அப்படி பார்த்து கொண்டிருந்தவனின் விழிகள் லாவா அழுக்கு கூடையில் தேட துவங்க, “ஐய்யய்யோ அழுக்கு கூடையில தேடுறாளே, பாட்டிலை பார்த்தா, இருக்குற கோபத்துக்கு சமரசுகிட்ட போட்டு கொடுத்துருவாளே” நேற்று இரவு மறைத்து வைத்த பாட்டிலை தேடி பாய்ந்தோடினான் லாவாவிடம்.
அழுக்கு கூடையை இழுத்து தன் புறம் வைத்தபடி, “அதுக்குள்ள பூனை இல்ல” என வேறு பக்கம் பார்க்க
அதில் மேலும் சந்தேகம் வலுக்க “செக் பண்ணின பிறகு அதை நான் சொல்றேன். குட்ரா கூடையை” என கூடைப்பக்கம் நகர, இவனோ அவளிடம் இருந்து வேறு பக்கம் நகர்த்தினான்.
“நீ பண்றதெல்லாம் பார்த்தா பூனைய கூடைக்குள்ள தான் வச்சிருக்க மரியாதையா கொடுத்துரு” என இவள் அவன் பின்னும் கூடையின் பின்னுமாய் நகர,
அவளிடம் கொடுக்காமல் போக்கு காட்டியவனோ “அதுக்குள்ள இல்லை சொன்னா கேளு..” இவளிடம் கூடை மாட்டகூடாது என அங்கே இங்கே என நகர்த்தி நகர்த்தி அவளை படுத்திகொண்டு இருந்தான் விக்ரா.
ஒரு கட்டத்தில் சோர்ந்து போனவள், “இப்போ நீ கூடைய கொடுக்கலை, நான் மாமாவை சத்தமா கூப்பிட்டு கத்துவேன்” இவள் மிரட்ட
இவள் செய்ய கூடியவள் தானே என பதறிப்போனவன், கூடையை தலைகீழாய் கொட்டி, உருண்டு சென்ற பாட்டிலை காட்டி “இதுவா பூனை” என அடிகுரலில் கத்த
பூனைக்கு பதிலாய் பாட்டிலை பார்த்து மேலும் குஷியாகிவிட்டாள் லாவா “இது பூனை கடத்தலை விட பெரிய குற்றமாச்சே” சமரசு, விக்ராவை அடித்து துவைப்பது போல் கற்பனைகள் ஓட, அவளது மைண்ட் வாய்ஸை அச்சு பிசாகமால் ரீட் பண்ணியவனோ
“அடியே.. மாட்டிவிட்றாதடி” என பாட்டிலை எடுத்து பத்திரபடுத்திவிட்டு பார்வையை நால்பக்கமும் சுழல விட்டான்.
“நீ சொல்லி நான் கேட்க மாட்டேன். லட்டு மாதிரி வாய்ப்பு கிடச்சிருக்கு. நான் உன்னை இன்னைக்கு மாட்டிவிடுவேண்டா, தாலியா கட்டுற தாலி” சத்தமாய் சபதம் எடுத்தவளை, இழுத்துகொண்டு அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து,
“ஏண்டி நீயும் நானும் பண்ணாத மொள்ளமாரிதனம் இருக்கா என்ன? ஏதோ நீ யோக்கியம் மாதிரி என்னை மாட்டிவிட பார்க்குற.. சாவடிச்சுடுவேன்” கைகள் இரண்டையும் கழுத்தை நெறிப்பது போல் கொண்டு வந்து இவன் மிரட்ட
“ம்ஹீம்..” என மறுத்து, கொண்டு வந்த கைகளால் கன்னமிரண்டையும் தாங்கி, அந்த அறையில் கிடந்த கட்டிலை காட்டி “சாவடிப்பேன்” என எக்குதப்பாய் பதில் கொடுத்தான்.
