அடுத்த நாள் காலையில் ஜெனிஷா ஆஷாவிற்காக ஒரு மரத்தடியில் காத்துக் கொண்டிருந்தாள்.
[என்னடா ஜெனிஷவை ஆளே காணும் என்று நினைத்தீர்களா!!! இதோ வந்துவிட்டாள்.கிருஷ்ணமூர்த்தியை ஆவலுடன் எதிர் பார்க்கிறீர்கள் என்று எனக்கும் தெரிகிறது ஆனால் என்ன பண்றது அது அவனுக்கு புரியவில்லையே! இன்றும் அவன் கல்லூரிக்கு வரவில்லை.]
அப்பொழுது ராஜசேகர் ஜெனிஷாவை கடந்து சென்றான். ஜெனிஷாவின் வெகு அருகில் சென்றும் அவன் அவளை பார்க்காமல் சென்றான். சற்று நேரம் ஜெனிஷா ராஜசேகரின் முதுகையை பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை திரும்பி பார்ப்பானோ என்ற எண்ணத்தில் பார்த்தாளோஎன்னவோ!
ஜெனிஷா மனதினுள், ‘என்ன பண்றானே புரியலை.. தினமும் வச்ச கண் எடுக்காமல் பார்ப்பான்.. சில சமயம் கிளாஸ் நடுக்கும் போது கூட பார்ப்பான் ஆனா ரெண்டு நாளா என் பக்கமே திரும்பலையே! திரும்புறது என்ன லேசா கூட பார்க்கலையே! இப்ப கூட இவளோ பக்கத்துல போறான் ஆனா…………………..’
“என்ன யோசிச்சுட்டு இருக்க நிஷா?” என்ற குரலில் சிறிது திடுக்கிட்டு திரும்பி பார்த்தாள். அவள் பின்னால் வசீகர புன்னகையுடன் ராஜசேகர் நின்றுக் கொண்டிருந்தான்.
ஜெனிஷா தன்னை சமாளித்துக் கொண்டு அவனை முறைத்தாள்.
ராஜசேகர் புன்னகையுடன், “அது எப்படி நிஷா..யாருக்கும்பயப்படாத நீ என்னை பார்த்து மட்டும் லைட்டா பயப்படுற?”
ஜெனிஷா முறைத்துக் கொண்டே, “உனக்கு நான் ஏன் பயப்படனும்?”
ராஜசேகர் புன்னகை மாறாமல் அவளை பார்த்துக் கொண்டு நின்றான்.
ஜெனிஷா, “ஆர் யூ mad?”
ராஜசேகர் புருவம் உயர்த்தி அவளை பார்க்கவும் ஜெனிஷா, “சிரிச்சுட்டே இருக்கி…….”
“நிஷா…………..”
“ஹே.. வெயிட் வெயிட்.. (இப்பொழுது தான் ஜெனிஷா அவன் தன்னை நிஷா என்று அழைப்பதை இப்பொழுது தான் கவனித்தாள்) மை நேம் இஸ் ஜெனிஷா”
“அதான் எனக்கு தெரியுமே”
“அப்பறம் ஏன் நிஷா னு கூப்பிடுற?”
“எனக்கு இப்படி தான் கூப்பிட பிடிச்சிருக்குது” என்று கூறி புன்னகைத்தான். ஜெனிஷா அவனை முறைத்தாள்.
ராஜசேகர், “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ என்ன யோசிச்சுட்டு இருந்த னு நான் சொல்லட்டுமா?”
“..”
“என்னை பற்றி தானே யோசிச்சுட்டு இருந்த?”
“எனக்கு வேற வேலையே இல்லை பாரு”
“எஸ் னு சொன்னா ஒத்துக்க மாட்ட.. சரி விடு.. நீ என்ன நினைச்சன்னு கூட சொல்வேன்.. என்னடா இப்பலாம் இவன் நம்மை பார்க்கவே மாட்டிக்கிறான் னு தானே நினைச்ச?”
ராஜசேகர் தன் மனதை கண்டுகொண்டதில் தன் மீதே ஜெனிஷாவிற்கு கோபம் வந்தது அதை ராஜசேகரிடமே காட்டினாள்.
ஜெனிஷா கோபமாக, “டோன்ட் தின்க் டூ மச்.. டோன்ட் இரிடேட் மீ…………………….”
