Advertisement

                                              அத்தியாயம் 4

 

“என்ன ஆன்ஷிமா   நல்லா இருக்கியா? இந்தா ஜிலேபி சாப்பிடு. உனக்கு ஜிலேபினா ரொம்ப பிடிக்குமில்ல. இந்தா இந்த புதுத் துணியையும் போட்டுக்க, இந்தா பாரு அப்பா நிறையவே வாங்கிட்டு வந்து இருக்கேன்.இந்தா கொலுசு போட்டுக்க. இந்தா இத தடவினா எரிஞ்ச புண் காணாம போய்டும். ம்ம் உனக்கு வேறென்ன வேணும் சொல்லு அப்பா எல்..லாம் எல்..லாம் வாங்கித்தாரேன்”

 

மனீஷ் வீட்டுக்கு வந்ததிலிருந்து ஆனிஷாவின் மீது ஒருநாளும் இல்லாதவாறு பாசம் காட்டுவதும் துணிமணியும்,அணிகலனும்,உணவுப் பொருட்கள் என நிறையவே வாங்கி வந்திருக்க மீனாட்சிக்கு அவன் மேல் சந்தேகம் வந்தது.

 

“அடியேய் மீனாட்சி! நல்லா பாத்துக்க எல்லாம் எல்லா…ம் என் பொண்ணுக்குத்தான் வாங்கி வந்தேன். வாடி வந்து பாரு உனக்கும் இருக்கு நீயும் வந்து எடுத்துக்க. இந்த  சாரீ உனக்கு” என புடவையை நீட்ட ஒன்னும் பேசாது வாங்கிக்கொண்டார் மீனாட்சி.

 

மனீஷ் சந்தோச மிகுதியால் கண்ணை உருட்டி, குரல் உற்சாகத்தின் உச்ச கட்டமாக திக்கி திக்கி பேச மீனாட்சியின் அடி மனதில் அலாரம் அடிக்க ஆரம்பித்தது.

 

“ஏதோ சரியில்ல சின்ன வயசுல இருந்தே பணமா பார்த்த பொண்ணுமேல தீடீர் பாசம். நிச்சயமா இது சரியில்ல. பீரோவ வேற பூட்டி வச்சிருக்கான். பணம் அதிகமா கைல இருந்தா தான் பூட்டி வைப்பான். கடவுளே என் பொண்ண காப்பாத்து” மனதில் நினைத்தவர் மனத்தால் வேண்டிக் கொண்டார்.

 

மகளுக்காக மட்டும் வேண்டிக் கொண்டவர் அவருக்காகவும் வேண்டிக் கொண்டிருக்கணுமோ?

 

“ஹாய் டாட் நல்லா இருக்கீங்களா?” வைஷ்ணவி தேஜ்வீரிடம்  செல்லம் கொஞ்ச

“என்னத்த நல்லா இருக்கீங்களா? நீ பண்ண வேலைக்கு நான் நாண்டுக்கிட்டுத்தான் சாகனும். என்ன காரியம் பண்ணி வச்சிருக்கநீ இப்படி பண்ணுவேன்னு நான் நெனச்சிகூட பார்க்கல, உன்னால இப்படி கூட பண்ணமுடியுமா? என்னால நம்பமுடியல” {மக்களே! தேஜ்வீர் ஒரு நல்ல அப்பாவா பொண்ணுக்கு அட்வைஸ் பண்ணுறதா யாரும் தப்பா நினச்சிடாதீங்க}

 

“உன்ன யாரு ஷரப்புக்கு சப்போர்ட் பண்ண சொன்னது. அவன் எங்க எதிரி. அவன் இருக்குற வரைக்கும் இந்த சமஸ்தானம் எங்களுக்கு சொந்தமாகாது. என்ன கேக்காம எதுவும் பண்ண கூடாதுனு சொல்லி இருக்கேன்ல. எதுக்கு ஷரப் சொன்ன மாதிரி செஞ்ச?” தேஜ்வீர் போனில் வைஷ்ணவியை வறுத்தெடுக்க

 

வைஷ்ணவி போனை  லாவ்ட் ஸ்பீக்கரில் போட்டவள் கால் நகத்துக்கு நிறம் பூசியவாறே அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்க அவரோ பொரிந்துக் கொண்டே போக பொறுமையை இழந்தாள் வைஷ்ணவி.

