Advertisement

                                                 அத்தியாயம் 5

மனிஷ் மீனாட்சியை ரத்தவெள்ளத்தில் கண்டு அதிர்ச்சியில் உறைந்தவாறு நிக்க அவனின் தோளை தொட்டது ஒரு கரம்.

“எங்கடா உன் பொண்ணு” அதட்டலாக அந்த அடியாள் கேக்க பதில் சொல்லும் நிலைமையில் மனிஷ் இல்லை

“மீனாட்சி” என மனிஷ் கத்த அப்பொழுதுதான் அங்கு வந்த அடியாட்கள் மீனாட்சியை பார்க்க ஷரபுக்கு அழைத்தனர்.

ஆம் வந்தது ஷரப்பின் ஆட்களே {அப்போ ஆன்ஷிய தூக்கிட்டு போனது ஹரிலாலின் ஆட்களா?}

 

“என்னடா சொல்லுறீங்க? அந்த பொண்ணு அங்க இல்லையா ? அந்த பொம்பள செத்துட்டாளா?” ஷரப் முதல் கேள்வியை டென்ஷனாகவும் இரண்டாம் கேள்வியை சாதாரணமாகவும் கேக்க

 

“உயிர் இருக்கு பாஸ்”

“அவன் பொண்ணெங்கனு அவனை கேளு ” ஷரப்பின் குரல் அடியாள் காது சவ்வை கிழித்தது.

சுயநினைவுக்கு வந்த மனிஷ்  “தம்பி தம்பி என் பொண்டாட்டிய காப்பாத்து” அவனின் காலில் விழுந்து கெஞ்ச அவனை ஒருகையால் தூக்கி நிறுத்திய அந்த அடியாள்

“உன் பொண்ணு எங்க” அவனை உலுக்க

“மினிஸ்டருக்கு வித்துட்டேன்” மனேஷை கீழே தள்ளிய அடியாள் போனை கட் செய்யாதவாறு இருந்தபடியால் மனிஷ் சொன்னது  ஷரப்புக்கு கேட்டிருக்க ஜீப்பை நோக்கி ஓடினான்.

வ்ருஷாத்தும் பின்னாலயே ஓடிவந்தது தாவி ஏற இன்னொரு வண்டியில் அடியாட்கள் அனைவரும் ஏறி இவர்களின் வண்டியை பின் தொடர்ந்து வந்தனர்.

 

“எதுக்குடா  மயக்க மருந்து கொடுத்த” மினிஸ்டர் ஆன்ஷியை தூக்கிட்டு வந்த அடியாள் ஒருவனை அறைய

“ரொம்ப முரண்டு பிடிச்சா அதான்” என்று இழுக்க

 

“சே எனக்கு சுயநினைவில்லாத பொண்ணுங்கள தொட்டா ஏதோ சைட் டிஷ் இல்லாம சரக்கடிச்ச மாதிரி. அதுங்க ‘வேணா வேணா என்ன விட்டுங்கனு’ கத்தும் போது அப்படியே ஜிவ்வுனு ஒடம்பு சூடாகி மூட் ஏறுது”  

ஹரிலால் தனது லீலைகளை விலாவாரியாக விளக்க அங்கு வந்து சேர்ந்தான் ஷரப்.

 

ஷரப் ஹரிலாலின் பங்களாவை  அடைந்த போது வாயில் இருந்த காவலாளிகள் அவனை உள்ளே விடாது தடுக்க அவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட வாயிலை திறக்குமாறு ஒரு காவலாளிக்கு உத்தரவிட உயிருக்கு பயந்த காவலாளி திறக்க துப்பாக்கி சுடும்  சத்தம் கேட்டு மினிஸ்டரின் பாதுகாவலர்கள் அங்கே வர துப்பாக்கி சூடும், வாழ் வீச்சும் சரமாரியாக பாய, வேட்டை நாய்களும் பாய்ந்து வந்தன.

 

நாய்கள், பாதுகாவலர்களை தாண்டி ஹரிலாலின் அடியாட்களும் இருக்க சிலரை துப்பாக்கியால் சுட்டும், வாளால்  வெட்டியும், அவன் பயின்ற யுத்தகலாவை கொண்டு தன்னை காத்தவாறே எல்லாரையும் அடித்து தொம்சம் பண்ணியவன் ஹரிலாலின் முன் கம்பீரமாக நிற்க ஆடிப் போனார் மினிஸ்டர் ஹரிலால்.

