Advertisement

RD – 21

        கோபம்!!! அதனின் வெளிப்பாடு மிகவும் பயங்கரமாக இருக்கும். தேவையில்லாத இடத்தில் கோபத்தின் வரவு இருக்கும் பொழுது வரும் இன்னல்களை யாராலும் தடுக்க இயலாது.

      தனது அறையில் கேஸ் விஷயத்தில் மூழ்கி இருந்தவனை கார்த்திகாவின்  தொடர் அழைப்பு சிறிது எரிச்சல்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.

       இந்த மாதிரி நேரத்தில் மனதில் தோன்றும் வழமையான வார்த்தைகள், ‘போன் எடுக்கவில்லை என்றால் முக்கியமான வேலையில் இருக்கிறேன் என்று கூடவா தெரியாது???’ மனைவியை அர்ச்சித்தவாறு திரும்ப அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

       அந்த பக்கம் அழைப்பை எடுத்தவள் வாய் திறந்து பேசுவதற்குள் “ஏய்! போன் அட்டெண்ட் பண்ணவில்லை என்றால் வேறு வேலையில் இருக்கிறேன் என்ற சின்ன விஷயம் கூட உனக்கு தெரியாதா?. வீட்டில் இருக்கும் பொழுது மனுஷனை கண்டுகொள்வது இல்லை, வெளியில் இருந்தால் அப்படியே உருகிற மாதிரி……”   

                   “ஸ் போதும் நீங்க உடனே காலேஜ் கிளம்பி வாங்கள்” என்றவள் அழைப்பை துண்டித்துவிட்டாள்.

         கல்லூரிக்குள் நுழைந்தவன் நேராக தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றான். அங்கு அவனுடைய மனைவி கூட இன்னும் இரண்டு பேராசிரியர்களும், இறந்து போன சிறை கைதி  ‘ராமு’வின் காதலி சாந்தியும் குழுமி இருந்தனர்.

         சாந்தியின் முகம் வீங்கி, கண்கள் அழுததால் சிவந்து போய் இருந்தது. அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து தலைமை ஆசிரியர் பேச்சை சலனமின்றி கவனித்து கொண்டு இருந்தான்.

          “உங்களை தொந்தரவு செய்ததுக்கு மன்னிக்கனும் சார்.  இந்த பொண்ணு காலேஜ் கம்பாஸ்குள்ள தற்கொலை செய்ய முயற்சி பண்ணி இருக்கா இது கல்லூரி விஷயம் தான் ஆனால் நீங்க ஒருமுறை சாந்தியை ஒரு கேஸ்க்காக விசாரித்துவிட்டு போனீங்க…..” அவன் நிதானமாக தலைமை ஆசிரியரை பார்க்கவும் அவர் திகைத்து பேசாது அமர்ந்து விட்டார்.

          கார்த்திகா தன் கணவனின் செயலில் சித்தம் மயங்கி அவனின் செய்கை ஒவ்வொன்றையும் அணு அணுவாக ரசித்து கொண்டு இருந்தாள். ‘ரௌடி!!!’ மனதுக்குள் அவனை செல்லமாக கொஞ்சினாள்.

           “நான் பார்த்துக்கிறேன். ஒரு டென் மினிட்ஸ் மிஸ். சாந்திகிட்ட விசாரனை செய்யணும்” அனுமதியும் இல்லாது கட்டளையும் இல்லாது ஒரு நடுநிலையில் சொல்லிவிட்டு அந்த பெண் சாந்தியை ஒரு தலை அசைப்புடன் வருமாறு சொன்னவன் வெளியே சென்று விட்டான்.

           அவனின் அந்த செய்கை கண்டு கோபம் கொண்ட அவன் மனையாள் சாந்தியை அழைத்து  சென்றாள். கல்லூரி மைதானத்தில் கல் பெஞ்ச் அருகில் போன் பேசிக்கொண்டு இருந்தவன் இவர்கள் வரவை அறிந்து பிறகு பேசுவதாக சொல்லி வைத்துவிட்டான்.

           கார்த்திகாவும் உடன் வந்து நிற்கவும் ‘நீ எதற்கு?’ என்பது போல் கேள்வியால் அவளை பார்த்தான்.

        அவன் பார்வையை புரிந்து கொண்டவள் “அது எப்படி!? டிசிபி சார்  எங்க காலேஜ் பொண்ண ஒரு தெரியாதா நபர்கிட்ட தனியா பேச அனுமதிக்க முடியும்? அவளுக்கு பாதுகாப்பு வேண்டாம்? அதான் நானும் இங்கே இருக்கிறேன் நீங்க அவகிட்ட கேட்க வேண்டியதை கேளுங்கள்” என்றவள் பக்கத்தில் இருந்த பெஞ்சில் அமர்ந்து கொண்டாள்.

         சாந்தி இவர்கள் சம்பாஷனை எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை தனது பிரச்சனையில் மூழ்கி இருந்தாள். கார்த்திகாவின் செயலை கண்டவன் ஒரு பெருமூச்சை வெளியிட்டவாறு தலையை அசைத்தான்.

