Advertisement

                                                                                        அத்தியாயம் 28

 

தன்னுடைய தனி விமானத்தில் கோயம்புத்தூர் வந்திறங்கினான் அவன்‘  ஷரப் சௌதகர்  ராஜஸ்தானியர்களுக்குரிய மேனியின் நிறம் ஆறடிக்கு மேல் உயரம். அவனை மூண்டாசில் பெரிய மீசையில் கற்பனை பண்ணினால் பக்கா வில்லன் தோற்றம் ஆனால் அவனோ கோர்ட் சூட்டில் தாடி மீசை இல்லாத முகமாய்   பழுப்பு நிற  கண்களை மறைக்க கூலர் அணிந்து  கன்னம் குழிவிலும் புன்னகையுடன் பார்க்க பாலிவுட் ஹீரோ மாதிரி இருந்தான்.

 

அதே வாள் தானே பேஸ்புக்கில் போட்டோ போட்டு ரெண்டு மாசத்துக்கு மேலாகுது யார் போட்டா?  எப்போ எடுத்த போட்டோ?  எல்லாம் சரியா வெறிபாய் பண்ணிடீங்கள்ல எந்த தப்பும் நடக்க கூடாதென்று தான் பொறுமையா விசாரிச்சு காய் நகர்த்துறேன்.  தட்ஸ் மை ஸ்டைல்.  என கர்வமாக புன்னகைத்தவன். அவன் முன் இருந்தவரை கேள்வி கணைகளால் துளைத்துக் கொண்டிருக்க அவனுடைய மொபைல் அலறியது பேசிக் கொண்டிருந்தவரை அமைதியாக இருக்கவும் என சைகை செய்தவன் காலை எடென்ட் பண்ணினான்.

 

மறுமுனையில் என்ன சொல்ல பட்டதோ “வோ மெரி ஹேய் சிரப் மெரி  ஹேய்” {she  is mine   only mine } . நான் அவளை அடைந்தே தீருவேன்,  யார் தடுத்தாலும் ஏன் அவளே தடுத்தாலும்” என கர்ஜனை குரலில் கூறியவன் போனை அணைத்து முகத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவன் அவரை நோக்க

 

எஸ் சார் சைதன்யன் சௌதாகர் சான் ஒப் சரவணன் சௌதாகர். அவரோட மேரேஜ் அன்னக்கி தான் வாள் வெளியே எடுக்கப் பட்டிருக்கு அந்த போட்டோல அவரோட முகம் சரியா தெரியல பட் மணப்பெண்ணின் முகம் தெளிவா தெரியுது அத வச்சு தான் அவங்க பாமிலிய கண்டு பிடிக்க முடிஞ்சது. அவரோட நண்பன் சந்துரு எங்குறவரோட பேஸ்புக் ஐடி ல தான் போஸ்ட் செய்யப் பட்டிருக்கு. அவங்க இப்போ சென்னைல தான் இருக்காங்க ஆனா…..”

 

அவன் மேலே சொல்லுமாறு சைகை செய்ய “அந்த வாள் சென்னையில் உள்ள அவங்க வீட்டுல இல்ல அவங்க பூர்வீக வீட்டில தான் இருக்கும் என்ற சந்தேகம் சார் அண்ட் சைதன்யன் சார் அவங்க அப்பா  கூட தங்காம தனியா வீடெடுத்து அவர் வைப் கூட தங்கி இருக்கிறார்.” அவர் சொல்ல சொல்ல நெற்றி சுருக்கி யோசித்தவன்.

 

ஐ நீட் மை ஸ்வார்ட்  ப்ரோம் தேம்  அண்ட் ஆல்சோ கோயி ஸ்மால் டீடைல் பீ மத் சோடியே {ஒவ்வொரு சின்ன டீடைலாயும் விடாதீங்க}  என் பார்வைக்கு எல்லாம்  “எல்லா……….மே வரனும்.  அந்த எல்லாமே யை சொல்லும் போது அவரை  அழுத்தமாக பார்த்து கூறி  “ என்ன பண்ணனும் எப்ப பண்ணனும் நா சொல்லுறேன் ஐ ஹாவ் லிட்டில் ஒர்க் ஹிய முடிச்ச உடனே சென்னை கிளம்பிடுவேன் நீங்க இப்போ சென்னை போய் எல்லா ஏற்பாடும் பண்ணுங்க நா வரேன்” என குரூரமாய் புன்னகைத்தான்.

