Advertisement

                                                    அத்தியாயம் 1

 

Oṃ bhūr bhuvaḥ svaḥ

tát savitúr váreṇ(i)yaṃ

bhárgo devásya dhīmahi

dhíyo yó naḥ pracodáyāt

 

அரண்மனையில் பூஜை நடக்கும் அதிகாலை பொழுது அப்பொழுது தான் உள்ளே நுழைந்தான் ஷரப். மாமா தேஜ்வீர் அவனை கண்டு புருவம் சுருக்கியவராக பின்னாடி பின்னாடி அடியெடுத்து அவனிடத்தில் வந்தவர்

“மருமகனே எங்க போய்ட்டிங்க?” அவரை ஒரு பார்வை பார்த்து

“கெஸ்ட் ஹவுஸ்ல பார்ட்டி மாமா?” பூஜை நடப்பதால் மிகவும் மெதுவாக சொல்ல  

“அது எந்த நாளும் நடக்குறது தானே? நேத்து யாரு சிங்கப்பூர் சில்பாவா? சிலோன் சிந்தியாவா?

அதெல்லாம் அனுபவிச்சு போரடிச்சு போச்சு மாமா இது புது பீசு”என்று கண்சிமிட்ட

“அடப்பாவி போனவாரம் தான் அறிமுகப் படுத்தினேன்” என தேஜ்வீர் முணுமுணுக்க

“அங்க என்ன சத்தம்” ஷரப்பின் பாட்டியும் இந்த சமஸ்தானத்தை தன் உள்ளங்கை பிடியினுள் வைத்திருக்கும் வசுந்தராதேவியின் அகங்காரக் குரல் அந்த அரண்மனை முழுவதும் எதிரொலித்தது.

 

தளபதி விஷ்வதீர் சௌதாகரும் இளவரசி காயத்ரிதேவியும் வாழ்ந்த அரண்மனை பரம்பரையாக மூத்த வாரிசுக்கு மட்டுமே சொந்தமானது.

இருபது படுக்கையறைகளையும் ஐந்து வரவேற்பறைகளையும் மூன்று சாப்பாட்டறைகளையும் இரண்டு சமயலறைகளையும் பெரிய பூஜையறையையும் உள்ளடக்கிய அரண்மனை இரண்டே மாடிகளை கொண்டது.

கீழே உள்ள ஒரு அறையில் முழுவதுமாக விஷ்வதீர் சௌதாகர் பாவித்த பொருட்களும் இளவரசி காயத்ரிதேவிக்கு சொந்தமான பொருட்களும் பத்திரமாக பாதுகாக்கப் பட யொத்தாவின் இடம்  காலியாக இருந்தது.  { மீண்டும் யொத்தாவா?}

வெளியில் பூந்தோட்டமும், இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்த பெரிய பார்க்கிங்கையும், சொந்த ஹெலிகாப்டர் நிறுத்தவென இடமும்  எடுத்துக் கொண்டு பின்னாடி நீச்சல் குளமும், குதிரை கொட்டகையும் அமைக்கப்பட்டிருந்தது.

 

ஆங்கிலேயர்கள் அரசாட்சியை வீழ்த்தியபோது, ஆங்கிலேயருடன் கூட்டு சேர்ந்து கஜானாவை கொள்ளையடித்து பதுக்கிய தங்கமும் வைரமும் கொட்டிக் கிடக்க இன்றும் சமஸ்தானம் செல்வச்செழிப்பில் பஞ்சமில்லாது ராஜஸ்தானையே கட்டுக்குள் வைத்து மக்களை அடிமைகளாக வைத்திருக்கிறது.

 

ஆரத்தியை ஷரப்புக்கு காட்டாது “எங்க போனாலும் இரவுக்குள் அரண்மனையில் இருக்கணும் சரியா? போ போய் குளிச்சிட்டு சாப்பிடவா” கனிவிலும் கனிவான குரல் அது ஷரப்புக்கு மாத்திரம் வசுந்தராதேவியிடமிருந்து வரும் குரல்.

