Advertisement

RD – 17

    தன் கண் முன்னே திரையில் ஓடி கொண்டு இருந்த காட்சியை லேசர் விழிகளால்  கூர்ந்து பார்த்து கொண்டு இருந்தான் விஜய்.

    இரவு சொல்லிவிட்டு  உடனே ஸ்டேஷன் கிளம்பி வந்து விட்டான். வீட்டில் இருந்த சமயம் கேசவன் ‘அவசரம்’  என்று போன் அடிக்க கார்த்திகாவிடம் சொல்லிவிட்டு கிளம்பி வந்து விட்டான்.

      வந்து அரைமணி நேரமாக திரையையே கூர்ந்து பார்த்து கொண்டு இருந்தான்.

      “சார் நீங்க சொன்ன மாதிரி அந்த கிருஷ்ணனையும், ஆட்டோகாரனையும் பார்க்க ஒருத்தன் வந்து இருக்கா சார்….. ஆனால், அவன் வந்ததுக்கு துளியும் பலனே இல்லையே சார் அதான் வருத்தமா இருக்கு”

     “இல்லை கேசவன் நமக்கு ஏதாவது ஆதாரம் அவன் விட்டுட்டு போயிருப்பான் அதை உடனே கண்டு பிடிச்சி ஆகணும். மோரொவேர், அவங்க இரண்டு பேரையும் சீக்கிரம் இடம் மாற்றனும் நெக்ஸ்ட் டைம் அந்த ரௌடிகிட்ட மாட்டிகிட்டா கண்டிப்பா உயிரோட விட்டு வைக்க மாட்டாங்க. கோர்ட்ல சாட்சி சொல்ல இவங்க இரண்டு பேரும் ரொம்ப முக்கியம்”

     “ஓகே சார் இன்னும் ரெண்டு நாள்ல இடம் மாத்திறலாம் சார். நம்ம ஸ்டேஷன் தள்ளி ஒரு குடவுன் இருக்கு அங்க அடைச்சி வச்சிறலாம் சார்”

     மறுநாள் செய்ய கூடிய விஷயத்தை கேசவனிடம் சொல்லிவிட்டு அவரிடம் இருந்து அந்த கட்சிகள் பதிவாகி இருந்த பென்ட்ரைவை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்று விட்டான்.

     வீட்டிற்குள் வரவும் கடிகாரம் சத்தம் எழுப்பி மணி ஒன்று என காட்டியது.

      தனது அறைக்குள் நுழைந்தவனின் காதில் தன் மனைவியின் சீரான மூச்சு சத்தமே காற்றோடு கலந்து வந்து அவன் காதில் மோதியது.

       முகம் நிர்மலாக இருக்க ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை தொந்தரவு செய்யாது அருகில் இருந்த தலையணையை எடுத்து கொண்டு சோபாவில் தன் உடலை சரித்தவன் மனைவியின் முகத்தை பார்த்தவாறு உறங்கி விட்டான்.

      இரவு தாமதமான உறக்கம் விஜய்க்கு ஒன்றும் புதிது இல்லை. காலையில் சீக்கிரம் எழுந்து கிளம்பி விடுவான். ஆனால், அன்று  ஆறு மணி வரை தூங்கி கொண்டு இருந்தவனை கண்டவளுக்கு அவன் படுத்து இருந்த இடத்தை பார்த்ததும் கோபம் அழையா விருந்தாளியாக ஒட்டி கொண்டது.

      மாற்று உடையை எடுத்து கொண்டு குளியலறை சென்றவள் அடுத்த சிறிது நேரத்திலே ஈரத்தலையை கொண்டையிட்டவாறு வெளியே வந்தாள்.

       கீழே சென்றவள் வேலையாளிடம் அன்று சமைக்க கூடிய மெனுவை கொடுத்து விட்டு வீட்டில் இருப்பவர்களுக்கு காபில் கலந்து கொண்டு சென்றாள்.

