“நீ கூட ஐஸ் வைப்பியா மாலு! பட் அது என்னிடம் பலிக்காது”
பிருந்தாவின் இரண்டாவது வாக்கியத்தை கவனிக்காதவள் போல், “என்ன பண்றது.. எல்லாம் சகவாஷ தோஷம்.. இப்படி ஐஸ் வச்சு பேசலாம் கத்துக்கிட்டேன்”
“….”
“யாருடன் சேர்ந்த சகவாஷ தோஷம் னு கேட்க மாட்டியா பிருந்து?”
“தேவை இல்லை”
“நீ கேட்கலைனாலும் நான் சொல்லுவேனே.. எனக்கு பிருந்தா பிருந்தா னு ஒரு கோபக்காரஅழகானபிரெண்ட் இருக்கா.. அவ தான் கத்து குடுத்தா?”
பிருந்தாசிரிப்பைஅடக்கிக் கொண்டு மௌனம் சாதித்தாள், ஆனால் பிருந்தாவின் மனநிலையை புரிந்துக் கொண்ட மாலினி சமாதானத்தை விட்டுவிட்டு, “ஆமா எதுக்கு போன் பண்ண?”
“இப்பவாது கேட்கணும் தோனுச்சே”
“ஏய்”
“சேகர் உன்னிடம் பேசணும் னு சொன்னான்”
“அவன் எதுக்கு? அவனை நீ எங்க பார்த்த?”
“அவன் வீட்டில் தான் பார்த்தேன்.. உன் நம்பர் கேட்டான்.. நான் குடுக்க யோசித்தேன்.. ‘சிஸ்டரிடம் கேட்டுட்டே குடு.. இல்லை உன் நம்பரில் இருந்தே பேசுறேன்’ னு சொன்னான்”
“ஓ.. ஆமா நீ எதுக்கு அவன் வீட்டுக்கு போன?”
“அதை அவனிடமே கேட்டுகோ”
சிறிது யோசித்த மாலினி, “ஹே லூசு.. ஸ்ரீராம் பத்தி எதுவும் சொன்னியா?”
பிருந்தா கோபமாக, “நானா லூசு.. நீ தான் லூசு.. அந்த நாதாரியை ஏன் டி காப்பாத்துற? (மாலினிஏதோசொல்ல வர.. அதை பொருட் படுத்தாமல் பிருந்தாதொடர்ந்தாள்) எப்ப கேட்டாலும் இப்ப எதுவும்பேசாதனே சொல்லிட்டு இருந்தியே… இப்ப சொல்லு, எதுக்கு………..”
மாலினி சற்று குரலை உயர்த்தி, “பிருந்தா.. என்னை பேச விடு” என்றதும் தான் பிருந்தா அமைதியானாள் ஆனால் கோபம் அப்படியே இருந்தது.
மாலினி, “சேகர் கிட்ட என்ன சொன்ன?”
“நான் ஒன்னும் சொல்லலை.. நான் சொல்றதுக்கு முன்னாடியே எட்டப்பன் வேலையை செஞ்சது அந்த நாதாரி தான் னு அவனுக்கும் சிவாக்கும் தெரிஞ்சிருக்கு”
“எப்படி?”
“அதை அவன்களிடமே கேட்டுக்கோ.. இப்ப நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”
“நீ என்ன சொன்ன? சேகர் என்ன சொன்னான்?”
“சேகர் உன் தம்பி தங்க கம்பியாச்சே.. உனக்கு தான் சப்போர்ட் பண்ணான்.. சிவா குரங்கு தான் சும்மா இல்லாம என்னை கிண்டல் பண்ணிட்டு இருந்துது”
“சிவாவும் அங்க தான் இருந்தானா?”
“ஆமா இருந்தான்.. இப்ப நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்ல போறியா இல்லையா?”
