Advertisement

அத்தியாயம் – 3

     இங்கு இவளோ வீட்டிருக்கு வந்தவள் கடையில் நடந்ததை ஒன்று விடாமல் தன் அண்ணி, அன்னையிடம் ஒப்பித்தவள் “இனி என் கூட எங்காவது வெளியில் வா அப்போ இருக்குடி உனக்கு” இறுதியாக மித்ராவிடம் கத்தியவள் தன் அறைக்கு சென்று கதவை அடைத்து கொண்டாள்.

      “என்ன அத்தை இந்த பழக்கம் நம் குட்டியிடம் இருந்து போகாதா எனக்கு பயமா இருக்கு” என்றவளின் தோளை தொட்டு ஆறுதலாக அணைத்தவள் “நம் மித்து இதில் இருந்து வெளி வர கொஞ்சம் நாள் ஆகும்னு டாக்டர் சொன்னாங்கல லக்ஷ்மி நீ எதையும் போட்டு குழப்பிகாதே” அத்தையின் ஆறுதல் மொழியில் ஏதோ சமாதனம் அடைய தன் வேலையை தொடர்ந்தாள்.

        மறுநாள் தன் அண்ணன் மகளை பள்ளியில் விட்டு வெளியில் வந்தவள் பார்வையில் காக்கி உடையில் ‘ப்ரணவுடன்’ பேசியபடி வந்து கொண்டு இருந்தான் விஜய். அவளை காணாது கடந்து சென்றவனை வாய் திறந்து கண்கள் விரிய பார்த்தாள் ‘நான் நிற்பது கூடவா தெரியவில்லை ? இல்லை தெரிந்திருக்கும் இவன் கண்டு கொள்ளாது போகிறான்…. ஹ்ம்ம் செல்லட்டும் யாருக்கு வேண்டும் இவன் பார்வை’ மனதில் அவனை அர்ச்சித்து கொண்டு சென்றுவிட்டாள்.

      இங்கு ப்ரணவை வகுப்பில் விட வந்தவனை பார்த்த மித்ரா “ஹாய் அங்கிள்” துள்ளி குதித்து ஓடி வந்து பாய்ந்து விட்டாள்… முகம் விசிக்க அவளை தூக்கியவன் “ஹாய் மித்து குட்டி நீங்களும் இங்கதான் படிக்கிறிங்களா”

        “ம்ம அங்கிள் நா செகண்ட் கிரேட் (grade) படிக்கிறேன்” தலையை ஆட்டி கண்கள் அங்கும் இங்கும் ஆட பதில் சொன்னவளின் அழகில் மயங்கி மித்துவின் கன்னம் பற்றி முத்தம் கொடுத்தான்.

          “விஜி தூக்கு” கைகளை விரித்த தன் மகனை பார்த்தவன் “தூக்கிட்டா போச்சு” என அவனையும் தூக்கி மறு கையில் வைத்து கொண்டான்.

          இரு சிட்டுகளும் ஒன்றை ஒன்று பார்த்து கொண்டனர்… தன் கையை நீட்டி “ஹாய் நா மித்து…. செகண்ட் கிரேட் (grade)” ப்ரணவிடம் தன்னை அறிமுகம் படுத்தினாள். தன் விஜியை பார்த்து திருதிரு என முழித்தவன் பின் மித்துவின் கை பற்றி “ப்ரணவ்….. ப்ரி ப்ரைமரி” என்றான்.

          அவனிடம் இருந்து இறங்கியவள் “நா ப்ரனுவ பாத்துபேன் அங்கிள்” என்றவள் அவன் புறம் திரும்பி “வா” என அழைத்தாள்…. தன் விஜியின் கன்னத்தில் முத்தம் பதித்தவன் அவனிடம் இருந்து இறங்கி முத்துவின் கையை பிடித்து கொண்டான்… சுற்றி முற்றி பார்த்தவள் அவனை கீழே குனிய சொன்னவள் அவன் அருகில் சென்று காதில் சொன்னதை கேட்டவன் முகம் முழுவதும் புன்னகை வழிய ‘கார்த்திகாவை (பம்பிளிமோசை)’ மனதில் நினைத்து கொண்டான் …..  பின் “எனக்கு அதுமாதி வாங்கி தரனும் ஓகே” என்றவள் அவனுக்கு தன் இதழ் அமுதம் கொடுத்து விட்டு ப்ரணவை அழைத்து சென்று விட்டாள்.

