Advertisement

அத்தியாயம் -6

 

       தன் அறையில்  மறுநாள் மாணவர்களுக்கு நடத்த வேண்டிய பாடத்தை ப்ரிப்பர் செய்து கொண்டு இருந்தாள் கார்த்திகா. அவள்   அருகில் இருந்து ஹோம்வொர்க் செய்து கொண்டு இருந்த மித்ராவை பார்த்தவளுக்கு விஜயின் நினைவு தான் வந்தது…. அன்று வீட்டிற்கு வந்து மித்துவை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தவள் அவளிடம் எடுத்த கண்ணாடியை அவளுக்கு போட்டு விட்டவள் அவன் தனக்காக கொடுத்த கூலேர் எடுத்து போட்டவள் தன் அண்ணன் மகளை இடுப்பில் ஒற்றை கை வைத்து கெத்தாக பார்த்தவள்  “என்னடி முண்டகண்ணி அந்த டிசிபி எனக்குனு கொடுத்துட்டாரு…. ஆனா, நீ ரொம்ப என்னை அவன்கிட்ட மாட்டிவிட்டு நோஸ்கட் வாங்கி தர அப்புறம் என்கிட்ட இருந்து ஐஸ்கிரீம், சாக்கி எல்லாம் எதிர்பார்க்க முடியாது புரிஞ்சிக்கோ” ஒற்றை விரலை நீட்டி மிரட்டினாள்.

      ஐஸ்கிரீம், சாக்கி  கிடைக்காது என்று அவள் சொன்னதும் தன் அத்தையின் அருகில் சென்றவள் அவளை கீழே குனிய வைத்து நாடியை பிடித்து “என் செல்ல அத்தைய இனி எதும் சொல்ல மாட்டேன்… ப்ராமிஸ். ஐஸ்கிரீம், சாக்கி  வேண்டான்னு சொல்லாத” என்றவளின் கொஞ்சல் மொழியை கேட்டவள் இதழ் மடித்து சிரிப்பை அடக்கி “ஹ்ம்ம் பார்போம்” என்றாள் தன் கெத்தை விடாமல்.

      அதனை இன்று நினைத்து பார்த்தவளுக்கு இதழ் ஓரத்தில் சிரிப்பு தோன்றியது … ‘அன்று கல்லூரியில் நடந்த சம்பாஷனையை நினைத்து பார்த்தவளுக்கு அவன் கடமையில் இருக்கும்பொழுது காட்டும் இறுக்கம், வீராப்பு எதுவுமே தனிப்பட்ட வாழ்வில் நுழைய விடுவது இல்லை என்பதை நன்கு புரிந்து கொண்டாள்.   

     அவளிடம், பேசும் பொழுதும் , ப்ரின்சியிடம் பேசும் பொழுதும் சரி  இன்முகமாகவே இருந்தான்… அதுவே அவனிடம் இருக்கும் பெரிய ப்ளஸ்’ என்று அவனின் நினைப்பில் மூழ்கி இருந்தவள் அவன் தன்னை ‘பம்ப்ளிமோஸ்’ என்று சொன்னது நினைவு வர புத்தகத்தை கட்டிலில் போட்டு ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி போய் நின்றவள் உடலை சைடில் இருபுறம் அங்கும் இங்கும்  திருப்பி பார்த்து கொண்டு இருந்தாள்.

      தன் அத்தையின் நடவடிக்கையை விசித்திரமாக பார்த்து கொண்டு இருந்தாள் மித்ரா. தன் முகத்தை, வயிற்றை, கைசந்தை தொட்டு பார்த்து கண்ணாடியில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தவள் மித்துவின் புறம் திரும்பாமலே “ஏன் மித்து குட்டி நான் ரொம்ப குண்டா இருக்கிறேனோ” என்று கேட்டாள்.

