Advertisement

அத்தியாயம் – 2

     இருவரின் பார்வையில் இருப்பது என்ன? ஒருவனின் கண்ணில் இருப்பது ‘அப்பட்டமான வெறுப்பு’….. மற்றொருவன் கண்ணில் இருப்பது ‘இயலாமை’ தன் அண்ணனின் மனதில் தனக்கு சிறிது கூட இடம் இல்லையே என்ற ஆற்றாமை ஆனால் அது அவன் கண்ணில் குடி இருந்தது ஒரு நொடியோ இரண்டு நொடியோ அதன் பின் தன் கம்பீரமான பார்வை குடி வந்து விட்டது..

தன் மகன்களின் நிலையை எண்ணி வருந்தியவர் பின் அதில் ஒரு பயனும் இல்லை என நினைத்தவர் “இங்கு பாரு கண்ணா இவனை உன் கூடவே ஸ்டேஷன் அழைத்து சென்று விடு…… இவன் அலும்பு கொஞ்சமும் தாங்க முடியவில்லை சீக்கிரம் பள்ளிக்கு அனுப்பும் வேலையை செய்….. அங்கு சென்ற பின் தான் கொஞ்சம் வளர்ச்சியும், ஒழுக்கமும் வரும் நம் கைக்குள்ளே இருந்தால் அடாவடிதனம் அதிகமாகும்” கட்டளையிடும் தோணியில் சொல்லி முடித்தார்.

பாட்டியின் பேச்சில் இருந்தே ஏதோ உணர்ந்தவன் உதடு பிதுக்கி கண்கள் சுருங்க விஜய்யிடம் “நா சூல் போறன் விஜி” ரோசத்துடன் மொழிந்தவன் கை கட்டி இருக்கையில் முகத்தை தூக்கி வைத்து அமர்ந்து கொண்டான்.

தன் மகனின் செயலை ரசித்தவன் இதழின் உறைந்த புன்னகையுடன் அவன் மடியில் சென்று படுத்து கொண்டான். “சாரி பிரணவ் அப்பா இனி லேட்டாக வர மாட்டேன்……. ப்ளீஸ் செல்லம் அப்பாக்கு ஒரு உம்மா” என நெற்றியை காட்டினான். அவனின் மன்னிப்பை ஏற்றதன் அறிகுறியாக குனிந்து தன் பிஞ்சு விரலால் வருடி முத்தம் கொடுத்தான்….. தன் மகனின் ஸ்பரிசத்தில் சிறிது நேரம் கண்கள் மூடி இருந்தவன் அவன் உடல் பயத்தில் நடுங்கவும் வருவது யாரு என்று உகித்தவன் எழுந்து மகனை தூக்கி கொண்டவன் தன்னை கடந்து செல்லும் ‘ராகவை’ கவனியாதவாறு அறைக்கு சென்று விட்டான்.

மகனுடன் குளித்து முடித்து வந்தவன் இருவரும் ஒன்றாக உண்ட பின் பிரணவ் விளையாட சென்று விட்டான்…. இனி அவன் விஜயை தேடுவது தூங்கும் பொழுது மட்டும் தான்….

“ராகவ் எப்போ வந்தான் அம்மா……. ஒரு தகவலும் சொல்லவில்லை”

“அவன் எப்போ நம்மகிட்ட சொல்லிவிட்டு வந்துருக்கான் அவனா நினைத்தால் வருவான்….. ஆனா, கண்ணா நம்ம சின்ன கண்ணனுக்கு இன்னும் ராகவன் மீது இருக்கும் பயம் இன்னும் போக வில்லை அவன் காலடி ஓசை கேட்டாலே உடம்பு நடுங்கி விறைத்து போகிறான்” சோகம் இழையோட சொன்னார் அமிர்தம்மாள்.

“எனக்கு அது மட்டும் புரியவில்லை அம்மா நானும் போக போக சரியாகிடம் நினைத்து ஒன்று தொடர்புள்ளி வைக்காது காற்புள்ளி வைத்து நீண்டு கொண்டே போகிறது….. பிரணுவ் கிட்ட கேட்டால் அண்ணன் பெயரை சொன்னாலே கத்தி அழுது கரைகிறான்” என்று யோசனையானான்.

