“அவளும் சைபர் கிரைம்ல கம்ளைண்ட் பண்ணினா தான் தப்பிக்க முடியும். அவ வாழ்க்கையை அவ தான் பார்த்தக்கனும். அவள் தான் மீண்டு வரணும். இதுவரை எதுவும் ஹெல்ப் கேட்டு வரலை.. வந்தா கண்டிப்பா கைட் பண்றேன்” என அதோடு நிறுத்தி விட்டான்.
“இனி அவங்களை பத்தி என்கிட்ட பேசாத” என அதோடு எண்ட் கார்ட் போட்டுவிட்டான்.
“தள்ளு காயத்துக்கு மருந்து போடுவோம் வா” என அதில் கவனமாயினர் இருவரும்.
மேலும் இரண்டு நாட்கள் இப்படியே கடந்து விட்டது.
அதற்குள் மேரேஜ் சர்டிபிகேட்டை வாங்கி ஸ்டேஷனிலும் கொடுத்து விட்டு வந்தான்.
அன்று நாச்சி இவர்களை கோவிலுக்கு போய் வர சொன்னார். சுடிதாரில் வந்தவளை, ராதை திட்டி புடவை கட்ட வைத்திருந்தார்.
அதன் பின் இவர்களும் கிளம்பி கோவில் சென்றுவிட்டு, அம்மனை தரிசித்துவிட்டு வந்தனர்.
வீடு வந்த பின் உடை மாற்ற சொன்றவளை தடுத்து, புடவையை மாத்தாதடி, காதோடு சொல்லி சென்றவனை உடல் நடுங்க பார்த்திருந்தாள்.
ஏற்கனவே வள்ளி உதவிக்கு இருக்க, நாச்சியும் லாவாவும் சீக்கரமே சமையல் முடித்து, உண்டு உறங்க செல்லும் வரை புடவையை மாற்றவில்லை.
அறைக்கு வந்தவன் இவளுக்காக காத்திருந்தான். வெகு நேரம் கழித்து வந்தவளை கை பிடித்து நிறுத்தி இடை மறைத்த புடவை விலக்கி “காயமெல்லாம் ஆறிடுச்சு போல” என கேட்க
இவனது கையை பட்டென தட்டிவிட்டு “விக்ரா” என இவள் தள்ளி போனாள்.
‘தள்ளிப்போவ’ என சேலை முந்தியை பிடித்து இழுத்த அவன் பார்வை அடியோடு மாறி இருந்தது.
ஒற்றை கையினால் அணிந்திருந்த டிசர்ட்டை தலைவழியாய் கழற்றி எறிந்தான்.
சட்டை அணியா உடல் இவளை இன்னும் பீதிக்கு உள்ளாக்க, அப்படியே சுவர்ப்புறமாய் திரும்பி நிற்க, நச்சென சாய்ந்தான் அவள் மீது “விக்..ரா..” அவளுக்கே கேட்காத ஒரு குரலில் அழைக்க
“ம்” என சத்தம் கொடுத்தவன் இடைக்குள் கைவிட்டு இறுக்கி அணைத்து கழுத்தில் முகம் புதைத்தான்.
அவனின் முழு பாரமும் இவள் மீது தான். பாரம் தாங்காது இவள் திரும்ப “மருந்து போடுவோமா?” என புடவையை பறித்தெடுத்தான்.
“விக்..ரா” அவனிடமிருந்து பறிக்க இவள் முயல, பிடுங்கி பறக்கவிட்டான் காற்றில். சொச்ச உடைகளுக்கும் விடுதலை அளித்து பேன் காற்றில் பறக்க விட்டு, இவளை தூக்கி சென்று கட்டிலில் போட்டவன்,
இதழோடு இதழ் சேர்த்தான் “ஏற்கனவே எல்லாம் பார்த்துட்டேன், என்னத்த மறைக்கிற” மறைத்த கைகளை இவன் இழுத்து பிடித்து கொள்ள, உடல் சிவந்து போனது இவளுக்கு.
“பார்த்ததுக்கே இப்படி உடம்பு புல்லா சிவப்பாகிடுச்சு. தாங்குவியாடி என்னை” முழு போதை ஏறியது போல் உளறி கொட்டியவனை பேச விடாது அவன் வாயை அடைத்தாள்.
கைகளை தட்டிவிட்டு அவளில் புதையும் வேலையில் இறங்கி, தானும் கிறங்கி, அவளையும் கிறங்க வைத்து இறுதியில் மூச்சுக்கே திணறவைத்து அவளை திண்டாட வைத்து தான் அவளை விட்டான்.
************
எடுத்திருந்த லீவு முடிந்திருக்க மீண்டும் இவன் ஹைதராபாத் செல்ல வேண்டும். அறைக்குள் “என் தொல்லை இல்லாமல் இரு.. இனிமேல்” தன் உடைகளை பைக்குள் திணித்தபடி கடுப்புடன் இவன் இவளை சாட
“அவ்வளவு கடுப்பா இருந்தா வேலைக்கு எதுக்கு போய்க்கிட்டு. வேணாம்” இவள் நகைத்தாள்.
