“ஒன்னு பத்தாது, இரண்டு வாங்கிட்டு வான்னு கத்துவ, என்ன ஆச்சு உனக்கு?” நின்றிருந்தவளின் கை பிடித்து இழுத்து அருகே அமர்த்திகொள்ள, இவளும் பொத்தென இவன் அருகே அமர்ந்தாள்.
“ஏண்டி என்னை பிளாக் பண்ண?” பிடித்திருந்த அவளது கையை முகத்தருகே கொண்டு சென்று அதில் முத்தம் வைக்க,
பட்டென கையை உருவிக்கொண்டு “முதலில் கையை விடு” என அவனிடமிருந்து பிரிந்து அமர்ந்து, பாட்டிலை காட்டி “வேண்டாம்னா வேண்டாம், விட்டுடு” என்றிட, அவளது விலகல் அப்பட்டமாய் தெரிந்தது.
கண்கள் இடுங்கியது இவனுக்கு “கையை பிடிச்சதுக்கு இப்படி கோபப்படுற? ரொம்ப பண்ணாத லாவன்யா!
இதைவிட ஒரே ரூமில் எத்தனையோ நாள் தூங்கி இருக்கோம், கட்டில்ல சண்டை போட்டு உருண்டிருக்கோம், புல் மப்புல பாட்டுபாடி கூத்தடிச்சி இருக்கோம். பத்ததாதுக்கு ரேப்ல ஒரு 20% ஏ முடிச்சுட்டேன். அதையெல்லாம் டைம் டிராவல் பண்ணி அழிக்க போறியா?” இவன் நமட்டு சிரிப்போடு கேட்டான்.
ஓரிரு நொடிகள் அவனை உற்று பார்த்தவள் “அழிக்க முடியாது தான். ஆனால் அப்போ எல்லாம் என்மேல உனக்கு எந்த இன்டென்ஷனும் கிடையாது. நிழல் மாதிரி உரசிட்டு பழகுனேன். ஆனால் இப்போ உனக்கு வேற மாதிரி இன்டன்ஷன் இருக்கே!”
“இருக்கு தான், ஆனால் ‘கண்ணா இரண்டு லட்டு தின்ன ஆசையா’னு சுத்திட்டு இருக்குற உன் கள்ள காதலன் விஜய் அளவுக்கு இல்லை” சற்று முன் நடந்த விசயம் இவன் மனதினுள் ஓட, முறைத்து கொண்டு கேட்டான் இவன்.
அவன் வார்த்தைகள் இவளை வதைக்க, பதில் பேச முடியாமல் திணறினாள். இம்முறை உறுத்து விழிப்பது இவன் முறையானது.
ஏனோ அவன் கூர்மை நிறைந்த பார்வையை அவளால் தாங்கவே முடியவில்லை, கண்கள் கலங்கும் போல் இருந்தது.
“நீ் நீயாவே இல்லை லாவ்ஸ்” இவனது ஆழ்ந்த குரலில் சட்டென இவள் பார்வை நிலத்தை நோக்க, மெதுவாய் நகர்ந்து இவள் முன்னே வந்தவன், குனிந்திருந்த முகத்தை நாடிதொட்டு நிமிர்த்தி “அவன் ஒன்னும் காதலனும் இல்லை, கள்ள காதலனும் இல்லைன்னு கல்லை மூஞ்சிலேயே விட்டு கதறவிட்ருப்பா பழைய லாவன்யா. ஆனா நீ இப்போ தலை குனிஞ்சி…” “ஏன்டி இப்படி ஆகிட்ட” என கேட்க பதிலில்லை இவளிடம்.
