நந்தினி பிருந்தாவிடம், “இரு உன்னை அப்பறம் கவனிக்குறேன்” என்று கூறிவிட்டு, மாலினியிடம்,“நான் போனதும் என்னை கட்டி பிடிச்சுக்கிட்டு அழுதா.. நான்.. ‘அழ கூடாது.. மாலு உன் நல்லதுக்காக தானே சொல்வா‘ னு சொன்னதும் அழுகையின் நடுவே கொஞ்சம் கோபமா, ‘ஹ்ம்ம்.. எல்லாம் அந்த ஆர்லி லூசு னால தான்.. அவளை திட்டிட்டேன் தெரியுமா.. எனக்கு அந்த ஆர்லியை பார்க்கவே பிடிக்கலை.. அவளிடமே சொல்லிட்டேன்.. இனி என் கூட பேசாத னு.. மாலு என் கூட பேசுவா தானே!‘ னு கேட்டா..
நான்.. ‘கண்டிப்பா பேசுவா.. ஆனா நீ அவ சொன்னபடி நடக்கணும்‘ னு சொன்னதும்,
அவ ‘ஹ்ம்ம்.. நான் அவ சொன்னபடியே நடக்குறேன்.. அவளை என் கூட பேச சொல்றியா?’ னு பாவம் போல கேட்டாடி”
“ஹ்ம்ம்.. நீ என்ன சொன்ன?”
“அவ கண்டிப்பா பேசுவா.. நீ முதல அழுறதை நிறுத்து.. நீ அழ கூடாது னு மாலு சொன்னாளா இல்லையா? னு சொன்ன அடுத்த செகண்ட், ‘ஆமா ல‘ னு சொல்லி உடனே அழுகையை நிறுத்தி, கண்ணை துடைச்சுட்டு, ‘ஹ்ம்ம்.. நான் அழலை.. ஆர்லி கூட பேசவும் மாட்டேன்.. இனி மாலு என் கூட பேசுவா தானே! ஹ்ம்ம்.. பேசுவா.. கண்டிப்பா பேசுவா.. இரு நானே போய் கேட்குறேன்‘ னு கிளம்பிட்டா”
மாலினி சிறு புன்னகையுடன், “அப்பறம்?”
“அவளை கஷ்டப்பட்டு சமாளிச்சுட்டு இருக்கும் போது ஷங்கர் வந்துட்டான்.. அவனை பார்த்ததும் மேடம் புன்னகை தேசமா மாறிட்டாங்க..” என்று புன்னகையுடன் நந்தினி கூறினாள்.
பிருந்தா ஆர்வமாக, “ஹ்ம்ம்.. அப்பறம்! முக்கியமான இடத்துல இப்படி எண்டு கார்டு போடுறியே! என்ன நடந்துது சொல்லு”
நந்தினி அவளை முறைக்கவும், அவள்,‘இப்போ உன் முறையா! மாலு சிரிச்சதும் நீ முறைக்குறியாக்கும்‘ என்று முணுமுணுத்தாள்.
நந்தினி, “ஷங்கர் வந்ததும் நான் கீழ வந்துட்டேன்”
பிருந்தா, “ச” என்று காற்றுப்போன பலூனாக கூற, நந்தினி,“இப்போ நீ என்ன பண்ண னு சொல்லு”
பிருந்தா, ‘அவ மறந்தாலும் இவ மறக்க விட மாட்டாளே!‘என்று நினைத்துக் கொண்டு,“பெருசா ஒன்னுல்ல.. எப்போதும் போல பூந்தோட்ட காவல்க்காரனையும் இவளையும் ஓட்டுனேன்”
நந்தினி கோபமாக ஏதோ கூறவர பிருந்தா, “வெயிட்.. வெயிட்.. முதல்ல என்ன நடந்துது னு அவ கிட்ட கேளு.. நான் சும்மா ஒன்னும் ஓட்டலை”
“எனக்கு அவளை பற்றி தெரியும்.. நீ தான்…………………..”
