Advertisement

RD- 13

     மனம் முழுவதும் வெறுமை குடிகொண்டிருக்க ஹாலில் அமர்ந்து இருந்தவர்கள் யாரையும் பார்க்காது அமைதியாக தலை குனிந்து நின்றாள்.

    ஆனால், அவள் மாடியில் இருந்து இறங்கி வரும் வரை தன் ‘பம்ளிமோஸ்’ முகத்தை தவிர வேறு எங்கும் விஜயின் கருமணிகள் அசையவில்லை.

     கார்த்திகா வந்து நின்றதும் ஓடி போய் அவள் அருகில் நின்ற மித்து, அவள் கையில் அணிந்து இருந்த வளையலை பிடித்து இழுத்தவாறு மெல்லிய குரலில் “அத்த ப்ரணவ் வந்துருக்க! ஒருநாள் கடையில ஒரு அங்கிள் பாத்தோமே அவங்களும் வந்திருக்காங்க” தன் நண்பன் வந்திருக்கிறான் என்ற உற்சாகம் அந்த வாண்டுவின் குரலில் நிரம்பி இருந்தது.

      தன் அண்ணன் மகளின் வார்த்தை மூளையை சென்றடைய ‘புருவம் சுருங்க, அழுது வீங்கிய கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்து பின் கண்ணீரை சுரக்க, உதடு துடிக்க’ இமை மூடாது தன் ரட்சகனை கண்கள் வழியே நிரப்பி கொண்டு இருந்தாள் அந்த தேவதை.

     மனதில் ஒருவித நிம்மதி, சந்தோசம் தோன்ற நின்றவள் பின் கோபத்தில் மூக்கு விடைக்க மாடி ஏறி தன் அறைக்கு சென்று விட்டாள்.

      கார்த்திகாவின் அந்த செயலில் வீட்டினர் அனைவரும் திகைத்து போய் இருந்தனர்…….. ஏன்,விஜயும் அந்த நிலையில் தான் இருந்தான்.

       மாப்பிளை வீட்டாரிடம் என்ன சொல்வது? என்று முழி பிதுங்கி நின்று இருந்தவர்களை பார்க்க அமிர்தமாளுக்கு என்னவோ போல் இருந்தது…. அவருக்கும் கார்த்திகாவின் செயல் சுத்தமாக பிடிக்க வில்லை ‘என்ன பொண்ணு இவள்?’ என்று தான் நினைக்க தோன்றியது அவருக்கு.

    “நான் போய் அவளிடம் பேசிட்டு வரேன்….. ஒரு பத்து நிமிஷம்” என்றவன் அவள் அறை நோக்கி சென்றான்.

     கதவை மூடாமல் கட்டிலில் இரு கைகள் தாங்கி அமர்ந்து இருந்தாள். அறையின் உள்ளே வந்தவன் கதவை தாளிட்டு அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்து தன் போனை நோண்டி கொண்டு இருந்தான்.

      விஜயின் செய்கையில் இன்னும் கோபம் தலைக்கு ஏற ஓடி சென்று அவன் கையில் இருந்த மொபைலை பிடிங்கி கட்டிலில் வீசினாள்.

       “என்ன என்னை பார்த்தா காமெடி பீஸ் மாதிரி தெரியுதா? நான் கோபத்தில் இருக்கேன், நீங்க ரொம்ப கூலா மொபைலை நோண்டிட்டு இருக்கீங்க” அவன் வைத்த ‘மிளகா பட்டாசு’ என்ற பெயருக்கு ஏற்ப வெடித்து கொண்டு இருந்தாள்.

       கால் மீது கால் போட்டு, லேசாக வலது புறமாக சாய்ந்து, நாடியில் கை வைத்து அவளின் கோபத்தை ரசித்தபடி இருந்தான் அந்த ரட்சகன்.

      “என்கிட்ட எதுவும் சொல்லாது எல்லாரும் சதி பண்றீங்க? கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என் மனது பட்ட பாடு எனக்கு மட்டும்தான் தெரியும்… யூ ஆர் சாடிஸ்ட்” என்ன உளறுகிறோம் என்பது தெரியாமல் கோபத்தில் விரல் நீட்டி பேசியவளை கண்டவன் முகம் கடுகடுக்க, இருக்கையில் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் எழுந்தான்.

