“ஹே.. அந்த லூசு கிட்ட என் நம்பரை குடுத்துறாத ஜெனி.. ப்ளீஸ் ப்ளீஸ்.. நீயும் சேகரை லவ் பண்ற னு தெரிஞ்சதால் தான் குடுத்தேன்.. அதுவும் சேகர்டீசென்ட் guy.. ப்ளீஸ் டி”
“அது! அந்த பயம் இருக்கட்டும்.. ஏதோ ராஜ் டீசென்ட் guy னு சொன்னதால் விடுறேன்..”
“அப்ப்பா” என்று நிம்மதி மூச்சு விட்ட ஆஷா, “எதுக்கு திடீர் னு கேட்கிற?”
“உன் கிட்ட ராஜ் நம்பர் இருக்கா?”
“எப்பவாது நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லியிருக்கியா நீ?”
“நம்பர் இருக்கானு கேட்டேன்”
“அதானே நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டா!அதுஜெனி இல்லையே!”
“தெரிதுல.. பதிலை சொல்லு”
“இருக்கிறது.. நம்பர் **********”
ஜெனிஷா சிறிது வேறுபட்ட குரலில், “மனப்பாடமா தெரியுமா?”
“அம்மா தாயே உன் ஆள் நம்பர் எனக்கு மனப்பாடமா லாம் தெரியாது.. இயர்-போனில் பாட்டு கேட்டுட்டுஇருக்கும் போது உன் போன் வந்தது.. அப்படியே அட்டென்ட் பண்ணேன்.. உன் நம்பர் சேகர்க்கு தெரியுமா னு நீ கேட்டப்பவே காண்டக்ட்ஸ் போய் அவன் நம்பர் சர்ச் பண்ணி எடுத்துட்டேன்.. போதுமா விளக்கம்.. என்னை ஆளை விடு” என்று கூறி அழைப்பை துண்டிக்க நினைக்க,
ஜெனிஷா, “ஹே! எதுக்கு கேட்டேன் னு தெரிய வேண்டாமா?”
“நான் கேட்டா.. சொல்லிட்டு தான் நீ மறுவேலை பார்ப்ப!”
“அது ஒன்னும் இல்லை.. ஒரு நம்பரில் இருந்து மெசேஜ் வந்துது அதான் அது ராஜ் தானா னு தெரிஞ்சுக்க கேட்டேன்”
“பின்ன இனி டெய்லி நைட் டுயுட்டி பார்த்துட்டு காலேஜில் தான் தூங்க போற..”
“போடி.. மாட்டிக்காம தூங்க எனக்கு தெரியும்”
“அப்போ இனி நிஜமாவே டெய்லி,
‘சங்கீதசுவரங்கள்
ஏழேகணக்கா…………….”
“போடி.. உன் வேலையை பாரு”
“இப்போஉன் வீடுக்குலாம் வர முடியாது மா.. அப்பறம் மிஸ்டர் சுரேஷ்(ஆஷாவின் தந்தை) என்னை பிச்சுடுவார்”
“என்னடி உளறுற?”
“நீ ‘உன் வேலையை பாரு‘ னு சொன்னாலே தனி அர்த்தம் தானே!”
ஜெனிஷா புன்னகையுடன், “காலேஜில் வச்சு னா தான் உனக்கு வாட்ச்-வுமன் வேலை.. இப்போ சொன்னது உன் சொந்த வேலை தான்”
“நேரம் தான் டி”
“நேரம் இப்போ 9.20″
“அது எங்களுக்கும் தெரியும்.. நீ போய் கடலை போடு.. பை” என்று கூறி ஆஷா அழைப்பை துண்டித்தாள்.
புன்னகையுடன் சற்று யோசித்த ஜெனிஷா குறும்புடன் ராஜசேகர் எண்ணை அழைத்தாள்.
ஜெனிஷா கைபேசியில் ‘voice-modulator’ என்று ஒரு வசதி உண்டு, அதன் மூலம் பெண் குரலை ஆண் குரலாக மாற்றவும், ஆண் குரலை பெண் குரலாக மாற்றவும் முடியும்.