 

“சும்மா நிறுத்துங்கப்பா! எப்போ பார்த்தாலும் என்னையே குத்தம் சொல்லி கிட்டு” நெய்ல் போலிஷ் பாட்டிலை மூடியவள் போனை கையில் எடுத்து லாவ்ட் ஸ்பீக்கரை அனைத்து காதில் வைத்து. ” நீங்க சொன்னீங்களா? அந்த கேடு கெட்ட மினிஸ்டர் கூட சேர்ந்து வேல பாக்குறீங்கன்னு நீங்க சொன்னநீங்களா? சும்மா எப்போ பார்த்தாலும் நொய் நொய் என்றுக்கிட்டு, நீங்க என்கிட்டே சொல்லி இருந்தா? நா எதுக்கு ஷரப்புக்கு ஹெல்ப் பண்ண போறேன். சொல்லாம விட்டது உங்க தப்பு. நீங்க தானே சொன்னீங்க ஷரப் எது சொன்னாலும் செய். அவனை எங்க கைக்குள்ள வச்சிக்கணும்னு”  வைஷ்ணவி அவரை திருப்பி தாக்கியவாறு பேயாட்டம் ஆட தேஜ்வீருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

 

“சரிம்மா சரிம்மா இனிமே அப்பா சொல்லிட்டு செய்றேன்” அவர் தான் இறங்கி வரவேண்டி இருந்தது. “வைஷு கண்ணா ஹரிலால் பையன் யாதவ் இருக்கானே”

 

“அவனுக்கென்ன”

 

“நீ அவன லவ் பண்ணுறியா? நா ஹரிலால் கிட்ட இப்போவே சம்பந்தம் பேசுறேன்”

 

“அடி செருப்பால யார்  கூட என்ன கோர்த்துவிட பாக்குறீங்க? அவனெல்லாம் எனக்கு செட் ஆகாது. நா ஏற்கனவே வேற ஒருத்தன லவ் பண்ணுறேன்” யாதவ் கூட கல்யாணம் என்றதும் அப்பா என்றும் பாராமல் கொதித்தவள், அவளின் காதலை தந்தையிடம் கூறும் போது குரல் அமைதியாக ஒலித்தது. { உன் கிட்ட மாட்டிக்கிட்ட அந்த அப்பாவி யாருமா}

 

“இவ கிட்ட பேசினா என் பீபி ஏகுருதே ஐயோ முடியலையே!” நெஞ்செய் பிடித்தவாறே அமர்ந்த தேஜ்வீர்.

“யார்மா அது” குரலில் கோவமா? எதிர் பார்ப்பா?

 

“அதெல்லாம் கல்யாணம் பண்ணும் போது தெரிஞ்சிக்கோங்க” என்றவள் போனை அணைக்க, நொந்து விட்டார் தேஜ்வீர்.

“ஐயோ அது யார்னு தெரியலையே? பணக்கார பையனா இருந்தா சரி.அவ  அழகுக்கு பணக்கார பையன ஈஸியா மடக்கிடுவா” {த்து நீயெல்லாம் ஒரு அப்பன்}

 

“என்னடா நா சொன்ன பொண்ண பத்தி விசாரிச்சியா?” வ்ருஷாத் அவனுடைய ஆட்களிடம் விசாரிக்க

 

“விசாரிச்சு கிட்டு தான் இருக்கோம் இன்னும் ஐம்பது, அறுவது வீடுகள் மட்டும் தான்”

 

“என்னடா நீயொருத்தன். வேலய பாரம் தந்து ஒருநாள் ஆச்சு. வேலய தந்தா சட்டு புட்டுன்னு முடிக்காம,  நாளைக்கே எனக்கு அந்த பொண்ண பத்தின எல்லா தகவல்களும் வரணும்” வ்ருஷாத் கடுமையாக சொல்ல மண்டையை ஆட்டினான் வ்ருஷாத்தின் அடியாள்.

 

வ்ருஷாத் ஷரப்புக்காக இவ்வளவு துடிக்க ஷரப் அப்படி என்ன செய்து விட்டான்?

 

ஷரப்புக்கு பத்து வயதிருக்கும் அவன் பள்ளிசெல்லும் போது பலத்த பாதுகாப்புடனையே செல்வான். முன்னாடி இரு காரும் பின்னாடி இரு காரும் நடுவில் ஷரப் செல்லும் கார் என செல்லும் போது ஏழை சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.

