Advertisement

அத்தியாயம் – 5

    அங்கு பாளை சிறையில் குட்டிபோட்ட பூனை போல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தான் சங்கர் ‘எப்போ போன் செய்து கத்துவான் என்று தெரியவில்லையே?’ மனதில் நினைத்து கொண்டு இருக்கும் பொழுதே அவனின் செல்போன் அழைத்தது. உடனே எடுத்து “ஹலோ” என்றவனுக்கு  ஒரு ஆழ்ந்த மெளனமே பதிலாக கிடைத்தது.

    மனதில் கலவரம் ஏற்பட இங்கு  சங்கர் பேச வாய் திறக்கவும் எதிர்முனை முந்திகொண்டது “என்ன சங்கர் அந்த விஜய் காலேஜ் போய்யெல்லாம் விசாரித்திருக்கிறான்…. இன்னும் என்னவெல்லாம் அவனிடம் உளறி வைத்த சொல்லு அவன் அடுத்த என்ன அடி எடுத்து வைப்பான் என்றே எங்களுக்கு தெரியவில்லை…. எங்கள் வேலையும் இங்கு ஓடவில்லை. அவன் விசாரணை எந்த போக்கில் கொண்டு போகிறான் என்பது சுத்தமாக புரியவில்லை….” கோபத்தில் வெடித்து கொண்டு இருந்த மறுமுனைக்கு மெதுவாக,

      “இல்லை சார் நான்  எதுவும் சொல்லவில்லை எனக்கு இங்கு சிறையில் டுயூட்டி என்பதால் என்னால் அவர் அடுத்து செய்யும்  விசாரணை தெரிய வாய்ப்பில்லை என் நிலையையும் புரிந்து கொள்ளுங்கள் சார்”

     “இந்த பம்முற வேலை இங்கு வேண்டாம் உன் நிலை பற்றி எங்களுக்கு கவலை இல்லை…. இதையெல்லாம் காசு எங்களிடம் இருந்து வாங்கும் முன் யோசித்திருக்க வேண்டும்… அவனின் அடுத்த விசாரனை பற்றி எங்களுக்கு தெரிந்து ஆகணும்” கட்டளையிட்டு வைத்து விட்டான்.

     போனை வைத்தவன் முகம் தீவிர சிந்தனையில் இருக்கு என்பதை உணர்த்தும் விதமாக அவனின் புருவங்கள் சுருங்கி இருந்தது. “என்ன ஜான் நமக்கு வராத ப்ரோப்ளமா இதுக்கு போய் இப்படி உட்கார்ந்துட்டு இருக்க” தன் தோள் தொட்டு விசாரித்து நண்பனின் முகம் பார்த்தவன் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை விட்டு,

     “நீ இந்த தொழிலுக்கு புதுசு விக்டர் அதனால் உனக்கு ஒன்றும் தெரியவில்லை… அந்த டிசிபி. விஜய் பற்றி உனக்கு தெரியாது அவன் இந்த கேஸில் ரொம்ப இன்வோல்வ்மென்ட்டோடு இருக்கான் அவனக்கு ஏதோ பலமான ஆதாரம் கிடைத்து இருக்கிறது… அதுதான் என்னவாக இருக்கும்னு யோசிக்கிறேன். அதுவும் அவன் இந்த வேலைக்கு விருப்பமே இல்லாமல் வந்தவன் ஆனா ஒரு கேஸில் இன்வோல்வ் ஆயிட்டானா அதை சரியாக முடிக்கிற வரை விட மாட்டான்”

      “அந்த சங்கர்தான் ஒன்னுமே அவன் கையில் கிடைக்கவில்லை, அவனும் எதுவும் சொல்லவில்லைன்னு சொன்னானே” விக்டரின் கேள்விக்கு ஒரு இகழ்ச்சி சிரிப்பை உதட்டில் தவழவிட்டவன்   “ஹ்ம்ம் அந்த சங்கர் ஒரு பொம்மதுப்பாக்கி டேவிட் அவன் சொல்வதை நம்பி நாம் எந்த காரியத்திலும் இறங்க முடியாது…. இங்கு நடக்கும் சுழலை பாஸ் கவனித்து கொண்டுதான் இருப்பார் பார்ப்போம் அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவரே சொன்னால் தான் தெரியும்….”

