Advertisement

    

அத்தியாயம் – 4

    கார்த்திக்காவின் கண்களில் வந்த மின்னல் தனக்கானது இல்லை என்பதை அறியாத அளவு ராகவ் முட்டாள் இல்லை… அதற்குள் அவளின் உரை முடிந்து அவனை உரையாற்ற மேடைக்கு அழைத்தனர். தன் முழு உயரத்திருக்கு எழுந்து மேடை நோக்கி அவன் நகரவும் கார்த்திகா அந்த புறம் இரங்கி விட்டாள்…. அவளின் அவசரம் அவன் கண்களில் இருந்து தப்பவில்லை. மேடைக்கு வந்து தொழில் முன்னேற்றம் மற்றும் பெண்களின் சுயதொழில் வேலை பற்றி சுவாரசியம் மற்றும் நகைச்சுவை உணர்வுடன் சொன்னதை அங்கு இருந்த அனைவரும் ரசித்தனர்.

    மேடையை விட்டு இறங்கியவன் கண்களில் அவள் அரங்கத்தை விட்டு வெளி செல்வது தெரிந்தது… “சார் நம்ம தூத்துக்குடி ப்ரான்சில் சின்ன பிரச்சனை உடனே கிளம்பவேண்டும்” ரகு கூறியதை கேட்டவன் எண்ணம் முழுவதும் தொழில் புறம் திசை திரும்ப சிறிதும் தாமதிக்காது ப்ரின்சிபலிடம் சொல்லிவிட்டு கிளம்ப முனைந்தான்.

      “என்ன மிஸ்டர். ராகவ் ப்ரோக்ராம் இன்னும் முடியவில்லை… அதுவும் உங்களுக்காக பெரிய விருந்தே ஏற்பாடு செய்திருக்கிறேன்” வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னவரின் வற்புறுத்தலை ஏற்காது “தொழில்துறை சந்திப்பு” என ஒற்றை வரியில் முடித்து விட்டான்.

இதற்கு மேல் ஒன்றும் கூறாது அவன் உடன் நடந்தவரிடம் “உங்கள் இரண்டாவது கெஸ்ட்டிற்கு விருந்து உபச்சாரம் எல்லாம் முடிந்தாயிற்று போல.. …” நக்கலுடன் கேட்டவனை புரியாது பார்த்தவர் ராகவ் பார்வை செல்லும் திசையை நோக்கினார்.

      அங்கு கார்த்திகாவும், விஜயும் நின்று பேசி கொண்டு இருப்பதை கண்டவர் “நோ மிஸ்டர். ராகவ் இரண்டாவது கெஸ்ட் இன்று வரவில்லை…. மோராவேர் மிஸ்டர். விஜய் ஒரு கேஸ் விசயமாக இங்கு வந்து இருக்கிறார்… இது ப்ரோக்ராம் டைம் ஸ்டூடண்ட்ஸ் எல்லோரும் ஆடிட்டோரியத்தில் இருப்பதால் அதுதான் வசதியான நேரம் என்பதால் இப்பொழுது வந்திருக்கிறார்” என்றவரின் விளக்கம் காதில் ஏறினாலும் அவனின் கண்கள் விஜயை தான் அளவெடுத்து கொண்டு இருந்தது….

       ஒரு தலை அசைப்புடன் அவரிடம் விடைபெற்றவன்  தன் காரில் ஏறி பயணமானவனின் மனதில் ‘என்ன’ ஓடுகிறது என்பதை ரகு நன்கு அறிவான் அது மட்டுமல்ல ராகவின் ஆதியில் இருந்து அந்தம் மூலம் அறிந்தவன் இவன் ஒருவனே…… “ரகு அந்த பொண்ணுக்கிட்ட ஏதோ ஒரு ஈர்ப்பு இருக்கிறது அவள் மேடையில் நின்று இமைகள் உயர்த்தி பார்த்ததை மறக்க முடியவில்லை…” கண்கள் மூடி இருக்கையில் சாய்ந்து உதடுகள் மட்டும் மெல்ல அசைய கூறினான்.

       “பாஸ் அந்த பொண்ணு பற்றி விசாரிக்கவா….” ரகுவின் கேள்வியில் கண்கள் திறந்தவன் ‘வேண்டாம்’ என்று தலை அசைத்தான்… “அதற்கு பதில் நீ வேறு ஒன்று விசாரிக்க வேண்டும்” என்றவனின் பேச்சை புரிந்தவன் “ம்ம தெரியும் பாஸ்… இன்று இரவு உங்கள் கையில் அந்த டீடேல்ஸ் இருக்கும்” என்றவன் கார் ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்…. ‘இருவரும் ஏற்கனவே அறிமுகமாகி இருக்கின்றனர் …” என்பதோடு அந்த விஷயத்தை ஒதுக்கி வைத்துவிட்டான்.

      இங்கு ராகவ் சென்றதும் விஜய் இருக்கும் திசை நோக்கி வந்தவர் “என்ன மிஸ்டர்.விஜய் உங்கள் விசாரனை முடிந்ததா”

     “நோ சார்…. இன்னும் ஒரு பொண்ணை விசாரிக்கணும்…. இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கலாம்.”