“ஹ்ம்ம் புரிகிறது கண்ணா ஆனா அவனை இப்படியே விடுவிட முடியாது பார் என்ன இருந்தாலும்……….” தன் அம்மா என்ன சொல்ல வருகிறார்கள் என அறிந்தவன் ஒரு விறைப்புடன் “எல்லாம் சீக்கிரம் சரியாகி விடும் அம்மா…. ப்ரணுவுக்கு வித்யாலயா ஸ்கூலில் அட்மிசன் போட்டாச்சு அம்மா வரும் திங்கள் போகனும் நான் அவனை கூட்டிட்டு தேவையான திங்க்ஸ் வாங்கி கொடுத்து அனுப்பி விடுகிறேன்” என்றவன் வானம் கலந்த வெள்ளை டி-ஷர்ட்டும், அடர் கருப்பு நிற ஜீன்ஸ் சகிதமாக தயாராகி வந்தவன் கைகளில் தொற்றி கொண்ட அந்த சின்ன கண்ணனும் வளர்ந்த கண்ணனுக்கு இணையாக அழகில் மிளிர்ந்து கொண்டு இருந்தான்.

“இன்னும் வளர்ந்ததும் உன் அழகுடன் சேர்ந்து கம்பீரமும் என் செல்லத்துக்கு வந்துவிடும்…. அதற்குள் உனக்கு கல்யாணம் முடித்து விட வேண்டும் இல்லை என்றால் உனக்கு போட்டியாக இவன் வந்து விடுவான்” கேலி போல் சொன்னாலும் தன் அன்னை வலியுறுத்துவது விஜய்க்கு புரியாமல் இல்லை .

“என்ன செல்லம் இந்த விஜிக்கு போட்டியா நீ வருவியா” தன் மகனின் நேற்றியோடு தன் நெற்றியை முட்டி கேட்டவனின் கன்னத்தில் முத்தமிட்டு மேலும், இடமுமாக தலை ஆட்டினான்.

தன் பேரனின் குறும்பில் திளைத்தவர் “அப்படியே அப்பன் சாமர்த்தியம்” கொஞ்சி இருவரையும் அனுப்பி வைத்தார்.

கூலேர்ஸ் அணிந்துகொண்டு லாவகமாக கார் ஓட்டியவனின் புஜத்தில் குத்தி “என்க்கு எப்போ விஜி இப்டி வரும்” மழலை குரல் மாறாமல் கேட்ட தன் மகனின் தலையை ஆட்டியவன் “நீ ஸ்கூல் முடிச்சு, காலேஜ் போகும்போது வரும்” வாழைபழத்தில் ஊசி நுழைப்பது போல் அவன் ஸ்கூல் போக வேண்டும் என்பதை அறிவித்தான் விஜய்.

முகம் சுருங்க “ஸ்கூலா……..” என்றவன் பின் “ஆமா பாத்திட ஸ்க்கூல் போதேன் சொன்னேன், அப்போ போனும்” சிறிது நேரம் ஏதோ யோசித்தவன் பின் “விஜி என்க்கு எல்லா ச்பைடேர்மேன்க்குளது வாங்கி தர்னும்” ஷாப்பிங் மால் வரும் வரைக்கும் அவனின் பட்டியல் நீண்டு கொண்டே போனது.

விஜயின் கை பிடித்து கதை அளந்து கொண்டு வந்தவன் சிறுவருக்கான திங்க்ஸ் இருக்கும் இடம் வந்ததும் உள்ளே ஓடி சென்றான் “டேய் ப்ரணவ் மெதுவா போ” என்றவன் அவனுக்கு தேவையான பொருளை ஆராய ஆரம்பித்தான்.

வண்ணகளைவையான புத்தகத்தின் அருகில் சென்று அதனை புரட்டி பார்த்து கொண்டு இருந்த ப்ரணவ் சுற்றி முற்றி பார்த்தவன் குடுகுடு என விஜயின் அருகில் சென்றவன் அவன் கையை பிடித்து இழுத்து “வா விஜி” என்றான்.

