Advertisement

அத்தியாயம் – 1

 

காலை பரபரப்புடன் சூரியன் செங்கதிரோன் தன் சோம்பலை முறித்து, பறவைகளின் ரீங்காரத்திலும்,  தூவானத்தில் நனைந்த இலைகளும், எட்டிப்பார்க்க வா வேண்டாமா என்ற பட்டிமன்றத்தில் இருந்த குட்டி குட்டி முயல்களும் அந்த பரந்து விரிந்த பங்களாவின் Gardening areaவில் விளையாடிக் கொண்டு இருந்தன. இவைகளின் தூங்கிய இரவுடன்  சில நாளே தூங்கும் சந்திரனை போல தூங்கா இரவுடன் எழுந்தாள் ‘Margaret Sevvanthi ‘.

 

தன் சோம்பலை முறித்துக் கொண்டு படுக்கையிலே இருந்து எழுந்து படுக்கையறைக்கு வெளியே இருந்த பால்கனிக்குச் சென்று,  தனக்குப் பிடித்த ஊஞ்சலில் சென்று அமர்ந்து தன் Garden areaவை ரசிக்க ஆரம்பித்தாள். அவள் மனதினுள் “Sitting on swing reminds me that ‘Push and Pull ‘ are the fuel of my life” என்று அடிக்கடி சொல்லிக் கொள்வாள்,  மனதினுள் சந்தோஷமோ, துக்கமோ, கவலையோ யார் அறியுமுன் முதலில் அறிவது இந்த ஊஞ்சல் தான். சிறிது நேரம் கண்களை மூடி அந்த ஏகாந்த சூற்றுபுறத்தை அனுபவித்தாள்.

 

       ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு உள்ளே சென்று தன் Kettleஐ ஆன் செய்து Green teaஐ தயாரித்து Balconyயில் நின்று கடவுள் படைத்த இயற்கையை ரசித்தால். அந்த இளஞ்சிவப்பு வானத்தை காண்கையில் தன் மனதின் இரணத்தை வெளிப்பாடாகத் தான் தோன்றியது, நினைவுகள் செல்லும் திசையை முயன்று மாற்றி தன் Gym  Room உள்ளே சென்றால்

 

காலை 5.30 மணி இருக்கும் தன்னுடைய 3/4th T-shirt அணிந்துக் கொண்டு Tred millல் அரை மணி நேரம் 7.00 Speedல் செய்தபின்,  Dumbbells 3,5,10 கிலோ எடையுடையதை அசாதாரணமாக தூக்கி முடித்த பின் Cycling பதினைந்து நிமிடம். இப்படியாக எல்லாம் முடித்தபின் Yoga Mat இல் பத்து  நமிடம் இலைப்பரினாள். மனதினள்ளே ‘Thank you Ani mam’ என்று சொல்லிக் கொண்டே தன் அறையினுள் வந்து குளிக்க தேவையான ஆடைகளை எடுத்துக் கொண்டு Cupboard கதவை சாற்றினாள்.  கதவிலே பதிக்கப் பட்டிருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டே சுவற்றில் தன் 95+ கிலோவில் உள்ள தன் புகைபடத்தை பார்த்து சிரித்துக் கெண்டே நகைச்சுவை நடிகர் விவேக்கின் வசனமாண ‘எப்புடி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’ சிரித்துக் கொண்டே சொல்லி குளியலறைக்கச் சென்றாள்

 

குளிக்க அவள் பயன்படுத்துவது பயத்த மாவு, கடலை மாவு, கஸ்தூரி  மஞ்சள் கலந்த கலவையே , எப்பவும் அந்த குளியறை அலமாரி இல் அக்கலவை ஒரு பெரிய டப்பாவில் வைத்துக்கொண்டு தேவைக்கேற்ப கிண்ணியில் எடுத்து உபயோகித்துக் கொள்வாள். குளித்து முடித்து வெளியே உள்பாவாடையம் Shirtஉம் அணிந்து வந்தாள். இன்று என்ன அணிவது என்று அலமாரியை துலாவி கொண்டு இருந்தாள் . அவள் கண்ணில் பட்டது ஆந்திராவில் பிரசித்தி பெற்ற Pattachitra saree  , ஆகாயம் வண்ண நிறத்தில் ஆங்காங்கே சிறு சிறு வெள்ளை பூக்கள் கொண்ட sareeyum , வெள்ளை நிற ப்ளௌஸ் மற்றும் அதற்கு தகுந்தார்போல் வெள்ளை நிறத்தில் நீல கற்கள் பதித்த காதோடு ஒட்டினார் போல் இருந்த தோடையும் தேர்ந்து எடுத்து அணிந்து கொண்டாள்.

