Advertisement

RD -15

      திருமணம் நல்லபடியாக முடிந்துவிட்ட நிம்மதி, சந்தோஷம் இருவீட்டார் முகத்திலும் பிரதிபலித்தது. மண்டபத்துக்குள் நுழைந்தவன் நேராக மணமக்கள் எதிரில் இருந்த இருக்கையில்  போய் அமர்ந்தான்.

    அப்பொழுதுதான் தன் தம்பியின் அருகில் இருக்கும் பெண்ணை பார்த்தவன் முகம்  ஒரு நிமிடம் ஆச்சிரியத்தை பிரதிபலித்தது ‘ஓ அப்போ அன்று காலேஜ் ப்ரோகிராமில் சார் முகத்த பார்த்ததும் தான் அம்மணி முகம் பிரகாசம் ஆணுச்சோ?’ அன்றைய நாளில் மூழ்கி இருந்தவனை அமிர்தமாளின் குரல் நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

     “வா ராகவ், அங்கு மணமேடையில் வந்து நில்லுபா. இப்படி ஏதோ ஒரு மூணாவது மனுஷன் மாதிரி உட்கார்ந்து இருக்க…. நடந்தது உன்னுடைய தம்பி கல்யாணம் நீ நம்ம வீட்டு மூத்தவனா அவன் பக்கத்துல வந்து நில்லுபா” ராகவ் வந்துவிட்டான் என்ற சந்தோஷம் அவர் குரலிலும், முகத்திலும் தாண்டவமாடி கொண்டு இருந்தது.

       அதுவரை நார்மலாக இருந்தவன்  அவர் அருகில் வந்து பேசவும் உடல் விறைக்க, முகம் இறுகி போய் அமர்ந்தான்.

       “எனக்கு எப்போ அங்கு வர வேண்டும் அப்பிடின்னு தெரியும். சோ, நீங்க பேசாம உங்க வேலையை கவனிக்க போங்க. இதுக்கு மேலும் என்னை வற்புறுத்தினா எழுந்து சென்று விடுவேன்” என்றவனை உறுத்து விழித்தவர் மனதில் மூண்ட கோபத்துடன் அங்கு இருந்து நகர்ந்து விட்டார்.

       தூரத்தில் இருந்தே இருவரின் முகபாவங்களை கவனித்து கொண்டு இருந்த விஜய் யோசனையில் ஆழ்ந்தான். பிறகு ஒருவாறு, மண்டபத்தில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்த மணமக்கள் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்  வழக்கமாக நடக்கும் சடங்குகள் என அன்று மாலை வரை பொழுது ஓடிவிட்டது.

       உடல் சோர்வு ஒரு புறம் வாட்டி எடுக்க இதற்கு மேல் முடியாது என்பது போல் அமர்ந்து இருந்தாள் கார்த்திகா. அவளின் அன்னையின் அர்ச்சனையை காதில் வாங்காது தனக்கு முன்னால் இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் மீது தலை வைத்து கண்ணகள் மூடி படுத்து இருந்தாள்.

      “ஏய் என் கோபத்தை கிளப்பாதே ஒழுங்கு மரியாதையா இந்த ட்ரெஸ், ஜெவேல்ஸ் எல்லாம் போட்டு ரெடியா இருடி. இப்போ சம்மந்தி அம்மா வந்துருவாங்க கீழே வரவேற்புக்கு வேற ஆட்கள் வர ஆரம்பித்துவிட்டனர்” என்றார் சிடுசிடுத்த கோபத்துடன்.

       “ப்ப்ச்” என்று சோர்வுடன் கண்கள் மூடியபடி எழுந்தவள் பின்னாடி இருக்கையில் சாய்ந்து கொண்டாள்.

        காலையில் நடந்து சுபவிழாவில் கழுத்தில் புது தாலி மின்ன, வகிட்டில் குங்குமம் நிறைந்து இருக்க, காலையில் இருந்து மண்டபத்தில் நின்ற களைப்பில் லேசாக வாடி இருந்த முகம் கூட அன்று தன் மகளின் அழகை மெருகூட்டி காட்டியதை அறிந்த அந்த தாயுள்ளம் பூரிப்பில் திளைத்து இருந்தது.