நுனி முடி முதல் அடி பாதம் வரை ஜிவ்வென ஓர் உணர்வு ஓடி மறைந்தது. ஆனால் அதன் முழு அர்த்தம் புரிந்தவளுக்கோ புசுபுசுவென கோபம் கிளர்ந்து எழ “உன்னை நேத்தைக்கே ஒரு வழி பண்ணிருக்கனும். பழகின பாவத்துக்கு விட்டேன்ல.. இருடா இன்னைக்கு உனக்கு ஆப்பு வைக்காமல் நான் போகமாட்டேன்டா” நேற்றைக்கும் சேர்த்து வைத்து எகிறியவள்,
“மா..மா” என கத்த எத்தனிக்க, கன்னத்தில் பதிந்திருந்த கைகள் பிடறிக்கு இடமாறி வேகமாய் இழுத்து அவள் உதடுகளை நச்சென கவ்விக்கொண்டான்.
முதல் மா மட்டுமே வெளிவந்திருக்க இரண்டாவது மா விக்ராவின் வாய்க்குள் பயணப்பட்டு வயிற்றை போய் அடைந்திருந்தது.
அவள் விழிகள் அகல விரிய, அந்த நீள் விழிகளுக்குள் அழகாய் விழுந்தபடி, அவளின் இதழ்களை மொத்தமாய் கொள்ளை கொண்டிருந்தான் அவன்.
‘ம்..ம்’ மறுப்பாய் எழுந்த மெலிதான சப்தங்களும் அவனது இசைக்கு தாளம் சேர்க்க, இனிதாய் துவங்கியது அவனது காதலாட்டம்.
தடுக்க வந்த அவள் கைகளும், மறுப்பை தெரிவித்த அவள் உடலும், வெறுப்பை உமிழ்ந்த அவள் இதழ்களும் மொத்தமாய் அவனுள் அடங்கி இருக்க, லேசாய் அசையக்கூட முடியவில்லை.
அவ்விதழ் முத்தம் அவனுக்கு போதாத போதும், இன்றைக்கு இவளுக்கு இதுவே அதிகமென தோன்றியதால் பட்டென அவளை விட்டுவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான். ஏதுமறியாதவனாய் மீண்டும் சோபாவிற்குள்ளேயே முடங்கிட, பெரிய பெரிய மூச்சுகளாய் எடுத்த லாவாவிற்கு தன்னை எப்படி நிதானபடுத்தி கொள்வது என தெரியாமல் விழி பிதுங்கி நின்றிருந்தாள் அறையின் வாசலில். விழிவிரித்து விக்ராவையே இவள் பார்த்திருக்க அவனோ பார்வையாலேயே விழுங்கி கொண்டிருந்தான் அவளை.
வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் தேடி களைப்புற்றவர்கள், “பூனைய காணவே காணோம்” என ஆளாளுக்கு கைகளை விரித்தபடி விக்ராவை முறைத்து கொண்டு நிற்க
மினியும் ஷினியும் கூட அவனருகில் வந்து நின்று ஏதேதோ சத்தம் கொடுக்க, இரண்டும் விக்ராவை தான் திட்டுகிறது என அத்தனைபேருக்கும் புரிந்தது.
“பூனைய தூக்குற அளவுக்கு அவ்வளவு மட்டமானவன் கிடையாதே இவன்” மனதினுள் நினைத்தபடி, “ஏலே, பூனையை கடத்திட்டியாலே” விக்ராவிடம் சங்கர் கேட்க
“ஆமாம்” இவன் லாவாவைவிட்டு இவனிடம் திரும்ப
“ஏம்லே.. இப்படி பண்ணுத” வீரா சலித்து கொள்ள
“இதோ அந்த மினியும் சனியும்” என இவன் துவங்க
“சனி இல்லை அது ஷினி” வீரா பற்களை கடிக்க
“எனக்கும் ஸ்கூபிக்கும் இது சனி தான். இதுகளை சும்மாவிட நான் என்ன சொம்பையா? கொஞ்சம் கதறருட்டும்” வில்லனானான் விக்ரா.