      தன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு நேராக அவள் அருகில் சென்று குனியசெய்தவள் கார்த்திகாவின் கன்னத்தை தொட்டு காட்டி “இது மட்டும் குண்டா இருக்கு” அவள் கன்னத்தை கடித்து எச்சில் செய்தவளை தூக்கி அவளுக்கும் அதே தண்டனையை கொடுத்தவளின் முகம் விஜயின் அந்த செல்ல பெயரில் நாணி சிவந்து இருந்தது.

     விஜயின் நினைப்பில் இருந்தவளை “கார்த்தி அக்கா” என்ற குரல் கலைத்தது. தன் அண்ணன் மகளை கீழே இறக்கி விட்டவள் “ஹே வா சுஜி என்ன ஆளே காணும்” பக்கத்து வீட்டு பொண்ணிடம் விசாரித்தாள்.

    “நெக்ஸ்ட் இயர் டுவெல்த்….  இப்பவே அப்பா டியூஷன் சேர்த்து விட்டுட்டாங்க. அதான் உங்களே பார்க்கவே வர முடியல”

     “இப்போ மட்டும் மேடமுக்கு எப்படி டைம் கிடைச்சுதாம்” கையில் காபியுடன் வந்த மித்துவின் அம்மா கேட்டாள்.

      “அதுவா அண்ணி… ஒரு வாரமா எங்க அம்மா போடுற சுடுதண்ணி காபி குடிச்சு என் நாக்கே செத்து போய்ட்டு. இப்படியே போனா என் நாக்கை அடக்கம் பண்ணவேண்டியது வந்துருமோனு பயந்து போய்டேன். அதான் உங்க கையால காபி குடிச்சு செத்து போன என் நாக்குக்கு  க்ளுகோஸ் கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்” கண்கள் மலர்த்தி அபிநயத்துடன் சொன்னவளின் பேச்சில் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் கார்த்திகா.

      கார்த்திகாவை கண்டு முறைத்தவர் “சரியான வாலு… இருடி உன் அம்மாகிட்ட அப்படியே வத்திவைக்கிறேன்” என்றவர் அவள் காதை திருகி “உங்க அம்மா காபி சுடுதண்ணி, என் காபி க்ளுகோஸ்…. வாய் அதிகம்டி உனக்கு” என்றவரின் கையை தன் காதில் இருந்து எடுத்தவள் “ஐயோ அண்ணி நான் வராத இந்த இடைப்பட்ட நாளில் இவ்வளவு புத்திசாலியா மாறிட்டிங்க” ஆச்சிர்யமாக கண்கள் விரித்து கேடவளின் கேள்வி புரியாமல் முழித்து கொண்டு இருந்த தன் அண்ணி அருகில் சென்ற கார்த்திகா அவரை தோளோடு அணைத்து

        “ஐயோ அண்ணி அவள் உங்க காபியை கிண்டல் செய்ததை நீங்க உடனே கண்டு பிடிச்சிட்டிங்க அதான் உங்கள புத்திசாலின்னு சொல்லுறா…. இப்படி ஒண்ணுமே புரியாத அப்பாவியா இருக்கிங்களே அண்ணி” என்று இவளும் சேர்ந்து கிண்டல் செய்ய… அவளை தன்னில் இருந்து தள்ளி விட்டவர் “இருங்கடி மதியம் சாப்பிட வருவிங்கள அப்போ இருக்கு உங்களுக்கு…. என் அத்தான் முன்னாடி சொல்லி பாருங்க அப்புறம் இருக்கு உங்களுக்கு” என்றவர்  முகத்தை தோள்பட்டையில் இடித்து… இருவரையும் முறைத்தவாறு வெளியே சென்று விட்டார்.

       தன் அண்ணியின் செய்கையை கண்டு சிரித்தவள் ‘என்ன மித்து சத்தத்தையே காணும்’ என்று திரும்பி பார்தவளின் கண்ணில் மித்து கையில் வைத்து இருந்த புத்தகத்தில் இருந்த கிரீட்டிங் கார்டு மற்றும் சாக்லேட் பட்டது.