அந்த வசதியின் உதவியுடன் ராஜசேகருடன் ஆண் குரலில் பேசும் திட்டத்துடன் அழைத்தாள்.
ராஜசேகர் ஜெனிஷாவின் எண்ணை பார்த்ததும் மகிழ்ச்சியுடன்,“ஹலோ நிஷு” என்று கூற,
ஜெனிஷா ஆண் குரலில்(அதவாது அவள் எப்பொழுதும் போல் தான் பேசினாள் ஆனால் ‘voice-modulator’ on செய்து இருந்ததால் ஆண் குரல் போல் ராஜசேகருக்குகேட்டது)
“ஹலோ..கொஞ்ச நேரத்திற்கு முன் இந்த நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது..நீங்க யார் சார்? உங்களுக்கு யாரு வேணும்? “
ராஜசேகர் அதிர்ச்சியுடன் திணறவும், இங்கே ஜெனிஷா வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.
ராஜசேகர் கைபேசியை காதில் இருந்து எடுத்து பெயரை பார்த்தான்.
பிறகு, குழப்பமும் அதிர்ச்சியுமாக,“மே ஐ ஸ்பீக் டு நிஷா.. ஜெனிஷா?”
ஜெனிஷா கறாரான குரலில், “ஜெனிஷா வோ நிஷா வோ அப்படி யாரும் இல்லை.. ராங் நம்பர்” என்று கூறி பட்டென்று அழைப்பை துண்டித்துவிட்டு பலமாகசிரித்தாள்.
பெரும் குழப்பத்தில் இருந்த ராஜசேகர் ஆஷாவை அழைக்கலாம் என்று யோசித்தவன், மணியை பார்த்தான். மணி 9.25 என்பதால், ‘இந்த நேரத்தில் ஆஷாக்கு போன் செய்யலாமா?’ என்று தயங்கியவன், குறுஞ்செய்தி அனுப்பினான்.
“தொந்தரவிற்கு மன்னிக்கவும்.. உடனே ஒரு சந்தேகத்தை தீர்த்துக்கணும்.. ********** இது நிஷா நம்பர் தானே?”
ஆஷாவிடமிருந்து பதில் வருவதற்குள் ராஜசேகர் நிலைமை திண்டாட்டமாக தான்இருந்தது.. அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.. தலை வெடித்துவிடுவது போல் இருந்தது.
ஐந்து நிமிடங்களில் ஆஷா ராஜசேகரை அழைத்தாள்.
“ஹலோ ஆஷ்! அது நிஷா நம்பர் தானே!”
“ஆமா! ஏன் சேகர் என்ன ஆச்சு?”
“நான் கொஞ்ச நேரத்துக்கு முன் மெசேஜ் அனுப்புனேன்.. அந்த நம்பரில் இருந்து போன் வந்துது.. ஒரு ஆண்தான் பேசினாங்க, ஜெனிஷா னு யாரும் இல்லை.. ராங் நம்பர் னு சொல்லி வச்சுட்டாங்க”
ஆஷா புன்னகையுடன், “இப்போ தான் அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி ஜெனி பேசினா.. ஒரு நம்பரில் இருந்து மெசேஜ் வந்துது னு சொல்லி அது உன் நம்பர் தானா னுசெக் பண்ண போன் பண்ணேன் னு சொல்லி உன் நம்பர் வாங்கினா..
ஸோ ஜெனி தான் ஏதோ விளையாடுறா னு நினைக்கிறேன்”
“எப்படி ஆண் குரலில்?அவளுக்கு மிமிக்கிரி தெரியுமா?”
சிறிது யோசித்த ஆஷா சிரிப்புடன், “மிமிகிரி தெரியாது பட் அவ செல்லில் வாய்ஸ் மாடுலேடர் உண்டு”
ராஜசேகர் புன்னகையுடன், “ஓ! ஓகே ஆஷ்.. இனி நான் பார்த்துக்கிறேன்.. தேங்க்ஸ்”
“ஆல் தி பெஸ்ட்”
“தன்க் யூ”
“சேகர் உன்னிடம் ரெண்டு விஷயம்சொல்லணும்”
“என்ன?”
