Advertisement

RD – 20

          ‘அதிர்ச்சி’ திடீரென்று தோன்றும் ஒருவித சின்ன பதட்டம், பயம். அந்த பயம் இனிமையான பயமாக அல்லது அதிர்ச்சியாக இருந்து இருக்கும் காற்றில் பயணித்து வந்த குரல் தன் மன விரும்பும் ஒருத்தருடையாக இருந்தால்…..! ஆனால், கார்த்திகா கேட்டதோ?????….

       தான் வீட்டில் இருந்தால் சரியாக மணி ஏழு அடிக்கும் முன்பே அவனுக்கு காபி வந்து சேர்ந்து இருக்கும். ஆனால், இன்று இன்னும் வரவில்லேயே என்ற கோபத்தில் கீழே இறங்கி வந்தான் ராகவ்.

        வந்தவன் கண்ணில் கிட்செனில் காபி போட்டு கொண்டு இருந்த கார்த்திகா பட “எனக்கும் ஒரு கப்” என்று கேட்டான். அவள் அதிர்ந்து போய் பார்க்கவும் ‘நான் ஒன்றுமே அப்படி அதிர்ச்சி அடைகிற அளவு கேள்வி கேட்க வில்லையே’ என்று யோசித்தவன் அவள் போட்டு வைத்து இருந்த காபி கப்பில் ஒன்றை எடுத்து கொண்டு “தேங்க்ஸ்” என்றவன் வெளியே சென்று விட்டான்.

        அவன் போனதும் ஒரு பெருமூச்சுடன் ‘ம்ச்ச்’ என்று சலித்தவாறு தன் வேலையை தொடர்ந்தாள்.

        தன் அத்தைக்கு காபி கொடுத்தவள், வேலையாள் கையில் விஜய்க்கு காபி கொடுத்து அனுப்பிவிட்டு நேராக ப்ரணவ் அறைக்கு சென்று விட்டாள்.

       குளித்து முடித்து உடை மாற்றி கொண்டு இருந்தவனின் அறை கதவு தட்ட ‘இவ எதுக்கு கதவ தட்டுறா?’ எண்ணியவாறு கதவை திறந்து பார்த்தான்.

       “அவள் எங்கே?” ஒற்றை கேள்வியாய் கேட்டவனின் குரலில் கோபம் இருந்தது.

         “சின்னம்மா ப்ரணவ் தம்பியை தயார் படுத்திட்டு இருக்காங்க” என்றவரிடம் காபி வாங்கிவிட்டு அனுப்பு வைத்தான்.

         ‘ராட்சசி’ என்று மனதில் நிந்தித்தவாறு கீழே கிளம்பி வந்தான். இன்னும் அவள் கிளம்பாமல் இருப்பதை பார்த்தவன் மொத்தமாக கோபத்தை அவள் மீது வீசி தெளித்து விட்டான் “இன்னும் நீ கிளம்பாம இருக்க…. எனக்கு லேட் ஆகுது. ஆடி அசைந்து கிளம்பி வரவேண்டியது…..” முணுமுணுத்தான்.

        விஜயின் கோபத்தை கண்ட அவன் அம்மா “என்னடா புதுசா சிணுங்குற?… நீ கிளம்பிட்டனா சாப்ட்டு ஸ்டேஷன் போ அதவிட்டுட்டு இங்க நின்னு அதிகாரம் பண்ணாத” என்றவர் தன் சாப்பாட்டை தொடர்ந்தார்.

        தன் அன்னை திட்டியதும் கோபத்தில் தன் மனையாளை முறைத்தான். தாயிடம் திட்டு வாங்கிவிட்டு கோபத்துடன் நிற்கும் சின்ன பிள்ளை போல் அவளை முறைத்து கொண்டு நின்றவனை கண்டவள் வாய்க்குள் சிரிப்பை அடக்கி கொண்டு கண்களால் கெஞ்சி கொண்டு இருந்தாள்.

      ‘போடி பம்ளிமோஸ்’ என்றவன் சாப்பிட அமர்ந்து விட்டான். ஒரு வழியாக கிளம்பி அவனுடன் காரில் ஏறிவிட்டாள். ப்ரணவ்வை முன் சீட்டில் அமர வைத்து விட்டு அவள் பின்னாடி ஏறிக்கொண்டாள்.