       அதற்கு மேல் அவளை திட்ட மனம் ஒவ்வாது கார்த்திகாவின் நாடியில் கை வைத்து “என் செல்லம்ல சீக்கிரம் ரெடி ஆகிருமா. பின்ன சம்மந்தி அம்மா நம்மளை பற்றி என்ன நினைப்பாங்க? சரியா பிள்ளைய வளர்க்க  தெரியலைன்னு என்னை சொல்லுவாங்க” சோகமாக முகத்தை வைத்து சொன்ன தன் அன்னையை கண் திறந்து பார்த்தவள்

      “சரி, சரி இதுக்கு மேல டைலாக் பேசி என்னை கொல்லாத. நான் கிளம்பி வரேன் நீ கீழே போ” என்று அவள் கை வெளியே கை காட்டினாள்.

        அங்கு அறை வாயில் இரண்டு அழகுநிபுண பெண்கள் வந்து நிற்கவும் கார்த்திகாவிடம் “சீக்கிரம்” என்று சொன்னவர் அறையை விட்டு வெளியே சென்று விட்டார்.

       விஜயின் வேலை, ராகவின் மனநிலை என மனதில் பலவற்றை எண்ணி அன்றே வரவேற்பு விழாவையும் வைத்து விட்டார் அமிர்தம்மாள்.

      இரவு வரவேற்பில்  அடர்ந்த நீல வண்ண கோட் சூட்டில் சிறிதும் கம்பீரம் குறையாது, முகம் முழுக்க சிரிப்புடன் ப்ரணவ், மித்து இருவரையும் கையில் வைத்து கொஞ்சி கொண்டு இருந்தவனை கண்டவளின் மனம் விஜயின் மேல் உள்ள காதலால் நிறைந்து இருந்த.

      அவளின் வருகையை அறிந்து திரும்பியவன் கண்கள் சாசர் போல் விரிந்து பின் சிறிது தயக்கம் எதுவும் இன்றி வைத்த கண் அகற்றாமல் அவளை அவனின் அந்த பார்வை மொய்த்து கொண்டு இருந்தது.

      தன்னவனின் விழுங்கும் பார்வை கண்டு நெஞ்சு படபடக்க அவன் பார்வை வீச்சை தாங்க இயலாது இமைகளை தாழ்த்தி கொண்டாள்.

      “போது மாப்பிளை எங்க கார்த்தியை கண்ணால பிச்சு தின்றுவிங்க போல….” கார்த்திகாவின் அண்ணியின் கிண்டல் பேச்சு எதுவும் அவன் காதில் விழுந்ததாக தெரியவில்லை கண்கள் முழுவதும் தன் தேவதை மீதே இருந்தது அந்த ரட்சகனுக்கு.

       “ஏய் கார்த்தி, நான் சொல்லறது எதுவும் உன்னவரின் காதில் ஏறவே இல்லை” என்று சொல்லி கொண்டு இருந்தவர் கார்த்திகாவின் சிவந்த முகத்தை பார்த்து “சுத்தம் நீயும் இந்த உலகத்தில் இல்ல போல………” என்றவர் இருவரையும் எப்படியும் போங்கள்’ என்றவர் மேடையை விட்டு வந்து விட்டார்.

       பின் இரு வீட்டாரின் சைடில் இருந்து விருந்தினர் வர இருவரும் தங்கள் கந்தர்வ உலகத்தில் இருந்து வெளி வந்தனர். பேச்சு, கிண்டல் என சிரித்து கொண்டு இருந்தவனின் முகம் லேசாக இறுக ‘யாரு’ என்பது போல் பார்த்தவளின் கண்ணில் ராகவ் மேடை ஏறி வருவது தெரிந்தது.

      முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாது நிற்கும் தன் கணவனையும், இறுகிய முகத்துடன் வந்து கொண்டு இருந்த ராகவையும் பார்த்தவள் மனது ‘ஏதோ சரியில்லை’ என்பதை உணர்ந்து கொண்டது.

