Advertisement

                                           அத்தியாயம் 3

“என்னண்ணா இந்த பக்கமா போறீங்க நம்ம ஒட்டகப் பண்ண அந்தப் பக்கம் இல்ல இருக்கு” இடது புறம் செல்ல வேண்டிய வண்டி வலது புறம் செல்வதை கண்டு வழக்கமாக எந்த நேரத்தில் ஷரப் எங்கு இருப்பான் என அறிந்தவன் வ்ருஷாத் ஒருவனே! என்ன ஏதென்று விசாரிக்க

 

தான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்பது போல் அவன் புறம் திரும்பாமலேயே வண்டியை கிளப்பிச்சென்றவன் நிறுத்தியது காலையில் ஆன்ஷியை பார்த்த இடத்துக்கு.

 

வண்டியை நிறுத்தி வண்டியின் பின் வைத்திருந்த பெட்டியிலிருந்து மது பாட்டிலை  எடுத்து, முன் பக்கமாக வந்து  ஜீப்பின் ஹுட்டின் மேல் தாவி ஏறி அமர்ந்து பாட்டிலை வாயில் சரித்துக் கொண்டவன். அங்கே ஆன்ஷி நிற்பது போல் தோன்றவே

 

“யாரடி நீ? எங்க இருந்து வந்த? இங்க.. இங்க..  ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுற” என்று பாட்டிலால் தலையை தட்டியவன். “செம பிகருடி நீ. ஹப்பா என்னா கலரு? காஸ்மீர் ஆப்பிள் போல, என்ன கண்ணு அது? ஜின்னு மாதிரி? என்ன பார்வடி அது? மனுஷனா அப்படியே.., அது என்னடி அழுக? ஒத்த துளி! உன் கண்ணுல இருந்து விழுந்தது என நெஞ்சுல விழுந்த எஸிட் மாதிரி இருந்திச்சு டி. எதுக்கு அழுத? அப்பா அடிச்சாரா? அம்மா திட்டினங்களா? நீ வேணும் டி எனக்கு இப்போவே வேணும்” என கத்த

 

உன் கண்கள் எனை செதுக்கும் உளி

என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி

 

அங்க என்ன நடக்குதுன்னு தலையை சொரிந்த வ்ருஷாத் “இந்த அண்ணனுக்கு என்ன ஆச்சு? யார் கூட பேசுறாங்க? ஒரு வேல மோகினிப் பேயா இருக்குமோ? நம்ம கண்ணுக்கு ஒன்னும் தெரியலையே! என புலம்ப ஒருவாறு ஷரப் காலையில்  பார்த்த பெண்ணை பற்றித்தான் கூறுகிறான் என்றறிந்தவன். “யாரந்த பொண்ணுன்னு தெரியலயே இங்க சுத்தி தண்ணி இல்லாம காஞ்சி போன காடல்ல இருக்கு  யார் வீட்டு பொண்ணோ!, யார் கிட்ட போய் கேப்பேன்.

 

“வாங்கண்ணே போலாம் நேத்து நைட் கூட சரியா தூங்கல தூங்கி எந்திரிச்சா சரியாகிடும்” என்ற வ்ருஷாத் ஷரப்பின் கை பிடித்து இழுக்க வ்ருஷாத்தின் கையை உதறித்தள்ளியவன்.

 

“யார்டா அவ? ஒருவேளை தேவதையா இருப்பாளோ? என்ன அழகு என்ன அழகு? எதுக்குடா அழுதா? நா இப்போ தெரிஞ்சே ஆகணும்” என்று வண்டியிலிருந்து குதிக்க அவனை இழுத்துக் கொண்டு சென்று வண்டியில் ஏற்றி சீட் பெல்ட்டையும் மாட்டிய வ்ருஷாத் “அந்த பொண்ணு மான தூக்கி கிட்டு மான விட வேகமா ஓடிப் போயிருச்சு. போறவள போக விட்டுட்டு இப்போ புலம்புறாரு அப்பவே தூக்கி வண்டியில போட்டிருந்தா காதுல ரெத்தம் வராம இருந்து இருக்கும். இன்னைக்கி நைட் தூங்கின  மாதிரி தான். அந்த பொண்ண பத்தி பேசியே கொல்லுவாரே” என முணுமுணுத்தவாறே  வண்டியை கிளப்பினான்.