     தன் காரை ஒட்டி கொண்டு இருந்தவன் நினைவு முழுவதும் அந்த  பம்பிளிமோசிடம் மட்டும் தான் இருந்தது…. போரேன்சிக் ஆபீஸ் வந்ததும் தன் நினைவை ஒதுக்கி வைத்தவன் ஒரு சின்ன தலை அசைவுடன் தனக்கு விஷ் செய்தவர்களை கடந்து நேராக தலைமை ஆபீசர் அறைக்கு சென்றான்.

      கதவை தட்டி உள்ளே சென்றவனை “வாங்க மிஸ்டர். விஜய்… ப்ளீஸ் டேக் யுவர் சீட்” என்றவரின் எதிரில் அமர்ந்தவன்

     “ரிப்போர்ட் எல்லாம் ரெடியா இருக்கா மிஸ்டர். பிரசாந்த் …. ஐ நீட் கிளியர் ரிப்போர்ட் ஆன் தட்”

      “ம்ம எல்லாம் ரெடி விஜய்… நீங்க நினைத்தது போல அது கொலையாளி ராமுவின் ரத்தம் தான்…… பட் இந்த கொலை செய்தவுங்க பின்னால் ஒரு பெரிய மூளையாக இருந்து யாரோ செயல் படுறாங்க அதை நான் இப்போ சென்ட் பெர்சென்ட் ஒத்துக்கிறேன். நீங்க அப்போ சொன்னபோது நம்ப முடியல இப்போ நம்புறேன்” என்றவர் மேஜை மீது  ரத்த உறைந்த மிக மெல்லிய கம்பி இருந்த கவரை எடுத்து வைத்தார். கால் மீது கால் போட்டு தன் வலது கையை தாடையில் வைத்து கண்களுக்கு கூலர்ஸ் அணிந்து அவர் சொல்வதை கூர்ந்து கவனித்து கொண்டு இருந்தான்.

       “அந்த கைதி கொலை செய்யப்பட்ட சுமார் ஆறு மணி நேரத்திருக்கு முன்னர் மெட்டாளிக் திரவம் அவன் உடம்பில் இந்த கம்பி மூலம்  செலுத்த பட்டிருக்கு…. கிட்டத்தட்ட சொல்ல போனால் இது ஒரு வித ஸ்லோ பாய்சன். அவன் பிறர் அடித்து இறக்கவில்லை தானாக நடந்தது போல் ஏற்படுத்தி இருக்கிறார்கள்”    என்றவரின் கூற்றை கவனித்தவனின் புருவங்கள் சுருங்க உதடு பிரித்தவன்

       “பட் அந்த ராமுவின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் எந்த திரவமும் ரத்தில் இருந்ததாக குறிப்பிடவில்லை…. அதுவும் இருதயம் அதன் செயல்பாட்டை தீடிரென்று நிறுத்தியதால் அவன் இறந்து விட்டான் என ரிப்போர்ட் வந்துருக்கு மிஸ்டர். பிரசாத்”

       “மே பி நீங்க இந்த கம்பியை கண்டு பிடிக்கவில்லை என்றால் இது இயற்கை மரணமாக எல்லாரும் நம்பி கேசை மூடி இருப்பிங்க… அது மட்டும் அல்லாது இந்த  மெட்டாளிக் திரவம் முதலில் செய்யும் வேலை இருதயத்தின் செயல் நிறுத்தத்தை தான் பட் இட் டேக்ஸ் சம் ஹெவர் மற்றும் இந்த திரவம் அதிகம் 20% ரத்தத்தில் கலந்து இருந்தால் மட்டுமே நம்மால் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் கண்டு அறிய முடியும் …” என்றவர் நிறுத்தி விஜயை பார்த்தார்.

    அவரின் பார்வையை ஓரளவுக்கு யுகித்தவன் உதட்டின் ஓரம் ஒற்றை விரல் வைத்து கண்கள் இடுங்க  “அப்போ 20% குறைவாக அவன் உடம்பில் செலுத்தியதால் அவனுக்கு அது ஸ்லோ பாய்சன் ஆகிருக்கு ஐயம் ரைட் பிரசாந்த்”

       “ஹ்ம்ம் ரைட் … அவன் உடம்பில் உள்ள திரவத்தின் அளவு 0.8%” அவரின் பதிலை கண்டு அதிர்ச்சியுற்றாலும் அதை கூலேர்ஸ் அணிந்த கண்களிலே நிறுத்தி வைத்தவன் தவறியும் அதிர்ச்சியை முகத்தில் காட்டவில்லை..