 

கடவுள் அவளுக்கு கொடுத்த வரம் என்று அவள் நினைப்பது அவளின் தலை முடியை தான், இரு கைகளாலும் பிடிக்க முடியாத அளவிற்கு அடர்த்தியாக இருக்கும், இடுப்புக்கு கொஞ்சம் கீழே இருக்கும்.  Long layer cut செய்திருப்பாள் , அலை அலையாய் இருப்பது போன்று இருக்கும். தன்னுடைய அகன்ற நெற்றியை மறைப்பதற்காக ‘Fringes’ செய்திருப்பாள் . அவள் எப்போதும் சொல்வது தான் ‘ I wish to be modern in my thoughts rather in my looks ‘ .. நடிகர் கமலின் style la சொல்லனும்னா ‘ Modern கொஞ்சம் Traditional கொஞ்சம் கலந்து செய்த கலவை அவள் ‘.

 

மேசை மீது அன்றைய தின செய்தி  தாள்கள் வரிசையாக இருந்தது , ஆங்கில ‘The Hindu ‘   தாளை பின் பக்கமிருந்து புரட்டி ‘ Sports Corner’s ‘    பார்த்த உடனே எங்க நம்ம ஆளு ஃபோட்டோ காணோம் என்று புலம்பி கொண்டே தேடி கொண்டிருந்தாள். எல்லோரும் செய்தி தாளை முன்னாள் இருந்து படிப்பார்கள் ஆனால் Maggie (Margaret)  sports page முடித்து விட்டு தான் மற்ற செய்திகளை பாற்பள் . விளையாட்டு மீது ஆர்வமா என்று கேட்டால் தெரியவில்லை , ஆனால் அவளின் ஹீரோ ‘MSD’ அதாங்க மகேந்திர சிங் தோனி மீது ஆர்வம் இல்லை இல்லை வெறி என்றே சொல்லலாம். 9ஆம் வகுப்பில் இருந்து தோன்றிய Crush ,    தோழிகளிடம் ‘ He is MSD and am also MSD (Margaret Sevvanthi Daniel ) என்றே சொல்லி பெருமை பட்டுக் கொள்வாள்.

 

Daniel( Danny) அவளுடைய தந்தையின் பெயர். நான்கு வீடு வாடகையில் வரும் பணத்தை வைத்து மாதாந்திர செலவை பார்த்துக் கொள்வார். மேலும் ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வைத்துள்ளார். Legal advisor ஆக வும் இருக்கிறார். அவள் அப்பா என்று அழைபதயை யே விரும்புவார். இன்னும் சில பக்கங்களை புரட்டிக் கொண்டு தன் காஃபி யையும் குடித்து முடித்து வெளியே செல்ல எத்தனித்த நேரம் கடிகாரத்தை பார்தாள் மணி 7 ஆக 5 விநாடிகள் தான் இருந்தது. மனதினுள்ளே சிரித்துக் கொண்டு கவுண்ட் டவுன் ஸ்டார்ட் செய்தாள். 5 , 4, 3,2,1

 

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்

தந்தை அன்பின் முன்னே

தாலாட்டு பாடும் தாயின் அன்பும்

தந்தை அன்பின் பின்னே

 

தகப்பனின் கண்ணீரை கண்டோர் இல்லை

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா

மண்ணில் வந்த நான் உன் நகலல்லவா

காயங்கள் கண்ட பின்பே உன்னை கண்டேன்

 

என்ற பாடல் வரியின் ஒலியலுப்பி (ringtone) அடித்தது , திரையில் ‘ அப்பா’ என்று மின்னிக் கொண்டிருந்தது. அதை எடுத்து அப்பா என்று அழைக்கும் முன்பே  ‘ செல்லோ’ என்று எதிர் முனையில் இருந்து அவளுடைய அப்பா கொஞ்சினார்.

