Advertisement

அத்தியாயம் – 8

     ‘கிருஷ்ணன் சொல்வதை வைத்து பார்த்தாள் அவனுக்கு பின்னாடி ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது போல தெரிகிறதே’….

      “அனாதை பிள்ளைகள் தொலைந்தால் அதை போலீஸ் பெருசாக எடுத்துக்காது, பிரச்சனை எதுவும் வராது” குரல் நடுங்க சொன்னவனின் கூற்றை அமைதியாக கேட்டு கொண்டு இருந்தவன் “சரி அப்போ அந்த ஸ்கூல் பொண்ணு..?” கண்கள் சுருங்க கேட்டான்.

      “அது…. எனக்கு வந்த ஆர்டர் கிடையாது. அந்த பொண்ணு நானா போலோவ் பண்ணேன்.”

       “உனக்கு எப்படி இவர்களின் தொடர்பு கிடைச்சது? மெசேஜ் பண்றவன நீ பார்த்து இருக்கியா?”

        “நான் வளர்ந்தது எல்லாம் ஒரு ஆசிரமத்தில்…. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி என்னோட படிப்ப முடிச்சிட்டு வெளியே வந்தபின்னு வேலை தேடி அலைஞ்சேன். அப்போதான் இந்த பெருமாள் கூட பழக்கம் ஏற்பட்டது அவன் மூலமாக எனக்கு அவர்கள் தொடர்பு கிடைத்தது…”

      “வேலை முடிந்ததும் கட்டுகட்டாக பணம் எங்கள் இருவருக்கும் கிடைக்கும். இதுவரை யாரையுமே நாங்கள் பார்த்தது இல்லை… எனக்கு மெசேஜ் பண்ற நம்பர் அடுத்த நொடி டியக்ட்வ்வேட் ஆகிரும்”

       “பணம் எப்படி உங்கள் கைக்கு வந்து சேரும்?” என்றான் விஜய் யோசனையாக.

         “அந்த ஜெராக்ஸ் கடை அவர்களுடையது தான் இரண்டு வருடமாக நான்தான் பார்த்து கொள்கிறேன்…. நான் பொண்ணை ஓப்படைத்த மறுநாள் கடையின் உள்ளே பார்சலில் பணம் இருக்கும்”

         “அது எப்படி அந்த பெண்களை நீ ஒப்படைக்கும் பொழுது அவர்களின் ஒருவரை நீ பார்த்து தானே ஆக வேண்டும்” தன் சந்தேகத்தை கேட்டார் கேசவன். ‘அவருக்கு ஆச்சிர்யமாக இருந்தது.. ஒரு ஓட்டை கூடவா எதிராளி விட்டு இருக்க மாட்டான்? அந்த அளவுக்கு அந்த கூட்டத்தின் தலைவன் புத்திசாலியா?’

     “இல்லை சார் நான் நிஜமாக பார்த்தது இல்லை. பெண்களை அழைத்துக்கொண்டு அவர்கள் சொல்லும் பார்க்கில் உட்காரவைத்துவிட்டு வந்துவிடுவேன்… அதன் பின்பு எனக்கு எதுவும் தெரியாது” தனக்கு தெரிந்த வரை சொல்லிமுடித்தவனின் கைகள் கழுத்தை தடவிகொண்டே இருந்தது. இன்னும் அவன் பிடித்த வலி போகவே இல்லை… நொடி தாமதித்தால் கூட இந்நேரம் தான் உயிரோட இருந்து இருக்க மாட்டேன். ‘யப்பா என்ன வலி.. உயிர்!!!’

     உயிர் என்றதும்தான் அவனுக்கு நினைவு வந்தது ….அவன் குடித்த டீ நினைவுக்கு வர  “சார் எனக்கு தெரிந்த எல்லாத்தையும் சொல்லிட்டேன் எப்படியாவது என்னை காப்பாற்றுங்க….” என்று பதறியவனை கண்டு அங்கு உள்ள யாருக்கும் பரிதாபம் வரவில்லை எத்தனை பொண்ணுங்க வாழ்கையை கெடுத்து இருப்பான். தன் உயிர் என்றதும் ‘வலி’ தெரிகிறது, பிறர் ‘உயிர், மானம்’ என்றால் அலட்சியமாகிவிட்டது.