“என்னோட வாழ்க்கையில் முதல் முறையா உன்கிட்ட ஒரு மாசமா பேசாமல் இருந்திருக்கேன். நீ பிறந்ததில் இருந்து என்னோட கைக்குள்ளவே இருந்து பழகிட்டு, திடீர்னு எப்படிடி என்னை விட்டு ஒதுங்கி போக முடியது. என்னால எல்லாம் சத்தியமா முடியலடி. போனில் இருந்த ஸ்கிரின் சேவரை காட்டி, இந்த முகத்தை பார்த்துட்டே தான் இந்த ஒரு மாசத்தையும் ஓட்டிருக்கேன்”
கேலரியை ஓபன் செய்து அதில் விதவிதமான புடவைகள் அணிந்து, 18+ பாடல்களுக்கெல்லாம் குத்தாட்டம் போட்ட வீடியோக்களை காட்டி “இந்த வீடியோவால தான் வாழ்ந்துட்டே இருக்கேன்டி” என அவளை அதிரச்செய்தான்.
தினமும் பத்து முறையாயவது பார்த்துவிடுவான் அவளின் வளைந்து நெளிந்த நளினத்தையும், நடனத்தையும்.
“ஆனால் உனக்கு என்னை பார்க்கனும், பேசனும்னு தோனவே இல்லையாடி” உணர்ச்சிகள் ததும்ப இவன் பேசினான்.
“யாரை கேட்டு என் வீடியோவை எல்லாம் என் போனில் இருந்து எடுத்த, மரியாதையா டெலிட் பண்ணிடு” காரசாரமாய் இவள் சண்டையிட துவங்கினாள்.
“நீ என் பொண்டாட்டி, உன் வீடியோ மட்டுமில்லை, உன்னையும் எடுத்துப்பேன். யார்கிட்டேயும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை” ஒற்றை கண் அடித்து சரசமாய் இவன் பேச, அவள் தலை குனிந்தாள்.
“உன் லவ்வர்கிட்ட பேச வேண்டியதெல்லாம் என்கிட்ட பேசிட்டு இருக்க, நான் உனக்கு வெறும் ப்ரண்ட் தான், பெஸ்டி தான்” நக்கலாய் இவள் கூற
சட்டென அவள் முகத்தை இறுக்கி பிடித்து தன் புறமாய் திருப்பியவன், “ஃப்ரண்ட், பெஸ்டி, லவ்வர், பொண்டாட்டி எல்லாமே எனக்கு நீ மட்டும் தான் உன்கிட்ட பேசாமல் வேற எவ கிட்ட பேச..ம்?” விழி உயர்த்தி ஆதங்கமாய் கேட்டான் இவன்.
“ப்ச்” இவன் கையை தட்டிவிட்டு “நீ பேசற எல்லாத்தையும் கேட்க நல்லா தான் இருக்கு. ஆனால் என் கஷ்டம் உனக்கு புரியாது”
“என்ன கஷ்டம்? சொல்லேன்” நக்கலடித்தான் இவன்.
“உங்களுக்கெல்லாம் எக்ஸ் லவ்வர்ங்கிறது வார்த்தை. எங்களை பொறுத்தவரை எமோஷன். நீங்க பத்தோட பதினொன்னா தட்டி விட்டு போகலாம். எங்களால முடியாதுல”
“இப்போ நான் பேசினதுக்கும் நீ பேசினதுக்கும் என்ன சம்மந்தம்னு எனக்கு தெரியல. ஆனால் உண்மை காதலா இல்லாத பட்சத்தில், காதலில் உண்மையா இல்லாத பட்சத்தில் தட்டி விட்டு போகலாம் தப்பில்லை” முகத்திற்கு நேராய் அமர்ந்து, கண்ணோடு கண் வைத்து கூறியவனை விழி அகலாது பார்த்தாள்.
“சொல் ஒன்னு செயல் ஒன்னுன்னு இருக்குறவனை ஏன் நம்புற? தட்டி விட்டு போ” இவன் விஜயை மனதில் வைத்து பேச
“இப்போதைக்கு அப்படி இருக்குறது நீ தான். அப்போ தட்டிவிட்டு போகலாம்கிற” சிக்ஸர் அடித்தாள்.