 

பல காலமாய்   ராஜஸ்தானை புரட்டிப் போட்டு  மூளை முடுக்கிலும் தேடிய வாள்  இருக்கும் இடம் அறிந்தவன் மகிழ முடியாமல் அவன் நெஞ்சில் சுமப்பவளுக்கு திருமணமாம் அதுவும் காதல் திருமணம் என்றதும் சென்னை செல்லாது கோயம்புத்தூர் வந்திறங்கியவன் அவளின் மேல் கொலைவெறியில் இருந்தான்.

 

என் பணத்தைப் பார்த்து அழகப்ப பார்த்து என் படுக்கைக்கு வராத பெண்ணும் இல்ல  என் கன்னக்குழியில விழாத பெண்ணும் இல்லடி என்னையே வேணாம்னு சொல்லுறியா வரேண்டி வந்து உன் காதலன் முன்னாடியே உன்ன தூக்குறேன்டி” வெறிகொண்ட வேங்கையாய் அறையினுள் அங்கும் இங்கும் நடை பயின்றான். என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுத்தவன் பி.ஏ வ்ருஷத்தை ஏறிட்டான்.

 

காதல் ஒரு மனிதனை என்ன பாடு படுத்துகிறது இரண்டு தலைமுறையாய் தேடும் வாளை விட தன்னை வேண்டாம் என்று சொன்னவள் தான் முக்கியமென அவளை அடைவது தான் குறிக்கோளாலென அவளை கடத்தியாவது அவளை அடைய முடிவு செய்தான். அவனுக்கு தேவையானதை எவ்வழியிலும் அடைந்தே தீருபவன்.

 

மீரா அழுது அழுது முகம் வீங்க அமர்ந்திருக்க அவளை சமாதானம் செய்யும் வழி தெரியாமல் அவளை பார்த்தவாறே வேதனை நிறைந்த நெஞ்சோடு  அமர்ந்திருந்தான் சைதன்யன்.

அவன் அவள் அருகில் போனாலே கண்ணீரை தாரை தாரையாக உதிர்க்கும் அவள், அவன் விலகிப் போனால் விசும்ப ஆரம்பித்தாள்.

 

அவளை எப்படி கையாளுவதென்று ஒரு கணம் யோசித்தவன் “தேவ்வை போனில் அழைத்து பேசலாமா…….ம்ம்ம் இல்ல ப்ரியா வா அழைக்கலாம் இவ சொல்ற விசயத்துக்கு ஒரு பெண் தான் சரி அவங்க டாக்டர் வேற” என மனதுக்குள் பேசியவன் ப்ரியாவை அழைத்து உடனே வீட்டுக்கு வருமாறு சொல்ல “என்ன மாப்புள ஏதாச்சும் ஹாப்பி நியூஸ் சா” என கேட்க என்ன சொல்வதென்று முழித்தவன் “அது மீரா கொஞ்சம் அப்சட்டா இருக்கா கொஞ்சம் சீக்கிரம் வாங்க” என போனை துண்டித்தான்.

 

யாரு ப்ரியா போன்ல” அவள் புறம்  திரும்பாமலேயே தேவ் கேட்க ப்ரியா யோசித்தவாறே “நம்ம சையு தாங்க” “haha  நீ தனு என்றே கூப்டு சையு னு கூப்பிடறது மீரா காதுல விழுந்துச்சு வேத் அத்தானோட அத்துனு பாக்க மாட்டா” தேவ் கிண்டல் குரலில் சொல்ல அவள் புறமிருந்து  பதில் ஏதும் வராமல் போகவே அவளை திரும்ப பார்க்க வெளியே செல்வதற்காக தயாராகுவது தெரிய அவளை இழுத்து நிறுத்தியவன் “மீராகு என்னாச்சு”அவனை ஆச்சரியமாக பார்த்தவள் எத்தகைய அன்பு இவனுடையது என பொறாமையும் பட்டாள்.  “என்ன அப்படி பாக்காம மீராகு என்ன ஆச்சு னு சொல்லு” அவனின் பதட்டம் அப்பட்டமாக தெரிய “தெரியல தேவ் அவசரமா வர சொன்னார் மீரா கொஞ்சம் அப்சட்டா இருக்கிறாளாம்” அவ்வளவு தான் ப்ரியாவுக்கு முன் வண்டியில் அமர்ந்தான் தேவ்.

