Advertisement

                                                    அத்தியாயம் 6

ஆன்ஷி மெதுவாக கண்விழிக்க தலை பாரமாக கனத்தது. ஒரு கணம் தான் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் விழிக்க மெதுவாக எழுந்து அமர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க அது எந்த இடம் என்று புரியாவிடினும், தான் கடத்தப் பட்டதும், அதை தொடர்ந்து அன்னை இரத்த வெள்ளத்தில் விழுந்திருந்ததும் நியாபகத்தில் வரவே “அம்மா” என கத்த உதடுகள் பிரிந்தனவே தவிர சத்தம் வெளியே வரவில்லை. அதிர்ச்சியாக மீண்டும் மீண்டும் கத்திப் பார்க்க சத்தம் வெளியே வராமல் போகவே கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிய கண்களை பர பரவென துடைத்துக் கொண்டவள் கட்டிலிலிருந்து கீழே இறங்க அவள் அணிந்திருந்த சிவப்புநிற ஆடை கீழே இருந்ததை கண்டு மேனி நடுங்கியவாறே தன்னை குனிந்து பார்க்க பாவாடையும் ஏதோ ஒரு ஆணுடைய மேலங்கியும் அணிந்திருக்க உடல் கூச சிலிர்த்தவள். தனக்கு  ஏதோ ஆகிவிட்டது என நினைத்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவெடுத்து  கன்னத்தில் வழிந்த கண்ணீரை அலுத்தித் துடைத்தவள் தனது துப்பட்டாவை தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த மின்விசிறியில் மாட்ட அது நா சிக்குவேனா? என்பது போல் அவளிடம் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது.

“என்னம்மா சகாப் போறியா? பொண்ணா பொறந்து  இந்த நரகத்துல வாழறத விட சாவது மேல் தான். ஆனா நீ எதுக்கு சாகப்போற” அமைதியாக அந்த பெண்மணி ஆன்ஷியிடம் பேச

“நீங்க யாரு” என்று சைகையால் ஆன்ஷி கேக்க

“நான் தான் உனக்கு துணி மாத்தி விட்டேன்” என்றார்  அந்த பெண்மணி.

ஆன்ஷியின் கண்களில் வந்து போன பாவங்களை கண்டு அவள் சாக முடிவெடுத்ததன் காரணம் புரிய

“உனக்கு ஒன்னும் ஆகல நீ பத்திரமா தான் இருக்க ஆனா அந்த ராட்சஷன் வந்தா உன் நிலைமை  என்ன ஆகுமோ” கண்களில் பயத்தை நிரப்பி அவர் சொல்ல ஆன்ஷியின் உடல் உதறியது.

“மனிதர்களை ஈவு இரக்கம் இல்லாம கொள்ளுவான். இப்போ கூட ஒருத்தன இழுத்துட்டு வந்தானுங்க. பொண்ணுங்க விசயத்துல அவன் ராமனில்லை.  ஆனா பலவந்தமாக உன்ன தான் தூக்கிக் கிட்டு வந்திருக்கான். நீ இங்கிருந்து தப்பிச்சு போய்டு அவன் ரொம்ப மோசமானவன்” அவர் சொல்ல சொல்ல ஆன்ஷியின் இதயத்துடிப்பு எகிறியது.

 

“எப்படி இங்க இருந்து தப்பிச்சு போவேன். எனக்கு உதவுங்க” என்றவாறு கைகூப்ப

“என் கூட வா. இந்தப்பக்கம் என்று அவளை யார் கண்ணிலும் படாமல் அழைத்துச் செல்ல வாசலில் மாட்டியிருந்த ஷரப்பின் ஆளுயர ஆறடி புகைப் படம் மங்கிய ஒளிவிளக்கிலும், ஆன்ஷியின் பதட்டத்தாலும் அவளின் கண்களில் படாமல் போனது விதியின் முடிவா? அதை கடந்து வேலையாட்கள் தங்கி  இருக்கும் சுவர் புறமாய் ஒரு ஆளே நுழையக் கூடியவாறு இருந்த சிறிய வாயிலை மெதுவாக திறக்க

“நா எந்த பக்கம்  போகணும்” அவரிடமே அப்பாவியாக ஆன்ஷி கையால் வினவ

“நீ எந்த குலம் என கேக்க, அவளும் சொல்ல வலது பக்கமாக போ” என்று அவளை வெளியேற்றி வாயிலை அடைத்தவர் சத்தம் செய்யாது தனது இடத்தில் வந்த்து படுத்துக்க கொண்டு ” என் பேத்தி வயசுதான் இருக்கும் கடவுளே அந்த பொண்ண காப்பாத்து” என வேண்டிக் கொண்டு கண்ணயர்ந்தார்.