ராஜசேகர் அதே வசீகர புன்னகையுடன் அவள் கோபத்தை ரசிக்கவும் ஜெனிஷாவின் கோபம் கூடியது,
“என்ன பெரிய மன்மதன் நினைப்பா? இடியட்.. என்ன ‘குத்து’ படம் ரெண்டு நாள் முன்னாடி பார்த்தியா! அதுல தானே சிம்பு தொடர்ந்து சைட் அடிச்சுட்டு ஒரு நாள் சைட் அடிக்கலைனதும் ஹீரோயின் அவனை லவ் பண்ண ஆரம்சிடுவா.. அம் நாட் லைக் தட்……………………..”
“தன்க் யூ நிஷா”
‘லூசா இவன்’ என்பது போல் ஜெனிஷா பார்க்கவும் ராஜசேகர் புன்னகையுடன், “என்னையே நோட் பண்றதுனால தான் சரியா இரண்டு நாள் உன்னை நான் பார்க்கலைன்னு சொன்ன! என் மனசோட வேவ் லென்த் உனக்கு புரியுது.. அதான் நான் சொல்லாமலேயே நான் உன்னை லவ்பண்றேன்னு புரிஞ்சுகிட்ட…………”
“யூ.. யூ.. ஸ்டுபிட் இடியட் நான்-சென்ஸ்.. ஐ ஹேட் யூ.. ஐ…………..”
ராஜசேகர் அதே புன்னகையுடன், “அகேன் தன்க் யூ.. தேங்க்ஸ் for யுவர் காம்ப்ளிமென்ட்ஸ்..நீ என் காதலை புரிஞ்சுகிட்டாலும் நான் இப்போ ப்ரோபோஸ் பண்ண மாட்டேன்.. நீ எப்போ உண்மையை ஒத்துக்கிறியோ அப்போ தான்…………….
என்ன! எந்த உண்மையை னு யோசிக்கிறியா!
நீ என்னை வெறுக்கலை பட் லவ் பண்ற என்ற உண்மையை….
ஓகே.. ஓகே.. நோ டென்ஷன்.. கூல்.. கூல்.. கிளாஸ்ஸில் பார்க்கலாம்.. பாய்” என்று கூறி சென்றான்.
தனியா நின்று பேசிக்கொண்டிருந்த ஜெனிஷாவை(அதாவது ராஜசேகரை திட்டிக் கொண்டிருந்த ஜெனிஷாவை) பார்த்தஆஷா,“ஏன்டி இப்படி தனியா நின்னு பேசிட்டு இருக்க?”
“தனியா நின்னு பேசுறதுக்கு நான் என்ன லூசா?”
“சரி.. சரி.. கூல்.. கூல்..”
ராஜசேகர் சொன்ன ‘கூல்..கூல்’ ஜெனிஷாவின் காதில் ஒலித்தது. ராஜசேகரை முறைப்பதாக நினைத்து ஆஷாவை முறைத்தாள். கோபமாக முறைத்த ஜெனிஷாவை பார்த்து ஒரு நொடி ஆஷா பயந்தாள்.
ஆஷா, “ஓகே.. நான் எதுவும் சொல்லலை.. இப்படி பத்ரகாளி மாதிரி பார்க்காத………… ஓகே.. கிளாஸ்க்கு வா போகலாம்”
இப்பொழுது ராஜசேகர் சொன்ன‘கிளாஸ்ஸில் பார்க்கலாம்’ என்ற வார்த்தைகள்அவள் காதில்ஒலித்தது. ஜெனிஷா கோபமாக, “யூ.. இடியட்.. ஐ ஹேட் யூ.. ஐ ஹேட் யூ” என்று கத்தினாள்.
ஆஷா, “ஜெனி..”
“…”
ஆஷா ஜெனிஷாவின் தோளை தொட்டு, “ஜெனி.. நான் என்ன பண்ணேன்?” என்று கேட்டதும் தான் ஜெனிஷா சுயஉணர்வு பெற்று திருதிருவென்று முழித்தாள்.
“உன்னை கட்டாயபடுத்தலை.. என்னை உன் பிரெண்ட்டா நினைத்தால் சொல்லு..”
ஜெனிஷா மெல்ல ராஜசேகருடன் நிகழ்த்த உரையாடலை கூறினாள்.
ஆஷா மெல்லிய குரலில், “ஜெனி.. ஐ தின்க் ஹி இஸ் ரைட்”
ஜெனிஷா கோபமாக முறைத்துவிட்டு வகுப்பறை நோக்கி சென்றாள்.
