Advertisement

                                                அத்தியாயம் 2

 

“யோவ் மினிஸ்டரு என்ன நல்லா இருக்கியா? ஊருக்கு நல்லது பண்ணுறியாமே? ரோடு போட போறியோ ரோடு.  ஆடு மேய்பவனுக்கு எதுக்குடா ரோடு  ? நீ ரோடு போடுறேனு ஊர்மக்கல ஏமாத்தலாம் என்ன ஏமாத்த முடியுமா? ரோடு போட போறியே அது எத்தன கோடி ரூபா ப்ரொஜெக்ட்டு, அதுல உனக்கு இருக்கும் கமிஷனு,  வேறயா நீ அடிக்க போற கோடி ரூபா கொள்ள. எல்லாம் எனக்கு தெரியும்டா! ஏதோ போனா போகுதே பேருக்கு மினிஸ்டரா இருன்னு சொன்னா எங்க மேலயே கை வைக்கிறியா? சொந்தகாரனாச்சே ஒன்னு விட்ட சித்தப்பா வேறனு தாதிமா பாவம் பாக்க போய் இந்த கூட்டத்த சேர்த்துக்கிட்டு என்னா பேச்சு பேசுற ரோடு வருமாம், ஸ்கூல் வருமாம், ஹாஸ்பிடல் வருமாம். எல்லாம் வரும் ஆனா வராது அப்படி தானே?  எல்லா காசும் உன் பாக்கெட்டு போகும் இல்ல. என் கிட்ட சொன்னா பங்கு கேப்பேனு சொல்லாம கூட்டம் சேர்த்தா விட்டுவிடுவேனா?

 

வ்ருஷாத் வண்டியை நிறுத்தும் வரை கனவுலகில் இருந்தானோ! திக்பிரம்மை ஆட்டு வித்ததோ! வ்ருஷாத் தோளில் தட்ட “என்னடா” என்ற பார்வையில் சுற்றும் முற்றும் பார்க்க அப்பொழுதுதான் மினிஸ்டர் ஹரிலால் மேடையில் மைக்கின் முன்னால் இருப்பதையும் மக்கள் கூட்டமாக அமர்ந்து அவர் பேசுவதை கேட்டு கொண்டு இருந்த தருணம். ஷரப்பின் வண்டியை கண்டு  அங்கே மரண அமைதி நிலவ ஷரப் வண்டியிலிருந்து மேடையை நோக்கி ஸ்டைலாக நடக்க காலேஜ் பெண்கள் சில வந்த வேலையை மறந்து அவனை சைட் அடித்துக் கொண்டிருக்க  ஏதோ ஒரு ராட்சசன் நடந்து வருவதாகவே மினிஸ்டருக்கு தோன்றியது.

 

“ஐயோ வரானே வரானே என்ன பண்ண போறானோ! இவன் மாமன்காரன் சொல்லி செய்றேன்னு தெரிஞ்சா என்ன பண்ணுவானோ ஒன்னும் புரியலையே!” மினிஸ்டர் ஹரிலால் பதற, வந்தவன் அவருக்கென போடப்பட்டிருந்த இருக்கையில் அமர ஓடிவராத குறையாய் அவனருகில் உள்ள கதிரையில் அமர அவன் பேசப் பேச திருதிருனு முழித்த ஹரிலால்

 

“ஐயோ சொல்ல கூடாதுனு இல்லப்பா மக்கள் கோரிக்கை” என இழுக்க

 

வ்ருஷத்துக்கு கண்ணை காட்ட ஐபேடையும் ஹெட்ஃபோனையும் எடுத்து வர ஹெட்ஃபோனின் ஒரு முனையை அவன் காதில் மாட்டிக் கொண்டவன் இன்னொரு முனையை மினிஸ்டர் காதில் மாட்டி யாருக்கோ வீடியோ கால் பண்ண அழைப்பு ஏற்கப் படும் வரை விசில் அடித்தான்.

அவன் செய்வதெல்லாம் இதயத்துடிப்பு எகிற பாத்திருந்த மினிஸ்டர் அழைப்பு ஏற்பட்டதும் சிவப்பு நிற உதட்டுச் சாயம் பூசி, லூஸ் ஹேர்இல், குட்டை கவுன் அணிந்த, போதையேறிய விழிகளுடன்    திரையில் தெரிந்த அழகான யுவதியை கண்டு இளிக்க

“ஹாய் ஹரிலால்” என அந்த யுவதி  பறக்கும் முத்தம் வைக்க அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறந்து ஹரிலால் யுவதியின் அரைகுறை ஆடையில் வெளியே தெரிந்த  முன்னழகை ரசித்தவாறே

 

“ஹாய் பேபி” என அவளை ஜொள்ள

 

ஷரப் பக்கம் திரும்பியவள் “ப்ரோ நீ சொன்னது போல் பக்காவா பண்ணிட்டேன்” என கட்டை விரலை உயர்த்திக் காட்ட ஹரிலால் கொஞ்சம் குழம்பித்தான் போனார்.