“சொன்னாட்ரீட் தரனும்”
“உனக்கு இல்லாததா?”
“ஜெனி முன்னாடி இப்படி சொல்லிடாத”
ராஜசேகர் சிரிப்புடன், “நிஷா இருக்கும் போது நீ யாருனே எனக்கு தெரியாதே!”
“அட பாவிகளா!”
ராஜசேகர் புன்னகையுடன், “சரி சரி விஷயத்தை சொல்லு”
“என்னை யாரு னு தெரியாதவங்களிடம் சொல்ல முடியாது”
“அது நிஷா முன்னாடி தான்.. இப்போ நீ யாரு! என் பெஸ்ட் பிரெண்ட் ஆச்சே!”
“ஏதோ பழகி தொலைச்சுட்டேன்.. அதனால் சொல்றேன்.. அப்ட்டர் நூன் நீ போனதுக்கு அப்பறம்நாங்க பேசிட்டுஇருந்தப்பஜெனி.. ‘இப்போ ஒரு பேச்சு அப்போ ஒரு பேச்சு னு கிடையாது.. இந்த நிஷா எப்போதும் ஒரே பேச்சு தான்‘ னுசொன்னா.. புரிதா!”
“ஹ்ம்ம்.. பெருசா என்ன கேட்டுற போறேன் சின்னதா ஒரு டின்னர் ‘Royal Le Meridien’ னில்”
“ஹலோ.. ஹலோ.. சிக்னல் இல்லை னு நினைக்கிறேன் ஆஷ்.. நாளைக்கு பார்க்கலாம் பை” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.
ஆஷா புன்னகையுடன், ‘ரெண்டும் நல்ல ஜோடி தான்‘ என்று நினைத்ததுக் கொண்டாள்.
ராஜசேகர் ‘என்னிடமே உன் வேலையை காட்டுறியா நிஷு டார்லிங்!‘என்று கூறி புன்னகையுடன்ஜெனிஷாவைஅழைத்தான்.
தன் அறைக்குள் சென்ற மாலினி, நந்தினி மற்றும் பிருந்தாவிற்கும்கான்ப்ரன்ஸ் காள்செய்து முன்தினம் நிகழ்த்த கடத்தல் சம்பவம் மற்றும் மோகனாவுடன் பேசியதைபற்றி கூறினாள்.
“என்ன சார் இப்போ தானே ராங் நம்பர் னு சொல்லிட்டு வச்சேன்”
“ஓ! சாரி சார்.. எப்படி னு தெரியலை சார்.. நான் என் வைஃப்நிஷா நம்பரை தான் காள் பண்றேன்.. பட்………………”
“வைஃப் ஆ!”
“அதில் உங்களுக்கு ஏன் சார் இவ்ளோ ஷாக்?”
“எனக்கு.. எனக்கு ஒன்னும் ஷாக் இல்லையே!”
“அப்படியா!”
“ஹலோ மிஸ்டர்…………..”
“ஓகே சார்.. நான் லண்ட் லைன்க்கு போன் பண்ணி என் வைஃப்கிட்ட பேசிக்கிறேன்.. தொந்தரவுக்கு மன்னிச்சிருங்க” என்று கூறி அழைப்பை துண்டிப்பது போல் பாவனை செய்ய,ஜெனிஷா அவசரமாக,“ஹலோ.. ஹலோ”
“என்ன சார்?”
“லண்ட் லைன் நம்பர் உனக்கு எப்படி தெரியும்?ஆஷா கிட்ட பேசுனியா?”
ராஜசேகர் சிரிப்பை அடக்கிக் கொண்டு, அறியாதவன் போல்,“என் வைஃப்பிரெண்ட் நேம் உங்களுக்கு எப்படி சார் தெரியும்?”
“நான் உன் வைஃப்ஆ?”
“ச ச.. என்ன சார் ஒரு ஆம்பளை எப்படி என் மனைவியா இருக்க முடியும்?”
“டேய்!”
