அத்தியாயம் 13

அடுத்து இவனும் மீட்டிங்கில் பிசியாகிவிட்டான். மதியம் போல தான் வாட்ஸ்அப்பை ஓபன் செய்ய, ‘நாளைக்கே அவனுக்கு ஓகே வாம்’ என லாவன்யாவிடமிருந்து வந்து குதித்தது மேசேஜ்.

பதிலுக்கு இவன் போன் அடித்து விட்டான். இவளும் எடுத்திட “ஏண்டி என் நம்பரை பிளாக்கில் போட்ட” எடுத்த எடுப்பிலேயே இவன் கேட்க

“நீ நீ..” ஏதோ சொல்ல வந்தவள் அதை நிறுத்திவிட்டு “எல்லாமே உன்னால தான், நீ் நீயா இருந்தா நான் ஏண்டா பிளாக்ல போட போறேன்” என  அரைகுறையாய் பேசினாள்.

“முழுசா சொல்லு.. என்ன ரொம்ப படுத்துறனா” புதிதாய் ஓர் அந்யோன்யம் அவனிடத்தில்.

“ஆமா ரொம்ப படுத்துற ரொம்ப ரொம்ப.. கெட்ட பையனா மாறிட்ட. என்ன சொன்னாலும் கேட்க மாட்ற, இஷ்டத்து தோன்றதெல்லாம் செய்த” என

“புருஷனாய்டேன்ல, அதான் கெட்ட பையனா மாறிட்டேன். நீ எனக்கு பொண்டாட்டியா மாறுர வரைக்கும் நீ என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன். பொண்டாட்டியா மாறிடுவியாம். நீ என்ன சொன்னாலும் கேட்பேன். லாவா, லாவ்ஸ், மை லவ்ஸ்னு உன் பின்னாடியே சுத்துவேன்” வெகு ரசனையாய் இவன் கூற

அதில் முழ்க போனவள் திடீரென தலையை உலுக்கி “நீ எதுவும் மானவும் வேணாம், சுத்தவும் வேணாம். நான் உனக்கு பொண்டாட்டியுமில்லை, நீ எனக்கு புருஷனுமில்லை” வெகுவாய் விளக்கி கொண்டிருந்தாள்.

“ஓய், அப்படி சொல்லாத லாவா, நான் உனக்கு புருஷனா வர்றனே,ப்ளீஸ் ப்ளீஸ்” கெஞ்சினான் இவன்.

“புருஷனா ஒன்னும் வர வேணாம்” பட்டென இவள் கூற

“அப்போ உன் புருஷன் போன பிறகு வரட்டா” சட்டென இவனும் கேட்க

அர்த்தம் முதலில் புரியவில்லை புரிந்த பின்பு “செருப்பாலேயே அடிப்பேன்டா” என இவளும்.

“நான் வாயாலேயே அடிப்பேன்டி” என இவனும் ஒருவரை ஒருவர் வாரிவிட பட்டென போனை கட் செய்துவிட்டாள். இவனுக்கோ முகம் முழுதும் பூரிப்பு, சந்தோசம், மகிழ்ச்சி என அத்தனையும்.

தன்கென ஒரு பெண் இருக்கிறாள் என்றாலே இந்த ஆண்களுக்கு வரும் பிடிப்பும், பிடித்தமும் அதன் மூலம் வரும் அழகும் பேரழகு தான். விக்ரா இப்போது பேரழகனாய் இருந்தான்.

அதன் பின் பிளைட் டிக்கெட் அவைலபிள் பார்த்து டிக்கெட்டும் போட்டுவிட்டான்.

ஏற்கனவே வீராவின் நிச்சயத்திற்காக லீவு கேட்டிருக்க, ஒரு மாதமாய் இவள் லீவே எடுக்காமல் வேலை செய்ததில் இம்முறை ஐந்து நாட்கள் வரை லீவு கொடுத்திருக்க கிளம்பிவிட்டான் பெரம்பலூர்க்கு.

சொன்னது போல சனி இரவு ஏழு மணிபோல் அவசர அவசரமாய் ஜம் என கிளம்பி கின் என  ஆஞ்சநேயர் கோவிலில் ஆஜரானான் விஜய்.