“நீ என்ன நடந்துது னு முழுசா சொல்லு”
“மாலு ஏற்கனவே நான் கோபத்துல இருக்கிறேன்.. ஒழுங்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”
“…”
“…”
மாலினி, “ஓகே.. சொல்றேன்.. நான் ஸ்ரீராமை காப்பாத்த ட்ரை பண்ணலை.. செல்வா ரொம்ப கோபமா இருக்கான்.. நான் தான் போட்டு குடுத்துட்டேன் னு என் மேல் கோபமா இருக்கான், நான் பொண்ணு னு சும்மா இருக்கான், இதுவே பண்ணது ஸ்ரீராம் தான் னு தெரிஞ்சுது ஸ்ரீராமை அடி பிச்சுடுவான்”
“எனக்கு அது தானே வேணும்….”
“ச்ச்..லூசு தனமா பேசாத பிருந்தா..”
“ஏய்.. நீ ஏன் டி………..”
“வெயிட்.. நான் சொல்லி முடிச்சிக்கிறேன்.. நான் ஸ்ரீராமை காப்பாத்தலை.. செல்வா ஸ்ரீராமை அடிச்சா ஸ்டாஃப்க்கு செல்வா மேல் ரொம்ப டவுட் வரும்,ஸ்ரீராமே கோபத்துல செல்வாவைமாட்டிவிடலாம்.. இப்படி நிறைய இருக்குது.. அது புரியாம தாம் தூம் னு சும்மா குதிக்காத…….”
“நான் எதுவும் உளறலை.. உன் தம்பி தங்க கம்பி உன்னை கேட்காம எதுவும் செய்ய மாட்டான்.. சிவா எதுவும் சொல்லலை.. நீ என்னை அடக்குவது போல் உன் தொம்பி சிவாவை அடக்குவான்.. நீயே அவன கிட்ட பேசிக்கோ.. இதான் அவன் நம்பர் ********** என்னை ஆளை விடு…”
பிருந்தா பொரிந்த விதத்தில் மாலினிக்கு சிரிப்பு வந்தது.
“போடி கரெக்ஷன் சிங்காரி”என்று கூறி வழக்கம் போல் தனது நாடியை இடது பக்க தோள்ப்பட்டையில் இடித்தாள். மாலினி வாய்விட்டு சிரித்தாள்.
பிருந்தா பல்லைக் கடித்துக் கொண்டு, “இப்ப எதுக்கு டி சிரிக்குற?”
“உன் ரியாக்சன் நினைத்துப் பார்த்தேன்.. சிப்பு வந்துருச்சு சிப்பு” என்று வடிவேலுவைப் போல் கூறினாள்.
“உனக்கு போய் போன் பண்ணேன் பாரு…….”
“நானா பண்ண சொன்னேன்?”
“போடி” என்று கோபமாக அழைப்பை துண்டித்தாள். அவள் அழைப்பை துண்டித்த மறு நிமிடம் மாலினியிடம் இருந்து, “கூல் பேபி.. இப்போ நிறைய வேலைகள் இருக்கிறது.. அப்பறம் கூப்பிடுறேன்.. பாய்” என்ற குறுச்செய்தி வந்தது.
அதை தொடர்ந்து புது எண்ணில் இருந்து,
“person1 – ரெண்டு யானை கரும்பு தோட்டத்துக்கு போச்சாம்.. ஒரு யானை மட்டும் கரும்பை சாப்பிடலையாம்.. ஏன்?
person2 – அதுக்கு பிடிக்காதாஇருக்கும்
person1 – யானைக்கு கரும்பு பிடிக்காம இருக்குமா!
person2 – அதானே.. அப்போ ஏன் சாப்பிடலை.. ஹம்..அதுகாவலுக்கு நின்னுட்டு இருந்துருக்கும்
person1 – இல்லை
person2 – தெரியலை நீயே சொல்லு
person1 – அது சுகர் பேஷன்ட்.. அதான்.. ஹா..ஹா.ஹா” என்ற குறுஞ்செய்தி வந்தது.