ஆன்ஷி பாதையில் நடந்தவாறும், ஓடியவாறும் வீடு இருக்கும் இடத்துக்கு வர அங்கே ஆட்கள் யாராவது இருப்பார்களோ என்றஞ்சியவள் சற்று நேரம் மறைந்திருந்து கவனிக்க யாருமில்லாது போக சுற்றும் முற்றும் பார்த்தவாறே வீட்டு மதில் சுவரின்  அருகில் வந்து வாயில் புறமிருந்து எட்டிப் பாக்க தாய் இரத்த வெள்ளத்தில் இருந்த இடத்தில் இரத்தம் உறைந்திருக்க மீனாட்சி அவ்விடத்தில் இல்லை.

தாய் இறந்து விட்டதாகவும் தந்தை அன்னையை அடக்கம் செய்ய தூக்கி சென்று விட்டார் என்றும் நினைத்தவள். அன்னை சொன்னது போலவே நடந்து விட்டது என்னை விட்டு சென்று விட்டார் என்று வாய் விட்டு கதறி அழவும் முடியாமல் அவ்விடத்தில் விழுந்து அழுதவள். எவ்வளவு நேரம் தான் அங்கே இருந்தாள் என அவளுக்கே புரியவில்லை.

உள்ளுக்குள் அவளின் அன்னையின் குரல் “ஆன்ஷி இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க அவனுங்க வந்துட போறாங்க சீக்கிரம் கிளம்பு” அடித்துப் பிடித்து எழுந்தவள் வீட்டினுள் ஓடி பரணின் மேல் ஏற அவளை தேடி வந்து நின்றது ஷரப்பின் வண்டி.

 

மனீஷின் பெண்ணை தூக்கிட்டு வா என்ற உத்தரவிட்ட போதோ, மனிஷிடம் ஆன்ஷி எங்க என கேட்ட போதோ, அவன் மினிஸ்டரிடம் வித்துட்டேன் என்ற போது மினிஸ்டர் ஒரு காமத் கொடூரன் என அறிந்து மனதில் அப்பெண்ணை பற்றி சிறிது அனுதாபம் தோன்ற குற்றுயிராய் கிடந்த மீனாட்சி “என் பொண்ண காப்பாத்துங்க, இந்தாள நம்பி ஏமாந்து வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ணி கிட்டேன். இவனின் மறுமுகம் தெரிஞ்சி இவன எதிர்த்து போனதால என் கால உடைச்சிட்டான். பொறந்ததிலிருந்தே சந்தோசத்த பாக்காத என் பொண்ணு இனிமேலாவது சந்தோசமாக இருக்கட்டும்” அக்குரல் போனை கட் செய்யாததால்  ப்ளூடூத் வழியாக ஷரப்பின் காதில் விழுந்து என்ன உணர்வை ஏற்படுத்தியதென்று அவனுக்கே புரியவில்லை.

ஒரு தாயின் சாவின் விளிம்பில் வடித்த  கண்ணீர் குரல் அவனை கொஞ்சம் அசைத்துப் பார்த்ததோ? அல்லது கடவுள் ஆன்ஷியின் மூலம் அவனுக்கு அளித்த காதல் எனும் உயிர் வேர் அவனுள் ஆழமாக  புதைந்து தன்னவளை காக்க உத்தவிட்டதோ? அவனின் மனதில் நடக்கும் உணர்ச்சிப் போராட்டத்தை புரிந்து கொள்ள முற்சிக்காதவனை கடவுள் சோதிக்க காத்திருந்தாரோ ஆன்ஷி இருந்த அறையில் அவளை காணாது விருந்தினர் மாளிகையின் எல்லா இடத்திலும் ஒளிவிளக்குகள்  ஏற்றப் பட்டு அவளை தேடியும் கிடைக்காமல். அவனுடைய பாதுகாப்பை அவள் எவ்வாறு மீறிச்சென்றாள்  என்று யோசிக்கும் மனநிலையில் அவனில்லை. செய்வதறியாது அவளின் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

வீடு முழுக்க தேடியும் ஆன்ஷியில்லை. என்ன மாதிரி உணர்கிறான் என்று புரியாமல் வாசல் படியிலேயே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தவன் கிளம்பி சென்று விட்டான்.