     அவளின் கையை முதுகுக்கு பின்னாடி வளைத்து தன் மார்போடு அவளின் தலை மோத “உன்னிடம் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் , நான் எப்பொழுதும் ஒரே போல் இருப்பது இல்லை இதை உன் மனதில் நன்றாக பதியவைத்து கொள்”

     “மரியாதை இல்லாமல் நடந்தால் நான்  சும்மா இருக்கமாட்டேன் தெரிந்துகொள் …….. அதுவும் என் அம்மா முன்னாடி இப்படி செய்து இருக்கிறாய். சரி சின்ன பொண்ணு சொன்னால் கேட்டு கொள்வாள் என்று நினைத்தால் ஓவரா கத்துற” பற்களை கடித்து மெதுவாக அவளின் காதின் ஓரம் கர்ஜித்து கொண்டுயிருந்தான்.

     அவன் பிடி இறுக்கமாக இருந்ததால் வலியில் கண்ணீர் தூளி கோடக அவள் முகத்தில் இறங்கியது…. இருந்தும் ‘வலிக்கிறது, விடுங்கள்’ என்று வாய் திறந்து அவள் சொல்லவில்லை.

      அவளின் அழுத்தத்தை கண்டு இன்னும் கோபம் வர கையை இறுக்கினான். வலியில் உதடு கடித்து கண்கள் மூடி நின்றவளிடம் “அழுத்தகாரி” என்று சொன்னவன் இதற்கு மேல் அவள் வலியை காண பொறுக்காது கையை விடுவித்தான் ஆனால், விலகி நிற்கவில்லை.

       அவன் புறம் திரும்பி “ஏன் நீங்க மட்டும்தான் அழுத்தம் உள்ளவுங்களா இருக்கணுமா? பொண்ணுங்க எங்களுக்கு எதுவும் இருக்க கூடாது” என்றவளை ‘வெட்டவா, குத்தவா’ என்ற ரீதியில் விஜய் பார்த்தான்.

       இறங்கிய கோபம் திரும்ப தலைக்கு ஏற அவளின் மணிக்கட்டை அழுத்தி பிடித்து “ஏய், நிஜமாவே நீ காலேஜ் லெட்ச்சர் தானா? எனக்கு சந்தேகமா இருக்குடி…. கடவுள் கொடுத்த மூளையை கொஞ்சமாவது யூஸ் பண்ணு. தேவையில்லாத இடத்தில் அழுத்தமாகவும், கோபமாகவும் நடந்து கொள்வது  முட்டாள் தனம். சூழ்நிலையை புரிந்து நடந்துக்கவே மாட்டியாடி?” இயலாமையில் வெடித்து கொண்டு இருந்தான் விஜய்.

      அவனின் உரிமையான அழைப்பு மனதின் உள்ளே பனிசாரலாக வீச வெட்கத்தில் ஒரு நொடி கன்னம் சிவந்து நின்றாள். பின் தன்  கையை அவனிடம் இருந்து பிரித்து எடுக்க போராடியவளை அருகில் இழுத்து இடையை வலைத்தவன்,

    “இந்த ஜென்மத்தில் என்னை தவிர உன்னை யாராலும் கட்டி மேய்க்க முடியாது அதனால பாவம் பார்த்து உனக்கு வாழ்க்கை தருகிறேன்” என்று சிரிப்பை இதழ் ஓரத்தில் அடக்கியவாறு சொன்னான்.

     வழமை போல் கோபத்தில் சிறிது நிமிடம் முன் நடந்து சண்டை மறந்து போக அடுத்த சண்டைக்கு தயாரானாள் அவனின் ‘மிளகா பட்டாசு’ “அப்படி ஒன்றும் எனக்கு யாரும் வாழ்க்கை தர வேண்டாம்…” என்றவள் அவன் கண்களில் சிரிப்பை கண்டு ‘ஓ சார் என்னை கோப படுத்தி அதில் குளிர் காய்கிறார் போல?’ ரொம்ப நேரம் கழித்து மூளையில் மணி அடிக்க யோசித்தாள்.