 

ஒருநாள் காலை உணவை உண்ணாது கையில் எடுத்துக் கொண்டு காரில் ஏறியவன் பாதி சாப்பிட்டதும், போதுமென தூக்கிப் போட அது அச் சிறுவர்கள் மேல் விழ அந்த ரொட்டித்து துண்டுக்கு அவர்கள் அடித்துக் கொள்வதை சுவாரஷ்யமாக பார்த்தான் ஷரப். அன்றிலிருந்த்து காரிலிருந்த்து ரொட்டித்துண்டுகள் வீசப்பட்டன.

 

அதில் ஒரு சிறுவன்  மட்டும் சண்டை பிடிக்காது இருக்கவே அவனை வினோதமாக பார்த்தவன் அவனுக்கு வேறாக ஒரு துண்டை வீசினான் அதை பொறுக்கிக் கொண்டு அச்  சிறுவன் சாப்பிடாது ஓடுவான். ஷரப்புக்கு அந்த சிறுவனின் செய்கையில் ஆர்வம் உண்டாக அவன் எங்கே செல்கிறான் என பார்க்க ஆசையாக இருந்தாலும் பாட்டியை மீறி செல்ல முடியவில்லை.

 

நாட்கள் நகர நகர இது தொடரவே ஷரப்பின் ஆர்வம் கூடிக்கொண்டே போனது ஒருநாள் அந்த சிறுவன் அங்கே இருக்கவில்லை. அவன் ஏன் வரவில்லை  என அறிந்துக் கொள்ளாமல் ஷரப்பின் மண்டை வெடித்து விடும் போல் இருக்க அவனை பற்றி விசாரிக்க உத்தரவிட்டான்.

 

வசுந்தராதேவி அவனை அடக்கி ஆளும் ஆளுமையுடன் வளர்க்க பத்து வயதில் அவன் உத்தரவிட்டாலும் வசுந்தராதேவியின் அனுமதி கேட்ட போது கிடைக்காததால் “அந்த சிறுவனை பற்றி ஏதாச்சும் தகவல் கிடைத்ததா?” என ஷரப் கேக்கும் போதெல்லாம் “தேடிக் கிட்டு இருக்கிறோம்” என்ற பதிலே அவனுக்கு கிட்டியது.   

 

ஒருநாள் கடை வீதிக்கு சென்ற ஷரப்பை தாக்க வந்தனர் ஹரிலாலின்  ஆட்கள். கூறிய வாளோடு அவர்கள் நடாத்திய தாக்குதலை பாதுகாவலர்கள் முறியடித்தாலும் ஒருவன் முன்னேறி ஷரப்பை வெட்ட போக எங்கிருந்தோ வந்த வ்ருஷாத் அவனை கல்லெறிந்து அடித்தான். வ்ருஷாத் அடித்தது அவனின் பின் மண்டையில் பட்டிருக்க இரத்தம் வழிய  சமநிலை தவறி ஓங்கிய வாள் ஷரப்பின் நெஞ்சில் விழாமல் இருக்க ஷரப் அவனின் பாதுகாப்புக்கென இடுப்பில் வைத்திருந்த சிறிய கத்தியால் தாக்க வந்தவனை குத்திக் கொன்றான்.

 

பாதுகாவலர்கள் ஒரு புறம் இருக்க வ்ருஷாத்தும், ஷரப்பும் சேர்ந்து நான்கு, ஐந்து பேரை தாக்கி இருந்தனர். ஒருவாறு போராட்டம் முடிய வ்ருஷாத்தை கட்டியணைத்து ஷரப் நன்றி கூற வ்ருஷாதோ!

 

“என்ன எஜமான் நீங்க போய் என் கிட்ட நன்றி சொல்லி கிட்டு நீங்க எனக்கு போட்ட ரொட்டி துண்டால என் தாத்தா ரொம்ப நாள் உயிரோட இருந்தார் அதுக்காகவே என் உயிரை தந்து உங்கள காப்பேன்” என்று மனமுறுகிச் சொல்ல ஷரப்புக்கு புரிந்ததோ தான் விளையாட்டாக  போட்ட ரொட்டித்து துண்டு அவனின் உயிரை காப்பாத்தியதென்று.

 

அன்றிலிருந்து வ்ருஷாத் அவனின் உற்ற நண்பன், சகோதரன் என்றாகிப் போக உண்மையறியாத வ்ருஷாத்தும்  ஷரப்புக்காக உயிரையும் கொடுக்க தயாராகி விட்டான்.

 

“வந்துட்டியா? வா வா உனக்கு கொடுத்த ரெண்டு நாள் டைம் முடிஞ்சி போச்சு அந்த மான்சியை பத்தி ஏதாச்சும் தெரிஞ்சதா வ்ருஷாத் அந்த அடியாளை கிண்டலடிக்க”

 

“மான்சி{Plucked flower } யாருன்னே?”