 

மீரா சொன்னதை அவன் எப்படி ப்ரியாவிடம் சொல்வது?

அவன் நெஞ்சில் தலை வைத்து அழுபவளை என்ன ஏதென்று அடித்துப் பிடித்து எழுந்து விசாரிக்க ” என்ன ஏதோ பண்ணிட்ட நா… நா.. எப்படி..   இப்படி.. மாறிப் போனேன். இப்படி அதுக்கு… அதுக்கு… அடிமையா” சொல்ல வருவதை சொல்ல முடியாமல் திணற, அவள் என்ன சொல்ல வருகிறாள் என புரியாதவனோ

 

என்ன ஸ்ரீஎன அவளை அணைக்க அவனை தள்ளி விட்டவள் “நீ தான் நீதான் நா சைதன்யனா பத்தி பேசும் போதெல்லாம் என்ன…. என்ன…” மேலே சொல்ல முடியாமல் தொண்டையடைக்க மூச்சு விட முடியாத படி கேவ  அவசரமாக தண்ணீரை ஊற்றி அவளுக்கு சைதன்யன் புகட்ட மறுப்பேதும் சொல்லாம மட மட வென குடித்தவள் மீண்டும் அவனை குற்றம் சாட்ட ஆரம்பித்தாள்.

 

 இவ்வளவு நேரமும் “நீ… நீ..” என தன்னை மீறி அழைத்தவள் ” நீங்க தனஞ்சயன் இல்ல சைதன்யன் என்று எனக்கு எப்போவோ தெரியும்” சைதன்யனின் அதிர்ச்சியான பார்வையை கண்டு கொள்ளாது “ஏன் என் கிட்ட பொய் சொன்னீங்க எல்லாருக்கும் தெரியும் என்னை தவிர” நொந்து விட்டான் சைதன்யன்.

 

அவளுடைய தற்போதைய நிலைமையில் அவள் தனஞ்சயனாக இருப்பது சைதன்யன் தான் என  அறிந்தால் அவளுக்கு ஏதாவது நடக்கும் என அஞ்சி அவளிடம் சொல்லாமல் மறைத்தால் அதை அவள் அறிந்துக் கொண்டதுமில்லாமல் அவனையே குற்றம் சாட்டுகிறாள்.  அவளுடைய மனக் குமுறலை கொட்டித் தீர்க்கட்டும் என அவன் அமைதியாகி விட அவனின் தலையில் இடியை இறக்கினாள் அவனின் மனையாள்.

 

 “நா எல்லாம் தெரிஞ்சி அமைதியா தான் இருந்தேன் ஒவ்வொருத்தரும் பண்ணும்  அலும்பு தாங்காம உங்க வாயாலேயே உண்மையா சொல்ல வைக்கணும்னு உங்கள டோச்சர் பண்ண வீட்டு வேல எல்லாத்தையும் உங்க தலைல கட்டி முயற்சி பண்ணேன். அவள் பண்ணிய வற்றை பட்டியலிட குட்டச்சி இவ்வளவு வேல பாத்துருக்கிறாளா அசந்து தான் போனான் சைதன்யன்ஆரம்பத்துல கஷ்டமா இருந்தாலும் அது சுகமான டோச்ர் டி என் பொண்டாட்டி  மனதுக்குள் சொல்லிய வாறே அவளை தீர்க்கமாக பார்க்க ஆனா நீங்க..நீங்க …” அவன் பார்வைவை தாங்காமல் தலை குனிய மேலும் தொடர முடியாத படி தொண்டை  அடைக்க ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

 