     பின் தன் தொண்டையை செறுமி, ஓர கண்ணால் அவனை பார்த்து “எனக்கு ஒன்றும் யாரும் வாழ்க்கை தரவேண்டாம்… இரண்டு மாதமாக என் பின்னால் சுற்றி இருக்கிறீர்கள் சரி போனால் போகட்டும் என்று என் வாழ்வை உங்களுடன் கழித்து கொள்கிறேன்” என்றாள் சலிப்புடன்.

      கண்கள் மின்ன “எப்படி கழிக்கபோகிறாய் ! இப்படியா?” என்றவன் கண்களால் தங்கள் இருவருக்கும் உண்டான நெருக்கத்தை காட்ட…

       அப்பொழுது தான் உணர்வு வந்தவள் வேகமாக அவனிடம் இருந்து விலகினாள். தன் இடை பகுதி குறுகுறுக்க ‘சீ வெட்கம் கெட்டு போய் அப்படியே நின்று இருந்தேனே’ கூச்சத்தில் நெளிந்து கொண்டு இருந்தாள்.

      அவளின் காதோரம் மூடியை ஒதுக்கி விட்டவன் “உன் கோபம் பல நேரம் எனக்கு சாதகமாக இருக்கிறது பம்ளிமோஸ்… ஆனால், அது எனக்கு மட்டுமாக இருக்க வேண்டும் என்னை சுற்றியுள்ள சொந்தத்தை பாதிக்கும் பொருட்டு இருக்க கூடாது… உனக்கு புரியும் என்று நினைக்கிறேன்” காதலுடன் ஆரம்பித்தவன், எச்சரிக்கையோடு சொல்லி முடித்தான்.

      “நான் கீழே போய் உனக்கும் சம்மதம் என்று சொல்கிறேன்” என்றவன் அவளை இழுத்து கன்னத்தில் அழுந்த தன் முத்தத்தை பதித்து,

     “ஹ்ம்ம் பாரதி சரியா தான் சொல்லி இருக்கிறான்…. உள்ளம் கள்வெறி கொள்ளுதடி” காதல் மின்ன சொன்னவன் சென்று விட்டான்.

      அவள் தான் அதிர்ச்சியில் இருந்து மீளாது நாண சிலையாக  சமைந்து நின்றாள். விஜயின் அம்மா தன் அறைக்குள் நுழைந்ததும் நிகழ்வுக்கு வந்தவள்  தவறு செய்த குழைந்த போல முழித்து கொண்டு நின்றாள்.

       “விஜய் என்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான்மா… நான் சீரியல் மாமியார் மாதிரி இல்லை ஏதோ கொஞ்சம் நல்லவள் தான்” என்றார் புன்னைகையுடன்.

       அவரின் சிரித்த முகம், தெளிவான பேச்சு இன்னும் குற்ற உணர்ச்சி தர “சாரி ம்மா கோபத்தில் மரியாதை இல்லாமல் நடந்துகிட்டேன். இனி கோபத்தை குறைத்து கொள்கிறேன்” என்றாள் சிறு பிள்ளையாக.

       அவள் அருகில் வந்து தன் கையோடு கொண்டு வந்த பூவை வைத்தவர் “கோபம், அழுகை இது இரண்டும் சரியான சூழ்நிலையில் வந்தால் தான் அதற்கு மதிப்பு இருக்கும்.” என்றவர் வார்த்தையை கேட்டு ‘அம்மாவும், பிள்ளையும் போட்டி போட்டு புத்திசாலியா இருக்காங்க… நம்மளும் கொஞ்சம் புத்தியை வளர்க்கணும்’ மிக தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தாள் நம் நாயகி.

      பின், கல்யாண தேதியை குறித்து விட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டு இருந்த நேரம்…. காரை ஒட்டி கொண்டு இருந்த தன் மகனிடம் வேதனை பொங்க “உன் அண்ணன் கடைசி வரை வரவே இல்லையேடா” என்றார்.

      அதுவரை தன் தேவதையை நினைத்து கொண்டு இருந்தவன் தன் அன்னையின் மொழியை கேட்டு முகம் இறுக “அது தான் தெரிந்த விஷயமே” கண்கள் சாலையை வெறிக்க ஒட்டி கொண்டு இருந்தான்.

தேவதை வருவாள்……..                      

 

Advertisement