      அவசரமாக மித்து அருகில் சென்ற சுஜி அவள் கையில் இருந்த தன் புத்தகத்தை வாங்கினாள். அவள் வாங்கவும் உதடு பிதுங்க “என்க்கு சாக்கி வேணும்” மெத்தையில் குதித்து அழுதவள் தன் அத்தையிடம் கேட்டு முறையிட்டாள். முகத்தில் யோசனை படிய சுஜியை பார்த்தவள் தன் ஹன்ட்பாக்கில் இருந்த ‘கிட்க்கட்’ எடுத்து மித்துவிடம் கொடுத்து “நீ வெளியில் போய் விளையாடு” அவளை அனுப்பி வைத்தவள் கதவை மூடினாள்.

      “சொல்லு சுஜி ஏதாவது டவுட்டா….” எந்தவித உணர்வும் முகத்தில் காட்டாது சுஜி அருகில் வந்து அமர்ந்தாள்.

       குற்ற உணர்ச்சி முகத்தில் தெரிய “ஆமா அக்கா c- program கொஞ்சம் டவுட்டா இருக்கு…” அமைதியாக சொன்னவளின் புக்கை  எடுத்து சிறிது நேரம் பார்த்தவள் “வா சொல்லி தருகிறேன்…” கையில் பென்சில் சகிதம் இன்னும் கொஞ்சம் சுஜி அருகில் நகர்ந்து உட்கார்ந்தவளிடம் …. புக்கை வாங்கி மூடி வைத்து அவள் கைகள் இரண்டையும் தன் கைக்குள் வைத்து கொண்டாள் சுஜி.

      “ப்ளீஸ் க்கா இப்படி இருக்காத… உனக்கு கேட்கணும் நினைச்சத கேளு. மூணாவது மனுசி மாதிரி பிகேவ் பண்ணாத” என்றவளின் குரல் உடைந்து… கண்கள் ஒரு சொட்டு கண்ணீர் சிந்தியது.

     கண்ங்கள் சுருங்க அவளை பார்த்தவள் “சரி சொல்லு” என்று  அமைதியாக கைகள் கட்டி அமர்ந்து கொண்டு கொண்டாள்.

  கோர்த்து இருந்த கைகளை பார்த்துகொண்டே “எங்க ஸ்கூல் ஆப்போசிட்ல  ஒரு ஜெராக்ஸ் சென்ட்டர் வச்சிருக்கார்… என்கிட்ட ஒரு மாசத்துக்கு முன்னாடி லவ் சொன்னார். நான் முதலில் அதை அக்செப்ட் பண்ணல … அப்புறம் தாடி வச்சி, சோகமாவே இருந்தார் மனசு கேட்க்காம அவர்கிட்ட போய் இப்படி இருக்காதிங்கனு சொன்னேன்”  

    “ம்ம அதுக்கு சார்  என்ன சொன்னாங்க” என்றாள் கார்த்திகா கிண்டலாக. அவளின் கிண்டலை அறியாதவள் “அதுக்கு அவர் ‘எனக்கு உன் மீது வந்த காதல் யார் மீதும் இனி வராது அதனால் நான் இப்படியே இருந்து விடுகிறேன்…. நீ சந்தோஷமாக இருந்தால் அதுவே எனக்கு போதும்’ அப்படின்னு சொல்லிவிட்டார்” என்றவள் கார்த்திகாவின் முகத்தை தயக்கமாக பார்த்து “என்னால் தான் அவர் இப்படி இருக்கிறார் என்றதும்  தாங்க முடியவில்லை…..” என்று சொன்னவள் கீழே குனிந்து கொண்டாள்.

      சென்டிமென்டல் ப்ளக்மெயில் செய்து இருக்கிறான் என்பது அவனின் ஆதி காலத்து காதல் வசனத்திலே கார்த்திகாவிற்கு நன்கு புரிந்தது.. இப்பொழுது இவளிடம் போய் ‘படிக்க வேண்டிய வயதில் இது எல்லாம் தேவை இல்லன்னு’ அட்வைஸ் செய்தால் கண்டிப்பாக அவள் மூளையில் சென்று ஏறாது என்று நினைத்தவள்….