      “ஏய் பம்ளிமோஸ், ஏற்கனவே செம காண்டுல இருக்கேன்… இன்னும் டென்ஷன் படுத்தாத. ஒழுங்கா முன்னாடி வந்து உட்கார்”

       “ம்ச்ச் எதுக்கு இப்படி காலையில் இருந்தே சிடுமூஞ்சாவே இருக்கீங்க. பேருதான் பெரிய போலீஸ் ஆனால், வீட்ல அம்மாகிட்ட திட்டு வாங்கிட்டு நிக்குறாரு! நீ இதுக்கு எவ்வளவோ சம்மத்துடா ப்ரணவ்” என்று விஜயை வாரி கொண்டு இருந்தாள்.

      அழுத்தமான காலடியுடன் அவள் அருகில் வந்தவன் ப்ரணவ்வை தூக்கி கொண்டு கார்த்திகாவை உள்ளே தள்ளி அவள் மடியில் ப்ரணவ்வை வைத்துவிட்டு தன் இடத்திற்கு வந்து அமர்ந்து காரை கிளப்பினான்.

      ‘என்ன நடக்குது இங்கே?’ என்பது போல் முழித்து கொண்டு இருந்த அந்த குட்டி கண்ணனை பார்த்ததும் தம்பதி இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

       ப்ரணவ்வின் தலையை கலைத்து விட்டு “என் குட்டி” என்றவள் அவனை இறுக அணைத்து கன்னத்தில் முத்தம் பதித்தாள்.

        அவள் கொடுத்த முத்தத்தை தன் உள்ளங்கை கொண்டு துடைத்தான் அந்த சின்ன வாண்டு. இப்பொழுது சிரிப்பது விஜயின் முறை ஆகிவிட்டது.

        “ஹஹாஹ் சூப்பர்டா செல்லம்…. உன் சித்திட்ட சொல்லுடா உன் விஜி இப்படி எல்லாம் துடைக்க மாட்டேன். சோ, எனக்கு கொடுக்க சொல்லுடா” என்று அவளை பார்த்து கண்சிமிட்டினான்.

          “போ சித்தி விஜிக்கு கொடு” என்று ப்ரணவ் கார்த்திகாவின் கன்னம் பற்றி விஜய் இருக்கும் இடம் நோக்கி திருப்பினான்.

           அவனது கையை தட்டி விட்டு “போடா ரெண்டு பேருக்கும் ஒன்றும் கிடையாது” என்றவள் ஜன்னல் புறம் பார்வையை திருப்பி கொண்டாள்.

         ஸ்கூல் வந்ததும் கதவை திறந்தவள் அமைதியாக உட்கார்ந்து இருந்தாள் கார்த்திகா. அவள் மடியில் இருந்து இறங்கியவன் கன்னத்தில் இதழ் பதித்துவிட்டு இறங்கி சென்று விட்டான்.

        ப்ரணவ்வின் செய்கையில் புன்னைகை தானாக மலர விஜயை பார்த்ததும் முகத்தை திருப்பி கொண்டாள்.

        காலேஜ் வந்ததும் அவனிடம் ஒன்றும் சொல்லாது இறங்க சென்றவளை பிடித்து நிறுத்தினான். “ஏய் நான்தான் உன் மேல கோப படனும் நீ முறுக்கிட்டு போற….”

        “சாப்பிடும் போது எதுக்கு இவ்வளவு கோபம்? ஏற்கனவே, லேட் ஆயிற்று அதான் காபியை நான் கொண்டு வரல அதுக்கு இப்படியா கத்துறது ?……” அவள் மேலே பேசும் முன்னமே அருகில் இழுத்தவன் ஆழ்ந்த முத்தம் ஒன்றை அவள் நெற்றியில் பதித்தவாறு கண்கள் மூடி அமர்ந்து இருந்தான்.

        கணவனின் செய்கை ஏதோ புதிதாக தெரிய “விஜய்” என்று அவன் தோள் தொட்டாள். “ஸ்” என்று அவளது உதட்டின் மேல் விரல் வைத்தவன் அவளை தன் மார்பில் சாய்த்து கொண்டான்.

         “கார்த்தி, நேற்று அங்கிள் உன்கிட்ட அண்ணாவ பற்றி ஏதாவது சொன்னா …………”கோபத்தில் படக்கென அவனிடம் இருந்து பிரிந்து விட்டாள்.

         “அது எதுக்கு உங்களுக்கு? நாங்க ஏதோ பேசிட்டு போகிறோம் அதை பற்றி என்னால் எதுவும் சொல்ல முடியாது. சரியான அண்ணே கோந்து….. நமக்குன்னு தனியா இருக்கிற நேரம்கூட உங்க அண்ணன் பற்றிதான் பேசணுமா” என்றவள் கோபத்துடனே இறங்கி சென்று விட்டாள்.