        அவனின் செய்கையை ஓர கண்ணால் பார்த்தவள் அடுத்து அவன் என்ன கேட்க போகிறான் என்பதை கணித்தவள் விஜய் வாய் திறக்கவும் “  “ ‘நீ நிஜமாவே காலேஜ் ப்ரோபெஸர் தானா? சின்ன பிள்ளை மாதிரி பிகேவ் பண்ணற?’ இதான கேட்க போறீங்க” என்றவள் அவனை முறைத்தவாறு அவர்களை விட்டு தள்ளி நின்று கொண்டாள்.

          மெலிதான புன்னைகை அவன் இதழில் தவழ ‘சரியான இம்சை’ என்றவன் சாந்தியின் புறம் திரும்பி “ம்ம் சொல்லு” என்றான் அதிகாரமாக.

           அவனது குரலில் சற்றே மிரண்டவள் “அவர் இருந்த வீட்டுக்கு வேறு ஆட்கள் குடி வரதால நேற்று கிளீன் பண்னேன் அப்போ இது கிடைச்சுது” என்று அவன் கையில் மெமரி கார்ட் ஒன்றை கொடுத்தாள்.

         “கொஞ்ச நாளாவே என்னை யாரோ தொடர்ந்து வர மாதிரியே இருக்கு. அதனால தான் உங்களை தேடி வந்து இத கொடுக்க எனக்கு பயமா இருந்தது. அதான் இப்படி தற்கொலை முயற்சி பண்ற மாதிரி நடிச்சு……” விஜயின் கூர்மையான பார்வையில் தன் பேச்சை நிறுத்தி விட்டாள்.

         “படிச்ச பொண்ணு இப்படிதான் முட்டாள் மாதிரி நடந்துக்கனுமா?!. உங்க எஜுகேஷன் இது தான் உங்களுக்கு சொல்லி தந்துருக்கா?” சாந்தியின் முகம் அவன் கேள்வியில் கன்றிபோய் இருக்க மேலும் வேறு எதுவும் அவளிடம் விஜய் கேட்கவில்லை.

        “உன்னை தொடர்ந்து வருவது எனக்கு தெரிந்த ஒருவர்தான். அதனால நீ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.” என்றவன் அங்கு இருந்து கிளம்பிவிட்டான்.

       அவன் தன்னை கண்டுக்காமல் கடந்து போவதை கண்ட மனையாள் ‘ஹ்ம்ம் எத்தனை மணி நேரம் இப்படி விறைப்பாக இருக்க போறீங்கன்னு பார்போம்’ என நினைத்தவள் தன் வகுப்பறை நோக்கி நடந்தாள்.      

        தன் அறைக்குள் வந்து அமர்ந்தவன் மெமரி கார்டில் உள்ளதை சுத்தமாக அலசி பார்த்து விட்டான். அதில் ராமு வேலை செய்த கெமிக்கல் கம்பெனியில் தொழிலாளர்கள் வேலை செய்யும் பொழுது எடுத்த வீடியோ மற்றும் ஒரு சில புகைப்படம் இருந்தது. அதில் அவனுக்கு சந்தேகம் வரும்படி எதுவும் இல்லை.

         கண்டிப்பாக இந்த வீடியோ மறைந்து இருந்து தான் எடுத்து இருக்க வேண்டும். கேசவனை அழைத்துவிட்டு கண்கள் மூடி சுழல் நாற்காலியில் அமர்ந்து இருந்தான்.

          உள்ளே வந்தவருக்கு அவனின் அந்த தோற்றம் கவலையை அளித்தது. “சார் இந்த கேஸ் எடுத்ததில் இருந்து நீங்க ரொம்ப ஸ்ட்ரெஸா இருக்கீங்க. எந்த கேஸையும் இவ்வளவு நாள் இழுத்தது இல்லை. நம்ம கையில் போதிய குலு இருந்தும் நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்காம இருக்கீங்க சார்?” என்றார் ஆற்றாமையுடன்.

        “சில இடத்தில் பொறுமை ரொம்ப அவசியம் கேசவன். மெயின் கேரக்டர் நம்ம பிடிக்கணும். இப்போ நம்ம அவசர பட்ட அந்த ஆட்டோகாரன் போன்ற அல்லக்கை தான் சிக்குவான்” என்றவன் அந்த மெமரி கார்டில் உள்ளவற்றை கூறினான்.

         “அந்த கம்பெனியில் ஸ்பை ஒருத்தனை போடுங்க கேசவன்” என்றவன் “அந்த ‘ஜே’ மாடல் மோதிரம் பற்றி தகவல் கிடைத்ததா கேசவன்?”

         “எஸ் சார்! வண்ணார்பேட்டை பக்கம் உள்ள ஒரு பெரிய நகை கடையில ஆறு மாசத்துக்கு முன்னாடி அந்த மோதிரம் வாங்கிருக்கான். நீங்க சொன்ன மாதிரி அதுல வைர கல் தான் பதிச்சி இருக்கு சார். விலை ஒரு லட்சம்!!! மொத்தம் பணமும் கொடுத்து வாங்கி இருக்கான் சார்.”

         “அவன் பெயர்????”