இவன் திடுக்கிட “ரொம்ப ஷாக் ஆகாத, கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு நம்பிக்கை கொடுத்த, ஆனால் பண்ணி வச்ச?” இவளும் விஜயை மனிதல் கொண்டு கேள்வி எழுப்ப
அடித்த ஆப்பு தன் பக்கமே திரும்பியது உணர்ந்தும் “அது வேற இது வேற” என பல்லை கடித்தான்.
“அப்போ இதற்கு பதில் சொல்லு, போன முறை தானே ‘இனி உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்’ னு சொல்லிட்டு போன. ஆனா இப்போ இழுத்துட்டு வந்து கிணத்தடில உக்கார வச்சு டார்ச்சர் பண்ணிட்டு இருக்க. எப்போவுமே சொல்றது ஒன்னு செய்றது ஒன்னு. இதுல உண்மை காதல் உண்மையில்லா காதல்னு பினாத்தல் வேற” இவள் என எழுந்து செல்ல எத்தனிக்க
செல்ல விடாது தடுத்து இறுக்கி பிடித்தது இவனது கரம். “நான் அப்படியில்லடி, எப்போதும் சொல்றதும் ஒன்னு செய்றதும் ஒன்னு தான்” சுண்டி இழுக்க, அவன் மேலேயே வந்து மொத்தமாய் விழுந்தாள்.
கிணற்று சுவற்றில் ஒரு கால் நீட்டி மறுகால் மடக்கி அமர்ந்திருக்க, அவன் மேல் விழுந்து அதிர்ச்சியில் விழித்தவளின் கலைந்த கூந்தலை சரிசெய்து காதோரமாய் ஒதுக்கிவிட்டான். அவள் விழியோடு விழி நோக்கி, கழுத்தை இறுக பற்றி தன்னை நோக்கி இழுத்தவன்
“கல்யாணத்தை நடத்தி வைக்க வேண்டியது என் பொறுப்புனு சொன்னேன். ஆனா அவன் கூட இல்லை. என் கூட” என நிறுத்தி “விவரம் தெரிஞ்சதில் இருந்து நிழல் மாதிரி உன்கூடவே இருந்துட்டு, இப்போ வேண்டாம்னு நீ சொல்லுவ.. நான் கேட்கனுமா? தவிர உன்னை வேற எவனுக்கும் விட்டு தர முடியாது” ஆழ்ந்த குரலில் கூறியவன் அழுத்தமாய் இதழ்களில் முத்தமிட, அவன் இதழ்கள் பதிந்ததோ அவள் கைவிரல்களில். ஆம் அவள் இதழ்களை தன் கை கொண்டு மூடி இருக்க, இவன் இதழ்கள் பதிந்ததோ அவளது கையில் தான்.
“லாவ்வா…” குரலின் ஏமாற்றம் தடுமாற செய்தாலும், பிடிவாதமாய் விலகிட இவள் தவிக்க, எளிதாய் முறியடித்து அவள் கைகளை தன் ஒரு கையினால் இறுக்கி பிடித்தான்.
ஒற்றை காலை அவள் மேல் போட்டு அழுத்தி பிடித்து “இப்போ என்னடி பண்ணுவ?” விவகாரமாய் கேட்டான் இவன்.
விழிகள் அகலமாய் விரிய, “ஏன் என்னை இந்த பாடு படுத்துற. என்னை விட்டுடேன்” மீனாய் துள்ளினாள்.
விடாமல் இறுக்கிபிடித்தவன் “விடுறதுக்கா இவ்வளவு இறுக்கமா பிடிச்சிருக்கேன்” என
“எனக்கு ஒரு மாதிரி அன்ஈசியா இருக்கு, என்னை விட்டு தொலையேன்” இருளை கிழித்து கொண்டு இவள் கத்தினாள்.
அதில் காதல் விளையாட்டை விட்டுவிட்டு, அவள் மீது கிடந்த கையையும், காலையும் பிரித்துவிட்டு மீண்டும் கிணற்றடியில் சரிந்து அமர்ந்தான் கோபமாய்.