“எங்க போனாய்? இரவு ஏன் வரவில்லை? என்ன செய்து கொண்டிருந்தாய்?” என அவனிடம் கேள்வி கேட்பதை விட்டு அவன் செய்யும் அனைத்துக்கும் பாசமென்ற போர்வையில் அமைதி காப்பவர் வசுரந்தராதேவி. ஷரப் படியேறி மேலே செல்லும் வரை பொறுமையாக இருந்தவர். தேஜ்வீர் பக்கம் திரும்பி

 

“என் பொண்ணு பத்மாவுக்காக தான் நான் பொறுமையாக இருக்கிறேன். நீ அவனுக்கு பார்க்கும் மாமா வேலை எனக்கு தெரியாமலில்லை. அரச குடும்பத்தில் இதெல்லாம் சகஜம். அதனாலேயே கண்டுக்காம இருக்கேன்” என்று அடிக்குரலில் சீரியவர் முகத்தை திருப்பும் போது அப்படியொரு சாந்தப் புன்னகையை முகத்தில் கொண்டு வந்தவர் அன்றைய வேலைகளை பார்க்கச்சென்றார்.

 

ஷரப்பின் தந்தை ரகுவீரும் தாய் யாமினியும்  சென்ற அம்பாசிடர் கார் லாரி மோதி அந்த இடத்தில் அவர்கள் இறந்து விட அந்த நேரத்தில் பிறந்தவன் தான் ஷரப். பாட்டி வசுந்தராதேவியின் பொறுப்பான ஷரப் வாழ் வீச்சிலும், குதிரை ஓட்டத்திலும், “யுத்தகலா” எனும் சண்டை பயிற்சியிலும் சிறப்பு  பயிற்சி பெற்றவன்.

 

“என்ன நினைச்சி கிட்டு இருக்காங்க உன் அம்மா” தேஜ்வீர் கோபமாக பத்மாவின் மேல் பாய

“பொறுமையாக இருங்களேன்” பத்மா கணவனை சாந்தப்ப படுத்த தன்மையாக பேச

“பத்மா உனக்காக  தான் நான் இந்த அரண்மனையில் இருக்கிறேன்”

“இல்லையென்றால் வேற அரண்மனை கட்டி குடி புகுந்துடுவாரு”பத்மாவின் மனசாட்சி நொடித்துக் கொள்ள

“ஷரப் செய்யும் எல்லாத்துக்கும் நானா பலி? அவன் என்ன சின்ன குழந்தையா?” மீண்டும் எகிற

“பண்ணுறதெல்லாம் வில்லத்தனம் இதுல நல்லவர் வேஷம்” மீண்டும் பத்மாவின் மனசாட்சிதான்.

முகத்துக்கு நேராக பேசினால் முகம் வீங்க அடி கிடைக்கும். அதற்கு பின் வசுந்தரா தேவியிடம் வழுக்கி விழுந்தேன், தடுக்கி விழுந்தேன் என்று ஆயிரம் காரணம் எவ்வளவு நாளைக்கு சொல்ல. தேஜ்வீர் மேலும் பேச அமைதியானார் பத்மா.

 

தேஜ்வீர், பத்மாவதிக்கு ஒரு பொண்ணு ஒரு பையன் பொண்ணு வைஷ்ணவி டில்லியில் காலேஜ் படிக்க பையன் லக்ஷித் அண்ணனும் அண்ணியும் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் குறை பிரசவத்தில் பிறந்ததுமில்லாது மூளை வளர்ச்சியும் குன்றிக் காணப்பட

எக்சிடண்டில் ஷரப்பின் தாயும் தந்தையும் இறந்ததை கேள்விப்பட்ட உடன் தனது வாரிசுகளுக்கே  எல்லா சொத்தும் என இறுமாப்பில் தேஜ்வீர் இருக்க மூளை வளர்ச்சியற்று மகன் பிறக்க இன்றுவரை  அவனை திரும்பி பார்க்கவில்லை. கடவுளின் செயலால் ஷரப்பின் தாய் யாமினி இறக்கும் தருவாயில் ஒரு குறையில்லாது சமஸ்தான வாரிசான ஷாரப்பை ஈன்றெடுத்தார்.