 

“நம்ம ஹரிலால் ரொம்ப ஆர்வமா தான் இருக்காரு நீயே சொல்லு வைஷ்ணவி” ஆம் அது வைஷ்ணவி தான்  ஷரப் அழைத்தது டில்லியில் காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் வைஷ்ணவிக்குத்தான்.

 

தனது கையடக்கத்தொலைபேசியை திருப்பிக் காட்ட அங்கே மினிஸ்டரின் மகன் யாதவ் மேலாடையில்லாது,இடுப்புக்கு கீழே போர்வை போர்த்தப் பட்டு ஒரு யுவதியை அணைத்தவாறே  கட்டிலில் படுத்திருக்க

 

ஹரிலால் பதறாமல் “அப்பன் மாதிரிதானே புள்ளையும் இருப்பான்” என்ற பார்வையில் இவர்களின் பிளான் என்னவோ என்ற ரீதியில் இருக்க வைஷ்ணவி தொடர்ந்து பேசினாள்

 

“உன்ன மாதிரி இல்ல ஹரிலால் பையன் உன் பொஞ்சாதி மாதிரி அடக்கமான பையன் பொண்ணுங்க விசயத்துல ராமன். அப்போ இங்க என்ன நடக்குதுன்னு முழிக்காத நானே சொல்லிடுறேன். உன் பையனை போல் நானும் ஒரு வேதியியல் மாணவி. அவன் நாட்டுக்கு நன்மை செய்யணும்னு நினைச்சான், நான் வீட்டுக்கு காசு சேர்க்கணும் னு நினச்சேன். அவனை மடக்க ரொம்ப கஷ்டப் படணுமோனு  இருக்கும் போது பயபுள்ள தானா வந்து சிக்கிட்டான். என்ன லவ் பண்ணுறானாம்” என்று பேய் சிரிப்பு சிரிக்க ஷரப் ஹரிலாலின் தோளில் தட்டினான்.

 

” என்ன போய் எப்படி லவ் பன்னான்னு யோசிக்கிறியா” என்றவாறே தனது நெஞ்சுக்கு நேராக ஆள்காட்டி விரலை வைக்க

 

“தான் ரசித்தவள் தனக்கு மருமகளா?” ஹரிலால் முகம் அருவருப்பை காட்ட அது எதுவும் வைஷ்ணவிக்கு பெரிதாக தெரியவில்லை.

 

“காலேஜ் போகும் போது சுடிதார் போட்டு முடிய பின்னி கண்ணுக்கு கண்ணாடி வேற போட்டு கிராமத்து பொண்ணு போல இருக்கேன்ல. இல்லனா பாட்டி என்ன வகுந்துடுவாங்க” என கண்ணில் வசுந்தராதேவியை கொண்டுவந்தவள்  மேனி நடுங்க உடம்பை உதறி  வசுந்தராதேவின் மீது அவள் கொண்ட பயத்தை கண்டு ஷரப்புக்கு சிரிப்புவர அவளின் அங்க அசைவை வைத்து அவள் என்ன சொல்லி இருப்பாள் என பின்னாடி இருந்து பார்த்துக் கொண்டிருந்த வ்ருஷாத்.

 

“பயப்படுறவ செய்ற வேலையா இவ செய்றது எல்லாமே நடிப்பு” வ்ருஷாத் முகத்தை திருப்பினான். ஹரிலாலோ “அதான் உன்ன அடையாளம் தெரியலையா என யோசிக்க”

 

” எங்க விட்டேன்… ஆ… வந்து ப்ரொபோஸ் பன்னானா அது ஒரு செம கூத்து. லவ் சொன்னாலும் சொன்னான் ரொம்ப கண்ணியமா நடத்துகிறான். எனக்கொரு டவுட்டு இவன் நிஜமா உனக்கு பிறந்தானா இல்ல உன் பொண்ஜாதி வேற யார் கூடையோ… என அசிங்கமாக பேசியவள்,

 

