Advertisement

மேகங்கள் ஒன்றோடொன்று உரசி வானில் காதல் கொள்ள மலையரசியின் மீது பூவாய்த் தூவத்துவங்கியது மழை..!!

அவரசமாக சகி குடையைத் திறந்து தனக்கும் ப்ரீத்திக்குமாய் உயர்த்திப்பிடிக்க..  அதிலிருந்து அழகாய் விலகிய ப்ரீத்தி சகியைப் பார்த்து பழிப்புக்காட்ட..

அவளது காதைப் பிடித்து திருகிய சகி, “என்ன விளையாட்டு இது..?? குடைக்குள் நட..”, அதட்டி உருட்டி இழுத்துக் கொண்டுசெல்ல.. முகம் சுறுங்கிப்போனது ப்ரீத்திக்கு..

“சகீம்மா.. ப்ளீஸ்.. ஒரே ஒருவாட்டி நனைஞ்சுக்கறேன்னே..”, கண்களை சுறுக்கி அவள் சிணுங்கிட.. சகியின் பிடி இன்னும் இன்னும் இறுகியது.. விடமாட்டேன் என்பதாய்..

அதை புரிந்தார்போல் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு வீடுநோக்கி சகியுடன் நடந்தாள் ப்ரீத்தி..

வளைந்து நெளிந்து போகும் பாதையில் வேகவேக எட்டுக்களுடன் இருவரும் நடக்க.. அவர்களை உரசிக்கொண்டு நின்றது ஒரு ஜிப்ஸி..

உடல் சட்டென விறைக்க ஓரடி பின்னடந்தவர்களை ஆசுவாசப்படுத்துவதாய் அதிலிருந்து வெளிவந்தது விஷ்ணுவின் குரல்..

“குட்டீஸ்.. நான்தான்.. வண்டியில் ஏறுங்க..”

“ஹை.. விஷ்னூப்பா..”, துள்ளிக்குதித்தபடி ஜிப்ஸியில் ப்ரீத்தி பின்னிருக்கையில் அமர..

அவனை முறைத்தபடி முன்னால் அமர்ந்தாள் சகி.. முகம் கோபத்தில் சிவந்து இதழ்கள் துடித்துக்கொண்டிருந்தது அவளுக்கு.. அத்தனை ஆத்திரம் அவன் மீது.. அவன் செயலில்..

அதை உணர்ந்தவனாய் அவளிடம் எதுவும் பேசாமல் ப்ரீத்தியுடன் உரையாடிக்கொண்டு வர..

சகியின் பார்வையோ மழையுடன் உறவாடத்துவங்கிய காரிருளுக்குள் வெறித்துக்கொண்டிருந்தது..

ஐந்து நிமிடம் கடந்திருக்க..

ஒரு பெரிய கேட்டட் கம்யூனிட்டிக்குள் நுழைந்த விஷ்ணுவின் ஜிப்ஸி அங்கு ஒன்றுபோல் கட்டப்பட்டிருந்த வீடுகளில் ஒன்றின் முன் நிற்க..

அவர்களை எதிர்பார்த்தாற்போல் உள்ளிருந்து ஜானகி வந்தார், “மழைப்பெய்யுது.. எப்படி வருவீங்கன்னு பயந்துட்டே இருந்தேன்.. நல்லவேளை விஷ்ணு இரண்டு பேரையும் கூட்டிட்டு வந்துட்டான்..”, பைகளுக்காக கைகளை நீட்டிட.. அதையெல்லாம் கண்டுகொள்ளாதவளாக யாரையும் நிமிர்ந்து பார்க்காது விறுவிறுவென ஜிப்ஸியைவிட்டு இறங்கிச் சென்றிருந்தாள் சகி..

“ச..கி.. ச..கி..”, ஜானகியின் குரல்ம ழையோடு மழையாக கரைந்துவிட, “என்ன தம்பி ஆச்சு இவளுக்கு..?? ஏன் இப்படிப் போறா அவ..??”, மகனைப் பார்த்துக் கேட்க..

“ப்ச்.. விளையாட்டா ஏதோ பண்ணப்போய் கோபம் அவளுக்கு..”

“ஏண்டா..?? அவளைப் பத்தித்தான் தெரியுமே உனக்கு.. இருந்தும் இந்த விளையாட்டையெல்லாம் நீ இன்னும் விடல.. அப்படித்தானே..??”, கோபம் குரல் முழுவதிலும்..

