Advertisement

அத்தியாயம் – 1

 

    அந்த அதிகாலை வேலையில் தன் பொன் நிற கதிர்களை நிலம் முழுவதும் பரப்பி தன் காலை வணக்கத்தை தெரிவித்தது கதிரவன். அந்த கதிரவனின் பொன்னிற வெளிச்சத்தை சுமந்த படி கம்பீரத்தோடு மிளிர்ந்து கொண்டு இருந்தது நெல்லை சீமையின் நெல்லையப்பர் கோபுரம்……. அதன் சிறப்பையும், பெருமையையும் பல ஆண்டுகாலமாக தன்னுள் அடக்கி வைத்து கம்பீரமாக இருக்கிறது அந்த கோவில்.

காலை வேளையின் பரபரப்பு சிறிதும் இன்றி அந்த வீடு இல்லை இல்லை ‘மகேந்திர பூபதி’ அரண்மனை காட்சி அளித்தது…..  அங்கு வேலை செய்யும் வேலையாட்கள் தங்கள் கடமையை செவ்வனே செய்து கொண்டு இருந்தனர்.

கண்கள் மூடி பூஜை அறையில் அமர்ந்து இருந்த அமிர்தா அம்மாளின் வேண்டுதல் என்னவாக இருக்கும் என்று அந்த அரண்மனையில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்…… சாந்தமான முகம், கூர்மையான கண்கள் ராஜ பரம்பரையின் மிளிர்வு கொஞ்சமும் குறையாது காட்சி அளித்தார் அமிர்தா அம்மாள்.

கண்கள் திறந்ததும் அவரின் பார்வை அங்கு படத்திற்குள் ராஜா மாதிரி வீற்று இருந்த அவர் கணவர் ‘கங்காதர மகேந்திர பூபதி’ மீது இருந்தது……. அந்த படத்தின் அருகில் தம்பதியர் சகிதமாக ‘மகாதேவன் மகேந்திர பூபதி’ மற்றும் அவர் மனைவி ‘பாக்கிய லக்ஷ்மி’ தாய்மை சிந்தும் முகத்தோடு இருந்தார்.

கங்காதரனிருக்கு கல்யாணம் நடந்த புதிதில் அவரின் அம்மா கூறிய வார்த்தை அமிர்தா அம்மாளுக்கு நினைவு வந்தது “என் மூத்த மருமகள் பிள்ளை பூச்சு, பாசக்காரி……… அனால் உன் மனைவி தெளிவும், புத்தி கூர்மையும் உடையவள்… ஹ்ம்ம் மூத்தவளின் அந்த குணம் அவள் வாழ்கையை அளித்து விடுமோனு எனக்கு பயமாக இருக்கிறது தரன்….. நம்ம மகாவின் போக்கே சரி இல்லை பாக்கியாவும் அதனை அறிந்து கொள்ளாமல் இருப்பது இந்த மகாவிற்கு கூடுதல் தெம்பாக போய்விட்டது…. நீதான் மகனே நான் போன பின்ன உன் அண்ணன் குடும்பத்தை பாத்துக்கணும்” என்று ஒருமுறை சொல்லி இருக்கிறார்.

அமிர்தாவின் மாமியார் ஒரு தீர்க்கதரசி என்றே அவளுக்கு தோன்றும்… தன் பாக்கியா அக்கா கொஞ்சம் தெளிவாக இருந்தால் இந்த குடும்பம் இப்பொழுது இந்த நிலமையில் இருக்காது என்று அவள் நினைத்து நினைத்து வருந்தாத நாட்களே இல்லை…

“நம் பிள்ளைகளின் வாழ்கை எந்த வித தடங்களும் இல்லாமல் தொட்டது எல்லாம் வெற்றி பெற வேண்டும்……. உங்கள் எல்லோர் ஆசிர்வாதமும் அவர்களுக்கு வேண்டும்” என்று தன் பிராத்தனையை முடித்தார்.

“முத்து” என்று அமிர்தா அம்மாள் அழைக்கவும் அவருக்கு தேவையான காபி மற்றும் தினசரி நாளிதழுடன் வந்து நின்றான்… அதனை வாங்கி வரண்டாவில் உள்ள இருக்கையில் அமர்ந்தபடி புரட்டி கொண்டு இருந்தார் ….. அவர் பக்கத்திலே தலையை சொரிந்து கொண்டு இருப்பதை அறிந்தவர் “என்ன முத்து விஷயத்தை சீக்கிரம் சொல்லி விட்டு கிளம்பு” என்றார் நாளிதழில் இருந்து பார்வையை விலக்காமல்.