                   “ராட்சசி என்ன சொல்ல வரேன்னு முழுசா கேட்குற பழக்கமே இல்லை……. அவளா ஒன்னு திங் பண்ணிட்டு என் உயிரை எடுப்பா” என்றவன் கோபத்தை முழுமையாக காரின் மீது காண்பித்தான். அப்படி ஒரு வேகத்துடன் கார் சீறி பாயிந்தது அவன் கையில்.                                                                *********

       “பாஸ் நம்ம இதுவரை இவ்வளவு நாட்கள் வேலை எதுவும் செய்யாமல் இருந்தது இல்லை. கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆக போகிறது. பம்பாயில் சேட் கேட்டுட்டே இருக்கான் …..” என்று ஜான் சொல்லி கொண்டு இருக்கும் பொழுதே அந்த சேட் போனில் வந்தான்….

        ‘கொடு’ என்பது போல் ராகவ் கை நீட்டினான். போனை அட்டென்ட் செய்ததும் “என்னா ஜான் நிம்மட தொழில் மொத்தமாவே படுத்துருச்சோ???..” என்றான் கிண்டலாக.

         “என்ன சேட் பேச்சு எல்லாம் வேறு மாதிரி இருக்கு…. எள்ளல் கொஞ்சம் தூக்கலாவே இருக்கு” என  சீறினான் ராகவ்.

              ராகவ் லைனில் இருப்பான் என்று சேட் எதிர்பார்க்கவில்லை “ஆஆ… ராகவ்ஜி நமஸ்கார்” என்றான் பணிவாக.

           “சேட்டுக்கு உயிர் மேல ஆசை விட்டுபோற்று  போல அதான் வாய் வார்த்தைகள் அதிகமாகுது…. நல்லா கவனி சேட்டு அடுத்த மாதத்தில் இருந்து உனக்கு சப்ளை சரியாக வந்து சேரும் அது வரைக்கும் போன் போட்டு தொந்தரவு பண்ணாது. என் வார்த்தையை மீறினால் என்ன செய்வேன் என்று உனக்கு நல்லாவே தெரியும். பார்த்து நடந்து கொள்” எச்சரிக்கையுடன் முடித்தான்.

             அந்த சைடு சேட் பயத்தில் “ஐயோ அப்படி எதுவும் செஞ்சுற வேண்ணாம் ஜி…. சேட்டு இனி நமக்கு போன் போடாது” என்று வைத்து விட்டான்..

       “விஜய் இந்த கேஸ்சை விடாமல் ரொம்ப நோண்டுகிறான். ஏதோ பலமான ஆதாரம் அவனிடம் சிக்கி இருக்கிறது” என்றான் ராகவ் யோசனையுடன்.

        அன்று ஜான்னிருக்கும் இந்த சந்தேகம் வந்தது. “அந்த கிருஷ்ணன், பெருமாள் இருவரால் நமக்கு ஆபத்து இருக்குமோ பாஸ்?” சந்தேகத்துடன் கேட்டான் ஜான்.

        “உஹும் இல்லை ஜான். அவர்கள் இரண்டு பேருக்கும் ஒன்றுமே தெரியாது என்ற விஷயம் என் தம்பி எப்பொழுதோ கண்டு பிடித்து இருப்பான். அவர்களை வைத்து நம்மளை ஏதோ ஒரு பொறியில் பிடித்து விடலாம் என்றுதான் இப்பொழுது பாதுகாப்பாக அந்த இருவரை வைத்து இருக்கான்”

        “என் இன்டுயுசன் கரெக்டா இருந்தா நம்ம யூஸ் பண்ண கெமிச்சல் ஸ்ட்ரிங் விஜய் கைக்கு கிடைத்து இருக்கும்” என்றான் தீர்மானமாக.

         “அதை வைத்து என்ன செய்ய முடியும் பாஸ். அது ஜஸ்ட் ஸ்ட்ரிங் அப்படின்னு நினைச்சு இருப்பாங்க….”

          “இடியட்!!! விஜயை குறைச்சு எடை போடாதே. அவன் கையில் அது கிடைத்து இருந்தால் கண்டிப்பாக அதான் பின் புலத்தை கண்டு அறிந்து இருப்பான்… பட் அவன் அதை அறிந்த மாதிரியே வெளியே காட்டமாட்டான் ரொம்ப கூலா இருப்பான். தட்ஸ பிக் ப்ளஸ் பாயிண்ட் அபௌட் ஹிம்” என கூறும் பொழுது ‘தன் தம்பி’ என்ற பெருமை அவன் குரலில் சிறது தென்படவே செய்தது.