    அவளிடம் “சரி சுஜி அக்காகிட்ட சொல்லிட்டல நான் பார்த்துக்கிறேன்.. இப்போ வா இந்த ப்ரோக்ராம் சொல்லி தரேன்” சுஜியின் கவனம் படிப்பில் எப்படி இருக்கிறது என்பது கண்டிப்பாக அவளுக்கு தெரிந்து ஆகணும்… நல்லா படிக்கிற பொண்ணு மனசு தேவையில்லாத குப்பையை நினைத்து கலைய கூடாது என்று நினைத்தாள்.

    கார்த்திகா படிப்பில் கவனத்தை திருப்பியதும் சிறிதும் இடறு இல்லாமல் கவனித்தவள் தனக்கு சந்தேகம் வந்த இடத்தில்  கேட்டு தெரிந்து கொண்டாள் சுஜி.. படிப்பில் அவள் கவனம் சிதற வில்லை என்பதை அறிந்த பின்புதான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

     தன் வீட்டிற்கு கிளம்பும் பொழுது “அக்கா நான் செய்யறது தப்பா…. எனக்கு அவர் பழக்கம் கிடைத்த பின்பு ஒரே கில்ட்டியாவே இருக்கு… உங்ககிட்ட சொன்னதுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு அக்கா ரொம்ப தேங்க்ஸ்” என்றவள் அவளை கட்டி அணைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டாள்.

     சுஜியின் வெகுளி தனத்தை அந்த ராஸ்கல் நன்கு அறிந்து கொண்டு வைத்து இருக்கிறான் என்பது அவளுக்கு புரிந்தது… நாளைக்கு அவளுடன் ஸ்கூல் சென்று அவனை பார்த்து விட வேண்டும் என்று முடிவெடுத்தாள்…  

ஆனால், அவளுடன் சென்று பார்ப்பது எதார்த்தமாக இருக்க வேண்டும் இல்லையென்றால் பேச்சு வாக்கில் சுஜி அவனிடம் சொல்லிவிட்டால் அவன் உசாராக கூடும் என்பதையும் சிந்தித்தாள்.

      மறுநாள் காலையில் தன் அண்ணனிடம் மித்துவை விட சொன்னவள் வாசலில் வந்து நின்றாள்… “என்ன கார்த்தி உன் ஸ்கூட்டி என்னாயிற்று… இன்னும் காலேஜ் போகல” என்று கேட்டவாறு சுஜியின் அம்மா வந்து நின்றாள்.

     “ஸ்கூட்டியில் கொஞ்சம் ப்ரோப்ளம் அக்கா… அதான் எங்க காலேஜ் வேன் இங்கு வரும் இன்னைக்கு அதுல போகலானு பார்க்கிறேன்.. ஆனால் வேன் வர ரொம்ப லேட் ஆகும் போல” கோர்வையாக பேசி முடித்தவள் அங்கும் இங்கும் வேன் வருகிறதா என்ற சாக்கில் சுஜியின் அன்னையின் முகத்தை ஓரவிழியில் பார்த்தாள்.

      அவள் நினைத்தது போலவே “கார்த்தி நீ நம்ம சுஜி போற ஆட்டோவில் ஏறிக்கோ அவளை ஸ்கூலில் விட்டுட்டு நீயும் அப்படியே காலேஜ்ல இறங்கிங்கிக்கோ….. சுஜி ஸ்கூல் அடுத்ததான உன் காலேஜ் இருக்கு” என்றவர் ஆட்டோ வந்ததும் ஓட்டுனரிடம் சொன்னவர் இருவரையும் ஏற்றி விட்டார்.

      “ஹை சூப்பர் அக்கா இன்னைக்கு நீங்களும் என் கூட வரப்போறிங்க” என்றவள் வாய் ஓயாது பேசிகொண்டு வந்தாள்.