         “நம்ம டெக்னாலஜி வளர்ந்தது நினைத்து வருத்தம் கொள்ள மட்டுமே அதிகம் முடிகிறது” விரக்தியான அவரின் பேச்சில் உதடு வளைத்தவன் “அதை நன்கு பயன் படுத்த தெரிந்தவன் தவறுக்கு துணை உள்ளவனா நினைக்கும் பொழுது வருத்தத்தை விட பயம் தான் அதிகமாக இருக்கிறது….. எப்பொழுது எப்படி யோசித்து செயல் படுவான் என்று புரியாத புதிராக இருக்கிறது….”

          விஜயின் பேச்சை கேட்ட பிரசாந்த் ஆச்சிரியத்துடன் “பல வெற்றிகரமான கேஸை முடித்தவர் இப்படி பேசுவது திகைப்பாக இருக்கிறது”

          தன் முழு உயரத்திருக்கு எழுந்து நின்றவன் “எதற்கும் ஒரு விதி விலக்கு இருக்கும் பிரசாந்த்…. எனி வே தேங்க்ஸ் பட் இந்த விஷயம் வெளியே தெரியவேண்டாம்” என்றவன் கை குலுக்க பதிலுக்கு கை நீட்டியவர் “பட் அந்த கொலையாளியின் வருடகணக்கு ஐடியாவை சில நாளில் கண்டு அறிந்து அவர்களை எதிர்த்து செயல் படுவதும் சாதாரண விஷயம் அல்ல…. அதுவும் நீங்க இதில் இன்வோல்வ் ஆகி இருப்பது தெரிந்ததும் இன்னும் அலெர்ட் ஆயிருப்பாங்க” என்றவரிடம் உதட்டு சிரிப்புடன் தலை அசைத்து அந்த கவர் மற்றும் அதன் ரிப்போர்டுடன்  விடைபெற்றுக்கொண்டு பாளை சிறை நோக்கி காரை செலுத்தினான்.

        காலை பத்து மணி அளவில் ஆபீஸ்க்கு கிளம்பி கீழே வந்தவனிடம் அமிர்தம்மாள் “வா ராகவ் சாப்ட்டு போடா… காலையில் காபி கூட குடிக்கமா வேறு வயித்தில் இருக்க” அவனிடம் பேசியவாறு டைன்னிங் டேபிளில் சாப்பாட்டை எடுத்து வைத்து கொண்டு இருந்தவரை கூர்ந்து நோக்கியவன் ஒன்றும் பேசாது அமைதியாக வந்து சாப்பிட்டு முடித்தவன் கண்கள் சுற்றி வலம் வர அதை அறிந்தவர் “ப்ரணவ் ஸ்குலுக்கு போயிருக்கிறான்” என்றவரிடம் ஒரு இறுக்கமான தலை அசைப்பு கொடுத்து சென்று விட்டான். ஒரு பெருமூச்சோடு அவன் செல்லும் திசையை பார்த்து நின்று இருந்தார் அமிர்தாம்மாள்……

    ஆபீஸ் வந்து இறங்கியவன் தன் அறையில் தஞ்சம் அடைந்த அடுத்த நொடி அவன் முன் வந்து நின்றான் ராகவின் காரியதரசி ‘ரகு’….. திருநெல்வேலி மற்றும் அல்லாது தூத்துக்குடி, நாகர்கோவில், மாஞ்சோலை என அதை சுற்றி உள்ள பகுதியில் ராகவின் பார்நிட்ச்சர் மற்றும் வீட்டு உபயோக பொருள் தொழில் வளர்ந்து இருந்தது….. அவன் தொழிலை கையில் எடுத்ததும் நாகர்கோவில், மாஞ்சோலை வரை விரிவு படுத்தி இருந்தான்…. மாஞ்சோலை டூரிஸ்ட் இடம் என்பதால் அங்கு மட்டும் ஹோட்டல், ரெசார்ட் வைத்து நிறுவி வந்தான்.