அப்போ நா சைதன்யன்னு ஏற்கனவே தெரியுமா?  எப்போ தெரிஞ்சது அது பிரச்சினை இல்ல போலயே இவ என்ன சொல்ல வாரா என குழம்பியவன்  “ஸ்ரீ சொல்றத தெளிவா சொல்லு முதல்ல அழுகுறத  நிறுத்து சும்மா சும்மா டாமை திறக்குற, இப்போ நிறுத்த போறியா இல்லையா சொல்றத அழுது முடிச்சிட்டு சொல்லு,  இல்ல சொல்லிட்டு அழு” அதட்டலாக அவன் கூற அவனின் அதட்டலில் வெகுண்டெழுந்தவள் ஆவேசமாக அவன் சட்டையை பிடித்தவள்  கட்டிலை காட்டி “ நீ.. நீதான் என்ன இப்படி மாத்திட்ட என்ன என்ன இதுக்கு அடிமையாக்கி வச்சிருக்க” என அவனை உலுக்க அவள் சொல்வதை புரிந்து கொள்ளவே அவனுக்கு சில நொடிகள் எடுத்தது.

 

ஏய் என்னடி உளறுற” திகைத்தவனாக சைதன்யன் அவளை ஏறிட “நீங்க தனஞ்சயனா இருக்குறத நா தெரிஞ்சிக்க கூடாதென்று நா பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் என்ன பேச விடாம இப்படி சீப்பா நடந்து கிட்டீங்க” அவள் சொல்ல சொல்ல அவளை அடிக்கும் வெறி ஏறியது.

 

அவனை இதை விட யாராலயும் அவமானப் படுத்த முடியாது  அவன் கைகளில் அவள் காதலால் உருகியதை இப்படி அர்த்தம் கொள்வாள் என கொஞ்சமேனும் நினைத்துப் பாத்திருக்க வில்லை. அவனின் காதல் கொண்ட மனம் அவளை தள்ளி வைக்க விடவும் இல்லை. எக்காலமும் அவனால் அது முடியாத காரியம். அவளின் பழைய நினைவுகள் வந்தால் அவள் எந்த மாதிரி முடிவெடுப்பாள்  என அறிந்திருந்தும் அவளின் காதல் மேல் வைத்த நம்பிக்கையில் அவளை நெருங்க எந்த வித தடையும் அவனுக்கு இருக்க வில்லை. ஆனால் இன்று அவனின் காதலை மாத்திரமல்லாது அவளின் காதலையும் சேர்த்து கொச்சை படுத்தி விட்டாள் அவனின் ஆருயிர் காதலி.

 

வந்த கோபத்திற்கு நாலு அற விட்டு இருக்கணும் அவனின் வளர்ப்பு முறையும் காதல் கொண்ட மனமும் அதை செய்ய விட வில்லை. அவளை அவன் ஒரு வார்த்தை பேசவோ திட்டவோ இல்ல ஒரு தடவை பேசியதற்கே அவளின் நிலைமை படுமோசமாகி  சாவை தொட்டு மீண்டு அவனிடத்தில் வந்து சேர்ந்து விட்டாள். எக்காலத்திலும் அவளை வார்த்தையால் வதைக்க மாட்டேன் என தனக்கு தானே சத்தியம் செய்து கொண்டான்.  

அவன் பொறுமையை விடாது மௌனம் காக்க

அவனின் மௌனமே அவளை மேலும் மேலும் பேசாத தூண்ட  

அவனின் பொறுமை எல்லை தாண்ட

கோபம் தலைக்கேற

அவள் பேசுவதை பொறுக்க மாட்டாமல் மேசையின் மேல் இருந்த பூச்சாடியை தூக்கிக்கி அடித்தான் சைதன்யன்.

அதில் அவள் சற்று அடங்கினாலும் அழுவதை நிறுத்த வில்லை.

 

அவளை சமாதானப் படுத்த எந்த முயற்சியையும் அவன் எடுக்க வில்லை அழும் அவளையே வெறித்த பார்வை பார்த்தவன் ப்ரியாவை அழைத்து விட்டான்.

 

ப்ரியா கேட்ட கேள்வியில் நோ……. என மீரா  காத்த சைதன்யனின் சட்டையை பிடித்திருந்தான் தேவ்.

 

Advertisement