Advertisement

IM 16 1

மூன்று சூரியன்கள் …. சூர்ய நாராயண பிரகாஷ், பாஸ்கர், பரிதி… மூவரும் SNP குழுமத்தின் தலைமை அலுவலகத்தில்… விவாதித்துகொண்டு இருந்தனர்.

பரிதி அங்கிருந்த டேபிளில் மார்க்கர் வைத்து.. இவர்களுடன் பேசியவாறே கீழ் உள்ளதை அட்டவணை படுத்தி இருந்தான்…

“மாமா… இது சரியா-ன்னு பாருங்க…”

https://drive.google.com/open?id=0B90DbrbbauXzZkVKNEJSOUkxdE5lSmNzV182N3MxR2p6eXVv

1.அனாமதேய போன் கால் டு அத்தை…..

2.சாம்பிள் ஏழெட்டு எடத்துல வாங்கி டெஸ்டிங் -க்கு தர்றாங்க, கேஸ் போடறாங்க……

3. இளங்கோவன் பாக்டரி-ல இறந்து போறாரு….

4. உங்களுக்கு வாய்தா கிடைச்சது…..

5. நீங்க இம்போர்ட் பண்ற மெட்டீரியல், வழில மாறுது…

6. ட்ரைவரை காணோம், வண்டியும் குப்பை மேட்ல அனாதையா கிடக்கு. [ இப்போ, எனக்கு வந்த தகவல் ]….

7. இளங்கோவன் மனைவி உங்க மேல கொலை பழி போடறாங்க….

இப்போ இருக்கிற க்ளூஸ் வச்சு நம்ம guess பண்ண முடிஞ்சது

(i )அத்தைக்கு போன் பண்ணினா… அவங்க சாம்பிள் கலெக்ட் பண்ணுவாங்கன்னு தெரியும்.. அப்போ அவங்களுக்கு போன் பண்றதுக்கு முன்னாடியே.. இங்க இறக்குமதியாகிற பொருட்கள் மாறியிருக்கனும் .. கரெக்ட்டா ?

(ii )நீங்க இந்த பாக்டரி வாங்கணும்-னு எப்போ முடிவெடுத்தீங்க? ஏன்னா… எதிரியோட டார்கெட் நீங்கதான் … [பாஸ்கர் இடைமறித்தான்.. “ஏன்?.. இந்த கம்பெனியா கூட இருக்கலாமே?”.. அதற்கு பரிதியின் பதில்… “May be ..இது ஒரு கெஸ் வொர்க் தான?”.., கேட்ட பாஸ்கர் “யா.. ப்ரொசீட் “, என்றான்..]

(iii ) அப்போ.. நீங்க வாங்க முடிவெடுத்த அப்பறம்…. அத்தைக்கு போன் வந்த நாள்… ரெண்டுத்துக்கும் நடுவிலதான்.. இந்த ப்ரொடக்ஷன் பிரச்சனை ஆரம்பிச்சிருக்கு… so….இங்க என்ன நடந்தது-ன்னு கண்டுபிடிக்கனும்….,

(iv ) தவிர…. நீங்க யாரோடையாவது பகைச்சுக்கிற மாதிரி.. ஏதாவது நடந்ததா?….. பாஸ்கர் .. நீ யாரோடையாவது முறைச்சியா ? பொதுவான உங்க தொழில் எதிரிங்க .. அவங்களை பத்தி விபரம் சொல்லுங்க….

(v )இந்த கம்பெனி வாங்கற விஷயம் வேற யாருக்கெல்லாம் தெரியும்?