“பாட்டீ.. விஷுப்பா சும்மா விளையாட்டுக்குத்தான் செஞ்சாங்க.. அதுக்குப்போய் சகீம்மாக்கு கோபம் வந்திருச்சு.. அப்பாவைத் திட்டாதீங்க நீங்க..”, பெரியமனுஷியாய் விஷ்னுவிற்கு பரிந்துகொண்டு வந்தாள் பன்னிரெண்டு வயது ப்ரீத்தி..

“உங்கப்பனை ஒன்னு சொன்னா வரிஞ்சுகட்டிட்டு வந்திருவியே நீ..”, பாட்டியும் பேத்தியும் வழக்கிடத்துவங்க.. அங்கிருந்து அலுங்காமல் நழுவிய விஷ்ணு.. முதல் மாடியிலுள்ள பால்கனிக்குச் செல்ல..

அங்கு அவன் எதிர்பார்த்தது போலவே கம்பிகளின் மீது சாய்ந்து கண்மூடி நின்றிருந்தாள் சகி..

“ச..கீ..ம்..மா..”

நீ என்னை அழைத்தது எனக்குக் கேட்டது என்பதாய் சகியின் கண்கள் திறந்து மூட..

அவளது கைகளைப் பிடித்த விஷ்ணு, “என் மேல கோபமாடா..??”, என்று கேட்டிட..

இடமும் வலமுமாக தலையசைத்தவள், “எனக்கு என்மேலதான் கோபம் விஷ்ணு.. நான் ஏன் இப்படியாயிட்டேன்னு.. எல்லாம் என்மேல தான்.. இந்த கோபம் வெறுப்பு எல்லாம்.. தாங்க முடியல என்னால இந்தப் ப்ரஷரை.. எல்லாத்தையும் ஒவ்வொரு தடவையும் உங்க எல்லார் மேலையும் காட்டறேன் நான்..”, அவனது தோளில் இவள் சாய்ந்துகொள்ள..

தானாக அவளது தலையை வருடிக்கொடுத்தது அவனது விரல்கள்..

கண்களை விட்டு வெளியே வரத்துடித்த கண்ணீரைக் கட்டுப்படுத்தியவள் அவன் தோளின் மீது இன்னும் வாகாக சாய்ந்து கொண்டாள்..

பூமியிடம் தஞ்சமடையும் மழையாய்..!!

நேற்றுப் பெய்த மழையின் தாக்கம் சாலைகளில் இன்னும் மிச்சமிருக்க.. அதையெல்லாம் தாண்டமுடியாமல் தாண்டி பள்ளிக்கூடத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர் ப்ரீத்தியும் சகியும்..

“ப்ரீத்..தீ..”

“எஸ் சகீம்மா..”, அத்தனை குறும்பு ப்ரீத்தியிடத்தில்..

“நேத்து சைன்ஸ் க்ளாசில் என்ன பண்ண நீ..??”

“ஒ..ன்..னு..ம்.. ப..ண்..ண..ல..யே.. நா..ன்..”, அவளது திணறலே அவளைக் காட்டிக்கொடுக்க.. அவளை அசையாது பார்த்துநின்றாள் சகி..

அதில் தானாகவே தலை கவிழ்ந்தது ப்ரீத்திக்கு..

“ஹ்ம்.. அப்ப உனக்கே நீ பண்ணது தப்புன்னு தெரியுது.. அப்படித்தானே..??”

“தப்புதான்.. கிளாஸ்ல எல்லார் முன்னாடியும் அவனை அடிச்சது தப்புதான்.. ஸ்கூல்ல அத்தனை பேர் நிக்கறப்போ அடிச்சிருக்கனும் அவனை..”, தன் கண்களை நேருக்கு நேர் பார்த்து ஆக்ரோஷமாய் சொன்னவளைக்கண்டு அதிர்ந்துதான் போனாள் சகி..

“ப்..ரீ..த்..தீ.. அ..வ..ன்.. உ..ன்..னை..??”, இப்பொழுது திக்குவது சகியின் முறையானது..

“ச்சே.. ச்சே.. அவன் என்னை ஏதாவது பண்ணனும்னு கற்பனை பண்ணியிருந்தாலே கொன்..னு.. கொ..ன்னு.. போட்டிருப்பேன்ம்மா..”, தீவிரமாகச் சொன்னவள், “அவன் என் பக்கத்துல இருக்க பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்தான்.. அதான் கோபத்துல அடிச்சிட்டேன் அவனை..”, அவள் சொன்னதைக் கேட்டதும்தான் போன மூச்சு திரும்பி வந்ததுபோல் இருந்தது சகிக்கு..