“அடி பாவி.. LKGயில் இருந்து என் கூட படிச்சுட்டு கொஞ்சம் கூட என் பக்கம் பேச மாட்டிக்கிறியே டி.. இது உனக்கே நியாயமா!”
“நான் எப்போதும் உண்மையின் பக்கம்”
“ஆமா பெரிய நீதி தேவதை!”
வழக்கம் போல் இருவரும் சண்டையிட தொடங்கினர்.மாலினி புன்னகைத்தாள்.
பிருந்தா,“எப்பா உன்னை சிரிக்க வைக்க, நான் எவ்ளோ திட்டு வாங்க வேண்டியதிற்கு!”
மாலினி, “நீ சொன்னதில் ஒன்னு கரெக்ட்.. என்ன பார்க்கிற! நீ சொன்ன எக்ஸ்சாம்பிளை சொல்றேன்.. கிருஷ்ணர் அவரது சகி த்ரௌபதியின் மானத்தை காப்பாத்துவார்.. அது போல் நாங்க பிரெண்ட்ஸ் தான்.. ஸோ இனி தப்பா பேசாத.. இனி ஒரு முறை நீ எங்க நட்பை கொச்சை படுத்தி பேசுன நான் உன் கூட பேசவே மாட்டேன்” என்று தீவிரமான குரலில் கூறினாள்.
பிருந்தா மனதினுள், ‘உண்மையாவே பிரெண்ட் தானா! இதை கேட்டாலும் திட்டு விழும் கேட்காமையும் இருக்க முடியலே! என்ன கொடுமை ஆண்டவா!‘என்று நினைத்துக் கொண்டாள்.
அதே நேரத்தில் ஜெனிஷா, “ராஜ் ஏன் டி வரலை?”
ஆஷா, “என்னை கேட்டா?”
“உன்னிடம் ஏதும் சொன்னானா?”
ஆஷா அழுத்தம் திருத்தமாக, “உன்னிடமே சொல்லலை.. என்னிடம் எப்படி சொல்வான்”
ஆஷாவின் பதிலை கேட்டு ஜெனிஷவிற்கு மனதினுள் மகிழ்ச்சியாக இருந்தது. ஜெனிஷவை பற்றி நன்றாக அறிந்த ஆஷா வேண்டுமென்றே தான் அப்படி கூறினாள்.
ஜெனிஷா, “அது இல்லை……”
“வேணும் னா குருவை கேளு”
“அந்த குரங்கை யா”
“காரியம் ஆகணும் னா குரங்கு காலையும் பிடிக்கணும்”
“ச்ச்.. சரி கேட்கிறேன்” என்று கூறிக்கொண்டு, “சிவகுரு” என்று அழைத்தாள்.
சிறிது ஆச்சரியமாக திரும்பிப் பார்க்க, ஜெனிஷா, “ரா.. சேகர் ஏன் வரலை?”
“அவன் ரா..சேகர் இல்லை.. பி.சேகர்”
ஜெனிஷா ஆஷாவை முறைத்தாள்.
ஆஷா, “பதில் சொன்னது அவன் என்னை ஏன்டி முறைக்கிற?”
“நீ தானே அந்த குரங்கு கிட்ட கேட்க சொன்ன?”
“நானா இப்படி கேட்க சொன்னேன்?”
சிவகுரு, “ஹலோ! உங்க சண்டையை பார்க்கவா என்னை கூப்பிட்ட?”
ஜெனிஷா அவனை முறைத்தாள்.
சிவகுரு, “சரி ஏதோ என் நண்பனோட ஆளா போய்ட்ட.. அதனால கேட்கிறேன் சொல்லு” என்று அலட்சியமாக கூற ஜெனிஷாவிற்கு கோபம் ஏறியது, இருபினும் ராஜசேகருக்காக பொறுத்துக் கொண்டு,“சேகர் எங்க?”
