Advertisement

RD -16

      ஆயிற்று, இருவருக்கும் திருமணம் முடிந்து ஒரு மாதம் காலம் முடிய போகிறது. முதலில் ரொம்பவே திணறி போய்விட்டாள் கார்த்திகா பின் போக போக அந்த வீட்டின் பழக்க வழக்கம் அறிந்து கொண்டாள்.

    காலையில் எழுபவள் தானும் கிளம்பி, விஜய்க்கு தேவையானவற்றை எடுத்து வைத்து, ப்ரணவையும் கிளப்பி காலேஜ் சென்று விடுவாள்….. பின், மாலை வீட்டிருக்கு வந்தால் மாமியாருடன், ப்ரணுவுடன், அம்மா அண்ணியுடன் போனில் பேசுவது மூலமா பொழுது போகும்.

     விஜய் இரவு எப்போ வருவான், காலையில் எப்பொழுது செல்வான் என்றே தெரியாது? அவன் பார்க்கும் கேஸ் விஷயம் பற்றி கொஞ்சம் தெரிவதால் அவனை ரொம்ப தொந்தரவும் செய்ய மாட்டாள்.

         நேரம் இருந்தால் அவளை கல்லூரியில் இருந்து மாலை அழைத்து வந்து சிறிது நேரம் செலவிடுவான். ஆனால், இருவரும் ஒன்றாக வெளியே சென்றது இல்லை அதை பற்றி அமிர்தம்மாள் இருமுறை விஜயிடம் சொல்லி பார்த்து விட்டார்….. பலன் என்னமோ பூஜ்ஜியம் தான்.

       ஒரளவுக்கு இந்த வீட்டில் உள்ளவர்கள் பற்றி அறிந்து வைத்து இருந்தவளுக்கு பெரிய கேள்வி குறியாக இருந்தது ராகவ் மட்டும் தான்.

      அவனை வரவேற்பு அன்று சந்தித்த பின் ஓரிருமுறை வீட்டில் பார்த்து இருக்கிறாள் அவ்வளவுதான் அதன் பின்  அவனை வீட்டில் பார்ப்பது அறிதாகி விட்டது.

       அன்று விடுமுறை நாள் என்பதால் மித்ரா அழுது, அடம் செய்து தன் அத்தை வீட்டிற்கு வந்துவிட்டாள். அவளும், ப்ரணவும் தோட்டத்தில் விளையாண்டு கொண்டு இருந்தனர்.

       கார்த்திகா தோட்டத்தில் இருந்த கல் மேடையில் அமர்ந்து மறுநாள் கல்லுரியில் எடுக்க வேண்டிய பாடத்தை புத்தகத்தில் புரட்டி கொண்டு இருந்தாள்.

         தன் அத்தை அருகில் வந்து அமரவும் தன் வேலையை ஒதுக்கி வைத்தவள் அவர் புறம் நன்றாக திரும்பி அமர்ந்து “அத்தை நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கவா?” பிடிகையுடன் கேட்டாள்.

        லேசாக புன்னகை சிந்தியவர் “கேளு மருமகளே உன் சின்ன மூளைக்குள் என்ன ஓடிட்டு இருக்கு”

         “என்ன அத்தை, நீங்களும் அவர் மாதிரி என்னை கிண்டல் பண்றிங்க உங்க அளவுக்கு நான் புத்திசாலி இல்லைனாலும்….  கொஞ்சமே கொஞ்சம் கடவுள் எனக்கு புத்தி கொடுத்து இருக்கார்” ரோசமாக பேசியவளை கண்டு சிரித்தவர் “அந்த கொஞ்சமே கொஞ்சம் தான் நானும், என் மகனும் சொல்கிறோம்…… கடைசியில் நீயே ஒப்புகொண்டாய்” என்றவரின் பேச்சை கேட்டு வாய் திறந்து உட்கார்ந்து இருந்தாள்.

     பின் தான் கேட்க வேண்டிய விஷயம் நினைவு வர நேரடியாகவே கேட்டாள் “அத்தை, பெரிய அத்தான் ப்ரணவ்கிட்ட பேசி நான் பார்த்ததே இல்லை. அவனும் அவர்கிட்ட நெருங்கவே மாட்டிகிறான்?” அவளின் பார்வை தூரத்தில் மித்துவுடன் விளையாடி கொண்டு இருந்தவன் மேல் பதிந்து இருந்தது.