“ம்ம அம்மா பெரிய தம்பி ராகவ் வந்துருக்கு….”

ஒரே ஒரு நொடி அவரின் கண்ணில் மின்னல் போன்ற சந்தோஷ கீற்று வந்து மறைந்து சென்றது “எத்தனை மணிக்கு வந்தான்”

“ஒரு இரண்டு மணி போல இருக்கும் அம்மா….. அம்மாவிடம் சொல்லவானு கேட்டதுக்கு ஒன்னும் சொல்லாம போய்ட்டாரு” என்றான் தயங்கிவாறு. அவனும் தான் பார்க்கிறான் இங்கு வேலைக்கு சேர்ந்ததில் இருந்து பெரிய தம்பி இங்கு உள்ள யாரிடமும் பேசுவதே இல்லை….. சொல்ல போனால் அவர் இங்கு வீட்டில் தாங்குவதே அறிதான ஒன்று.

இருவரும் தங்கள் யோசனையில் திளைத்து இருக்கும் போது “பாட்டி” என்ற மழலை குரல் கேட்டு திரும்பினர். அங்கு மாடியின் முதல் படியில் தூக்கம் முழுமையாக களையாது கண்களை கசக்கிக்கொண்டு ஒரு ‘குட்டி கண்ணன்’ நின்று கொண்டு இருந்தான்……

அவனை கண்டதும் முகம் முழுக்க விசிக்க “நீ போ முத்து” என்று அவனை அனுப்பியவர் அந்த குட்டியை நோக்கி மலர்ந்த முகத்துடன் சென்றார். அமிர்தாம்மாள் அருகே வரவும் அவரின் காலை அணைத்து கொண்டு “அப்பா, அப்பா….” என்று கண்களை மூடி பிதற்றி கொண்டு இருந்தான்.

ஹ்ம்ம் அவரும் ஒருவாறு யூகித்தது தான்… ‘காலையில் அவன் அப்பா பக்கத்தில் இருக்கவேண்டும் அல்லாது வீட்டை இரண்டாக்கி விடுவான்…… இன்னும் சில நொடியில் அவன் அலாரம் ஆரம்பமாகி விடும்’ என்று நினைத்தவர் அவனை தூக்கி கொண்டு “ப்ரணு செல்லம் அழாம இருந்தால் உனக்கு பாட்டி சாக்கி தருவேனாம் சரியா குட்டி” என்றவரின் பேச்சிலே தன் ‘அப்பா’ வீட்டில் இல்லை என்பதை அறிந்தவன் உதடு பிதுக்கி அழுக ஆரம்பித்து விட்டான்.

“இனி உன்னை கட்டு படுத்தவே முடியாது…… அப்படியே இந்த குடும்பத்தின் பிடிவாதம் சற்றும் குறையாமல் பிறந்து இருக்கிறாய் கண்ணா” என்றார் ஆற்றாமையுடன்.

பின்ன ஊரையே தன் ஆளுமைக்குள் வைத்து இருப்பவர் இந்த சின்ன சிட்டுவை தன் கட்டுக்குள் கொண்டு வர முடியாது திணறி கொண்டு இருந்தார்…… அவன் அப்பாவை பார்த்து விட்டால் போதும் சமத்தாக தன் பாட்டியிடம் இருந்து விடுவான். அவனை சமாதானம் படுத்தும் வேலையில் அங்கு உள்ள வேலைகாரர்கள் முதற்கொண்டு ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

‘பிரணவ் மகேந்திர பூபதி’ பூபதி கும்பத்தின் குட்டி சக்கரவர்த்தி…. இரண்டுற வயது ஆகிறது வரும் விஜயதசமிக்கு அவனை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தன் மகன் கூறியதை நினைத்து பார்த்தார்…… ‘ஹ்ம்ம் இப்பொழுதே இந்த அரட்டை பண்ணுகிறான் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து விட்டால் எனக்கு விடியும் ஒவ்வொரு காலை பொழுதும் ஒரு ஜென்மம் தான்’ என்று பெருமூச்செறிந்தார்.

ரயில் தடதடக்கும் ஓசையை தவிர வேறு எந்த வித சத்தமும் கேட்கவில்லை அந்த அறையில் அவ்வளவு நிசப்தம்! அதுவும் தங்களுக்கு எதிரில் அமர்ந்து இருப்பவனின் மூளையில் என்ன ஓடுகிறது என்று அங்கு இருக்கும் இருவரால் கண்டு கொள்ளமுடியவில்லை.