சிவகுரு தன் சட்டை பாக்கெட்டை இழுத்துப் பார்த்துவிட்டு, “இங்க இல்லையே” என்றான்.
ஜெனிஷா பல்லை கடித்துக் கொண்டு, “சேகர் ஏன் வரலை?”
“எனக்கு எப்படி தெரியும்?”
“நீ அவன் பிரெண்ட் தானே!”
“நீ அவன் லவ்வர் தானே!”
ஜெனிஷா கோபமாக திரும்பிக் கொண்டாள், பல்லை கடித்துக் கொண்டு மேஜை மீது தட்டினாள்.
ஆஷா, “கூல் ஜெனி..”
ஜெனிஷா கோபமாக ஆஷாவை முறைத்தாள்.
சிவகுரு ஜெனிஷாவின் நடவடிக்கைகளை குறுஞ்செய்தி மூலம் ராஜசேகருக்கு அனுப்பிக் கொண்டே இருந்தான்.
பொறுமை காக்க முடியாமல் மதிய இடைவேளையில் ஜெனிஷா ராஜசேகரை அழைத்தாள். அவளது அழைப்பை எதிர்ப்பார்த்த ராஜசேகர் முன்னெச்சரிக்கையாக ஒரு வேலை செய்திருந்தான்.
மதிய இடைவேளையில் கோபமாக உள்ளே வந்த பிருந்தா,“ஏன் டி நீ ரெஸ்ட்ரூம்வரலை?”என்று கேட்டபடியே இடத்தில் அமர்ந்தாள்.
மாலினி, “என்னடி கேள்வி இது?”
“..”
“உனக்கு என்ன பிரச்சனை இப்போ?”
“அந்த குரங்கு தான் தீராத பிரச்சனை”
மாலினி சிறு புன்னகையுடன், “என்ன பண்ணான்?”
“சிரிக்காத”
“ஓகே சிரிக்கலை.. சொல்லு”
“நான் வந்துட்டு இருந்தப்ப, ‘அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே‘ னு பாட்டு பாடுறான்” (இந்த பாடல் ‘அன்னை ஓர் ஆலயம்‘ படத்தில் சூப்பர் ஸ்டார் யானையை பார்த்து பாடும் பாடல்)
மாலினி சிரிப்பை அடக்கிக் கொண்டு, “நான் வந்திருந்தா மட்டும் பாடாம இருப்பானா?”
“…”
“ஜில்ஸ்.. அவன் மேல் உள்ள கோபத்தை நீ தேவையே இல்லாம என் மேல் காட்டுற.. உன் பிரச்சனையை நீ தான் டீல் பண்ணனும்”
“ஓ”
“ஏய்! தப்பா எடுத்துக்காத.. நான் என்ன சொல்ல வரேன்னா.. சின்ன சின்ன பிரச்சனை-லாம் நீயே தான் பார்த்துக்கணும்.. நீ மோனி மாதிரி குழந்தை இல்லையே!”
“மாலு நான் ஒன்னும் குழந்தை இல்லை.. சும்மா சும்மா என்னை பாப்பா, குழந்தை னு சொல்லாதீங்க” என்று சிணுங்கினாள் பிருந்தா பின்னால் மெதுவாக நந்தினியுடன் வந்த மோகனா.
பிருந்தா, “இப்படி சிணுங்கினா வேற எப்படி சொல்றது?”என்றும்,
மாலினி புன்னகையுடன், “நான் சும்மா சொன்னேன் டா” என்றும் ஒன்றாக கூற,
மோகனா மாலினியை பார்த்து புன்னகைத்துவிட்டு, பிருந்தாவிடம்,“குழந்தைங்க தான் கிண்டல் பண்ணா கம்ப்ளைன்ட் பண்ணும்.. அப்போ நீ குழந்தையா?”என்று கூற மற்ற மூவரும் வாயடைத்துப் போனர்.
மாலினி, “கலக்குறியே மோனி!”