இந்த குறுஞ்செய்தியில் இருந்தே அனுப்பியது யாரென்று யூகித்து இருப்பீர்களே.. ஆம் அனுப்பியது வேறு யாருமில்லை, நம்ம சிவகுருவே தான்.
[சிவகுருவுக்கு எப்படி பிருந்தா நம்பர் தெரியும் என்று யோசிக்கிறீங்களா! பிருந்தா ராஜசேகர் வீட்டைவிட்டு கிளம்பும் போது அவனது நம்பரை வாங்கிவிட்டு தன் நம்பரை அவனிடம் கொடுத்து விட்டு வந்தாள். சிவகுரு ராஜசேகரிடம் இருந்து பிருந்தா நம்பரை வாங்கிக் கொண்டான்]
ஏற்கனவே கோபத்தில் இருந்த பிருந்தா இந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் கோபத்தின் உச்சிக்கே சென்றாள். பிருந்தாவும் அனுப்பியது யார் என்று கண்டுபிடித்து விட்டாள். கோபத்துடன் அந்த எண்னை அழைத்தாள்.
“ஐ மீன்.. நீ என்குவரிக்கு போனதும் உன்னை பத்தி மோனி கவலை பட்டா.. H.O.D உன்னை எதுவும் செஞ்சிருவாரோ னு பயந்து செல்வா தான் செஞ்சான் னு H.O.D கிட்ட சொல்லிரட்டா னு கேட்டா?”
[செல்வராஜ் சொல்லிருப்பானோ என்பது ஆர்லியின் யூகம். அன்று கன்டீனில் நடந்தது, பிறகு ஷங்கர் மோகனாவை சமாதானம் செய்ததை பற்றி பிருந்தா மூலம் அறிந்திருந்தாள் ஆர்லி.. அதை சரியான விதத்தில் தற்போது பயன் படுத்தினாள்.]
“வாட்?”
“அதான்.. நான் அப்படி சொல்லாத.. சொன்னா மாலினிக்கு தான் பிரச்சனை னு சொன்னேன்”
“பட் செல்வா செஞ்சான் னு யார் சொன்னா?”
“அன்னைக்குகிளாஸ்ஸில் நடந்ததைபிருந்தா சொன்னாளே”
“செல்வா என் மேல் கோப பட்டான்.. பட் யார் சொன்னா னு தெரியாதே.. அவன் கோபத்தை வச்சு அவன் தான் சொன்னான் னு சொல்ல முடியாதே”
ஆர்லி குழம்பினாள். மனதினுள் ‘செல்வா சொல்லலையா? அப்போ யாரு?’ என்று யோசித்தவள் மாலினி தன் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து, ‘மோனி எக்கு தப்பா உளறலை போல, இப்படியே கண்டின்யு பண்ணு ஆர்லி’ என்று மீண்டும் மனதினுள் சொல்லிக் கொண்டு மாலினியிடம், “அது எனக்கு தெரியாது.. மோனி இப்படி தான் சொன்னா”
மாலினி யோசித்தாள். ஆர்லி அவளை யோசிக்க விடாமல், “செல்வா சொல்லலையா மாலு?” என்று வினவினாள்.
மாலினி, “எனக்கு தெரியாது… இப்ப அதுவா முக்கியம்?”
“என்ன மாலு இப்படி சொல்ற?”
“ஏன்?”
“கிளாஸ்ஸில் ஹாட்டாப்பிக்அது தானே..”
“ச்ச்.. இப்ப மோனி பிரச்னைக்குவா”
அறியா பிள்ளையை போல் ஆர்லி, “மோனி பிரச்சனையா? மோனிக்கு என்ன பிரச்சனை?” என்று வினவினாள்.
“பிரச்சனைன்னு இல்லை பட் ஷீ இஸ் நாட் வெல்..எதையோநினைச்சு பயந்துட்டு இருக்கா..பீவரில் புலம்புறா.. உன் பெயரை தான் சொன்னா”
ஆர்லி மனதினுள் மோகனாவை திட்டித் தீர்த்தாள். பிறகு மாலினியிடம், “அச்சோ.. இப்ப எப்படி இருக்கா?”