 

துப்பாக்கி சுடும் சத்தம் கலவரம் போல் வெடிக்க ஆன்ஷியை நோக்கிப் போனவர் சத்தம் கேட்டு திரும்பி வர அங்கே சோபாவில்  கால் மேல் கால் போட்டு அமர்ந்தவாறு ஷரப் இருப்பதை கண்ட ஹரிலால் மீண்டும் இவனா? என்ற அதிர்ந்த பார்வை பார்க்க

 

“என்ன ஹரிலால் என்ன இந்த நேரத்துல எதிர் பார்க்கல இல்ல. உன் ஆட்களையும் , வேட்டை நாய்களையும் தாண்டி உள்ளே வந்திருக்கேனா விஷயம் ரொம்ப பெருசு” ஷரப் பேச ஆரம்பிக்கும் போதே வ்ருஷாத்தும் அடியாட்களும் ஷரப்பின் பின்னாடி வந்து நின்று கொண்டனர்.

“எனக்கு மனிஷோட  பொண்ணு வேணும்” அதிகாரமாக ஷரப் சொல்ல

“மனிஷ் பொண்ணா? யாரு மனிஷ்? எந்தப் பொண்ணு?” ஒரு அப்பாவி புன்னகையை உதட்டில் கொண்டு வந்து ஹரிலால் ஒன்றும் தெரியாததை போல் பேச

 

“ம்ம் மனீஷ் யாருன்னு உனக்கு தெரியாதில்ல பெண்களை விற்று தொழில் புரிபவன். போன வருஷம்  வயசுக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகாத பதிமூனு வயசு பொண்ண உனக்கு கூடிக் கொடுத்து உன் டாச்சேர் தாங்காம செத்துப் போச்சே ஒரு பொண்ணு… பேர் கூடா தன்யாவோ ஷான்யாவோ! பேர் எதுக்கு நமக்கு, அப்பொறம் ஆறு மாசத்துக்கு முன்னால ஒரு பொண்ணு அவ கூட செத்து போய்ட்டாளாமே! ஏதோ வீடியோ  வேற எடுத்து வச்சிருந்தாளாம்” என யோசிக்கும் பாவனையில் கூற

“பதிமூனு வயசு பொண்ணு செத்தது இவனுக்கு எப்படி தெரியும்? வீடியோவ நா அப்போவே அழிச்சிட்டேனே இவனுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்” என்று ஹரிலால் பேய் முழி முழிக்க

“உன்ன பத்தி இந்த மாதிரி நிறைய கத இருக்கு. உன்னோட எல்லா லீலைகளையும் தெரிஞ்சிகிட்ட உன் பொண்டாட்டி உன் பையனோட டில்லில இருக்குறதும். உன்ன பத்தி எதுவுமே தெரியாத உன் பசங்க உன்ன நஷனல் ஹீரோவா பாக்குறதும் எல்..லா..ம் எல்லாமே   ஒரே வீடியோவால சுக்குநூறா ஆக்கிக் காட்டட்டுமா? ஷரப் அமைதியான குரலில் மிரட்ட

“இல்ல இல்ல அப்படி ஒன்னும் பண்ணிடாத” தனது மினிஸ்டர் எனும் விம்பம் உடைவதியும் , பிள்ளைகளின் முன் அவமானப் படுவதையும் நிறுத்த ஷரப்பின் காலுக்கு கீழ் விழுந்து கெஞ்ச. அதை வ்ருஷாத் வீடியோ எடுத்தான்.

நா எதுக்கு ஹரிலால் வீனா உன் விசயத்துல தலையிட போறேன் நா கேட்டதை நீ தரேன்னு சொன்னா நா பாட்டுக்கு எடுத்து கிட்டு போய்ட போறேன் நீ தான் என்ன வீணா பேச வைக்கிற” என்று ஹரிலாலின் தலையை தடவியவன். ‘இப்போயாச்சும் மனிஷ் பொண்ணு எங்கன்னு சொல்லலையே! ச் சு சு ..