பக்கா போலீஸ்காரனாய் விசாரணையை ஆரம்பித்து இருந்தான், இளம்பரிதி…. இம்மூவரும் பேசி முடிவெடுத்தவைகள்::

சரண்யுவிடம், அந்த மர்ம நபர் தொலைபேசியில் பேசிய தேதி, நபர் குறித்த தகவல்கள் ஏதாவது தெரியுமா, என்று கேட்பது …

இறந்த தொழிலாளி, இளங்கோவனின் மனைவியை தூண்டி விடுவது யார் என்பதை கண்டுபிடிக்க.. அப்பெண்ணின் தொலை /அலைபேசியை , நடவடிக்கைகளை கண்காணிப்பது [bugging ]…..[நான் பாத்துக்கறேன்]

மருத்துவ மனைகளில், வெளி மார்க்கெட்டில் இருக்கும் இவர்களுடைய இந்த தொழிற்சாலையின் தயாரிப்புகளை உடனடியாக திரும்ப பெறுவது …..என சிற்சில முடிவுகள் எடுத்தனர்… 

அனைத்திற்கும் மேலாய்… SNP ….”எது எப்படி இருந்தாலும்.. கம்பெனி நிக்க கூடாது… அங்க மொத்த யூனிட்-ம் நம்ம கண் பார்வைல இருக்கணும்.. ஓரொரு phase முடிஞ்சதும் குவாலிட்டி கண்ட்ரோல்-க்கு போய்ட்டுதான் அடுத்த வேலை நடக்கணும்…, 

ப்ரொடக்ட் எங்க போனாலும்…. இனி சீல் வச்ச கன்டைனர் ல தான் போகணும்.. நம்ம யூனிட்-லேர்ந்து நம்பிக்கையான ஆளுங்களை இங்க அப்பாயிண்ட் பண்ணு .. அந்த GM .. தினமும் நம்ம ED பரந்தாமனுக்கு ரிப்போர்ட் தரணும்… இப்போ இம்போர்ட்ஸ் வந்த ப்ராடக்ட் எல்லாம் கம்ப்ளீட்டா லேப்-க்கு அனுப்புங்க… இனி ஒரு தரமில்லாத ஸ்டாக் நம்ம கம்பனி-லேர்ந்து போக கூடாது…

எவனோ எங்கிட்ட விளையாடி பாக்கறான்..விடக்கூடாது…”, என்று சினம் தெறிக்க, கோபத்தில் குரலின் கடுமை கூட வெஞ்சினத்துடன் கூறியதில்… பாஸ்கருகும் பரிதிக்குமே பயம் வந்தது… 

விதி மட்டும் அமைதியாய்.. “உங்க எதிரி ….. மட்டும்தான் உங்களை டார்கெட் பண்ணுவானா?….ம்ம்ம்ம் ?? ” ஓரமாய் உட்கார்ந்து கேள்வி கேட்டது.. யாருக்கும் கேட்கத்தான் இல்லை….

++++++++++++++++++++++++++++++++++++++

“இப்போ கடைசியா என்னதான் சொல்ற?”

” நீங்க சொன்னதை அத்தை என்கிட்டே சொல்லட்டும்… அவங்க சொன்னா நான் கேக்கறேன் “

பாஸ்கரின் பதில் மௌனம்… அவன் அன்னையிடம் கேட்க மாட்டான்.. கேட்கவும் முடியாது….

“சாரி பாஸ்… நிச்சயமா நான் கேஸ் ல வாதாடத்தான் போறேன்…அத்தைக்கு வேணா.. குடும்பம்.. மாமாவோட மரியாதை… இதெல்லாம் கண்ணை மறச்சிருக்கலாம்.. அப்போகூட.. அவங்க என்னத்தான் ஆர்க்யூ பண்ண சொன்னாங்களே தவிர… கேஸை வாபஸ் வாங்க சொல்லி எங்கயும் எப்போதும் சொல்லல… வெல் .. அவங்களை பொறுத்த வரை அவங்க கரெக்ட்… இனி இந்த கேஸ் முடியிற வரை நாம பேசாம இருக்கறது நல்லது… மீறி, போர்ஸ் பண்ணினா… த்ரெட்டெனிங்-ன்னு உங்க பேர்-ல சார்ஜ் வரும்… “

” ஓகே… நான் போனை கட் பண்றேன்.. இனி பேசவும் மாட்டேன்.. ஒண்ணே ஒன்னு தான் கேக்கணும்.. “.. சின்னதாய் இடைவெளி விட்டு … தீக்ஷன்மையான குரலில் கேட்டான்…., “கல்யாணம்-னு ஒன்னு ஆனாதான் .. இது உன்னோட குடும்பமா?”.. கேள்வி குத்தீட்டியாய் கல்பலதிகாவின் இதயத்துள் நுழைந்தது….

