னக்கி தான் அத்து” என்றவள் ப்ரியாவின் முறைப்பில் அவள் எதை பத்தி கேட்கிறாள் என புரிந்தவளாக விரல்  எண்ணி யோசித்தவாறே “நோ” என கத்தி விட்டாள்.

 

“ஏன்டி கத்துற உன் அத்தான் கதவை உடைச்சிட்டு உள்ள வந்துட போறாரு ” “பாப்பாக்கு.. பாப்பாக்கு அதனால எந்த ஆபத்தும் வராதில்ல” என்றவள் சிறிது நேரம் யோசித்து “அத்து கற்பமானா வாமிட் வருமில்ல சினிமால எல்லாம் காட்டுவாங்களே மயக்கம் போட்டு விழுறதும் வாந்தி எடுத்தா கன்சீவ் ஆகிட்டாங்கனு சொல்றாங்களே எனக்கு வாமிட் வரவே இல்லையே அப்போ நா கர்ப்பமா இல்லையா?” வந்த சந்தோசம் காற்று போன பலூன் போல் முகம் வாட கேட்டவளை  “இந்த   ப்ரெக்னன்ஸி  டெஸ்டிங் கிட் போய் செக் பண்ணிட்டு வா” முகம் மலர வந்தவளை கதிரையில் அமர்த்தி அவளின் தலையை வாரி பின்னலிட்டவாறே

 

“அநேகமாக வாமிட் வந்து படுத்தியெடுக்கும்  எல்லாருக்கும் வாமிட் வராது மீரா. சில பேருக்கு உன்ன மாதிரி வாமிட் வராம கோவம் அதிகமா வரும்” என சிரிக்க  ப்ரியாவை மீரா புரியாத பார்வை பார்த்தாள்.

 

“சில பேருக்கு வெளிச்சம் கண்டா பிடிக்காது ஜன்னல் எல்லாம் சாத்தி விட்டு அறைக்குள்ளேயே அடஞ்சி கிடப்பாங்க, சில பேரால சாப்பிடவே முடியாம வாமிட் பண்ணி கிட்டே இருப்பாங்க அவங்கள ஹாஸ்பிடல் அட்மிட் பண்ணி சேலைன் கொடுக்கும் நிலைமையும் வந்திருக்கு. சோர்வு, தலைசுத்தல், தலைவலி, உடம்பு வலி, அவங்க விரும்பி சாப்பிடும் சாப்பாட்டின் வாசம் கூட பிடிக்காம போய்டும், ஒன்னும் இல்லாத விஷயத்துக்கெல்லாம் கோவமும் வரும்  ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதம் உனக்கு அந்த பீலிங்ஸ் அதிகமா இருக்கு எல்லாம் மூனு நாலு மாசத்துல நோர்மல் ஆகிடும்.  

 

“ஏன் எனக்கு மட்டும் இப்படி” “நல்ல கேள்விமா அத உன் வயித்துல இருக்குற பாப்பா தான் சொல்லணும். என் புருஷன் உன் புருஷன முறைச்சிகிட்டே இருக்குறாரு நா போய் விசயத்த சொல்லிட்டு வரேன் நீ போய் முகம் கழுவி துணிய மாத்து” என ப்ரியா வெளியே வந்து கூலாக விசயத்த சொன்னதும் இருவரும் “வாட்” என ஆனந்தமாக அதிர்ந்தனர்.

சைதன்யனை முந்திக்கொண்டு தேவ் அறையினுள் செல்ல ப்ரியா தலையில் கை வைத்தாள்.

“அம்மூ நா மாமாவாக போறேன்” என அவளை அணைத்து  தலையை தடவியவாறே கேள்வி மேல் கேள்வி கேக்க சைதன்யன் கடுப்பாக நின்றிருந்தான். அவனை கண்ட மீரா  அவள் அவனிடம் நடந்து கொண்ட முறையை நினைத்து அவனிடம் எப்படி பேசுவதென்று தயங்க தேவ் இப்பொழுது வெளியே வரமாட்டன் என புரிந்துக் கொண்ட சைதன்யன் அவளை ஏக்கப் பார்வை பார்த்த வாறே வெளியே சென்று லட்சுமி அம்மாவை அழைத்து மீரா கன்சீவ் ஆனா விஷயத்தை பகிர்ந்தான். ப்ரியாவும் சரஸ்வதி அம்மாவுக்கு போன் போட்டு சொல்லி இருக்க எல்லாருக்கும் விஷயம் பகிரப்பட்டு அனைவரும் சைதன்யன் வீட்டுக்கு படையெடுத்தனர்.

 

Advertisement