    “ஜான் அப்போ நம்ம அடுத்த திட்டம்” குழப்பத்துடன் கேட்டவனிடம் “பாஸ் ஓகே சொன்ன பின்புதான் செயல் படுத்த முடியும்….. போலீசின் கவனம் இப்பொழுது நம் மீது இருப்பதால் எந்த விபத்து நடந்தாலும் அதில் இருந்து ஆதாரத்தை துருவி எடுத்துவிடுவார்கள் அதனால் கொஞ்சம் தள்ளி போடதான் பாஸ் சொல்வார்” என்பதோடு அந்த பேச்சை முடித்து கொண்டு போனை நோண்ட ஆரம்பித்து விட்டான்.

     கல்லூரியில் விசாரணை முடித்து இரண்டு நாட்கள் கழித்து அதை பற்றின ரிபோர்டை கொடுக்க கமிஷனர் ‘குரு’வை  சந்திக்க வந்து இருந்தான் விஜய். தன் முன் போனில் பப்ஜி விளையாடி கொண்டு அமர்ந்து இருப்பவனை என்ன செய்யலாம் என்பது அவர்க்கு புரியவில்லை “சொல்லு விஜய் எந்த லெவல் வரை வந்துருக்க”

      தன் விளையாட்டில் கவனமாக இருந்தவன் “சிக்கன் வின் பண்ண போறேன் அங்கிள்… இன்னைக்குள்ள வின் பண்ணி நெக்ஸ்ட் லெவெலுக்கு ஷிப்ட் ஆயிருவேன்”அவனின் பதிலில் கடுப்பானவர்,

     “டேய் நான் நீ டீல் பண்ற கேஸ் பற்றி கேட்டேன்” என்றவர் கையோடு போனை வாங்கி வைத்துவிட்டார்.

     “ம்ச்ச் என்ன அங்கிள்…” என சலித்தவன் அவரின் கோப முகம் கண்டு “ஓகே ஓகே ஐ’ம் கம் இன்டு தி கேஸ்…. வெல் இதனை முதலில் பாருங்கள்” என்றவன் போரேன்சிக் ரிப்போர்ட்டை காண்பித்து, கல்லூரியில் நடந்த விசாரனை பற்றியும் கூறி முடித்தான்.

      “உன் அப்பன் எதுக்கு உன்னை கண்டிப்பா போலீசாக ஆக்கனும்னு சொன்னான் என்பது  இப்போ தெரியுது…. உன் புத்தி கூர்மை பற்றி அவனுக்கு நல்லா தெரிந்திருக்கிறது”

     “போதும் அங்கிள்…. நீங்க வைக்கிற ஐஸ் தாங்க முடியல எனக்கு குளிர் ஜுரம் வந்தா என் சிக்கன் எப்படி நான் வின் பண்றது” அவனை கண்டு முறைத்தவரை பார்த்து இரு கை மேலே தூக்கி சிரித்தவன் “ஓகே கடமை… கடமை” என்றவன் தீவிர முகபாவத்துடன் “சார் அந்த ராமு வேலை பார்த்த கெமிக்கல் பாக்டரி மீது சமிபத்தில் ஏதாவது கேஸ் இருக்கா”

    “அப்படி எதுவும் இல்லை விஜய்… பாக்டரியில் நடந்த சண்டையில் ஒருத்தனை கொலை செய்ததாக வந்த ராமுவின் இஸ்யு தான் எனக்கு தெரிந்து அங்கு நடந்து முதல் விபத்து”

      “இல்லை அங்கிள் அந்த ராமுவிற்கு ஏதோ முக்கியமான விஷயம் தெரிந்து இருக்கிறது… மே பி அதனால் கூட அவனை மாட்டிவிட்டு சிறையில் கொலை செய்து இருக்கலாம்.. நாளைக்கு அந்த பாக்டரி சென்று விசாரித்தால் கொஞ்சம் துப்பு கிடைக்கும்” என்றவன் ரிப்போர்ட்டை வாங்கி பத்திர படுத்தி வைத்தான்.