        தோட்டத்தில் இருந்த தன் அத்தையிடம் காபியை நீட்டியவளிடம் “என்னமா விஜய் இன்னும் எழுந்திருக்காமலா இருக்கான்? நேற்று நைட் ஸ்டேஷன் போனானோ?”

        “ம்ம் ஆமா அத்தை ஒரு முக்கியமான கேஸ்ல கின்ட் கிடைச்சிருக்குனு சொல்லிட்டு போனாரு… எப்போ வந்தாங்கனு தெரியலை நான் நல்ல தூங்கிட்டேன்” என்றவளின் குரலில் லேசான கோபம் எட்டி பார்த்ததை அமிர்தம்மாள் அறிந்து கொண்டார்.

      “அவன் வேலை அப்படி கார்த்திமா. என்ன செய்ய அவன் அப்பா விஜய் கண்டிப்பா ஒரு போலீஸ் ஆகணும்னு ஆசைபட்டாறு… அவருக்காக தான் அவன் இந்த வேலையில் இருக்கான்…. இல்லைனா நம்ம கிட்ட இல்லாது தொழிலா என்ன? ராகவுடன் சேர்ந்து இவனும் பார்த்துக்கிட்டு இருந்து இருப்பான்” என்று சொன்னவர் தோட்டத்தின் உள்ளே நகர்ந்துவிட்டார்.

        ‘என்ன இது இந்த வீட்டில் எந்த பேச்சை எடுத்தாலும் பெரிய அத்தான் பெயர் வராமல் இருப்பது இல்லை’ மனதில் எழுந்த குழப்பத்துடன் ப்ரணவை எழுப்பி வேலையாளிடம் கிளம்ப சொல்லி ஒப்படைத்து விட்டு வந்தாள்.

       மற்ற நாளில் இந்த நேரத்தில் விஜய் வீட்டில் இருக்க மாட்டான் சரியாக தங்களை கொண்டு விடும் நேரம் வருவான் அதனால் ப்ரணவை கிளப்பிவிட்டு தானும் கிளம்பி விடுவாள்.

     நேராக தங்கள் அறைக்குள் வந்தவள் பார்வையில்  கண்ணாடி முன்பு தலைவாரிக்கொண்டு இருந்த கணவன் தெரிந்தான்.

       “இவ்வளவு சீக்கிரம் கிளம்பணுமா டிபன் கூட சாப்பிடல… ரெடி ஆயிற்று நான் மேல கொண்டு வர சொல்றேன்” கோபத்தில் அவனிடம் கேட்க வேண்டும் என நினைத்தது எல்லாம் மறந்து போய்விட்டது அவன் சாப்பிடாமல் கிளம்புகிறான் என்று தெரிந்ததும்.

       “இல்லைமா நான் நேரம் கழித்து சாப்பிட்டுகிறேன்… இன்னைக்கு டிரைவர் உங்க இரண்டு பேரையும் கொண்டு விடுவார்” என்றவன் அவள் கையில் இருந்த காபியை வாங்கி பருக ஆரம்பித்தான்.

       “நேற்று எப்போ வந்திங்க?” அவள் முகத்தில் கோபம் இருக்கா? என்பதை அளவிட்டவாறு காபியை குடித்தான்.

        “ம்ம் ஒரு மணி இருக்கும்” என்றான்.

        “ஆஞ்சநேயர் சாமிக்கு ஏதாவது விரதம் இருக்கிங்களா டிசிபி சார்?” அவளின் கேள்வியில் குடித்து கொண்டு இருந்த காபி தலைக்கு ஏற இரும்பினான்.

        “ஏய்! என்னடி பேச்சு பேசுற?……….” அவனுக்கு என்ன சொல்லவென்று தெரியாமல் விழித்துக்கொண்டு நின்றான்.