தனது நடையை அப்பொழுதே நிறுத்திவிட்டு ப்ரீத்தியை அணைத்துக்கொண்டாள் சகி..

போவோர் வருவோர் எல்லோரும் தங்களைப் பார்ப்பதுணர்ந்த பொழுதும்.. அதையெல்லாம் கண்டுகொள்ளாது தனது குஞ்சை அடைகாக்கும் கோழியைப்போல் வெடவெடப்புடன் தன்னை அணைத்து விடுவித்தவளைக் கண்டு புன்னகைத்து, “ஒன்னுமில்லை சகீம்மா எனக்கு.. ஐ ஆம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட்..”, என்றாள் ப்ரீத்தி..

“இவளுக்குப் பிறந்திருக்கும் இந்தப் புதிய நம்பிக்கையும் தைரியமும்  ஏன் உனக்குப் பிறக்கவில்லை இன்னும்..??”, என்றும் போல் இன்றும் கேள்வி உதிக்க.. அதை ஒதிக்கித்தள்ளிய சகி, “ஐ நோ பேபி.. யூ ஆர் ரியலி ஸ்ட்ராங்க்.. பட்.. நீ பண்ணது சரியில்லை பேபி..??”, கண்டிப்பு கலந்து..

“என்னம்மா சரியில்லை..?? அவனை அடிச்சதா..?? விஷ்ணு அப்பாட்ட சொல்லியிருந்தேன்னா இந்நேரம் என்னை பாராட்டியிருப்பார் தெரியுமா..??”, சகி தன்னைப் பாராட்டவில்லையே என்ற ஆதங்கம் அவளுக்கு..

“உங்க விஷ்ணு அப்பாவும் நீ பண்ணது சரியில்லைன்னுதான் சொல்லியிருப்பார்..”, அழுத்தம் திருத்தமாக சகி சொல்லிட..

கேள்வியாய் அவளைப் பார்த்திருந்தாள் ப்ரீத்தி..

“நெஜமாத்தான் கண்ணா.. நீ அப்படி அவனை அடிச்சிருக்கக்கூடாது..”

“அப்போ அவன் பண்ணது சரீன்னு சொல்றீங்களா..??”

“ப்ச்.. அப்படிச் சொல்லல நான்.. அவன் பண்ணது தப்பு ரைட்.. அதைப்பத்திப் பேசலை நான்.. ஆனால் நீ பண்ணது சரியில்லைன்னு சொல்றேன்..”

“புரியலையே எனக்கு.. ஏன் நான் பண்ணது சரியில்லை..??”

“ஏன்னா அவன் பண்ண விஷயம் அவனுக்கே சரியா தப்பான்னு தெரியல.. அந்தப் பொண்ணு மேல அவனுக்கு ஏதோ ஒரு அட்ராக்ஷன்.. அது லவ்வுன்னு தப்பா இமாஜின் பண்ணிட்டு ஒரு ஆர்வத்துல லவ் லெட்டெர் கொடுத்துட்டான்.. அதுக்கு நீ அவனை அடிச்சிருக்கத் தேவையில்லை.. உங்க சயின்ஸ் மிஸ்க்கிட்டயோ இல்ல என்கிட்டயோ அந்த லெட்டெரைக் கொடுத்திருக்கலாம்.. நாங்க அவனுக்கு எடுத்துச் சொல்லி புரிய வெச்சிருப்போம்.. விஷயம் ஒருநாலஞ்சு பேரோட முடிஞ்சிருக்கும்.. பட் இப்பப் பாரு.. உன் கிளாஸ் முழுக்க பிரச்சனை என்னன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.. அந்தப் பையனுக்கும் கஷ்டம்.. பொண்ணுக்கும் கஷ்டம்..”

சின்னதாய் மௌனம் ப்ரீத்தியிடத்தில்.. அவள் யோசிக்கிறாள் எனப்புரிந்தது சகிக்கு..