அவர்கள் நேரத்திற்கு அன்று ஆஞ்சநேயருக்கு பூஜை நடந்து கொண்டிருக்க, அனைத்து கூட்டமும் கோவிலினுள் இருந்தது. கோவிலின் சுற்றிடத்தில் ஆளரவமும் இல்லாது போக, குஷியானான் விஜய்.

இவன் உடனே அவளுக்கு போன் அடித்து “எங்க இருக்க? கோவிலுக்கு வந்துட்டியா?” என கேட்க

“ம்.. பத்து நிமிஷம் ஆச்சு, தோட்டத்து கல்பெஞ்சில் இருக்கேன்” என முடிக்க விரைந்தான் அங்கே.

அங்கே திடீரென தன் முன் வந்து நின்ற விக்ராவை இமை சிமிட்டாது இவள் பார்த்திருக்க, இவனோ அவளை உச்சி முதல் பாதம் வரை பார்த்தவன்  இவளை கைபிடித்து பெஞ்சிலிருந்து மெதுவாய் எழுப்பி “நாம அந்தபக்கம் போய்டலாம்” என பெரிய மரத்தை கை காட்டி விக்ரா கூற

மந்திர சக்திக்கு கட்டுபட்டாற்ப்போல “ம்” என தலையசைத்தவளோ குழப்பத்துடன் அவனுடன் சென்றாள்.

இவள் நகர்ந்தவுடன் அதே கல்பெஞ்சில் துப்பட்டாவினால் முழுதலையையும் மறைத்து,  முதுகு காட்டி அமர்ந்தது ஒரு உருவம், அதுவும் அவளது உடையுடன்.

தன்னிடத்தில் வேறொருவர் வந்து அமரவும் “விக்ரா.. யார் அந்த பொண்ணு.. எனக்கு பதிலா, அதுவும் என்னை போலவே” அவன் பின்னே நடந்து கொண்டிருந்தவள் அப்படியே நின்று சந்தேகம் எழுப்பினாள்.

“ஸ்.. பேசாத, அங்கே நடக்குறதை மட்டும் கவனி, ஆனால் இங்க இருந்து இல்லை, அப்படி மறைவாய் போய்டலாம்” என மரத்தின் பின்னே கைகாட்ட

“மறைவா வர்றதுக்கு வேற ஆளை பாரு..” இவள் கூற

நச்சென தன் நெற்றிலேயே அடித்து கொண்டு “நீயா கேட்டாலும் அதுக்கெல்லாம் எனக்கு இப்போ மூட் இல்லை, ரொமான்ஸ் பண்ணவும் மூட் வேணும், அதுவும் இவனை பார்க்க வந்திருக்க இந்த மூஞ்செல்லாம் பார்க்குறப்போ, அஞ்சு கிலோ மீட்டருக்கு அங்குட்டு போய்டும் ரொமான்ஸ்லாம்., தொன தொன்னு பேசாமல் வந்து தொலை” என அவளனுமதியின்றியே  கை பிடித்து இழுத்து வந்து நிறுத்தினான்  மரத்தின் பின்னே.

கல்பெஞ்சில் இருந்த உருவம் யாராக இருக்கும் என்ற குழப்பமே இவளை அமைதியாய் இருக்க வைத்தது.

ஆனால் இங்கோ முகத்தை பாராமலேயே அவளது உடையை வைத்தே ‘அட நம்ப மைனா இங்க இருக்கு’ என கண்டு கொண்ட தன்னை மெச்சிக்கொண்டான் விஜய்.

“லயா” என்ற ஹஸ்கி வாய்ஸ் தனக்கு பின்புறம் கேட்க அலர்ட் ஆகி சட்டென எழுந்து நின்றது அந்த உருவம்.

‘லயா’ வா? விக்ரா இங்கே இவளை பார்வையாலேயே கூறு போட்டான்.

அங்கே கல்பெஞ்சில் இருந்த உருவமோ ‘ஆத்தி, குரல்லையே காம ரசம் வழியுதே என்ன பண்ண காத்திருக்கானோ, நானெல்லாம் ஆம்பளையா இருந்தாலே கும்முன்னு இருக்கேன்னு வீரா அடிக்கடி சொல்லுவான். இப்போ பொம்பளை கெட்டப் வேற.. கும்தாவா இருக்கேன் போலவே’ என நினைத்தான் செல்ல பாண்டி. ஆம் செல்ல பாண்டியே தான் இதுவும் விக்ராவின் வேலையே!