ஷரப் ராட்சசனா மாறும் போது அவனது உடல் மொழியுடன் வாய் மொழியும் வெகுவாக மாறும் அதை நன்றாக புரிந்த ஹரிலால் ஏதோ ஒரு அறையை கை காட்ட மெதுவாக அவ்வறையை நோக்கி நடந்தான் ஷரப். அவனது மனமோ ஆன்ஷியின் நிலை குறித்து தாறுமாறாக சிந்தித்தது.

அவ்வறையினுள் தேட ஆன்ஷியில்ல. கோவம் வந்தவனாக திரும்பப் போக தண்ணீர் கொட்டும் சத்தம்  கேட்டு குளியலறைக்கு சென்றவன், அங்கே கண்டது குளியல் தொட்டியில் படுத்திருந்த ஆன்ஷியை. அவனது வலது விழியிலிருந்து ஒரு துளி கண்ணீர் விழ அதை உணரும் நிலையில் அவன் இல்லை.

அவளருகே ஓடிச் சென்றவன் அவள் நிலையை சோதிக்க மயக்க மருந்தின் வீரியத்தில் மயங்கி இருந்தவள் வலது கன்னம் அவள் அணிந்திருந்த சிவப்பு நிற ஆடையின் நிறத்தில் இருக்க இடது கன்னம் தீக்காயம் போல் இருக்க “அன்று இல்லாதது இன்று எப்படி” மனீஷின் மேல் கொலை வெறி வர

“வ்ருஷாத்” என கத்த அவனின் குரலை கேட்டு அடித்துப் பிடித்து ஓடிவந்த வ்ருஷாத் அங்கே ஆன்ஷியை அணைத்திருந்த ஷரப்பை வித்தியாசமாக பார்க்க ஆன்ஷியை தூக்கிக் கொண்டு வெளியே வந்தவன் ஹரிலாலிடம் திரும்பி

அவளது பெயர் தெரியாததால் “இந்த பொண்ணை நீ அடித்தாயா” என்று கேக்க

“ஐயோ இல்ல என் சுண்டு  விரல் கூட படல்ல” என்று ஹரிலால் பதட்டமாக சொல்ல

“அதனால நீ தப்பிச்ச. வ்ருஷாத் மனிஷ் எங்க இருந்தாலும் எனக்கு அவன் வேணும்” உத்தரவிட்டவன் ஆன்ஷியை ஜீப்பில் அமர்த்தி   விருந்தினர் இல்லத்திற்கு வண்டியை செலுத்தினான்.

 

ஷரப் அகன்றதும் அவனிடம் திரும்ப தோற்ற கோவத்தில் எல்லா பொருட்களையும் போட்டு உடைத்தார் ஹரிலால். பைத்தியம் பிடித்தது போல் அவர் நடந்துக்க கொள்வதை கட்டுப் படுத்த முடியாமல் திணறினர் அவருடைய ஆட்கள்.

 

விருந்தினர் மாளிகைக்கு வந்தடைந்தவன் வண்டியிலிருந்து ஆன்ஷியை தூக்கிக்கொண்டு சென்று ஒரு கட்டிலில் படுக்கவைக்க அவளது உடம்போ சில்லென்று இருந்தது. அங்கிருந்த துண்டை கொண்டு அவளை பரபரவென துடைத்தவன் ஹீட்டரை ஆன் செய்து அவளின் துணியை மாத்த கைவைத்தவன் கையை இழுத்துக் கொண்டான்.

பின்னாடி வந்த அடியாட்கள் காவலிருக்க வ்ருஷாத் ஷரப்பின் பின்னால் சென்றவன் அவன் ஒரு பெண்ணுக்கு செய்யும் பணிவிடைகளை கண்டு வாயை ஆவென  பிளந்தவாறு பார்க்க ஆன்ஷியின் துப்பட்டாவில் ஷரப் கைவைக்க மறுபுறம் திரும்பி நடந்தவனை தடுத்து நிறுத்தியது ஷரப்பின் குரல்.