“என்ன நக்கலா.. கொஞ்சமாவது லாஜிக்கா பேசுடி” என்றவன் “கொஞ்சமாவது பீல் பண்ணுறியா! தொல்லை ஒழிஞ்சா போதும்னு இருக்குற நீ” “ம்” இடுப்பில் கை வைத்து கொண்டு முறைக்க, “ம் தொல்லை தான் ராத்திரி மட்டும்” அதற்கும் சிரித்து கொண்டிருந்தாள்.
“சிரிக்குற நீ” என இழுத்து சுவரோடு அழுத்தி, சிவந்து தடித்த இதழ்களை வருடினான்.
“நீயில்லாம எப்படி இருக்க போறேனோ” அவளை சொன்னானோ அவளிதழை சொன்னானோ அவனுக்கே வெளிச்சம்.
“ஏய்யா.. ராசு” என்ற சத்தத்தில் பிரிந்தவன், பெரு மூச்சோடு வந்து கதவை திறந்தான்.
அங்கே மீனா நின்றிருக்க “வாங்கத்தை, மாமா எப்படி இங்கே விட்டாரு” என கேட்கையிலேயே, “ம்மா” என அழைத்து கொண்டு, அவரிடம் ஓடினாள் லாவன்யா. மகளின் பூரித்த முகம் பார்த்து இவருக்கும் சந்தோஷமே.
“உங்க மாமா இருந்தா இங்கே எப்படி வர முடியும், அவர் நேத்து தேன் ஊருக்கு கிளம்புனார்” என
“கோபம் போய்டுச்சா அத்த அவருக்கு” என விக்ரா கேட்க
“எப்படி போகும்? அப்படியே தான் இருக்கார். எப்படி சமாதானம் செய்யனு தெரில” பெரு மூச்சு விட்டார் மீனா.
“அந்த கிறுக்கு பய திரும்ப வர்றதுக்குள்ள பேரனையோ பேத்தியையோ பெத்து கொடுத்துடு ராசு. புள்ளையை பார்த்தபிறகும் கோபமெல்லாம் முன்னுக்கு நிக்குமா என்ன?” என ராதை கூற, இவன் லாவாவை பார்த்தான்.
“அதுவும் சரிதான்.. சீக்கிரமா பெத்து குடுடி” என மகளிடம் சொன்னவர் “அங்க போய் விக்ராவை வேலை வாங்காத, சமைக்க கத்து கொடுத்துருக்கேன்ல, சமைக்கனும் பொறுப்பா இருக்கனும்.. இன்னும் விளையாட்டு புள்ள இல்லை நீ” என டியூசன் எடுக்கவும்
ஷாக் அடித்தார்ப்போல் இவன் லாவாவை பார்க்க, அவளோ இதழ்களுக்குள் சிரித்தபடி பார்த்தாள்.
அதான் இவ கொஞ்சம் கூட கவலை படாமல் இருந்தாளோ என இடுப்பில் கை வைத்து முறைத்தான்.
“அவளை ஏண்டா முறைக்குற.. பெறவு அவளை உங்கூட அனுப்ப மாட்டேன் பாத்துக்க!” நாச்சி மிரட்ட
“டிக்கெட் யாருடி போட்டா?” என இவன் லாவாவை கேட்க
“நீங்க டிக்கெட் போடும் போது பக்கத்தில தானே இருந்தேன். உங்களை அப்படியே பாலோ பண்ணி உங்களுக்கு பக்கத்து சீட்ல நானும் போட்டுட்டேன்” என சிரித்து “அத்த தான் டிக்கெட் போட்சொன்னாங்க” என போட்டும் கொடுத்தாள்.
“ஏண்டி என்னை மட்டும் சொல்லுத?, விக்ரா டிக்கெட் போட்டுட்டான்.. போட்டுட்டான்னு ராவும் பகலும் புலம்பிட்டு, நானும் போகட்டுமான்னு, என் முந்திய புடிச்சுட்டே சுத்துனதையும் சேர்த்து சொல்லுடி” என நாச்சி காலை வார..
முகம் சிவக்க தாயின் பின்னே போய் ஒளிந்தாள் லாவா
“ஏற்கனவே அப்பா அப்பானு புலம்புற. அங்கே நான் கூட்டிட்டு போன பிறகு அம்மா அம்மான்னு புலம்புனன்னு வைய்யி!” என மிரட்ட
“விக்ரா விக்ரானு புலம்பாம இருந்தா சரிதேன்” இம்முறை மீனாவே கிண்டல் செய்ய, இம்முறை ஓடிச்சென்று விக்ராவின் பின் மறைந்தாள்.
“இன்னும் ஆறு மாசத்தில் நம்ப வீராவுக்கு கல்யாணம்னு முடிவு பண்ணியாச்சு என்ன பண்ணுவன்னு தெரியாதுவே, பத்து நாளுக்கு முன்ன வேலையெல்லாம் முடிச்சுபுட்டு, ஊருக்கு வர்ற வேலையை பாரு” நாச்சி கூற, இருவருமே தலையசைத்தனர்.
“தாடி போய்ட்டு வரேன்” என இறுதியாய் அவரிடம் விக்ரா வந்து நிற்க “ம்..ம்” என ஒற்றை சவுண்டை விட்டவர் லாவன்யா வந்து அவரிடம் ஆசீர்வாதம் வாங்க “நல்லா இரு தாயி, அதுவும் இந்த பய கிட்ட ரொம்ப கவனமாவே இரு” என பாசமழை பொழிந்தார்.