“நானே தயாரிச்ச ஜிவ்வுனு போத ஏற்கக்கூடிய பானத்த டெய்லி குடிக்க வச்சி என் அடிமையா என் பின்னாடியே சுத்த வச்சிக்கிட்டு இருந்தேன். “நேத்து நைட் தான் ஷரப் போன் பண்ணி விசயத்த சொன்னான்” மீண்டும் கமெராவை திருப்பி யாதவ்வை காட்டியவள் நேத்து கொஞ்சம் ஓவரா கலந்து கொடுத்துட்டேன் பய புள்ள பொசுக்குன்னு விழுந்துட்டான். பக்கத்துல தூங்குறாளே அவ ஒரு ஐட்டம் இப்போ என்ன பண்ண போறேனா முதல்ல ட்ரெஸ்ஸ மாத்திட்டு கண்ணுல தண்ணிய வர வச்சிக்கிட்டு அழுது கிட்டே “என்ன ஏமாத்திட்ட” னு ஓவரா ரியாக்சன்  பண்ணா பய புள்ள சூசைட் பண்ணிக்குவான். பண்ணலைனா வீடியோ எடுத்து வச்சிருக்கேன் அத நெட்டுல போட்டு சூசைட் பண்ண வச்சிடுவேன். என மிரட்ட ஆடித்தான் போனார் ஹரிலால்.

 

“நீயெல்லாம் பொண்ணே இல்லடி  விஷமுள்ள அழகான பாம்பு பாம்பு” என கத்த

 

“அமைதி அமைதி ஹரிலால் இப்படி டென்ஷனாக கூடாது நெஞ்சடைச்சி ஒரேயடியா மேல போய்டுவ” என ஷரப் புன்னகைக்க அவனை முறைத்து விட்டு திரையில் கவனம் செலுத்தியவர்.

 

மேடையில் என்ன நடக்குதுன்னு கீழே உள்ள மக்களுக்கு புரியாமல் குசு குசுவென பேசிக்கொண்டிருந்தவர்கள் ஹரிலாலின் கத்தலில் என்ன ஏதோவென பார்க்க ஹரிலாலின் தொண்டர்களும் ஷரப்பை ஒன்னும் செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டிருக்க

 

“மக்களே!   ரோடு போடுற விஷயமா தான் ஷரப் சார் மினிஸ்டரோடு சேர்ந்து டில்லிக்கு போன் போட்டு பேசி கொண்டு இருக்கிறார்கள். இப்போதைக்கு  ரோடு வாரதுல சிக்கல் போல அதான் மினிஸ்டர் சார் கோவப படுகிறார்” என வ்ருஷாத் மைக்கின் முன் வந்து பேச மீண்டும் கூட்டத்தில் சத்தம் ஆரம்பமானது.

 

“திரையில் மீண்டும் வந்த வைஷ்ணவி என் வருங்கால மாமானாரே வாழ சுருட்டிட்டு இருக்கானு என்ன புரிஞ்சுதா? என காலை கேட் செய்தாள்.

 

” இதெல்லாம் சும்மா ட்ரைலர் தான் ஓவரா ஆடினா அடுத்து பெங்களூர்ல கல்யாணம் பண்ணி கொடுத்தியே உன் பொண்ணு அவ வீடியோ  வெளிய வந்துடும் யார் கூடனு நீ ஒன்னும் டென்ஷன் ஆகாத ஹரிலால் எல்லாம் உன் மருமகன் கூட எடுத்த வீடியோ தான் சும்மா சொல்லக் கூடாது செமயா இருக்கா” என ஷரப் கண்ணடிக்க உண்மையிலேயே நெஞ்சு வழி வரும் போல இருந்தது ஹரிலாலுக்கு.

 

” நீ இப்போ என்ன பண்ணுற ரெண்டு நாள் கழிச்சு ரோடு வராதுன்னு சொல்லுற சரியா ஆறுமாசம் கழிச்சு ரோடு போடுற அதுவும்  நா சொல்லி போடுறதா இருக்கணும்” என்ற வாறே எழுந்த ஷரப் கையை குலுக்கி விட்டு அகன்றான்.

 

சமஸ்தானத்தை சுற்றி மக்கள் குலங்களாக பிரிந்து ஒவ்வொரு இடத்தில் குழுக்களாக வாழ்ந்த போதிலும் பள்ளியென்று அனைவரும் செல்வது ஒரே இடத்துக்குத்தான். பாடசாலையோ! மருத்துவமனையோ!  போதியவசதியோடு இருப்பதாலும் வேலையென்று சமஸ்தானத்தில், ஆடுமேய்ப்பதும், தொழிற்சாலைகளிலும் வேலைக்கேற்ற சம்பளம் இருக்க மக்கள் அதிகம் கேள்வி கேக்க வில்லை.

மக்களை தூண்டி அதில் ஹரிலால் குளிர்காய நினைக்க இப்  யு ஆர் பேட் ஐம் யுவர் டேட் என சொல்லாமல் செய்து காட்டினான் ஷரப்.