“என்ன சார் மரியாதை குறையுது.. கிவ் ரெஸ்பெக்ட் அண்ட் டேக் ரெஸ்பெக்ட் னு கேள்விபட்டது இல்லையா!”
“நீ ஆஷா கிட்ட பேசுனியா!”
“என் வைஃப்பிரெண்ட் கிட்ட நான் பேசுனா என்ன பேசலைனா உங்களுக்கு என்ன சார்?”
ஜெனிஷா வாய்ஸ் மாடுலேடரை அணைத்து விட்டு,“டேய் நான் உன் வைஃப்ஆ?”
ராஜசேகர் ஆச்சரியம் மிகுந்த குரலில், “வாவ்! வாட் அமஜிக்! எப்படி நிஷா?”
“டேய் ரொம்ப நடிக்காத.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”
ராஜசேகர் காதல் மிகுந்த குரலில், “எந்த கேள்விக்கு நிஷு?”
ஜெனிஷாவின் வேகம் குறைந்தது.
“உனக்கே தெரியும்”
ராஜசேகர் புன்னகையுடன், “ஆஷா கிட்ட இப்போ தான் பேசினேன்.. ஏன் நான் பேச கூடாதா?”
“நான் அதை கேட்கலை”
“அப்பறம்?”
“…”
“சொல்லு நிஷு.. எதை கேட்கிற? நீ சொன்னா தானே எனக்கு தெரியும்?”
ஜெனிஷா மனதினுள், ‘நிஷா இவன் சரியான திருட்டு பையன்.. நீ வெக்கப்பட்ட வேலைக்கு ஆகாது.. இவன் ஓட்டிட்டே தான் இருப்பான்‘என்று கூறிக் கொண்டு,“ஹ்ம்ம்.. நான் என்ன உன் வைஃப்ஆ?”
ராஜசேகர் நிதானமாக அழுத்தமாக, “ஆமா” என்றான். இரண்டு நொடிகள் இடைவெளி விட்டு ராஜசேகரே பேசினான், மென்மையாக காதலுடன்,“நீ எப்போ என் காதலை அக்செப்ட் பண்ணியோ அப்பவே நீ மனசளவில்என் மனைவிஆகிட்ட நிஷா.. இதை மாற்ற யாராலும் முடியாது”
ஜெனிஷாவிற்கு பேச்சே வரவில்லை..
சின்னச்சிறு காரியத்திற்காக தன்னிடம் வழியும் பசங்களை மறைமுகமாக ஊக்குவித்து காரியம் சாதித்து இருக்கிறாள், பசங்களின் சைகாலஜி அறிந்தவள் தான்.. சில நல்ல பசங்கள் அவளிடம் உண்மையாக காதலை கூறியிருக்கிறார்கள் தான் ஆனால் அவர்களில் யார் மீதும் வராத காதல் உணர்வு எப்போதும் தன்னை சீண்டியராஜசேகர் மேல் வந்தது.. இந்த காதல்அனுபவம் அவளுக்கு முற்றிலும் புதுமையானது..ராஜசேகரின் காதலில் கரைந்தாள்..
சில நொடிகள் இனிமையான மௌனத்தில் கழிய, ராஜசேகர் தொண்டையை சீர் செய்துக் கொண்டு,“நிஷு இன்னொரு தடவ சொல்லேன்” என்று கரகரத்த குரலில் கூற,
ஜெனிஷா சிறு வெக்கம் கலந்த புன்னகையுடன் தலையை ‘முடியாது‘என்று ஆட்டினாள்.
[இது என்ன வீடியோ காள் ஆ ஜெனி! நீ தலையை ஆட்டினா அவனுக்கு எப்படி தெரியும்!]
ராஜசேகர், “நிஷு.. லைனில் தானே இருக்க?”
“ஹ்ம்ம்”
“என்ன அமைதியா மாறிட்ட!”
ஜெனிஷாவிற்கே தன் அமைதி ஆச்சரியமாக இருந்தது. ‘தானா இப்படி மெளனமாக இருப்பது! இவனின் குரலுக்கே வெக்கப் படுவது!‘என்று பெரிதும் ஆச்சரியம் கொண்டாள், ஆனால் இது அவளுக்கு மிகவும் பிடித்தது.