“இருடா உனக்கு வாங்கியதை எடுத்து வைக்க சொல்லிவிட்டு வருகிறேன் என்ன அவசரம்…..” என்றவனின் பேச்சை காதில் வாங்காது அவனை இழுத்து சென்றான். கடை உழியரிடம் பில் போட சொல்லிவிட்டு அவனுடன் சென்றான்.

தான் புத்தகத்தை புரட்டி பார்த்துகொண்டு இருந்த இடத்தில் கை நீட்டி தன் உயரத்துக்கு மண்டி இட வைத்தவன் “அங்க பாரு” அவன் காட்டிய திசையை பார்த்தவன் கண்கள் இடுங்க சுற்றி பார்த்தவன் ப்ரனுவுக்கு கண்களால் வருமாறு சைகை காட்டியவன் அமைதியாக அந்த புத்தக அலமாரியின் பின்னால் சென்று கைகட்டி அமைதியாக நின்றான்.

தன் முன்னே ஒரு பெரிய அரண் நிற்பது தெரியாமல் சுற்றி முற்றி பார்த்து, மேலே உள்ள காமெராவை பார்க்கவும் தவறவில்லை….. சுற்றி பார்த்து கொண்டு இருந்தவள் விஜயின் மார்பு மீது மோதவும் இதயம் துடிக்க நெஞ்சில் உள்ளங்கையை பதித்து கண்களை மூடி அவனிடம் இருந்து விலகி நின்றாள். அவளின் அந்த நிலையை பார்த்தவனின் உதடுகள் தானாக ‘பம்ளிமாஸ்’ என்றது கண்களோ அவளின் குண்டு சிவந்த கன்னத்தில் பதிந்து இருந்தது….. ஒரு நிமிடம் தன்னை மறந்து முழுவதுமாக அவளை மேல் இருந்து கீழ் வரை ரசித்தவன் ப்ரனவின் “விஜி” என்ற அழைப்பு அவனை நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தது.

    அவளும் அப்பொழுது தான் கண் திறந்தவள் மிரட்சியுடன் அவனையும், ப்ரனவையும் மாறி மாறி பார்த்தவள் “ப்ளிஸ் யார்கிட்டையும்  சொல்லிறாதிங்க” கண்களை சுருக்கி கெஞ்சி கொண்டு இருந்தாள். அவள் கையில் வைத்து இருந்த பொருளை பார்த்தவன் கண்கள் சிரிக்க உதடுகள் மடித்து திரும்பி கொண்டான்.

     அவனின் செய்கையை கண்கள் சுருங்க கூர்ந்து கவனித்தவள் தன் கையை பின்னால் மறைத்து கொண்டாள் ‘சை எல்லாம் அந்த குட்டி பிசாசு வேலை…. அது எடுத்ததுக்கு இப்போ நம்ம இவன் முன்னால அசிங்கபடவேண்டியதா இருக்கு’.

       “அத்த நீ இன்னும் அந்த ஹக்கிஸ் கவர வைக்கலையா, உன் கூட ஷாப்பிங் வரும்போது மட்டும் எந்த திங்க்ஸயும் எடுக்க முடியல உங்கிட்ட மாட்டிகிறேன் …. சீக்கிரம் வச்சிட்டு வா எனக்கு பசிக்கு வீட்ல அம்மா சூடா வட போட்டு வச்சிருக்கும்…..” சொல்லி கொண்டே போனவள் தனக்கு முன்னால் இருவர் நிற்பதை பார்த்த அந்த வாண்டு தன் அத்தையின் புறம் திரும்பி பயத்துடன் பார்த்தாள்.

     ‘இப்பொழுதாவது உனக்கு புரிகிறதா’ என்ற விதத்தில் விஜயை பார்த்தாள் பெண்ணவள்.