      “பட் விஜய் இதை பற்றி வெளியில் ரொம்ப தெரியவேண்டாம்… சரி உன் அண்ணன் வந்து இருக்கிறான் போல திரும்ப எப்போ நாடு தாண்ட போகிறான்” கிண்டலாக கேட்டவரை முறைத்தவன்,        

       “ராகவ் மீது அப்படி என்ன கொலைவெறி உங்களுக்கு அவனிடம் மட்டும் நீங்க ஒட்டவே மாட்டிகிறிங்க அந்த ப்ரணவ் பயல் போல்…..” என்று சொன்னவனின் முகம் முழுவதும் வேதனை நிரம்பி இருந்தது.

         “சின்ன வயசில் நீ தான் குரு அங்கிள், குரு அங்கிள்னு பின்னாடி சுத்துவ அவன் எப்பொழுதும் போல இறுகி போய் இருப்பான் அவன் வளர வளர அந்த இறுக்கமும் சேர்ந்து வளர்ந்துட்டு…. அந்த பாழாபோன இறுக்கம் தான்  அவனை பெத்த பையன்கிட்ட இருந்தே தள்ளி வச்சிருக்கு. அப்படி முகத்தை வைத்து இருப்பவனிடம் அந்த குழந்தை எப்படி பேசும்…”ஆத்திரத்தில் பொறிந்து கொண்டு இருந்தவரை பார்த்து “சுற்றி சுற்றி கேள்வி தான் இருக்கு பதில் கிடைப்பதாக தெரியவில்லை” என்றவன் தன் போனை வாங்கி அவரிடம் இருந்து விடை பெற்று கொண்டான்.

     வண்டியில் பயணம் செய்து கொண்டு இருந்தவனின் எண்ணம் முழுவதும் ராகவ் பற்றியே இருந்தது… சிறு வயதில் பெத்தவர்களை இழந்ததால் அன்றில் இருந்தே அவன் பேச்சு குறைந்து விட்டது, யாரிடமும் ரொம்ப பேச மாட்டான் ஆனால், படிப்பு விசயத்தில் எப்பொழுதுமே முதலிடம் தான்… அப்படி பட்டவன் தான் காதலிப்பதாக ஒருத்தியை கொண்டு வந்து நிறுத்தியதும் அப்பாவும், அம்மாவும் எதை பற்றியும் விசாரிக்காமல் அவன் சந்தோசம் மட்டுமே முக்கியம் என்று  கல்யாணம் செய்து வைத்தனர்.

ஆனால், அவனின் வாழ்க்கை இப்படி மூன்று வருடத்தில் முடியும் என்று யாரும் எதிர்பாராதது… அண்ணியின் இழப்பு அவனை இன்னும் இறுக்கம் ஆக்கியதே மிச்சம். பின் தந்தையின் இழப்பு என அவன் குடும்பம் ஒரு வழியாகி இப்பொழுது தான் மீண்டு வந்து இருக்கிறது. தன் கடந்த காலத்தில் திளைத்து இருந்தவன் தூரத்தில் இருந்து வந்து கொண்டு இருந்த ஆட்டோவை கண்டதும் முகம் தீவிரமாக வண்டி ஓட்டிக் கொண்டு இருந்த காவலரிடம்  அந்த ஆட்டோவை பின்தொடர ஆணையிட்டான்.

தேவதை வருவாள்……..

 

Advertisement