“குறை சொல்லனுமேன்னு விக்ராவை சொல்லாதீங்கண்ணே, அவனை நீங்க மட்டும் தான் குறை சொல்லிட்டு கிடக்கீக. வீராவோ விக்ராவோ, எம் மவ இந்த வீட்டு மருமவளானாலே போதும் எனக்கு” சமரசுவிடம் கூறிவிட்டு, நாச்சியின் கையை பிடித்து தன் கைக்குள் வைத்து “எங்க எம்மேல இருக்குற கோபத்தில் சம்பந்தம் வேணாமுனு சொல்லுவீங்களோனு வெசனப்பட்டுடேன் மயினி” பிடித்த கையை விடுத்து, கலங்கும் கண்களை மறைத்து,

“உன் புருஷன் வரவும் ஒத்த போனை போடுடுடி, மாப்ளை வீட்டுகாரக நாங்க வரோம், பரிசம் போட” உரிமையாய் சொன்ன நாச்சியை பார்த்தபடி, “ரொம்ப சந்தோஷம் மயினி.. இனி நிம்மதியா இருப்பேன் நான் வரேன் மயினி” என சொல்ல

“உக்காருடி, காபி தண்ணி கொண்டாரேன்.. குடிச்சிட்டு போ” என சூழ்நிலையை இன்னுமே இலகுவாக்கினார் நாச்சி. அவர் சமையலறைக்குள் சென்றுவிட, மீனாவோ சந்தோஷமாய் சமரசுவிடம் பேச துவங்கிவிட்டார்.

ஆனால் இந்த சில நிமிடங்களுக்குள்ளாகவோ நிம்மதியை மொத்தமாய் தொலைத்த விக்ராவோ ‘ம்ஹூம், தாடியை இனி நம்பி பயனில்லை, நம்ப காதல்ல  ஒரு டேங்கர் லாரி பெட்ரோல் ஊத்தி இருந்த இடமே தெரியாம அழிச்சிடுவாரு.. சாட்சிகாரனை விட சண்டை காரன் தான் பெஸ்ட்.. ம்ஹூம், இல்லையில்லை நமக்கு நம்ப சண்டை கோழி தான் பெஸ்ட்டு’ என நைசாய் அவ்விடம் விட்டு விலகி, லாவா இருந்த அறைக்குள் நுழைந்தான்.

அங்கே மீனாவிற்கு பயந்து அறைக்குள் ஒதுங்கி இருந்தவளின் காதுகளிலும் அத்தனை பேச்சுகளும் வந்து விழுந்ததில் “என்ன? கல்யாணமா? வீராவிற்கும் தனக்குமா?” என குழப்பத்தின் உச்சியில் நின்றிருந்தாள் லாவா.

இவன் உள்ளே வந்து கதவை தாழிட்டதில் திகைத்து அதுவும் முழு உயரத்துடன் நிமிர்ந்து நின்றிருந்தவனை பார்த்து திடுக்கிட்டு விழித்து, “ஏன்.. ஏன்.. கதவை பூட்ற” என திறப்பதற்காக கதவின் அருகே வர, அவளது கை பிடித்து இழுத்து தன் முன்னே நிறுத்தி

“வெளியில் பேசின எல்லாமே உன் காதில் விழுந்திருக்கும் தானே. உன் முடிவென்ன? தெரிஞ்சுக்கலாமா?” அழுத்தமான பார்வை கொண்டு நேரடியாகவே கேட்டான்.

அவனின் அவசரமும், பதட்டமும் இவளுக்கு அத்தனை குதூகலத்தை வாரியிறைத்தது. இதழ்களுக்குள் அடக்கப்பட்ட புன்னகையோடு “உங்கப்பாவோட முடிவு தான் என் முடிவும்” நக்கலாய் கூற

ஒரு நொடி பேச்சே நின்றது அவனிடம் பின், “ஏண்டி, நீ நியாயமாவே பேச மாட்டியா? உங்கப்பனை சொன்னா கூட ஒரு நியாயம் இருக்கு.. ஆனா நீ எங்கப்பனை சொல்றடி”  எரிச்சலானான் இவன்.

“மிலிட்டரியவிட, என் தாய் மாமான் தானே எனக்கு சாதகமா முடிவெடுக்குறாரு அதனால தான்” இவள் கடுப்பாக்க

‘ஸப்பா… சாவடிக்கிறாளே’ நறநறவென பற்களை கடித்தவன் “எது எப்படி இருந்தாலும் உன் முடிவுக்கு தான் இங்கே முன்னுரிமை. அத்தையோ மாமாவோ, யார் உங்கிட்ட கேட்டாலும்..” என இவன் முடிக்க முன்

“வீரா அத்தானையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிடுவேன்” விட்டதை இவள் முடிக்க..

சுர்ரென என நாடி நரம்பெங்கும் கோபம் ஊற்றெடுக்க, “அவனை அத்தான் சொல்லாத” பல்லை கடித்தான் இவன்.