 

“மானோட ஓடிப்போனாளே அவதாண்டா மான்சி” வ்ருஷாத் சரக்கை உள்ளே அனுப்பியவாறு உளர

 

“அது ஆன்சினே மணீஷோட பொண்ணு”

 

ஏற்றிய சரக்கு அப்படியே இறங்க ” என்னது மனீஷ் பொண்ணா ஹா ஹா ஹா” சத்தமாக சிரித்தவன். “இதோடா வேடன் கிட்டேயே மான் இருக்க காட்டுல தேடி அலஞ்சேனே! என்ன சொல்ல என் நிலைமைய” சோகமாக வ்ருஷாத் கூற.

 

“என்னடா பாத்துக்க கிட்டு இருக்க இன்னும்… போய் அவளை தூக்கிட்டு வா அண்ணனுக்கு இன்னக்கி ராஜ விருந்தது. அந்த மனீஷ் கிட்ட தீர்க்க வேண்டிய கணக்கு வேற பாக்கி இருக்கு” என வெறிகொண்டவன் போல கத்தினான் அங்கே  வந்த ஷரப்.

{பயபுள்ள ரொம்ப சூடா இருக்கானே! அந்த குள்ள நாரி மனிஷ் என்ன பண்ணி தொலச்சானோ }

 

“ஆன்ஷி இங்க வாம்மா குளிச்சிட்டு போய் இந்த துணிய போட்டுட்டு வா” மனீஷ் அன்பாய் சொல்ல ஆன்ஷி  தாயின் முகத்தை பார்த்தாள்.

“எதுக்கு இப்போ அவளை இந்த ராத்திரி நேரத்துல குளிக்க சொல்லுற” மீனாட்சி நெஞ்சம் வெம்ப கேக்க

மனீஷ் இளித்தவாறே “அவங்க இப்போ வந்துடுவாங்க” என்று மீனாட்சியை பார்த்து கூறியவன் ஆன்ஷியை பார்த்து “நீ போமா போய் சீக்கிரம் ரெடியாகு” என அதட்ட

 

வெலவெலத்து போன ஆன்ஷி தாயை பார்க்க

 

“ஆன்ஷி நீ உள்ள போ” தாயின் கட்டளைக்கிணங்க ஆன்ஷி உள்ளே போக அவளின் கையை பிடித்து தடுத்த மனீஷ் ஆன்ஷியின் வலது கன்னத்தில் அறைந்தான். அவன் அடித்த வேகத்தில் கன்னம் கன்றி சிவக்க தொய்ந்து சரிந்தாள் ஆன்ஷி.

 

நொண்டி நொண்டி மீனாட்சி அங்கே வர ஆன்ஷியின் கையை பிடித்து இழுத்து தூக்கிய மனீஷ் “நீ குளிக்கவும் தேவல துணி மாத்தவும் தேவல இப்படியே  போ” என அவளை பிடித்து வாயில் புறம் தள்ள மீனாட்சி நடக்க உதவும் கட்டையால் மனீஷை அடிக்க அது அவனின் தலையை நன்றாக பதம் பார்த்தது.

 

“ஆ…… என கத்தியவாறு திரும்பி மீனாட்சியை கன்னம் கன்னமாக   அறைந்தவன் அவரை பிடித்துத் தள்ள அவர் போய் விழுந்ததோ உரலில். தலை மோதுண்டு அவர் விழ…….

 

“அம்மா” என கத்திய ஆன்ஷி அதுக்கு மேல் ஒரு வார்த்தை பேசவில்லை. ஆம் தாயை ரெத்த வெள்ளத்தில் கண்ட அவள் குரல் வெளியே வரவில்லை. அதிர்ச்சியில் ஊமையானாள் ஆன்ஷி. அவரிடத்தில் அவள் ஓட வாயிலில் வந்த வண்டியிலிருந்து இறங்கிய தடியர்கள் வலுக்கட்டாயமாக ஆன்ஷியை ஏற்ற கத்தமுடியாமல் ஆன்ஷி போராட மயக்க மருந்தை அவள்  முகத்தில் தெளித்து தூக்கிச் சென்றனர்.

மனீஷ் மீனாட்சியின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்து அசையாது நின்றான்.

 

ஆன்ஷியை தூக்கிச் சென்றது ஷரப்பின் ஆட்களா?     ஹரிலாலின் ஆட்களா?

 

Advertisement