 

Maggie : ‘  என்னப் பண்றீங்க அப்பா ‘ ,

Danny : ‘ இப்போ தாண்ட ஆ ஜாகிங் போய்ட்டு வந்தேன்

 

Maggie : நிஜமாவா அப்பா

 

Danny :    4 round அடிச்சுட்டு வந்தேன்

 

Maggie :  ஏது நேத்து சரக்கு அடிச்சத சொல்றீங்களா

 

Danny : No no no darling  ‘ Danny your daddy never tell lies ‘ தெரியாதா

 

Maggie :  தெரிஞ்சது நால தா நானும் கேட்கிறேன் என் அன்பு daddyyyy. வர்றப்போ தொப்பை கம்மி ஆகிருக்கணும் இல்லனா கும்மிருவே கும்மி

 

Danny : கம்மி , கும்மி செம rhyming da , இது எதுகையா மோனைய

 

Maggie : விலக்கண்ணை …

 

Danny :   அப்படி ஒன்று நான் இலக்கணத்தில் பயன்றது இல்லயே மகளே

 

Maggie : அப்பா….. உங்க நல்லதுக்கு தான சொல்றே புரிஞ்சுக்க try பண்ணுங்க please daddy

(Emotional ஆகும் போதும் மட்டும் daddy என்று அழைப்பது அவள் வழக்கம் )

 

Danny : cool dear .  இந்த தடவை வீட்டுக்கு வரபோ நீ ஆடி போயிருவ ஆடி

 

Maggie : எனக்கு ஆடி காரும் வேண்டாம் ambassador காரும் வேண்டாம் எங்க daddy tha வேண்டும்.

 

Danny :  will see you soon my baby . God bless . Love you . Get ready

 

Maggie : Bye daddy .

 

இதற்கு முன்னிருந்த மன நிலை முற்றிலும் மாறி விட்டது அவளுக்கு . இது தான் Danny அவள் குரலை வைத்தே கண்டுக் கொள்வர். Hey Danny என்று அவள் அழைத்தாள் குஷி ஆக இருக்கிறாள் என்றும் , அப்பா என்று அழைத்தாள் அவரை மிகவும் தேடுகிறாள் என்று அவர் அறிவார் . அதற்காக தான் இப்படி அவளை பேசி மாற்றினார். Danny   வீட்டில் உக்கார்ந்து மகளின் நலனை வேண்டி கடவுளிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். ‘ எனக்கு இருப்பது ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு , அவ மணசரிஞ்ச மகனா எனக்கு குடுங்க கடவுளே. பழையது நெனைச்சு அவ மனச கொலப்பிக் கொண்டு இருக்கிறதை மறந்து நல்லா வாழற தை பார்க்க எனக்கு ஆயுசுக் குடு ‘ .

 

Maggie kitchen சென்று தனக்குப் பிடித்த பழைய கஞ்சியும் மாங்காய் ஊறுகாயும் எடுத்து வந்தாள். அவளுக்கு ஊறுகாய் தனி கிண்ணத்தில் வைத்து கஞ்சி ஒரு வாய் வைத்து சிறிது நேரம் கழித்து ஊறுகாயை விரலால் எடுத்து நாவில் நக்கி சாப்பிடுவது என்றால் அவ்வளவு இஷ்டம். என்றைக்காவது தோன்றினால் இரவே பழைய சாதத்தில் தண்ணியை ஊற்றி வைத்து காலையில் தரையில் சம்மணம் கால் இட்டு சாப்பிடுவது ஆவள் வழக்கம். ஆனால் என்ன செய்வது அவளுக்கு வாரத்தில் Sunday தவிர மற்ற எல்லா நாட்களிலும் தோன்றி விடும் , மாங்காய் ஊருகைகாகவா அல்லது பழங்கச்சி காகவா என்றால் அவளுக்கே தெரியாது அவள் தந்தையின் பழக்க வழக்கங்களில் இதுவும் ஒன்று.

 

மணி 7.45 ஆக அவசரமாக எல்லாம் கிச்சனில் போட்டுவிட்டு காத்தமுத்தண்ணா என்று அழைத்துக் கொண்டே வெளியே விரைந்தாள். அவள் இருமுறை காத்தமுத்தண்ணா என்று உரக்க அழைத்தும் அவர் திரும்பாமல்  முதகை காட்டி கார் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார் . Maggie நமட்டு ச் சிரிப்புடன் ‘ முத்தண்ணா ‘ என்று அழைத்தாள் அப்பொழுது தான் அவர் சிறு பொய்க் கோபத்தோடு முகத்தை வைத்துக்கொண்டு திரும்பினார். அவரைக் கண்டு சிரித்தவாறே ” Sorry அண்ணா எல்லாம் இந்த காக்க காக்க சூர்யா எஃபெக்ட் . உங்க பெயரை கேட்ட வுடனே முத்துக்கு பதிலா காத்தமுத்தண்ணா தா சொல்ல தோணுது நா என்ன பண்றது ” என்று நவரசங்களையும் கலந்ததிடுது சொல்லி காருக்கு அருகே வந்தாள்.  இது இவர்கள் கடந்த மூன்று வருடமாக நடத்தும் கூத்து தான் .