“வ்ருஷாத் போய்  யாராச்சும் வேல செய்ற பொம்பளய கூட்டிட்டு வா” உத்தரவிட்டவன். ஆன்ஷியின் கையை பிடித்தவாறே அமர்ந்திருந்தான்.

 

“இந்த அண்ணனுக்கு என்ன ஆச்சு ஒருநாளும் இல்லாம இப்படி நடந்துக்கிறாரு” என்றவாறே வ்ருஷாத் வேலையாட்கள் தங்குமிடம் சென்றான்.

 

ஆன்ஷியின் முகத்தை பார்த்திருந்தவன் “நீ மனீஷ் பொண்ணு என்றதும் உன்ன எப்படியெல்லாம் டோசேர் பண்ணனும், அவமானப் படுத்தனும் னு பிளான் பண்ணி வச்சிருந்தேன். உன் முகத்தை பார்த்ததும் ஒன்னும் தோன மாட்டேங்குதே. யாரடி உன்ன அடிச்சது? அன்னக்கி முகத்துல எந்த காயமும் இருக்கலையே! யாரு உன்ன இப்படி பண்ணது? ஆன்ஷியின் முகத்தி பார்த்தவாறே பேசிய ஷரப். துண்டால் அவள் முகத்தை ஒற்றி எடுக்க ஏற்க்கனவே தண்ணீர் பட்டு பூசியிருந்த களிம்பு ஊறியிருக்க அவன் துடைக்கும் போது அது துண்டில் ஒட்டிக் கொள்ள அவளை அதிர்ச்சியாகப் பார்த்தான் ஷரப்.

‘எதுக்கு முகத்தை இப்படி பண்ணி வச்சிருந்தா” என்று யோசித்தவனை தடுத்தது வ்ருஷாத்தின் குரல் அங்கே ஒரு வேலை செய்யும் பெண்மணி நின்றிருக்க அவளின் துணியை மாற்றுமாறு  உத்தரவிட்டவன் வெளியே செல்ல மனீஷை தேடிச்சென்றவர்கள் அவனை தூக்கிக் கொண்டு வர விருந்தினர் மாளிகையின் பின்னால் இருக்கும்  இடத்துக்கு அவனை கொண்டுசெல்லுமாறு பணித்தவன். துணியை மாற்றி விட்டு அப்பெண்மணி வெளியே வரவும் உள்ளே சென்று ஆன்ஷியை பார்த்தவன்.

“நீ அந்த கேடு கெட்ட குள்ள நரி மனீஷ் பொண்ணுன்னு தெரிஞ்சும் உன்ன ஒன்னும் பண்ண முடியல. உன்ன இப்படி பாத்ததிலிருந்து இங்க ரொம்ப வலிக்குது” என்று நெஞ்சில் கை வைத்து கூறியவன்.”அது ஏன்னு தெரியல, நா தெரிஞ்சிக்கவும் விரும்பல” என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு மனீஷை கட்டியிருந்த இடத்துக்கு சென்றான்.

 

“சொல்லு மனீஷ் உன் பொண்ண பத்தி சொல்லு” ஷரப் சாதாரணமாக கேக்க

“இந்த அண்ணண் அந்த பொண்ண பாத்ததிலிருந்தே சரியில்ல” வ்ருஷாத் முணுமுணுத்தவாறே மனீஷின் பதிலுக்காக காத்திருந்தான்.

“என் பொண்ணு ஆன்ஷி” கண்களில் கர்வம் பொங்க “ஆன்ஷி பேரழகி…என்ன அந்த கழுத்தை முகத்தை சுட்டுகிட்டா” அவனை எட்டி  உதைத்திருந்தான் ஷரப்.

“பெத்த பொண்ணையே கழுதைன்னு சொல்லுற” என்றவாறு இன்னும் சில உதைகளை வழங்கியவன். “ம் சொல்லு அவ பொறந்ததிலிருந்து சொல்லு”

கஷ்டப்பட்டு கீழே அமர்ந்த மனீஷ் வலியால் முனகியவாறே சொல்ல ஆரம்பித்தான்.

