Advertisement

RD – 19

      தன் மனதில் மட்டும் தான் இப்படி தோன்றுகிறதா இல்லை தான் ரொம்ப அதிகமாக கற்பனை செய்கிறோமோ என்று பல முறை நினைத்து பார்த்து இருக்கிறாள் கார்த்திகா.

    இந்த எண்ணம்  எல்லாம் ராகவ் பற்றி அவளது கணிப்பு தப்பாக நடந்த சமயத்தில் உருவானது. கணவனும் சரி, தன் மாமியாரும் சரி ஒரு கடுகு அளவு கூட ராகவை விட்டு கொடுத்து பேசியது இல்லை… அவன் மாற்றான் தாய் மகனாக இருந்தாலும் இருவருக்கும் அவன் மேல் அளப்பரிய ப்ரியம் உண்டு.

      தன் மாமனார் மட்டும் இப்பொழுது இருந்தால் அவர் இவர்கள் இருவரையும் மிஞ்சி இருப்பார் என்பது விஜய் அவன் அப்பாவை பற்றி கூறும்பொழுது கணித்து வைத்து இருந்தாள். ஆனால், அவனுக்கு இவர்கள் மீது பாசம் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்????.

      ஆனால், தான் மனதில் எழுந்த உறுத்தல் சரிதான் என்பது போல இப்பொழுது ‘குரு’ சொல்லுவது அவளுக்கு ஆச்சிர்யமாக இருந்தது.

      “என்னமா அப்படி பார்க்குற என்னை போல நீயும் அவன் கிட்ட ராகவ் பற்றி பேசினியோ?”

       பரிதாபமாக முகத்தை வைத்து கொண்டு “ஆமா சார்” என்றாள்.

        “ப்ச்ச் என்னமா இது! நான் உனக்கு பெரியப்பா முறை வரும் நீ என்னை அப்படியே கூப்பிடு” செல்ல கட்டளை ஒன்றை விடுவித்தார்.

       முகத்தில் தோன்றிய சிரிப்புடன் “சரி அப்பா” என்றவள் ராகவ் பற்றி தன் அத்தையிடமும், கணவரிடமும் கேட்டு அறிந்ததை பற்றி சொல்லி முடித்தாள்.

       அவள் பேசி முடிக்கும் வரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்தார்.

        “நான் அத்தானை குறை சொல்லவில்லை அப்பா ஆனா அவர் மேல எனக்கு ஒரு நல்ல மதிப்பும் வரல…. அவரும், அத்தையும் அத்தான் மேல ரொம்ப பிரியமா இருக்காங்க. அந்த நேசத்திற்கு பெரிய அத்தான் தகுதி இல்லையோன்னு எனக்கு பல முறை தோன்றும்……..” என்றவள் பேசி கொண்டு இருக்கும்பொழுது அவளது கை பற்றி பலமாக குலுக்கினார்.

      அதிர்ந்து நோக்கியவள் “என்னப்பா?” என்றாள் அவரின் செய்கைக்கான அர்த்தம் ஒன்றும் புரியாமல்.

       கார்த்திகாவின் கையை விடுவித்தவர் சிறிது நொடி ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தார்.

        “உன் மனசுல ராகவ் பற்றி தோன்றிய இந்த உறுத்தல் எனக்கு பல காலமாக இருக்கிறது. நான் அதை மறைமுகமாக அமிர்தாகிட்ட சொன்னேன்….” என்றவரின் கேள்வியில் ஆர்வம் அதிகரிக்க “அத்தை என்ன சொன்னாங்கப்பா” என்றாள் விஜயின் மனையாள்.

        “ஹ்ம்ம் என்ன சொல்லிருப்பா??? ராகவை அவள் தலையில் தூக்கி வைத்து கொண்டாட குறை தான். ‘என் மூத்த பிள்ளை பற்றி தவறாக எதுவும் சொல்லாதிங்க அண்ணா’ அப்படின்னு சொல்லிட்டா”.

       “உன் புருஷன் இருக்கானே மனசுல பெரிய லட்சுமணன் நினைப்பு ஒரு வார்த்தை அவனை பற்றி பேச விடமாட்டான்…” என்றார் இயலாமையுடன்.

      “எனக்கு புரியலைப்பா! ஏன் இப்படி குருட்டு தனமான நம்பிக்கை, பாசம்….” தன் கணவனும் ராகவ் விஷயத்தில் முட்டாளாக இருக்கிறானே என்ற ஆற்றாமை அவள் குரலில் இருந்தது.

        அதை சரியாக புரிந்து கொண்டார் குரு. “ விஜய்க்கு இந்த போலீஸ் வேலை பிடித்தம் இல்லைமா. உன் மாமனார் சொல்லி அவன் இதில் தன்னை நுழைத்து கொண்டான்.. ஆனால், அவன் ஒரு கேஸை கையில் எடுத்தால் கண்டிப்பாக முடிக்காமல் விட மாட்டான் எந்த வித ஓட்டை மூலமும் குற்றவாளி வெளியே வர முடியாது… அப்படி ஒரு திறமைசாலி” தன் நண்பன் மகன் குறித்து பெருமையாக சொல்லிக்கொண்டு இருந்தார்.