“ஏன் தாமோதரன் அந்த கைதிக்கு இங்கு பாளை சிறையில் ஆபத்து உள்ளது என்று உங்களுக்கு எப்படி தெரிந்தது……?” ஆச்சிரியத்துடன் கேட்ட விஜயின் குரலில் திகைத்து அவனை நிமிர்ந்து பார்த்தவர் “அ……து என் யுகம் சார்…” என்று சொன்னவரின் பார்வை தன் அருகில் இருந்த சங்கரை ஒரு நொடி தீண்டியதை விஜய் கவனிக்க தவறவில்லை. “ம்ம வெல் பாளை சிறை இதுவரை இது போன்ற வழக்கை சந்தித்தது இல்லை…… இங்கு உள்ள கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அதற்கு முழு பொறுப்பும் இங்கு உள்ள அதிகாரிகள் தான் காரணம்…….” என்றவனின் பேச்சில் சங்கரின் உதடு ஒரு இகழ்ச்சி புன்னைகையை உதிர்த்ததை கவனித்தவன் ஒரு கூர்மையான பார்வையுடன் “நான் இங்கு உள்ள அதிகாரிகளில் என்னையும் சேர்த்து கொள்வதில் உங்களுக்கு எந்த வித வருத்தமும் இல்லையே மிஸ்டர். சங்கர்” என்றவனின் ஆழ்ந்த குரலில் மிரட்சியுடன் “அய்யோ அப்படி எதுவும் இல்லை சார்……. சொல்லப்போனால் இது எங்களுடைய முழு அலட்சியம் காரணத்தால் நடந்தது…..” வார்த்தைகளை மென்று விழுங்கியவாறு சொன்னார்.

ஒரு பெருமூச்சோடு எழுந்தவன் கொலை நடந்த சிறைக்கு தன் நடையை செலுத்தினான். தன் லேசர் கண்களால் அந்த அறையை துளைத்தவனின் பார்வையில் எதுவும் அகப்படவில்லை வெளியில் நின்று பார்த்து கொண்டு இருந்த ‘தாமோதரன், சங்கர்’ இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.

அந்த அறையின் மூலையில் மெலிதான கம்பி மின்னிகொண்டு இருந்ததின் அருகில் சென்று அதனை எடுத்து பார்த்தவனின் பார்வையில் அதில் இருந்த காய்ந்து போன ரத்தக்கறை நெற்றியின் நடுவில் ஒரு முடிச்சை ஏற்படுத்தியது.

விஜயின் கையில் இருந்த அந்த மெல்லிய கம்பியை பார்த்ததும் அங்கு இருந்த இருவரும் திகைத்து விழித்தனர்…. இருவரின் வெளித்தோற்றம் திகைப்பாக இருந்தாலும் அதில் இருக்கும் வேறுப்பாட்டை விஜயின் கண்கள் குறிக்க தவறவில்லை. “பாலும், கள்ளும் நிறத்தால் ஒன்று” என்று நாம் கேள்விபட்டது இல்லையா அதுபோல் தான் இருந்தது அவ்விருவரின் திகைப்பும்.

“இதை போரேன்சிக்கு அனுப்பி இதில் இருக்கும் ரத்தக்கறை கொலையாளி ராமுவோடதா என்று பார்க்க சொல்லுங்கள்” தாமோதரனிடம் கொடுத்து விட்டு ராமு கொலை செய்யப்பட்ட இடமான சிறைசாலை தோட்டத்திற்கு சென்றான்.

“சார் இங்குதான் ராமு அதிக நேரம் இருப்பான், அவன் இங்கு அடிக்கடி வருவதை தெரிந்து அன்று இரவு ராமு வரும் நேரம் பார்த்து அவனை கொலை செய்து இருக்கிறார்கள்….. இதோ இந்த செடி பக்கத்தில்தான் எப்பொழுதும் இருப்பான்” தனக்கு தெரிந்த விவரம் முழுவதும் தாமோதரன் சொல்லி முடித்தார்….. அவருக்கு தெரியும் தான் சொல்லாவிட்டாலும் எப்படியாவது விசயத்தை வாங்கி விடுவான் இதற்கு நம்மளே முதலில் சொல்கிறது மேல் என்று இருந்தது அவரது எண்ணம்.

அந்த தோட்டத்தை அளவிட்டவனின் கண்ணில் ஒன்றும் தென்படவில்லை…. “சங்கர் ராமுவின் ரிப்போர்ட் வந்ததும் என் அலுவலகத்திற்கு அனுப்பி விடுங்கள்… தாமோதரன் என் டிரைவர் வரவில்லை அதனால்…………….” என்று முடிப்பதற்குள் “அதனால் என்ன சார் நான் டிரைவ் பண்றேன்” என்றவர் உடனே வெளியே சென்றுவிட்டார். யோசனையோடு நின்று கொண்டு இருந்த சங்கரின் மீது ஒரு கூர்மையான பார்வையை செலுத்தியவன் சென்று விட்டான். விஜய் சென்றதும் தான் இழுத்து வைத்த மூச்சை விட்டவர் இதற்கு பின்  என்ன நடக்குமோ என்று அச்சத்தில் உறைந்து போய் நின்றவரை செல்போன் ஒலி கலைத்தது.