     ஒரு பெருமூச்சுடன் தன் மனதில் இருந்ததை சொல்ல தொடங்கினார்.

      “அக்காவும், அத்தானும் ஒரு கார் விபத்தில் இறந்ததில் இருந்து உன் மாமாவுக்கு ராகவ் பற்றிய  கவலை அதிகமாகி விட்டது”

       “ஏன் அத்தை? அத்தான் சின்ன வயசில் இருந்தே யாருகிட்டையும் பேசினது இல்லையா?”

        “பேசுவான்…… அளவா பேசுவான் அதுவும் அக்கா, அத்தான் இறப்புக்கு பின்ன அந்த அளவான பேச்சும் சுத்தமாக குறைந்து விட்டது. விஜயைவிட நாங்க அதிகமா கவனம் செலுத்தியது ராகவிடம்தான், விஜயும் அவன் மேலே உயிரா இருந்தான்…..”

       “இரண்டு பேரும் காலேஜ் படிக்கும் போது ஏதோ ஒரு சண்டையில் ராகவ் அதிகமாக விஜயிடம் பேசி விட்டான். அதன் பின் ராகவிடம் பேசுவதை சுத்தமாக தவிர்த்து விட்டான்”

       “எதுக்கு சண்டை போட்டாங்க? உங்களுக்கு தெரியாத அத்தை”

        “ம்ஹும் தெரியதுமா நானும் இரண்டு தரம் விஜயிடம் கேட்டு பார்த்தேன் அவன் சொல்ல மறுத்துவிட்டான். அப்புறம் ஒரு நாள் ராகவ் ஒரு பொண்ணை அழைத்து வந்து தான் கல்யாணம் செய்து கொள்ள போவதாக சொன்னான்”

         “பெயர் காவ்யா, அநாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் நம் ராகவிடம் தான் வேலை பார்த்தாள். திருமணத்திற்கு பின்பு அவனின் குணம் அப்படியே இருந்தது எங்களிடம் நெருங்கவே மாட்டான் ஆனால், காவ்யாவிடம் நன்கு வாழ்ந்தான்”

           “எனக்கும் அது நிம்மதியாக இருந்தது. அவனுக்கு நேர் மாறான குணம் கொண்டவள் என்னிடம் மரியாதையுடனும், விஜயிடம் ஒரு தோழமையுடனும் பழகினாள்” தன் மூத்த மருமகள் நினைவில் முகம் கனிவுற சொல்லி கொண்டு இருந்தார்.

           “ப்ரணவ் பிறந்த கொஞ்ச நாளிலே போய் சேர்ந்து விட்டாள். அதன் பின் மொத்தமாகவே இறுகி போய் விட்டான் என் மகன் ராகவ்” கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்க மனமின்றி எங்கோ வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள்.

        அவரின் கண்ணீரை துடைத்து விட்டவள் “அக்கா எப்படி அத்தை இறந்தாங்க?” யோசனையுடன் கேட்டாள்.

       “ஏற்கனவே அவளுக்கு ஹார்ட் ப்ரோப்ளம் இருந்தது அது ப்ரணவ் பிறந்ததும் அவள் உடல் நிலை சீரியஸ் ஆகிவிட்டது” என்றவரின் பதில் கார்த்திகாவின் மனதை உறுத்தி கொண்டே இருந்தது.

      இதற்கு மேல் கேட்டால் ரொம்பவும் வருத்தி கொள்வார் என்று எண்ணியவள் பேச்சுக்கு அப்போதைக்கு  முற்றுபுள்ளி வைத்து குழந்தைகளை அழைத்து தன் அத்தையுடன் உள்ளே சென்று விட்டாள்.

        மதிய உணவிற்கு பின் சிறிது நேரம் உறங்குவது அமிர்தம்மாள் வழக்கம் என்பதால் உறங்க சென்று விட்டார். பிள்ளைகளும் காலையில் இருந்து விளையாண்ட அலுப்பில் கண் அசந்துவிட்டனர்.

         ராகவை பார்த்ததும் ஒரு நல்ல எண்ணமே கார்த்திகா மனதில் தோன்றவில்லை. அவனிடம் ஏதோ தப்பு இருப்பதாகவே அவள் மனம் சொல்லிகொண்டே இருந்தது யோசித்து கொண்டே இருந்தவள் அப்படியே தூங்கிவிட்டாள்.