மோகனா சிரிப்புடன், “ஷங்கர் தான் சொல்லி கொடுத்தான்”
“அது.. அது..” என்று மோகனா சிறிது திணறவும், நந்தினி,“விடு டி.. பாவம் அவ.. இப்ப தான் ஏதோ பேச ஆரம்பிச்சு இருக்கா! நீ அவ……………………”
“வா மா வா!!! நீதி தேவதையே! அது எப்படி டி என்னை தவிர எல்லோருக்கும் சப்போர்ட் பண்ற?”
நந்தினி பதில் கூறும் முன் மோகனா,“நீ குழந்தை இல்லை னு மாலு சொன்னாளே.. அதான்..”
பிருந்தா கையெடுத்து கும்பிட்டு, “அம்மா தாயே! பரதேவதையே! தெரியாம உன்னை குழந்தை னு சொல்லிட்டேன்.. என்னை ஆளை விடு”
மோகனா மாலினிக்கு மட்டும் கேட்கும் குரலில், “நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா மாலு?”
மாலினி சிறு புன்னகையுடன் மெல்லிய குரலில், “இல்ல டா.. அவ கொஞ்சம் டென்ஷனில் இருக்கா.. அதான்.. நீ ஃப்ரீ-யா விடு”
மோகனா புன்னகையுடன் ‘சரி‘ என்று தலையை ஆட்டினாள்.
ஷங்கர் அவர்கள் அருகே வந்து, “மோனி.. மேக்ஸ்காபி பண்ணனுமே.. க்ளாஸ் போகலாமா?” என்று வினவியதும் அவள்,“ஓ போகலாமே!” என்று வேகமாக தலையை ஆட்டி, மாலினியிடம், “க்ளாஸ்க்கு போறேன் மாலு.. பிரேக் டைமில் வரேன்.. சரியா!” என்று கேட்டாள்.
மாலினி ‘சரி‘ என்று தலையை அசைக்கவும், “பாய் நந்து.. பாய் பிருந்து” என்று கூறி தன் வகுப்பிற்கு ஷங்கருடன் உற்சாகமாக கிளம்பினாள்.
ஷங்கர் அல்லது மாலினி மோகனாவிற்கு காவலாக இருக்கவும் மோகனாவை தனியாக அணுக முடியாமல் ஆர்லியின் கொதிப்பு கூடியது. எப்படியும் இருவரும் மோகனாவை தனியாக விடமாட்டார்கள் என்பதை இந்த அரை நாளில் உணர்ந்தவள், சில நாட்களுக்கு அமைதியாக இருந்து, திருந்தியதாக கூறி ஷங்கர் மற்றும் மாலினியை நம்பவைத்து, பிறகு மெல்ல மோகனாவை அணுகலாம், மோகனாவிடம் மெல்ல பேசி ஷங்கர் மேல் பயத்தை புகுத்தி, கொஞ்சம் கொஞ்சமா வெறுப்பை வளர்க்கலாம் என்று திட்டம் தீட்டினாள்.
(ஆர்லியின் திட்டம் பலிக்குமா? மோகனாவிற்கு ஷங்கர் மேல் வெறுப்பு பிறக்குமா?- பொறுத்திருந்து பார்ப்போம்)
ஜெனிஷாவின் அழைப்பு வந்ததும் ராஜசேகர் அன்னையை அழைத்து,“பேசு மா..ஸ்டுடென்ட் னு சொல்லுவாங்க நம்பிராத.. மேடம் தான் பேசுவாங்க.. ஒழுங்கா பேசு மா.. சொதப்பிராத..”
ராஜசேகரின் அன்னை “சரி டா..” என்று கூறி கைபேசியில்,“ஹலோ” என்றார்.
ஜெனிஷா ஒரு நொடி தடுமாறி, பிறகு மெல்ல, “ராஜசேகர் இருக்கானா?”
“அவனுக்கு உடம்பு சரி இல்லை.. நீங்க யாரு?”