ஆழ்ந்த பெருமூச்சுடன்..”நமக்கு கல்யாணம் ஆகி இருந்தாலுமே, நான் கேஸ் நடத்தி இருப்பேன்… உங்களுக்கு என்னை தெரியும்.. என் கொள்கைகள் தெரியும்.. நீங்க இப்படி கேட்டு இருக்க கூடாது…. பை …”, சொன்னவள் வார்த்தைகளில் வலி மிகுந்திருந்தது…

போனை வைத்த பாஸ்கர் ஆதித்யா… நினைத்தான்.. ஆம் நான் கேட்டிருக்க கூடாது.. அவளை தெரிந்திருந்தும்.. ச்சே…. 

லதிகாவின் தந்தை …பரம்பரை விவசாயி… அவரின் தந்தை இறந்ததும்.. சொத்துக்களுக்கு பங்காளிகள் சண்டையிட … வழக்கு பதிவு செய்யப்பட்டு .. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் …. எதிரணி தரப்பால் இழுத்தடிக்கப்பட…. வழக்கிற்காகவே வாழ்ந்தார்… பசியும் பட்டினியுமாய் உழைத்தார்… கடைசியில் காய்ந்து போன வயல் வரப்பை பார்த்தவாறே இறந்தும் போனார்… அதன் பின்னும் வழக்கு நடந்தது… ஆம்… வாதியும் இல்லை… பிரதிவாதியும் இல்லை…. வழக்கு மட்டும் உயிரோடு இருந்தது….தீர்ப்பு இவர்கள் பக்கம் சாதகமாயும் வந்தது… தாமதிக்கப்பட்ட தீர்ப்பு… 

விவசாயம் செய்ய ஆளில்லாமல்… நிலத்தினை ஒத்திக்கு விட்டனர். குத்தகையில் இவர்கள் வாழ்க்கை வண்டியும் ஓட … அன்றே முடிவெடுத்தாள், சட்டம் படித்து…. முடிந்த வரை சட்டத்தினை சாமானியர்களுக்குமாய் எளிமையாக்கி ….. கண் முன் நிகழும் அநீதியை எதிர்ப்பதை முழுநேர வேலையாய் செய்ய வேண்டுமென.. அதையே செய்து கொண்டு இருப்பவள், கல்பலதிகா … 

அவளே தவறு செய்தாலும் …. அவளால் நியாயப்படியே நடக்க இயலும்.. இது புகட்டப்பட்டதல்ல… படிமமாக்கப்பட்டது…. மாறாது…

அவளிடம் பாஸ்கர் ஆதித்யா… வழக்கை திரும்ப பெறும்படி கேட்டது தவறுதான்… ஆனால், அவனை பொறுத்தவரை இந்த குளறுபடிகள் எல்லாம் எதோ ஒரு மூன்றாம் மனிதனின் திட்டமிடப்பட்ட சதி.. 

… அவரவர்க்கு அவரவர் நியாயங்கள்….

IM 16 2

பூர்வத்தில் மக்களை வர்ணாஸ்ரம தர்மப்படி நான்கு வகைகளாக பிரித்தனர் ….