       தன் போன் அடிக்க தூக்கத்தில் இருந்து விழித்தவள் தன் அண்ணி எண் மிளிர்வதை கண்டு அட்டென்ட் செய்தாள்.

      “ஏய் கார்த்தி மித்துவை கொண்டு வந்து விடுவதா ஐடியா இருக்கிறதா? நாளைக்கு அவளுக்கு ஸ்கூல் இருக்குடி இன்னும் ஹோம்வொர்க் வேற எதுவும் பண்ணல…. சீக்கிரம் கொண்டு வந்து விடுங்க மேடம்” என்றவருக்கு உடனே கொண்டு வந்து விடுவதாக சொன்னவள்.

       முகம் கழுவி தன்னை சுத்தம் படித்துக்கொண்டு பிள்ளைகளையும் கிளப்பி அத்தையிடம் சொல்லிவிட்டு மித்துவையும், ப்ரணவையும் அழைத்து அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

       அங்கு சிறிது நேரம் இருந்தவள் பின் ப்ரணவை அழைத்துக்கொண்டு காரில் கிளம்பிவிட்டாள். சிக்னலில் கார் நிற்க ஜன்னல் வெளியே பார்த்தவளின் கண்ணில் ஒரு ஜோடி பைக்கில் நெருக்கமாக இருப்பதை பார்த்தவளுக்கு விஜயின் நினைவு வந்துவிட்டது.

       கல்யாணத்திற்கு முன்ன பெரிய ரோமியோ மாதிரி இருந்தார் இப்போ ஒன்றும் கிடையாது. ‘அப்போ தெரியாம தூங்கிட்டேன்…. ஏன் தான் இப்படி செய்து தொலைத்தோனோ முருகா’ மனதில் நொந்து கொண்டு இருந்தாள்.

       போனில் விளையாடி கொண்டு இருந்தவன் திரும்பி தன் சித்தியை பார்த்தான். அவனின் பார்வையை கண்டவள் “என்னடா?” என்றாள்.

       “விஜி சித்தி” தூரத்தில் காரில் போய் கொண்டு இருந்தவனை காட்டினான். அவனை கண்டதும் இன்னும் கோபம் வர “ம்ம் உன் விஜி சரியான ஜடம் டா” என்றாள் கோபத்தில்.

         இரவு சாப்பிடும் நேரம் வீட்டிற்கு வந்தவன் தன்னை சுத்தம் செய்து சாப்பிட அமர்ந்தான். “அம்மா சாப்டாங்களா”

          “ம்ம் சாப்ட்டு தூங்க போய்ட்டாங்க” என்றவள் அமைதியாக அவனுக்கு பரிமாறினாள். பின் அவனுடன் சாப்பிட்டு முடித்தவள் பாத்திரத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ப்ரணவிற்கு பாலுடன் வந்தாள்.

          டிவி பார்த்து கொண்டு இருந்தவனிடம் வந்தவள் “இந்தா ப்ரண்வ் சீக்கிரம் குடிச்சிட்டு போய் படு நாளைக்கு ஸ்கூல் போகணும்” என்றவள் தன் கணவனை முறைத்து கொண்டு இருந்தாள்.

        அவளின் முறைப்பை அறிந்தவன் கண்டும் காணதுமாக டிவி பார்த்துகொண்டு இருந்தான். பிரணவ் தூங்கியதும் அவனை படுக்கவைத்தவன் தங்கள் அறை நோக்கி சென்றான்.

        கீழே வேலையை முடித்துவிட்டு அறைக்கு வந்தவள் அறை இருட்டாக இருப்பதை கண்டு குழம்பி போய் நின்றாள்.

         தன் இடுப்பில் உர்ந்த வலிமையான விரலின் ஸ்பரிசத்தில் மூச்சை அடைக்கி, வெளியில் விட மறந்தவளாக கண்ணை இறுக மூடி நடுங்கி போய் நின்றாள்.

          அவளின் மேனியை தன் உடம்போடு இன்னும் இறுக்கியவன் அவளின் காதோரம் “யாருடி ஜடம்?” தன் உதடு உரச லேசாக பற்கள் பதிய கடித்தவனின் செயலில் மயங்கி போய் நின்றவளின் காதில் அவனின் கேள்வி விழவில்லை.

தேவதை வருவாள்……..   

Advertisement