“நான்அவன் க்ளாஸ் மேட்.. நீங்க?”என்று இழுத்தாள்.
“நான் அவன் அம்மா பேசுறேன்”
ராஜசேகரின் அம்மா என்றதும் சில நொடிகள் தாமதித்து, “அவனுக்கு என்ன?”
“பீவர்.. தூங்கிட்டு இருக்கான்”
“ஓ.. சரி மா.. ஜெனிஷா பேசுனேன் னு சொல்லுங்க..” என்று கூறி அழைப்பை துண்டித்தவளின் மனம் சஞ்சலித்தது. உடனே அவனை பார்க்க வேண்டும் போல் இருந்தது, ஆனால் கல்லூரியில் விடுப்பு பெறுவது எளிதல்லவே! வகுப்பில் கவனமின்றி கஷ்டப்பட்டு நேரத்தை நெட்டித் தள்ள தொடங்கினாள்.
மாலினி பிருந்தாவிடம் ஏதோ கூற வர, அவளோ,“என் பிரச்சனையை நானேபார்த்துக்குறேன்.. இனி அந்த குரங்கை நானே சமாளிச்சுகுறேன்”
“இப்ப கூட நீயே தான் சமாளிக்குற.. நான் என்ன………….”
பிருந்தா ‘போதும்‘ என்பது போல் கையை காண்பித்தாள்.
மாலினி, “லூசு.. நான் வேணும் னா செஞ்சேன்? ரெஸ்ட்ரூம்க்கு சும்மா சும்மா வா போக முடியும்? வந்தா தானே………………………….”
“சும்மாவாது வந்துருக்கணும்.. வந்து வெளிய நின்னுருக்கணும்”
“ச்ச்.. நீ இப்போ கோபத்துல இருக்க.. எல்லாம் தப்பு தப்பா தான் தோணும்.. கொஞ்சம் அமைதியா யோசிச்சு பாரு”
வகுப்பறையினுள்ளே வந்த சிவகுரு பிருந்தாவை பார்த்து ஏதோ கூற வர, மாலினி கண்ணசைவில் வேண்டாம் என்றதும் அவன் அமைதியாக தன் இடத்திற்கு சென்றான்.
இதை பிருந்தா கவனிக்கவில்லை என்று மாலினி நினைத்துக் கொண்டிருக்க, அவளோ பல்லை கடித்துக் கொண்டு,“இப்ப மட்டும் கண்ணசைவில் அவனை ஸ்டாப் பண்ண முடியுதுல”
“உனக்காக தானே……………”
“வேண்டாம்.. நீ ஆணியே புடுங்க வேண்டாம்” என்று கோபமாக பிருந்தா கூறினாள்.
“இப்போ என்ன கோபம்? நான் கண்ணசைவில் அவனை ஸ்டாப் பண்ணதா? அவனை கிண்டல் பண்ண விடாததா?”
“….”
மாலினி “நீ சரிப்பட மாட்ட.. இரு..” என்று கூறிவிட்டு, திரும்பி, “சிவா” என்று அழைத்தாள்.
பிருந்தா, “ஏய்.. என்ன பண்ற?”
“ஹ்ம்ம்.. நீ தானே அவன் கிண்டல் பண்ணலை னு ரொம்ப பீல் பண்ண”
பிருந்தா முறைத்துக் கொண்டு ஏதோ திட்ட வர, அதற்குள் அங்கே வந்த சிவகுரு, “என்ன மாலினி?”
பிருந்தா, “ஹம்.. அவ வீட்டு செப்டிக் டன்க் கிளீன் பண்ணனுமாம்.. போறியா!”
சிவகுரு புன்னகையுடன், “அதுக்கு தான் நீ இருக்கியே பிந்துஸ்”
பிருந்தா மாலினியை முறைக்க, அவள், “என்னை ஏன் முறைக்கிற?”