      அவர் முகத்தில் தெரிந்த அதே பெருமை இன்னும் பல மடங்கு கூடுதாலாக கார்த்திகாவின் மனதில் இருந்தது ‘தன் கணவன் இவன்’ என்று!!

       “அவனுடைய ப்ளஸ்னு சொன்னா எந்த இடத்துல கடுமையாக இருக்கனும், எப்போ பொறுமையா இருக்கனும் என்பதை சூழ்நிலை வைத்து கணித்து வைத்து இருப்பான். ஆனால், அவனுடைய அந்த புத்திசாலி தனம் அவனுடைய அண்ணன் விசயத்தில் ‘பாசம்’ங்கற   கறுமேகம் சூழ்ந்து இருக்கு. கூடிய சீக்கிரம் அது விலகனும் நீ கண்டிப்பா அதுக்கு உறுதுணையா இருக்கனும்மா” என்றார் அவள் கையை பற்றி இறைஞ்சலுடன் அந்த பெரிய மனிதர்.

     பதட்டத்துடன் “அய்யோ என்னப்பா இது…?! அவருக்கு உறுதுணையா நான் எப்பவுமே இருப்பேன்ப்பா.” என்றாள் காதலுடன்.

    பின் விருந்து உபச்சாரம் என்று இரவு பொழுது ஒன்பது மணி வரை அங்கு கழிந்தது.

    “சரி அங்கிள் நாங்க கிளம்பறோம்” என்றவன் தூங்கி கொண்டு இருந்த ப்ரணவை தன் தோளில் சாய்த்து கொண்டான்.

     குருவின் மனையாள் மரகதம் ஒரு தட்டில் பூ, புடவை, பொட்டு என வைத்து கொடுக்க இருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி பெற்று கொண்டனர்.

     “சீக்கிரம் ப்ரணவ் கூட விளையாட ஒரு குட்டி விஜயை பெற்றுகொடுத்துரு” என்ற செல்ல கட்டளையுடன் வழி அனுப்பி வைத்தனர்.

       காரில் வரும் பொழுது எந்த வித பேசும் இல்லாமல் இருவரும் அமைதியாகவே இருந்தனர். கார்த்திகா மடியில் படுத்து இருந்த ப்ரணவின் ஆழ்ந்த மூச்சு சத்தமே காருக்குள் நிறைந்து இருந்தது.

      சரியாக பத்து மணிக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் மூவரும். அமிர்தம்மாள் தூக்கத்தில் இருக்க, வேலை ஆட்கள் வேலையை முடித்ததும் வீடு சென்று இருந்தனர்.

       இந்த இரண்டு மாத பழக்கத்தில் விஜய் இரவு நேரம் ஸ்டேஷன் சென்று விட்டால் ப்ரணவை தன்னுடன் படுக்க வைத்து கொள்வாள். விஜய் இரவு நேரம் வீட்டில் இருந்தாலும் ப்ரணவ் அவர்களுடன் சில நேரம் தூங்குவான். இன்றும் அது போல் அவர்களுடன் தான் அவன் படுப்பான் என்ற நினைப்பில் அவனை தங்கள் அறைக்கு தூக்கி சென்றாள்  கார்த்திகா.

     சூவை கழற்றி ராகில் அடுக்கி வைத்தவன், “வெயிட் கார்த்தி… ப்ரனுவை அவன் அறையில் படுக்க போட்டு வருகிறேன்” என்றவன் அவளிடம் இருந்து ப்ரணவை வாங்கி கொண்டான்.

     மனது படபடக்க “ஏன் அவன் நம்மகூட தூங்கட்டும் விஜய்??” என்றாள் படபடப்பை மறைத்தவாறு.

      ஒரு புன்னகையுடன் அவளை மேலும், கீழும் பார்த்தவாறு சென்று விட்டான்.

      ‘என்ன இவன் பார்வை சரி இல்லையே?!’ ஒருவித பயபந்து தொண்டைக்குள் உருள தனது அறை நோக்கி சென்றாள்.

       ப்ரணவை அவனது  அறையில் படுக்க வைத்தவன் தங்கள் அறைக்குள் வந்து அமைதியாக படுத்துக்கொண்டான்.

       அறைக்குள் வந்ததும் அவன் படுத்து இருப்பதை பார்த்தவளுக்கு முழு ஏமாற்றமாகவே இருந்தது. மனதில் விஜயை தாளித்தவாறு மாற்றுடையை எடுக்க போனவளை அப்படியே பின் இருந்து அணைத்தான் அவளது ரட்சகன்.

       உடலில் ஜிவ்வென்ற ஒரு உணர்வு பாய கையில் எடுத்த உடையை கீழே போட்டுவிட்டாள்.