    சுஜியுடன் ஆட்டோவில் போய்க்கொண்டு இருக்கும்பொழுது தான் வண்டியை அந்த ஆட்டோவை பின்தொடர சொன்னான் விஜய். அவனுக்கு அந்த ஆட்டோ ஓட்டுனரை பார்க்கும்பொழுது சந்தேகமாகவே இருந்தது…. கார்த்திகாவிற்கும் அந்த சந்தேகம் ஆட்டோவில் ஏறிய சில நிமிடத்திலே உதித்து விட்டது. அவனின் பார்வை அடிக்கடி இங்கு வருவதை முதலில் கண்டுக்காது இருந்தவள் பின் அவளால் அதை சாதரணமாக எடுக்க முடியவில்லை.

      ஸ்கூல் வந்ததும் இறங்கியவள் எதிரில் இருந்த ஜெராக்ஸ் கடையை எதார்த்தமாக பார்ப்பது போல் பார்த்தாள்.. அங்கு இருப்பவனின் பார்வை சுஜியின் மீது விகாரமாக படிவதை உணர்ந்தவள் திகைத்து போய் நின்றாள்… அவனின் கண்ணில் அப்படி ஒரு வெறி.

      அடுத்த நொடியில் அவன் முகம் புன்னகையை பூசிக்கொள்ள ஆச்சிரயமாக திரும்பி பார்த்தாள் அங்கு சுஜி அவனை ஒரு சில நொடி பார்த்தவள் பின் கார்த்தியிடம் “சரி அக்..கா நான் வரே..ன்” என்று ஒருவாறு வாய் தந்திஅடிக்க கிளம்பி சென்று விட்டாள்.

      இந்த நிகழ்வை வண்டியின் உள்ளே இருந்து பார்த்து கொண்டு இருந்தவனின் பார்வையில் அவள் முகம் காட்டிய அதிர்ச்சியும் தப்பவில்லை. யோசனையாக ஆட்டோவில் ஏற போனவள் அருகில் வந்து நின்ற போலீஸ் வண்டியை கண்டு திகைத்தவள் அதில் விஜய் இருப்பதை கண்டதும் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் ஏறிய “ஹலோ டிசிபி சார்” என்று கை ஆட்டினாள்.

     இதழ் விரித்து அவளுக்கு தலை அசைப்பை கொடுத்தவன் இறங்கி அவள் அருகில் வந்தான். ஆட்டோவில் இருந்தவன் முகம் இவனை கண்டதும் பீதி அடைய “மேடம் எனக்கு அடுத்த சவாரி இருக்கு நீங்க சீக்கிரம் ஏறினா… நான் உங்கள கொண்டு போய் விட்டு போகணும்” என்றான் பயத்தை வெளியில் கட்டாது.

    அதற்குள் ஆட்டோவின் அருகில் வந்தவன் “நீ கிளம்பு” என்று கட்டளை இட அடுத்த நொடி அந்த இடத்தை விட்டு பறந்து விட்டான்.

     அவள் ஏதோ பேச வருவதற்குள் கை அசைத்து தடுத்தவன் வண்டியில் ஏறுமாறு சொன்னான்.. அமைதியாக வண்டியில் ஏறியவள் அங்கு டிரைவர் இருப்பதை அறிந்து பேசமால் ஜன்னல் புறம் திரும்பி உட்கார்ந்து இருந்தாள். சிறிது தூரம் சென்றதும் கார் நிற்பதை அறிந்தவள் புருவ சுளிப்புடன் ‘என்ன’ என்பது போல் விஜயை பார்த்தாள்.