      “கொஞ்சம் சீக்கிரம் ப்ரோக்ராம் முடிவதுக்குள்ள முடிச்சிருங்க ஹெல்ப் வேணுனா மிஸ். கார்த்திகாவை அனுப்பி வைக்கிறேன் நீங்க விசாரிக்க போற பொண்ணு அந்த மேம் கிளாஸ் தான் அதான் முதலில் அவங்களை அனுப்பி வைத்தேன்….” என்றவர் அருகில் இருந்தவளிடம் அவனை அழைத்து செல்லுமாறு பணித்து விட்டு சென்று விட்டார்.

      “வாங்க” என்றவள் அவனை வகுப்பறை நோக்கி கூட்டி சென்றாள்.. “அந்த பொண்ணோட நடவடிக்கை எப்படி?”

     “சாந்தி அமைதியா இருப்பா, நல்லா படிக்கிற பொண்ணு…. ஆனா, கொஞ்ச நாளா அந்த அமைதி அதிகமாக அவகிட்ட இருக்கு ரொம்ப சோர்ந்து போய் தெரியுறா, படிப்பிலும் கவனம் குறைந்த மாதிரி இருக்கு…. அவகிட்ட தனியா அழைத்து விசாரிச்சும் பார்த்துட்டேன் பலன் என்னமோ பூஜ்ஜியம் தான்…. ‘ஒண்ணுமில்லை மேம்’ … இந்த வார்த்தையை தவிர வேறு எதுவும் அவள் பேசவில்லை” வகுப்பறை அருகில் வந்ததும் அவன் உள்ளே செல்லவும்

      “நான் இங்கே நிற்கிறேன்… நீங்க விசாரிச்சிட்டு வாங்க” என்றவளிடம் “நீயும் வா…” என்றவன் தன் கூலர்ஸ் கழற்றி அவளிடம் நீட்டியபடி உள்ளே சென்றுவிட்டான்.

        விஜயின் ஒருமை அவளுக்கு ஒருபுறம் மனதிருக்கு இனிப்பாக இருக்க அவன் தன் கண்ணாடியை அவளிடம் நீட்ட கண்கள் விரிய அதை பார்த்தவள் ஒரு சந்தோஷ குதுகலத்துடன் வாங்கி கொண்டாள்.

         டேபிளில் தலை வைத்து படுத்து இருந்தவளின் அருகில் சென்று “சாந்தி” என்று அழைத்தவளின் குரல் கேட்டு நிமிர்ந்தவள் அங்கு நின்று இருந்த விஜயை குழப்பமாக பார்த்தவள் “என்ன மேம்” என்ற கேள்வியுடன் எழுந்தாள்.

      ஏதோ கூற வந்த கார்த்திகாவை கை நீட்டி தடுத்தவன் “ஒண்ணுமில்லை மிஸ்.சாந்தி எனக்கு உங்க ஹெல்ப் தேவை…   பாளை சிறையில் விசாரணை கைதியாக இருந்த ராமு பற்றி எனக்கு தெரியவேண்டும்” அவளின் முகத்தின் உணர்ச்சியை அளவிட்டவாறு கேட்டான்…

       முகம் வெளுக்க இருக்கையில் அமர்ந்தவள் கண்களில் கண்ணீர் குளமாக அவனை பார்த்தவள் “நான் அவர்கிட்ட சொல்லிருக்கணும் எங்க வீட்டுக்கு பயந்து அவரை இப்போ நான் இழந்துட்டேன்” என்றவள் முகத்தை கைகளால் மறைத்து அழுதாள்.

        “கார்த்தி நீ போய் தண்ணீர் பாட்டில் எடுத்துட்டு வா” அவனின் கட்டளையில் கோபம் வந்தாலும் முறைத்து கொண்டே சென்றாள்.. கார்த்திகா வரவும் கொஞ்சம் தேறி இருந்தாள் சாந்தி.

       தண்ணீர் வாங்கி குடித்தவள் சிறு அமைதிக்கு பின் “ராமு எங்க பக்கத்து வீட்ல வாடைகைக்கு குடி இருந்தார்… இரண்டு வருடம் முன்பு என்னிடம் அவர் காதலை சொன்னார் அப்போ எனக்கு அவர் மேல எந்த வித எண்ணமும் இல்லை அதனால் விருப்பம் இல்லன்னு சொல்லிவிட்டேன்…”

        “அதன் பின்னும் அவர் என்னை தொந்தரவு செய்யவில்லை அந்த குணம் எனக்கு ரொம்ப பிடிச்சு போய்ட்டு…. ஆனா, அவர் அனாதை என்பதால் எங்க வீட்ல ஒத்துக்கமாட்டங்க…. அதனால் என்னோட விருப்பத்தை அவரிடம் நான் சொல்லவே இல்லை”

    “அப்போ அவன் சிறைக்கு செல்லும் முன் ஒரு நாள் அவனை சந்தித்து பேசியது” விஜயின் கேள்வியில் ஒரு விரக்த்தி புன்னகையை சிந்தியவள்