      தன் மேனியோடு அவள் மேனியை இறுக்கியவன் உதடு அவளது கழுத்து வளைவில் ஊர்வலம் நடத்தியது. அப்படியே மூச்சு முட்ட இறுக கண்களை மூடி கொண்டாள்…..

     கைகள் நடுங்க… பிடிமானத்திற்கு எதுவும் கிடைக்காது கைகளை இறுக மடக்கி கொண்டு நின்றாள்.

      இவளின் தவிப்பை சிறிதும் உணராது  விஜயின் கைகள் தன் மனையாளின் சேலை மறைக்காத இடத்தில் தவழ்ந்து கொண்டு இருந்தது. மொத்தமாக தன் வலு இழந்தவள் அவனின் கைகளை இறுக பற்றி நகர விடாது பிடித்து இருந்தாள்…. அவளது உதடுகளோ “ப்ளீஸ் விஜய்”….. என்று அவளின் தவிப்பு வார்த்தையாக உதிர்த்தது.

     “ இந்த கிரீன் ஸாரில நீ ரெடியாகி கீழே வந்ததும் அப்படியே டெம்ப்ட் ஆகி நின்னுட்டேன்டி! அங்கிள் வீட்டுக்கு போகவே மனசு வரல உன்னை எங்கயாவது கடத்திட்டு போகலாம்னு தோணுச்சு!…..” அவனின் வார்த்தைகள் எதுவும் அவள் காதில் சென்று அடையவே இல்லை.

       “அங்கு அங்கிள்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் பொழுது என் கண்ணை உன் மேலே இருந்து எடுக்கவே முடியல…. இந்த உதடு எப்பவும் பேசிகிட்டே இருக்கே எப்படின்னு? நினைத்தேன்” தன் போக்கில் புலம்பி கொண்டு இருந்தவனின் கைகளும், உதடும் செய்யும் மாயம் தாங்க முடியாமல் சட்டென திரும்பி கணவனின் மார்பில் இறுக முகம் புதைத்து கொண்டாள் பெண்ணவள்.

    அப்படியே அவளை கைகளில் அள்ளி கொண்டு கட்டிலில் கிடத்தியவன் அவள் மேல் முழுவதுமாக படர்ந்து விட்டான். அவனின் பாரம் தாங்காமல் முனங்கியவளின் உதடை சிறை செய்தவன் அதன் பின் எந்தவித தடங்கலும் இல்லாது தன் வேலையை செவ்வென செய்தான் அந்த காவலன்.

        பொதுவாக மனிதர்கள் தான் பல நேரத்தில் கரடியாக வந்து  தொந்தரவை ஏற்படுத்துவர்…. ஆனால், விஜயின் விசயத்தில் எந்திர கதியான கைபேசியின் அலாரம் அவனுக்கு கரடியாக மாறி தன் சத்தத்தை வெளிப்படுத்தியது.

       அலாரத்தை அனைத்தவன் பாதி தூக்கத்தில் திரும்பி தன் மனையாளை பார்த்தான். கூந்தல் கலைந்து இருக்க போர்வை ஒன்றே இருவருக்கும் ஆடையாக வடிவெடுத்து இருக்க தலையணையை கட்டிபிடித்து அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தாள்.

        ஒரு தாவலாக அவள் புறம் சென்றவன் முதுகோடு அணைத்து “ஏய் எழுந்திருடி டைம் ஆறு ஆகபோது நீ காலேஜ் போக வேண்டாம்” என்று சொன்னது தான் தாமதம் படக்கென எழுந்தவள் மார்போடு போர்வையை இறுகி பிடித்தவாறு சுவர் கடிகாரத்தை பார்த்தாள்.

         திரும்பி அவனை முறைத்தவள் “எல்லாம் உங்களால!! இன்னைக்கு எனக்கு காலேஜ் கிளம்ப மட்டும் லேட் ஆனது? அப்புறம் இருக்கு உங்களுக்கு …..” என்றவள் அறைமணி நேரத்தில் கிளம்பி கீழே சென்று விட்டாள்.

        அந்த வீட்டில் வேளை ஆட்கள் இருந்தாலும் காலையில் காபி போட்டு கொடுப்பது இவளது வழக்கம். வந்த புதிதில் ‘தன் மருமகள் போடும் காபி அருமையாக இருக்கிறது’ என்று அமிர்தம்மாள் சொன்னதை கேட்டதில் இருந்து காபி போடுவது மட்டும் இவள் பார்த்து கொள்வாள்….

        என்ன அவசரமாக இருந்தாலும் அவள் கையால் தான் தன் அத்தைக்கு காபி போட்டு கொடுப்பாள்.

        இன்று நேரம் அதிகம் சென்றுவிட பதட்டத்தில் காபி போட்டு கொண்டு இருந்தவளின் அருகில் “எனக்கும் ஒரு கப் வேணும்” என்ற குரலில் அதிர்ந்து போய் திரும்பினாள்.

தேவதை வருவாள்………

Advertisement