      பதறி கொண்டு இருந்தவன் சிறிது நொடியில் மயங்கி விழுந்துவிட்டான். விஜய் குறிப்பாக ‘பெருமாளின்’ புறம் பார்வையை திருப்ப விழுந்து அடித்துக்கொண்டு அவன் காலடியில் வந்தவன் “சார் நானும் அந்த கூம்பல யாரையும் பார்த்தது இல்லை.”

      விஜயின் நம்பாத பார்வையை உணர்ந்தவன் “நிஜமா சார், நானும்  ஒரு அனாதை…. எனக்கு படிப்பும் ஒழுங்கா ஏறாது அதனால பத்தாவது வர ஆசிரமத்தில படிச்சேன் அப்புறம் அங்க இருக்க பிடிக்காம ஓடி வந்துட்டேன். மார்க்கெட் கடையில ஒரு ஆறு வருஷம் வேலை பார்த்தேன்.. அப்போதான் ‘ஜான்’ ஒருத்தன் வந்தான்… எனக்கு பணம் கொடுத்து அவன் சொன்ன வேலை செய்தால் இன்னும் அதிகமா பணம் தருவேன்னு ஆசை காட்டினான். நானும் நமக்கு பணம் கிடைக்கிதுன்னு அவன் சொல்லற வேலை செய்வேன்.. இந்த ஆட்டோ வாங்கி கொடுத்தது…. கிருஷ்ணனை கூட்டிட்டு வர சொன்னது எல்லாம் அவன் போன் செய்து சொன்னது….”

      தன் கால்களை விரித்து அதற்கு இடையில் கரம் இரண்டையும் கோர்த்து பெருமாள் அருகில் குனிந்தவன் “அந்த ஜான் எப்படி இருப்பானு உனக்கு அடையாளம் காட்ட தெரியுமா”

       தலையை சொறிந்தவன் “இல்லை சார் அவன பார்த்து இரண்டற வருஷ மேல் ஆகுது… அதுவும் அவன் என்கிட்ட பேசும்போது கைக்குட்டையால் முகம் மறைத்து பேசினான்… அவன் முகம் துளியும் எனக்கு நினைவு இல்லை சார்” தனக்கு என்ன நடக்குமோ என்று பயந்து நடுங்கி கொண்டு இருந்தான்.

      அவனிடம் ஏதோ கேட்க்க வாய் திறக்கவும்…. கைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. வீட்டில் இருந்து அழைப்பு என்றதும் மணியை பார்த்தான் அது 4.30 என்று காட்டவும் ‘ப்ரணவ், கார்த்திகா’ நினைவு வந்தது.

       இருக்கையில் இருந்து எழுந்தவன் கேசவனிடம் இருவரையும் பாதுகாப்பாக வைக்க அவனுக்கு சொந்தமான குடன் ஒன்றை  சொன்னவன் நொடியும் தாமதிக்காது வண்டியை எடுத்துகொண்டு… ப்ளுட்டூத் கனெக்ட் செய்தவன் வண்டியை கல்லூரி நோக்கி செலுத்தினான்.

      “சொல்லுங்க அம்மா… ப்ரணவ் வீட்டுக்கு வந்துட்டானா” வாய் ப்ரணவ் என்று சொன்னாலும் மனம் முழுவதும் கார்த்திகாவை பற்றியே இருந்தது… பின்ன சும்மா இருந்தவளிடம் ‘தான் மாலை அழைக்க வருகிறேன்’ என வீம்பாக சொல்லிவிட்டான் . இப்போ எந்த கேஸ் விசாரணையில் எல்லாம் மறந்து விட்டது. இதற்கு இடையில் அவன் அன்னை ஒரு பத்து முறையாவது ‘விஜய் , விஜய்’ காத்திருப்பார்.