       அதற்குள் அருகில் வந்தவன் தன் கையில் வைத்து இருந்த பரிசை கார்த்திகாவிடம் கொடுத்தவன் “வெல்கம் டூ ஆர் பலஸ்” என்றான்.

       “தங்க்ஸ் பெரிய அத்தான்….” புன்னைகையுடன் சொன்னவளுக்கு  அதற்கு பின் என்ன பேசவென்று தெரியவில்லை. அதற்குள் விருந்தினர் பலர் வர ராகவ் அங்கு இருந்து சென்று விட்டான்.

     ஒரு வழியாக இரவு பத்து மணிக்கு விழா முடிய மணமக்கள் இருவரும் சோர்ந்து விட்டனர். குழைந்தைகள் இருவரும் உறங்கி விட உறவினர் கூட்டமும் வருகை குறைந்ததும் வீட்டிற்கு வந்தனர்.

      அதற்கு பின் நடக்கும் சடங்குக்கு கார்த்திகாவை அலங்கார செய்து விஜயின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.

        உள்ளே வந்தவள் தன் கணவன் பால்கனி ஓரம் நின்று நிலவை வெறித்து பார்த்து கொண்டு இருப்பதை கண்டாள்.

         அவன் அருகில் சென்றவள் அங்கு இருந்த குடை ஊஞ்சலில்  கால்கள் இரண்டையும் மடக்கி இடது கையை தன் முகத்திற்கு மூட்டு கொடுத்தவள் போன்று அமர்ந்து விட்டாள்.

       கார்த்திகா சூடி இருந்த பூவின் மனம், வளையல், கொலுசு ஓசை என தன் அறையின் முழுவதும் அவள் வாசமும் அன்று புதிதாக கூடி புகுந்து இருக்க அந்த நினைவில் முகம் விசிக்க திரும்பி பால்கனி கம்பியில் சாய்ந்து கொண்டான்.

        “என்னடி அப்படியே உள்ளே வந்து உட்கார்ந்துட்ட… மாமாவுக்கு பால் உத்தி கொடுக்கிறது, அப்புறம் மாமா காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குறது  இந்த மாதிரி சொல்லி கொடுத்து உங்க அத்தை அனுப்பி வைக்கல?” என்றான் சிரிப்புடன்.

      அவனின் பேச்சில் உதட்டை வளைத்தவள் “கால் வலிக்குது டிசிபி சார்…. இன்னைக்கு கண்டிப்பா நமக்குள்ள அது வேணுமா?” குரலில் சோர்வு அப்பட்டமாக தெரிய ‘இவளை எந்த லிஸ்டில் சேர்க்க?’ என்று குழம்பி நின்றான் விஜய்.

      வரவேற்பு முடிந்ததும் கார்த்திகாவின் அன்னை கூறியது அவன் நினைவில் எழுந்தது.

       “மாப்பிளை, கார்த்தி ரொம்ப நேரம் நின்னா சோர்ந்து போயிருவா அவளுக்கு இம்னுயு லெவெல் கம்மி ………” என்று தயங்கி நிறுத்தவும், அவர் எதற்கு அதை சொல்கிறார் என்று புரிந்ததும் “நான் பார்த்துக்கிறேன் அத்தை” என்று அவருக்கு  ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தான்.      

          ‘சரியான புஞ்சை உடம்புக்காரி…… இவளை வச்சிட்டு நான் எப்படி என் காலத்த ஓட்ட போறேனோ’ என்று நினைத்தவன் அவளை தன் கைகளில் அள்ளி கொண்டான்.

         இதை சற்றும் எதிர்பார்க்காதவள் திகைத்து விழித்தாள் பின் கைகளை அவன் கழுத்தில் மலையாக போட்டு கொண்டவள், கால்களை ஆட்டி “அப்படியே உங்க ரூமை எனக்கு சுத்தி காட்டுங்க டிசிபி சார்” என்றாள் கண்கள் சிமிட்டி…..

தேவதை வருவாள்……….        

 

Advertisement