 

“ஆன்ஷி  எங்கம்மா போயிட்ட, ஏய் இரு இப்படியேவா வெளிய போயிட்ட” ஆன்ஷியின் தாய் மீனாட்சி கத்த கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து அதிர்ந்தாள் ஆன்ஷி இடது கன்னத்தில் நெருப்பால் சுட்டது போல் இருக்க பூசும் களிம்பை பூசாமல் சென்றிருந்தாள். ஷரப்பின் பார்வை வேறு இம்சிக்க தலையில் குட்டிக் கொண்டவள் நெருப்புக் காயம் போல் உள்ள களிம்பை முகத்தில் பூசலானாள்.

 

ஆன்ஷியின் தாயார் கோயம்புத்தூரை சேர்ந்தவர் பதின் வயதில் வீட்டுக்கு டிரைவராக வேலையில் சேர்ந்த மனீஷை காதலித்து வீட்டை விட்டு அவனின் சொந்த ஊருக்கு ஓடிவந்தார். மனிஷின் அழகு அவரை மயக்க மனிஷும் மீனாட்சியின் அழகில் மயங்கி   இருந்தானோ? குணத்தில் மயங்கி இருந்தானோ? அவனுக்கே வெளிச்சம்.

எல்லாம் ஆன்ஷி பிறக்கும் வரை தான். உண்மையில் மனீஷ் பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி மும்பை, கொல்கத்தா என்று விற்று விடுபவன். ஏனோ அவனுக்கும் மீனாட்சியின் மேல் காதல் தோன்ற அவரை மணந்தவன் பழைய தொழிலை செய்து கொண்டு தான் இருந்தான்.

ஆன்ஷி பிறக்கவும் அழகான குழந்தை அவன் கண்ணுக்கு பணமாகத்தான் தெரிந்தது. வந்த புதிதில் பாஷை தெரியாமல் அல்லாட அவ்வூர் மக்கள் அவர்களை ஒதுக்கவே இனம், ஜாதிக்காக  ஒதுக்குகிறார்கள் என எண்ணியவர், ஆன்ஷி பாடசாலை போகும் போது அவளின் மூலம் தான் பாஷை கற்றுக் கொண்டதே!  பாஷையை பேச கற்றுக்கொண்ட பின் கணவனின் சுயரூபம் தெரிந்து அதிர்ச்சியடைந்தார். சொந்த ஊருக்கு போக முடியாது போனால் பெற்றவர்களும் அண்ணனும் ஏற்றுக்கொள்வார்களோ என்று தெரியாது.  அவனை திருத்த அவனிடம் பேச முயற்சி செய்ய அவனின்  கோரமுகம் கண்டு அதிர்ச்சியடைந்தவர் வீட்டை விட்டு குழந்தையுடன் வெளியேற அவரின் காலை உடைத்து வீட்டில் முடக்கினான். அத்துடன் ஆன்ஷியின் பள்ளிப்படிப்பும் முற்றுப்பெற்றது.

 

அவர்களின் வீடு கொஞ்சம் வசதியான வீடு தான் தனி வீடாக இருந்தாலும் உயரமான மதில்  சுவர் எழுப்பப் பட்டு ஊர் எல்லையில் அமைந்திருக்க யாரும் வரமாட்டார்கள். அவள் வளர வளர பக்குவப்பட்டார் மீனாட்சி. ஆன்ஷியிடம் மனீஷ் அன்பாக பேசியதே இல்லை அவள் பதிமூன்று வயதிககியும் வயதுக்கு வராததால் மீனாட்சியிடம் கேள்வி எழுப்ப கணவனின் மேல் சந்தேகம் கொண்டாள். ஒருநாள் வெளியூர் சென்று வந்தவன் கண்டது தீக்காயமுற்று இருந்த ஆன்ஷியை தான். தனது பணக்கோட்டை சரிந்து விழவே அவளை அடி பின்னி விட்டான்.

உண்மையில் தீக்காயம் அதிகமில்லை அடுப்பில் கவனமில்லாமல் வேலை செய்யப் போய் விரலைத்தான் சுட்டுக்கொண்டாள். அக்கணம் தான் மீனாட்சிக்கு தோன்றியது, கணவனின் அழகை கொண்டு பிறந்திருந்த மகளின் அழகு அவளுக்கு ஆபத்தென்று. ஒரு தாயாய் சேயை காக்க தீக்காயம் போல் தெரியும் களிம்பை பூசிவிட்டார். அதுவே தொடர்கதையானது.

 

அன்று வீடு வந்த தந்தை அடித்ததும் பேசியதும் பதின்மூன்றே வயதான சிறுமிக்கு புரியாவிடினும் வளர வளர புரிந்துக் கொண்டவள் கண்ணீரில் கரையும் மெழுகு பொம்மையானாள்.

 

Advertisement