         “விஜய் கையில் அந்த ஆதாரம் கிடைத்து இருக்கிறதா என்பதை விசாரியுங்கள். அதற்கு பிறகு என்ன செய்யலாம் என்பதை சொல்கிறேன்” என்றவன் கிளம்பி சென்று விட்டான்.

           ஸ்டேஷனில் தன் அறையில் கார்த்திகா பற்றிய யோசனையில் மூழ்கி இருந்தான் விஜய். ‘சரியான மிளகா பட்டாசு நான் சொல்றதை முழுசா கேட்காம அப்படியே மேலே வந்து சீற வேண்டியது’ என்று யோசித்து கொண்டு இருக்கும் பொழுதே அவனின் மூளையில் மின்னல் வெட்டியது.

          போன் செய்து “கேசவன் அந்த வீடியோ பெண்ட்ரைவை எடுத்துட்டு வாங்க குயிக்” என்று சொல்லிவிட்டு கண்கள் மூடி இருக்கையில் சாய்ந்து அமர்ந்து விட்டான். ‘ஜான்’ கிருஷ்ணன், பெருமாள் இருவரையும் முகமுடி அணிந்து கொலை செய்ய வந்த பொழுது காமிராவில் பதிவாகி இருந்த வீடியோவை தான் கேட்டு இருந்தான் கேசவனிடம்.

         கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த கேசவன் பெண்ட்ரைவை அவனிடம் கொடுத்தான். அதை தன் சிஸ்டம்மில் பொருத்தி பார்த்தவன் கண்கள் கூர்மையாக ஒவ்வொரு இடமாக அந்த நபரின் மேல் வலம் வந்தது.  ஓர் இடத்தில் வீடியோவை பாஷ் பண்ணி வைத்தான்.

          “கேசவன் உங்களுக்கு இந்த அக்கியூஸ்ட் கையில் அணிந்து இருக்கிற மோதிரத்தில் ஏதாவது வித்யாசம் தெரியுதா?” என்றான் இருக்கையில் ஒரு புறமாக அமர்ந்தவாறு.

           “ஒன்றும் பிடிபடலை சார்” என்றார் கேசவன்.

           “கேசவன் அவன் கையை பாருங்கள் அவன் போட்டு இருக்கிற மோதிரம் பாம்பு வடிவம் உடையாத இருக்கிறது. பட், அதை கூர்ந்து பாருங்கள்” என்று மற்றொரு சான்ஸ் கொடுத்தான் விஜய்.

            ஒரு நிமிடத்திருக்கு அதிகமாவே அதை உற்று உற்று பார்த்தார். பின் கண்கள் பளிச்சிட “சார் அது ‘ஜெ’ னு இங்கிலீஷ் லெட்டர்” என்றார் தான் கண்டு பிடித்த மகிழ்ச்சியுடன்.

            “பட் சார் இப்படி எத்தனையோ பேர் ஊருல இந்த மோதிரம்  அணிந்து இருப்பாங்க…!!! நாம எப்படி கண்டு பிடிக்க முடியும்?” என்றார்.

            “ம்ம் இதை அணிந்து இருப்பவர்கள் பலபேராக இருக்கலாம்!!! பட், வாங்கிய இடம் நம் ஊரில் இருக்கும் சில பெரிய நகை கடையாக தான் இருக்கும்”

          “ஒரு வேளை சின்ன நகை கடையா இருக்கலாம் அல்லது வெளியூரில் வாங்கி இருக்கலாம்” என்றார் கேசவன்.

           “ம்ம் இருக்கலாம் கேசவன்!!! பட், அதில் ஒரு வைர கல் பதித்து இருக்கு. சோ, இதை சின்ன கடையில் வாங்க வாய்ப்பு குறைவு. மேலும், வெளியூரில் வாங்கி இருந்தாலும் இங்கு இருக்கும் கடை ஒனர்களுக்கு இந்த மாடல் தெரியாமல் இருக்க வாய்ப்பு கிடையாது. சோ, விசாரித்து பாருங்கள்” என்றவன் ஒரு முக்கியமான போன் வர அதை பேசியவாறு வெளியே சென்று விட்டான்.

          அந்த முக்கியமான எண்ணிற்கு சொந்தக்காரி அங்கு கோபத்தில் காளியாக அமர்ந்து இருந்தாள்.

தேவதை வருவாள்….

 

Advertisement