இங்கே ஜெனிஷாவும் ஆஷாவும் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் வகுப்பறையில்….
மாலினி அருகே உட்கார்ந்த பிருந்தா, “இந்த ராஜசேகருக்கு அறிவே இல்லைடி” என்று பொருமினாள்.
மாலினி, “என்ன ஆச்சு ஜில்ஸ்?”
“போயும்போய் அந்த திமிர் பிடிச்ச ஜெனிஷாவை லவ் பண்றான் போல”
மாலினி ஆச்சரியமாக, “அப்படியா! உனக்கு யார் சொன்னா?”
“நானே கேட்டேன்.. அவன் ஜெனிஷா கிட்ட உளறியதை கேட்டேன்”
“உளறலா காதல் பேச்சா?”
“ஏதோ ஒன்னு..”
“அதுல உனக்கு ஏன்டி இவளோ கடுப்பு.. நீ………..”
“லூசு.. அவன் நல்ல பய்யன்.. அதான்”
“அப்படியா!!!!!!!!!!”
“மாலினி.. சீரியஸ்ஸா சொல்றேன்.. ஐஹவ்நோ இன்டிரெஸ்ட் டுவர்ட்ஸ் ஹிம்.. வீடு ஒரே தெரு.. நல்ல பையன்.. அந்த திமிர் பிடிச்சவ கிட்ட மாட்டணுமா என்ற எண்ணம் மட்டும் தான்”
“ஹ்ம்ம்.. ஓகே..ஆனால்.. நேத்து நீ பண்ண வேலைக்கு பசங்க இன்நேரம் உன்னையும் அவனையும் தான் ஓட்டிட்டு இருப்பாங்க”
பிருந்தா அதிர்ச்சியுடன், “என்ன சொல்ற மாலு?”
“பின்ன.. அத்தனை பேர் முன்னாடி ‘சேகர் உன் கூட தனியா பேசணும்’ னு சொன்னா! அப்பவே வினோத் என்ன சொன்னான்?”
“என்ன சொன்னான்?”
“ஹ்ம்ம்.. சுரைக்காய்க்கு உப்பு இல்லை னு சொன்னான்”
“ப்ளீஸ் மாலு………”
“நேத்து நீ தானே சொன்ன!!!”
“அது மைண்டில் ஏறலை.. இங்கே நடந்ததை அப்படியே சொன்னேன்.. இப்போ ஞாபகம் இல்லை”
ராஜசேகர் விரிந்த புன்னகையுடன், “தன்க் யூ சிஸ்டர்.. எங்க என்னை பிரதர் னு ஏதுக்க மாட்டீங்களோனு………….”
மாலினி, “ரொம்ப ரொம்ப சந்தோசமாஏத்துக்கிறேன்.. வழிறபசங்களையே பார்த்துட்டு வர என்னிடம் முதல் முதலா சிஸ்டர் னு கூப்பிட்டது நீ தான்.. தன்க் யூ வெரி மச்.. பட் எனக்கு ஒரு டவுட்”
“என்ன சிஸ்டர்?”
“சிஸ்டரோட பிரெண்ட்ஸ் எல்லோரும் சிஸ்டரா?”
இப்பொழுது ராஜசேகர் புருவம் உயர்த்தி பார்க்க மாலினி மர்ம சிரிப்புடன், “ஜெனிஷாவும் எங்க பிரெண்ட்னா!!!”
இந்த நேரத்தில் வகுப்பறையினுள்ளே வந்த ஜெனிஷவிற்கு பெரும் கோபம் வந்தது. மாலினியை முறைத்துக் கொண்டே தன் இடத்தில் அமர்ந்தாள்.
மாலினி, “ப்ரோ.. நாம கிளாஸ்க்கு வெளியே மட்டும் பேசிக்கலாமே”
“ஏன் சிஸ்டர்?”
“ஜெனிஷாவுக்கு என்னை பிடிக்காது”
ராஜசேகர் புன்னைகையுடன், “என்னை பிடித்தால் என் சிஸ்டரையும் பிடிச்சே ஆகணும்..”
மாலினி, “நான்………”
ராஜசேகர், “நீங்க ஏன் கவலை படுறீங்க சிஸ்டர்? நான் பார்த்துக்கிறேன்”
மாலினி அரை மனதுடன், “ஓகே” என்றாள்.