        தன் நினைவில் இருந்து மீண்டு வந்தவன் “சாரி மா… என்ன விஷயம் சொல்லுங்க”

        “என்னடா இது? உன் நினைவு எங்கு இருக்கிறது… உன் அண்ணன் ஒருமாதிரி நடந்து கொண்டால்!…. நீ வேறு விதமாக பித்து பிடித்தவன் போல் இருக்கிறாய்…” அவன் அன்னை வருந்தும் குரலில் சொல்லவும்.. ‘பித்து’ என்ற வார்த்தை கேட்டதும் மீண்டும் கார்த்திகா நினைவுதான் வந்தது…

           ‘ஹ்ம்ம் அதுதான் உங்க பையனை ஒருத்தி கண்ணை விரித்து, விரித்து  பார்த்து அப்படியே மயக்கி வச்சிருக்காளே.. சே மீண்டும் அவளிடமே நினைவு போகிறது’ என்றவனுக்கு அப்பொழுதுதான் அவன் அன்னை தன் அண்ணன் பற்றி சொன்னது நினைவு வந்தது       

            “அண்ணனுக்கு என்ன அம்மா …. ப்ரணவ்கிட்ட கோபமா நடந்துகிட்டனா. ப்ரணவ்க்கு ஒன்றும் இல்லையே”

       “கொஞ்சம் நேரத்திற்கு முன்னாடி உன் அண்ணன் கோபத்தோடு வீட்டுக்கு வந்து அவன் அறையில் உள்ள எல்லா பொருட்களையும் உடைக்கிறான். இதுவரைக்கும் அவனுக்கு இப்படி கோபம் வந்து நான் பார்த்தது இல்லை… ப்ரணவ் வேறு பயந்து போய் இருக்கிறான். நீ சீக்கிரம் வீட்டுக்கு வா”

         “அம்மா நான் வர அரைமணி நேரம் ஆகும்… பிஸினெஸ்ல ஏதாவது ப்ரோப்ளம் இருக்கும் அதான் டென்ஷன் ஆகிருப்பான் . நீங்க இதை நினைத்து பயப்படாம இருங்க ப்ரணவ பத்திரமா பார்த்துக்கோங்க” என்றவன் சிறிது ஆறுதல் சொல்லி டிச்கநேக்ட் செய்துவிட்டான்.

         நேராக கல்லூரி முன்னாடி வண்டியை நிறுத்தவும் நேரம் 4.50 காட்டியது.. மாணவியர்  கூட்டம் எல்லாம் சென்றுவிட கல்லூரி வெறிச்சோடி கிடந்தது… தன் போனில் இருந்து கார்த்திகா எண்ணிற்கு தொடர்பு கொண்டான்.

           அங்கு அவளோ அவன் தன்னை அழைக்க வரவில்லை என்று அவனை மனதில் தாளித்து கொண்டு இருந்தாள். பணியாற்றும் ப்ரோபெஸர்கள் வேறு ‘என்ன நீ கிளம்பவில்லையா’ என்று கேட்டு இருக்கும் கோபத்தை அதிகரித்து விட்டனர். கைபேசி சினுங்கவும் எரிச்சலுடன் எடுத்து பார்த்தவளுக்கு ‘ட்ரூ காலரில்’ விஜய்- டிசிபி என்று வரவும் ‘இவனுக்கு எப்படி நம் எண் தெரியும்’ நினைத்தவள் “ஹலோ” என்றாள்.

          “ம்ம் உன் கல்லூரி வாசலில் தான் நிற்கிறேன்… வெளியில் வா” அவன் மனகண்முன் கோபத்தில் நிற்கும் அவள் முகம் தெரிய வந்த சிரிப்பை இதழோரம்  அடக்கி கொண்டான்.

         ‘என்ன திமிர்… எனக்கே ஆர்டர் போடுகிறான்’ பல்லை கடித்தவள் “நான் வீட்டில் இருக்கிறேன் …. நீங்க சொன்னதும் உங்களுக்காக நான் வெயிட் பண்ணுவேன்னு நினைச்சது உங்க தவறு.” மிடுக்காக சொல்லி முடித்தவளுக்கு எதிர்புறம் அமைதியாக இருக்க காதில் இருந்து போனை எடுத்து அவன் கனெக்ட்ன்ல இருக்கிறானா என்று பார்த்தாள்.