“நீ தானே அவனை கூப்பிட்ட”
“நானா உன்னை பேச சொன்னேன்? அப்படி பேசுவானேன்? வாங்கிக் கட்டுவானேன்?”
சிவகுரு, “ஏய்! பிந்துஸ் இப்போ உனக்கு என்ன பிரச்சனை?”
“நீ தான் டா பிரச்சனை”
“ஓ.. இதுக்கு ஒரு சல்யுஷன் சொல்லவா?”
“…”
“என்ன பார்க்கிற! என்னை எனிமியா பார்க்கிறதை விட்டுட்டு பிரெண்டா பாரு”
“ஒரு நாளும் அது நடக்காது”
“அப்போ உன் பிரச்சனையும் ஒரு நாளும் தீராது” என்று புன்னகையுடன் கூறி தன் இடத்திற்கு சென்றான்.
மாலினி, “ஜில்ஸ்……”
“பேசாத”
“ஹே.. நீயும் என் பிரெண்ட் அவனும் என் பிரெண்ட்”
“எப்போதிலிருந்து அவன் உன் பிரெண்ட் ஆனான் மாலு?”
“நாங்க ஒரே ஸ்கூல் னு மறந்துட்டியா?”
“நான் மறக்கலை.. அவனுக்கு நீ தான் குரங்கு னு பட்டப் பெயர் வச்சங்கிறதையும் மறக்கலை.. அவனுடன் ஸ்கூல் டேஸ்ஸில் பேசினது இல்லை னு சொன்னதையும் மறக்கலை”
“பிரெண்ட் னா குரங்கு னு நிக் நேம் வைக்க கூடாதா?பேசிக்கலை னா பிரெண்ட்-ஆ இருக்க கூடாதா என்ன! அவனுக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உண்டு, அந்த விஷயத்தில் அவனை எனக்கு பிடிக்கும்.. அவனும் பிரெண்ட்ஸ் விட்டுக்குடுக்க மாட்டான்..”
“….”
“ஜில்ஸ் இப்பலாம் நீ ரொம்ப டென்ஷன் ஆற.. டென்ஷன் இல்லாம கூல் ஆ யோசிச்சு பாரு.. அவன் சீண்டுறதை கூல்-ஆ டீல் பண்ணு.. அவன் வேற யாரையும் இப்படி பேசி பார்த்திருக்கியா?
நீ எவ்ளோ கேவலமா பேசினாலும் அவன் டென்ஷனாறானா? நீயும் அப்படியே இரு.. இன்பாக்ட் நீ பதிலடி குடுக்குறது அவனுக்கு பிடிச்சிருக்கு.. அதான் இப்படி விடாம பண்றான்..
அவன் உன்னை கிண்டல் பண்ணா நீயும் கிண்டல் பண்ணு.. பட் கஷுவல்-ஆ எடுத்துக்கோ டா.. டேக் இட் ஈஸி யா”
நந்தினி அமைதியாக பிருந்தாவையும் மாலினியையும் பார்த்துக் கொண்டு இருக்கவும், பிருந்தா,“நீ ஏன் டி அமைதியா இருக்க? உன் பங்குக்கு நீயும் எதையாவது சொல்ல வேண்டியதானே!” என்று கடுகடுத்தாள்.
மதிய இடைவேளை முடிந்து சைக்கோ உள்ளே வரவும் பிருந்தா அமைதியானாள்.
மாலையில் பனிப்பாகுவை(ஐஸ்-கிரீம்) உண்டபடியே தொலைக்காட்சி ரிமோட்டிற்கு தங்கையுடன் ராஜசேகர் சண்டை போட்டுக் கொண்டிருந்த போது வீட்டின் அழைப்பு மணி அடித்தது..