 

“என்ன சொல்ற ஹரிலால் ஷரப் வந்து இவ்வளவும் பன்னானா?” தேஜ்வீர்  அதிர்ச்சியாக கேக்க

“அவன் மட்டுமா பண்ணான் உன் பொண்ணும் சேர்ந்து தான் பண்ணா. பொண்ணா அவ பேய் பேய்” என திட்ட

“ஏய் ஹரிலால் என் பொண்ணப்  பத்தி நீ பேசாத” தேஜ்வீர் குரலை உயர்த்த

உடனே தனது கோவத்தை அடக்கி கீழிறங்கி வந்த ஹரிலால் “சரி இப்போ என்ன பண்ணுறது நீ சொன்ன மாதிரி தான் பண்ணேன் இப்படி சொதப்பி எனக்கே ஆப்பு வைப்பான்னு தெரியாம போச்சே, என் பசங்க வாழ்க்கையை பணயம் வச்சி என் மினிஸ்டர் போஸ்டவே காலி பண்ண பாக்குறான்” என கெட்ட வார்த்தையால் ஷரப்பை வசை பாடியவர் “சரி நீ ஒன்னும் டென்ஷனாகாத பாத்துக்கலாம்” என போனை அமர்த்த

 

“என்ன தலைவரே நீங்களும் ராஜ பரம்பரை தான் அவங்களுக்கு பயந்து அடி பணிஞ்சு போறீங்க.அவங்கள ஒண்ணுமே பண்ண முடியாதா?” ஹரிலாலின் வலது கை ஷரப்பை ஒன்னும் பண்ணமுடியாத ஆதங்கத்தில் கேக்க

 

“அவனுங்கள என்ன பண்ணனும் எப்படி வச்சு செய்யணும் எல்லாமே எனக்கு தெரியும். ரகுவீரும் அவன் கர்ப்பவதி  மனைவியையும் போட்டுத்தள்ளி வாரிசில்லாத சமஸ்தானத்த என கைல எடுத்துக்கணும்னு தான் அவங்கள எக்சிடென் பண்ணி கொன்னேன். ஆனா  அந்த ராட்சஷன் ஷரப் பொறந்தான். அவனை கொல்ல ட்ரை பண்ணேன் வசுந்தரா தேவி அவன சுத்தி போட்டிருந்த காவல என்னால மீரா முடியல. அப்பொறம் தேஜ்வீர கொஞ்சம் கொஞ்சமா கரைச்சி என பக்கம் வச்சிருக்கேன். அந்த முட்டாள் என்னமோ அவன் என்ன கண்ட்ரோல் பண்ணுறதா நெனச்சிக்கிட்டு இருக்கான்” என வெடி சிரிப்பு சிரித்தார்.

 

“ஆன்ஷி இங்க வா” மீனாட்ச்சி மகளை தனது பக்கத்தில் அமர்த்திக் கொண்டு “என்னமோ தெரியல கொஞ்சம் நாளா கெட்ட கெட்ட கனவா வருது. ஏதோ தப்பா நடக்க போற மாதிரியே மனசு படபடக்குது,  எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா நீ எப்படியாச்சும் கோயம்புத்தூர் போய்டு அங்க உன் தாத்தா, பாட்டி, மாமா,   மாமா பசங்க எல்லாரும் இருக்காங்க உன்ன பாத்துப்பாங்க”

 

“என்னம்மா ஏதேதோ பேசுற உனக்கு ஒன்னும் ஆகாது உனக்கு ஏதாவது ஆச்சுன்னா நானும் உன் கூடவே வந்துடுவேன்” என கண்கலங்க

 

“என் வயித்துல வந்து பொண்ணா பொறந்துட்டியே உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பார்க்க என்னால முடியலையே! உன் அப்பனே உனக்கு எமனா இருக்கானே!” தலையில் அடித்தவாறே அவர் அழ,