         ‘போன் கனெக்ட்ன்ல இருக்கிறது பின் ஏன் அமைதியாகி விட்டான்’ அவள் யோசித்து கொண்டு இருக்கவும் தன் அருகில் நிழல் தெரிய ‘யார்’ என்று பார்த்தாள்… அவளின் கையை பிடித்து வேகமாக அழைத்து சென்றவனை அதிர்ச்சியோடு பார்த்தவள் பின் அவனிடம் இருந்து திமிரி விலக பார்த்தாள். “டிசிபி சார் கை…யை விடுங்க… போலீஸ் செய்ற வேலையா இது விடு…ங்க சார்” என்று திமிரியவளை கண்டுக்காது,

     “ஏய், மிளகாபட்டாசு இப்போ நீ அமைதியாக வரவில்லையென்றால் உன்னை அப்படியே தூக்கி காருக்கு அழைத்து சென்றுவிடுவேன் உனக்கு வசதி எப்படி?” என்று அவள் புறம் திரும்பி கண்சிமிட்டி புருவம் உயரித்தி மலர்ந்து சிரித்தவனை பார்த்து அசந்து போய் நின்றுவிட்டாள்.

        அவளின் மயக்கத்தை பயன்படுத்தி காரில் ஏற்றி லாக் செய்து வண்டியை கிளப்பினான்… லாக் சவுண்ட் கேட்கவும் மயக்கத்தில் இருந்து வெளியே வந்தவள் கோபத்தில் மூக்கு விடைக்க அவன் புறம் திரும்பியவள் “என் போன் நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும் … ஒரு போலீஸ் மாதிரியா நடந்துகிறிங்க? ஏதோ காலேஜ் படிக்கிற டீன் ஏஜ் பையன் மாதிரி இருக்கு உங்க பிஹேவியர்…” கோபத்தில் கத்தி கொண்டு இருந்தவளின் உதட்டில் ஒற்றை விரல் வைத்து “ஸ்ஸ்” என்று அடக்கினான்.

          “சரி நீ எதுக்கு நான் சொன்னதும் வெயிட் பண்ண… அதை முதலில் சொல்லு அப்புறம் நீ கேட்கும் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்” கண்கள் சிரிப்பில் சுருங்க தலை முடியை கோதியவாறு அவளிடம் கேள்வி கேட்டான். அவனுக்கு தெரியும் கண்டிப்பா அவளால் இதற்கு பதில் சொல்ல முடியாது… அதான் இந்த கேள்வி கேட்டு வைத்தான்.

         “அது… வந்து ..” அவன் எண்ணம் போலவே பதில் சொல்ல திணறியவள் எப்படி சொல்லுவாள் ‘அவளுக்கே அதற்கு உண்டான விடை கிடைக்கவில்லை!’. அதற்குள் கார் அவள் வீட்டில் இருந்து கொஞ்சம் தள்ளி நிறுத்தினான்.    

         தவித்து கொண்டு இருந்தவளின் வலது சுண்டுவிரலை பிடித்து தன் சுண்டு விரலோடு கோர்த்தவன் அவன் புறம் அவளை இழுத்தான். லேசாக அவன் அருகில் நெருங்கி வந்தவளின் வதனம் நோக்கி “ஹேய் பப்ளிமோஸ் ரொம்ப யோசிக்காத உன் வீடு வந்து விட்டது” என்று அவன் கூறியதும் தான் இருக்கும் இடம் உணர்ந்தாள்.

        தன் உதடு குவித்து மெலிதாக காற்றை அவள் முகம் நோக்கி ஊதினான்… கார்த்திகா கண்கள் அவனை நோக்கவும் “என் அருகில் இருக்கும்பொழுது வேறு எங்கும் உன் கவனம் செல்லகூடாது… ரைட்” என்றான்.

          மலங்க மலங்க விழித்தவள்  அவன் விரல் தீண்டியதும் உடல் சூடாக முகம் சிவக்க ‘சரி’ என்று தலை ஆட்டினாள். “என்னை உங்க..ளுக்கு முன்ன..மே தெரியுமா” திக்கி திணறி கேட்டாள்.

         அவளின் நெற்றியோடு நெற்றி முட்டியவன் “நான் காலையில் சொன்னது நினைவில் இல்லையா?… உன் கேள்விக்கு பதில் உன் ரூம் டேபிள் டிராவில் இருக்கிறது” என்றவன் “போய் வா” என்று அவளை இறக்கி விட்டான்.

          வழக்கம் போல் ஒரு சளிட்டுடன் அவளிடம் இருந்து விடைபெற்று சென்றுவிட்டான். “அத்தை” என்று மித்ரா வந்து அழைத்ததும் தான் தன் யோசனையில் இருந்து வெளிவந்தாள் அந்த பாவை.

தேவதை வருவாள்….

 

Advertisement