பள்ளிக்கு இன்னும் சில அடிகளே இருக்க, “ம்மா.. நான் தப்புப் பண்ணிட்டனோ..?? அவன் அந்த லெட்டர் என்க்கிட்டக் கொடுத்து அந்தப் பொண்ணுக்கிட்ட கொடுக்கச் சொன்னப்போ.. அந்தப் பொண்ணுக்கு அவ்ளோ நடுக்கம்.. பயம்.. விட்டா அழுதிருப்பா அந்த நிமிஷமே.. அதான் எனக்கு கோபம் வந்து அடுச்சுட்டேன் அவனை..”, தன் முகம் பார்த்து ப்ரீத்தி சொல்ல..

“தட்ஸ் ஓகே கண்ணா.. நீ வேணும்னே பண்ணலைன்னு புரிஞ்சுது எனக்கு.. அவங்க இரெண்டு பேரையும் கூப்பிட்டுவெச்சு உங்க சயின்ஸ் மிஸ் பேசியிருக்காங்க.. உன்கிட்ட என்னைப் பேசச் சொன்னாங்க.. உனக்கு சிட்டுவேஷன் புரிஞ்சிருச்சுதானே..??”

“எஸ் சகிம்மா.. ஐ அண்டர்ஸ்டான்ட்..”

“அப்போ பிரச்சனையில்லை.. ஐ நோ யூ வில் ஹாண்டில் இட் மோர் பெட்டர்..”

என்ன தோன்றியதோ கொஞ்சமாக எம்பி சகியின் கன்னத்தில் முத்தமிட்ட ப்ரீத்தி.. தனது கிளாஸ் நோக்கி ஓடிச் சென்றிருந்தாள்..

முழுதாக ஒருநிமிடம் அவள் சென்ற திசையைப் பார்த்து நின்ற சகி.. ஆபிஸ் ரூமிற்குச் சென்று பயோமெட்ரிக் அட்டண்டன்ஸ் வைத்துவிட்டு ஸ்டாப்ரூமிற்குச் செல்ல..

ஆருயிரே ஆதி அந்தம் கடந்த

ஆத்மார்த்த பந்தம் இது..!!

ஆண்மையின் ஆணவமும்

அனுவனுவாய் அடிப்பணிகிறது

அணங்கு உன்னிடத்தில்..!!

அசையும் உன் விழிகள்

அந்தணன் என் ஆழ்மனம் தழுவி

அகம் படித்திட அன்பே ஆனந்த

அவஸ்தையில் நானும் மௌனமாககிறேன்..!!

 

அவளை வரவேற்பது போல் ஒலித்தது கம்ப்யூட்டர் டீச்சர் ப்ரணித்தாவின் தொலைப்பேசி..

எதிர்பாராமல் கேட்ட அந்தப் பாடலில் உடல் முழுதும் நடுங்கத்துவங்கியது சகிக்கு..

கதவைப் பிடித்துக்கொண்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டவள்.. தனது இருக்கையில் சென்றமர.. மர்மப்புன்னகை ப்ரணித்தாவிடம்..

“இப்பத்தானே பேசுனோம்.. அதுக்குள்ள என்ன..??”, குழைந்துபோய் அவளது குரல் ஒலிக்க..

ஏதோ ஒரு உணர்வில் உடல் முழுவதும் எரியத்துவங்கியது சகிக்கு.. அவளது கவனம் முழுவதும் ப்ரணித்தாவிடமே..

முழுதாக.. முழுதாக பதினைந்து நிமிடம் கடந்திருக்க.. போனை அணைத் ப்ரணித்தா சகியைப் பார்த்து புன்னகைத்து, “அவர்தான் சகீ..”, வெட்கத்துடன் சொல்ல..

கொஞ்சம் முகத்தைத் திருப்பிக்கொண்டவள்.. சந்தோஷமென முணுமுணுத்துவிட்டு புத்தகத்திற்குள் மூழ்குவதுபோல் பாவனை செய்ய..

சிரிப்பை அடக்கமுடியவில்லை மற்றவளுக்கு..

“என்னமா.. காலைலயே வயிறு எரியும் வாசனை இங்கவரைக்கும் அடிச்சுதே.. என்ன விஷயம்..??”

“எல்லாம் என் காலர் ட்யூன் செய்த மாயம்ண்ணா..”, கலகலவென ப்ரணித்தா சிரித்திட.. மறுமுனையில் இருந்தவனுக்கு அத்தனை சந்தோஷம்.. அவளின் சிரிப்பைக் கேட்டு..

வருடங்கள் பல கடந்து அவன் கேட்கும் சிரிப்பு சத்தம் அது..