எந்த நாளும் நடக்குறது தான். தாயும் மகளும் அதிகமா பேசியதே இல்ல. எது பேசினாலும் தங்களது துயரத்தில் முடிந்து கண்ணீரில் கரைய நேரிடும்.  ஆன்ஷாவுக்கு தமிழ் எழுத பேச கத்துக்க கொடுத்த மீனாட்சி அவளை பல முறை வீட்டை விட்டு செல்லுமாறு சொல்லியும் தாயை தனியாக விட்டு செல்ல மறுத்து விட்டாள்.

 

“போறதா இருந்தா ரெண்டு பேருமே போலாம். நீ இல்லாம என்னால போக முடியாது” ஆன்ஷி முடிவாய்  சொல்ல

 

“என் ஒத்தகால வச்சிக்கிட்டு இங்க இருந்து போறதா? அப்படியே போனாலும் அந்தாளு தேடி வந்திடுவான். என் காலே என்ன காட்டி கொடுத்திடும். இந்தமாதிரி கால் ஊனமான பொம்பளைய பாத்தீங்களானு அனுதாபமா பேசி நாங்க போன வழிய கண்டு பிடிச்சிடுவான். நா இங்க இருந்தா ஏதாவது பேசி சமாளிச்சிடுவேன்.”

 

“நீ என்ன சொன்னாலும் நா உன்ன விட்டு போக மாட்டேன்.” என ஆன்ஷி தாயை கட்டிக்க கொண்டு கதற

 

“சரி அப்போ எனக்கு வாக்கு கொடு” ஆன்ஷி தாயை என்னவென்று பார்க்க “எனக்கு ஏதாவது ஆச்சுன்னா நீ இங்கிருந்து கிளம்பி தாத்தா பாட்டியிடம் போய்டணும். பரண் மேல பழைய ட்ரங்க் பேட்டி ஒன்னு இருக்கு அதுல என் அப்பா அம்மா புகை படமும் வீட்டு முகவரியும் இருக்கு பத்திரமா போய்டு. வாக்கு கொடு” மீனாட்சி ஆவேசமாக குரல் எழுப்ப

 

தாயின் கையை இறுக்கிப் பிடித்தவள் “எனக்கு பயமா இருக்கு. என்ன இங்க இருந்து அனுப்ப நீ ஏதாவது பண்ணிக்க போறியா?” கண்களில் பயத்தை தேக்கி வைத்தவளாக ஆன்ஷி தாயை பார்க்க மீனாட்சின் முகத்தில் புன்னகை.

 

“கடவுளே என் பொண்ண நீ தான் காப்பாத்தணும்” என்று கை கூப்பி வானை நோக்கி வணங்கி விட்டு “உயிர எடுக்குறதுன்னா உன் அப்பன் உயிர தான் எடுப்பேன். நான் சாக மாட்டேன். அவனை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போய்ட்டா உன் கதி? வாழ் நாள் முழுக்க என்ன நெனச்சி நீ அழும் படியா நானாக எதுவும் செய்ய மாட்டேன்” என வாக்கு  கொடுத்தவர். “ம்… வாக்கு கொடு” ஆன்ஷி மீனாட்சியின் கையில் அடித்து சத்தியம் செய்தவள் அன்னையை அணைத்துக் கொண்டாள்.

 

மனீஷ் எப்போ வீட்டுக்கு வருவான் எப்போ போவான் அவனுக்கே தெரியாத போது அவன் எங்கே போறான், என்ன செய்கிறான் என்பது இவர்களுக்கு தெரியாமல் போனது.