“ஹேய்.. என்ன கூப்பிட்டா பதிலே சொல்ல மாட்ற?” பின்புறம் நின்றபடி தோளில் கைவைத்து இவன் குழைய..

“ம்” என பெண் குரலை வழிய விட

“லயா.. பேச மாட்டியா” இவன் குழைய

“ம்” என்றான் அப்போதும்

“திரும்பேன்.. உன் முகத்தை பார்த்து பேசனும்” இன்னும் வழிந்தான் விஜய்.

பார்த்தா நெஞ்சு வெடிச்சு செத்ருவடா என மைண்ட் வாய்சில் பேசியவன், “ம்ஹூம்.” என வேகமாய் பதில் சொல்ல.

“ஹா ஹா…” என சிரித்து “என்ன வெட்கமா?” என

“இதுல வெட்கம் வேற.. கர்மம்”

“என் முகத்தை கூட பார்க்க பிடிக்கலையா? அவ்வளவு கோவமா?”

“ம்ஹூம்”

“ம்ஹூம்னு உன் வாய் சொல்லலாம், ஆனால் உள்ளுக்குள்ள கோபம் இருக்க தானே செய்யும்.. என் மேல கோப பட உனக்கில்லாத உரிமையா?”

“ஓஹோ.. அவ்வளவு உரிமையோ” இங்கே விக்ரா நக்கலடிக்க இவளோ தலை குனிந்து நின்றாள்.

“ம்.. நான் பார்த்துவச்ச வேலைக்கு இங்கே நீ வந்ததே பெரிசு.. அதிலேயே தெரிஞ்சு போச்சு நீ எந்தளவுக்கு இன்னும் என் மேல ஆசையாய் இருக்கன்னு..” சொல்லியவனோ முதுகருகில்  பெருமூச்சைவிட

“உஷ்ண பெருமூச்சா இருக்கேடா..” செல்லம் நினைக்கையிலேயே சற்று முன்னே நகர்ந்து செல்ல அவளது இடை இழுத்து தன்னோடு அணைத்து கொள்ள.

விக்ராவோ, சிடுசிடுவென்ற முகத்தோடு, உச்சிக்கு ஏறிய கோபத்தோடு லாவன்யாவை பார்க்க, அவளோ, பதறிப்போய் “இதுவரை அவனை என்னை தொடவிட்டதே இல்லை, சத்தியமா!” “முதன்முதலா என்னை தொட்டது, கிஸ் பண்ணது, அழுத்தமா பிடிச்சது எல்லாமே நீ தான்” ஒரு வேகத்தில் இவள் சொல்லி விட்டு , வாயிலேயே அடித்து கொண்டாள்.

நமட்டு சிரிப்பு சிரித்தவன் ‘ம் அப்படியா, எனக்கொன்னும் நியாபகம் இல்லையே’ விக்ரா இவளிடம் வழக்கம் போல சிலுவிலுக்க, முதல் முறையாய் செக்க சிவந்து போனது அவள் முகம்.

சிவந்த முகமே அவனை ஜிவ்வென பறக்க செய்வதாய் இருந்தது.

அங்கு விஜயோ, செல்லத்தின் இடையில் போட்டு இருந்த விரல்களை சற்றே மேல் நகர்த்தி செல்ல

கொதித்தெழுந்தான் செல்லம், கையை உதறி தள்ளிவிட்டவன் “எடுபட்டபயலே.. எங்க எங்க எங்க வந்து பிடிக்கிற.. ஏண்டா நேரா விரல் மொத்தமும் அங்கேயா போகும்.

நல்ல வேளை நான் வந்தேன். இல்லை அந்த லாவா புள்ள வந்திருந்தா, புள்ளையோட தான அனுப்பி இருப்ப” என கனீர் குரலில் கத்தியபடி படீரென திரும்ப, அதிர்ச்சியில் மடார் என விழுந்தான் விஜய்.

செல்லபாண்டியா என் உருவத்தில் இருந்தது என அதிர்ச்சியில் இருந்த லாவாவோ  சிரிப்பை அடக்க முடியாமல் திணற, விக்ராவை விஜயை கொன்று போடும் கோபத்தில் இருந்தான்.