திரையில் தெரிந்த எண்ணை கண்டதும் சுற்றி முற்றி ஒருதரம் பார்த்தவர் அதனை இயக்கி மெதுவான குரலில் “எத்தனை முறை சொல்லி இருக்கிறேன் சார் நான் சிறைசாலையில் இருக்கும்போது போன் போடதிங்கனு……. உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை எனக்கு தான் எல்லாம்” ஒருவித ஆற்றாமையோடு சொன்னார்.

“என்ன சங்கர் குரல் உயருகிறது இது நல்லதுக்கு இல்லை….. எங்களிடம் இருப்பவர் எப்பொழுதும் ஒரு அடிமை போல் இருக்க வேண்டும் இங்கு நுழைந்ததும் சுயமரியாதை எதுவும் இருக்க கூடாது இதுவே கடைசி முறையாக இருக்கட்டும் உனக்கு” எதிர் திசையில் இருந்து வந்த கட்டளையில் இன்னும் பீதி ஆனவன் “அய்யோ தெரியாமல் பேசி விட்டேன் இனி கவனமாக இருக்கிறேன்…. சரி எதுக்கு இப்போ போன் பண்ணிங்க” என்றான் இறங்கி போன குரலில்.

“அந்த ‘DCP விஜய்’க்கு அங்கு என்ன வேலை…. அவன் எதற்கு இதில் தேவையில்லாமல் நுழைகிறான்” என்றதற்கு “எனக்கும் அது தான் சார் புரியவில்லை நானும் இதை எதிர்பார்க்கவில்லை…. சொல்லபோனால் அந்த ராமு கொலையை யாருமே கண்டுக்க மாட்டார்கள் என்று நினைத்தேன் ஆனால் இந்த அளவுக்கு விஸ்வரூபம் எடுக்கும் என்று நினைக்கவில்லை” என்றவனின் கூற்றை போல் தான் எதிர்திசை இருந்த நபரும் நினைத்தது.

“ம்ம சரி அங்கு நடக்கிறதை அப்டேட் கொடுக்க மறந்துராதே” என கூறி போனை வைத்து விட்டான். ‘ஹ்ம்ம் நான் சொல்லவில்லை என்றால் இவர்களுக்கு தெரியாது பார்?’ சலித்து கொண்டு இங்கு இருந்து அகன்றார்.

இங்கு விஜய் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனின் காலடி ஓசை வைத்தே யாரு என்று கணித்த அந்த வாண்டு தன் பாட்டியின் இடுப்பில் இருந்து இறங்கி “அப்பாஆஆஆ…..” என்று வீடே அதிரும்படி விஜயை நோக்கி மான்குட்டியாக ஓடினான்.

அவனின் வருகையை எதிர்பார்த்தவன் போல் உதட்டில் உறைந்த புன்னகையுடன் கைகளை விருத்தி ‘ப்ரணவை’ அணைத்து கொண்டான் அந்த வீட்டின் இரண்டாவது வாரிசும், அமிர்தம்மாளின் புத்திரனுமான ‘விஜய் மகேந்திர பூபதி’.

 

“வந்துவிட்டாயா! அய்யோ நீ வருவதற்குள் வீட்டை இரண்டாக்கி விட்டான் இன்னும் ஒன்றும் அருந்தவில்லை” தன் அம்மாவின் வார்த்தையில் ப்ரணவை தன்னிடம் இருந்து பிரித்தவன் “இப்படி செய்யாதே என்று அப்பா சொல்லி இருக்கிறேன் இல்லையா” விஜயின் கண்டிப்பான குரலில் கோபத்தில் அவனை விட்டு விலகி தன் பாட்டியிடம் ஒட்டிகொண்டான்.

கீழே நடக்கும் காட்சியை ஒரு பார்வையாளனாக மேலு இருந்து பார்த்து கொண்டு இருந்தான் ‘ராகவ்’. தன் அண்ணனின் வரவை உணர்ந்து பார்வையை மேலே செலுத்தியவனுக்கு கிடைத்தது ராகவின் இறுக்கமான பார்வை மட்டுமே…..

 

தொடரும்…..

 

Advertisement