    இன்னும் கண்கள் ஓரம் அந்த சிரிப்பு அப்படியே இருந்தது விஜய்க்கு அதனை கண்டவள் கடுப்பாகி தன் பக்கத்தில் இருந்தவளை முடிந்தமட்டும் முறைத்தாள்… “குட்டி இங்க வாங்க” அந்த சிறு பெண்ணை அழைத்தான்.

    தன் அத்தையின் புறம் திரும்பியவள் அவள் கண்ணால் சம்மதம் சொல்லவும் அவன் அருகில் சென்றாள்… அவளை தன் இடது கையில் தூக்கி வைத்தவன் “பேபியோட நேம் என்ன” கையில் ஒரு சாக்கியை அவளிடம் கொடுத்தவாறு வினவினான்… அதற்கும் தன் அத்தையை பார்த்து சம்மதம் வாங்கியவள் சாக்கியை வாங்கிக்கொண்டு “மித்ரா, மித்து, மித்துகுட்டி” என்றவளின் மழலை பேச்சை ரசித்தவன் “ம்ம் இவ்வளவு பெயரா… உங்க அத்தை உன்னை எப்படி கூப்பிடுவாங்க” பார்வை அவளிடமே நிலைத்து நின்றது.

      கண்கள் விரிய அவனை பார்த்தவள்…. அவனின் பார்வை வீச்சை அவளால் தாங்க முடியவில்லை… தன்னிலையில் உழன்று கொண்டு இருந்தவளின்  காதில் “கார்த்தி அத்த என்ன மித்துகுட்டி கூப்பிடுவா, அப்பா,அம்மா, பாட்டி, தாத்தா மித்து கூப்பிடுவாங்க” கையில் இருந்த சாக்கியை பிரித்தவாறு பதில் சொன்ன மித்ராவின் குரல் கேட்டது.

     “அது யாரு கார்த்தி அத்த?” கடைக்கண் விழியோரம் அவளை பார்த்தவாறு கேட்டான்…. அவனின் அந்த பார்வை, அவனின் பேச்சு  அவளை ஏதோ செய்ய முகத்தை திருப்பி கொண்டாள். “கார்த்திகா அத்த…. என் அத்த பெயரு” என்றது வாண்டு.

     “சரி நானும் உன் அத்த மாதிரி உன்னை மித்து குட்டின்னு கூப்பிடுறேன்….. ஏன் மித்து குட்டி இப்படி யாருக்கும் தெரியாமல் திங்க்ஸ் எடுத்தா சாமி நம்ம கண்ண குத்தும் அது உன் கார்த்தி அத்தைக்கு தெரியாதா” என்றவனின் வார்த்தையை கேட்டு  இருவருமே விலுக்கென்று தலை உயர்த்தி அவனை பார்த்தனர்.

      அந்த சின்ன வாண்டு திருதிரு என முழித்து கொண்டு இருந்தது பின் “நான் என் அத்தைட்ட சொல்லறேன் அங்கிள் இனி இப்படி எடுக்க கூடாது அப்படின்னு” கண்கள் அபிநயம் பிடிக்க சொன்னவள் அவனிடம் இருந்து விலகி தன் அத்தையின் அருகில் சென்றவள் “இனி இப்படி பண்ணாத” என்றவள் அவள் கையில் இருந்த ஹக்கிசை சமத்தாக எடுத்த இடத்தில் வைத்து விட்டு அவள் அருகில் வந்து நின்றவளை ‘ப்ராடு’ என்று தன் அண்ணன் மகளை கரித்து கொட்டியவள் அவன் புறம் திரும்பாது “வாடி போகலாம்” கோபத்துடன் அவளை இழுத்து கொண்டு சென்றாள்.

       “ஒரு நிமிஷம்” அவனின் குரல் தடை செய்ய என்ன என்பது போல் பார்த்தாள் “இது புதுசா ஓபன் பண்ண ஷாப் அதனால கேமரா ஒரு சில இடத்துல தான் பொருத்தி இருக்காங்க….. சின்ன குழைந்தைக வம்பு பண்ணும் நாம தான் பொருத்துகனும் அண்ட் மோராவேர் எல்லாம் ஷாப்ளையும் இப்படி அசாதாரணமா இருக்காது பார்த்து நடந்துக்க” என்றவன் “பாய் மித்து குட்டி” என்று ப்ரணவை அழைத்து சென்று விட்டான்.