     “கொஞ்ச நாளா அவர் ஏதோ பதட்டமாகவே இருந்த மாதிரி இருந்தது அதான் அவர் வேலை பார்த்த கெமிக்கல் பாக்டரி போய் அவரை பார்த்து பேசினேன்…. என்னிடம் அவர் எதுவுமே சொல்லவில்லை என்னை பார்த்ததும் பரபரப்பாகி சுற்றி முற்றி பார்த்தவர் இங்கு இருந்து போயிரு உனக்கு நான் இன்னோரு நாள் எல்லாம் விளக்கமாக சொல்கிறேன் என்றவர் என்னை அனுப்பி விட்டார்”

      “அப்போ அவன் எதுவும் உன்னிடம் சொல்லவில்லையா” என்றவனுக்கு ‘இல்லை’ என்று தலை அசைத்தவள் “அவர் கைதான விஷயம் கூட பேப்பர் பார்த்து தான் தெரிந்தது” அவளின் பதில் கேட்டு கார்த்திகா புறம் திரும்பியவன் கண் அசைவால் அவளை கவனிக்க சொன்னவன் வெளியேறிவிட்டான்.

      அவளிடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு அவசரமாக வெளியே அவன் பின்னால் ஓடி வந்தவள் காதில் அவன் பூட்ஸ் சத்தமே நிறைந்து இருந்தது ‘ஹப்பா என்ன அழுத்தம்’ என்று நினைத்தவள் “ஹேலோ  மிஸ்டர் .டிசிபி” கத்தியவளின் புறம் ‘என்ன’ என்பது போல் திரும்பி நின்றான். ஓடி வந்ததால் மூச்சிரைக்க கண்கள் மூடி மிக நெருக்கமாக அவன் அருகில் நின்றவளின் வதனத்தை ரசித்தவன் சுற்றி முற்றி பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் அவளை நெருங்கி கைகள் கட்டி நின்று கொண்டான்.

      கண்கள் திறந்து பார்த்தவள் அவனின் அருகாமையில் திகைத்து விழப்போனவள் தற்காப்புக்காக விஜயின் புஜத்தை பற்றி நின்றாள்…. “ஏன் டிசிபி சார் இந்த ‘உற்றாருக்கு உதவி செய்ய வேண்டும்’ இது எல்லாம் உங்களுக்கு யாரும் கத்து கொடுக்க வில்லையா… கீழே விழுந்தால் பரவாயில்லைனு அப்படியே நிக்கிறிங்க” என்றவளின் கோபம் அவன் சிரிப்பை பார்த்து இன்னும் அதிகமாகி விட்டது… “என்ன சிரிப்பு” என்றவள் தன் கைகளை அவனிடம் இருந்து பிரித்து கோபத்தில் விலகி நின்றாள்.

       “டீச்சர் அம்மாக்கு வசதி இருந்தால் எனக்கு சொல்லி தரலாமா?” முகம் முழுக்க புன்னகையுடன் கேட்டவனின் அழகில் மயங்கி நின்றவள் தன் கோபத்தை இழுத்து “என்ன கிண்டலா…. இப்படி சிரிச்ச முகமா இருந்தா எந்த கைதியும் பயப்பட மாட்டான்” என்றவளிடம்

      “ஒ பாடம் இப்பவே ஆரம்பமாகி விட்டதா” அவனின் கிண்டலில் கோபம் தலைக்கு ஏற விஜயை கடந்து செல்ல முயன்றவளின் கரம் தடுத்து அவள் இடது கையில் இருந்த தன் கண்ணாடியை வாங்கி அவளுக்கு அணிவித்தவன் அவள் காதின் ஓரம் கஸ்க்கி குரலில் “ஏய் பம்ளிமோஸ் யார் யாரிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது எனக்கு தெரியும்… அதை தவிர வேறு எந்த பாடம் நடந்தினாலும் அடியேன் கேட்க்க தயாராக உள்ளேன்…” என்றவன் நிமிர்ந்து அவள் அதிர்ந்த முகத்தை பார்த்தவன் மனதிற்குள் சிரித்துகொண்டு

    “இந்த கண்ணாடியை நீ வைத்து கொள் …. நீ நேற்று மித்து குட்டியிடம் இருந்து தெரியாமல்  எடுத்ததை அவளிடம் கொடுத்து விடு” என்றவனுக்கு இன்று பள்ளியில் மித்து தன் காதில் சொன்னதை நினைத்து சிரித்தவன் “நீ எனக்கு பாடம் எடுக்க போற… மித்து மாதிரி முதலில் தெரியாமல் எடுத்து பழகு” என்று போகும் பொழுது அவளுக்கு ஒரு குட்டு வைத்து விட்டு சென்றவனை முகம் பாதி கோபத்திலும், வெட்கத்திலும் சிவக்க நின்று கொண்டு இருந்தாள்.

      சிறிது தூரம் சென்றவன் திரும்பி பார்த்து தன் நாக்கை கன்னத்தின் ஓரம் கொண்டு சென்று உதட்டின் புன்னகையுடன்  ஒரு சின்ன சளிட்டுடன் சென்றான்…

தொடரும்…..               

                 

 

Advertisement