“அது உனக்கு என்ன பாவம் பண்ணிச்சு அதை போட்டு படுத்திட்டு இருக்க” இம்முறை செல்லம் கேட்க
“என்ன பாவம் பண்ணிச்சா, ஒன்னுக்கு நாழு கன்னிபயலுக இருக்குற இடத்துல, ஜோடியா சுத்தறது என்ன, ரொமன்ஸ் பண்ணதென்ன, கடைசி எக்ஸென்ட் வரை போய் மூனு புள்ளைய பெத்துகிறதென்ன. டெம்ப்ட் ஆக்குதுக” என விக்ரா கடுப்புடன் கூற
“லேய், அது என்னடா எக்ஸ்டென்டு, டெம்புட்டு” நாச்சி அதி முக்கிய கேள்வியை கேட்க
“வந்துட்டா சந்தேகத்துக்கு பெறந்தவ, ஏண்டி அவன் தான் கூறுகொட்ட தனமா பேசுனானா, நீயும் அதென்ன இதென்னன்னு நோண்டிக்கிட்டு, லேய் நீ இப்போ பூனைய கொடுக்கலை நடக்குறதே வேறவே..” என சமரசு சீற
சுதாரித்த நாச்சியோ அப்புறமா கேட்டுகலாம், என அவனருகில் வந்து “அந்த புள்ளைய பாருவே.. ஆசையாசையா இரண்டு பூனைய வாங்கி, மீனா வையுதான்னு, கூட பொறந்த பொறப்பு மாதிரி இங்க வச்சு வளக்குற.. அவளை பார்க்க பாவமா இல்லையா, அழ வைக்காமா கொடுவே, புள்ளைக்கு முகமே சிவந்து போச்சு” நாச்சி அவனிடம் இறங்கிபேச
அவளிடமே பார்வை பதித்திருந்தவன் ‘முகம் சிவந்தது என்னாலம்மா’ மனதிற்குள் சொல்லி கொண்டவன், எழுந்து நின்று, முழங்கால் வரை போட்டிருந்த ஷார்ட்ஸ் பாக்கெட்டின் இருபுறமிருந்தும் பூனைகளை எடுத்து நீட்ட
“அடக்கிராதகா?” பாண்டிகள் கோரமாய் இவனை பார்க்க
“அட எழவெடுத்தவனே” சமரசு ஷாக்காகி பார்க்க
“ஏ..எப்பா.. ஏசப்பா” நெஞ்சை பிடித்து நின்றாள் லாவன்யா
பதறப்போன நாச்சியோ “ஏவே.. இப்படி டவுசருக்குள்ள போட்டு வச்சிருக்கியே, எங்கனயாவது கடிச்சிட்டா என்னாகும்வே”
“என்னாகும் பூனை இரண்டும் செத்திருக்கும்” சமரசு சொல்ல, விக்ராவோ அர்த்தம் புரிந்து முறைக்க
“ப்போவ்.. பூனை உயிரோட தான் இருக்கு.. ஆனா மயங்கிருச்சே” இரண்டு பூனைகளையும் வாங்கி பார்த்து அதன் நிலையை செல்லம் நேரங்காலம் தெரியாமல் வாய்விட்டு சொல்லிவிட
“அவன் அழகுல மயங்கிருக்கும்” இன்னும் சமரசு பேச
“தாடி வேணாம்.. நான் எதுனா எசக்க பிசக்கா சொல்லிருவேன்” பொறுமை பறந்தது விக்ராவிற்கு.
வீரா நடக்கும் அக்கபோறையெல்லாம் உள்வாங்கி சிரிப்பை அடக்க படாத பாடு பட்டு கொண்டிருக்க
ராக்ஸி மருது வளர்க்கும் பெண் நாய். அவ்வபோது விலைக்கு கொடுக்க குட்டி வேண்டுமென ஸ்கூபியிடம் அழைத்து வருவான்.
எப்போதும் வெளியிடங்களில் சந்திக்க விடுபவன், இன்று விக்ரா வீட்டிலேயே இருப்பது தெரிந்து ராக்ஸியை கூட்டி வந்து விட்டான்.
ராக்ஸியை கண்டதும் எங்கிருந்து வந்தானோ ஸ்கூபி, சோபாவை ஒரே பாய்ச்சலில் பறந்து தாவி, “ஸ்கூபி ஸ்கூபி” என விக்ரா கத்த கத்த மருதுவின் கையில் இருந்த ராக்ஸியின் பெல்ட்டை வாயால் பிடித்திழுத்து, கூடவே ராக்ஸியையும் இழுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடியது.