“இப்ப ஓகே.. நீ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு”
“அதான் சொல்லிட்டேனே!”
“முழுசா சொல்லலையே!”
ஆர்லி திடுகிட்டாள், “என்ன மாலு.. நான் தான் சொல்லிட்டேனே!” என்று கம்மியானகுரலில் கூறினாள்.
“ஹ்ம்ம்.. இல்லையே! எதையோ மறைக்கிறியோ னு தோணுது”
ஆர்லி தன் பயத்தையும், கலக்கத்தையும் மறைத்து,“என்ன மாலு ரவி சார் என்குவரி பண்ணது போல் பண்ற?”
“நீ அப்படி நடந்துக்கிறியே!”
ஆர்லி சிந்தித்தாள், ‘ஆர்லி.. இவளை இப்படிலாம் டீல் பண்ண முடியாது.. பயந்த வேலைக்கே ஆகாது.. கோபப்படு.. அப்போ தான் உன் மேல் தப்பு இல்லை னு தோணும்’ என்று மனதினுள் கூறிக்கொண்டு, “லுக் மாலு.. யூ ஆர் இன்சல்டிங் மீ.. நான் பொய் சொல்லலை.. தட்ஸ் ஆல்”
“நீ ஏன் கோபப்படுற?”
“தப்பு செய்யாதவங்க மேல் பழி போட்டால் கோபம் தான் வரும்”
“தப்பு செஞ்சவங்களும் தன் தப்பை மறைக்க அடுத்தவங்க மேல் கோபப் படுவாங்க”
“நான் ஏன் பொய் சொல்ல போறேன்?”
“அது தான் எனக்கும் தெரியலை”
“ஓகே.. எதை வைத்து நான் பொய் சொல்றேன் னு சொல்ற?”
“நீ பொய் சொல்ற னு சொல்லலை, (ஆர்லி நிம்மதி மூச்சு விட அடுத்த நொடியேஅதுபறந்தது), பட் எதையோ மறைக்கிற..”
“எதை வைத்து சொல்ற?”
“நீ பிரியா மேம் விஷயத்தை பத்தி மட்டும் தான் மோனி கிட்ட பேசுனியா?” என்று மாலினியின் கேள்வி கூர்மையாக வந்தது, ஆர்லி மோகனா என்ன சொன்னாளோஎன்று தயங்கினாள், ஆனால் அசராமல், “எஸ்” என்றாள்.
“பிரியா மேம் விஷயத்திற்கும் ஷங்கருக்கும் என்ன சம்பம்தம்?”
“என்ன.. என்ன சம்பந்தம்?”
“அதை நீ தான் சொல்லணும்”
ஆர்லி முகம் வேர்த்தது, மாலினி மட்டும் நேரில் பேசியிருந்தால் இதை வைத்தே உண்மையை கண்டு பிடித்திருப்பாள், ஆனால் அவள் தான் ஆர்லியின் முகத்தை பார்க்க முடியாதே!
“..”
“என்ன? எதை என்னிடமிருந்து மறைக்க முயற்சிக்கிற?”
“நான் எதையும் மறைக்கலை”
“அப்போ பதில் சொல்லு”
“…”
“என்ன அமைதியாகிட்ட?” என்று மாலினியின் குரல் வேகமாக மிக கூர்மையாக வரவும் ஆர்லி தன்னையும் அறியாமல், “யோசிக்கிறேன்” என்றாள்.
மாலினி, “என்ன பொய் சொல்லலாம் னு யோசிக்கிறியா?”
“ஹம்.. நோ..நோ”
“தென்?”
“ஷங்கர் பத்தி என்ன பேசினோம் னு யோசித்தேன்”
“இதில் யோசிக்க என்ன இருக்கு?”