“நிஷு.. பதில் சொல்லு”
“நீ தான் மாத்திட்ட”
கர்வம் கலந்த மகிழ்ச்சியுடன் ராஜசேகர், “அப்படியா!”
“எதுக்கு போன் பண்ண?”
“என் வைஃப்கிட்ட பேச காரணம் வேணுமா?”
“ராஜ்”
“என்ன நிஷு டார்லிங்”
“என்னை.. ஹ்ம்ம்.. எப்படி என் மேல் லவ் வந்துது?”
“உனக்கு என் மேல் எப்படி லவ் வந்தது?”
“நான் தான் பஸ்ட் கேட்டேன்”
“நீயே பஸ்ட் பதிலும் சொல்லிடு”
“இது சீடிங்”
ராஜசேகர் சிரிப்புடன், “சொல்லு நிஷு.. எப்படி என் மேல் லவ் வந்தது?”
“தெரியலையே! எனக்கே அது ஆச்சரியமா தான் இருக்குது”
“அடி பாவி”
ஜெனிஷா சிரித்தாள்.
ராஜசேகர், “என்ன சிரிப்பு?”
“ஓகே நீ சொல்லு என் மேல் எப்படி லவ் வந்துது?”
“லவ்க்கு காரணம் கிடையாது நிஷு..காரணம் இருந்தா அது லவ்யேஇல்லை”
“இந்த இத்து போன வசனத்தை மாத்துங்க டா”
“ஓல்ட் இஸ் கோல்ட் நிஷு.. அண்ட் இட்ஸ் ட்ரூடூ”
“தாங்கலை”
ராஜசேகர் புன்னகையுடன், “இன்னொரு முறை சொல்லு நிஷு”
அவன் எதை சொல்கிறான் என்பதை நன்கு அறிந்த ஜெனிஷா புன்னகையுடன்,“தாங்கலை”
“ஏய்! நான் இதையா சொன்னேன்?”என்று சிறு ஏமாற்றத்துடன் ராஜசேகர் கூற,
“சொல்லு ராஜ்.. எதை கேட்கிற? நீ சொன்னா தானே எனக்கு தெரியும்” என்று அவன் கூறியதையே திருப்பி கூறினாள்.
ராஜசேகர் புன்னகையுடன், “எனக்கே வா!”
“அது என்ன உனக்கே வா!”
“சரி அதை விடு.. நான் கேட்டதை சொல்லு..”
“எப்படி விட முடியும்?”
“ஓகே ஓகே.. நான் ஒன்னும் பெரிய இவன் இல்லை.. போதுமா”
“என்னடா இப்படி பட்டுன்னு சரெண்டர் ஆகிட்ட.. சப்புன்னு போச்சே!”
“உன்னிடம் தானே சரெண்டர் ஆனேன்..” என்று காதலுடன் கூற, ஜெனிஷா,“இப்படி பேசியே என்னை மயக்குற டா நீ”
ராஜசேகர் புன்னகையுடன், “அப்படியா!”
“ஹ்ம்ம்..”
“அப்படியே மயக்க கிறக்கத்துடன் அந்த நாலு வார்த்தையை சொல்லு டா செல்லம்”
“நாலு வார்த்தையா!”
“ஆமா.. என் பெயரையும் சேர்த்து சொன்னேன்”
ஆஷா சொன்னது போல் அவர்களின் பேச்சு காலைவரை நீடித்தது. என்ன பேசினார்கள் என்று கேட்டால் அதற்கு அவர்கள் பதில் ‘தெரியாது‘ அல்லது ‘ஒன்றுமில்லை‘ என்பதாக தான் இருக்கும்.
காலை 6 மணிக்கு பேச்சை முடித்த போது ராஜசேகர்,“இன்னைக்கு அரை மணி நேரம் முன்னாடியே காலேஜ் வந்துரு நிஷு செல்லம்..” என்று கூறி அழைப்பை துண்டித்தான்.