“நம்ப கட்டுல கட்டிக்க போறவனை அத்தான்னு தானே சொல்லி கூப்பிடனும், அப்போ வீரா எனக்கு இனிமேல் அத்தான் தானே”

“அவனை அத்தான் சொன்ன கொன்னுடுவேன்டி” கழுத்தை பெயருக்கு பிடித்து “எனக்கு பொறுமை ரொம்ப கம்மி.. சீண்டாத” எனவும்

“ஆமாமாம் பொறுக்கிக்கு பொறுமை கம்மியா தான் இருக்கும்” அவன் விரல்கள் கழுத்தை நெறிக்காததில் சிறிதும் பயமில்லை அவள் முகத்தில்

“கட்டுன பொண்டாட்டிகிட்ட தானே பொறுக்கி வேலையெல்லாம் பார்க்க முடியும். ஆமான்டி நான் பொறுக்கி தான்” கழுத்தை விட்டவன் கை சரசரவென அழுத்தமாய் ஊர்ந்து சில இடங்களில் நின்று நிதானமாய் கீழிறங்கியதில், பதறிப்போய் இவள் அவனை பிடித்து தடுக்க, அதை எளிதாய் முறியடித்தவனோ, அவன் விழி காட்டிய பயத்தில், அவளது உடுக்கை இடுப்போடு உடும்பு பிடியோடு நிறுத்தி கொண்டான் பயணத்தை.

அதுவரை இருந்த விளையாட்டு தனம் விடைபெற, “வி..க்ரா.. என்ன பண்ற நீ” தந்தியடித்தது இவள் இதழ்கள்.

இறுக்கமான கைகள், தீயென கனன்ற அவனது விழிகள் இவளுக்கு முற்றும் புதிது. திமிறி விலகியவளை இன்னும் இறுக்கி வளைத்து பிடித்து “உனக்கு இன்னைக்கு சொல்றது தான், ஓயாம சொல்லிட்டே திரிய முடியாது, என்னை தவிர எவனுக்காவது கழுத்தை நீட்டுன, நீட்டுறதுக்கு கழுத்து இருக்காது நியாபகம் வச்சுக்கோ” என உறுமினான்.

அவனது இந்த புதிய கோப முகம், அவளை படபடக்கச் செய்தது. இதுவரை அவளது பயந்த விழிகளை கண்டு விலகி விலகி போனவனுக்கு, முதல் முறையாய், எத்தனை பயந்தாலும் விலகி போக கூடாது, இவளை விட்டு விலகவே கூடாது என மனம் உறுதியாய் நின்றது.

எண்ணங்களின் ஓட்டத்தில் அவன் கைகளின் இறுக்கம் தளர, அதை சரியாய் உபயோகபடுத்தி அவன் கைகளில் இருந்து விலகி ஓட, ஒரே எட்டில் தடுத்து பிடித்து

“உங்கம்மா இன்னும் கிளம்பல.. ஹாலில் தான் இன்னும் இருக்காங்க, வீணா நீயா போய் சிக்கிக்காத” என அவளையும் இழுத்து கொண்டு கட்டிலில் அமர, பூட்டிய அறையும், அறைக்குள் இவனது செய்கையும் சேர்ந்து நன்றாகவே கிலியை மூட்டியது இவளுள்.

எள்ளும் கொள்ளும் வெடித்த அவளது அந்த கடுகடு முகத்தை பார்த்தவனுக்கோ, சிறு கீற்றாய் புன்னகை இவனுள் ஓடி மறைந்தது.

இதுவரை அடித்து, கிள்ளி, ஏறி மிதித்து கோபத்தை வெளிப்படுத்தியவளை தான் தெரியும். சில நேரங்களில் பற்தடம் பதிய கூட கடித்து இருக்கிறாள்.

ஆனால் தனக்கு பயந்து இப்படி கோபத்தை விழுங்கி நிற்கும் இவள் இவனுக்கு மிக மிக புதிதாய் தான் தெரிந்தாள்.

அதுவும் இந்த சில மணிநேரங்களுக்குள்ளாக, அனுமதியின்றி இதழை சுவைத்து, தேகம் அணைத்து, கழுத்தை நெறித்து, நெருக்கமாய்  அதன் கீழும் கைகள் பயணித்து… ‘உப்..’ பெரிதாய் இதழ் குவித்து ஊதி “அடேய் விக்ரா இத்தனை வேலை பார்த்தும், அடி கடி மிதி வாங்காமல் இருக்கிற.. எங்கையோ மச்சம் இருக்குடா உனக்கு” வெளியே கோபம் குறையாத போதும் உள்ளுக்குள் அவளுடனான நெருக்கம் இனித்தது.

“இவ கிட்ட இருந்தா என்னை கன்ட்ரோல் பண்ணவே முடியலையே..  சண்டைக்கோழி மயக்கிட்டா” முனுமுனுவென பேசியவனுக்கு, அவனையே அடக்கும் வழியறியாது, அவள் விரல் பிடித்து விருட்டென இழுத்து கொண்டு கட்டிலில் சாய, அவன் மேல் மொத்தமாய் விழுந்து சாய்ந்தாள் லாவண்யா.