ராஜசேகர், “ஏய்! யாரு னு போய் பாரு”
“நீ போய் பாரு”
“நீ போ”
“போடா.. நானே இப்போ தான் ஸ்கூலில் இருந்து வந்திருக்கிறேன்.. நீ வீட்டில் வெட்டியா ஜாலியா தானே இருந்த.. நீயே போய் பாரு”
“ரெண்டு நட நடந்தா உடம்பு கொஞ்சம் குறையும்”
“இப்படி குறைக்கணும் னு எனக்கு ஒன்னும் அவசியம் இல்லை”
இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க, அழைப்பு மணி மீண்டும் அடித்தது.. சமையல் அறையில் இருந்து அன்னை,“சாரு யாரு னு பாரு” என்று கூற, ராஜசேகர் தங்கையைப் பார்த்து வெற்றி புன்னகை புரிந்தான்.
தங்கை அவனுக்கு பழிப்பு காட்டி, அவன் தோளில் ஒரு அடி வைத்துவிட்டு, சென்று கதவை திறந்தாள்.
சில நொடிகளில், “டேய் அண்ணா! உன் பிரெண்டாம்.. உன்னை பார்க்க தான் வந்துருக்காங்க” என்று குரல் கொடுக்கவும், ‘யாராக இருக்கும்‘ என்ற யோசனையில் சென்றவன் முதலில் அதிர்ச்சியடைந்தான், பிறகு அசடு வழிந்தான்.
வந்தது யாரென்று புரிந்திருக்குமே!ஹ்ம்ம்.. ஜெனிஷாவே தான். (பிருந்தாவை தொடர்ந்து வந்து அவனது வீட்டை கண்டு பிடித்திருந்தாள்)
கையில்லா பனியனும், பெர்மடாசும் அணிந்து வந்தவனை பார்த்ததும் முதலில் ஜெனிஷாவின் முகம் மலர்ந்தாலும், அவன் கையில் இருந்த பனிப்பாகு மனதில் பதியவும் யோசனையுடன்,“உனக்கு பீவர் னு சொன்னாங்க?”
“அது.. அது வந்து..” என்று ராஜசேகர் அசடு வழிய,
அவனது தங்கை,“ஓ! இன்னைக்கு பீவர் னு சொல்லி தான் லீவ் எடுத்தியா” என்று கண்ணில் குறும்புடன் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு கேட்டாள்.
ராஜசேகர் ஜெனிஷாவிடம் சங்கடத்துடன் அசடு வழிந்துவிட்டு, தங்கையை பார்த்து முறைக்க, இப்பொழுது தங்கை வெற்றிப் புன்னகை புரிந்துவிட்டு உள்ளே சென்றாள்.
ராஜசேகர் மனதினுள், ‘ராங் டைமிங்கில் சரியா கோர்த்துவிட்டுடியேடிஎட்டப்பி!‘என்று தங்கையை பாசமாக திட்டியவன், ஜெனிஷாவிடம்,“அது வந்து நிஷா.. காலைல தலை வலி இருந்துதா அதான் லீவ் போட்டேன்”
“எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாமே!”
“அனுப்புனேனே டா.. வர………………..”
“பொய் சொல்லாத.. நான் உன் போன் அட்டெண்ட் பண்ணலை னு என்னை தவிக்க விடத் தானே பொய் சொல்லி லீவ் எடுத்த.. உன்னை போய் பார்க்க வந்தேன் பாரு!” என்று கோபமாக கூறி அவனை முறைத்துவிட்டு வெளியேறினாள்.
ராஜசேகர் அவசரமாக மேல் சட்டையை போட்டுக் கொண்டு வெளியே செல்லவும் அவள் தனது இருசக்கர வண்டியை கிளப்பி செல்லவும் சரியாக இருந்தது.
“ச்ச்” என்று தலையில் கைவைத்தான் ராஜசேகர்.
“யாரு டா அது? செம பிகர்!”
“உன்னை யாருடி வாயை திறக்க சொன்னது” என்று கோபமும் கடுப்புமாக கூறியபடி அவன் திரும்ப, அவனிடம்சிக்காமல் அவன் தங்கை அறையினுள் ஓடி கதவை மூடினாள்.