 

“ஹாய் தாதிமா {பாட்டி}”  

“எங்கப்பா கிளம்பிட்ட? உக்காரு உன் கிட்ட கொஞ்சம் பேசனும்”

“யொத்தா பத்தி தானே! தேட வேண்டிய எல்லா வழிகளிலும் தேடிகிட்டு தான் இருக்கேன் பாட்டி. டோன்ட் ஒர்ரி நான் இறக்கும் முன் யொத்தா உங்க காலடியில கிடக்கும்”

‘அது சரி அதுவரைக்கும் நான் உயிரோடு இருப்பேனா?

சாப்பாட்டறையில்  இந்த பேச்சு வார்த்தை நடக்க சாப்பாட்டு மேசையோ ஐன்பது மீட்டருக்கு நீண்டிருக்க எழுந்து பாட்டியின் அருகே வந்தவன் அவர் கன்னத்தில் முத்தம் வைத்து

“யொத்தாவை கண்ணால் பார்க்காமல் உங்க  உயிர் போகாது”

இவர்களின் பேச்சை ஒட்டுக்கேட்டுக்  கொண்டிருந்த தேஜ்வீர் “கடவுளே வாள் கிடைக்கவே கூடாது” என உடனடியாக கடவுளுக்கு பிரத்தினை வைத்தான்.

 

“பாய்”{அண்ணா} என்று கத்திய வாறே வ்ருஷாத் உள்ளே வர

சாப்பாடு அறையிலிருந்து விருட்டென எழுந்து வந்த வசுந்தரா தேவி வ்ருஷாத்தை எச்சில் கையாலேயே ‘பளார்’ என அரையவும் தனது இரு கன்னங்களையும் கையால் மூடிக் கொண்டு “அம்மா…….. என்..ன அடி  வயசானாலும் திமிரு குறையவே இல்ல”. அங்கே நடப்பதை கவனிக்கலானான் தேஜ்வீர்.

 

“ஏன்டா வேலைக்கார நாயே! ராஜவம்சத்து வாரிசு உனக்கு அண்ணனா? சாப்பாட்டுக்கே வழி இல்லாத xxx ஜாதியை சேர்ந்த நாய் நீ, நாங்க போட்ட எச்சி சோத்த திண்டே கொழுப்பெடுத்து ஆடுறியோ? வெளிய போடா எதுவா  இருந்தாலும் அரண்மனைக்கு வெளியே தான் நிற்கணும்” ஆவேசமாக வசுந்தராதேவி கத்த ஷரப் கண்ணாலேயே அவனை வெளியே செல்லுமாறு பணித்தான்.

 

வயதின் முதிர்ச்சி காரணமாக மூச்சு வாங்க “தாதி எதுக்கு இவ்வளவு டென்ஷன் அமைதி அமைதி ” உட்கார வைத்து தண்ணீர் புகட்டியவன் வாயை துடைக்க வேலையாள் ஒருவர் வந்து கை கழுவிவிட அவரை தூக்கிக் கொண்டு அவரின் அறையில் கட்டிலில் விட்டவன் போர்வையை போர்த்தி விட

“ஷரப் நா ரொம்ப நாளைக்கு உயிரோடு இருப்பேனானு தெரியல யொத்தா எங்க இருக்கோ? சீக்கிரம் கண்டு பிடிடா”

“சரி தாதி நீங்க ரெஸ்ட் எடுங்க” அவர் நெற்றியில் முத்தமிட்டவன் அறையை விட்டு வெளியேறினான்.

 

வ்ருஷாத் கன்னம் சிவக்க வெளியே டென்ஷனாக நின்று கொண்டிருக்க அவனருகில் வந்த ஷரப் அவன் கன்னத்தை திருப்பிப் பார்க்க

“எனக்கு ஒண்ணுமில்ல பாய்.. சா…ர்” என எதை சொல்வதென தடுமாறகட கடவென சிரித்தவன்

“தாதி அந்த கால மனிசி ஜாதி, மதம் என பேசிகிட்டு இருப்பாங்க. நாம தனியா இருக்கும் போது மட்டும் அண்ணான்னு கூப்பிடு. எதுக்கு அறக்கப் பறக்க ஓடி வந்த என்ன விஷயம் சொல்லு ” என்றவன்  சன்கிளாஸ் ஐ அணிந்தவாறே ஜீப் வண்டியில் தாவி  ஏற வ்ருஷாத் இடது புறம் ஏறினான்.