       “ஏண்டி சொல்லமாட்ட நீ நேற்று ஜடம்னு சொன்னதுக்கே நான் உனக்கு என்னோட பாணியில் பதில் சொல்லி இருந்தா இப்போ இப்படி பேசி இருக்க மாட்ட” என்றவன் தன் கையில் இருந்த கப்பை அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு அவள் புறம் நெருங்கினான்.

      அவன் வருவதை கண்டவள் கண்டிப்பாக பக்கத்தில் நெருங்கமாட்டான் என்ற நம்பிக்கையில் ஒரு அலட்சிய பார்வையுடன் நின்று இருந்தாள்.

      விஜய் அருகில் வரவும் வயிறு கலங்க ‘அய்யோ சிங்கத்தை சீண்டி விட்டுட்டோம் போல…’ மனதில் நினைத்தவள் அவன் அருகில் வரவும் வெளியே ஓடி போக தயாராகி இருந்தவளின் எண்ணம் புரிந்தவன் வேகமாக அவள் பக்கம் வந்து சேலையின் மடிப்பில் கால் பதிய நின்று இருந்தான்.

        அவள் லேசாக நகர்ந்தாலும் கண்டிப்பாக சேலை அவிழ்ந்து விழுந்து விடும் கண்கள் இரண்டும் அங்கும் இங்கும் சுற்ற அவஸ்தையில் நெளிந்து கொண்டு இருந்தாள்.

        மெதுவாக அவள் வெற்று இடையில் தன் வலிய கரங்களை பரப்ப விட்டவன் அவளின் இடையை இறுக்கி பிடித்து தன் நெஞ்சில் அவளின் மார்பு பதிய இறுக்கினான்.

         “டிசிபி சார் உங்களு….க்கு லேட்…டாக…ல” திக்கி திணறினாள்.

         “என் பொண்டாட்டிக்கு நான் ஆஞ்சநேயர் பக்தன் இல்லைன்னு ஊர்ஜித படுத்தனும் அதுதான் இப்போ எனக்கு முக்கியமான வேலை” என்றான் அவளின் கழுத்தின் ஓரம் இருந்த மச்சத்தில் தன் பார்வையை பதித்த வாறு கூறினான்.

        அவன் பார்வையை கண்டவள் கூச்சத்தில் முகம் சிவக்க  அவனிடம் இருந்து விலக முயற்சிக்க அது எல்லாமே பலனற்றது என்பது போல் அந்த போலீஸ்காரன் பிடி இறுகியது.

         இன்னும் தன் அருகில் நெருக்கியவன் “சரியான வாயாடி… உனக்கு கொஞ்சமும் இந்த வெட்கம், நாணம் எதுவும் இல்லையாடி” உதடு சிரிப்பில் துடிக்க கிண்டலுடன் அவளிடம் கேட்டான்.

        அவன் அப்படி கேட்டதும் ‘சை இந்த வாய் தான் உனக்கு சனி கார்த்தி…. வெட்கமே இல்லாம அவன்கிட்ட இப்படி பேசிருக்கு சும்மாவே நம்மள ஓட்டி தள்ளுவான் இப்போ சொல்லவே வேண்டாம்…’ அவன் முகத்தை பார்க்காது கீழே குனிந்து நின்றாள்.

        தன் இடுப்பில் பதிந்த அவனின் கரம் இன்னும் அழுத்தம் அதிகரிக்க மயிற்கூச்சதில் அவன் மார்பிலே கண்கள் மூடி சாய்ந்து விட்டாள்.

       அவளின் முகத்தை நிமிர்த்தியவன் கலைந்து இருந்த முடியை காதின் ஓரம் ஒதுக்கி விட்டு இதழ் நோக்கி குனிந்தான்.

         அவனின் இதழ் ஒற்றலை முதலில் உணராதவள் விஜயின் தீண்டல் வன்மையாக கண்கள் இறுக மூடி அவன் மீதே சாய்ந்து விட்டாள்.

தேவதை வருவாள்…….            

 

Advertisement