பிராம்மணன்.. : கற்றலும்.. கற்பித்தலுமே தொழில்.. மாணவர்கள் தரும் குரு தட்சிணை கொண்டோ … இரந்தோ … (பிச்சை கேட்டோ ).. வாழ்க்கை நடத்த வேண்டும்… நாளை என்பதற்கு அல்ல…, இன்றே கூட… அடுத்த வேளை உணவுக்கும் … இவர்கள் சேர்த்து வைக்க கூடாது….

க்ஷத்திரியன் : அபயம் என்று எதிரியேவரினும்… காப்பது இந்த வர்ணத்தவரின் தர்மம் . மக்களை.. நாட்டை.. மரபை.. கலாச்சாரத்தை காப்பது இவர்களே….

வைஸ்யர் : வணிகம் .. இவர்களது தொழில்… 
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல.
பழியஞ்சி…. பொருள் சேர்த்து… பகுத்துண்பது தர்மமென உரைத்தது உலக பொதுமறை… 

சூத்திரர்கள் … அனைத்து வேலைகளுக்கும் சூத்திரம் தெரிந்தவர்கள்… செயல் வீரர்கள்… பெரும்பான்மையானவர்கள்… நாட்டின் கட்டுமானத்தில் இவர்களே பங்கு வகித்தனர்..

இப்போது வர்ணாஸ்ரம தர்மங்கள் அனைத்தும் போயின…. அனைவரும் ஒரே குலம் ஆனோம்… ஆம்… அனைவரும் வியாபாரம் செய்கின்றோம்… 

மக்களே… அறிவறிந்து சொல்லுங்கள்….பழியஞ்சித்தான் பொருள் சேர்க்கிறோமா நாம்?

கற்றவன் கல்வியை விற்கிறான்.. 

அரசு…. மக்களை விலைக்கு வாங்குகிறது, அவர்களின் பணத்தில். மதுவில் மூழ்கடித்து … பஞ்சமா பாதகங்கள் செய்ய தூண்டுகிறது…

வாணிபன் கலப்படம் செய்கிறான்.. 

இதோ இங்கே ஒரு வியாபாரியை பார்ப்போமா?

மனோகரன்… எந்தவிதமான கெட்ட பழக்க வழக்கங்களும் இல்லாதவன்…
அன்பான மனைவி… ஆறே மாதமான பிள்ளை… பணம் சம்பாதிப்பது அவன் குறிக்கோள்…. அதற்காக எந்த எல்லையும் தொடுவான். பழி பாவத்திற்கு அஞ்சாதவன்… கேட்டால்…. “நான் செய்யலைன்னா…. இன்னொருத்தன் செய்வான்… அதுக்கு நானே செய்ஞ்சு .. நாலு காசு பாக்கறேன்…”, என்பான்.. 

அவனது தொழில் மீன் வளர்ப்பு …. தொழில் முறையில் மீன் வளர்த்து .. சந்தையில் நல்ல லாபத்துடன் விற்பவன்… இதிலென்ன தவறு? ஆம்.. தவறில்லைதான்.. 

இவன் வளர்த்தது நாட்டு மீன்கள் என்றால் பரவாயில்லை.. , வியட்நாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட .. பாஷா வகை மீன்… அதையும் நல்ல முறையில் .. தேவையான தீவனம் தந்து வளர்க்காமல்.. ப்ராய்லர் கோழிகளை போல்…. ப்ராய்லர் மீன்களாய் வளர்த்தான்….

மீனின் எடை கூட… ஹார்மோன்கள் ….. அவை …நோய்வாய்ப்படாமல் இருக்க.. ஆன்டிபயாடிக் .. இவற்றை ஊசியால் செலுத்தி … விற்றான்…. ஒன்றுக்கு பத்தாய் லாபம் கொட்டியது…. மொத்தத்தில்.. உணவென்ற பெயரில்.. அனைத்து கெமிக்கல்களை சேர்ந்த குப்பையை /விஷத்தை விற்பனை செய்தான்….