பரண்மேல் ஏறியவள் யாரோ வரும் சத்தம் கேட்டு வாயை கையால் மூடி அமைதியாக நிற்க வெளிச்சம் குறைவாக இருந்த படியால் அவள் மேசையை இழுத்து ஏறியிருந்தது ஷரப்பின் அடியாட்களின் கவனத்தில் வரவில்லை. அவர்கள் கிளம்பி சென்று விட்டனர் என்று உறுதி படுத்திக்க கொண்டு ட்ரங்க் பெட்டியை திறக்க ஒரு மஞ்சள் பையில் அன்னையின் வீட்டாருடன் எடுத்த சில புகைப் படங்கள் இருக்க ஆசையாய் தடவிப்  பார்த்தவள். வீட்டு முகவரியும் கொஞ்சம் பணமும் இருக்க ஒரு பையில் தனது இரண்டு சுடிதாரை சுருட்டி போட்டவள் வீட்டை விட்டு வெளியேறினாள்.

கோயமுத்தூர் போக வேண்டும். எப்படி செல்வது? எந்தவழியில் சென்றால் சென்றடையலாம். பின்னாடி நிழல்கள் துரத்த யாரிடம் போய் உதவி கேட்பது? ஒன்றும் புரியாமல் கால் போன போக்கில் நடந்தவள் லாரிகள் உணவுக்காக நிறுத்தியிருக்கும் இடத்தை வந்தடைந்தாள்.   

இரண்டு  நாட்களாக தந்தை பாசம் என்ற பெயரில் காட்டிய வேஷம் பசி தூக்கம் மறந்திருக்க அப்பொழுதுதான் அவளுக்கும் பசி என்ற உணர்வு இருப்பதாகவே தோன்றியது. ஆனால் அவ்விடம் சென்று சாப்பிட பயமாக இருந்தது.

லாரிகளை இடையே மறைந்து மறைந்து சென்றவள் தமிழில் இருவர் பேசுவதை கேட்டு சந்தோஷமடைந்தவளாக அவர்களிடம் உதவி கேக்க முடிவு  செய்து அவர்களிடம் செல்ல அடியெடுத்து வைக்க அவளின் உள்மனம்”தமிழில் பேசுவதால் அவர்கள் மட்டும் நல்லவர்களாகிடமுடியாது ஆன்ஷி” எச்சரிக்கை செய்தது.

உடனே நடையை நிறுத்தியவள் அவர்களை விட்டால் அவளுக்கு உதவவும் யாருமில்லை என புரிய அவர்கள் அறியாதவாறு லாரியின் பின்னாடி ஏறி அமர்ந்துக் கொண்டாள். லாரியும் புறப்பட்டது இரண்டு நாள் நிம்மதி இல்லாமையும் இன்றைய நீண்ட இரவின் அலைச்சலும் பசியின் மயக்கமோ? அவளை கண்ணயர செய்ய நிம்மதியாக உறங்கினாள்.

ஆன்ஷி ராஜஸ்தானை விட்டு சென்று கொண்டிருக்க இங்கே ஷரப் யொத்தவை தேடியது போல் ஆன்ஷியை சல்லடை போட்டு ராஜஸ்தானில் தேடும் வேட்டையை ஆரம்பித்தான்.

 

அவளின் நிம்மதியை குழைக்கவென லாரி பஞ்சராகி நிற்க ஸ்டெப்னியை எடுக்க வந்த லாரி கிளீனர் அவளை கண்டு கத்த தூக்கம் களைந்து எழுந்தமர லாரி டைவரும் வந்து சேர்ந்தார்.

“அண்ணே பொண்ணு சும்மா லட்டு மாதிரி இருக்காண்ணே. என்னா கலரு என்ன அழகு” கிளீனர் வழிய ஆன்ஷி அவர்களை பயப் பார்வை பார்த்து வைக்க க்ளீனரின் மண்டையில் கொட்டிய டைவர்

“ஏண்டா அக்கா தங்கை கூட பொறந்தவன் பேசுற பேச்சாடா இது?” டைவர்

“அக்கா தங்கைக கூட பொறக்காதவன் மட்டும் பேசலாமா?” கிளீனர்

“அவன் ஒரு அம்மா எங்குற பொண்ணு வயித்துல தானே பொறந்தான்” இது டைவர்.