“அவ பொறந்ததிலுருந்தே அழகிதான். நா பண்ணுற தொழில்ல  அவள மாதிரி அழகிகளுக்கு மவுசு அதிகம். வயசான காலத்துல அவள சம்பாதிக்க வச்சு அதுல நா சொகுசா வாழலாம் னு கனவு கண்டேன். அவளோட முகம் எரிஞ்சதால அவள தொழில்ல ஈடு படுத்த முடியல.

ஷரப்பின் மனமோ “அப்போ இவனாலதான் முகம் எரிஞ்ச மாதிரி ஏதோ பூசி வச்சிருக்காளா?”

மீனாட்சி  அவள ரொம்ப பாதுகாத்தா என் மீனாட்சி மீனாட்சி” என மனீஷ் கதற

“உன் பொண்டாட்டி அவங்க ஏமாத்தி கல்யாணம் பண்ணி கால வேற உடைச்சியிருக்க உன் பொண்ணு அவங்கம்மாவ பார்த்து எந்த நாளும் கண்ணீர் வடிச்சிகிட்டே   இருந்திருக்கிறா. உன்னால அவ சந்தோசமா இருந்ததே இல்லல. நீ உயிரோடு இருந்து என்ன பண்ண போற செத்துப் போ உன் பொண்டாட்டியும் பொண்ணும் நிம்மதியா இருப்பாங்க” என்று சொன்னவன் வ்ருஷாத்தை பார்க்க.

ஒரு அடியாளுக்கு உத்தரவிட ஷரப்பின் கையில் ஒரு ரிமோர்ட் வழங்கப்பட அதை அவன் அமத்த நிலத்தில் சதுரமாக இருந்த ஒரு கதவு மெதுவாக திறக்கப் பட்டது.

நீச்சல் குளம் போல் ஆழமாக இருந்த அது ஒரு பெரிய மீன் தொட்டி. அந்த மீன் தொட்டி பத்தடி அகலமும் பத்தடி நீளமும் கொண்டிருக்க மீன்தொட்டியில் பொருத்தப்பட்ட ஒளி விளக்குகள் ஏற்றப்  பட்டன. அவை ஒளிர்ந்ததும் சின்ன சின்ன மீன்கள் தெரிய மனீஷை பார்த்த ஷரப்.

“என்ன பாக்குற மனீஷ் உயிரோட இருக்குற வரைக்கும் நெறய பேருக்கு அநியாயம் மட்டும் பண்ணின நீ சாகும் போது இது இந்த மீன்களுக்கு இறையாகிடு. என் குட்டிங்க ரொம்ப பசில இருக்குதுங்க. என்னடா மீன் மனுஷன சாப்பிடுமா? இது கோடி ரூபா கொடுத்து நா வாங்கிய என் செல்ல பிராணிகளில் ஒன்று. {அப்போ இந்த மாதிரி செல்லப் பிராணிகள் நிறைய இருக்கா?} இதுக்கு பிரான மீன் என்று சொல்வார்கள். சரி நீயே பாரேன் குட்டிங்க என்ன பண்ணும்னு” வ்ருஷாதுக்கு கண்ணை காட்ட அடியாட்கள் மனீஷை தூக்கி அந்த தொட்டியில் வீச மனீஷின் மரண ஓலம் அந்த இரவின் அமைதியை குலைத்தது.

மனீஷின் சதைகள் குட்டி பிரானாக்களால் சில நிமிடங்களில் காலியாகிவிட அவனின் எலும்புக்கு கூடு மாத்திரம் எஞ்சியது. மனீஷ் துடிதுடித்து சாவதை குரூரமாக பார்த்த ஷரப்பின் மனம் “எவ்வளவு பேர இதுக்குள்ள தூக்கி போட்டிருக்கேன் இன்னக்கி தான் மனம் நிம்மதியாய் இருக்கு” என்று அமைதியாகி விட ஆன்ஷியை காண சென்றான்.

இரத்த வெள்ளத்தில் இருந்த மீன் தொட்டியை சுத்தப் படுத்துமாறு வ்ருஷாத் கட்டளையிட்டு விட்டு ஷரப்புடன் ஆன்ஷியின் அறையை அடைய அங்கே ஆன்ஷியை காணாமல் தேட அவள் அந்த விருந்தினர் மாளிகையிலிருந்தே காணாமல் போய் இருந்தாள்.

Advertisement