“ஹ்ம்ம்.. நீ தான் என்குவரி செஸ்ஸன் மாதிரி குவெஸ்டின் மேல் குவெஸ்டினா கேட்கிறியே”
“நீ தானே கேட்க வைக்கிற”
“மாலினி நீ தேவை இல்லாம என்னை சந்தேகப் படுற, யூ ஆர் ஹர்டிங் மீ”
“நோ யூ ஆர் ஹர்டிங் மோனி”
“மாலினி”
“ஆர்லி, கத்தாம உண்மையை சொல்லு”
“இதோ பார் மாலினி, ஷங்கர் மோனி கிட்ட என்ன பேசினான் னு எனக்கு தெரியாது, மோனி கிட்ட நான் H.O.D கிட்ட செல்வா பத்தி பேசாத னு சொன்னதும், ஷங்கர் கிட்ட சொல்லட்டா னு கேட்டா.. நான் யார் கிட்டயும் சொல்லாத.. இத பத்தியே பேசாத, அப்பறம் மாலுக்குதான் ப்ராப்லம் வரும், செல்வா மாலினிய ஏதாவது செஞ்சாலும் செஞ்சுருவான் னு சொன்னேன்..
போது மா.. உனக்காக சொன்னேன் பாரு என்னை சொல்லணும்..
உனக்காக நான் சொன்னா என்னையே நீ சந்தேகப் படுற..
தேங்க்ஸ் மாலினி.. தேங்க்ஸ் அ லாட்..” என்று ஆர்லி ஆவேசமாக பேசவும் மாலினி சற்று குழம்பினாள்.
ஆர்லி, “என்ன அமைதியா இருக்க?”
“ஹ்ம்ம்..” மாலினி யோசித்தாள். மோகனாவின் புலம்பலும் ஆர்லியின் விளக்கமும் ஒத்து போவது போல் தான் தோன்றியது அவளுக்கு, ஆனால் ஏதோ ஒன்று அவள் மனதை உறுத்தியது ஆனால் என்வென்று அவளால் அறிய முடியவில்லை.
மாலினி மோகனாவின் புலம்பலை மீண்டும் நினைத்து பார்த்தாள்..
‘ஷங்கர் நல்லவன்.. ஷங்கர் அப்படி செய்ய மாட்டான்.. அப்படி சொல்லாத ஆர்லி, அப்படி சொல்லாத..பொய் சொல்றது அம்மாக்கு பிடிக்காது.. ஐயோ வேணாம்.. மாலு பாவம்.. நிஜமா மாலு என் பிரெண்ட்.. ஓகே நான் சொல்லலை.. செல்வா மாலுவை அடிக்க மாட்டான் தானே.. ஆர்லி நீ சொன்ன படியே கேட்கிறேன்.. ஆர்லி மாலுக்கு ஒன்னும் ஆகாது தானே’
ஆர்லி, “மாலினி.. என்ன அமைதியாகிட்ட?”
“நீ என்னவோ சொல்லியிருக்க ஆர்லி.. உண்மையை சொல்லு………………”
ஆர்லி குரலை உயர்த்தி, “மாலினி நான் உண்மையை தான் சொல்றேன்”
ஆர்லி கோபமாக(மோகனா மேல் உண்டான கோபமும், மாலினியின் கேள்விகளால் வந்த எரிச்சலும் சேர்ந்து உண்மையாகவே ஆர்லிக்கு கோபம் வந்தது),
“இதோ பார் மாலினி மோனி ஏதேதோ பினாத்தினதுக்குலாம் என்னால விளக்கம் குடுத்துட்டு இருக்க முடியாது..”