    அப்பொழுது தான் ப்ரணவின் இருப்பை உணர்ந்தவள் ‘யாரிந்த பையன்… அவனுடைய பையனா இருக்குமோ’ நெஞ்சில் சுருக்கென்று ஏதோ தைக்க அதை ஒதுக்கியவள் “வாடி உனக்கு வீட்டில் ஒரு பெரிய விருந்தே போடுதேன்…….. பசிகிதுன்னு சொன்னல வா” என்று இழுத்து கொண்டு எடுத்த பொருளுக்கு  பில் போட்டு தன் ஸ்கூட்டியில் ஏற்றி தானும் ஏறி அமர்ந்தவள் பின்பு மித்ரா ஏறி அமர்ந்து கொண்டாள். சைடு மிரரின் வழியாக அவள் முகத்தை பார்த்தவள் “என்னடி உன் முழியே சரி இல்லை….. கவுன்டர்ல ஏதாவது சுட்டிடியா என்ன?” என்றவளின் கேள்விக்கு “ஒன்னு இல்ல அத்த நீ போ” இறுக்கமாக அவளை கட்டி கொண்டாள்.

       மித்ராவை முறைத்து கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தவளின் முன்பு விஜய் வந்து நின்றான். ‘இவன் எதுக்கு இப்படி எல்லா இடத்திலையும் தரிசனம் கொடுத்துக்கிட்டு இருக்கான்…. அடக்க ஒடுக்கமா கல்யாண ஆனவன் மாதிரி இருக்காம கண்ணால சிரிச்சி பேச்சு முகத்த மட்டும் இறுக்கமா வைத்து மயக்கி கொல்லுறான்’ உள்ளுர மூண்ட கோபத்தால “என்ன சார் வேணும் அதான் ஒன்னு விடாம எங்கள பத்தி தெரிஞ்சுகிட்டிங்கள அப்புறம் என்ன” என்றவளின் அருகில் வந்தவன் அவளை சைடாக உரசியவாறு மித்ராவின் தோள்பையில் இருந்து தன் கூலேர்சை எடுத்து அவள் முன்பு காட்டினான். இவ்வளவு அருகில் அவனை பார்த்ததால் மூச்சு முட்ட அவளின் குண்டு கன்னங்கள் லேசாக சிவக்க மூச்சு விட மறந்து போய் கண்கள் விரிய அவனை பார்த்து கொண்டு இருந்தாள்.

       “நான் போலீஸ்காரன் பேபி என் கண்ணில் இருந்து எதுவும் தப்பாது….. இதை நீயே வச்சுக்கோ மித்து குட்டி” என்றவன் கார்த்திகா புறம் திரும்பியவன் “மூச்சை விடு மயங்கி விழுந்துராத” உதடு சிரிக்க சொல்லியவன் மித்துவின்  கூண்டு கன்னங்களை பற்றி முத்தமிட்டு சென்று விட்டான்.

       ‘இவன் போலிஸா’ உறைந்து இருந்தவள் மித்ராவின் புறம் திரும்பி “கடைசில உன் கைவரிசையை போலீஸ்காரன் கிட்டய காமிச்சிட்ட சரியான ஆளுடி நீ” என்றவள் அவன் கார் சென்ற திசையை பார்த்து ‘இவனை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..’ என்று நினைத்தவள் பின் மித்ராவின் சத்தத்தில் தன்னிலை வந்து    வண்டியை எடுத்தாள்.

       அங்கு அவனோ இடது கையால் ஸ்டியரிங்கை பிடித்து இருந்தவன் தன் வலது கை முட்டி ஜன்னலின் ஓரம் இருக்க தன் உதட்டில் வழிந்து சிரிப்பை விரல் மடக்கி மறைத்து கொண்டான்.  “சரியான வாண்டுங்க ரெண்டும் இல்லடா” என்றவன் தன் வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

தொடரும்………..

 

Advertisement