அவனே வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவான். அவன் இல்லாத சமயம் ஆன்ஷி வெளியே செல்வாள். கடை வீதியை நெருங்கும் போது மட்டும்  துப்பட்டாவால் முகத்தை மறைத்தவாறே செல்வாள். இன்றும் கடை வீதிக்கு சென்று கொண்டிருந்தவள் மான் குட்டியை கண்டு அதை பிடிக்க அது ஓட அவள் அதை துரத்த ஷரப்பின் வண்டியின் முன் வந்து நின்றாள். என்ன தான் ஆண்களை பற்றி அன்னை அறிவுரை கூறி இருந்தாலும் ஷரப்பின் பார்வை அவளை இம்சிக்க செய்தது. யாரென்றே அறியாத அவன் அவள் மனதில் அடியெடுத்து வைத்ததை அவள் அறியவில்லை.

 

காலையில் பார்த்த பெண்ணை தேடி அந்த இடத்துக்கு வந்தவனும் காதல் என்ற சொல்லை மதிப்பவனுமல்ல. காதலுக்கும் காமத்துக்கு வித்தியாசம் தெரியாதவன் காதலை உணர்வானா?

 

“ஹேய் மனீஷ் எப்படி டா இருக்க பாத்து ரொம்ப நாளாச்சு. என்ன தொழிலை விட்டுட்டியா?”  மினிஸ்டர் ஹரிலால் மனீஷை வரவேற்க

“தொழில் ஏதோ நடனத்துக்கிட்டு தான் இருக்கு தலைவரே, என்ன புதுப் பொண்ணுங்க தான் கிடைக்கல ஏற்பாடு பண்ணவா?”

 

“நா இன்னைக்கி ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்  . புதுசா வேற இல்லேங்குற, வேறொருநாள் பாக்கலாம். அதுசரி உனக்கு ஒரு மகள் இருப்பதா கேள்விப்பட்டேன் உன் பொண்டாட்டி வேற அழகா இருப்பாலாமே? பொண்ணு உன்ன மாதிரியா? இல்ல உன் பொண்டாட்டி மாதிரியா? இரட்டை அர்த்தத்தில் கேட்டு தூண்டில் போட

“அத ஏன் கேக்குறீங்க அழகா பொறந்து தொலச்சி என்ன பிரயோஜனம். கூறுகெட்ட கழுத சமைக்க தெரியாம அடுப்புல விழுந்து முகத்தை சுட்டு கிட்டா”

” ஐயோ பாவமே”

“அது நடந்து அஞ்சி, ஆறு வருஷம் இருக்கும்”

“இப்போ எல்லாம் எனக்கு கண்ணாடி இல்லாம சரியா ஒன்னும் பார்க்க முடியிருதில்ல” என்றவாறே கண்ணாடியை கழட்டியவர் “பாரு உன் முகம் கூட மங்கலா தான் தெரியுது” என்று சத்தமாக சிரிக்க

 

அவர் கூற வருவதை புரிந்த்துக் கொண்ட அந்த குள்ள நரி மனீஷ் பற்கள் அனைத்தும் தெரிய இளித்தவன். “பணம்” என்றான் கண்கள் மின்ன

 

“இன்னைக்கி வேணா ரெண்டு நாள் கழிச்சு கூட்டிட்டு வா” ஒரு நோட்டுக்கத்தையை  தூக்கிப் போட நாய் இறைச்சியை கவ்வுவதை போல் பாய்ந்தது எடுத்தவன் முகர்ந்த்து பார்த்து

“எல்லாம் புது நோட்டா இருக்கு” என்று சொல்ல

“கூட்டிட்டு வா இன்னொரு கட்டு தரேன்” என்று சரக்கை கிளாசில் ஊற்ற மனீஷ் சந்தோசமாக வீடு சென்றான்.

 

இங்கே ஷரப் ஆன்ஷியின் நினைவில் புலம்பி வ்ருஷாத்தின் இன்றைய தூக்கத்தையும் கெடுக்க, அவனுடைய ஆட்களை வைத்து யார் அந்த பொண்ணு என தேடி பார்க்கும் படி உத்தரவிட்டான்.

 

ஆன்ஷியை நோக்கி வரு ரெண்டு ஆபத்திலிருந்தும்  ஆன்ஷி தப்பிச்ச செல்வாளா? இல்லை ஒன்றில் மாட்டிக் கொண்டு அல்லல் படுவாளா?

Advertisement