வகுப்பின் வெளியே வராண்டாவில் சிவகுரு வாட்ச்மன் வேலையை செய்துக் கொண்டிருக்க, வகுப்பின் உள்ளே பசங்கள் வரிசையில் முதல் வரிசை மேஜையின் இடதுபுற ஓரத்தில் ஜெனிஷா அமர்ந்திருக்க, அவளது கால்களை உரசியவாறு இடதுபுற ஓரத்தில் இருந்த இருக்கையின் ராஜசேகர் அமர்ந்து கண்களால் அவளை பருகிக் கொண்டிருந்தான்.
[இருவர் மட்டுமே இருந்தனர்.இருவரும் அமர்ந்திருந்த இடத்தை சற்று தொலைவில் இருந்துஜன்னல் வழியாகவோ வாசல் வழியாகவோ பார்த்தால் தெரியாது]
ஜெனிஷா, “இப்படி அமைதியா உட்கார்ந்துட்டு இருக்க தான் என்னை சீக்கிரம் வர சொன்னியா?”
ராஜசேகர் கண்ணில் காதலுடன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, ஜெனிஷா, “நீ சரி வர மாட்ட.. நான் என் ப்ளேஸ்க்கு போறேன்” என்று கூறி இறங்க,
ராஜசேகர், “நீயே சொல்லிட்ட.. இப்போ என் கைக்கு வேலை கொடுக்கவா வாய்க்கு கொடுக்கவா?” என்று கேட்டபடி ஒற்றை விரலால் அவளது இடது கன்னத்தைவருடியபடிஅவளை பார்த்து கண் சிமிட்டினான்.
ஜெனிஷா சற்று திணறித் தான் போனாள். ஒருவாறு தன்னை சமாளித்து, அவன் விரலை தட்டிவிட்டுவிட்டு, “உன் கைக்கு ஒன்னும் வேலை தர வேணாம்”
ராஜசேகர் கண்கள் மின்ன, “அப்போ வாய்க்கு வேலை தரவா நிஷு”
‘வாயை திறந்து பேசு’ என்ற அர்த்தத்தில்‘ஆமா’ என்று சொல்ல வந்தஜெனிஷா அவன் கண்கள் சொன்ன செய்தியில், “ஏய்!” என்று கூறி ஆள்காட்டி விரலால் மிரட்டியபடி பின்னால் நகர சுவற்றில் முட்டி நின்றாள்.
ஜெனிஷாவின்நெஞ்சம் படபடத்தது, எழும்பாத குரலில், அவனது தோளைப் பார்த்து, “ராஜ்.. இது கிளாஸ் ரூம்”
ராஜசேகர் மென்னகையுடன், “யாராது வந்தா குரு விசிலடிப்பான்” என்று கூறியபடி அவளைசிறிது நெருங்கினான், ஆனால் தொடவில்லை.
ஜெனிஷாவின் இதயத்துடிப்பு அதிகரித்தது, பயம் கலந்த எதிர்பார்ப்புடன் கண்களை மூடிக்கொண்டாள்.
ராஜசேகர் புன்னகையுடன் “கண்ண திற நிஷு”
ஜெனிஷா கண்களை திறக்காமல்மறுப்பாக தலையை ஆட்டினாள்.
ராஜசேகர்புன்னகையுடன்ஜெனிஷாவின் முகத்தை நெருங்கி, இதழை குவித்துஅவளது மூடியஇரு கண்கள் மேலும் லேசாக காற்றை ஊதி, “நிஷு.. ஐ லவ் யூ டா” என்று கூறி அவளது வலது கரத்தில் ஒரு ப்ரேஸ்லட்டை அணிவித்தான்.
ஜெனிஷா கண்களை திறக்க, ராஜசேகர் அவளது வலது கை மணிக்கட்டை அவளது முகத்திற்கு முன் கொண்டு வந்து கண்ணில் குறும்புடன்புருவம் உயர்த்தினான்.