லயாவிற்கு பதிலாய் இவனை கண்டவனோ “டேய்.. லயா எங்கடா? நீ அவளோட சுடிதாரை போட்டுட்டு இங்க என்னடா பண்ணிட்டு இருக்க” என விஜய் சமாளிக்க

“நீ என்னடா பண்ணிட்டு இருக்க.. வீட்டுல ஒரு பொண்ணை வச்சுகிட்டு, வேற ஒருத்திகிட்ட வந்து உன் வேலையை காட்டுற, நீயெல்லாம் மனுசபிறவியே இல்ல தெரியுமா?

தெரு நாய்க்கு கூட தெரியும் அது ஆம்பளை நாயா? பொம்பளை நாயான்னு, தெரு பொறுக்கி நாயே உனக்கு தெரியுதா?” என செல்லபாண்டியின் குரல் ஏறிக்கொண்டே செல்ல, எங்கே ஆட்கள்  கூடிவிடுவார்களோ என பார்வையை சுழற்றியபடி வேகவேகமாய் அங்கிருந்து சென்றுவிட்டான்.

கிட்டதட்ட ஓட்டமெடுக்கும் அவனை இழுத்து வைத்து தோலை உறிக்க நமநமத்துகொண்டிருந்தது விக்ராவின் கைகள். ஆனால் இத்தனை தூரத்திற்கு இடம் கொடுத்து வைத்திருக்கும் லாவன்யாவையும் அருகில் வைத்து கொண்டு செய்வதறியாது நின்றிருந்தான்.

அதற்கு பிறகு “என்னவே நடக்குது, நீ ஏதோ பிராங் பண்ண போறேன்னு சொல்லி தான இந்த கெட்டப் போட்டு கூட்டியாந்த, இங்க என்னென்னவோ நடக்குது. என்னடா பிரச்சனை. ஏய் லாவன்யா நீயாவது சொல்லித்தொலையேன். உன் பேரை சொல்லி தான் பிணாத்திட்டு திரியுறான் அந்த நாய்” என கொந்தளிந்துக்கொண்டு வந்த செல்லபாண்டியிடம்

“நீ வீட்டுக்கு போடா.. நான் வந்து பேசுறேன்” என அவனை அனுப்பிவைக்க, தலை குனிந்து நின்றிருந்த லாவன்யாவை முறைத்தபடி “என்னன்னு பாருலே ஏதோ இருக்கு, விஜய் இப்படி பண்றவன் இல்லை” விஜய்க்கு செல்லபாண்டி சர்டிபிகேட் வேறு கொடுத்து சென்றான். கூடவே அவன் கொண்டு வந்த பைக் சாவியையும்.

இவளை முறைத்தபடி “வா உன்னை வீட்டில் கொண்டு போய் விடுறேன்” என அவளுடன் கை கோர்த்து கொள்ள, அதை கவனியாது இவளும் அவனுடன் நடந்து வந்தாள்.

கவனித்த பொழுதோ கோர்த்திருந்த கைகளை மெதுமெதுவாய் அவனறியாமல் பிரிக்க எத்தனிக்க, இவனோ இறுக்கி பிடிக்க “கையை விடு” என இவள் கெஞ்ச, அதற்கு மதிப்பு கொடுத்து கையை விட்டவன், அவளை பைக்கில் ஏற்றி கொண்டு கிணற்றடிக்கு வந்து சேர்ந்தான்.

“எங்க வீட்டுக்கு போகனும், இங்க எதுக்கு கூட்டிட்டு வந்திருக்க” முகம் சுருங்கிட பைக்கை விட்டு இறங்கினாள்.

“ம் உன்னை ரேப் பண்ண தான்” சைட் ஸ்டான்ட் போட்ட படியே இவன் பேச, பதிலுக்கு அவள் முறைத்து பார்த்தாள்.

“நீ ரேப் பண்ண விட்டுட்டு தான் மறுவேலை பார்ப்ப” “பீர் வாங்கிட்டு வந்தேன், அடிக்கலாமேனு கூட்டிட்டு வந்தேன்” கிணற்றை ஒட்டி சாய்ந்தமர்ந்து, பேக்கில் இருந்த பாட்டிலை எடுத்து வெளியே வைத்தான்.