“இப்படியே நீ சந்தோஷமா சிரிச்சுட்டே இருக்கனும்டா..”, முழுமனதாக இவன் சொல்ல..

“சிரிக்கலாம்ண்ணா.. கண்டிப்பா.. நாள் கணக்கா சிரிக்கலாம்.. ஆனால் அதுக்கு முன்னால அவனுங்க ஒருத்தரும் உ..யிரோ..ட இருக்கக்.. கூடா..து.. கொல்லனும் அவங்களை எல்லாம்..”, தனது முழு ஆத்திரத்தையும் அடக்கமுடியாமல் பற்களை நறநறவென அவள் அறைக்கத்துவங்க..

சில்லிட்டுப் போனது அவனுக்கு..

“ப்..ரணீ..ம்மா..”

“சா..கனு..ம்ண்..ணா.. அவ..ங்க.. நாங்க ஒவ்வொரு நிமிஷமும் அனுபவிச்ச வலியை அவங்களும் அனுபவிக்கனும்.. ஏன் இந்த நிமிஷம் உயிரோட இருக்கோம்னு அவனுங்க ஒவ்வொரு நொடியும் நினைச்சுத் தவிச்சு சாகனும்.. அப்பத்தான் எனக்கு நிர..ந்திர.. நிரந்..தர நிம்மதி.. சிரிப்பு.. சந்தோ..ஷமெல்லாம்..”

“………………………………………”

“என..க்கு.. இப்..ப.. நி..னைத்..தா..லும்.. உ..டம்..பெல்..லாம்.. எரி..யுது..ண்ணா.. சு..த்த..மா.. தாங்கி..க்க..வே.. முடி..யல.. அப்ப நான் அனு..பவி..ச்ச எல்லாத்தையும் அ..வங்..களு..ம்.. அனு..பவிக்..கறாங்க..ள்ளோ.. அப்பத்தான் எனக்கு எல்..லாம்..”

“ப்ர..ணீம்..மா.. உன் கோபமும் ஆதங்கமும் எல்லாம் எனக்குப் புரியு..துமா.. ப..ட்.. எதுவா இருந்தாலும் யோசிச்சுப் பண்ணலம்மா.. அவசரப்பட்டு ஏதாவது பண்ணா அது நமக்கே எதிரா முடியும்.. மெது மெதுவா அவங்களுக்கான வலையைப் பிண்ணனும் நாம.. அதுல கண்டிப்பா மாட்டிக்குவாங்க அவங்க.. சுத்தமா சந்தேகம் வராம பண்ணனும்.. காத்திருக்கலாம்.. அவசரப்படக்கூடாது..”, அவளைப் போலவே அவனுக்கும் அவர்கள் மீது கோபம்தான்.. இப்பவே.. இந்த நொடியே கொல்லும் கோபம் அவனுக்கு.. இருந்தும் தனது நிதானத்தை இழக்கவில்லை அவன்.. இழந்திட விரும்பவில்லை அவனுக்கு..

“………………………………………”, அவளது மூச்சுக்காற்றின் சத்தமே காட்டிக்கொடுத்துவிட்டது கோபத்தின் அளவை..

“ப்..ர..ணீ.. புரி..ஞ்சு..க்கோடா..”

“………………………………………”, இப்பொழுதும் அமைதியே அவளிடத்தில்..

“பா..ப்பா.. நான் உனக்கு கெடுதல் செய்வேண்ணு நினைக்கறியா..??”, அழுத்தமாக அவன் கேட்டிட..

“என்..னண்ணா.. நீங்..க இப்படிக் கேக்கறீங்க..??”

“என் மேல நம்பிக்கை இருந்துச்சுனா பொறுமையா இருக்கனும் நீ.. நேரம் வரும் கண்ணா.. அப்போ உன்னை அங்க அழைச்சிட்டுப்போறேன் நான்.. சரியா..??”

“ஹ்ம்.. சரிண்ணா..”, அறைகுறையாக தலையசைத்தவள்.. ஏதோ ஒரு உந்துதலில் தலையுர்த்திப் பார்க்க.. அங்கு கைகளைக் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு நின்றிருந்தவனைக் கண்டு கையில் பிடித்துருந்த கைப்பேசி தானாக நழுவி அந்தப் புற்தரையில் விழுந்து சிதறியது..!!

– தீச்சுடர்..!! பற்றி எரியட்டும்..!!

Advertisement