“விட்ரா.. விட்டு தொலைடா, ரூமுக்குள்ள போட்டு அடைச்சுவச்சிட்டு இப்படி அராஜகம் பண்ற?” துள்ளி திமிறி “அடிச்சா அடக்குற, கத்துனா முத்தம் கொடுக்குற.. என்னை என்ன தான் பண்ண சொல்ற..?” விடுபட முயன்றவளை பிரட்டி தள்ளி “அமைதியா இருந்திடு அது தான் உனக்கும் உன் உடம்புக்கும் நல்லது” சீண்டியவனை ‘சப்பென’ அறைந்திருந்தாள் லாவா.

அதற்கும் சளைக்காதவன், பிடியை இன்னும் இறுக்கி, அவளை ஆழ்ந்து பார்த்தான்

“அடிக்கனுமா? அடி, இல்லை நான் பண்ற வேலையெல்லாம் பிடிக்கலேயா, கொன்னுடு!  கையில என்ன கிடைக்குதோ அதை வச்சு வெட்டி கொன்னு போட்டுடு”  அடிகுரலில் பேசியவனை அதிர்வோடு தான் பார்த்தான்.

அவனது அந்த நிஜமான வார்த்தைகள் கொடுத்த அர்த்தம் அவளை ஏதோ செய்தது. இடையில் இருந்த ஒரு கையை எடுத்து அவளது விரல்கள் பிடித்து தன் கன்னத்தில் வைத்து “ஆனால் இந்த கையால தான் அடிக்கனும், ஆள் வச்செல்லாம் வேணாம்டி வலி தாங்க மாட்டேன். கொலை கூட பண்ணு வேணாம்னு நான் தடுக்கலையே, உனக்கு என்ன இஷ்டமோ செஞ்சுக்கோ” சொல்லி முடிக்கையில், ஆழ்ந்த மௌனம் அவளிடம்.

அவள் அமைதி அவனை இன்னுமே மயக்க “ஓய், சண்டை கோழி.. இத்தனை வருஷமா இல்லாமல் இந்த இரண்டு நாளா என்னை என்னமோ பண்ணிட்டடி நீ” முதல் வார்த்தைகள் வெளி வந்தாலும், கடைசி வார்த்தைகள் இறங்கியது என்னவோ லாவாவின் இதழ்களுக்குள் தான்.

மீண்டும் ஒரு வர்ணஜாலம் அவனுக்குள் நிகழ்ந்தது. திகட்டாத முத்தம் அவனுக்கு தித்திக்க, அவளையோ திணறடித்தது.

 சில பல நிமிடங்களின் பின் “ஆ..” வென அலறிக்கொண்டு விலகி அமர்ந்த விக்ரா, இரத்தம் துளிர்த்த இதழை இழுத்து கீழ்கண்ணால் நோக்கி “ஏண்டி கடிச்சு வச்ச” என இழுக்க

“அடுத்த முறை கிட்ட வந்த.. செருப்பால..” இம்முறை இவளது வார்த்தைகள் முடிக்கும் முன் “தாரளமா அடிச்சுக்கோ, ஆனால் அதுக்கு முன்னாடி” என விழிகளை விட்டு இதழ் நோக்கியவன் மீண்டும் புதைந்து கொண்டான் அவள் இதழ்களுக்குள்.

‘இவனுக்கு கடி பத்தாது என இன்னும் இன்னும் கடித்து வைக்க, அவளுக்காக வாகாய் முகத்தை கொடுத்து நின்றிருந்தான் விக்ரா.

ஒரு கட்டத்தில் தான் தான் அவனை கடித்து கொண்டிருக்கிறோம், அவன் அவளை ஒன்றுமே செய்யாதது தாமதமாய் உறைக்க, சட்டென அவனை பிரிந்து நின்றாள்.

இன்னும் அதிகமாய் இரத்தம் கசிந்த இதழலோடு,  கண் மூடி அனுபவித்து நின்றிருந்தவனிடம் படிந்தது பார்வை.

“இரத்தம் வர கடிச்சிருக்கேன், இவனென்ன இப்படி அனுபவிச்சிட்டிருக்கான்” அதிர்ந்து நின்றது ஓர் நொடி தான், ‘லாவா ஓடிடு’ என மனம் விழித்து கொள்ள, விக்ரா சுதாரிக்கும் முன் கதவை திறந்து அங்கே கூடத்தில் தன் அன்னை இல்லை என உணர்ந்து அங்கிருந்து ஓட்டமெடுத்திருந்தாள்.

கதவு திறக்கும் சத்தத்தில் தன்நிலை மீண்டவன் இதழில் வலிக்கு மாறாய் மகிழ்ச்சி ஊற்று.

நேற்றைய காதல் போர் இன்று முடிவுக்கு வந்தது போல். எப்படியும் தன்னை ஏற்றுக்கொள்வாள் எனும் நம்பிக்கை பிறந்தது.