‘ஆ..’ வென தான் வாய் பிளந்து தான் பார்த்திருந்தனர் அங்கிருந்த அத்தனை பேரும்.
‘ஐய்யோ எனக்கு வெக்க வெக்கமா வருதே’ முகத்தை கைகளால் மூடிக்கொண்டு இவள் உள்ளே சென்றுவிட, அஷ்டகோனலாக போனது எல்லாரது முகமும்.
லாவா சொல்லவே வேண்டாம், திறந்த வாய் மூடாமல் அப்படியே விக்ராவை பார்த்தாள்.
ஏற்கனவே கிழிச்சு தள்ளுவாங்க இதில் இந்த ஸ்கூபி வேற ஏத்திவிட்டு போய்ட்டான். விக்ரா இன்னும் ஏன் இங்கேயே நிக்கிற.. கட்டுறா நடையை, என திரும்பி தன் அறைக்குள் பகுமானமாய் நடக்க துவங்க
“இவ்வளவு அதிர்ச்சிலாம் தேவையே இல்லை. அது அதோட ஜோடிக்கூட போகுது.. உனக்கென்ன தாடி” என கேட்க இப்போது மருதுவுக்கும் கூட சிரிப்பை அடக்குவது பெரும் போராட்டமாக தான் இருந்தது.
“வயசுப்பையன்றதுனால தான அதோட கஷ்டம் புரிஞ்சு ஜோடிய கூட்டிட்டு வந்தேன். தம்மாதூண்டு இருக்குற மினியே, சனியோட தான் ஜோடியா வந்தது இந்த வீட்டுக்குள்ள. என் ஸ்கூபிக்கு ஜோடி வேணாம்னு சொல்ல உங்களுக்கு எந்த ரைட்ஸூம் கிடையாது” சட்டம் பேசி
“ஜோடி சேர்க்குறது தப்புனா மினி, சனியை பிரிச்சுவிடுங்க முதலில், என் ஸ்கூபியும் யார் பின்னாலையும் போக மாட்டான்” என உறுதியும் கொடுக்க
தலையில் கை வைத்தபடி அப்படியே அமர்ந்துவிட்டார் சமரசு.
நாச்சி “லேய்.. சும்மா இர்ரா.. உங்கப்பா இன்னும் கொஞ்ச நாளைக்கு உசுரோட இருக்கட்டும். போக வச்சுராதடா” அடிகுரலில் இவனிடம் சொல்லி அமைதி படுத்தினார்.
செல்லமும் சங்கரும் சிரிப்பை அடக்கி நிற்க, வீரா கொலை வெறியுடன் அவனை நெருங்கி, “இதெல்லாம் அசிங்கமா இல்லையாடா?” என அடிகுரலில் கேட்க,
“அப்போ நாளைக்கு கல்யாணம் ஆன பிறகு உனக்கு தனிரூம், உம்பொண்டாட்டிக்கு தனிரூம்னு போய் இருந்துப்பீங்களா?” இவனும் அடிக்குரலில் கேட்க
“லேய் எங்க இருந்து எங்கவே கோர்த்துவிடுற” இவன் அதிர்ச்சியாகி கேட்க
“உனக்கு வலிக்கும்ல, அப்படி தான் நாய்க்கும் வலிக்கும்” இவன் சொன்னதில் தலையிலேயே அடித்து கொண்டு சென்றுவிட்டான் வீரா.
‘டேய் மருது, சித்தப்பூ பார்க்க முன்னாடி நடைய கட்டு, இல்லை உன் மேல பாய்ஞ்சிடுவார் ஸ்கூபி மாதிரி’ மருது நைசாக நழவிவிட்டான் இவனும்.
விழி பிதுங்கி நின்றது என்னவோ லாவன்யா தான். ‘இவன் குணம் தெரிஞ்சும் இவன்கிட்ட வாண்ட்டடா வந்து மாட்டிகிட்டியேடி..’ என பெரும் பீதியுடன் பார்த்து நின்றிருந்தாள். இத்தனையிலும் கலந்து கொள்ளாத ஒரே ஆள் ராதை மட்டும் தான். இன்னும் வர்க்கியோடு தான் வாழ்ந்து கொண்டிருந்தார்.