மாலினிக்கு இப்பொழுது கோபம் வந்தது, “ஆர்லி உண்மையை சொல்லு”
“ஷிட்.. மாலினி நீ என்னை டார்ச்சர் பண்ற”
“உண்மையான பதிலை சொல்லாமல் நீ தான் டார்ச்சர் பண்ற”
ஆர்லி அழைப்பை துண்டித்தாள். மாலினி உடனே அழைத்தாள், ஆர்லி எடுக்கவில்லை. மாலினி தந்தை எண்ணில் இருந்து அழைத்தாள். ஆர்லி எடுத்ததும் மாலினி, “ஆர்லி உண்மையை சொல்ல போறியா இல்லையா?”
“…”
“ஆர்லி மோனி ஹெல்த்தில் விளையாடாதே”
“மாலினி.. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. நம்புறதும் நம்பாததும் உன் இஷ்டம்..இனி உனக்கும் எனக்கும் பேச்சில்லை.. குட் பாய்” என்று கூறி அழைப்பை துண்டித்தாள்.
இனி ஆர்லி தன் அழைப்பை எடுக்க மாட்டாள் என்று தெரிந்ததால் மாலினி அவளை மீண்டும் அழைக்கவில்லை.
மாலினிக்கு தன் மேலேயே கோபம் வந்தது. தன் தோழியின் பயத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லையே என்று கோபம், மோகனாவை தான் கவனிக்காமல் விட்டுவிட்டேனே என்று கோபம், இறுதியாக மோகனாவின் நிலைமைக்கு தான் தான் காரணம் என்று தன் மேலேயே அவளுக்கு கோபம் வந்தது.
மாலினி கோபமும் எரிச்சலும் கூடியது, என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் அறையை விட்டு வெளியேறினாள், ஹாலில் அருணாசலம் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார். மாலினி தந்தையின் மடியில் தலை வைத்து சோபாவில் படுத்து கண்ணை மூடிக் கொண்டாள்.
அருணாசலம் சிறு புன்னகையுடன் மகளின் தலையை வருடியபடி தொலைகாட்சியில் கவனத்தை செலுத்தினார்.
பத்து நிமிடங்கள் கழித்து, “லிட்டில் டார்லிங்க்கு மைன்ட் ரிலாக்ஸ் ஆகிருச்சா? என்ன பிரச்சனை னு நான் தெரிஞ்சுக்கலாமா?”
மாலினி எழுந்து அமர்ந்தாள், மென்னகையுடன், “உன்னிடம் என்னவோ மஜிக் இருக்குது அருணா.. எவளோ கோபமா வந்து படுத்தேன் தெரியுமா?”
“ஹ்ம்ம்.. நான் பார்த்துக்கிறேன் பா” என்று எழுந்து சென்றாள்.
அருணாசலம், “மாலு என் மொபைல்”
“அதுக்கு இன்னும் கொஞ்சம் வேலை இருக்குது?”
“என்ன வேலையோ!”
“சே…….” என்று ஆரம்பித்தவள் அன்னை வருவதை பார்த்துவிட்டு குறும்புடன் அன்னையை ஓரப் பார்வை பார்த்து விட்டு தந்தையிடம், “அதுவா என் பாய்-பிரெண்ட் கிட்ட பேச போறேன்” என்று கூறி கண்சிமிட்டினாள்.
புஷ்பா, “ஏய்………….” என்று வசைபாட்டை ஆரம்பிக்கவும் தன் அறைகதவை மூடிவிட்டு உள்ளே ஓடினாள்.
புஷ்பா கணவன் மீது உஷ்ண பார்வையை வீசினார், அருணாசலமோ எதுவும் தெரியாதது போல் தொலைகாட்சியில் வந்த செய்தியை தீவரமாக கவனிப்பது போல் பாவனை செய்தார்.
மாலினி ஆர்லியின் மிரட்டலை கண்டு பிடிப்பாளா? கண்டு பிடித்து தன் தோழியின் மன வேதனையை போக்குவாளா? ஷங்கரின் செயலை மாலினி அறியும் போது ஷங்கரின் நிலை? மோகனா அடுத்து கல்லூரிக்கு செல்லும் போது ஷங்கரிடம் பேசுவாளா? – பொறுத்திருந்து பார்ப்போம்…………..