          “ ‘ஜான்’.” என்று சொன்னவர் அவன் மோதிரம் வாங்கிய ரசீது முதற்கொண்டு விஜய் முன்பு வைத்தார்.

          “கேசவன், அப்போ அந்த கடையில் உள்ள சிசிடிவி கமேராவில் அவன் தெரிந்து  இருக்க வாய்ப்பு உள்ளது. நீங்க அதை கடையில் விசாரித்து பார்த்தீர்களா?”

          “ம்ம் விசாரிச்சேன் சார். அது ஆறு மாதத்துக்கு முன்னாடி உள்ள கவரேஜ் , அதனால ஒரு வாரம் டைம் கேட்றுக்காங்க.” என்று முடித்தார்.

          குற்றவாளியை நெருங்கி கொண்டு இருப்பதாக அவன் உள்ளுணர்வு உணர்த்தியது. ‘இந்த ஜான் முகம் தெரிந்து விட்டால்??? கண்டிப்பாக இந்த கேஸ் முடிந்து விடும்’ என்று நினைத்தவன் தன் வேலையில் மூழ்கி போனான்.

         காலேஜ் முடிந்து வீட்டிற்கு வந்தவள் தன்னை சுத்த செய்துவிட்டு  வீட்டு வேலையில் நுழைந்து கொண்டாள். விஜய்க்கு பிடித்த பட்டர் நாண், பட்டர் சிக்கென் க்ரேவி செய்து முடித்தாள்.

          அமிர்தம்மாள் இரவு வெறும் ஓட்ஸ் கஞ்சி மட்டும் எடுத்து கொள்வார். பெரும்பாலும் விஜய் வரும் முன்னமே சாப்பிட்டு விட்டு தூங்க சென்று விடுவார்.

         அன்றும் அதே போல சாப்பிட்டு முடித்து தன் அறைக்குள் நுழையையும் “கார்த்திகா” என்று அழைத்தார்.

         ப்ரணவை சாப்பிட வைத்து கொண்டு இருந்தவள் அவர் அழைக்கவும் சென்றாள்.

          “கார்த்திமா ராகவ் ரூம் அலமாரியில் கீதை புத்தகம் இருக்கும்மா, அதை எடுத்து கொண்டு வாடா”

         அவள் யோசைனையாக பார்க்கவும் “ராகவ் இங்கு இல்லாத பொழுது அவன் நினைப்பு வந்தால் அந்த அறையில போய் இருப்பேன். ஒரு தரம் கையோட கீதை புக் கொண்டு போனேன் அதை அப்படியே வச்சிட்டு வந்துட்டேன். போய் எடுத்துட்டு வா நான் உள்ளே போறேன்” என்றவர் தன் அறைக்கு சென்று விட்டார்.

          ‘ஹ்ம்ம் அவளுக்கு தான் சலித்து விட்டது, இவர்கள் ராகவ் மீது காட்டும் பாசம் கண்டு………..’ . மேலே ராகவ் அறைக்கு சென்று அலமாரியில் புத்தகத்தை எடுத்தவள் கையோடு  அடுக்கி வைத்த பொருட்கள் கீழே சரிந்து விழுந்தது.

        ‘ம்ச்ச், இது வேற’ சலித்து கொண்டே எல்லாவற்றையும் அடுக்கி வைத்தாள். இறுதியாக ரொம்ப பழைய கோப்பு அழுக்கு படிந்து அங்கும் இங்குமாக கிழிந்து இருந்தது.

         ஏதோ ஒன்று?!! அதை பார்க்க உள்ளுணர்வு சொல்ல திறந்து பார்த்தாள். “காவ்யா” அவளது உதடுகள் உச்சரித்தது.

          கீழே ப்ரணவ் அழைக்கும் சத்தம் கேட்க ஒரு முறை அறையை அலசிவிட்டு அந்த கோப்பை தனது அறையில் வைத்துவிட்டு அவசரமாக கீழே சென்றாள்.

            கீதை புத்தகத்தை தன் அத்தையிடம் கொடுத்து விட்டு,  ப்ரணவ் சாப்பிட்டு முடித்ததும் அவனை படுக்க வைத்தவள் தனது அறைக்கு சென்று அந்த கோப்பை எடுத்து கொண்டு பால்கணியில் அமர்ந்தாள்.

         அதை புரட்டி பார்த்தவளுக்கு அது ராகவ் மனைவி காவ்யா போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் என்பது மட்டும் தெரிந்தது.

         ‘இது எப்படி இவர்கிட்ட வந்து இருக்கும்?’ அதில் அவளுக்கு எதுவும் புரியவில்லை. இரண்டு முறை வாசித்து பார்த்ததில் ஹார்ட் அட்டாக் வந்து இறந்து இருக்காங்க என்பது மட்டும் புரிந்தது.

          இதில் வேறு ஏதோ ஒன்று இருப்பது போல் அவள் மனதிற்கு பட்டது. வாசலில் விஜய் வண்டி சத்தம் கேட்க அந்த கோப்பை தனது அலமாரியில் வைத்துவிட்டு கீழே சென்றாள்..

தேவதை வருவாள்…….

 

Advertisement