ராஜசேகரின் முத்தத்தை எதிர்ப்பார்த்த ஜெனிஷாவிற்கு ஏமாற்றமாக இருந்தாலும், அதைபெளிப்படையாககூற முடியாமல், தன் மனதை மறைத்து அந்த ப்ரேஸ்லட்டை பார்த்தாள். சங்கிலியின் நடுவேஇரு இதயங்கள் இணைந்திருக்க, அவை இணைந்த இடத்தில் சிறிய வெள்ளைக் கல் இருந்தது. ஜெனிஷாவிற்கு மிகவும் பிடித்தது. அதை அவள் கண்கள் மின்னியத்தில் இருந்து அறிந்த ராஜசேகர்,
“இமிடேஷன் தான்.. நம்ம என்கேஜ்மென்ட்க்கு தங்கத்தில் போடுறேன்” என்று கூறி கண்சிமிட்டினான்.
ராஜசேகர் ஜெனிஷாவின் இடதுப்புறநெற்றியில் இருந்து நாடிவரை ஒற்றை விரலால் வருடியபடி, “ஆனா நீ எதிர்பார்த்தது இது இல்லை தானே நிஷு” என்று கிறக்கமான குரலில் கூற,
ஜெனிஷவின் சிரிப்பு மறைந்து இதயத்துடிப்பு அதிகரித்தது, ராஜசேகரின் விரல் அவளது நாடியில் இருக்க, அதை தட்டிவிடும் எண்ணம் கூட இல்லாமல் அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
அப்பொழுது விசில் சத்தம் கேட்க, இருவரும் சட்டென்று விலக, ஜெனிஷா அவசரமாக தன் இடத்திற்கு சென்று அமர்ந்தாள். முதல் வரிசையிலேயே அமர்ந்த ராஜசேகர் ஜெனிஷாவின் பை அடுத்த இருக்கையில் இருந்ததை பார்த்து, அவசரமாக அதை எடுத்து, “நிஷா….பக்” என்று கூறி அதை வீச, அதை சரியாக பிடித்த ஜெனிஷா, அதை தன்மேஜை மேல் வைத்து, அதை திறந்து, உள்ளிருந்து எதையோ எடுப்பது போல் பாவனை செய்ய, ராஜசேகர் மேஜையில் தாளம் போட ஆரம்பித்தான்.
சில நிமிடங்கள் கழிந்தும் யாரும் வராமல் போக, ராஜசேகர் ஜெனிஷாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மெல்ல எழுந்து வெளியே சென்றான்.
வெளியே சிவகுருவை தவிர வேறுயாரும் இல்லை.
ராஜசேகர், “என்ன டா.. எதுக்கு விசில் அடிச்ச”
“நான் எப்போ டா அடிச்சேன்?”
“இப்போ தானே டா அடிச்ச!”
“அப்படியா!”
“டேய்!”
“மச்சான்.. கூல்.. நான் விளையாடலை.. நிஜமாவே நான் தெரியாம தான் அடிச்சேன்”
“அது எப்படி டா தெரியாம அடிப்ப?”
“அது வந்து டா.. பிருந்தா கேன்டீன் போறதை பார்த்தேனா! அதான் என்னை அறியாம.. ஹி ஹி ஹி” என்று சிரிக்கவும், ராஜசேகர் கடுப்புடன் அவனை முறைத்தான்.
சிவகுரு, “என்ன மச்சான்.. கிஸ் மிஸ் ஆகிருச்சோ!”
ராஜசேகர் இன்னமும் கடுப்புடன் முறைக்க, சிவகுரு அவனது தோளில் கை போட்டு,
“விடு டா மச்சான்.. நாளைக்கு கிஸ் அடிச்சுக்கலாம்”
ராஜசேகர் பல்லை கடித்துக் கொண்டு, “உன்னை போய் காவலுக்கு நிக்க சொன்னேன் பாரு…………”
மாலினி குரலில் இருந்தே அவள் தன்னைநம்பவில்லை என்பதைஉணர்ந்த பிருந்தா சிறு கடுப்பு கலந்த குரலில், “நிஜமா தான் மாலு.. நான் சாப்பிட போகலை.. நான் வரும் போது அந்த குரங்கு காரிடரில் நிக்குறதை பார்தேனா, சும்மாவே கிண்டல் பண்ணி கடுப்பேத்துவான், இதுல தனியா போனா.. சொல்லவா வேணும்! அதான் கேன்டீன் போனேன்.. நீ வந்ததும் உன் கூட ஜாயின் பண்ணிட்டேன்”