மதுபாலா .. என்ற சரண்யுவின் தோழி .. இதைக்குறித்து ஆய்வு செய்திருப்பதால், இதைப்பற்றிய விபரங்கள் சரண்யு சாயாவிற்கு தெரியவர… தகுந்த ஆதாரங்களுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு… லதிகாவும்… சரண்யுவும் புள்ளி விபரங்களையும்.. லேப் [lab] ரிபோர்ட்டுகளையும் அள்ளி தெளிக்க…. விளைவு … மனோகரனின் மீன் பண்ணைகள் யாவும் சீலிடப்பட்டன… அங்கு வளர்ந்த மீன்களை, சுகாதார அதிகாரிகள் … குழி தோண்டி புதைத்தனர்… இவனின் மரியாதை மானத்தையும் சேர்த்து…. 

இப்பேற்பட்ட கல்மனக்காரனுக்கு … பூஞ்சை மனத்துடன் மனைவி…மீடியா , மனோகரனை கிழி கிழியென கிழிக்க… அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கினாள்…. 

இப்போது அவனிடம் பணம் இருக்கிறது… பணம் மட்டுமே இருக்கின்றது…. அவனும் .. அவன் குழந்தையும்.. சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்களாய்…. தனி மரமாய் நிற்கின்றனர்.. 

மகனை பார்க்கும்போதெல்லாம்.. மனோவிற்கு , சரண்யு.. நினைவில் வந்தாள் .. எப்படியாவது அந்த வக்கீலை கதற வைக்கவேண்டும் என்று முடிவெடுத்து.. அவளை பற்றிய அவளது குடும்பத்தை பற்றிய விபரங்களை சேகரித்தான் .. அப்போதுதான் SIPCOT GM, SNP அத்தொழிற்சாலையை வாங்குவதை குறித்து.. இவன் அனுப்பிய தரகர்களின் சொல்லி… இவன் அறிந்து கொண்டான்.. 

“வக்கீலம்மா … என்னை கலப்படக்காரன், விஷத்தை விக்கிறவன் -ன்னு சொன்ன தான?… உன்புருஷனுக்கும் அதே பேர் வர வைக்கிறேன் பாரு… அதை கேட்டு ஒன்னு …நீ இல்லாம போகணும்.. இல்ல தனியா போய் கஷ்டப்படணும் .”

இறக்குமதியான பொருட்களை வழியில் மாற்றினான்… சற்றே கூடுதலான அறை வெப்பநிலையிலேயே உருகும் பிளாஸ்டிக்கை தயாரித்து, மனோகரன் அனுப்ப.. அவை சந்தைக்கு செல்லும்வரை காத்திருந்து… பொது தொலைபேசியில் இருந்து சரண்யுசாயாவிற்கு போன் செய்தான்… 

நடுவில் இளங்கோவன் எனும் தொழிலாளியின் மரணம் .. இவனே எதிர்பாராத ஒன்று…. அதையும் இவனுக்கு சாதகமாக்கி கொண்டான்… கம்பெனியில் கலப்படம் செய்வது, இளங்கோவனுக்கு தெரிந்ததால் .. அவன் கொல்லப்பட்டான் என்று ஒரு வதந்தியை .. அடிமட்ட தொழிலாளிகள் & இளங்கோவனின் குடும்பத்தினர் காது பட பேச வைத்தான்…. அவன் [இளங்கோவன்] மனைவியும் அதை நம்பி…. SNP யிடம் பலர் அறிய, சண்டை போட்டது.. நமக்கு தெரிந்ததே….

கணவன், மகனுக்கு எதிராய் மனைவியும் மருமகளாய் வர போகிறவளும்… சாட்சியாய்.. பெண்… இவர்கள் அனைவருக்கும் துணை நிற்பது , மருமகன் இளம்பரிதி… உங்க கேஸை …. நாடே வேடிக்கை பார்க்க தயாராய் இருக்கு.. மனதுக்குள் நினைத்து கொண்டான்…

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை…..

மொழிவோம்

Advertisement