இது தான் சாக்கென தன்னைவிட்டு வேகமாய் நகர்ந்தவளிடம் பார்வை வைத்து “லாவ்ஸ்” என அழைத்தான்.
மறுபடியும் என்ன? என்பது போல் சலிப்பாய் நிமிர்ந்து இவள் பார்க்க, “நான் நிம்மதியாவே இல்லை. ஓப்பனா பேசிடு. எனக்கும் ஒரு முடிவு கிடைக்கும். நான் உனக்கு வேணுமா வேண்டாமா?” முகத்திற்கு நேராய் கேட்டான்.
அதில் அதிர்ந்தாலும், பதில் சொல்ல மாட்டேன் என்ற மறுப்பு அவள் முகத்தில் தெரிந்தது.
“சொல்லு எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு” என
“எனக்கு பயமா இருக்கு” இவளும் அவன் முகத்தை பார்த்தே தயங்கி சொன்னாள்.
“என்கிட்டயா?” அதிர்ந்தான் இவன்.
“ம்” என தலையசைத்தவளை, இவன் கண்கள் சுருங்க பார்த்தான்.
“இந்த ஒரு வருஷமா விஜய் விஜய்னு அவனை பத்தி மட்டுமே உன்கிட்ட பேசியிருக்கேன். விஜய் என்னை காதலிக்கவே இல்லைனு நீ சொல்ற. நான் அவனை நாய் மாதிரி தொரத்தி தொரத்தி லவ் பண்ணினது மட்டும் தான் உனக்கு தெரியும்.
இப்போ கூட அவனை கள்ள காதலன் ரேஞ்சுக்கு என்கூட சேர்த்து வச்சு பேசுற. நாளைக்கு ஹஸ்பண்டா ஆன பிறகு, விஜய பத்தி என்கூட சேர்த்து வச்சு பேசுவியோன்னு ரொம்ப பயமா இருக்கு” எப்படியோ இவள் சொல்லி முடித்தாள்.
அதிர்ந்தவனோ, என்ன இவள் எண்ணம் இப்படியெல்லாம் போகிறது என பயந்தே விட்டான். “ஹேய், அது உன்னை சீண்டுறதுக்காக சொன்னதுடி, மனசில இருந்து நிஜமா வரலை”
“நீ எதுக்காவேணாலும் சொல்லிட்டு போ.. ஆனால் அர்த்தம் ஒன்னு தான். ஒரு பையன் ‘எனக்கு இரண்டு எக்ஸ் இருந்தாங்கனு’ அசால்ட்டா வெளில சொல்லிட்டு, மூனாவதா ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு சைலண்டா வாழ்ந்துட்டு இருப்பான். அவனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டு இல்லை. ஆனால் ஒரு பொண்ணு, ‘எனக்கு ஒரு எக்ஸ் இருந்தான்னு கல்யாணத்துக்கு முன்னையே சொல்ல முடியுமா? சொல்லிட்டு தான் நிம்மதியா வாழ முடியுமா? பெரும்பாலான பொண்ணுங்க ப்ரேக்கப்பை மறைக்கிறதுக்கு இதுவும் ஒரு காரணம்” ஏதோ சொல்ல வந்தவனை தடுத்து, “இரு நான் பேசிடுறேன்” என்றவள்.
“இந்த பிரச்சனைக்கு பிறகு இப்போவே உன்னை விட்டு தூரம் போய்ட்ட மாதிரி இருக்கு. நமக்கு கல்யாணம் ஆச்சுனா கண்டிப்பா இன்னமும் விரிசல் தான் விழும். கல்யாணத்துக்கு பிறகு நீ ஏதாவது சொல்லிட்டனா நான் தாங்க மாட்டேன் விக்ரா” குரல் கரகரத்தது.