ராஜசேகர் புன்னகையுடன் மாலினியிடம் விடைபெற்று திரும்பிய போது ஜெனிஷா ஸ்ரீராமனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
பொதுவாக ஜெனிஷா தன்னிடம் வழிபவர்களை தூர நிறுத்தாவிடிலும் அவர்களுடன் ஆர்வமாக பேசமாட்டாள். அதுவும் ஸ்ரீராமனை எல்லையுடனே பழக விட்டாள் ஆனால் இன்று வகுப்பறையினுள்ளே வரும் பொழுது ராஜசேகர் மேல் கோபத்துடன் வந்தவள் அவன்தனுக்கு பிடிக்காதமாலினியிடம் சிரித்து பேசுவதை பார்த்ததும் அவனை வெறுப்பேத்துவதற்காகவே ஸ்ரீராமன் வழிந்த போது பதில் பேசினாள்.
ராஜசேகரும் மாலினியும் சிரித்து பேசிக் கொண்டிருந்த போது வகுப்பறையினுள்ளே நுழைந்த ஸ்ரீராமனின் உள்ளம் பொறாமையில் புகைந்தது, காது வழியாக புகை வெளியேறுமளவிற்கு உள்ளம் புகைந்தது. மன கொதிப்புடன் தன் இடத்திற்கு சென்று பையை வைத்துவிட்டு வெளியேற நினைத்தவனின் கண்களில் தனியாக அமர்ந்திருந்த ஜெனிஷா தென்பட்டாள், அவ்வளவு தான் உடனே அவன் முகத்தில் பனிக்கட்டி உருகி ஓடியது.
ஜெனிஷா அருகே சென்று, “ஹாய் ஜெனி.. குட் மார்னிங்!”
முதலில் ஸ்ரீராமனை புறகணிக்க நினைத்த ஜெனிஷா ‘இவனுக்கும் அவனுக்கும்ஆகாதுல’ என்று மனதினுள் கூறிக் கொண்டு புன்னகையின்றி இயல்பான முகதோற்றத்துடன், “குட் மார்னிங்” என்றாள்.
ஜெனிஷா உடனே பதில் கூறியதும் ஸ்ரீராமனுக்கு வகுப்பறையை புகைமண்டலமாக்கும் ஆசை வந்தது (அதாங்க கடலை வறுத்து புகை உண்டாக்குவது), ராஜசேகர் முன்னிலையில் சீன் போடுற குதூகலமும் கூடியது. முகமெல்லாம் பல்லாக(அவ்வளவு சிரிப்பு அவனுக்கு),“டுடே யூ லுக் பியூட்டிபுல்”
“மத்த நாள்லாம் பியூட்டிபுல் இல்லையா?”
ஸ்ரீராமன் அசடு வழிந்தபடியே, “நோ.. நோ.. டுடே யூ ஆர் வெரி பியூட்டிபுல்”
ஸ்ரீராமனின் வழியலை பொறுக்க முடியாமல் ஏதோ சொல்லவந்தவள் ராஜசேகர் வருவதை பார்த்ததும் சிறு புன்னகையுடன் ஸ்ரீராமனிடம், “இஸ் இட்?” என்றாள்.
ஆனால் ராஜசேகரோ இவளை கண்டுகொள்ளாமல் தன் இடத்தில் அமர்ந்தான். “யா.. யூ ஆர் தி மோஸ்ட் பியூட்டிபுல் பெர்சன் இன் அவர் காலேஜ்”
ராஜசேகர் மேல் எழுந்த கோபம் ஸ்ரீராமன்னை தாக்கியது. ஜெனிஷா, “ஹொவ் மெனி girls யூ ஹவ் செட் திஸ் சேம் டையலாக்?” “அஹ.. வாட்?”
“ஹ்ம்ம்.. எத்தனை பேர் கிட்ட இதே வசனத்தை சொல்லிருக்க?” என்று பல்லை கடித்துக் கொண்டு நிதானமாக கேட்டாள்.
“ஹே.. நோ…. ஐ…. யூ மிஸ்…………..”
“இங்கிலீஷை கொலை பண்ணாம உன் இடத்துக்கு போறியா” என்று எரிச்சலை மறைக்காமல் கூறியவள், “ஒழுங்கா பீட்டர் கூட விட தெரியலை இதுல கடலைபோட வந்துட்டான்” என்று சத்தமாக முணுமுணுத்தாள்.