“என்ன சொன்னாலும் மடக்குறாரே இருங்க வரேன். அப்போ அண்ணே அநாதனு ஒரு ஜாதி இருக்கே அவனுங்க” கிளீனர் டைவரை  புத்திசாலித்தனமாக கேட்டு மடக்கியதாக புன்னகைக்க

அவனை முறைத்து பார்த்தவர் “யாரடா அனாதை அம்மா, அப்பா கூடப் பொறந்தவங்கனு எல்லாரும் இருந்தும் வயசான காலத்துல பெத்தவங்கள அனாதை ஆசிரமத்துல கொண்டு போய் விடுறானுங்களே அவனுங்க தான் அனாதை. பெத்தவங்க யாருன்னே தெரியாம வளந்து பாசத்துக்காக ஏங்கி தன்னை மாதிரி  உறவே இல்லாம யாரும் இருக்கா கூடாதுனு நினைக்கிறவன்,  கூட இருக்குறவங்களை மதிச்சு, அன்பையும் காட்டி, பாதுகாப்பை பத்தியும் நினைக்கிறாங்களே அவங்க மனிசன்” டைவர் லெக்ச்சர் அடிக்க

“விட்டா ஓவரா பேசியே கொல்லுறாரே, இவர் கூட குப்பை கொட்ட முடியலடா சாமி, சரிண்ணே சரிண்ணே இந்த பொண்ணுக்கு ஒரு வழி சொல்லுங்க” தலையை சொறிந்தவாறே கிளீனர் சொல்ல

இவர்கள் என்ன பேசுறார்கள் என்று புரியாமல் முழித்த ஆன்ஷி கிளீனர் இரண்டு கைகளையும் தன் புறம் திருப்ப மீண்டும் மனதில் பயப் பந்து உருண்டது.

“ஐயோ இந்த பொண்ணு வேற ராஜஸ்தான் பொண்ணா இருக்காளே! எனக்கு வேற ஹிந்தி தெரியலையே! சரி சைகை பாசையாலேயே சொல்லுவோம்” என்று தாக்குள்ளேயே பேசிக் கொண்டவர் கையை ஆட்டி ஆட்டி தமிழில் சொல்ல தமிழை கற்ற ஆன்ஷி அவரை தெளிவாக புரிந்துக் கொண்டாள்.

“இந்த பொண்ணு நீ எதுக்கு என் வண்டில ஏறினனு எனக்கு தெரியல, நா தமிழ் நாட்டுக்கு போய் கிட்டு இருக்கேன். எங்கள பார்த்து நீ பயப் பட வேண்டியதில்லை. எனக்கும் உன்ன மாதிரி ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க” அவர் பேசும் போது குறுகி கிட்ட கிளீனர்

“யாரு உங்களுக்கு இந்தப் பொண்ணு மாதிரி? அங்கவை சங்கவை மாதிரி ரெண்டு பொண்ணுங்கள பெத்துட்டு பேசுற பேச்சப்பாரு”

“நீ மட்டும் பால்ல குளிச்சி வெள்ளையாவா? இருக்க?”

“உங்க பொண்ணு அங்கவை உங்க காச பூரா பாயர் அண்ட் லாவல்லி வாங்கியே கரைகிறாளே சொல்லி வைங்க அவ கிட்ட என்னதான் அங்கவை பாயர் அண்ட் லாவல்லி பூசினாலும் ஐஸ்வர்யா ராய் ஆகா முடியாது”

“சைக்கிள் காப்ல என் பொண்ணையே கிண்டலடிக்கிறியா” டைவர் மீண்டும் க்ளீனரின் தலையில் கொட்ட ஆன்ஷிக்கு தோன்றியதோ இவர்களால் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது மட்டுமே.

சினேகமாக அவர்களை பார்த்தவள் சைகை மொழியால் பேச புரியாமல் இவர்கள் குழம்ப தமிழில் எழுதி காட்டவே

“ஓஹ் கோயமுத்தூரா நம்ம ஊர் தான் அம்மணி பத்திரமா கொண்டு போய் விட்டுடுறோம். நீ முன்னாடி வந்து உக்காரு” டைவர் உட்சாகமாக சொல்ல

ஸ்டெப்னியை மாற்றியவர்கள் “போலாம் ரைட்” கிளீனர் சொல்ல லாரி கோயம்புத்தூரை நோக்கி புறப்பட்டது.

 

Advertisement