“ஹேய்.. ஏண்டி இப்படியெல்லாம் பேசுற”
“உண்மை தான், எத்தனையோ நாள் உங்கூட ஒரே ரூமில் இருந்திருக்கேன். இரண்டு பேரும் குடிச்சிருக்கோம், டான்ஸ் ஆடிருக்கோம் கவலையெல்லாம் மறந்து.
நடுராத்திரி எத்தனையோ நாள் பசிக்குதுனு சொன்னப்போ எல்லாம் எங்கையாவது போய் எதையாவது வாங்கி வந்து பசிய தீர்த்திருக்க. பசங்க யாராவது பிரச்சனை பண்ணினா, முதல் ஆளா நீ தான் எனக்கு முன்ன நிப்ப. அப்போலாம் உன் மேல அவ்வளவு நம்பிக்கை இருந்தது”
“முதல் முறையா நீ நம்பிக்கை கொடுத்து ஏமாத்துன துரோகத்தை தாங்க முடியலை? சாப்பாடு கூட எனக்கு பிடிச்சதா பார்த்து பார்த்து ஆர்டர் பண்ணுவ? ஆனால் தாலியை மட்டும் அனுமதியில்லாமல் கட்டுற, உரிமை கொண்டாடுற, ஹக் பண்ற, கிஸ் அடிக்கிற” என நிறுத்தி “இதெல்லாம் எனக்கு பிடிக்கவே இல்லைனு உனக்கு தெரியலையா? இல்லை பிடிச்சா என்ன? பிடிக்காட்ட என்ன? உனக்கு தேவையானதை நிறைவேத்திகிறியா? ரொம்ப வலிக்குது விக்ரா” தேம்ப துவங்கியது வார்த்தைகள்.
“விஜய்- மகா தான் லவ்வர்ஸ்னு நீ அவங்களை நம்பி, என்னை ஏமாத்தி இருக்க. ஆனா அந்த விஜய், எனக்கு மகாவை பிடிக்கவே இல்லை, எப்படியாவது நம்ப கல்யாணம் தன்னால நடக்குற மாதிரி பண்ணிடுனு கல்யாணத்துக்கு முந்தின நாள் வரை பேசிட்டு தான் இருந்தான். நீயும் நானும் சேர்ந்து போட்ட கடத்தல் பிளான் கூட அவனுக்கு தெரியும்” என சொல்ல,
விக்ராவின் விழிகள் கூர்மை பெற்று “ஆனால் விஜய் என்கிட்ட சொன்னதே வேற” “கல்யாணத்தை லாவன்யா தடுக்க பார்க்குறா, அவளை கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணி வைன்னு, எங்கிட்ட சொன்னான்டி, மகா கூட ‘லாவன்யா எங்க இரண்டு பேரையும் பிரிக்க பார்க்குறா, நீங்க தான் ஏதாவது பண்ணனும்னு’ சொன்னா. நீயும் அவன் உன்னை லவ் பண்றான்னு ஒரு தடவை கூட எங்கிட்ட சொல்லவே இல்லை. அப்போ நான் கெஸ் பண்ணினது ஒன் சைட் லவ்னு. அதான் உன் கழுத்தில்” அடுத்து அவனால் பேச முடியவில்லை
“சாரிடி உங்கிட்ட ஒரு வார்த்தையாவது கேட்டிருக்கனும். ப்ச்” நெற்றியிலேயே அறைந்து கொண்டான் பலமாய்.
இவன் சொல்லி முடிக்கையில் இவள் கண்கள் இடுங்கி நெற்றி சுருங்கியது.
ஆக மொத்தம் இருவருமே டபுள் கேம் ஆடி இருக்கிறார்கள் மற்ற இருவரிடமும். அதிர்ச்சி தான் இருவருக்கும்.
“இரண்டு பெரும் டபுள் கேம் ஆடிருக்காங்க” என விக்ரா ஆத்திரம் கொள்ள
“ஆனால் ஏன்? எதுக்காக?” என லாவன்யா கேள்வியாய் முடித்தாள்.