 

      காத்தமுத்தண்ணா என்று சொல்லி அவரை வெறுப்பு ஏத்தாமல் அவளால் இருக்க முடியாது. முத்து சாமி என்பது தான் அவரின் பெயர் . அவர்களின் பெற்றோருக்கு 10 வருடங்கள் கழித்து பிறந்ததால் அவருக்கு அப்பெயரை அவர்களின் முத்துகருப்பண்ண சாமியின் ஞாபகமாக வைத்த  பெயர் . அவர்காரின் கதவை திறக்க முயற்சிக்க எப்போவும் போல சிறு தலை அசைப்புடன் வேண்டாம் என்று சொல்லி அவளே திறந்து ஏறிச் சரியாக அமர்ந்தோமா saree முந்தானையை கரக்ட்டா உள்ள எடுத்து போட்டமா என்று பார்த்து கதவை சாற்றிக் கொண்டாள். Maggieகு saree கட்டப்புடிக்கும் ஆனால் அதை கட்டிக்கொண்டு இயல்பாக இருக்க கொஞ்சம் பதட்டம் . இவள் செய்கையை பார்த்து புன்முறவலோடு காத்தமுத்தண்ணா காரினை இயக்கினார்.

 

 காத்தமுத்தண்ண ‘ நீங்க குபுட்ரப்போ எங்க ஆத்த குபுடிர மத்ரியே இருக்கும் தாயி அதே அபுடி குபுடச் சொன்னே  ‘ .. Maggie , ‘ அதுக்குதான் நா அப்புடி குப்புடிரதில்ல , அம்மா வோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அதுவும் இல்லாம உங்களை அடிக்கடி சோக ? வயலின் வாசிக்கிற மாத்ரி பார்க்க முடியல அண்ணா அதா ‘ என்று சொல்லி அவளும் சிரித்து அவரையும் சிரிக்க வைத்தாள். காத்தமுத்தண்ணா கண்கலங்கி  ‘ நீ நல்லா இருக்குன்னு தாயி ‘ என்று சொல்ல Maggie உடனே ‘ ஹக்குன்னா மட்டாட்டா (hakkuna matata )’ என்று எப்போவும் போல சொல்லி சிரித்தாள். காத்தமுத்தண்ணா சிறு கடுப்புடன் ‘ என்ன மா எப்போ பாரு இதே சொல்றீங்க , கேட்டா கூகிள் ஆண்டவர் கிட்ட கேலுங்கனு சொல்றீங்க . நானும் எல்லா கடவுளையும் கும்பிற்றுக்கே இந்த் கடவுளா நா பாத்ததே இல்ல தாயி ‘ என்று குமறினார். Maggie சிரித்து கொண்டே ‘ சீக்கிரம் கண்டுபிடிச்சு எங்கிட்ட சொல்றீங்க அதுதா உங்க Task ‘. காத்தமுத்தண்ணா உடனே ‘ இந்த Big boss la வருமே அந்த டாஸ்க சொல்றீங்களா?’ என்று கேட்டு மேலும் அவளை கண்ணீர் வர வரை சிரிக்க வைத்தார். தன் மொபைல் திரையில் தெரிந்த நேரத்தை பார்த்தாள் மணி 8.30 என்று காட்டியது .உடனே ‘ அண்ணா சீக்கிரம் போங்க லேட் ஆகிடும். காத்தமுத்தண்ணா ‘  இவளோ பெரிய உயர் பதவில இருக்கற நீங்க என் மா வாட்ச் கட்டுறதில்ல ? ‘ . Maggie வெறுமையாய் இருந்த கரத்தை தடவி கொண்டே ‘ விலைமதிப்பற்ற வாட்ச் ஒரு தடவை தொலச்சிட்டே அதா அதற்கு அப்ரம் வாட்ச் கட்டுறதில்ல ‘ என்று வெளியே வாய் சொன்னாலும் மனதில் என் மனசையும் சேர்த்தே தோலச்சிட்ன் என்று சொல்லி சன்னல் பக்கம் திரும்பி வெளியே பார்த்து தன் நினைவுகளை அதில் தொலைக்க ஆரம்பித்தாள்.

 

Advertisement