        “நீங்க இங்க இறங்கிக்கோங்க கேசவன்… இந்த பேப்பர் ஒரு முப்பது காபி வாங்கி போட சொல்லுங்கள். கண்டிப்பாக அந்த ஆட்டோ அங்குதான் இருக்கும் ஸ்டேஷன் திரும்பி வரும்பொழுது அந்த ஆட்டோவில் வந்துருங்க” என்றவன் கேசவன் சிறிது தூரம் போவதை கண்ணாடி வழியில் பார்த்தவன் தன்னை கண்கள் விரிய பார்த்து கொண்டு இருந்தவளை கண்டவனுக்கு சிரிப்பு வர “ஏய்  பம்ளிமோஸ் என்ன அப்படியே என்னை கண்ணால் கபளீகரம் செய்து விடுவ போல… முன்னால் வந்து உட்கார்” என்றவன் டிரைவர் இருக்கையில் போய் அமர்ந்தான்.

    தன் மடத்தனத்தை எண்ணி நின்ந்தித்தவள் அமைதியாக முன்னாடி வந்து அமர்ந்தாள். காரை சார்ட் பண்ணியவன் “உனக்கு அறிவே இல்லையா ஒருத்தன் தன்னை எப்படி பார்க்கிறான் என்பதுமா ஒருத்திக்கு தெரியாது…. பெரிய காலேஜ் ப்ரொபசர்னு பேரு மட்டும் தான் வேறு ஒன்னும் கிடையாது” கோபத்தில் பொறிந்து தள்ளினான்.

       ஒன்றும் புரியாது விழித்தவள் “எனக்கு கராத்தே எல்லாம் தெரியும் யாரும் என்னை அவ்வளவு சீக்கிரம் நெருங்க முடியாது. அதுவும் மக்கள் அதிகமாக நடமாட்டம் இருக்கும் இடத்தில் அவனால் என்ன செய்து விட முடியும்…. நாங்களும் எல்லாம் யோசித்துதான் செய்வோம். என்னவோ இவர் மட்டும்தான் கடவுள் கொடுத்த மூளையை யூஸ் பண்றது போல் பேசுறார்” என்றவள் அவனுக்கு மேல் பொறிந்து கொண்டு இருந்தாள்.

      “சரியான மிளகாபட்டாசு” அடுத்து அவன் சூட்டிய பெயரில் இன்னும் கோபம் தலைக்கு ஏற “இப்படி முன்ன பின்ன தெரியாத பொண்ணை பார்த்ததும் பட்ட பெயர் வைத்து அழைப்பது நல்ல குணமா டிசிபி சார்… அப்போ பம்ளிமோஸ், இன்னைக்கு மிளகாபட்டாசு” என்று அவன் புறம் திரும்பி கையாட்டி பேசி கொண்டு இருந்தவள் கார் சடனா நின்றதும் தன் கைசந்து அவன் தோளில் போய் இடிக்க ஒருவாறு தடுமாறி நிமிர்ந்தாள்.

    தன் கைசந்தை தேய்த்தவாறு அவனை முறைத்து கொண்டு இறங்கியவளின் கை பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் “என்ன சொன்ன முன்ன பின்ன தெரியாத பொண்ணா….” என்று சொல்லி முறுவலித்தவன் அழகில் மயங்கி போய் கண்கள் விரிய அவனை மையலுடன் அவனை பார்த்து கொண்டு இருந்தாள் கார்த்திகா.

     அவள் கண்ணில் இருந்து சற்று விலகி இருந்த கீழ் படிந்து இருந்த கண்மையை தன் சுண்டுவிரலால் தீண்டியவன் அவளின் உதட்டின் ஓரம் லேசாக வைத்து விட்டவன் “உன் அறையில் உள்ள  மேஜையின் டிராவில் போய் பார்த்தாள் உனக்கு எல்லாம் தெரியும் என் குட்டி மிளகாபட்டாசு” என்றவன் அவளிடம் இருந்து விலகி “நானே மாலை வந்து அழைத்து செல்கிறேன்” அவள் மேனியில் தன் மேனி உரசுமாறு அவள்புறம் கதவு திறந்து விட்டான்.

     திகைத்து போய் காரில் இருந்து இறங்கியவளுக்கு ஒரு கண்சிமிட்டளுடன் அவளிடம் இருந்து விடை கொடுத்தான் அந்த காவலன்.

தேவதை வருவாள்…..   

 

Advertisement