 

“அந்த மினிஸ்டர் உங்க கிட்ட அனுமதி கேக்காம மக்களுக்காக ரோடு போட போறானாம் காலேஜ் பசங்களும் இதுக்கு கூட்டு. வேல தொடங்க பொருட்கள் எல்லாம் கொண்டு வந்து இறக்கியாச்சு. நாளைக்கே வேல தொடங்க போறாங்களாம். நம்ம மக்கள் சம்பளமில்லாம வேல பார்க்க தயாராகிட்டாங்களாம். ரோடு வந்தாதான் மத்த வசதியெல்லாம் வரும்னு காலேஜ் பசங்க பிரச்சாரம் பண்ணுறாங்க”

 

வ்ருஷாத் சொல்ல சொல்ல கவனமாக கேட்டுக்கொண்டு வண்டியை செலுத்தியவனின் உதடு வலது பக்கமாக  வளைந்து கேலிப்புன்னகை உதட்டோரம் மலர குறுக்கே வந்த மான் குட்டியை கண்டு சடாரென பிரேக் பிடித்தான்.

 

ஜீப் பிரேக் போட்ட வேகத்தில் புழுதி கிளம்ப

“இன்னைக்கி மான் கரி சாப்பிட வாய்ப்பிருக்கா?” வ்ருஷாத் நாக்கால் உதடுகளை ஈரப்படுத்தியவாறே புழுதி அடங்கும் வரை பொறுமையில்லாது ஜீப்பிலிருந்து இறங்க

புழுதி அடங்க அடங்க வெயிலுக்கு தங்கம் போல் ஜொலிக்கும் எதோ ஒன்று தென்பட ஷரப் ஜீப்பிலிருந்து இறங்க புழுதி அடங்க அடங்க அங்கே கோதுமையில் நெய்க்குலைத்து செய்த சிலைபோல் இருந்த யுவதியின் இடது பக்கவாட்டுத் தோற்றம் தென்பட அவள் மானை தூக்கியிருந்த வேகத்தில்  காதில் ஆடும் ஜிமிக்கி, அவளின் மேனியின் வண்ணத்தில் உடலை இறுக்கி அவள் அணிந்திருந்த சுடிதார், நீண்டு பின்னலிடப்பட்ட கருங்கூந்தலும், வெள்ளரிக்காய் போலிருந்த கைகளில் சிவப்பு நிற வளையல்கள், முன்னழகை மறைத்த துப்பட்டா இடையின் அளவெடுக்க தடைசெய்ய’ அவனை முறைக்கவென அவள் அவன் புறம் திரும்பிய போது மானுக்கு அடிபட்டுவிட்டதோ என்று அவளின் கண்களில் அவன் கண்ட துடிப்பு,செரிப்பழம் போல் சிவந்த நுனி மூக்கு,  சிப்பி போன்ற உதடு அதில் சாயம் பூசினாளா? இல்லையா? கண்களை கூர்மையாக்கி அவள் உதட்டின் மேல் வைத்து, அவன் அவளை அணுவணுவாக ரசிக்க

“சே வாடா போச்சே இந்த.. பொண்ணு உன்னோட மானா? மான விக்க மாட்டியா?” வ்ருஷாத் மான் கரி சாப்பிடும் ஆர்வத்தில் கேக்க

மானை இறுக்கிப் பிடித்தவளின் இடது கண்ணிலிருந்து சடாரென ஒருதுளி கண்ணீர் விழ ஷரப்பின் வலது கை சங்கிளாஸை மெதுவாக கழட்ட  கண்கள் அவளை இமைக்காது பாத்திருந்தன.

 

Advertisement