     அவனின் தொழில்துறை சந்திப்பை பற்றி கூறி முடித்தவன் இறுதில் “சார் இன்னைக்கு மதியம் காலேஜ் ப்ரோக்ராம் ஒன்று அட்டென்ட் பண்ணனும்…. ஏற்கனவே இரண்டு முறை உங்க டேட்ஸ் இல்லன்னு ப்ரோக்ராம் தள்ளி போய் இன்று உறுதி செய்து இருகாங்க சோ கண்டிப்பா போய் ஆகணும்”

        “ம்ம ஓகே ரகு மீட்டிங் மற்றும் லஞ்ச் முடிஞ்சு  போக கரெக்டா இருக்கும்… நம்ம ரீச் பண்ற டைம் அவர்களுக்கு சொல்லிருங்க” என்றவன் மீட்டிங்கில் பேச கூடிய குறிப்பை பற்றி பேசிகொண்டே   இருவரும் கிளம்பி சென்றனர்…

       அந்த மகளிர் கல்லூரியில் அன்று நடக்க கூடிய வெள்ளி விழாவிற்கான ஏற்பாடு வெகு தீவிரமாக நடந்து கொண்டு இருந்தது… ஒவ்வொரு டிபார்ட்மென்டிருக்கும் தனிதனி வேலை கொடுத்து இருந்தனர். “கார்த்திகா மேம் நீங்க கெஸ்ட் வெல்கம் அண்ட் ப்ரைஸ் அரேஜ்மென்ட் பார்த்துகோங்க HOD சொன்னாங்க” உடன் வேலை செய்யும் லேட்சர்  கூறியதை மறுத்தவள்

      “ஐயோ மேம் நான் இங்கு சேர்ந்து ஆறு மாசம் தான் ஆகிறது என்ன விட சீனியர் இருப்பாங்க…. நான் ஸ்டூடண்ட்ஸ் கைடென்ஸா இருக்கிறேன்” என்றவளின் பேச்சை மற்றவள் கேட்கவில்லை “HOD சொன்னா கரெக்டா இருக்கும் சோ நோமோர் டாக்….” என்றவள் அவள் கையில் பரிசு வாங்குவோர் பெயரை கொடுத்து சென்று விட்டாள்.

        ‘ராகவ் மகேந்திர பூபதி’ ஏக போக வரவேற்புடன் அரங்கத்துள் நுழைந்தவன் சுற்றி முற்றி தன் கண்களால் அலசி கொண்டு இருந்தான் …. இன்னும் வேறு கெஸ்ட் ஒருவர் வருவதாக சொன்ன பிரின்சிபாலை நெற்றி சுருங்க… கண்கள் இடுங்க பார்த்தான்.  “அது சார் தவறா எடுத்துக்க வேண்டாம் இது எங்க கல்லூரி வழக்கம்…. மற்றபடி உங்களை அவமதிக்கும் நோக்கத்தோடு இல்லை புரிந்து கொள்ளுங்கள்” என்றவரின் பேச்சை நம்பாது ஒரு தலை அசைப்புடன் திரும்பி கொண்டான்.

         வரவேற்பு உரை முடிந்ததும் கெஸ்ட் வெல்கம் கொடுக்க மேடைக்கு வந்தவள் தன் படபடக்கும் இதயத்தை பெருமூச்சு இழுத்து விட்டு சமன் செய்தவள் தன் இஷ்ட தெய்வமான ‘பிள்ளையாரை’ வேண்டியவள் தன் இனிமையான குரலில் “அரங்கத்தில் அமர்ந்து இருக்கும் அனைவருக்கும் என் மதிய வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்………” தமிழில் உரையை ஆரம்பித்து பின் பிசிறு இல்லாத ஆங்கிலத்தில் வரவேற்றவளை கேட்டவன் மேடையில் பால்வெள்ளை நிறம் மற்றும் சிகப்பு ரோஜா கல் பதித்த டிசைனர் சேலை உடுத்தி ஒற்றை தோளில் மல்லிகை சரத்தை முன்னால் விரிய விட்டு….. கண்கள் ஒரு நொடி காகித குறிப்பிலும் சில நொடி அரங்கம் நிமிர்ந்து விரிந்ததையும் கண்கள் மின்ன முதல் வரிசையில் இருந்து ரசித்து கொண்டு இருந்தான் ராகவ்…. அவனின் பெயர் உச்சரித்து கண்கள் மலர்த்தி அவனை பார்த்து தலை அசைத்தவளின் செயலில் தன்னை மறந்து  ‘ஏஞ்சல்’ என்று முணுமுணுத்தான்…

        அதே நேரம் கண்கள் மின்ன இமைகள் தாழ்த்தியவளின் செய்கையும் அவன் பார்வையில் இருந்து தப்பவில்லை…..

தொடரும்…………   

                 

 

Advertisement